நாளை முதல்
கோவை
டிலைட்
திரையரங்கில்
மக்கள் திலகத்தின்
கலங்கரைவிளக்கம்
Printable View
நாளை முதல்
கோவை
டிலைட்
திரையரங்கில்
மக்கள் திலகத்தின்
கலங்கரைவிளக்கம்
சுதந்திரம் பெற்றுத்தந்த கட்சி என்ற பாரம்பர்யத்தோடு இந்தியா முழுக்க மக்களிடையே பெரும் வரவேற்போடு தன் ஆளுகையைப் பரப்பியிருந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி 1967-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியைப்பிடித்தவர் அண்ணாதுரை. காங்கிரஸ் கட்சி என்ற ஆலமரத்தை ஒரே ஒரு மாநிலத்தில் விரவியிருந்த திராவிடக்கட்சி ஒன்று வீழ்த்திக்கிடத்தியது இந்திய வரலாற்றில் பெரும் சாதனை. திராவிட சிந்தனை கொண்டவர்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து அதை ஒரு பலம் கொண்ட ஓர் அமைப்பாக கட்டியமைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது அண்ணாவின் தனிப்பெரும் சாதனை. பெரியார் தேர்தல் அரசியலை விரும்பாதவர் என்பதால் பெரியாருடன் அண்ணாவின் சாதனையை ஒப்பிடமுடியாது. ஆனால், அண்ணா ஆட்சிக்கு வந்த அடுத்த பத்தாண்டுகளில் அண்ணாவின் அந்தச் சாதனையையே முறியடிக்கும் ஒரு விஷயம் அரங்கேறியது. அது ஒரு மக்கள் அபிமானம் மிக்க நடிகர் நாடாளும் வாய்ப்பைப் பெற்றது. அந்தச் சாதனை மனிதர் எம்.ஜி.ஆர்!
அண்ணாவின் உழைப்பு, ஓர் இயக்கமாக திராவிடச் சிந்தனையை அவர் கட்டியமைத்தது, நிர்வாக ரீதியில் அமைத்திருந்த கட்சியின் அஸ்திவாரம், அவரைப்போன்றே திராவிடச் சிந்தனையில் ஊறிப் போராட்டக் களத்தில் முன்நின்ற பலமிக்க அவரது தம்பிகள் இவற்றில் எந்த ஒன்றையும் வெற்றிகரமாகப் பெற்றிராத எம்.ஜி.ஆர் என்ற மருதுார் கோபாலமேனோன் ராமச்சந்திரன் அண்ணா பெற்ற வெற்றியை அடைந்தது எப்படி...3 வரிகளில் உள்ளது இதன் ரகசியம்...மக்களைச் சந்தி, மக்களோடு இரு, மக்கள் பிரச்னையை பேசு என அண்ணா சொன்ன மந்திரம்தான் அது...... நன்றி...
தமிழர் உணர்வும் தமிழ்மொழிப்பற்றும் ஊறிய ஒரு மாநிலத்தில் ஒரு நடிகர் அதுவும் இந்த மாநிலத்தைச் சாராதவர் என அறியப்பட்ட ஒரு வெற்றிகரமாக 11 ஆண்டுகள் இந்த மாநிலத்தை ஆண்டு சென்றிருக்கிறார் என்பது ஆய்வுக்குரிய விஷயம். இந்த வித்தையை அவர் வென்றெடுக்க காரணமானவை மேற்சொன்ன 3 வரிகள்தான். கொள்கை ரீதியாக மற்ற கட்சிகள் மக்களின் பிரச்னைகளைப் பேசியபோது எம்.ஜி.ஆர், அவர்களின் அடிப்படை பிரச்னைகளையும் நடைமுறை சிக்கல்களையும் பேசினார். திராவிட உணர்வையே திரும்பத் திரும்ப அவரது பங்காளியான திமுக மக்கள் முன் வைத்து அவர்களின் உணர்ச்சியை உசுப்பியபோது வெயிலில் நடக்காதீர்கள் என செருப்பை தந்து அதைத் தணியவைத்தார். ஒரு பக்கம் திராவிடத்தைப் பேசிக்கொண்டே இன்னொரு பக்கம் அந்த கொள்கையையே அடமானம் வைத்துவிட்டு மலையாளி என எம்.ஜி.ஆரை திமுக வன்மத்தை வெளிப்படுத்தியபோது சத்துணவு அந்த விமர்சனத்தில் சத்தில்லாமல் செய்தது. ஒரு பெரும் சித்தாந்தங்களுக்கு மத்தியில் தனி மனிதராக எம்.ஜி.ஆர் இப்படித்தான் வென்றார். ..... Thanks...
