-
MGR உடன் சேர்ந்து நடித்து கொண்டு இருந்த சோ தான் வாத்தியார் என்று பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்து வைத்தார். (கண்ணன் என் காதலன், ஒளிவிளக்கு, நம்நாடு, எங்கள் தங்கம்..இப்படி பல படங்களில் சோ வை வாத்தியாரோடு பாக்கலாம்.)
சோ அவர்களின் வாயில் இருந்து வரும் வார்த்தைக்கு சாகாவரம் உண்டு.
வாத்தியார் என்ற வார்த்தை MGR அவர்களுக்கு பிடித்து அவரே இதை அனுமதித்து இருக்கிறார்.
MGR குண்டடிப்பட்டு மருத்துவ மனையில் இருந்து பரங்கிமலை திமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் தொடர்ந்து நடிப்பாரா இல்லையோ என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள்.
அந்த கால கட்டத்தில் தமிழ் திரையின் முன்னணி நடிகர்கள் MGR மற்றும் சிவாஜி படங்கள் ஒரே நேரத்தில் வெளி வரும் கொண்டாட்டம் நிறைந்த நேரம்.
சிவாஜி அவர்கள் நடித்த ஸ்ரீதர் அவர்களின் சொந்தப்படமான சிவந்த மண் திரைப்படம், அந்த காலகட்டத்தில் மிக பிரமாண்டமாக தயாரித்து இருந்தார்கள்.
அதே நேரத்தில் MGR அவர்களின் படமான சின்ன பட்ஜெட் படமான நம்நாடு படமும் வெளியிட ரெடியாக இருந்தது.
(MGR அரசியலில் நேரடியாக ஈடுபட்டால் என்ன வரவேற்பு இருக்கும் என் கருதி அவசரமாக 15 நாட்களுக்கு கால்ஷீட் கொடுத்து எடுத்த படம்.)
நம்நாடு படத்தின் தயாரிப்பாளர் திரு.நாகிரெட்டி அவர்கள் MGR இடம், சிவந்த மண் வெளியிடும் நேரத்தை சொல்லி நம்நாடு படத்தின் வெளியீட்டை தள்ளி போடலாம் என்று கேட்டு உள்ளார்.
MGR - நாகிரெட்டியுடம், சிவாஜி அவர்களுக்கும், எனக்கும் தனித்தனியான ரசிகர்கள் உள்ளனர். என்னுடைய ரசிகர்கள் மேலே எனக்கு நம்பிக்கை உண்டு என்று கூறி படத்தை வெளியிட கூறி உள்ளார்.
1969.சிவந்த மண் மற்றும் நம்நாடு இரண்டும் 2 நாட்கள் இடைவேளையில் வெளியிடு.
MGR அவர்களும் நாகிரெட்டி அவர்களும் சேர்ந்து, சென்னை மேகலா தியேட்டரில் இந்த படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.(நாகிரெட்டி நினைவுகள்.19. பத்தே நாளில் ஒரு MGR படம்)
.…. வாங்கையா ... வாத்தியாரையா.. பாடல் வரவேற்பை பார்த்து சந்தோசம் அடைந்தாராம்.
வாத்தியார் என்ற வார்த்தை MGR அவர்களுக்கு பிடித்து அவரே இதை அனுமதித்து இருக்கிறார்.
என் அண்ணன்(1970) படத்தில் இருந்து உடன் நடித்த தேங்காய் சீனிவாசன் வாத்தியாரே என்று எல்லா படங்களிலும் (பல்லாண்டு வாழ்க, இதயக்கனி (1976), உழைக்கும் கரங்கள்) இதை பிடித்து கொண்டார்.
ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கியவர்கள் சாமானிய மக்களால் வாத்தியார் என்று அழைக்கப்பட்டனர்.
வாத்தியார் என்றால் ஆசிரியர் என்பதோடு முன்னோடி என்றும் பொருள் படும்.
திரைத்துறையில் முதன்முதலாக வெகு அழகாக நடிப்புத் திறனை நயம்பட, இனிமையாக ,இலகுவாக ,இயற்கையாகக் கலையம்சத்துடன் மென்மையாக வெளிப்படுத்தியவர்
நூற்றாண்டுகளைக் கடந்தும் அவருக்கு ரசிகர்கள் உண்டு. தலைமுறைகளைத் தாண்டி அவரை ரசிப்பவர்கள் உண்டு.
அவரைத் தங்கள் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டனர், எனவே வாத்தியார் என்று அன்போடு அழைக்க ஆரம்பித்தனர்.
அதற்கேற்ற பாடலாக, வாங்கய்யா வாத்தியாரய்யா என்ற திரைப்பாடல் பிரபலமானது.
போக்கு அமைப்பாளர் என்று சொல்லப்படும் Trend Setter அவர்.
அவருக்கு இன்னும் பல செல்லப் பெயர்களும் சூட்டப்பட்டன.
