-
'குற்றம் கடிதல்' பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடிக்க வாய்ப்பு
'குற்றம் கடிதல்' இயக்குநர் பிரம்மாவின் அடுத்த படத்தின் நாயகியாக நடிக்க ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
பிரம்மா இயக்கத்தில் வெளியாகி தேசிய விருதை வென்ற திரைப்படம் 'குற்றம் கடிதல்'. அஜய், ராதிகா, சாய் ராஜ்குமார், பாவல் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை கிரிஷ்டி மற்றும் சதிஷ்குமார் இணைந்து தயாரித்திருந்தார்கள். செப்டம்பர் 2015ல் இப்படம் வெளியானது.
பள்ளிக் கல்வித் துறையின் சீர்திருத்தம், ஆசிரியர் - மாணாக்கர் உறவு, தவறு செய்யும் மாணவர்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு விவாதங்களைத் தூண்டக் கூடிய படமாக 'குற்றம் கடிதல்' உள்ளதால் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது வென்றது.
தற்போது, இயக்குநர் பிரம்மா தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தில் பெண்களுக்கான பிரச்சினைகளை அலசும் படமாக திரைக்கதை அமைத்திருக்கிறார்.
இப்படத்தின் பிரதான வேடத்தில் நடிக்க ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும், தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் முடிவானவுடன் ஜோதிகா ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
'36 வயதினிலே' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு ஜோதிகா இக்கதையைத் தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இறைவி படம் பற்றிப் பரவிய திடீர்வதந்தி - VIKATAN
கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இறைவி. இந்தப்படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தப்படம் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது என்று செய்திகள் வந்தன. இச்செய்திகள் வரத்தொடங்கியதும் தயாரிப்புநிறுவனம் உடனடியாக அதை மறுத்திருக்கிறது.
இறைவி படத்தைத் தயாரித்த நிறுவனங்களில் ஒன்றான ஸ்டுடியோகிரீன் நிறுவனம், இறைவி படத்தின் வெளியீடு தொடர்பாக வெளிவரும் வதந்திகளை நம்பாதீர்கள். படவெளியீடு எப்போதென விரைவில் நாங்களே அறிவிப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இறைவி தொடர்பான செய்திக்கு இவ்வளவு வேமாக மறுப்புச் சொல்லவேண்டிய அவசியம் என்ன? ஏனெனில், விஜய்சேதுபதி நடிப்பில் வருகிற 19 ஆம் தேதி சேதுபதி படம் வெளியாகிறது. இப்படம் வெளியாகி இருபதுநாட்கள் கழித்து மார்ச் 11 ஆம் தேதி அவர் நடித்திருக்கும் காதலும்கடந்துபோகும் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அப்படம் வெளியாகி இரண்டு வாரங்களில் இறைவி வருகிறது என்று செய்திகள் வந்தால் அந்தப்படத்தின் வசூல் பாதிக்கப்படும். இதனால்தான் வேகமாக இறைவி தொடர்பான வதந்திகளை நம்பாதீர்கள் என்று வேகமாக மறுத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
-
TOLLYWOOD
1000 திரையரங்குகளில் டீஸர்...மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அல்லு அர்ஜுன் நடிக்கும் சரைனோடு படத்தின் முதல் டீஸர், 1000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆக்*ஷன் படமாக உருவாகும் இப்படத்தினை போயபட்டி ஸ்ரீனு இயக்க, ரகுல் ப்ரீத் சிங், கேத்ரின் தெரசா, ஸ்ரீகாந்த் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
படத்திற்கு இசை தமன். படத்தின் அதிகாரபூர்வ டீஸர் வரும் வியாழன் அன்று வெளியாகிறது, இருப்பினும் வெள்ளியன்று, ஆந்திரா பிரதேசம், தெலுங்கானா, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் 1000 திரையரங்குகளில் படத்தின் டீஸரை திரையிட முடிவுசெய்துள்ளனர் படக்குழுவினர்.
