-
அன்பு முரளி சார்,
'சிவந்த மண்' நினைவலைகள் பிரமாதம். என்னைப் போன்ற மதுரை அதிகம் தெரியாத நபர்களுக்கு தாங்கள் மேலமாசி வீதியில் இருந்து சென்ட்ரல் சினிமா வரை அழகாக விளக்கி விட்டீர்கள். அதுவும் 'சிவந்த மண்' முதல் நாள் நினைவலைகள் சூப்பர். கியூ என்றால் சிவந்த மண். சிவந்த மண் என்றால் கியூ. நீங்கள் மதுரையில் கண்டதை நான் கடலூரில் கண்டேன். நடிப்பிலும் வசூலிலும் பிரளயம் செய்த காவியம். இப்போது நீங்கள் கூறியபடி புதுப்பிக்கப்பட்டால் நிச்சயம் வெற்றிதான். நன்றி சார்.
-
சித்தூர் வாசுதேவன் சார், பார்த்தசாரதி சார், சசிதரன் சார்
'அண்ணன் ஒரு கோவில்' பதிவுக்கான பாராட்டிற்கு தங்கள் மூவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.
-
டியர் செல்வா சார் ,
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.
-
மக்கள் திலகம் திரியில் பாராட்டளித்த வினோத் சாருக்கு மனமார்ந்த நன்றி.
-
http://newindianexpress.com/incoming...athi+-+EPS.JPG
பழம் பெரும் நடிகையும் பண்டரி பாய் அவர்களின் சகோதரியுமான மைனாவதி அவர்கள் தமது 78வது வயதில் மாரைடப்பால் நேற்று காலமான செய்தி அதிர்ச்சியூட்டக் கூடியதாய் உள்ளது. மரணம் இயற்கை என்றாலும், அவர் இறக்கும் போது தான் அவர் இருந்த செய்தியே நமக்குத் தெரிய வருகிறது என்பது பரிதாபத்திற்குரிய நிகழ்வாகும். தாய் மொழி கன்னடம் என்றாலும் கலைஞர் வசனத்தை மிக அருமையாக குறவஞ்சி படத்தில் அவர் பேசி நடித்தது பிரமிப்பூட்டத் தக்கது. நடிகர் திலகத்தின் காதலியாக மிகவும் உயிரூட்டக் கூடிய பாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர். அவருடைய தமிழ்ப் பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கலாம் என்பது ஒரு நெருடலான ஏக்கம். இனியாவது தமிழ்த் திரையுலகினர் குறிப்பாக தொலைக் காட்சியினர் இவரைப் போன்ற பழங்கலைஞர்களைத் தேடிப் பிடித்து கௌரவப் படுத்தி அவர்களுடைய அனுபவங்களையும் ஆலோசனைகளையும் பதிவு செய்தல் எதிர்காலத் தலைமுறையினருக்கு மிகுந்த பலனளிக்கும்.
மைனாவதி அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குறவஞ்சி பாடத்தில் நடிகர் திலகத்துடன் அவர் நடித்த பாடல் காட்சியைக் காண்போம்.
http://youtu.be/vDdQaPzAHXI
-
-
-
-
-
வாசு சார்,
மைனாவதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குறவஞ்சி நிழற்படங்கள் அமைந்துள்ளன.