http://i64.tinypic.com/vaum9.jpg
Printable View
எம்.ஜி.ஆரும்.. திருச்சியும்..! அ.தி.மு.க பாதையில் மலைக்கோட்டை
தி.மு.க-வின் தேர்தல் பிரவேசமும் திருச்சியில்தான்; அ.தி.மு.க உருவாகக் காரணமான முதல் முக்கிய ஆர்ப்பாட்டம் நடந்ததும் திருச்சியில்தான்! 1949 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் பேரணியோடு தொடங்கப்பட்டது தி.மு.க. அண்ணாவின் மீது ஈர்ப்பு கொண்ட எம்.ஜி.ஆர் 1952 ஆம் வருடம் தி.மு.க-வில் இணைந்தார். திராவிடக் கர்ணண் என்றும் போற்றப்பட்டார்
திருச்சியில் 1956 ஆம் வருடம் மே மாதம் நடைபெற்ற 2-வது மாநில மாநாட்டில், 'தேர்தலில் பங்கேற்பது' என முடிவு செய்த தி.மு.க., பிரசார நாயகனாக எம்ஜிஆரைத் தேர்ந்தெடுத்தது. ஆனாலும் கட்சிக்குள் கருணாநிதியோடு எம்.ஜி.ஆருக்குப் பிணக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். தி.மு.க-விலிருந்து வெளிவந்த எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது தொண்டா்கள் முதன்முதலாக திருச்சியில்தான் ஆர்ப்பாட்டமும், ஊர்வலமும் நடத்தினர்.
திருச்சியைச் சேர்ந்த கே.சவுந்தர்ராஜன், தேவதாஸ், கரு.அன்புதாசன், குழ.செல்லையா, வடிவேலு, பாப்பாசுந்தரம், முசிறி புத்தன் உள்ளிட்ட ஏராளமானோர் தி.மு.க-விலிருந்து விலகி எம்.ஜி.ஆருடன் கை கோத்தனர். எம்.ஜி.ஆர். அனுமதியின்றியே அவரது ஆதரவாளர்கள் திருச்சியில் தி.மு.க கொடிகளை இறக்கி, தி.மு.க கொடியின் இடையில் தாமரைப் பொறித்த கொடிகளை ஏற்றி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். திருச்சி ரசிகர்கள் தந்த நம்பிக்கையில், 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் (அ.தி.மு.க) அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர்! அ.தி.மு.க-வின் முதல் பொதுக்கூட்டம் 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆரைக் காணப் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில், நாஞ்சில் மனோகரன், எஸ்.டி.சோமசுந்தரம், கே.சவுந்தர்ராஜன், சவுந்தர பாண்டியன், தேவதாஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம்.கல்யாண சுந்தரம் ஆகியோரும் கலந்துகொண்டனர். 1973 ஆம் ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க-வின் முதல் தேர்தலான திண்டுக்கல் இடைத் தேர்தலுக்கு திருச்சி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நிதி திரட்டினார் எம்.ஜி.ஆர். அந்தகூட்டத்தில் எஸ்.எம்.என். அமிர்தீன் முதல் தேர்தல் நிதியை வழங்கினார்
அதைத் தொடர்ந்து தி.மு.க. அரசை எதிர்த்து எம்.ஜி.ஆர். அறிவித்த உண்ணாவிரதப் போராட்டம் மெயின்கார்டுகேட் காமராஜ் வளைவில்தான் நடைபெற்றது. முதல் பொதுக்குழுவையும், மாநில மாநாட்டையும் எம்.ஜி.ஆர் திருச்சியிலே நடத்தினார். 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் 23, 24 ஆகிய இரு நாட்கள் காட்டூரில் நடந்த மாநில மாநாடு தமிழகத்தில் அ.தி.மு.க-வின் வளர்ச்சிக்கு வித்திட்டது. இந்த வித்தானது அவரை 1980 ஆம் வருடம் நடைபெற்ற தேர்தலில் முதல்வர் என்னும் மரமாக்கியது. தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை ராசியாகக் கருதிய எம்.ஜி.ஆர்., பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்ட மேம்பாட்டுத் திட்டத்தினையும் மாநாடு நடந்த அதே இடத்தில், 1982 ஆம் வருடம் தொடங்கிவைத்தார். எம்.ஜி.ஆரின் ராசி என்றில்லாமல், அ.தி.மு.க-வின் ராசி என்பதுபோல் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெயலலிதாவும் முதன்முதலில் திருச்சி