சாதரணமாக ஒரு படம் வெளியாவதற்கு முன்னதாக அப்படத்தின் டிரெய்லரே திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும், ஆனால் முதல் முறையாக சரைனோடு படத்தின் டீஸர் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏப்ரல் 8ம் தேதி வெளியாக உள்ள இப்படம், அல்லு அர்ஜுனின் 20வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Jayam Ravi, Vijay party together day before 'Mirthun' and 'Sethupathi' release
http://data1.ibtimes.co.in/cache-img...e-day-both.jpg
Actor Jayam Ravi's 'Miruthan' and Vijay Sethupathi's 'Sethupathi' movie released on the same day. Both the movie has higher expectations from the Kollywood fans. Ravi and Vijay are seen hugging each other at 'Miruthan' special screening. Both actors shared their wishes for the film Success. The photos went viral on the Social media sites
http://data1.ibtimes.co.in/cache-img...e-day-both.jpg
Miruthan Is the first Zombie film in Tamil film industry, directed by Shakthi Soundar Rajan. Starring Jayam Ravi and Lakshmi Menon in the lead role. Sethupathi is an action movie, directed by Arun Kumar. Starring Vijay Sethupathi and Remya Nambeesan in the lead role
http://data1.ibtimes.co.in/cache-img...e-day-both.jpg
Actor Jayam Ravi tweeted: Wishing my bro Vijay Sethupathy super duper success at the BO today! #Sethupathy #fromtoday
-
மிருதன் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்*ஷன் எவ்வளவு தெரியுமா? - VIKATAN
தமிழின் முதல் ஸோம்பி திரைப்படம் மிருதன். ஜெயம்ரவி, லட்சுமிமேனன் நடிப்பில் சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் சென்ற வாரம் வெளியானது.
இப்படத்திற்கான பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்*ஷன் என்னவென்பதை ஜெயம்ரவி தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
மிருதன் படத்தின் முதல் முன்று நாள் வசூல் 10.66 கோடி மற்றும் உலகளவில் அதாவது இந்தியாவையும் சேர்த்து மொத்தமாக 20.13 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதை, ஐங்கரன் நிறுவனம் அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
#Miruthan TN Opening Weekend 3 day Collection: 10.66 Crs. Worldwide Weekend including ROI and TN BO: 20.13 Crs. Official from Ayangaran. — Jayam Ravi (@actor_jayamravi)
-
'சண்டக்கோழி 2' கைவிடப்பட்டது: 'அறிவுரை'யுடன் விஷால் அறிவிப்பு
'சண்டக்கோழி 2' படம் கைவிடப்பட்டதாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சண்டக்கோழி'. யுவன் இசையமைத்த இப்படத்தை ஜி.கே நிறுவனம் தயாரித்தது. 2005ம் ஆண்டு இப்படம் வெளியானது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் விஷால் மற்றும் லிங்குசாமி இருவரும் ஈடுபட்டு வந்தார்கள். முத்தையா இயக்கத்தில் 'மருது' படத்தில் நடித்து வருகிறார் விஷால். இப்படத்தைத் தொடர்ந்து 'சண்டக்கோழி 2' படத்துக்காக தேதிகள் ஒதுக்கி இருந்தார் விஷால். மே 1ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் "சினிமா படைப்பாளிகள் சிலர் தங்கள் பணி மீது முழு கவனம் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நடிகர்கள் நடிப்பிலும், இயக்குநர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. 'சண்டக்கோழி 2' கைவிடப்படுகிறது" என்று தனத் ட்விட்டர் பக்கத்தில் விஷால் தெரிவித்திருக்கிறார்.
'சண்டக்கோழி 2' படத்துக்கான கதை விவாதம் உள்ளிட்டவை மிகவும் தீவிரமாக நடைபெற்ற வந்த சமயத்தில் விஷாலின் இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது
-
Lingusamy opts out of 'Sandakozhi 2'; Vishal lodges complaint at producers' guild - http://www.ibtimes.co.in/
http://data1.ibtimes.co.in/cache-img...al-krishna.jpgA picture of Vishal.Vishal Twitter Account
Vishal Krishna and Lingusamy's ambitious "Sandakozhi 2" has been shelved with the director opting out of the project. This has upset the actor, who has now taken the issue to the producers' guild, seeking a solution.
"Sad 2 c certain filmmakers lackin commitmnt twds projects.guess actors shd stick 2 actin n Dir s 2 directing.sandaikozhi 2 cancelled.GB," Vishal shared his anger on Twitter.
Speaking to the DNA, Vishal said that he had signed Lingusamy to direct "Sandakozhi 2" in 2014 but the project was delayed as they could not lock in a script. Finally, the duo wanted to start the Tamil film in February 2016. But to the actor's surprise, the filmmaker has decided to walk out of the flick at the last minute after making the actor wait for months.
