http://i61.tinypic.com/14e045s.jpg
Printable View
1st JUNE - FEW TICKETS TO FULL HOUSE - PLANS FILLING FAST ....STUDIO 5
http://i501.photobucket.com/albums/e...pscf21fd7e.jpg
PLANS FILLING FAST FOR JUNE 2nd, 3rd and 4th - As the School reopening time gets nearer and nearer....there is a urgency we can see in the booking status....! As Ayirathil Oruvan fast approaching 100th day, the urgency is just igniting !
http://i501.photobucket.com/albums/e...psba53f5f8.jpg
1972 ... மலரும் நினைவுகள் ...
மக்கள் திலகத்திற்கு இந்தியாவின் சிறந்த நடிகருக்கான ''பாரத் '' பட்டம் ரிக்ஷாக்காரன் படத்திற்கு வழங்கியதாக அறிவிப்பு வந்தவுடன் எம்ஜிஆர் ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .அன்றைய திரைப்பட நட்சத்திரங்கள் - பத்திரிகைகள் - அரசியல் பிரமுகர்கள் - வெளிநாட்டில் உள்ள மக்கள் திலகத்தின் ரசிகர்கள் என்று
எல்லா தரப்பினரும் மக்கள் திலகத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டார்கள் .
தென்னாட்டை சேர்ந்த ஒரு நடிகருக்கு கிடைத்த பெருமையை ஜீரணிக்க முடியாத சோ - ஜெயகாந்தான் - போன்றவர்கள் எம்ஜிஆரை விரும்பாத ஒரு சில மாற்று ரசிகர்களும் மனம் வெதும்பி ,தரமற்ற முறையில் கேலி செய்துவந்ததை மக்கள் உதாசினபடுதினார்கள் .
நடிகர் திலகம் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சிறப்பான விழா எடுத்தார்கள் .மக்கள் திலகத்தின் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியினை மற்ற ஊர் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள் .
மக்கள் திலகத்தின் நடிப்பை பற்றி சில அதிமேதாவிகள் பட்டி மன்றமே நடத்தி தங்களின் காழ்ப்புணர்ச்சியை வெளிபடுதினார்கள் .எப்படி பாரத் பட்டம் எம்ஜிஆருக்கு கொடுக்கலாம் என்று ஆர்பரித்தார்கள் .
எதிர்ப்புகளையே உரமாக்கி வெற்றி கண்டவர் மக்கள் திலகம் என்பதை பின்னாளில் அவர்கள் உணர்ந்தார்கள் .
மலைக்கள்ளன் - குலேபகாவலி - மதுரைவீரன் - நாடோடிமன்னன் - திருடாதே - பெரிய இடத்துபெண் - தெய்வத்தாய்
படகோட்டி - எங்க வீட்டு பிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் - பணம் படைத்தவன் - அன்பே வா - பெற்றாதாலதான் பிள்ளையா - காவல்காரன் - குடியிருந்தகோயில் - ஒளிவிளக்கு - அடிமைப்பெண் - நம்நாடு - மாட்டுக்காரவேலன்
போன்ற படங்களில் மக்கள் திலகத்தின் நடிப்பிற்கு எப்போதே கிடைத்திருக்க வேண்டும் .
மக்கள் திலகத்தின் எம்ஜிஆர் நடிப்பு - மக்கள் மனதில் பசுமையாக பதிந்து விட்ட ஒன்று . நடிப்பின் எல்லா பரிணாமங்களையும் சரியான விகிதத்தில் காட்சிக்கு தக்கவாறு அளவோடு ,மனநிறைவோடு ரசிகர்களுக்கு தந்து
மக்கள் இதயத்தில் இடம் பிடித்த வரலாறு மறக்க முடியாது .
நடிப்பின் நவரசங்களை பல புதுமைகளுடன் இனிமையாக தந்தவர் மக்கள் திலகம் .
நகை,
அழுகை,
இளிவரல்,
மருட்கை,
அச்சம்,
வெகுளி,
பெருமிதம்,
உவகை,
அமைதி
மேற்கண்ட நவரசங்களை அளவோடு தன்னுடைய படத்திற்கு படம் மக்கள் தந்தது மறக்க முடியாது .