ஏழைகளுக்கு வாரி வழங்கிய வள்ளல் தன்மை காரணமாக போற்றப்பட்டார்
பொன்மனச் செம்மல் என்ற பட்டம் வழங்கப்பட்டது. காலத்தை வென்று காவியமானவருக்கு மக்கள் திலகம் புரட்சித் தலைவர் போன்ற பல பட்டங்கள் வழங்கப்பட்டன.
அதே சமயம் அரசியலிலும் முத்திரை பதித்ததால் அவரை பலரும் திரையுலகிலும் அரசியல் உலகிலும் வாத்தியார் ஆகவே ஏற்றுக்கொண்டனர்
பலரும் அவரைப் பின்பற்றி நடித்தனர், பலருக்கும் அவர் ரோல் மாடல். (சத்யராஜிலிருந்து சிவகார்த்திகேயன் வரை) அரசியலிலும் அவர் வழி வந்தவர் பலரும் இருந்தனர், இருக்கின்றனர்.
அந்த வகையிலும் சரித்திரம் படைத்தவர் நமது முன்னாள் முதல்வர் திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள்........Baa
-
மக்கள்திலகத்தின்
ரசிகனின்
இனிய காலை வணக்கம்..
படித்ததில் பிடித்தது..
மக்கள்திலகத்தின்...." முகராசி"...
65ல் அவரது கன்னித்தாய் வெளியானபோது அவரது பேனருக்கு ஒரு புதுமுகம் கிடைத்தது.அதற்கு முந்தைய ஆண்டுகளில் அவரது ஆஸ்தான நாயகி சரோஜா தான்.வேட்டைக்காரனில் அதற்கு வேட்டு வைத்தது சரோஜாவின் தாயான ருத்ரம்மா.தாய் தலைப்புகளில் மக்கள் திலகத்தோடு இணைந்திருந்த அபிநய சரஸ்வதி ஏகப்பட்ட வெளி பேனர்களில் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்தார்.வழக்கம் போல் தேவர் ஒரு படம் முடிவடையும் நிலையிலேயே அடுத்த படத்திற்கும் பூஜை போட்டுவிடுவார்.மக்கள் திலகமும் அவருக்கு முழு அதிகாரம் வழங்க வழக்கம்போல் வேட்டைக்காரன் என்ற டைட்டிலோடு சரோஜா வீடு நோக்கிப் பயணித்தவருக்கு அதிர்ச்சி.நீங்கபாட்டுக்கு என்கிட்ட எதுவுமே கேக்காம டேட்ஸ் குடுண்ணு வந்து நின்னா எப்படி?. பாப்பா இப்போ பயங்கர பிஸி. எப்பவும் போலத்தாம்மா இப்பவும் கேக்கறேன்.திடீர்ணு இப்படிச் சொன்னா எப்படி.?. சின்னவரு கால்ஷீட் ரெடியா இருக்கு.அதை நான் வேஸ்ட் பண்ண முடியுமா?. பதிலுக்கு தேவர்.அதுக்கு எங்களை என்ன பண்ணச் சொல்றீங்க.ஏற்கனவே கமிட் ஆன படங்களுக்கு நான் தான் பதில் சொல்லணும்.இப்ப முடிவா என்ன தான் சொல்றீங்க?. அடுத்த படத்தில பாத்துக்கலாம்.இந்தப் படத்தில இல்லேண்ணா உங்க பொண்ணு இனிமேல் எம் படம் எதிலுமே இருக்காது.கோபத்தோடு எழுந்த தேவர் விறுவிறுவென வாசலுக்கு வர அண்ணே கொஞ்சம் இருங்க என சரோஜா ஓடி வர கண்டு கொள்ளாமல் கடுப்போடு வெளியேறிய தேவர் நின்ற இடம் சாவித்திரி வீடு.அதற்குப் பிறகு தான் அபிநய சரஸ்வதிக்கு இறங்கு முகம்.வேட்டைக்காரனில் முடிந்த பிறகு அடுத்த படத்திற்கும் சேர்த்தே அவரை புக் பண்ண ஜெமினி இது ஒன்றே போதும் என்றவுடன் தான் ஆயிரத்தில் ஒருவனில் ஜோடி சேர்ந்தார் கலைச்செல்வி.பிடிச்சுப் போடுங்கடா இந்தப் பொண்ணை என தேவர் குதூகலமாக கன்னித் தாயாக வந்து நின்றவரை மொத்தமாகவே ஒப்பந்தம் செய்தார்.அதில் இரண்டாவதாக வந்த படம் தான் முகராசி.
66 ல் வெளியான முகராசி மக்கள் திலகத்திற்கு மட்டுமல்ல தமிழ்த் திரையுலகிற்கும் ஒரு முக்கியமான படம்.எந்த வகையில் என்று பார்த்தால் மக்கள் திலகம் என்றாலே ஒரு படத்தை முடிக்க ஏகப்பட்ட நாட்களை எடுத்துக்கொள்வார்கள் என்று பரவலாக பேசப்பட்ட காலத்தில் இந்த முகராசி படத்தை இரண்டே வாரங்களில் மொத்தப் படத்தையும் எடுத்து அனைவரையும் வியக்க வைத்தார்.இதற்கு முழு ஒத்துழைப்புத் தந்த மக்கள் திலகம் தயாரிப்பாளர்களின் நம்பிக்கையைப் பெற்றார்.இவ்வளவு அவசர அவசரமாக இந்தப் படத்தை எடுத்து வெளியிட தேவருக்கு என்ன அவசியம்?. அங்கு தான் அவரது வியாபார மூளை பலமாக வேலை செய்தது.