http://i65.tinypic.com/335874g.jpg
பாட்டைக் கோட்டை ஆக்கினார் எம்.ஜி.ஆர்., கோட்டையிலிருந்து தன் பாட்டை ஒலிக்கச் செய்தார்!
படப்பெயரிலிலிருந்து தொடங்கி ஒவ்வொரு திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தன்னை வெளிப்படுத்தியவர் எம்.ஜி.ஆர்.
தாய்தான் தன்னுடைய தெய்வம் என்று காட்ட ‘தாய் சொல்லைத் தட்டாதே’ என்றார். ‘தாய்க்குப் பின் தாரம்’ என்றார். ‘தாயின் மடியில்’, ‘தெய்வத்தாய்’, ‘குடியிருந்த கோயில்’ என்றார்.
தான் பாமர மக்களின் நண்பன் என்று தலைப்பிலேயே வெளிப்படுத்த ஆரம்பித்துவிடுவார். ‘படகோட்டி’, ‘தொழிலாளி’, ‘விவசாயி’, ‘ரிக்ஷாக்காரன்’, ‘மாட்டுக்கார வேலன்’, ‘மீனவ நண்பன்’ என்று பாமரனைத் தன் பக்கம் கொண்டு வந்தார்.
‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘எங்கள் தங்கம்’ என்றும் ஆனார். தன்னுடைய அரசியல் தலைவரான அண்ணாவினுடனான தனது தொடர்பைக் காட்ட, அவருடைய நூல்களான ‘பணத்தோட்டம்’, ‘சந்திரோதயம்’ முதலியவற்றைத் தன் படத்தலைப்புகள் ஆக்கினார்.
தன்னுடைய பலம் புரியாமல் எதிர்த்தவர்களை முறியடிக்கும் காலம் வந்த போது, அண்ணா தன்னை அன்புடன் அழைத்த ‘இதயக்கனி’ என்பதையும் தலைப்பில் இட்டார். தன்னை இளிச்சவாயன் என்று நினைத்து ஒடுக்க நினைத்தவர்களுக்கு சமிக்ஞை கொடுக்கும் வகையில், ‘நாளை நமதே’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ போன்ற டைட்டில்களை வரிசைப்படுத்தினார்.
தலைப்பில் மட்டும் வசியம் காட்டி, படத்தில் கோட்டை விட்டால், தலைப்பால் எந்த நன்மையும் வராது. தலைப்பை மட்டும் வைத்துக்கொண்டு புடவையை நழுவவிட்ட கதையாகிவிடும்! தாயை எம்.ஜி.ஆர்., டைட்டிலில் மட்டும் வைக்கவில்லை, தன் நெஞ்சினில் வைத்திருப்பதாகப் படத்திற்குப் படம் காட்டினார். தன் குவிந்த கைகளின் வணக்கத்தில் காட்டினார். தான் சாமானியனின் நண்பன் என்ற கருத்தை தன் படக்கதை ஒவ்வொன்றிலும் வைத்தார். படங்கள் உன்னதமானவையாக அமைந்தனவோ இல்லையோ, ரசிகர்களிடம் எம்.ஜி.ஆரின் நம்பகத்தன்மை அதிகரித்தது.