தொடரும் ...
courtesy - kaveri mainthan - net
ஆயிரத்தில் ஒருவன்.. வரலாறு எழுதிய வரலாறு!!
எம்.ஜி.ஆர் என்பது ஒரு சிலருக்கு, பலரைப்போல் அவரும் நடிக்க வந்த ஒரு நடிகர்! கதாநாயகனாக உலா வந்த ஒருவர்! பல வெற்றிப்படங்களைத் தந்திருக்கிறார் என்கிற பார்வை இருக்கலாம்! ஆனால்.. நண்பர்களே.. தமிழகத்தில் அவரை நேசித்த நெஞ்சங்கள்.. இன்னும் அளவிடற்கரியது! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்.. ஒரு தலைவனாக அவரை ஏற்று அவரைப் பின் தொடர்ந்த கூட்டமது! அவரின் திரைப்படம் ஒன்று வருகிறதென்றால்.. ரசிகனுக்கு அன்றுதான் திருவிழா!!
திரையில் அவர் மற்ற கதாநாயகர்கள் போல வந்து போனவரல்ல.. அத்துறையை முழுக்க முழுக்க.. தன்வசப்படுத்தி.. நல்ல கருத்து விதைகளை கதையில், வசனத்தில், பாடல்களில் புகுத்தி இந்த சமுதாயம் பயன்பட.. அடுத்தடுத்தத் தலைமுறைகள் பயனுற.. ஒரு கருவிதான் இந்த ஊடகம் என்பதை முழுமையாக உணர்ந்து அதனை தக்கவாறு கையாண்டார்! அதனால்தான் அவரை வாத்தியார் என்று அழைக்கிறோம்! தாயின் மீது தனயன் கொள்ள வேண்டிய அன்பு .. யாவருக்கும் தெரிந்ததுதான்.. ஆனால் எம்.ஜி.ஆர் சொன்னபின்பு அல்லவா அது பன்மடங்காகி.. பெருகி தனி மனிதன் தன்னை உணர, தாயை வணங்க, தாயின் பெருமை அறிய, தாயைப் பாதுகாக்கத் தூண்டியது என்றால் இதைவிட ஒரு சேவையை இனி இந்த உலகில் எவர் வந்து செய்துவிட முடியும்?
உடலை நல்ல முறையில் வைத்திருக்க உடற்பயிற்சி தேவை என்பதை அவர் ஒவ்வொரு நேர்முகத்திலும் வலியுறுத்தியவர்.. அவரின் வாழ்க்கையில் நடைமுறையில் அவர் அதை முழுக்க முழுக்கக் கடைப்பிடித்தார். இன்னும் சொல்லப்போனால், அரசியலில் முழுமையாக ஈடுபட்டு நள்ளிரவு வரை தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொண்ட பயண நாட்களிலும்கூட, அதிகாலை எழுந்து அவர் உடற்பயிற்சி செய்தவர் என்பது தமிழகம் அறிந்ததே! அதனால்தான் சராசரி வயதைத் தாண்டியபின்னே கதாநாயகனாக.. உயர்ந்தபோதும்.. தன் கடைசி நாட்கள் வரை அந்த நிலையில் அவரால் நிலைத்து நிற்க முடிந்தது!
கவியரசு கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவிஞர் வாலி, புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துக்கூத்தன், கவிஞர் முத்துலிங்கம் என பல்வேறு கவிஞர் பெருமக்களின் கற்பனையில் முகிழ்த்த பல நூறு பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் தமிழகத்தில் மட்டுமின்றி தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் காற்றில் பரவிக்கொண்டிருப்பதை மறக்க முடியுமா?