ஒத்தக்கடையில் நடைபெற்றக் கூட்டத்திலே பங்கேற்றார்இப்படி அ.தி.மு.க-வுடன் பெரிதும் தொடர்புகொண்ட திருச்சியை தலை நகரமாக்கும் திட்டத்தையும் செயல்படுத்த முனைந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், அவரது எண்ணத்துக்கு எதிர்க்கட்சிகளிடத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. சென்னையின் தலைமைச் செயலகத்துக்கு, தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியிலிருந்து மக்கள் வந்துசெல்வது பெரும் சிரமம். இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தலைமைச் செயலகத்துக்கு எளிதாக வந்துசெல்ல தமிழகத்தின் மையமான திருச்சியைத் தலைநகரமாக மாற்றியும், அங்கு தலைமைச் செயலகம் அமையப்பெற வேண்டும் என்றும் கருதினார் எம்.ஜி.ஆர். இதற்காக 1983 ஆம் ஆண்டு திருச்சியைத் தலைநகரமாக்கும் திட்டத்தை அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனைப் பொருட்படுத்தாத எம்.ஜி.ஆர்., திருச்சி அண்ணாநகர் நாவல்பட்டிலும், முசிறி அருகிலும் தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியைத் தொடங்கினார். மேலும், தனது இறுதிக் காலத்தில், திருச்சியில் தங்க விரும்பினார். இதற்காக குடமுருட்டி ஆற்றங்கரை அருகேகாவிரிக்கரையிலிருந்து உறையூர் செல்லும் சாலையில், சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட தோட்டங்களுடன்கூடிய பங்களா வீட்டை, சோமரசம்பேட்டையைச் சேர்ந்த பாதிரியார் ஒருவரிடமிருந்து வாங்கினார். தனது விருப்பப்படி மாற்றம் செய்யப்பட்டிருந்த பங்களாவைப் பார்ப்பதற்காக அவர் திருச்சி வந்திருந்தபோது, 'திருச்சியை தலைநகரமாக மாற்றினால், மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்' என்ற தனது எண்ணத்தையும் திருச்சி அ.தி.மு.க-வினரிடம் கூறியிருக்கிறார். பின், அமெரிக்கா சென்ற அவருக்கு உடல்நிலை மோசமானது. அதன்பின்னர் அரசியல் சூழ்நிலையும், இந்திராகாந்தி மரணமும், திருச்சியைத் தலைநகரமாக மாற்றும் திட்டத்தையே கைவிடும் நிலைக்குக் கொண்டுபோனது. எம்.ஜி.ஆரின் நிறைவேறாத திட்டத்தில், முக்கிய ஒன்றாக அது இருந்தது என்றே கூறலாம்.
எம்.ஜி.ஆரின் கனவை நிறைவேற்றும் வகையில், திருச்சியைத் தமிழகத்தின் தலைநகரமாக்க வேண்டும் என்று முயற்சி செய்தார் ஜெயலலிதா. திருச்சியை சொந்த ஊர் என்று சொந்தம் கொண்டாடினார். எம்.ஜி.ஆரின் விருப்பமாக இருந்த திருச்சியிலிருந்து ஆர்.சௌந்தர்ராஜன் என்பவரை சத்துணவுத்துறை அமைச்சராக்கினார். இவர்தான் மதுரையில் எம்.ஜி.ஆர் முன்னிலையில்,ஜெயலலிதாவுக்கு வெள்ளி செங்கோல் வழங்கி புரட்சித்தலைவி என பட்டமும் வழங்கினார். மேலும், வீட்டுவசதித்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர்களாகவும் திருச்சியைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கினார். திராவிட அரசியலில், குறிப்பாக அ.தி.மு.க தேர்தல் பாதையில், மலைக்கோட்டை திருச்சி முக்கிய பங்கு கொண்டே வந்துள்ளது... அந்தத் தொடர்பு இன்றும் தொடர்ந்து வருகிறது!... Thanks Friends...