நடிகர்களுக்கு சங்கம் தேவை என்று நடிகர் சங்க தலைவராக ஐம்பதுகளின் இரண்டாம் பாதியில் அவர் இருந்தது சிலருக்குத் தெரியும். ஆனால், நடிகர்களின் கருத்து வெளியுலகத்திற்குத் தெரியவேண்டும் என்று ‘நடிகன் குரல்’ என்ற சஞ்சிகையைத் தொடங்கி அதன் பதிப்பாசிரியராகவும் இருந்தது அவ்வளவு தெரிந்த விஷயம் அல்ல. முழு நேர அரசியலுக்கு வரும் முன்பே இதுபோன்ற பொது விஷயங்களில் ஈடுபட்டார். கருத்துக்களை செய்திகளாக மக்களுக்குத் தெரியப்படுத்துவதில் நாட்டம் இருந்தது.
தான் தயாரித்து, இயக்கி, இரண்டு வேடங்களில் நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தை, வெறும் ராஜா ராணிக் கதையாக எடுக்காமல், ஆட்சி, அதிகாரம், மக்கள் நலம் என்று பல கருத்துக்களைப் புகுத்தியதில் எம்.ஜி.ஆரின் அரசியல் பார்வை தெரிந்தது. அது நிஜவாழ்க்கையிலும் பிரதிபலிப்பதுபோல் நடந்துகொண்டார்.
இத்தனை செய்தவர் திரைப்பாடலை விட்டுவைப்பாரா? நாடகங்களில் பாடல்களை ‘ஒன்ஸ்மோர்’ கேட்டு, நாடகக்கதை எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, பாடலை ரசிக்கவேண்டும் என்றளவுக்கு தமிழ் மக்களுக்கு இருந்த பாட்டு ரசனையை நேரடியாகப் பார்த்தவர் ஆயிற்றே!
எம்.ஜி.ஆர்., நாயகனாக நடித்த முதல் படமான 'ராஜகுமாரி'யில் எம்.எம்.மாரியப்பா அவருக்குப் பின்னணிப்பாடல் பாடினார். படம் வெற்றி பெற்றதால், அடுத்ததாக ‘மருதநாட்டு இளவரசி’யிலும் அவர்தான் பாடவேண்டும் என்று எம்.ஜி.ஆர்., எழுதிய கடிதத்தை நாம் கண்டதுண்டு.
அதன் பிறகு, 'மலைக்கள்ள'னில் டி.எம்.சவுந்திரராஜன் பாடிய ‘எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் தந்த தெம்பு அதிகம். எம்.ஜி.ஆர்., தி.மு.க.வில் சேர்ந்த ஆரம்ப காலம் அது. காங்கிரஸ் ஆட்சிக்கு நாடெங்கும் ஆதரவு இருந்தாலும், தமிழ்நாட்டில் தி.மு.கவிற்கான ஆதரவு பெருகத் தொடங்கியிருந்தது. சுதந்திரம் வந்ததும் நாட்டில் பாலும் தேனும் பெருகும் என்ற அடிப்படையில்லாத எதிர்பார்ப்பு பொய்த்திருந்தது. தட்டுப்பாடுகள் நிலவிய காலம். ஆகவே, காங்கிரஸ் ஆட்சியை ஏமாற்று ஆட்சி, மக்களை ஏய்க்கும் ஆட்சி என்று உரக்க ஒலித்த, ‘எத்தனைக் காலம்தான்’ நல்ல வரவேற்பைப் பெற்றுகொண்டிருந்தது. தி.மு.கழக மேடைப் பிரசாரகர்களின் ‘கனல் தெறிக்கும்’ வசன கண்டனங்களைப்போல் இல்லாமல், 'எத்தனைக் காலம்' பாடலில், சாடல் மட்டும் இல்லை, ஒரு நல்ல வருங்காலத்திற்கான கற்பனையும் இருந்தது!
தேசிய போராட்டத்தின் போது, வெள்ளையனை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளுடன் தேச நிர்மாணத்திற்கான செயல்பாடுகளும் இருந்தன. ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்த எம்.ஜி.ஆர்., அதையெல்லாம் அறிந்தவர்தான். அதுமட்டும் இல்லாமல், ‘எத்தனைக்காலம்தான் ஏமாற்றுவார்’ பல்லவியை எழுதிய பின்பு பாடலாசிரியர் ராமையாதாஸ் கோபத்தில் சென்றுவிட்டதாகவும், பழுத்த காந்தியவாதியான கோவை அய்யாமுத்து அதை முடித்ததாகவும் சொல்வார்கள். ‘ஆளுக்கொரு வீடு கட்டுவோம், கல்வி இல்லாத பேர்களே இல்லாமல் செய்வோம்’ முதலிய சரண வரிகளில் புனர்நிர்மாணத்தின் சாயல் நன்றாகவே ஒலிக்கின்றது. எம்.ஜி.ஆரின் முதல் வெற்றிகரமான கொள்கைப் பாடலிலேயே ஒரு ‘பாசிடிவ்’ தொனி ஒலிக்கத்தொடங்கி விட்டது!
