http://i1077.photobucket.com/albums/...pse1yaltaz.jpg
Printable View
மாலை மலர் -2/06/2017
http://i1077.photobucket.com/albums/...psz06ua5lb.jpg
வட சென்னை , தங்கசாலை மணிக்கூண்டு அருகில் வைக்கப்பட்டுள்ள பேனர்
http://i1077.photobucket.com/albums/...pscok3yt9s.jpg
இன்று (03/06/2017) இரவு 7 மணிக்கு சன்லைப் சானலில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "குடியிருந்த கோயில் " திரைப்படம்
ஒளிபரப்பாகிறது .
http://i1077.photobucket.com/albums/...pshbhxnwlj.jpg
http://i66.tinypic.com/21444l0.jpg
உலகம் சுற்றும் வாலிபன் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அப்போது ஒரு பேட்டியின்போது தலைவரின் படங்களுக்கு எதிராகவே விமர்சனம் எழுதும் ஒரு வாரப்பத்திரிகை நிருபர்: ஏன் சார்! உங்கள் படத்தில் விஞ்ஞானிகளுக்கு முருகன் என்றும் பைரவன் என்றும் பெயர் வைத்துள்ளீர்களே? அது சரியாகப்படவில்லையே! என்று கேட்டார்.
சற்றும் கோபமின்றி நம் தலைவர் கூறியதாவது: தம்பி! நம் தமிழ் நாட்டு விஞ்ஞானிகள்தான் வெளிநாடு சென்று கட*மையாற்றுவதாக படம் எடுத்துள்ளேன். ஏன்? முருகன், பைரவன் போன்ற பெயருள்ள*வர்கள் அறிஞராகமுடியாதா? தமிழ்க்கடவுள் முருகனின் எதிரி பைரவன்தானே! எனவேதான் கதாநாயகன் முருகனுக்கு வில்லனாக பைரவனை வைத்தேன்! என் படத்தை பார்க்கும் பெரும்பாலான சாமான்ய ரசிகர்களுக்கும் எளிதில் புரியும் என்றார். அதுசரி! பின்னாளில் சாதனை படைத்த மயில்சாமி அண்ணாதுரை, பொன்னுராஜ், சுந்தர்பிச்சை போன்றவர்கள் பெயரை வைத்தா சாதித்தார்கள்? உண்மையில் எம்ஜியார் ஒரு தீர்க்கதரிசி!
நன்றி முகநூல்
பின்னூட்டம்
Govindha Rajan ஆமாம் சார் நானும் படித்திருக்கிறேன். தலைவருக்கும் இயக்குநர் கே. சங்கருக்கும் மட்டும் தான் இந்த முருகன் என்ற பெயரில் அலாதி பிரியமாம் ப.நீலகண்டன், எம்.ஜி.ஆர் சக்ரபாணி எம்.எஸ்.வி கண்ணதாசன் வாலி எல்லோருமே சொன்னார்களாம் கதைப்படி நீங்கள் ஒரு விஞ்ஞானி நவநாகரிக இளைஞன் உலகம் முழுவதும் சுற்றி வரும் யுவன் ஆகையால் பெயரை மட்டும் மாற்றுமாரு வற்புறுத்தல் தொடர்ந்து கொண்டிருந்தது. மேலும் மஞ்சுளாக்கு விமலா என்ற பெயர் ஆதலால் நீங்கள் விஜய் என்று மாற்றி விடுங்கள், ராஜ் என்ற பெயர் தம்பிக்கு நல்லா இருக்கு எனவே முருகனை மாற்றி விடுங்கள் எனக் கூற தலைவர் சொன்னாராம் இந்த படம் செய்யவேண்டும் என்று முடிவு செய்தவுடனே பட டைட்டில் உ.சு.வா என்றதும் எனது கேரக்டர் பெயர் முருகன் தான் என முடிவு செய்து விட்டேன் புராணப்படி பழத்தின் காரணமாக உலகத்தை முதன் முதலில் சுற்றி வந்தது முருகன் தானே அதனால் எனது கேரக்டர் க்கு முருகன் என்ற பெயர் வைத்தேன் என்றாராம். சுற்றி இருந்தவர்கள் அனைவரும் கை தட்டி ஆராவாரம் செய்தனராம் அண்ணன் சக்ரபாணியும் டைரக்டர் நீலகண்டனும் ஒரு பெயர் சூட்டுவதில் கூட தலைவரின் அக்கறையை கண்டு வியந்து போனார்களாம்.
· Reply ·
2
· 23 hrs
http://i68.tinypic.com/2nw0rqb.jpg
நள்ளிரவில்??
------------------------
அது1979!!
எம்,ஜி,ஆரின் இரட்டை இலை சூரியனின் உஷ்ணத்தால் புண்ணான மக்களின் உடலை வருடிக்கொடுத்தகாலம்!!
அ.தி.மு.க.வின் மேடைப் பேச்சாளர் தமிழ் செல்வன்!1
அன்றைய மேடைகளில் தன் சூடான சொற்பொழிவால் பட்டையைக் கிளப்புவார்! எதிர்க் கட்சிகளின் சட்டையை நனைப்பார்!!----இவரது இலக்கிய உரை என்றாலே எதிர்க் கட்சியினர் வயிற்றை கலக்கிய வண்ணம் இருக்கும்!!
ஒரு நாள் இரவு!!
பொன் மனத்தாரின் பூங்குணங்களை பொழிகிறார்!!
கேட்பவர் விழி அதனில் நீர் வழியும் வண்ணம் தன் மொழி அதனில் !!---அப்போது அவர் மனைவிக்கு மகப்பேறு காரணமாக உடனடியாக மருத்துவ மனையில் சேர்க்க வேண்டி--சேதிவருகிறது!!