மக்கள் திலகம்
கண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்
பூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்
கேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்
மக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்
என்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்
அன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். என்பது ஏழை மக்களைப் பொறுத்தவரை.. எங்களின் தலைவன் மட்டுமல்ல.. இன்றைக்கும் அவர்தம் இதயங்களில் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர்! மக்கள்.. மக்கள் என்று தன் வாழ்க்கை முழுவதும் மக்களோடு பயணித்தவர்! இவரின் பன்முகங்கள்.. இவரின் செயல்பாடுகள்.. இவரின் ஆற்றல் எல்லாம் மக்களை நோக்கியே.. மக்களுக்காகவே.. எனவேதான்.. தமிழகத்தின் அரசியலில் தவிர்க்க முடியாத வகையில் தலைவரானார்! பதினோறு ஆண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சராய் திகழ்ந்தார்! எந்த நிலையிலும் ஏழைமக்களின் வாழ்வு துலங்க.. திட்டங்களை அணிவகுத்தார்! கர்மவீரர் காமராசர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டத்தை விரிவுபடுத்தி.. சத்துணவுத்திட்டம் என்கிற பெயரில் அவர் திருச்சியில் தொடக்கி வைத்தபோது ஆற்றிய உரையில் ஒரு வைரவரி.. இதோ.. “சிறுவயதில் எங்களுக்கு ஒரு கவளம் சோறு கொடுக்க முடியாமல் என் தாய் பட்ட வேதனை தமிழ்நாட்டில் எந்த தாய்க்கும் வந்துவிடக்கூடாது என்றுதான் இந்தத் திட்டத்தை மேற்கொள்கிறேன்” என்றார். அவருக்கு நிகர் அவர்தான்!
வாள்வீச்சு, கத்திச் சண்டை, சிலம்பாட்டம், குத்துச் சண்டை போன்ற பல்வேறு கலைகளை சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் அவர்களிடம் கோவையில் பயின்றவர்! அதனால்தான் அவர்தம் திரைப்படங்களில் சண்டைக்காட்சிகள் பிரபலமாகின! எம்.ஜி.ஆர். நம்பியார் வாள்வீச்சு என்பது அன்றைய நாளில் ஊரெல்லாம் பேச்சாக இருந்தது.. குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் அதற்கான களமானது! அவர் கடைசியாக நடித்திருந்த ஒரு சில படங்களில் மீனவ நண்பன் – இதிலும் எம்.ஜி.ஆர். நம்பியார் வாள்வீச்சு இடம்பெற்றது! ரசிகர்களின் ..மக்களின் நாடித்துடிப்பை அறிந்து வைத்திருந்த கலைஞன் எம்.ஜி.ஆர்!
அதனால்தான் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது! எந்தெந்த விஷயங்கள் மக்களுக்குத் தேவை.. எந்த அளவில் என்பதை எம்.ஜி.ஆர் வரையறுத்து வைத்திருந்தார்! அது அவரின் பார்முலா என்று பேசப்பட்டது! காதல் காட்சிகளில் மட்டும் என்ன குறையா வைத்துவிட்டார்? மனித வாழ்வின் பூரணம் காதலில் இருப்பதை அறிந்தவர் என்பதால்.. தனது படங்களில் இடம்பெறும் காட்சிகளிலும் பாடல்களிலும் கவனம்செலுத்தி பல்சுவை தந்திருக்கிறார். கதையின் நாயகிகளை தேர்ந்தெடுப்பது முதல் அவர்களுடன் நடித்து வெற்றியைக் குவிக்கின்ற வரை ஓயாமல் உழைத்திருந்தார்! எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்து 27 ஆண்டுகள் ஆகின்றன.. எனினும் அவர் இறந்துவிட்டார் என்கிற சேதியை நம்பாதவர்கள் உண்டு! அவரைப் போற்றியவர்கள்.. புகழ்ந்தவர்கள்.. வாழ்ந்ததாக சரித்திரம் உண்டு.. தாழ்ந்ததாக இல்லவே இல்லை! அவரை பின்பற்றிய ரசிகர்களில் பல லட்சம்பேர் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை.. நன்னடத்தையால்.. பலருக்கும் உதவி செய்கின்ற பாங்கால்.. இந்தச் சமுதாயம் விரும்புகிற மனிதர்களாய் வாழ்கிறோம் என்றால்.. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் என்கிற மந்திரச் சொல்லின் மகிமை என்பதைப் பெருமையோடு எந்த சபையிலும்.. எந்த அவையிலும் பகிர்ந்துகொள்வோம்!
