-
இன்று (04/06/2017) முதல் மதுரை ஷா அரங்கில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
தென்னக ஜேம்ஸ்பாண்டாக நடித்த "ரகசிய போலீஸ் 115 " தினசரி 4 காட்சிகள்
நடைபெறுகிறது .
http://i1077.photobucket.com/albums/...ps8ecej5ac.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
-
-
நண்பர் ஒருத்தரின் ஆலோசனை பேரில் நான் நம்ப திரிக்கு புதிதாய் வந்தேன். . பழைய திரிகளை கொஞ்சம் கொஞ்சமாய் படிச்சு வர்றேன்.
அந்த பேர்களை பார்த்தால் நிறைய பேர் வந்துள்ளார்கள். ராஜ், மாசானம், ஜோ, எஸ்வி., யூகேஸ்பாபு, செல்வகுமர், ஜெயச்ங்கர், கலைவேந்த்ன், ராமூர்த்தி, கலியபெருமாள் விநாயகம், தெனாலிராஜன் ரூப்குமார் வரதகுமார் சைலஸே் பாபு, ராஜ்குமார், பாஸ்கரன் என்று பல பே்ரகள் உள்ளது. அவர்கள் எல்லாம் யாருமே இப்போது வரவில்லையா? ஏன்/
திரியை பார்த்து நுழையும்போது எல்லாம் 12, 13, சாயங்காலம் இரவு நேரங்களில் சில நேரம் 22, 23 பேர் வியூஸ் என்று வருகின்றது. எல்லாம் பார்க்கிறார்கள். ஆனல், பதிவு போடறதில்லையா? எஸ்வி என்பவர் அதிகமாக பதிவு போட்டிருக்கார். ஆனால், சமீபத்தில் ஒருததருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு சென்றுவிட்டர். அவரும் நிறுத்திவிட்டார்.
சில நேரத்தில் வெறுப்பாக உள்ளது. யாருக்ாகாக பதிவு பேடுகிறோம்? யார் பார்க்கிறார்கள். புரட்சித் தலைவர் மேல் உள்ள பற்றால் பதிவு போடுகிறோம். ஆனால், நாம் மட்டும் போட்டு 2 , 3 பேர் பார்கிறதால் என்ன பலன்? இதுக்கு நான் பேசாமல பேஸ்புக்கிலே மட்டுமே பதிவு போட்டுபோய்விடலாம்.
திரி மொத்தமா அழிந்தாலும் பரவயில்லை.விட்டுப் போய்விடலாம். ஆனால், திரி இருந்து புரட்சித் தலைவர் புகழ் தொடரமல் போய்விடுமே என்பதால் மனதுகேட்கவில்லை. எல்லாரும் பதிவு போட்டால் சரி. இல்லாவிட்டால் சுகாரம் என்பவர் மாதிிரி எல்லாருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு போகவேண்டிதான்.
Dear frends,
Only our great only one emporer vasol chakravarthi in the world nobody beten our thalvar. Cine field and poltics field great. All members pathivugal super.
[please go aheed.
-
M.G.R. மக்களிடம் தனக்கு உள்ள செல்வாக்கைக் கொண்டு அரசியலில் உயர்ந்தாரே தவிர, ரசிகர்களையும் தொண்டர்களையும் தனது சுயநலத்துக்காக அவர் பயன்படுத்திக் கொண்டது இல்லை. அவர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் அவர். தொண்டர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் துடித்துப் போய்விடுவார். அவர்களது குடும்பம் அதிலிருந்து மீள உதவும்வரை ஓயமாட்டார்.
எம்.ஜி.ஆர். கலந்து கொள்ளும் நிகழ்ச் சிகள் என்றால் அதில் பங்கேற்க வெளியூர்களில் இருந்தும் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் வருவார்கள். ஒருமுறை மதுரையில் ஒரு கூட்டத்தில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். கூட்டத் துக்கு வெளியூரில் இருந்து வந்த சில தொண்டர்கள், இரவு திரும்பிச் செல்லும் போது வாகன விபத்தில் பலத்த காய மடைந்து மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
மதுரை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு எம்.ஜி.ஆர். சென்னை திரும்பு வதாக ஏற்பாடு. ஆனால், விபத்து பற்றி கேள்விப்பட்டு தனது பயணத்தை அவர் ரத்து செய்துவிட்டார். காயமடைந்த தொண்டர்களை சந்திக்க மறுநாள் காலை யில் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அவர் வருவது முன்கூட்டியே யாருக்கும் தெரியாது. திடீரென மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆர். வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது.
பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொண்டர் ஒருவர் படுத்திருந்த இடத் துக்கு எம்.ஜி.ஆர். சென்றார். படுக்கை யில் கிடந்த அந்த தொண்டரின் அருகே உதவிக்கு அவரது மனைவி மட்டும் இருந்தார். அந்தப் பெண்மணியின் கோலமே அவர்களது குடும்ப நிலை மைக்கு கட்டியம் கூறியது.
எம்.ஜி.ஆரைப் பார்த்த மகிழ்ச்சி, கண வனின் நிலையால் துயரம், அந்தத் துயரை சமாளிக்க தோள் கிடைத்த நிம்மதி என எல்லாம் கலந்த உணர்ச்சிக் குவியலாய் அந்தப் பெண்மணி அழ ஆரம்பித்துவிட்டார். ‘‘ஐயா, எப்பப் பார்த் தாலும் உங்க பெயரையும் பெருமையை யும் சொல்லிக் கொண்டிருப்பாரய்யா. அவருக்கு இப்படி ஆகிவிட்டதே’’ என்று சொல்லிக் கதறினார். கிழிந்த ஆடை யுடன் பரிதாபமாகக் காட்சி அளித்த அந்தப் பெண்மணியின் கதறலைக் கண்டு எம்.ஜி.ஆரின் கண்கள் கலங்கின.
‘‘கவலைப்படாதே அம்மா. உன் கணவருக்கு ஒன்றும் ஆகாது. எல்லாம் சரியாகிவிடும். நான் இருக்கிறேன்’’ என்று ஆறுதல் கூறினார். அந்த வார்டில் இருந்த டாக்டரிடம் தொண்டரின் உடல் நிலை குறித்து விசாரித்து, அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
டாக்டரிடம் பேசிவிட்டு அந்த தொண்டர் படுத்திருந்த கட்டில் அருகே சென்ற எம்.ஜி.ஆர்., அவரது தலையைத் தடவிக் கொடுத்து கையை இறுகப் பற்றி, ‘‘நீ எதுக்கும் கவலைப்படாதே. டாக்ட ரிடம் சொல்லியிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் நீ வீடு திரும்பலாம். தைரிய மாய் இரு’’ என்றார். தனது அபிமான தலைவர் தன் கையைப் பிடித்து பேசு வதைப் பார்த்து உணர்ச்சிப் பெருக்கில் பதில்கூட சொல்லமுடியாமல், அந்த தொண்டரின் கண்களில் இருந்து ஆனந் தக் கண்ணீர் அருவியாய் கொட்டியது. அந்தத் தொண்டர் உட்பட காயமடைந்த தொண்டர்களின் உடல்நலம் தேறும் வரை, அவர்களது குடும்பங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்ய எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார்.
http://i63.tinypic.com/t0qoac.jpg
நன்றி - முகநூல்
-
-
-
-
-
-