ஐம்பதுகளில், தான் சார்ந்த கட்சியின் முதல் பத்தாண்டுகளில் எம்.ஜி.ஆரும் புராண மறுப்பு, இந்துமத எதிர்ப்பு போன்ற கொள்கைகளைக் கருத்துடன் கடைப்பிடிப்பவ ராகத்தான் இருந்தார். ‘ராணி லலிதாங்கி’ என்ற படத்தில் நடிக்க ஏற்று கொண்ட பின், கதையில் அவர் அதிக மாறுதல்கள் செய்யவிரும்பியதால், கடைசியில் சிவாஜி நடித்தார்! அதற்கு முன், எம்.ஜி.ஆர்., நடிக்கிறார் என்று அறிவிக்கும் ‘ராணி லலிதாங்கி’யின் விளம்பரம் கூட வந்தது. படத்தில், ‘ஆண்டவனே இல்லையே’ என்று சவுந்திரராஜன் பாடும் ஒரு பாடல் கூட உண்டு. முதல் வரியைக் கேட்டதும் எம்.ஜி.ஆர்., ஆகா என்று ஆமோதித்தபின், ‘தில்லைத் தாண்டவனே உனையல்லால், ஆண்டவனே இல்லையே’ என்று பாடல் தொடரும் போது அவருடைய முகம் சுருங்கியதாகக் கூறப்படுவதுண்டு. அது சாத்தியமான ஒரு கதையாகக்கூட இருக்கலாம். ஆனால் எம்.ஜி.ஆர்., கடவுள் எதிர்ப்பாளர் அல்ல. தி.மு.க.வின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கை, திருமூலரிடமிருந்த எடுக்கப்பட்ட கருத்தாக இருந்தாலும், குறிப்பாக இந்து மதக்கடவுளருக்கு எதிர்ப்பான கொள்கையாகத்தான் அது கொள்ளப்பட்டது. பிள்ளையார் சிலைகளை ஈ.வே.ரா. உடைத்தபோது, ‘நான் சிலைகளை உடைக்க மாட்டேன், பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டேன்’ என்று அண்ணாதுரை கூறினாராம். ஆகவே ‘ஒருவனே தேவன்’ என்பதில் பிள்ளையார் அடக்கமில்லை! இதுபோன்ற ஒரு நிலையில், காங்கிரஸிலிருந்தபோது நண்பர்களைக்கூட ‘ஆண்டவனே’ என்று அழைத்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., தன்னுடைய திரைப்பாடல்களில் தெய்வத்தைப் பலவிதமாக அழைத்துக் கொண்டிருந்தார்!
கடவுள்தான் இந்த உலகத்தையும் மனிதர்களையும் படைத்திருக்கிறான் என்ற எண்ணம் அவருடைய பாடல்களில் விரவிக்கிடந்தது. கடவுள்தான் மனிதனுக்குப் புத்தியைக் கொடுத்தாராம். ஏன்தான் கொடுத்தாரோ என்று வருத்தப்படுகிறார் ('போயும் போயும் மனிதனுக்கு இந்தப் புத்தியைக் கொடுத்தானே'). இயற்கையின் வளங்களைக் கடவுள்தான் கொடுத்தாராம். ஆனால் அவர் ஒருத்தனுக்காகவோ ஒரு சிலருக்காகவோ கொடுக்கவில்லையாம்.
