எப்படி பார்த்தாலும் அழகுதான்யா...
http://i61.tinypic.com/8zpmqq.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
எப்படி பார்த்தாலும் அழகுதான்யா...
http://i61.tinypic.com/8zpmqq.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை....
http://i60.tinypic.com/v6smfb.jpg
http://i58.tinypic.com/npgobn.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
பரிதவிக்கும் ஏழைக்காக திட்டம் போடணும்...
http://i60.tinypic.com/ru42tf.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
தமிழக மக்களே! உங்கள் நலனுக்கே என் பேனா அசையும்...
http://i57.tinypic.com/2dc92ps.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
http://i58.tinypic.com/23m94dg.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நடந்தால் அதிரும் ராஜநடை
நாற்புறம் தொடரும் உனது படை....
http://i61.tinypic.com/176zyv.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
http://i57.tinypic.com/29eqdep.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
உங்கள் நலனே என் நலன்
http://i59.tinypic.com/10e0qvo.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/v6smfb.jpg
‘பாரதத்தின் ரத்தினம்’
டெல்லியில் மனிதர்கள் என்ற பெயரில் நடமாடிய விலங்குகளால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுள் ஒருவரான முகேஷ்சிங் அளித்த பேட்டி, அவரது செயலை விட அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘பலாத்காரத்துக்கு பெண்களே காரணம்’ என்று குற்றத்தை நியாயப்படுத்தியுள்ளார். பலாத்காரத்தின்போது நிர்பயா பேசாமல் இருந்திருந்தால் உயிருடன் விட்டிருப்பார்களாம். காதலனுடன் வந்தது தவறாம். இவரே மேல் என்று கூறும் அளவுக்கு அவரது வக்கீல், ‘என் பெண்ணோ , தங்கையோ திருமணத்துக்கு முன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருந்தால் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி இருப்பேன்’ என்று நம்மை அதிர வைத்துள்ளார்.
நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான கருத்துக்களை ஏற்க முடியாது. அதே நேரம் சமீபத்தில் வெளியான செய்தி இந்த அதிர்ச்சிக்கு சற்றும் குறைந்ததல்ல. பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக பி.இ. படிக்கும் மாணவி கைது செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம் .... ‘வசதியாக வாழ வேண்டும்’. வாழ்க்கை வசதியும் ஆடம்பரங்களும் மனிதர்களை என்ன பாடுபடுத்துகிறது? என்னவெல்லாம் செய்யத் தூண்டுகிறது? பெண்களை தெய்வமாக, தாயாக மதிக்கும் கலாசாரம் கொண்டது நமது நாடு. அதனால்தான், தெய்வமாக மதிக்கும் நாட்டையே தாய்நாடு என்கிறோம்.
இரண்டாம் உலகப் போரில் உலகையே நடுநடுங்க வைத்த ஹிட்லரும் தாய்ப்பாசத்துக்கு அடிமைதானே? முசோலினியின் மோசமான முடிவுக்குப் பிறகு தனக்கும் முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்த ஹிட்லர், தனது காதலி (இறப்பதற்கு முன் திருமணம் செய்து கொண்டார்) இவா பிரானுடன் தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட ஹிட்லர் மார்போடு ஒரு படத்தை அணைத்தபடி இறந்திருந்தார். அங்கே சென்றவர்கள் இதைக் கண்டு, ‘இவா பிரான் படமோ?’ என்று பார்த்தால் அது ஹிட்லரின் தாயாரின் படம். கல்லுக்குள்ளும் ஈரத்தை வைக்கும் சக்தி தாய்ப்பாசத்துக்கு உண்டு.