ஏ.வி.எம்மின் அன்பே வா கலரில் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியாகப் போகிறது.எப்படியும் படம் பட்டையைக் கிளப்பும்.அந்தப் படத்திற்கு டிக்கட் கிடைக்காத அவரது ரசிகர்கள் வேறு எங்கும் சென்று விடக்கூடாது என்பதற்காகவே இந்த முகராசி விரைவாக எடுக்கப்டட்டது.சொன்ன மாதிரியே காஸினோவில் அன்பே வா கூட்டத்தால் நிரம்பி வழிய ஹவுஸ்ஃபுல் போர்ட் மாட்டிய உடனே அனைவரும் அருகிலுள்ள கெயிட்டி நோக்கி விரைந்தார்கள்.அங்கு தேவரின் முகராசி இவர்களை அரவணைத்தது.இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஜெயலலிதா ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.
இரவு பகல் என இரண்டு ஷிப்ட்.வாஹினியில் மூன்று ஃப்ளோரில் அசுர கதியில் படமானது முகராசி.ஒரு சமயம் காலை நான்கு மணி வரையிலும் படப்பிடிப்பை நடத்தினார்கள்.ஒரு மணி நேரம் தான் தூங்குவதற்கு.நாங்கெல்லாம் புதுமுகம்.ஆனால் எம்.ஜி.ஆர்.திரையிலும் அரசியலிலும் பிஸி.துளி கூட சோர்வே இல்லாமல் அவர் சிரித்துக்கொண்டே பணியாற்றியது எங்களுக்கெல்லாம் வியப்பு என்றார்.இந்தப் படத்தில் இன்றொரு சிறப்பு காதல் மன்னன் மக்கள் திலகத்தோடு பணியாற்றிய ஒரே படம் இது தான்.
நடிகர் திலகத்தோடு ஏகப்பட்ட படங்களில் செகண்ட் ஹீரோவாக அவர் வந்திருந்தாலும் எம்.ஜி.ஆரோடு அவருக்கு இதுவே முதலும் கடைசியும்.முகராசியில் இருவரும் சகோதரர்கள்.வெஸ்டர்ன் மூவியின் தாக்கத்தால் தேவர் இந்தக் கதையைப் பிடித்தார்.சோமு ராமு என்ற இரு சகோதரர்கள்.தந்தையை இழந்த பிள்ளைகளை தாய் செவிலித்தாய் வேலை செய்து காப்பாற்றுகிறாள்.திரண்ட சொத்துக்கள் கொண்ட பணக்காரர் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு விட்டு இறக்க பிரசவத்தின்போது அந்தப் பெண்ணும் ஒரு பெண் குழந்தையை பெத்துப் போட்டு விட்டு கண்ணை மூட அந்த சொத்துக்கள் மீது ஆசை கொண்ட அவரது தம்பி அந்த வாரிசைக் கொல்ல செவிலித்தாயை நிர்பந்திக்கிறார்.முடியவே முடியாது என மறுத்தவரை கடைசியில் கத்தியைச் சொருகி முடித்துவிட மூத்த பையன் பார்த்துவிடுகிறான்.அவனைத் தள்ளி விட்டு ஓடிய கொலைகாரனை தேடிப் பிடித்து கொன்று போடுவதே தனது லட்சியம் என வாழும் அண்ணனுக்கு எதிராக தம்பி வளர்கிறான்.ஒழுங்காகப் படித்து ஒரு போலீஸ் அதிகாரியான தம்பி ராமு தனது கொள்கைக்கு இடைஞ்சல் என அண்ணன் பிரிகிறான்.கொலையாளியை சட்டத்தின் பிடியில் கொண்டுவரத் துடிக்கும் தம்பிக்கும் அவனைக் கொல்லத் துடிக்கும் அண்ணனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே முகராசி.கொலைகாரன் மகளையே காதலிக்கும் தம்பியாக மக்கள் திலகம்.பழி வாங்கத் துடிக்கும் அண்ணனாக ஜெமினி.கொலைகாரன் துரைசாமியாக நம்பியார்.அவரது கூட்டாளி ஜம்புலிங்கமாக அசோகன்.ராமுவின் காதலி ஜெயாவாக ஜெயலலிதா.போலீஸாக நாகேஷ்.அவரது ஜோடி மல்லிகாவாக ஜெயந்தி.ஜெயாவின் சகோதரி இவர்.