எம்.ஜி.ஆர்.. ரசிகன் ஒருவரை அழைத்து எம்.ஜி.ஆர் படங்களில் உங்களுக்குப் பிடித்த முதல் 10 அல்லது 20 படங்களைப் பட்டியலிடுங்கள் என்றால்.. அதில் அன்பே வா.. படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், ரகசிய போலீஸ் 115, மாட்டுக்கார வேலன், உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண், இதயக்கனி என்று இடம்பெறும் படங்கள் பெரும்பாலும் ஒருசேரவே இருக்கும்! ஆனால் இதில் எந்தப் படத்தை நீங்கள் முதன்மை வகிக்கும் படமாகக் கருதுவீர்கள் என்று கேட்டால் பதில் சொல்வது மிகச் சிரமமாக இருக்கும்! காரணம்.. இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் பாடங்களாக.. மறக்க முடியாதவைகளாக.. பலமுறை பார்த்து ரசித்தவையாக இருப்பதால், ரசிகன் அந்த விடை சொல்லத் திணறுவான்!
ஆனால்.. இந்தக் கேள்விக்கான விடையை.. நமக்காக வழங்கியிருக்கிறார்.. அமீரக மண்ணில் சுவையின் சூப்பர் ஸ்டார் என்கிற பெயரோடு உலா வரும் லெ.கோவிந்தராஜு அவர்கள்! ஆம்! உழைப்பாளர் தினமான 01.05.2014 அன்று மாலை .. துபாயின் மையப்பகுதியில் உள்ள கிராண்ட் சினிமா என்னும் திரையரங்கில் அன்று மாலை புதிதாக வெளியான திரு.மம்முட்டி அவர்கள் படத்தைக்கூட ஒரு காட்சி எங்களுக்காக என்று வாதாடி.. பிரத்யேக காட்சியாக.. முதன் முறையாக அயல்நாட்டில்.. அதுவும் அமீரகத்தில்.. ஆயிரத்தில் ஒருவன் வெளியீடு செய்தார். அதுமட்டுமல்லாமல் அவர்தம் நண்பர்கள்.. உறவினர்கள்.. வாடிக்கையாளர்கள் எல்லோருக்கும் இலவசமாய் அனுமதிச்சீட்டு வழங்கி.. அசத்திவிட்டார்!
அட.. அந்தப் படத்தில் என்ன இருக்கிறது சார்? அதுதான் நீங்கள் பலமுறை வேறு பார்த்துவிட்டேன் என்று கூறுகிறீர்களே என்கிற குரல்கள் எழாமல் இல்லை! புரட்சி.. முழக்கம், உரிமையின் குரல்கள்.. சமுதாய அவலங்களைத் தட்டிக்கேட்கும் துணிவு, விவேகம், கடமை, அன்பு, இவையெல்லாம் நாங்கள் படித்த பயிலகம் எம்.ஜி.ஆர் படங்கள் அல்லவா? தனது ஒரு திரைப்படத்திலும்கூட எம்.ஜி.ஆர் மது அருந்தியவராக நடித்ததே இல்லையே.. இது எப்படி சாத்தியமானது? அப்படி ஒரு சில காட்சிகளில் நடிக்க வேண்டிவந்தபோதும்.. அதில் புதுமைகள் புகுத்தி.. மதுவின் கொடுமைகளை மக்கள் அறியச் செய்த மகோன்னத மனிதரன்றோ? அவர்தந்த பாதையில்.. நடைபோடும் என்னைப்போன்ற இலட்சக்கணக்கான ரசிகர்கள்.. இன்றும் மதுவின்பக்கம் சென்றதில்லை.. இந்தப் பெருமைக்கெல்லாம் அவர் ஒருவரே காரணம்!! புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் அவர் இதே பட்டியலில் வைத்து எங்களையெல்லாம் அந்த அவசியமற்ற பழக்கத்திலிருந்தும் காப்பாற்றிய பெருமையும் எம்.ஜி. ஆர் ஒருவருக்கே!!