தன் உரையை குறையில் [பாதியில் ] நிறுத்த மனம் இல்லாமல் அதே சமயம் அந்த சமயத்தில் மனைவியின் அருகில் தான் இல்லையே என்ற குறை கொண்டும்?? --தன் உறவினர் மூலம் மருத்துவ மனையில் மனையாளை சேர்க்க ஆவன செய்கிறார்!!
கூட்டம் முடித்து ஓட்டம் எடுக்கிறார் மருத்துவமனைக்கு!!
கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மருத்துவமனை!!
தன் நல்லுறவாம் மனைவியைக் காண இவர் அங்கே செல்லும்போது நேரம் நள்ளிரவு!!
பெண்கள் மகப்பேறு மருத்துவ மனை ஆதலால் காவலாளி உள்ளே விட மறுக்கிறார்!! இவரும் எவ்வளவோ தன் நிலையை விளக்கியும் உள்ளே அனுமதிக்காத காரணத்தால் உள்ளம்வெறுக்கிறார்!!
நள்ளிரவு ஒரு மணி!!!
வாட்டத்துடன் தொடர்பு கொள்கிறார் தோட்டத்துக்கும் தன் மன நாட்டத்துக்கும் நாயகராம் முதல்வர் எம்,ஜி,ஆரை!!!
முதல் இரண்டு முயற்சிகள் தோற்ற நிலையில் மூன்றாம் முறை முயலும்போது இணைப்பில் வருவருகிறார் முதல்வர் எம்.ஜி.ஆர்!!
விபரம் கேட்ட வேந்தர் உடனேயே அந்த நடு நிசி வேளையிலும் தன் தி,நகர் அலுவலகத்தில் இருக்கும் முத்துவை அனுப்புகிறார் உதவிக்கு!!
முத்து வந்து நிலையை விளக்கியும் காவலாளி உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்!!
முத்துவும் அப்போது இரவுப் பணியில் இருக்கும் நர்ஸைத் தொடர்பு கொள்ள முயல--அந்த நர்ஸோ தொலைபேசியின் இணைப்பை எடுத்து வைத்து விட்டு நித்திரையின் ஆனந்த அணைப்பில்???
ஆத்திரம் கொண்ட முத்து மருத்துவமனையின் உதவி பொறுப்பாளரை தொடர்பு கொள்ள--அத்தனை விபரங்களையும் கேட்ட அந்தப் பெண் அதிகாரி உடனே குறிப்பிட்ட அந்த நர்ஸுடன் வருகிறார். தமிழ் செல்வனின் மனைவியின் உடல் நலம் பற்றிய விபரங்கள் தருகிறார். முதலமைச்சர் வரை விஷயம் போய் விட்டதே என்ற அதிர்ச்சியை உள்ளத்தில் பெறுகிறார்!!!
மறு நாள்!!!
அந்த நர்ஸ் வேலை நீக்கம் செய்யப்படுகிறார்??--கடமையை ஒழுங்காக செய்யாத காரணத்தால்!!!
மாதங்கள் சில மாயமாய் கரைகிறது!!
அந்த நர்ஸ் பரிதவிப்போடு முதல்வரை சந்திக்க செல்கிறார்.அங்கே முத்துவும் இருக்கிறார்!!
கனம் கொண்ட மனதுடன் நிற்கும் நர்ஸை இனம் கண்டு கொண்டவர் அருகில் வந்து காரணம் கேட்க --மனம் திறந்து தன் குடும்பச் சூழலைக் கொட்டித் தீர்க்கிறார் அந்த நர்ஸ்!!
விபரங்களை வினயத்துடன் முத்து விளக்க---
நர்ஸை அழைத்த எம்,ஜி,ஆர் நல்ல முறையில் கண்டிக்கிறார்.
உயிர் காக்கும் பதவியில் இருப்பவர்கள் இப்படித்தான் பொறுப்பில்லாமல் இருப்பதா என்று உறுமியவர் அடுத்துக் கேட்கிறார்!
எத்தனை மாதமாயிற்று வேலை போய்?/
இரண்டு மாதங்கள் என்ற பதிலைத் தொடர்ந்து குறிப்பிட்ட தொகையை வழங்கி அவரை வழி அனுப்புகிறார்!!
ஒரு வாரம் கழிந்து---
கோஷா என்று அழைக்கப்படும் அதே மருத்துவ மனையிலேயே அவருக்கு மீண்டும் பணிநியமன உத்தரவு வருகிறது??
தன் கட்சிக்காரர் ஒருவருக்காக நள்ளிரவு ஒரு மணிக்கு உதவிய உயரிய மனித நேயத்தை பாராட்டுவதா??
அந்த நர்ஸுக்கு வேலையில்லாத அந்த இரண்டு மாதங்களுக்கும் கேஷாகப் பண உதவி செய்தும் கோஷா மருத்துவ மனையிலேயே மீண்டும் பணி உதவி செய்தும் தன் பரந்த இதயத்தைக் காட்டிய பாங்கினை சீராட்டுவதா???
இமயம் தொட்டவரின் அகம் பற்றி சொல்லப் போதுமா ஒரு யுகம்???
நன்றி வைத்திநாதன் கிருஸ்ணமூர்த்தி முகநூல்
தற்போது சன்லைப் சானலில் ஏழை பங்காளன் எம்.ஜி.ஆரின் "ரிக்ஷாக்காரன் " திரைப்படம் காலை 11 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i1077.photobucket.com/albums/...ps6h8wwev8.jpg