PESUM PADAM - CERTIFICATE
http://i58.tinypic.com/k1fcw5.jpg
Printable View
PESUM PADAM - CERTIFICATE
http://i58.tinypic.com/k1fcw5.jpg
[QUOTE=esvee;1157069]http://i58.tinypic.com/jq12kp.jpg
இதை பார்த்து குப்பனும், கிப்பனும் எழுதுயது என்று சொல்வார்களே! உண்மை நமக்கு தெரியும். என்ன செய்வது : அப்பனும் சுப்பனும் எழுதினால் அதுதான் உண்மை! தொந்தி கணபதிக்கும்,சுப்புரமாணிக்கும் அந்த பரமனுக்கும்:
http://i62.tinypic.com/2njwxh3.jpg
http://www.youtube.com/watch?v=eNtvJ0A6ypI
ஒழுங்காக படித்ததின் விளைவு தான் பூமியில் சினிமா துறையை விட்டு விளகும்வரை no 1 HERO கதாநாயகனாக வலம் வந்தார் (siderole நடிக்க வில்லை அப்பா வேடத்தில் நடிக்கவில்லை ) பிறகு தொடர்ந்து மூன்று முறை NO1 முதல்வர் ஆனார். ஆனால் அங்கு அப்படி அல்ல DEPOSIT கூட வாங்கவில்லை இப்போது புரியும் பிட் அடித்தது யார் என்று இதோடு அந்த வயதில் மூத்தவர் நிறுத்தி கொள்ளவேண்டும் அல்லது வாதம் என்றால்
இன்னும் நிறைய உள்ளது
http://i57.tinypic.com/157m2ig.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் !
.
நம் இதய தெய்வம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் கலைத்துறையில் சாதித்து
காட்டிய சாதனைகள் ஏராளம் .மக்கள் திலகத்தின் திரை உலக சாதனைகள்
எல்லோராலும் ஏற்று கொள்ளப்பட்டது .
இணைய தளத்தில் மக்கள் திலகத்தின் சாதனைகளை ஏற்று கொள்ள முடியாத நடிகர்
சிவாஜி கணேசனின் ரசிகர்கள் மக்கள் திலகம் திரியிலும் ,அவர்களின்
திரியிலும் வெளியிடும் கருத்துக்கள் - விளக்கங்கள் - விமர்சனங்கள்
-குறைகள் - முற்றிலும் தவறான கண்ணோட்டத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
வரலாற்றுப் பிழை நிகழ்ந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில், சிலவற்றை
பதிலாக இங்கு தெரிவித்துள்ளேன் !
மக்களின் விருப்பப்படிதான் நடிகர்கள் நடிக்க முடியும். அவர்கள்
விரும்பும் வரை நடிகர்கள் திரையுலகில் நீடித்திருக்க முடியும். எங்கள்
கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் சரித்திரப் படங்களில் நடிப்பதை மக்கள்
விரும்பினார்கள். அதனால் அவர் சரித்திரப் படங்களில் நடித்தார்.
ராஜா-ராணி கதைகளில் நடிக்க மட்டுமே எம்ஜிஆர் பொருத்தமானவர் என்ற
முத்திரையை விலக்கி என்தங்கை, அந்தமான் கைதி - தாய்க்கு பின் தாரம், தாய்
மகளுக்கு கட்டிய தாலி போன்ற சமூக படங்களில் சிறப்பாக நடித்து தனது
திறமையை நிரூபித்தார்.
1960 -1965 கால கட்டத்திலே, பாக்தாத் திருடன் - திருடாதே - தாய்
சொல்லைதட்டதே - தாயை காத்த தனயன் - பெரிய இடத்து பெண் -பரிசு -
வேட்டைக்காரன் - பணக்கார குடும்பம் - தெய்வத்தாய் - படகோட்டி போன்ற
வெற்றிப்படங்களை அளித்த பெருமை எங்கள் புரட்சித் தலைவரையே சாரும். .