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் என்று நினைக்கும்போதே தேனினும் இனிய அந்தப் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன! இசையமைப்பாளர்களின் கைவண்ணமும் கவிஞர்களின் கற்பனைகளும் கலந்த கலவைதான் பாடல்! அது கதைக்கு முற்றிலும் பொருந்திப்போக.. பாடிய குரல்கள் அதை இன்னும் மெருகேற்றிவழங்க.. நாம் வாழ்கின்ற இந்த காலக்கட்டத்தில் நம் காதுகளை கெளரவித்த.. நெஞ்சங்களை நிறைத்த இனிய பாடல்கள் வரிசையில் இந்தப் படத்தின் ஏழுபாடல்களும் அமோகமாக கொடிகட்டிப் பறக்கின்றன! பொதுவாகப் படத்திற்கு இசையமைப்பாளர் அல்லது இசையமைப்பாளர்கள் இசை அமைப்பார்கள் என்று சொல்வார்கள்.. என்னைப் பொறுத்தவரை ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகிய இருவரும் இசை வேட்டை நடத்தியிருக்கிறார்கள் என்றே சொல்லுவேன். இந்தப் படம்தான் இருவரும் இசையமைத்த கடைசிப்படம் என்பதும் வரலாற்றுப் பதிவாகிவிட்டது காலத்தின் நிர்ணயம்.
பாடல்கள் எழுதிய விதம்.. வரிகளின் ஆட்சி.. இசையின் மேன்மை.. பாடிய குரல்கள்.. நடித்த இரண்டு தங்கங்கள்.. என்று சொல்லிக் கொண்டே போகலாம்.. இயக்குனர் வரையிலான இந்தப் பெருமைக்குரிய பட்டியலில் ஒளிப்பதிவாளர் முதல் ஒலிப்பதிவாளர் வரை அனைவருக்கும் பங்குண்டு! காட்சிப்படைப்புவகையில் அந்தக் காலத்தில் விளைந்த இந்த அற்புதவிளைச்சல் இன்றைக்கும் திரைத்துறை சார்ந்தோருக்கு வியப்பின் எல்லைதான் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை!
சமீபத்திய சாதனை
முப்பது ரூபாய் கொடுத்து mgr தத்துவப் பாடல்கள் வாங்கியது..
அதில ரொம்ப பிடிச்ச வரிகள் இதோ:
நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் ,நாட்டை கெடுத்ததுடன் தானும் கேட்டார், சிலர் அல்லும் பகலும் சிறு கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்.
மனம் என்ற கோயில் திறக்கின்ற போது
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
இருக்குறதெல்லாம் பொதுவாய் போனா பதுக்குற வேலையும் இருக்காது
வறுமை நினைத்து பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே
தன்னை தானும் அறிந்து கொண்டு, ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா?
பூமியில் நேராக வாழும் எல்லோரும் சாமிக்கு நிகர் இல்லையா?
கோழியப் பாரு காலையில் விழிக்கும், குருவியைப் பாரு சோம்பலை பழிக்கும், காக்கயைப் பாரு கூடிப் பிழைக்கும், நம்மையும் பாரு நாடே சிரிக்கும்.
நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் மூலதனம்
காதல் காட்சிகளுக்கு எல்லை வேண்டும்_ எம்ஜிஆர்
‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தில் குணச்சித்திர வேஷத்தில் நடித்த எம். ஜி. ஆர்; அது வெளிவந்தபோது தனது ரசிகர்களோடு ‘பொம்மை’ (1967 ஜனவரி) பத்திரிகையின் மூலம் பேசினார்.
அவராலோ, அல்லது அக்கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளபடி தயாரிப்பாளர்கள் – விநியோகஸ்தர்கள் – ரசிகர்களாலோ உருவாக்கப்பட்டிருந்த ‘இமேஜ்’ குறித்து வேதனையோடு குறிப்பிட்டிருப்பதையும், ரசனை மாறவேண்டும் என்று வேண்டியிருப்பதையும் அக்கட்டுரையில் காணலாம்.