எல்லாருக்கும் கொடுத்தாராம் ('கொடுத்ததெல்லாம் கொடுத்தான்'). கடவுள் கண்ணுக்குத் தெரியவில்லை என்பதால் அவர் இல்லை என்று கூறிவிடமுடியாது என்பதற்கு ஒரு பாடலில் பல விளக்கங்கள் அளிக்கிறார் எம்.ஜி.ஆர்., (கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?). ‘முன்னாலே இருப்பது அவன் வீடு’ என்று முன் குறிப்பிட்ட பிள்ளையார் முதற்கொண்டு பல தெய்வங்கள் இருக்கக்கூடிய கோயிலைக் காட்டுகிறார் ('என்னதான் நடக்கும் நடக்கட்டுமே')! ‘ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்’ என்று அடித்துக்கூறிவிட்டு, அவன் இருக்கும் இடங்களைக் குறித்து, அற்புதமான ஆன்மிக விளக்கத்தை அளிக்கிறார் ('வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய், விளக்கிடமுடியாத தத்துவப் பொருளாய், ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்'). சில ஆண்டுகளில், ஏற்கனவே குறிப்பிட்ட பிள்ளையாரின் அருமைத்தம்பியான முருகப்பெருமான் வடிவத்தில், வள்ளி– தெய்வானையுடன் தானே காட்சி தருகிறார்
எம்.ஜி.ஆர்.,! ('தனிப்பிறவி').
http://i68.tinypic.com/23tfvqp.jpg
கடவுளைக் குறிப்பிடும் போது, தலைவன் என்று குறிக்கும் வழக்கம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது ('ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே'). தலைவரான அண்ணாவும் ஏறக்குறைய ஒரு தெய்வத்தின் ஸ்தானத்தைத்தான் அவருடைய பாடல்களில் பெறுகிறார் (‘ஒன்றே குலமென்று பாடுவோம்’ பாடலில், ‘இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்’).
இப்படி எத்தனையோ பாடல்களிலும் நூற்றுக்கணக்கான காட்சிகளிலும் அண்ணாவின் மிக நெருக்கமான அன்புத்தம்பி எம்.ஜி.ஆர்., தான் என்று ஊர்ஜிதம் ஆனது (‘நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து’). ‘நாட்டைக்காக்கும் கை’ என்ற பாடல் காட்சியில்தான் ('இன்றுபோல் என்றும் வாழ்க'), அண்ணாவின் உருவம் பொறித்த தனது கட்சியின் கொடியை எம்.ஜி.ஆர்., முதலில் வெளிப்படுத்தினார்! பாடலின் வாயிலாகக் கொடி முதலில் காண்பிக்கப்படுகிறது என்றால் பாடலும் கொடிபோல் முக்கியத்துவம் உள்ளதுதான் என்று பொருள். பாட்டிலே சொன்னால், வேட்டுப் போட்டுச் சொல்வதற்கு ஒப்பாகும்!
'நாடோடி மன்னன்' திரைப்பாடலில்தான், ‘நானே போடப்போறேன் சட்டம், நன்மை விளைந்திடும் திட்டம்’ ('சும்மா கிடந்த நிலத்தை கொத்தி') என்று தெரிவித்து, பின்னாளில் எம்.ஜி.ஆர்., ஆட்சிக்கு வரக்கூடும் என்று எண்ணம், தெரிந்தோ தெரியாமலோ வெளிவந்தது. ‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்’ என்ற பல்லவி வந்தபோது, அந்த எண்ணம் புத்துயிர் பெற்றது!
எழுபதுகளில், கட்சித் தலைமைக்கு எதிராக ஊழல் குற்றம் சாட்டி கணக்குக் கேட்ட பின், கட்சியிலிருந்து எம்.ஜி.ஆர்., வெளியேற்றப்பட்டார். தனிக் காட்சி அமைத்து பின், எம்.ஜி.ஆரின் கொள்கைப்பாடல்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆட்சியாளர்களை எதிர்க்கும் முகமாகவே இருந்தன.
