இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லையென்பார்.இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லையென்பார்.மடி நிறைய பொருளிருக்கும் மனம் நிறைய இருளிருக்கும்.எது வந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்
Printable View
இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லையென்பார்.இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லையென்பார்.மடி நிறைய பொருளிருக்கும் மனம் நிறைய இருளிருக்கும்.எது வந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்
இந்த வார நக்கீரன் இதழில் வெளியான செய்தி.
http://i57.tinypic.com/dgmnwy.jpg
கடந்த வெள்ளியன்று (சுதந்திர தினம் ) சென்னை அருகில் உள்ள திருநின்றவூர் அடுத்த நத்தமேடு பகுதியில் அமைந்திருக்கும் நமது இதய தெய்வம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருக்கோயில் 4-ஆம் ஆண்டு விழா விமரிசையாக
கொண்டாடப்பட்டது.
விழாவை பற்றிய வரவேற்பு பேனர்கள் நமது நண்பர்களின்
பார்வைக்கு.
http://i59.tinypic.com/milabc.jpg
எம்.ஜி.ஆர். நடித்த "ரகசிய போலீஸ் 115'' என்ற படத்தில், எம்.ஜி.ஆரைக் காதலிக்கும் இளம் பெண்ணாக நிர்மலா நடித்தார். எம்.ஜி.ஆருடன் சேர்ந்து "கண்ணில் தெரிகின்ற வானம், கையில் வராதோ'' என்று டூயட் பாடும் காட்சி சிறப்பாக அமைந்தது.
தொடர்ந்து, "பூவா தலையா'', "மன்னிப்பு'', "வைராக்கியம்'', "வீட்டுக்கு வீடு'', "அன்புக்கு ஒரு அண்ணன்'', "சுடரும் சூறாவளியும்'', "நீதிதேவன்'', "தங்கச்சுரங்கம்'', "எங்கமாமா'', "தங்கைக்காக'', "அன்பு சகோதரர்கள்'', "வெகுளிப்பெண்'', "இன்றுபோல் என்றும் வாழ்க'', "இதயக்கனி'' உள்பட பல படங்களில் நடித்தார்.
1972-ல் இந்தியில் "தோரகா'' என்ற படம் வெளிவந்தது. துணிச்சலான கதை அமைப்பைக் கொண்ட "புதிய அலை'' படம்.
இந்தியா முழுவதும் பெரும் வெற்றி பெற்ற இந்தப்படத்தை, "அவள்'' என்ற பெயரில் தமிழில் தயாரித்தனர். கதாநாயகியாக நிர்மலாவும், கதாநாயகனாக சசிகுமாரும், வில்லனாக ஸ்ரீகாந்த்தும் நடித்தனர்.
இந்தப் படத்தில் நிர்மலா பணக்கார வீட்டுப்பெண். அவரை சசிகுமார் காதலித்து மணப்பார். சசிகுமாரின் நண்பரான ஸ்ரீகாந்த், நிர்மலா மீது மோகம் கொள்வார்.
ஒரு விருந்தில், எல்லோரும் குடித்து விட்டு மயங்கிக் கிடப்பார்கள். அந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, நிர்மலாவை ஸ்ரீகாந்த் கெடுத்துவிடுவார். விடிந்த பிறகுதான் நிர்மலாவுக்கு உண்மை தெரியும்.
இந்த படம் பரபரப்பாக ஓடியது. எனினும் இத்தகைய கதையை படமாக்கலாமா என்று பட்டிமன்றமே நடந்தது. "படம் ஆபாசம்'' என்று சிலர் கூறினார்கள். "குடிப்பழக்கத்தின் தீமையை, இப்படம் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது'' என்று வேறு சிலர் வாதம் செய்தனர்.
1974-ம் ஆண்டு "அவளுக்கு நிகர் அவளே'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார், நிர்மலா. இதில் மூன்று வேடங்களில் நடித்தார்.
இப்படத்தின் கதாநாயகன் ரவிச்சந்திரன். வசனம் எழுதி, டைரக்ட் செய்தவர் மதுரை திருமாறன்.
200-க்கு மேற்பட்ட படங்களில் நடித்த நிர்மலா, ஏராளமான நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
தமிழக அரசின் "கலைமாமணி'' விருதும், "நாட்டிய திலகம்'' என்ற பட்டமும் பெற்றவர்.
"ஆடிவரும் தேனே'', "கற்பகம்'', "கல்கி'' ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நிர்மலா நடித்துள்ளார்.
தன்னுடைய கலை உலக அனுபவங்கள் பற்றி நிர்மலா கூறியதாவது:-
"எப்படி நடிக்க வேண்டும் என்பதை சிவாஜி சாரிடம் கற்றுக்கொண்டேன்.
பிறருக்கு உதவ வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் குணம், என்னை வெகுவாகக் கவர்ந்தது. முடிந்தவரை உதவவேண்டும் என்ற எண்ணத்தை என்னிடம் உருவாக்கியது.
சினிமாவில் நடிப்பதை விட தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது. எனவே, தொலைக்காட்சி தொடர்கள் எனக்கு ஒத்து வரவில்லை. தொடர்ந்து சீரியல்களில் நடிக்க நான் ஆர்வம் காட்டவில்லை.''
இவ்வாறு நிர்மலா கூறினார்.