தலைவர் திமுக. வில் அண்ணா அவர்களின் தலைமை ஏற்ற பிறகு தான் திமுகழகம் தேர்தலில் போட்டியிட்டது. 1957 ம் ஆண்டில் நடைப்பெற்ற. தேர்தலில் 15 இடங்களை கைப்பற்றியது. இந்த தேர்தலில் தலைவர் அவர்கள் எம்.ஜி.ஆர். நாடகம் மூலம் நிதி திரட்டி தி.மு.கழத்திற்கு கொடுத்தார். கருணாநிதிக்கு குளித்தலை தொகுதியில் பிரச்சாரம் செய்து வெற்றி பெற செய்தார்.தொடர்ந்து 1962 தஞ்சாவூர் 1967.சைதாப்பேட்டை 1971.சைதாப்பேட்டை வெற்றி பெற செய்தவர் புரட்சித்தலைவரே. தலைவரிடம் 1977 1980 1984. மூன்று தேர்தலில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தார் கருணாநிதி. 1984.ல் நடைப்பெற்ற பொதுத்தேர்தலில் இவர் போட்டியிடவில்லை. 1980. தேர்தலில் திரு. ஹண்டே அவர்களிடம் தோல்வி அடைந்தார். ஆனால் தலைவரின் கருணையால் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. இப்படி தலைவரின் நல்ல.குணத்தால் வாழ்வு அடைந்த இவர் தலைவரை தவறாக. பேசிய காலங்ளை நாம் என்றும் மறக்க முடியாது. அந்த. தவறுக்கு தான் இன்று இயற்கையின் தண்டனை அது தான் நேற்று இன்று நாளை திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியாகும். நன்றி... நண்பர்கள் குழுவினர்...
வணக்கம் நண்பர்களே....
45 ஆண்டுகளுக்கு முன்னால்
நிகழ்த்தப்பட்ட ஒரு சரித்திரத்தின்
நினைவுகள்... மீண்டும்...
பல தடைகளை தாண்டி
விளம்பரம் இல்லாமல் ...
சுவரொட்டிகள் இல்லாமல் ....
பேனர்கள் இல்லாமல்...
ரசிகர் மன்றங்களின்
அலங்கார வளைவுகள் இல்லாமல் ....
ரிலீஸ் செய்யப்பட்ட படம்
தலைவரின் உலகம் சுற்றும் வாலிபன்
என்பது நாம் அனைவரும் அறிந்ததே...
1973 வரை அதுவரை வசூலில்
அதிக வசூலை அள்ளி குவித்ததாக சென்னை தேவி பாரடைஸ் திரையரங்கில் GREGORY PECK நடித்த
MEGANNAS GOLD என்ற ஆங்கில படமே RECORD வசூலாக 12 லட்ச ரூபாயை
அந்த கால பணமதிப்பின் படி வசூல்
சாதனையாக இருந்தது....
அதுவரை எந்த ஒரு இந்திய நடிகனின்
படமும் இந்த வசூல் சாதனையை
முறியடிக்காத வேளையில்
தலைவரின் உலகம் சுற்றும் வாலிபன்
16 லட்ச ரூபாயை வசூலாக குவித்து
RECORD BREAK செய்தது...
இன்று உயிருக்கு ஊசாலாடிக்கொண்டிருக்கும் நபரின்
சூழ்ச்சியால் படச்சுருள்களை இந்தியாவுக்குள் வந்தவுடன்
அன்றைய காவல்துறை மூலமாக
கொளுத்த எடுத்த முயற்சி
தோல்வி அடைந்ததை அடுத்து
தியேட்டர் அதிபர்களை மிரட்டி
படத்தை வெளியிடவிடாமல் தடுத்த
அந்த நன்றி கெட்டவனின் கெடுபுடிகளுக்கு
பயம் கொள்ளாமல் தேவி பாரடைஸ்
அதிபர் செட்டியார் அவர்கள்
எவன் என்ன செய்து விடுவான் நான்
பார்க்கிறேன் என்று
எந்த அறிவிப்பும் இன்றி படத்தை
ரிலீஸ் செய்தார்....