உங்கள் உயிருக்கே ஆபத்து வரலாம் என்று ஒரு காட்சியில் அவரிடம் சொல்லப்படும்போது, ‘நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று பாடலில் சவால் விடுகிறார் ('மீனவ நண்பன்'). மக்கள் ஆதரவு அலையைக் கண்கூடாக கண்டபின், ‘கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்’ என்று கம்பீரமாக வெளியிடும் தன்னம்பிக்கை வருகிறது ('மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'). ‘நானே போடப்போறேன் சட்டம்’ என்பதிலிருந்து, நான்தான் நாட்டின் முதல்வர் என்பது வரை, திரைப்பாடல்களில் வெளிவந்த சங்கதிகள் ஏராளம்.
உழைப்பாளர் ஒற்றுமை (‘ஒன்று எங்கள் ஜாதியே’, ‘நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே’, ‘உழைக்கும் கைகளே’..... இத்யாதி), ‘திராவிடப் பெருமை’ (‘அச்சம் என்பது மடமையடா’, ‘ஒன்றல்ல இரண்டல்ல தம்பி’), தாயின் உன்னதம் (‘தாயில்லாமல் நானில்லை’, ‘தாயின் மடியில் தலை வைத்திருந்தால்’), பெண்கள் நடந்துகொள்ள வேண்டிய முறை (‘இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளை’, ‘பாரப்பா பழநியப்பா’), பகுத்தறிவு பிரசாரம் (‘சின்னப்பயலே சின்னப்பயலே’, ‘அறிவுக்கு வேலை கொடு’, ‘கண்ணை நம்பாதே’, ‘ஏனென்ற கேள்வி’), அரசு திட்டங்களுக்கான பிரசாரம் (‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க’), குடிக்கு எதிரான பாடல்கள் (‘தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா’), பிள்ளைகளுக்கும் தம்பிகளுக்கும் நல்லுபதேசம் (‘திருடாதே, பாப்பா திருடாதே’, ‘தூங்காதே தம்பி, தூங்காதே’, ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’, ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி’), பொதுவான எழுச்சிப் பாடல்கள் (‘அதோ அந்தப் பறவை போல’, ‘எங்கே போய்விடும் காலம், ‘தாய்மேல் ஆணை தமிழ் மேல் ஆணை’, ‘உன்னை அறிந்தால்’) என்று வகைவகையான தலைப்புகளின் கீழ்
எம்.ஜி.ஆரின் வெற்றிப்பாடல் வரிசை அமைகிறது. பாடலின் தன்மை எப்படிப்பட்டதாக இருந்தாலும், எம்.ஜி.ஆர்.,தான் உதாரணப் புருஷர் என்ற அளவில், அவை யாவும் எம்.ஜி.ஆரின் ஆளுமையை பளிச்சென்று முன்வைப்பதாக இருக்கும். அதனால்தான் எம்.ஜி.ஆர்., பாடல்களின் வெற்றி, அவருடைய வெற்றியாகவே மாறிவிட்டது.
எம்.ஜி.ஆரை நோக்கிப் பெண்கள் பாடுவதாக அமைந்த பாடல்கள் அவரை ஒரு காவிய நாயகராக, வெற்றி வேந்தராக முன்னிறுத்தின (‘வாங்கய்யா வாத்தியாரய்யா’, ‘காலத்தை வென்றவன் நீ’, ‘நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற’). பாடல்களின் வாயிலாக தன்னுடைய கருத்துக்களை விதைத்து மிகப்பெரிய வெற்றியை எம்.ஜி.ஆர்., அடைந்தார். தன்னுடைய திரை ஆளுமையையும், தன்னைப்பற்றிய பிம்பத்தையும் வெற்றிகரமாக நிறுவ, திரைப்பாடல்கள் அவருக்கு மிகவும் கைகொடுத்தன. அவற்றின் பாடகர்கள், கவிஞர்கள், இசையமைப்பாளர்கள் பலராக இருக்கலாம். எல்லோரையும் வைத்து தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்ட மதிநுட்பம் எம்.ஜி.ஆரிடம் இருந்தது. அவருடைய வெற்றியின் இன்னொரு அடித்தளம் அதுதான்.
COURTESY NET
இன்று முதல் (3/8/18) சென்னை சரவணாவில் புரட்சி தலைவர் .எம்.ஜி.ஆர். நடித்த
"தாய்க்கு தலை மகன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/vymcrm.jpg