http://i63.tinypic.com/2gv65p1.jpg
Printable View
சத்யா மூவிஸ்' தயாரித்த "காவல்காரன்'' படத்தில் எம்.ஜி.ஆரின் தம்பியாக சிவகுமார் நடித்தார்.
1966-ம் ஆண்டின் பிற்பகுதியில் "காவல்காரன்'' படம் தயாராயிற்று. முதன் முதலில் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, சிவகுமாரை அவர் கைகுலுக்கி அன்புடன் வரவேற்றார்.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, எம்.ஜி.ஆர். தன் தாயார் சத்யா அம்மையார் பற்றியும், குடும்ப நலனுக்காக அவர் செய்த தியாகங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.
சிவகுமாரும் தன் தாயார் பற்றி எம்.ஜி.ஆரிடம் கூறினார்.
இதுகுறித்து சிவகுமார் எழுதியிருப்பதாவது:-
"என் தாயாரின் வைராக்கியம், தியாகம், எதற்கும் கலங்காத நெஞ்சுரம், நிலத்தில் கடுமையாகப் பாடுபடும் உடல் நலம் பற்றி எல்லாம் எம்.ஜி.ஆருக்கு தைரியமாக எடுத்துச் சொன்னேன்.
ஒரு சமயம் அம்மாவின் வலது கை மணிக்கட்டுக்கு மேலே இரண்டு எலும்புகள் ஒடிந்து தொங்கும் அளவுக்கு விபத்து ஏற்பட்டு, ஆறு மாத காலம் எனக்குச் சொல்லாமல் வைத்தியம் பார்த்து கையை சரிப்படுத்திக் கொண்டார். என் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, இந்த விபத்து பற்றி எனக்கு தெரிவிக்கவில்லை. என் நண்பர்களையும் மிரட்டி, எனக்குக் கடிதம் எழுத விடாமல் தடுத்துவிட்டார்.
இதை அறிந்ததும், எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.
இந்த உரையாடல் நடந்து 3 மாதத்தில், எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் காண யாரும் அனுமதிக்கப்படவில்லை. நான் பலமுறை மருத்துவமனைக்குச்சென்று ஆர்.எம்.வீ. அவர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். உடல்நிலைப் பற்றி விசாரித்து விட்டுத் திரும்பிவிட்டேன்.
எம்.ஜி.ஆர். உடல் நிலை சற்று முன்னேறியதும், அவரைப் பார்க்க என்னை உள்ளே அனுப்பி வைத்தார், ஆர்.எம்.வீ.
எம்.ஜி.ஆர். படுத்திருந்தார். காவல்காரன் படத்தில், நானும், அவரும் ஒரே ஒருநாள்தான் நடித்திருந்தோம். என் முகம், உடனடியாக அவர் நினைவுக்கு வரவில்லை. கண்களை இடுக்கிக்கொண்டு என்னைப்பார்த்தபடி தீவிரமாக யோசித்தார். நான் சிவகுமார் என்பதைத் தெரிந்து கொண்டார்.
அந்த உடல் நிலையிலும் - கழுத்தில் பெரிய பேண்டேஜ் உறுத்திக் கொண்டிருந்தபோதிலும், முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்துக்கொண்டு `வாங்க' என்றார்.
குண்டடிப்பட்ட சமயம், ஊருக்கு போயிருந்ததாக சொன்னேன்.
அவர் முகத்தில் ஒரு மின்னல் வெட்டு. "ஊருக்கு போனியா... அ...ம்...மா... உன் அம்மா... சவுக்கியமா?'' என்று, விசாரித்தார். என் தாயார் பற்றி நான் கூறிய தகவல்களை மரண வாசல் வரை போய் மீண்டு வந்த அந்த நேரத்திலும் நினைவில் வைத்திருந்து அவர் விசாரித்ததைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்.
எம்.ஜி.ஆர். என்னைத் தேற்றி, "எனக்காக அம்மாவை வேண்டிக்கச் சொல். சீக்கிரம் குணமாகிவிடுவேன்'' என்றார்.
எம்.ஜி.ஆர். குணம் அடைந்தபின், "காவல்காரன்'' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி வேகமாக நடந்தது.
7-9-1967-ல் இப்படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது..... Thanks...
தற்போது வெற்றி நடை போடுகிறது கலையுலக காவலன் மக்கள் திலகம் " நினைத்ததை முடிப்பவன்" டிஜிட்டல், கும்பகோணம்- MSM dts தினசரி 4 காட்சிகள்...
RARE STILLS
http://i68.tinypic.com/25r1ild.jpg