அக்கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகிறேன்: “ ஒரு நடிகன் பல்வேறு குண விசேடங்கள் உள்ள பாத்திரங்களை ஏற்று நடித்தால்தான் நடிப்பில் பல புதுமைகள் பிறக்க முடியும், ‘இப்போது நான் அறிமுகமாகியுள்ள அளவுக்கு அறிமுகமாகாத நிலையில் முன்பு, ‘என் தங்கை’ என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படம் வெற்றி வாயிலை எட்டிப் பிடித்த படமும் கூட. அதில் எனக்குச் சண்டைக் காட்சிகள் இல்லை. ஆனால் அது வெற்றி கண்டது.
“நாளடைவில் நான் நடிக்கும் படங்களில் சண்டைக் காட்சிகள் இருக்க வேண்டும் என்ற நிலை எப்படியோ நிரந்தரமாக உண்டாக்கப் பட்டுவிட்டது. அதற்குப் படத் தயாரிப்பாளர்கள் சொல்லும் காரணம் ‘ரசிகர்கள் உங்களுடைய சண்டைக் காட்சிகளை முக்கியமாக எதிர்பார்க்கிறார்கள்’ என்பது. அது மட்டுல்ல வினியோகஸ்தர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்பதும் அவர்கள் கூறும் காரணம்…”
“சண்டைக் காட்சிகளே கூடாது என்று கூறத் தேவையில்லை. ‘படக் கதைக்குச் சம்பந்தமில்லாத – தேவைப்படாத பகுதிகளில் அத்தகைய காட்சிகள் இல்லாமலிருப்பதை நாங்கள் வரவேற்கவே செய்வோம்’ என்பதை உங்கள் ரசனை உணர்வுடன் உணர்த்தவும் வேண்டும்…”
“ ஒரு படத்தைச் சுட்டிக் காட்டி, அது போன்ற காட்சிகள் வேண்டும் என்றும், அது போன்ற கதை, அதைப் போன்ற உரையாடல், அதைப் போன்ற பாட்டு என்று ‘ஒன்றைப் போன்ற மற்றொன்று’ என்று தேவையற்ற எதிர்பார்ப்பில் ரசிகர்களின் ரசனைத் திறன் ஈடுபடுவது சரியல்ல. வளரும் கலைக்கு வாய்ப்பூட்டு போடுவதாகும் இது…”
“ அடுத்தது காதற் சுவை. சாதாரணமாகப் பாட்டுப் பாடி காதல் செய்வது என்பது உலகியலில் இல்லாத ஒன்று. பொதுப் பூங்காக்களில் படங்களில் வருவது போன்று காதல் புரிவதற்கும் நமது சமூகம் அனுமதிக்காது. ஆயினும் நமது படங்களில் வாழ்க்கையில் ஓர் ஆணும் பெண்ணும் எந்த அளவுக்கு நெருங்கிப் பழகுகிறார்கள் என்பதையும் அவர்களுக்கிடையே எழும் கருத்துப் பரிமாற்றங்களையும் வெளிப்படுத்த பாட்டுக்களாக எடுக்கிறார்கள். உவகைச் சுவை மனித உள்ளத்திற்கு இன்றியமையாத ஒன்று என்பதற்காக அமைக்கப்படும் இக்காதல் காட்சிகளுக்கு ஒரு எல்லை வகுக்க வேண்டும்…”
ரசிகர்களில் மிகப் பெரும்பான்மையினர் பார்வையாளர்களாக மட்டுமேயாகவும் வாசகர்களாக அல்லாதிருந்ததாலும் எம். ஜி. ஆர். வேண்டுகோள் அவர் விரும்பிய விளைவுகளை உருவாக்காது போயிற்று.
‘பாசம்’, ‘பெற்றல்தான் பிள்ளையா’ போன்ற விஷப்பரீட்சைகளை பின்னாட்களில் அறவே நிறுத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர்.