"I got to know through sources that he had signed on another film. I don't want to get into details, but this is extremely unethical of him to pull out at the last minute. I have filed a complaint with the Producers Council and have asked that my money and expenditure since November 2014 be returned," Vishal told the daily.
The planned project was supposed to be a sequel to their earlier hit film "Sandakozhi," which had Meera Jasmine in the female lead role. The first instalment was a big hit, paving way for its sequel plans.
Meanwhile, Lingusamy is reportedly getting ready to direct a Tamil movie starring Telugu actor Allu Arjun. It will mark the debut of the Tollywood star in Tamil. This film is said to be the reason why the director opted out of "Sandakozhi 2."
On the other hand, Vishal is busy with his next movie "Marudhu." The shooting of the movie is progressing at a rapid pace and it is likely to come to an end soon. The Tamil flick, directed by Arun Kumar, has Sri Divya playing the female lead role.
-
மிஷ்கின் இயக்கத்தில் விஷால்: உருவானது புதிய கூட்டணி
'மருது' படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கவிருக்கும் படத்தில் நடித்து, தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் விஷால்.
முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மருது'. இமான் இசையமைத்து வரும் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டப் பணிகளை தொடங்கி இருக்கிறார்கள்.
இப்படத்தைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டக்கோழி 2' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் விஷால். ஆனால், பல்வேறு காரணங்களால் தற்போது அப்படம் கைவிடப்பட்டது.
இதனால், விஷால் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், விஷால் அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடித்து தயாரிக்க முடிவு செய்திருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
மிஷ்கின் நடித்து, தயாரித்து வரும் 'சவரக்கத்தி' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது. அப்படத்தை முடித்துவிட்டு மிஷ்கின், விஷால் படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது. 'சவரக்கத்தி' படத்தை அவருடைய உதவி இயக்குநர் ஆதித்யா இயக்கி வருகிறார்.
-
சரத்குமாருக்குப் பதிலாக விஷாலா? கிளம்பும் புது சர்ச்சை
மிஷ்கின் இயக்கத்தில் 2014 இல் வெளியான படம் பிசாசு. அதற்கடுத்து அவர் தயாரித்து, நடித்துக்கொண்டிருக்கும் படம் 'சவரக்கத்தி'. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறதாம். அப்படத்தை முடித்துவிட்டு மிஷ்கின், விஷால் படத்தை இயக்குவார் எனச் சொல்லப்படுகிறது.
இதற்கு முன்பாக கடந்த ஆண்டில், மிஷ்கின் இயக்கத்தில்,. சரத்குமார் நாயகனாக நடிக்க இருக்கிறார். அவரோடு நடிக்க இருப்பவர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்" என்று சொல்லப்பட்டது. ஆனால் அது இப்போது வரை நடக்கவில்லை, நடப்பதற்கான அறிகுறியும் இல்லை.
இந்நிலையில், திடீரென விஷாலை அவர் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. விஷால் இப்போது மருது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அது முடிந்ததும் லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 படத்தில் நடிக்கும் திட்டத்தில் இருந்தாராம். லிங்குசாமி தெலுங்குப் படத்துக்குப் போவதால் சண்டக்கோழி 2 கைவிடப்பட்டது.
அதனால் அந்தத் தேதிகளில் படப்பிடிப்பு நடத்த மிஷ்கின் தயாராக இருப்பதால் அவர் படத்தில் நடிக்க விஷால் தயாராகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே சரத்குமாருக்கு எழுதிய கதையை அப்படியே விஷாலை வைத்துப் படமாக்கப்போகிறார் என்கிற பேச்சுகள் இப்போது வரத்தொடங்கியிருக்கின்றன. நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பிறகு இப்படி நடப்பதால் இது பரபரப்பான பேச்சாகிறதாம்.
-
இளையராஜா 1000, மிக மோசமான நிகழ்ச்சி - விஜய் டிவியைக் கடுமையாகச் சாடும் பிரதாப் போத்தன்! - Vikatan
பழம்பெரும் நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் தனது முகநூல் பக்கத்தில் விஜய் டிவியின் ‘இளையராஜா1000’ நிகழ்ச்சி குறித்து மிகவும் வருத்தத்துடன் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கலைஞரின் மரியாதைக்குரிய நிகழ்ச்சி பலரின் சங்கடத்திற்கு ஆளாகியுள்ளது. முக்கியமாக நட்சத்திரங்கள், ரசிகர்களின் நன்மதிப்பைப் பெறத் தவறியுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியின் விருந்தினர்களில் ஒருவரான பிரதாப் போத்தன் தனக்கு நேர்ந்த சங்கடத்தைப் பதிவிட்டுள்ளார்.