அந்த தாய் பாசத்துக்கும் பெண்மைக்கும் மதிப்புக் கொடுக்கச் சொல்லி தவறான வழியில் செல்லும் ஸ்ரீ பிரியாவை நவரத்தினம் படத்தில் தலைவர் திருத்துவார். படத்தில் என்னை மிகவும் கவர்ந்த காட்சி அது. நவரத்தினம் படம் இன்றோடு 38 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. படம் வந்தபோது பெரிய வெற்றி பெறாவிட்டாலும் அடுத்தடுத்த வெளியீடுகளில் இன்றும் விநியோகஸ்தர்களுக்கு அட்சய பாத்திரமாய் விளங்குகிறது. சமீபத்தில் கூட கோவையில் வெளியாகி ஒருவாரம் ஓடி நல்ல வசூல் பெற்றது. மெகா டி.வி., கலைஞர் டி.வி.யில் மாதம் ஒருமுறை திரையிடப்படுகிறது. வித்தியாசமான கதையமைப்பைக் கொண்ட சிறந்த பொழுதுபோக்கு படம்.
இனி காட்சிக்கு வருகிறேன்.
இந்தப் படம் வெளியானபோது தலைவருக்கு 60 வயது முடிந்து 61 நடந்து கொண்டிருந்தது. ஆனால், படத்தில் பார்த்தால் மிஞ்சி மிஞ்சி போனாலும் அதிகமாகவே கணக்கிட்டாலும் கூட 30 வயதுக்கு மேல் சொல்ல முடியாது. அவ்வளவு இளமையாக இருப்பார்.காட்சியை பார்த்தால் தெரியும். ஆஷ் மற்றும் பழுப்பு கலந்த வெளிர் நிறத்தில் கட்டம்போட்ட கோட்டும், கறுப்பு பேண்டும், கோட்டுக்கு எடுப்பான பழுப்பும் வெள்ளையும் கலந்த டையும், பிளாக் ஷூவும் என தலைவர் கண்ணிலேயே நிற்கிறார்.
சமுதாயக் கொடுமையால் மானத்தை விற்று தனது குழந்தையை காப்பாற்றும் பரிதாபத்துக்குரிய பெண்ணாக ஸ்ரீபிரியா. தலைவரை புரோக்கர் ஒருவர் (லூஸ் மோகன்) நிம்மதியை காட்டுகிறேன் என்று அங்கு கொண்டு வந்து விட்டு விடுவார். ‘புரியாததை புரிய வைக்கும் புது இடம்’ பாடல் முடிந்த பிறகு ஸ்ரீ பிரியாவின் நிலையை தலைவர் புரிந்து கொள்வார்.
தனக்கு பணம்தான் முக்கியம் என்று சொல்லும் ஸ்ரீ பிரியாவை பார்த்து தலைவர், ‘‘அப்போ தமிழ் மண்ணுக்கே உரிய தமிழ் பண்பு, தாய்மை, பெண்மை இதையெல்லாம் நீ மதிக்கத் தயாரா இல்லை, இல்லையா?’ என்று தலைவர் கேட்பார்.
‘இல்லை. எனக்குத் தேவை பணம்தான்’ என்று ஸ்ரீ பிரியா சொல்லும்போது, உள்ளே ஒரு அறையில் அவரது குழந்தை அழும். தலைவர், ஸ்ரீ பிரியாவை தடுத்து உனக்கு பணம்தானே பிரதானம்? குழந்தை அழுதா என்ன? செத்தா என்ன? என்று கேட்டதும், ‘நான் வாழ்வதே இந்தக் குழந்தைக்காகத்தான்’ என்று ஸ்ரீ பிரியா கதறுவார். அப்போது, அவரிடம் இப்படி (கொடுமைக்காரனாக) நடந்து கொள்ள வேண்டியிருக்கிறதே என்று தலைவர் முகத்தை திருப்பி சோகமாக வைத்துக் கொள்வார். பின்னர், உடனே சுதாரித்து ஸ்ரீ பிரியாவிடம் கடுமையை காட்டும் சட்டென மாறும் முகபாவம். தலைவரின் என்ன ஒரு அருமையான இயல்பான நடிப்பு.