அடுத்து நடந்த சரித்திரம் நாம்
அறிந்ததே...
பெண்கள் அதிக அளவில் படையெடுக்கிறார்கள் என்று
சமூக விரோதிகளை முதன்முதலாக
இந்த உலகத்தில் அறிமுக படுத்தி...
ரவுடியிஸத்தை அவிழ்த்து விட்டு...
தனக்கு ஜால்ரா அடிக்கும் பத்திரிக்கை
மூலமாக படத்துக்கு சென்றால்
கலவரம் வெடிக்கும் என்று
பொய்யையே தனது வாழ்வில்
மூலதனமாக கொண்டு வாழ்ந்தவன்
செய்யும் சூழ்ச்சிகளை
தலைவர் தோட்டத்தில் இருந்து அமைதியாக நடப்பவைகளை
பார்த்துவந்தார்....
தலைவருக்கு தெரியும் தமிழக மக்கள்
எந்நாளும் தன்னை கைவிட
மாட்டார்கள் என்று....
நடந்த மாபெரும் வெற்றி இன்றும்
சரித்திரம்.....
அஇஅதிமுக தொடங்கிய காலமாக
இருந்ததானால் ஆளும் கட்சியின்
அராஜகம் அடாவடித்தனத்தை கடந்து
சாதித்த உண்மை வரலாறு....
கழகத்தை தோற்றுவித்து
படத்தின் ஆரம்பமே
நமது வெற்றியை நாளை சரித்திரம்
சொல்லும் என்ற அந்த அசரீரி
வார்த்தைகள் இறைவனால் இந்த
மாபெரும் தலைவருக்கு உருவாக்கி
தரப்பட்டது....
நயவஞ்சகமே வாழ்வில் தனது கொள்கையாக
கொண்ட அந்த தீய சக்தி பார்த்துக்கொண்டிருக்கும்போதே
தமிழகம் முழுவதும் படம்
ரிலீஸ் செய்யப்பட்டு மாபெரும்
வெற்றியை தலைவரின் பாதத்தில்
தமிழகம் வைத்தது....
இன்றுவரை இதுபோன்ற உண்மையான
வெற்றியை எந்த திரைப்படமும்
பெறவில்லை...
1973 இல் தங்கம் ஒரு சவரனுக்கு 400 ரூபாய்..
12 லட்ச ரூபாய் ஒரே ஒரு தியேட்டரில்
மட்டும் என்றால் தலைவரின்
சாதனையை நண்பர்களின்
யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்...
நன்றி....
பொன்மனம் பொதுநல பேரவை.... Thanks a lot...
38 வருடத்துக்கு முன் கருணாநிதி கவிஞர் கண்ணதாசனை பார்த்து நீ ஒரு கவிஞனா என கேட்டதற்காக கருணாநிதி பற்றி கண்ணதாசன் எழுதிய கவிதை.
அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்மென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி
தன்குடும்பம்
தான்வாழ* தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ*னெனில்
நானோ கவிஞ*னில்லை
என்பாட்டும் கவிதையல்ல*.
பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த* பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய* கதையுரைத்து
வகுத்துண*ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞ*னெனில்
நானோ கனவிஞ*னில்லை
என்பாட்டும் கவிதையல்ல*... நன்றி... தோழர்கள்...
1958-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி அப்போது பிரதமராக இருந்த நேரு சென்னை வந்தபோது அவருக்கு திமுக சார்பில் கருப்புக் கொடி காட்ட தீர்மானிக்கப் பட்டது. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தில் நடிகர்களுக்கு உடைகள் தைப்பதற்காக இருந்த தையல் மெஷின்கள் மூலம் இரவு பகலாக கருப்பு கொடி தயாரிக்கும் பணி நடந்தது. போராட்டத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது படலம் தொடங்கியது.