தமிழ் திரை உலகில் எம்ஜிஆர் - சிவாஜி - ஜெமினி மூவரும் ஆக்கிரமித்து
கொண்டிருந்த கால கட்டத்தில் கூட எம்ஜிஆர் படங்கள் மற்ற இருவர் படங்களை
விட அதிக வசூல் சாதனைகள் பெற்று முதலிடத்தில் இருக்கிது என்றும் அவர்தான்
வசூல் சக்கரவர்த்தி என்றும் அப்போதைய பேசும் படம் ( நடிகர் சிவாஜி கணேசன்
பற்றிய செய்திகளை அதிகம் வெளியிட்டு அவரது சார்பு பத்திரிகை என்று பேச
வைத்தது) மாத இதழ் கூட ஒப்புக்கொண்டது. EVER GREEN HERO, MATINEE IDOL
என்றும் பத்திரிகைகள் பகிரங்கப்படுத்தின. இந்த செய்திகளை எல்லாம் அந்த
நண்பர்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை. ஏனென்றால் , அவர்கள் அப்போது
பிறந்திருக்க மாட்டார்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
ஆயிரத்தில் ஒருவன் - ஓடவில்லை என்பதை நீங்கள் சொல்ல அருகதையற்றவர்கள்.
ஏனெனில், கர்ணன் படத்தை எப்படியெல்லாம் ஓட்டினீர்கள், ஒட்டப்பட்டது என்ற
விவரம் நாங்கள் அறியாதது அல்ல.
மக்கள் திலகத்தின் திரையுலக சாதனைகளை ஜீரணிக்க முடியாமல் அவரை எந்த
அளவுக்கு எதிர்மறையாக விமர்சனம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு தரம்
தாழ்ந்து, கீழே இறங்கி வந்து தங்களை உண்மையான சிவாஜி ரசிகன் என்று
அடையாளப் படுத்திக்கொள்வதில் அற்ப சந்தோசம் அடையும் ஒரு சில நபர்கள்
திரியில் கல(ளங்)கம் புரிந்து வருவது வருந்தத் தக்கது.
இன்றைய தினம் சிவாஜி கணேசன் என்றழைக்கப்படுவதற்கு காரணம் எங்கள் மக்கள்
திலகம் தான். அவர் " சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்" என்ற நாடகத்தில்
நடிக்க முடியாமல் போனதால், அப்போதைய வி.சி. கணேசன் அவர்கள் நடிக்கும்
சூழ்நிலை உருவாகி அந்த நாடகத்தின் காரணமாக " சிவாஜி " என்ற பட்டப்
பெயரை தந்தை பெரியார் அவர்கள் சூட்டினார்.
மேலும், எங்கள் மக்கள் திலகம், தான் சார்ந்திருந்த இயக்கத்தின் கொள்கை
காரணமாக நடிக்க இயலாமல் போன "ராணி லலிதாங்கி" மற்றும் "காத்தவராயன்"
போன்ற படங்களில் திரு. சிவாஜி கணேசன் அவர்களை சிபாரிசு செய்தார்.
நிலைமை இப்படியிருக்க, 1936ல் சதிலீலாவதி படம்
மூலம் அறிமுகமான எங்கள் பொன்மனசெம்மலுக்கு, 1952ல் பராசக்தி படம் மூலம்
அறிமுகமான திரு. சிவாஜி கணேசன் அவர்கள் "மலைக்கள்ளன்" படத்தில் வாய்ப்பு
வாங்கி தந்ததாக 21ம் நூற்றாண்டின் ஜோக் ஒன்றை புதிதாய்
உதிர்திருக்கிறார் நண்பர் ஒருவர்.
யாருக்கு யார் வாய்ப்புக்கள் வாங்கி தருவது ? புளுகினாலும், பொருந்த
புளுக வேண்டும். கப்சாவுக்கு ஓர் அளவே இல்லையா ?
நல்ல கற்பனை. இப்படி பொய்யான தகவல்களை பதித்து சந்தோஷம் அடைந்து
கொள்கிறார்கள். பாவம்.
எங்கள் பொன்மனச்செம்மல் நடிப்பில் உருவாகி பின் கைவிடப்பட்ட படமான
"அன்று சிந்திய ரத்தம்" தான் பின்பு "சிவந்த மண்" ணாக மறு வடிவம்
பெற்றது என்பது பாவம் அந்த நண்பருக்கு தெரிய வாய்ப்பில்லை என்றுதான்
கருத வேண்டியுள்ளது. இந்த மெகா பட்ஜெட் படம் மூலம் இயக்குனர் ஸ்ரீதர்
அவர்கள் எதிர்பார்த்த லாபமும் கிடைக்க வில்லை.
திரு. சிவாஜி கணேசன் அவர்கள் நடிக்க வருவதற்கு முன்பே தமிழ்
திரையுலகத்தில் உச்ச நிலையில் இருந்த நடிகை பானுமதி அவர்களே, எங்கள்
கலைவேந்தனை " MINIMUM GUARANTEE RAMACHANDRAN" என்று பகிரங்கமாகவே
வெளிப்படையாக கூறியுள்ளார் என்பதை உங்கள் கவனத்துக்கு
இந்த நேரத்தில் கொண்டு வர விரும்புகிறோம்.