ஸ்ரீபிரியா விடுவித்துக் கொண்டு ஓடி குழந்தையை கொஞ்சுவார். அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்காக, ஆப்பிளில் சொருகியிருக்கும் கத்தியை எடுத்துக் கொண்டு அந்த அறையின் வாயிலுக்கு வந்து இடது காலை முன் வைத்து வலது காலை லேசாக மடக்கி நிற்கும் தலைவரின் அந்த ஒரு விநாடி போஸ். விவரிக்க வார்த்தைகள் இல்லை.
அப்பன் பேர் தெரியாத இந்தக் குழந்தை வளர்ந்த பின் அவமானத்தால் சாவதை விட இப்போதே கொன்றுவிடுவதாக தலைவர் கத்தியை ஓங்கவும், தன்னைக் கொல்லுமாறு ஸ்ரீ பிரியா அழுவார். கத்தியை ஸ்டைலாக வீசியெறிந்து தலைவர் சொல்லும் வார்த்தைகள்... தாயை மதிக்கும் நமது கலாசாரத்துக்கும் பாரம்பரியத்துக்கும் பெருமை சேர்க்க கூடியது.
‘ஒரு குழந்தையை கொல்லும் அளவுக்கு கொடுமைக்காரனா என் தாய் என்ன வளர்க்கவே இல்லை’ (அப்போதும் நான் கொடுமைக்காரனல்ல, என்று தலைவர் கூறவில்லை. என் தாய் என்னை அப்படி வளர்க்கவில்லை என்று தாய்க்குலத்துக்கு பெருமை சேர்க்கிறார்) சும்மா நாடகம் ஆடினேன்.
பணம்தான் பிரதானம்னு சொன்ன, நீ பெத்த குழந்தைக்கு ஆபத்துன்னு தெரிஞ்சதும் உன்னை அறியாமயே உன் தாய்ப்பாசம் வெளியில வந்துருச்சு பார்த்தியா? அந்த தாய் பாசத்துக்கு மதிப்பு கொடு தாயேன்னுதான் நான் உன்னை கெஞ்சிக் கேட்டுக்கிறேன்’’..
என்று அந்த கொடுத்து சிவந்த கரம் கும்பிட்டுக் கேட்கும்போது, நம் கண்களில் நம்மை அறியாமல் அருவி பெருகும்.
பணத்துக்கு என்ன செய்வேன்? ’ என்று கேட்கும் ஸ்ரீ பிரியாவிடம் கணிசமான பணத்தை கொடுத்து விட்டு, ‘‘இத்தனை நாள் பணம் குடுத்தவங்க உன் உடம்பை விலை பேசினாங்க. நானும் பணம்தான் குடுக்கறேன். உன் அன்பைத்தான் விலை பேசறேன்.பண்போடு நடந்துக்கன்னு கேட்கிறேன். பெண்கள தெய்வமா மதிக்கிற நாடம்மா நம்ம நாடு. அதுக்கு பெருமை தேடிக்குடும்மா..’ என்று வேண்டிக் கொண்டு தலைவர் அங்கிருந்து கம்பீரமாக நடந்து செல்லும்போது...
தியேட்டரில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்கள் வகுப்பில் இருந்தும் பெண்கள் தங்கள் தலைக்குமேல் கைகளை உயர்த்தி ஆரவாரம் செய்த காட்சிகளை பார்த்தவன் நான்.
இப்படி கலை மூலம் நல்ல கருத்துக்களை, பண்பாட்டை, கலாசாரத்தை வலியுறுத்தி நடித்ததால்தான், நவரத்தினம் படத்தில் நடித்த தலைவர், கலைத்துறையிலும் பொதுச் சேவையிலும் தொண்டால் சிறந்து, இந்திய அளவில் எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமையாக பாரத ரத்னா விருது பெற்று பாரதத்தின் ரத்தினமாக உயர்ந்து நிற்கிறார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
kalaiventhan sir super posting about navarathinam movie that particular scene.
hats off sir