அப்போது, நள்ளிரவில் எம்.ஜி.ஆர். கைது செய்யப்பட்டார். மேலும், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, நடிகமணி டி.வி.நாராயணசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், வளையா பதி முத்துக்கிருஷ்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். முதலில் எம்.ஜி.ஆரை சைதாப்பேட்டை காவல் நிலையம் கொண்டு சென்று காலையில் சென்னை மத்திய சிறையில் அடைத்தனர். எம்.ஜி.ஆர். 4 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேரு சென்னை வந்து சென்ற பின் எம்.ஜி.ஆர். விடுவிக்கப்பட்டார்.
சிறையில் இருந்தபோது சிறைச்சாலை விதிகளை எம்.ஜி.ஆர். முழுமையாக கடை பிடித்தார். சிறையில் சிவப்பு அரிசிச் சோறுதான். மற்றவர்கள் சாப்பிட முடியாமல் சங்கடப் படுகையில் எம்.ஜி.ஆர். எந்த சலனமும் இன்றி சாப்பிட்டார். இரவில் சிறை அறைக்குள் அடைத்து விட்டு காலையில்தான் திறந்துவிடுவார்கள். தாகம் தீர்த்துக்கொள்ள மண் பானையில் தண்ணீர். அருகே தகர டப்பா. அதில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்க வேண்டும். அறையின் மூலையில் இரண்டு சட்டிகள். அதுதான் கழிப்பிட வசதி.
அப்போதே எம்.ஜி.ஆர். திரையுலகின் உச்ச நட்சத்திரம். வாய்ப்புகளும் வசதிகளும் வந்துவிட் டன. என்றாலும் சிறையில் இந்த அசவுகரியங்களை எம்.ஜி.ஆர். பொருட்படுத்தவில்லை. இதை எல்லாம் முகமலர்ச்சியுடன் எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார். அவருக்கு பஞ்சணையும் ஒன்றுதான், கட்டாந்தரையும் ஒன்றுதான்.
சிறைக்கு உள்ளேயும் எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை வெளிப்பட்டது. எம்.ஜி.ஆர். சிறையில் இருக்கிறார் என்றதும் சட்டத்துக்கு உட்பட்டு அவருக்காக பழங்கள், உணவுப் பொருட்களை வெளியில் இருந்து கட்சியினரும், ரசிகர்களும், பொதுமக்களும் அனுப்பி வைத்தனர். அவற்றை சிறைக் கைதிகளுக்கு பகிர்ந்து அளித்துவிட்டு எல்லோருக்கும் கிடைத்ததை உறுதி செய்த பிறகே எம்.ஜி.ஆர் சாப்பிடுவார்.
கைதானவர்களில் பலரை சாதாரணமான ‘சி’ வகுப்பில் அடைத்தனர். எம்.ஜி.ஆருக்கு மட்டும் ‘பி’ வகுப்பு அளிக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால், எல்லோருக்கும் ஒரே வகுப்பு கிடைத்தால்தான் தானும் ‘பி’ வகுப்பில் இருக்க முடியும் என்று எம்.ஜி.ஆர். போர்க்கொடி தூக்கினார். அதன் பிறகே, அவருடன் கைதான பலர் ‘பி’ பிரிவுக்கு அனுப்பப்பட்டனர்.
சிறைவாசம் அனுபவித்தவர் மட்டுமல்ல; சிறையிலும் தன்னைச் சேர்ந்தவர்களுக்காக உரிமைக் குரல் எழுப்பியவர் எம்.ஜி.ஆர். முகநூலில் C.K.Sankar... Thanks...
http://i65.tinypic.com/idrh2r.jpg
1977 ஜூன் மாதம் நடைபெற்ற தமிழக சட்ட மன்ற தேர்தலில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவி ஏற்றார் . தேர்தலுக்கு முன் வெளிவந்த மக்கள் திலகத்தின் திரைப்படம் '' இன்று போல் என்றும் வாழ்க ''.