அவர் முகநூலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்....
ஏகப்பட்ட அழைப்புகள், நான் இயக்குநர்கள் குழுவிலும் , நடிகர்கள் குழுவிலும் இருப்பதாகத் தெரிவித்தார்கள். நானும் அதை நம்பினேன். ஏனெனில் இளையராஜாவின் சிறந்த சில பாடல்கள் என்னை வைத்துப் படமாக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒரு இயக்குநராக இதுவரை சரியில்லாத பாடல்களை அவர் என் படங்களுக்குக் கொடுத்ததே இல்லை. கடைசியாக நாங்கள் இருவரும் இணைந்து பணிபுரிந்த யாத்ரா மொழி, மற்றும் வரவிருக்கும் ஒரு மலையாளம் படம் என அனைத்தும் நல்ல பாடல்கள்.
சரி நான் சீக்கிரம் சென்றைடைய வேண்டியிருந்த இந்த விஜய் டிவியின் நிகழ்ச்சிக்கு வருவோம். அப்போது தான் நான் இளையராஜாவின் ஆசியைப் பெற முடியும் என நினைத்து வந்து சேர்ந்தேன். ஒரு பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சி அளவிற்கே ஆயத்தப் பணிகளை மேற்கொண்டிருந்தது விஜய் டிவி. என்னுடைய பாடல்கள் எதுவும் அங்கே அரங்கேற்றப்படவில்லை. கௌதம் மேனனின் பாடல்கள் வரிசையில் மட்டும் என் இனிய பொன் நிலாவே, மற்றும் கோடைகாலக் காற்றே பாடல்கள் பாடப்பட்டன.
பிறகு இயக்குநர்கள் வரிசையிலும் நான் அழைக்கப்படவில்லை. எனக்கு அது பெரிதாக பாதிக்கவில்லை. காரணம் எனது சர்க்கரை அளவு அதிகமானதால் இயற்கை அழைப்பு. அதனால் எழுந்து சென்றுவிட்டு வந்தால் அப்போதும் இயக்குநர்கள் விடாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு நடிகைகள் பேச்சு இப்படி எல்லாம் கமலின் வருகையை பிரகடனப்படுத்தவே நடந்தன. எல்லாம் முடிந்து ’லார்ட் ஆஃப் தி ரிங்’ பாணியில் காத்திருந்தமைக்கு விருந்தாக சுமார் 11 மணியளவில் மணிரத்னத்தின் ’கீதாஞ்சலி’ பட ஓ பிரியா, பிரியா பாடல் பாடப்பட்டது. அப்போது நான் கிளம்ப ஆயத்தமானேன்.
அந்நேரம் நிகழ்ச்சியின் பொறுப்பாளரான பெண் ஒருவர் வந்து அடுத்து நீங்கள் தான். மலையாள நடிகர்கள் சார்பாக நீங்களும், ஜெயராமும் மேடையேறவேண்டும் எனக் கூறினார். ஒரு இயக்குநராக நான் அவருடன் ஒரு படம் இயக்கியிருக்கிறேன் என்றால் அந்தப் பெண் கறாராக நீங்கள் இருந்தே ஆக வேண்டும் நடிகர்கள் வரிசையில் கண்டிப்பாகப் பேச வெண்டும் என அடம்பிடித்தார். ஆனால் நான் கிளம்பிவிட்டேன்.
இந்த விஜய் டிவியின் எப்போதுமான சம்பவாமி யுகே யுகே அட்டூழியங்களால் ருபெர்ட் முர்டொக்கின் (ஸ்டார் டிவியின் நிறுவனர்) பெயரைக் கெடுக்கிறார்கள். ஒரு மேஸ்ட்ரோவுக்கு மரியாதை செய்யும் பாணி இதுவல்ல. நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான நிகழ்ச்சி இது தான் என கோபமாகப் பதிவிட்டுள்ளார் பிரதாப் போத்தன்.
இளையராஜா இசை நிகழ்ச்சியில் ராஜா இசை மழையில் நனைய வைப்பார் என சென்றிருந்த பலருக்கும் ஏமாற்றமான நிகழ்ச்சியாகவே அமைந்திருந்தது விஜய் டிவியின் ‘இளையராஜா1000” நிகழ்ச்சி.