http://i160.photobucket.com/albums/t...psbi0rveyp.jpg
http://dinaethal.epapr.in/565753/Din...2015#page/14/1
Printable View
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...!
இதுபோல ஒரு சம்பவம் எந்த கட்சியின் தலைவருக்கும் இருந்ததாக சரித்திரம், வரலாறு இந்த பூகோளத்தில் இல்லை.
இந்த அன்புகளை எல்லாம் ஒன்று திரட்டி, மக்கள் திலகம் அவர்களுக்கு ஆளுங்கட்சி போஸ்டராக இருந்தாலும் சரி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி...முக்கால் வாசி முக்கியத்துவமாவது கொடுத்து, உரிய மரியாதை கொடுத்தால் தான் இனி அதிமுக ஆட்சி கட்டிலில் அமரமுடியும் !
காரணம் அவரால் தானம் கொடுக்கப்பட்ட பதவி, கட்சி இரண்டையும் உண்மையான முறையில் அவர் இல்லாத சமயத்தில், மதித்திருந்தால், மரியாதை செலுத்தி இருந்தால், ஆட்சியினை அவர் வழியில் நடத்தி இருந்தால், சில முறை அதிமுக தேர்தல் தோல்வியை தழுவி இருக்காது.
அந்த மரியாதை கொடுக்கபடாததால்தான் தோல்வி வந்தது என்பது எனது கருத்து...!
அது சரியான கருத்தா தவறான கருத்தா என்று தெரியாது...எனது கருத்து அவ்வளவே..!
Rks
கலங்கரை விளக்கம் (1965) வெளியீட்டுப் பொன்விழா வாழ்த்துக்கள்!
மக்கள் திலகம் அபிநய சரசுவதி இணைவில் இனிய இசை பாடல்களுடன் நல்லதொரு பொழுது போக்குத் திரைப்படமாக 1965ல் வெளிவந்து நாளை வெளியீட்டுப் பொன்விழா காணும் கலங்கரை விளக்கம் ரசிக நெஞ்சங்களை மகிழ்வித்து மலரும் நினைவுகளை முகிழ்வித்து சந்தோஷ சூழலை உருவாக்கி வெற்றியடைந்திட நடிகர்திலகம் / காதல் மன்னர் / மதுரகானம் திரிகள் சார்ந்த நல்வாழ்த்துக்கள் !
செந்தில்
(காற்று வாங்கப் போனேன் / பாட்டுப்பாடவா / பசுமை நிறைந்த நினைவுகளே / மயக்கமா கலக்கமா பாடல்கள் எனது கல்லூரி நாட்களில் இசைக்குழுவில் நான் மிகவும் விரும்பிப் பாடி எனக்கும் கரவொலிகளை வாங்கிக் கொடுத்த மதுர கானங்கள்! எனது பெருமையான மலரும் நினைவுகள் தூண்டப்பட்டமைக்கு நன்றிகள்!)
கைகளை ஊன்றி டக்கென்று கால்களை மாற்றி மடக்கி கம்பிகளின் மேல் வெகு இலகுவாக மக்கள் திலகம் தொங்கலாக அமரும் அக்ரோபேடிக்ஸ் ஸ்டண்ட் திறமை எனக்கு மிகவும் பிடித்த காட்சி .....
என் உள்ளமென்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை ....
https://www.youtube.com/watch?v=yfHbOXpk-GQ
" பலமில்லாத மாடு , உழ முடியாத கலப்பை , அதிகாரமில்லாத பதவி ,இவைகளை நான் என்றைக்குமே விரும்பியதில்லை ! "
- நாடோடி மன்னன்
[QUOTE=sivajisenthil;1244078]
தமிழ்த்திரைப் பாடல்களில் இந்திப் படப் பாடல்கள் இசையின் தாக்கம் மிகுந்திருந்த காலகட்டம்! 1950 1960 வரை!!
இசைத்தழுவல் இருப்பினும் கருத்து மிகுந்த கானங்களில் பின்புலமாகக் கோர்க்கப் படும்போது மனம் ஈர்க்கப் படுவது இயற்கையே !
இந்தி(ய)த் திரையுலகின் Showman on the earth என்று போற்றப்பட்ட ராஜ்கபூரின் ஸ்ரீ420 படத்தின் இசைக்கருவைக் கோர்த்து பணம் படைத்தவன் திரைப்படத்தில் புகழ் பெற்ற கருத்துத் தெளிப்புகள் நிறைந்த பாடலான கண் போன போக்கிலே பாடல் சௌகாரைப் பார்த்து மக்கள்திலகம் சற்று மனத்தாங்கலுடன் பாடுவதாக அமைக்கப் பட்டிருக்கும் !
----------------
தங்களின் ரசனைக்கும் அபாரமான ஒப்பீட்டுக்கும் நன்றிகள் திரு.சிவாஜி செந்தில் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்