1950 களில் உருவான எம்ஜிஆர் ரசிகர்களின் பட்டாளம் 1977 வரை மிக தீவிரமாக எம்ஜிஆர் படங்களுக்கு ஆதரவு தந்தும் மன்றப்பணிகளில் ஈடுபடுத்தி கொண்டும் புரட்சித்தலைவரின் அண்ணா திமுக இயக்கத்தின் உறுப்பினர்களாகவும் பங்காற்றி வெற்றி மேல் கண்டார்கள் .
http://i66.tinypic.com/uak29.jpg
1977 முதல் 2018 இன்று வரை மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் பல்வேறு வயதை கடந்தவர்கள் இன்னமும் மக்கள் திலகத்தின் நினைவாகவே வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் . இன்றைய தகவல் தொழில் நுட்பத்தில் மக்கள் திலகத்தின் பல திரைப்படங்கள் ஊடகங்களிலிலும் , கைப்பேசியிலும் காணும் அளவிற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது .
சமூக வலை தளங்களில் மக்கள் திலகத்தை பற்றிய பல்வேறு செய்திகள் , தகவல்கள் , நிழற்படங்கள் வந்தவண்ணம் உள்ளது .
மக்கள் திலகத்தை பற்றிய புத்தம் புது புத்தகங்கள் இதுவரை 500க்கும் மேல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது
மக்கள் திலகத்தின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மனநிறைவான உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது .
மக்கள் திலகத்தின் ரசிகர்களாகிய நமக்கு கிடைத்த பெருமைகள் இன்னமும் தொடர்கிறது .
மக்கள் திலகத்தின் உருவம் பொறித்த நாணயம் விரைவில் மத்திய அரசு வெளியிட உள்ளது .
மக்கள் திலகத்தின் சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது .
டிஜிட்டல் பதிப்பில் உலகம் சுற்றும் வாலிபன் , இதயக்கனி , மாட்டுக்காரவேலன் இந்த ஆண்டில் திரைக்கு வர உள்ளது .
டிஜிட்டல் வடிவில் தயாரிப்பில் இருக்கும் படங்கள் .
ஆசை முகம்
குடும்பத்தலைவன்
காவல்காரன்
மீனவநண்பன்
நம்நாடு
இத்தனை பெருமைகள் கொண்ட எம்ஜிஆர் ரசிகர்களின் நாடி துடிப்பை உணர்ந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் நமக்கு கொடுத்த வாழ்த்துரை '' இன்று போல் என்றும் வாழ்க''
உண்மைதானே ...
மக்கள் திலகம் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக இயக்கம் 46 ஆண்டுகளை கடக்க உள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்தின் ஆட்சி தற்போது நடந்து கொண்டிருக்கிறது .
மன மகிழ்வோடு நம் பயணத்தை தொடர்வோம் .
.
புரட்சித் தலைவரின்
ரசிகன் பக்தன்
என்ற
பெருமிதத்துடன்
இந்த பதிவு
த*மிழ*க முத*ல்வ*ர் எம்.ஜி.ஆர் செய்த* ந*லத்திட்ட*ங்க*ளில் சில...
---------------------------------------------------------------
குறு விவசாயிகளுக்கு
--------------------------------------
இலவச மின்சாரம்--
விவசாயக் கடன் தள்ளுபடி--
பயிர் பாதுகாப்பு இன்ஷூரன்ஸ் திட்டம்--
கரும்பு கொள்முதலை அரசே ஏற்றுக் கொண்டது.
பெரு விவசாயிகளுக்கு
குந்தா மின் நிலையம்--
TAMIN--கிரானைட் தொழிற்சாலை--மணலியில்--
பாதிக் கடன் சலுகையில் விவசாய உற்பத்திக்கு பணம் வழங்கியது--
காற்றாலை மின்சாரம்
ஏழைகளுக்கு
------------------------
குடிசை தோறும் ஒரு இலவச மின் விளக்கு-
TNPL--காகித உற்பத்தி தொழிற்சாலை தொடங்கியது--
நியாய விலைக் கடைகளில் பாமாயில் 10லி வழங்கியது--
சரளைச் சாலைகளுக்கு கிராமம் முழுவதும் ஒரே சீராக தார் சாலை போட்டது--
6300 க்கும் மேலாக அரசு பேருந்து வழித்தட போக்குவரத்து தொடங்கப்பட்டது.