வழக்கம்போலவே தேவரின் அதே யூனிட்.விரட்டி விரட்டி வேலை வாங்க அவரும் ரெடி.ஒரே நேரத்தில் அடுத்தடுத்த ஃப்ளோரில் அவரது ராஜ்ஜியம் தான்.அது போக சங்கிலி என்ற அடியாள் அவதாரம் வேறு.தேவரின் படங்கள் என்றாலே கதை விறுவிறுப்பான திருப்பங்களோடு பயணிக்கும்.எப்படி சகோதரர்கள் வளர்ந்தார்கள் என்ற லாஜிக்கான கேள்விகளுக்கு இடம் தராமல் காட்சிகளை அவர் நகர்த்திக்கொண்டு போவார்.மக்கள் திலகத்தை முன்னிருத்தியே கதை நகரும்.வழக்கம்போல் கவியரசு கே.வி.எம்.கூட்டணி தனது பங்கை சிறப்பாகவே செய்யும்.தேவர் படமென்றால் அவரும் பாடல்களில் அதிகம் மூக்கை நுழைக்கமாட்டார்.கவிஞர் அதில் வஞ்சனையும் காட்டமாட்டார்.இதில் ஒரு முக்கியமான பாடல் நம் கவனத்தை ஈர்க்கும்.
ஆயிரத்தில் ஒருவன் ரிலீஸானபோது இந்த ஜோடியை ஒரு கூட்டம் கொண்டாட இன்னொரு கூட்டம் விமர்சனம் செய்தது.பானுமதிஅஞ்சலி பத்மினி சரோஜா என்றிருந்த எம்.ஜி.ஆர்.திடீரென ஒரு சின்னப் பொண்ணை ஜோடியாக்க இது கொஞ்சம் ஓவர்.இவர் வயதென்ன அந்தப் பொண்ணு வயதென்ன.?. என பலர் முணுமுணுக்க கவிஞர் தனது பாடலால் எல்லோரது வாயையும் அடைத்தார்.அவர் போட்ட பல்லவியில் முக்கியமாக குளிர்ந்துபோனது மக்கள் திலகம் தான்.என்ன பல்லவி?.
உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்
இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம்
இனி யாருக்கு இங்கே கிடைக்கும்.
எந்த முகூர்த்தத்தில் இதை எழுதினாரோ தெரியாது.இந்த நெருக்கம் அதற்குப் பிறகு யாருக்கும் இங்கே கிடைக்கவே இல்லையென திரையுலக வரலாறு சொல்கிறது.தேவர் படமென்றால் கவிஞரும் இசைத் திலகமும் எளிமையாவார்கள்.காரணம் தேவர் ஏழை எளியவருக்காக படமெடுப்பவர்.வரிகளும் எளிதாகப் புரியும் இசையும் ஆரவாரமில்லாமல் பயணிக்கும்.ராமுவும் ஜெயாவும் ஒரு சண்டையில் நெருங்குவார்கள்.சோலோவான ஒரு சாங்கில் பாடிக்கொண்டே போக அதை இரு வாலிபர்கள் படம் பிடிக்க அவர்கள் வெளுத்து விரட்டும் ஜெயாவை ராமு எதேச்சையாக சந்திக்கிறார்.ஆம்பளைங்களை இப்படித் தான் அடிக்கிறதா?. உம்பேரென்ன?. ஜெயா.சர்தான்.பொம்பளைங்களுக்கு வீரம் தேவை தான்.சண்டையெல்லாம் போடறே.நல்ல வாத்தியார் வெச்சு முறையா கத்துக்கோ.ஏன் நீங்களே வாத்தியார் தானே. சொல்லித் தரலாமே.அங்கு தொடங்குகிறது அந்த அரிச்சுவடி.அந்த வாத்தியார் சொல்லித் தந்த பாடம் கடைசி வரை அவருக்கு பயன்பட்டது.கவிஞரும் தனது பங்கிற்கு இன்னும் கொஞ்சம் பசை போட்டார்.
அசரடித்தது இந்தப் பாடல்.வருத்தமான அத்தனை கண்களும் பொறாமைத் தீயில் வெந்தது.அதற்கு இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றினார் கவியரசு.கண்ணைப் பார்த்துப் பார்த்து கவிதை எழுதவா?. என குறும்பாகக் கேட்ட பாடல்.
கவிஞர் ஒரு அற்புதமான கலாரசிகன்.கற்பனை ஊற்றில் எடுக்க எடுக்கக் குறையாத தெள்ளமுது அவரது கை வசம் ஏராளம்.காதலைச் சொன்ன கவிஞர் ஃபிலாசபியைச் சொல்லாமல் போவாரா?. மனித வாழ்வின் ஒவ்வொரு படி நிலையும் ஒரு பாடம்.அதை அப்படியே பாடலில் வடிக்கும் மகா கலைஞனவர்.மகா ஞானிகளின் தத்துவங்களை போகிற போக்கில் தனது பாடல் வரிகளில் தூவிக்கொண்டே போவது அவரது வாடிக்கை.அற்ப வாழ்க்கைக்குச் சொந்தக்காரனான மனிதனின் ஆட்டத்தையும் அவனது அடங்களையும் அப்படியே தரும் பாடல் தான்
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும்போது ஒரு நூறு பேரு
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு?.