எங்கள் மக்கள் திலகம் அவர்கள் எதிர்ப்பிலேயே வளர்ந்தவர். அவர் அன்புடன்
"தம்பி கணேசன்" என்றழைக்கும் பட்சத்தில் நாங்களும் திரு. சிவாஜி கணேசன்
அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளோம். ஆனால்,
காழ்ப்புணர்ச்சி கொண்டு ஒரு சில நண்பர்கள் எங்கள் தலைவனை விமர்சிக்கும்
போது உங்கள் மீது ஏற்படும் ஆத்திரத்தினால் திரு. சிவாஜி கணேசன் அவர்கள்
மீதும் எங்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. உண்மையிலேயே நீங்கள் திரு.
சிவாஜி கணேசன் அவர்கள் மீது அன்பு கொண்டிருபீர்களேயானால், அவர் மீது
நாங்கள் கொண்டிருக்கும் மதிப்பும், மரியாதையையும், தக்க
வைத்துக்கொண்டிருக்கும் வகையில், எங்கள் தலைவரை விமர்சனம் செய்யாமல்
இருக்க வேண்டும். அதை விடுத்து, ஏதோ, திரு. சிவாஜி கணேசன் அவர்கள்
மட்டும் தான் தமிழ் திரையுலகில் சாதனைகள் செய்திருப்பது போல பதிவுகளிடும்
போது தான் ஒரு விவாதம் நடைபெறுகிறது.
இந்த ஒரு சில நண்பர்கள்தான், அவரது ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு அவரது
பெயருக்கு குந்தகம் விளைவிக்கத்தக்க வகையில் பொய்யான செய்திகளை
வெளியிட்டு வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். நமது மக்கள் திலகத்தின்
ரசிகர்கள் மத்தியில் நடிகர் திரு.
சிவாஜி கணேசன் அவர்களுக்கு இருக்கும் ஒரு மரியாதையையும், மதிப்பையும்
கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் திலகம் கடைசி வரை, துணை அல்லது இணை பாத்திரங்களில் நடிக்காமால்,
கதா நாயகனாக நடித்தவர் என்று நாங்களும் எங்கள் பங்கிற்கு பெருமையுடன்
சொல்லிக் கொள்ள முடியும். ஒரு வாரம் ஓடக்கூடிய படங்களை எங்கள் தலைவர்
என்றுமே அளித்ததில்லை.
ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிட்டது சாதனை என்றால், சுமார் 72 படங்கள்
பெட்டிக்குள்ளேயே தேங்கி, தூங்கி வழிந்து கொண்டு மறு வெளியீட்டிலும்
வராமலிருப்பதும் ஒரு சாதனை தான். இதையும் பதிவு செய்திருக்கலாம்.
தமிழில் முதல் சினிமாஸ்கோப் படம் என்று கூறப்பட்ட "ராஜ ராஜ சோழன்" படம்
கூட 100 நாட்கள் ஓடவில்லை. ஏன், அந்த படத்தை தயாரித்த திரு. ஜி. உமாபதி
அவர்களின் சொந்த அரங்கிலேயே 100 நாட்கள் ஓட வில்லை. ராம் அரங்கில்
வெறும் 28 நாட்கள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா - ராக்ஸி அரங்குகளில் 42
நாட்கள் ஓடி சாதனை படைத்ததையும் பட்டியலில் சேர்த்துக் கொண்டிருக்கலாமே !
தேர்தலில் தோல்வி பெற்றவர்கள் தான் சதவிகித கணக்குகளை எல்லாம் அவிழ்த்து
விடுவார்கள். அது போல், இங்கும் புத்திசாலி நண்பர் ஒருவர் சதவிகித
புள்ளி விவரங்களை சகட்டு மேனிக்கு அள்ளி விடுகிறார். பாவம் அவரது
ஆதங்கம்
அவருக்கு.
நட்பு ரீதியில், பதிவுகளை நீங்கள் தொடரும் பட்சத்தில், நாங்களும் அதற்கு
ஒத்துழைப்பு அளிக்கத் தயார். மீண்டும் கூறுகிறோம் - எங்களை சீண்டினால்,
நாங்கள் தக்க பதிலடியை ஆதாரத்துடன் அளிப்போம். எனவே, அவரவர் சாதனைகளை
அவரவர் சார்ந்த திரிகளில் பதிவு செய்வது நன்று.!
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும். !
http://i60.tinypic.com/5e5n42.jpg