பள்ளிக்கு செல்லும் பாலக*ர்க*ளுக்கு மட்டுமின்றி அனைத்து ஏழைக் குழ*ந்தைக*ளுக்கும் தினன் ஒருவேளை ச*த்துணவு சாப்பிட உறுதி செய்த*து.
அத*ன்மூலம் எண்ணற்ற ஆத*ர*வ*ற்ற, வித*வை தாய்மார்க*ளுக்கு வேலை கொடுத்த*து.
விலைவாசியை தான் ஆண்ட 11 ஆண்டுக*ளிலும் பெரிதாக உய*ராமல் க*ட்டுக்குள் வைத்த*து. நியாயவிலைக் க*டைக*ளில் சீரான விநியோகம்.
அப்போத*ய எஸ்.எஸ்.எல்.சி மாணவ*ர்க*ள் பெரும்பாலோனோர் அத்துட*ன் ப*டிப்பை நிறுத்தி க*ல்லூரி ப*டிப்பை தொட*ராமல் (குறிப்பாக கிராம*ப்புற பிள்ளைக*ள்) இருந்த* நிலையை மாற்ற ப*ள்ளியிலேயே +2 என்ற மேற்ப*டிப்பை தொட*ர*ச்செய்த*து.
இலவ*ச* ஆம்புலன்ஸ் சேவையை இந்தியாவிலேயே முத*ன்முத*லில் அறிமுக*ப்ப*டுத்தி செய*ல்ப*டுத்திய*து.
வ*ச*தி குறைந்த* வ*குப்பின*ர் இலவ*ச*மாக*வும்,மற்ற*வ*ர்க*ள் குறைந்த தொகையில் அர*சு மருத்துவ*ம*ணையில் ட*யாலிசிஸ் செய்துகிள்வ*து.
இர*ண்டுபேர் சைக்கிளில் செல்ல அனும*தி
காவ*ல*ர்க*ள் அனைவ*ரும் முழுக்கால் ச*ட்டை ம*ற்றும் கூம்பு வ*டிவிலான தொப்பியை மாற்றிய*து.
காவ*ல*ர்க*ள் அனைவ*ருக்கும் ரெயின்கோட் அளித்தது.
ம*க*ளிர்க்காவ*ல் நிலைய*ம் அமைத்த*து.
புதிய க*ல்லூரிக*ள், புதிய ப*ல்க*லைக்க*ழ*க*ங்க*ள், பொறியிய*ல் க*ல்லூரிக*ள் நிறுவி அத*னால் க*ல்விப்புர*ட்சியை ஏற்ப*டுத்தியது.
உலகத்த*மிழ் மாநாட்டை சிற*ப்பாக ந*ட*த்திய*து.
த*மிழுக்கென த*னிப*ல்க*லைக்க*ழ*க*ம் க*ண்டது.
எழுத்துச்சீர்திருத்த*ம் கொண்டுவ*ந்த*து.
15 ஆண்டுக*ளாக ந*டைபெறாமலிருந்த* உள்ளாட்சி, ந*க*ராட்சி தேர்த*லை ந*ட*த்திய*து.
ப*ர*ம்ப*ரை க*ர்ணம் முறையை ஒழித்து கிராம நிர்வாக அலுவ*ல*ர்க*ளை தேர்வுமூலம் தேர்ந்தெடுக்கச் செய்தது.
முல்லைப்பெரியாறு அணையை ப*லகோடி செலவில் செப்ப*னிட்டு இன்றைக்கும் 142 அடி உய*ர*த்திற்கு தேக்கி வைக்கும் அளவிற்கு ப*லப்ப*டுத்தி த*ந்தது.
ப*ராமரிப்பில்லாத* கோவில்க*ளுக்கும் ஒருவிளக்கு பூஜைக்கு உறுதி செய்த*து.
ந*க்ச*ல்பாறி, ஜாதிச்ச*ண்டைக*ள், வன்முறைக்க*லாச்சார*ம் அதிக*ம் நிக*ழாவ*ண்ணம் பார்த்துக்கொண்ட*து.