விடை தெரியாத கேள்விக்கு விளக்கமாகும் கவிஞர்.மடை திறந்த வெள்ளமென வார்த்தைகள்.மனதைக் கொஞ்சம் அதில் செலுத்த மனிதனின் அசலான முகம் தெரியும்.மண்ணோடு மண்ணாகும் வாழ்க்கைக்காக பொன்னோடும் பெண்ணோடும் போராடும் மனிதன்.விண்ணோக்கிய அவனது பயணம் வீணாகக் கழிகிறதே என்ற ஏக்கம் கவிஞருக்கு.சரணங்களில் சகட்டுமேனிக்கு சாடுகிறார் மாநிடப் பதறுகளை.
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்
அதை பட்டயத்தில் கண்டது போல் வேலி எடுத்தான்
அதில் எட்டடுக்கு மாடி கட்டி
கட்டிடத்தைக் கட்டி விட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தான்
அதை கொட்டி அவன் வேலி எடுத்தான்.
உண்டாக்கிய ரெண்டு பேரில் தொடங்கிய வாழ்க்கை எட்டடிக் குழியில் நிறைவு பெற்றதற்கு இடைவெளியில் இவன் ஆடிய ஆட்டத்தை என்னவென்பது?. தலை கணத்து கால்கள் தரையில் படாமல் மமதையோடு அலையும் மனித பிறவிகளுக்காகவே கவிஞரின் இந்தப் பாடல்.முகராசியை பலர் மறுக்கலாம்.ஆனால் அதில் பணியாற்றிய பலர் உண்மையிலேயே ஜாம்பவான்கள்.திரைப்படம் வெறும் படமல்ல.நமக்கொரு பாடம்.
நன்றி..அப்துல் ஸமத் ஃபையஸ். அவர்கள்.........
-
தமிழ்ப்பட வரலாற்றில் அசுர வெற்றி பெற்ற (எம்ஜிஆர்,அய்யன் காலம்) முதல் இரண்டு இடம் வென்ற படத்தை பார்த்தோம். முதல் இடத்தில் "மதுரை வீரனு"ம் இரண்டாம் இடத்தில் "உலகம் சுற்றும் வாலிபனு"ம் இடம் பெற்றது. இனி மூன்றாவது நான்காவது ஐந்தாவது இடம் பெற்ற படங்களை பார்க்கலாம்.
நாம் பார்ப்பது அதிக திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய அடிப்படையில் தேர்வு செய்தோம்.
நாம் பார்த்தது வசூல் அடிப்படையில் அல்ல. அதை அடுத்து வரும் காலங்களில் பார்க்கலாம்.
சரி, இனி மூன்றாவது இடம் பெற்ற படத்தை பார்க்கலாம். மூன்றாவது இடத்தில் தமிழ்ப்பட உலகையே புரட்டிப் போட்ட விஜயா கம்பைன்ஸ் தயாரிப்பில் வெளியாகி அய்யன் கைஸ்களை கடைசிவரையில் அலறவிட்ட "எங்க வீட்டுப் பிள்ளை"தான் மூன்றாவது இடத்தில் இருக்கும் படம். . இன்று நினைத்தாலும் இரத்தக் கொதிப்பு வந்து விடும் கைஸ்களுக்கு. வாழ்நாள் முழுவதும் போராடி 7 தியேட்டரில் வெள்ளிவிழா என்ற சாதனையை இறுதி வரை வெல்ல முடியாமல் புரட்சி தலைவர் நடிப்பதை விடுத்து முதலமைச்சர் ஆனதும் அவர்களின் பேராசையை பல திரையரங்குகளில் வடக்கயிறு போட்டு நிறைவேற்றிக் கொண்டனர்.
சுமார் 18 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி வெற்றி என்றால் எத்தகையது என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டிய படம். "ராமுடு பீமுடு" "ராம் அவுர் ஷியாம்" போன்ற தெலுங்கு இந்தி பதிப்பு அடையாத வெற்றி. அகில இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த மாபெரும் வெற்றிப் படம்.
இன்றளவும் இதன் வெற்றிக்கு இணை எதுவும் இல்லை. இந்த வெற்றியை முறியடிக்க கிழி விளையாடல் நடத்திப் பார்த்தனர்.
நெருங்க முடியவில்லை.
'நான் ஆணையிட்டால்' பாடலை மாற்று நடிகர் பாடினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
படம் வெளியான தருணத்தில் சென்னையின் மக்கள் தொகை சுமார் 30 லட்சம்தான் இருக்கும். ஆனால் படம் பார்த்தவர்கள் எண்ணிக்கை மட்டும் சுமார் 20 லட்சம் என்று இந்து நாளிதழ் சுட்டிக்காட்டி எழுதியதை யாரும் மறக்க முடியாது.
தமிழ்ப்பட உலகை கனவு தேசம் என்பார்கள். அது "எங்க வீட்டுப் பிள்ளை"க்கு மிக பொருந்தும்
எத்தனை தடவை பார்த்தாலும் இரவில் தூங்கும் போது கண்களை மூடினால் "பெண் போனால்" பாடலும் "குமரிப்பெண்ணின் உள்ளத்திலே" பாடலும் வருவதை என்னால் தடுக்க முடியவில்லை. நீண்ட காலம் பிடித்தது அந்த கனவில் இருந்து வெளியே வர. இனி அடுத்த பதிவில் நான்காம் இடம் பெற்ற காவியத்தை பார்க்கலாம்..........ksr.........
-
எங்கெல்லாம் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறதோ அங்கெல்லாம் அரசுக்கெதிரான புரட்சிகள் வெடித்தே தீரும்.அப்படித் தான் ரஷ்யாவிலும் புரட்சி வெடித்தது.ஆண்டுகொண்டிருந்த ஜார் மன்னர்கள் மக்களை புழுவினும் கீழாக நடத்த ஒரு கட்டத்தில் பொங்கியெழுந்த மக்கள் மொத்த ஆட்சியாளர்களையும் நொடிப்பொழுதில் காணாமல் ஆக்கினார்கள்.இது ஏதோ சட்டென வெகுண்டெழுந்த நிகழ்வல்ல.காலாகாலமாக குமுறிக்கொண்டிருந்த எரிமலையின் வெளிப்பாடு.
சினிமாவைப் பற்றி பேசும் குழுவில் சரித்திரம் எதற்கு என்ற கேள்வி எழலாம். நேற்றைய சரித்திரங்கள் தான் இன்றைய சினிமாவாகிறது.ரஷ்ய ஜார்களைப் பற்றி அங்கும் பல படங்கள் வெளியானது.அதில் முக்கியமான திரைப்படம் இவான் த டெரிபிள்.1944 ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியது செர்ஜி ஐஸன்ஸ்டீன்.ரஷ்யாவின் மிகச் சிறந்த இயக்குநர்.இந்த இவான் தான் அவரது கடைசிப் படமாகவும் ஆகியது மிகப் பெரிய சோகம்.அதற்குக் காரணம் அதிலிருந்த பாலிடிக்ஸ் .அதற்குள் நுழைவதற்கு முன்பாக யாரிந்த இவான்?. ஜார் வம்சத்தில் வந்த நான்காம் இவானை ரஷ்யர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள்.காரணம் அந்த டெரிபிள். தந்தை மூன்றாம் வசிலி முடங்கியபோது 16 வயதில் அரியணை ஏறிய இவான் படிப்படியாகத் தான் கொடுங்கோலனாக மாறிப்போனான்.கடைசியாக தினம் ஐநூறு கொலையாவது செய்யாமல் அவனால் நிம்மதியாக தூங்க முடியாமல் போனது.சில்லிட வைக்கும் ஓல்காவில் நிர்வாணமாக அவன் வீசியெறிந்த உயிர்கள் ஏராளம்.1547 முதல் 75 வரை அவன் ஆடிய ஆட்டங்களைத் தான் ஐஸன்ஸ்டீன் படமாக்கினார்.
எங்கே சிக்கல் எழுந்தது என்றால் அதிபர் ஸ்டாலினை மனதில் வைத்துத் தான் ஐஸன்ஸ்டீன் இப்போது இவானை கையிலெடுத்திருக்கிறார் என அவரது ஆதரவாளர்கள் கொளுத்திப்போட அந்தப் படத்திற்கு தடை விதித்தார் சர்வாதிகாரி ஸ்டாலின்.அப்போது அவர் தனது அரசியல் எதிரிகளை வேட்டையாடிக்கொண்டிருந்த நேரம். ஏறக்குறைய இவானின் இரண்டாம் பாகத்தை முடிக்கும் நிலையிலிருந்தார் ஐஸன்ஸ்டீன். ஸ்டாலின் தந்த நெருக்கடியால் ஐஸன்ஸ்டீன் 1948 ல் காலமானார்.அந்த இரண்டாவது இவான் 1958ல் தான் வெளியானது.எதற்கு இப்போது ஸ்டாலின் என்றால் தமிழகத்திலும் ஒரு ஸ்டாலின் இங்கொரு படத்திற்கு பிரச்சனை செய்தார்.பயப்படாதீர்கள்.நான் அரசியல் பேசமாட்டேன்.நான் குறிப்பிடும் ஸ்டாலின் மணிக்கொடி இதழை வழிநடத்திச் சென்ற மணிக்கொடி சீனிவாசன்.பாட்சாவைப் போல அவருக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது.அது தான் ஸ்டாலின் சீனிவாசன்.
இந்த ஸ்டாலின் சீனிவாசன் அப்போது சென்சார் போர்டின் தலைவராக இருந்தார்.ரஷ்யாவின் சர்வ அதிகாரமும் பொருந்திய ஜோஸஃப் ஸ்டாலினைப்போல் சென்சார் போர்டின் சர்வாதிகாரி ஆனதால் சீனிவாசனுக்கு அந்தப் பெயர் வரவில்லை.ஸ்டாலின் போல் மீசையை வளர்த்துக்கொண்டதில் சீனிவாசன் ஸ்டாலினாகிப்போனார்.இவான் த டெரிபிளுக்கு பிரச்சனை செய்த அந்த ஸ்டாலினைப் போல் தமிழகத்திலும் இந்த ஸ்டாலின் ஒரு படத்திற்காக ஒற்றைக் காலில் நின்றார்.அது பிற்காலத்தில் சரித்திரமானது.தமிழகம் முதன் முறையாக அடல்ஸ் ஒன்லி என்ற பெயரைக் கேட்டது.இப்போது புரிந்திருக்குமே.மக்கள் திலகத்தின் மர்ம யோகி.அதே தான்.