இவைகள் எல்லாம் யார் ஆட்சியில் என்றால்---
நடிகன் நாடு ஆண்டதால் தான் நாடு நாசமானது என்று நா கூசாமல் நவில்கின்ற ராமதாஸ் போன்றவர்களுக்கும்---
சினிமா கவர்ச்சியால் சீரழிந்தது செந்தமிழ் நாடு என்னும் செம்மொழித் தலைவருக்கும்???
தெரிந்திருந்தும் தெரியாதது போல் நடிக்கும் திசையில்லா ஏனைய உதிரிக் கட்சிக்காரர்களுக்கும்--
நினைவூட்ட விரும்புகிறோம்??
எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் இத்தகைய ஏற்றங்கள் நடந்தேறின!!!!!
இன்னும்,,,,தறியாளர்களுக்கு,,தொழிலாளர்களுக்கு--நடுத்தர வர்க்கத்தினருக்கு என்று--
எம்.ஜி.ஆர் ஆட்சியின் இன்ன பிற சாதனைகள் தொடர்ந்து பதிப்பிக்கப்படும்!! காத்திருக்கவும்!
இனிய காலை வ*ணக்கத்துட*ன்...
எங்க வீட்டு பிள்ளை
புரட்சித் தலைவர் பக்தன்... Thanks...
புரட்சி நடிகர் எம்ஜிஆர் நடித்த புதுமைப்பித்தன் 2-8-1957 வெளியானது.
புரட்சி நடிகர் நடித்த புதுமைப்பித்தன் படத்தை எடுத்த இயக்குநர் ராமண்ணா புரட்சித்தலைவரை வைத்து புரட்சிப்பித்தன் படத்தை தொடங்கினார். ஆனால் எம்ஜிஆர் அவர்கள் தமிழக முதல் அமைச்சர் ஆனதால் படம் வெளிவர இயலவில்லை.
சென்னை மிட்லண்ட் 100 நாள் ஸ்ரீகிருஷ்ணா 81 நாள் உமா 63 நாள் ராஜகுமாரி 50 நாள். மதுரை நியூசினிமா 81 நாள் ஓடியது... Thanks to Friends Team...
ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
கூண்டுக்கிளி -1954
புதுமைபித்தன் -1957
நாடோடி மன்னன் -1958
நல்லவன் வாழ்வான் -1961
குடும்ப தலைவன் -1962
பாசம் - 1962
நீதிக்கு பின் பாசம் -1963
கலங்கரை விளக்கம் -1965
தாலி பாக்கியம் -1966
கணவன் -1968
தேடிவந்த மாப்பிள்ளை -1970
பட்டிக்காட்டு பொன்னையா -1973
இதயக்கனி -1975
மீனவ நண்பன் -1977.
உலக வரலாற்றில் பல சாதனைகள் நிகழ்த்திய நம் ''நாடோடி மன்னன் .'' திராவிட இயக்கத்தின் மன்னன் நம் அண்ணாவின் '' இதயக்கனி ''- மக்களுக்கு ''நல்லவன் வாழ்வான் '' என்று அறிவுரை கூறிய வள்ளல் எம்ஜிஆர
எழுதிய கதை ''கணவன் ''.. ''குடும்ப தலைவன் '' எல்லோரும் விரும்பும் மக்கள் திலகம் .
கோடிகணக்கான ரசிகர்களின் ''பாசம் '' பெற்ற தலைவன் . ''நீதிக்கு பின் பாசம் '' என்ற
படிப்பினை தந்த மக்கள் திலகம் .''கூண்டுக்கிளி''யாக இருந்தவர் பல பெண்களின் மனதில் இவர் நம் வீட்டுக்கு
''தேடி வந்த மாப்பிளை''யாக வருவாரா ''தாலி பாக்கியம் '' கிடைக்காதா என்று ஏங்கிய பெண்களின் மனதை கவர்ந்த உலக பேரழகன் .
''பட்டிக்காட்டு பொன்னையா '' படத்துடன் ஜோடி பிரிந்த ஜெயாவின் மான் சீக தலைவன் .
''புதுமை பித்தன் '' மீனவ சமுதாயத்தின் என்றுமே ''மீனவ நண்பன் ''
என்றென்றும் மனித நேய தலைவன் - மக்களின் ''கலங்கரை விளக்கம் '' எம்ஜிஆர் .