திரைப்படம் தணிக்கைக் குழுவின் பார்வைக்கு வந்தது.ஸ்டாலின் மீசையோடு மணிக்கொடி சீனிவாசன் படம் பார்க்க அமர்ந்தார்.கூடவே படத்தயாரிப்பாளர் மொய்தீன் தனது எட்டு வயது மகன் சகாப்தீனோடு.மொத்தப் படத்தையும் பார்த்த ஸ்டாலின் சீனிவாசன் படத்திற்கு ஏ சர்டிபிகேட் என்றார்.அப்படீன்னா?. அது வரை கேள்விப்பட்டிராத விந்தையில் மொய்தீன் கேட்ட கேள்வி.அப்படீன்னா சின்னப் பசங்க பார்க்கக் கூடாத படம்.அப்படியென்ன இதிலிருக்கு.?. படத்தில நிறைய இடத்தில பேய்க் காட்சிகள் வருது மிஸ்டர் மொய்தீன்.சின்னப் பசங்க பார்த்தா பயப்படுவாங்க.இது அவங்களை மனதளவில பாதிக்கும்.படத்தில மஸ்லீன் துணியை போர்த்திட்டு ஒரு எலும்புக்கூடு மட்டும் தானே வருது.எலும்புக் கூட்டைப் பார்த்து பசங்க பயப்படுவாங்களா?. நிச்சயம் பயப்படுவாங்க என்றார் சீனிவாசன்.சார் !.. நம்ம கூட உட்கார்ந்து எம் பயனும் தான் படத்தை பார்த்தான்.எட்டு வயசு தான் ஆகுது.அவன் எந்த சீன்லையும் பயந்த மாதிரி தெரியலையே.உங்க ஸ்டாலின் மீசையைப் பார்த்தா தான் அவனுக்கு பயமா இருக்கு? . சிரித்துக்கொண்டே மொய்தீன் சொல்ல மிஸ்டர் மொய்தீன் உங்க நகைச்சுவை உணர்ச்சியை மதிக்கிறேன்.ஆனால் அடல்ஸ் ஒன்லியில் நான் உறுதியா இருக்கேன்.கறாராகச் சொன்ன சீனிவாசனிடம் இனி வாதாடிப் பிரயோஜனம் இல்லையெனத் தெரிந்தது.தமிழில் முதல் படமாக மர்மயோகிக்கு முத்திரை விழுந்தது.
முதல் ஏ படத்தை பிராட்வே பிரபாத்தில் தொடங்கி வைத்தது சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திராவின் மிசாவிற்கு காரணகர்த்தாவுமான ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்ற ஜே.பி.பத்திரிகைகள் நையாண்டியாக இதை குறிப்பிட்டன. தமிழகத்தின் முதல் ஏ படத்தை தொடங்கி வைத்து தலைமை தாங்கிய ஜே.பி.ஒரு அடல்ட் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது என எழுதின.மணிக்கொடி சீனிவாசன் இவ்வளவு பிடிவாதமாக ஏ தந்தது நியாயம் தானா என இப்போது வாதிடுவது நல்லதல்ல.இப்போது வரும் படங்களைப் பாராத்தால் இதே போல் நூறு சீனிவாசன்கள் நமக்குத் தேவை.அதைத் தவிர்த்து நாம் மர்மயோகிக்குள் நுழைந்தால் பலருக்கு இந்தப் படம் திருப்பு முனையாக அமைந்த படம்.முக்கியமாக மக்கள் திலகத்திற்கு.
1951 ல் வெளியான மர்மயோகி தான் அவருக்கு ஒரு ஸ்டார் வேல்யூவைத் தந்த படம்.47 ல் இதே ஜூபிடர் தான் அவரை ராஜகுமாரியில் நாயகனாக்கி ஒரு திருப்பு முனையைத் தந்தது.அதற்குப் பிறகும் அவர் திரைத் துறையில் முட்டி மோதிக்கொண்டு தான் இருந்தார்.ஆனால் ராஜகுமாரியில் அவருக்கு அருமையானதொரு நட்பு கிடைத்தது.அது தான் ஏ.எஸ்.ஏ.சாமி.இலங்கையில் வளர்ந்த சாமி மிகச் சிறந்த படிப்பாளி.கிருஸ்தவராக இருந்தாலும் பல புராண இதிகாசங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அதைத் தவிர்த்து ஹாலிவுட் பாணியில் அவருக்கு ஆர்வமுண்டு.ஆங்கில நாவல்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம்.அப்படித் தான் இந்த மர்மயோகி ஸ்கிரிப்ட்டில் அவர் மேரி கரோலியின் வென்ஜின்ஸை நுழைத்தார்.ஷேக்ஸ்பியரின் மேக்பெத்தை நுழைத்தார்.ரஷ்யாவின் செர்ஜி ஐன்ஸ்டீனின் இவான் த டெரிபிளையும் நுழைத்தார்.மக்கள் திலகமோ தான் எப்படியாவது திரையில் வென்று காட்ட வேண்டும் என்ற வெறியோடு அலைந்த காலகட்டத்தில் சாமி அவருக்கு உதவினார்.
மர்மயோகியில் அட்டகாசமான கரிகாலன் வேஷம் எம். ஜி.ஆருக்கு கிடைக்க காரணமாக இருந்தது ஏ.எஸ்.ஏ.சாமி.எம்.ஜி.ஆர்.அட்டையாக ஒட்டிக்கொண்டு சாமியை நச்சரிக்க கரிகாலன் பாத்திரம் வளரப்போகும் ஹீரோவை அடையாளம் காட்டியது.ஆங்காங்கே பஞ்ச் டயலாக்குகளை எம்.ஜி.ஆருக்காவே எழுதினார் சாமி.அக்கிரமம் எங்கு நடந்தாலும் அங்கே ஆஜராகும் நாயகனுக்கு அச்சாரம் போட்டான் மர்ம யோகி.அக்கிரமக்காரர்களை வெளுத்து வாங்கும்போது வெளிப்பட்ட ஹீரோயிஸம் பல ஆண்டு காலம் எம்.ஜி.ஆருக்கு பயன்பட்டது.அதுவே அவரது ட்ரேட் மார்க்காவும் மாறிப்போனது.இதில் மர்மயோகி அவரில்லை என்பது தான் காமெடி.மர்மயோகியாக வந்தது செருகளத்தூர் சாமா.
பல திருப்பங்களைக் கொண்ட மர்மயோகியின் கதை அநேகமாக எல்லோரும் அறிந்தது தான்.இயக்கியது புகழ் பெற்ற பெரியவர் கே.ராம்நாத்..மிகச் சிறந்த ஒளிப்பதிவு மேதையான ராம்நாத்தின் சீடர்களான மஸ்தானும் சுப்பாராவும் மர்மயோகியின் ஒளிப்பதிவை கவனிக்க சி.ஆர்.சுப்பராமனும் சுப்பைய நாயுடுவும் இசையை கவனிக்க எடிட்டிங் எம்.ஏ.திருமுகம்.சாமியின் ஸ்கிரிப்டில் நாடாளும் மன்னனுக்கு அறிமுகமாகிறாள் ஒரு நாசக்காரி.நாளடைவில் மன்னனை பெட்டிப் பாம்பாக மாற்றி நாட்டை ஆளும் அதிகாரத்திற்கு வருகிறாள்.கடைசியாக மன்னனையே கொல்லத் துணிகிறாள்.தப்பிச் சென்ற அரசர் மர்மயோகியாக மாறி சுரங்கப் பாதையொன்றை அமைத்து அரண்மனையில் குடியேறுகிறார். .அடிக்கடி பேய் உருவில் தோன்றி அந்த சாகசக்காரியை மிரட்டுகிறார்.மன்னன் மரிக்கவில்லை என்ற செய்தி பேரிடியாக வர அந்த சண்டாளியிடமிருந்து நாட்டை எப்படி திரும்பப் பெறுகிறார் என்பது தான் மீதிக் கதை.ஸ்கிரிப்ட்டில் மன்னருக்கு முக்கியத்துவம் இருந்தாலும் அதை ஓவர் டேக் செய்து இளவரசன் கரிகாலனை முன்னிருத்தியது தான் சாமியின் சாணக்கியத்தனம்.இந்தப் படத்தில் ஏகப்பட்ட ஆச்சர்யங்கள்.
பிற்காலத்தில் வில்லனாக மாறிய நம்பியார் இதில் காமெடி செய்வார்.குணசித்திர வேடத்தில் மிளிர்ந்த சகஸ்ரநாமம் இதில் வில்லத்தனம் செய்வார்.இப்போது காமெடியாகத் தெரியும் எம்.ஜி.ஆர்.சகஸ்ரநாமம் கத்திச் சண்டைகள் அப்போது சீரியஸாகவே பார்க்கப்பட்டது.கத்திச் சண்டையில் பெயர் பெற்ற நம்பியார் காமெடி செய்ததும் அப்போது காமெடியாகவே பார்க்கப்பட்டது.வீராங்கனாக வர வேண்டிய நம்பியார் நல்ல தம்பியாக காமெடி செய்தார்.வீராங்கனாக வேஷம் கட்டிய சகஸ்ரநாமத்தோடு பைசாகியாக வந்த எஸ்.ஏ.நடராஜன் இரண்டாம் கட்ட வில்லனாக மாறி பிறகு வந்த மந்திரி குமாரியில் மெய்ன் வில்லனானார்.
வில்லி பாத்திரத்தை வெளுத்து வாங்கியது அஞ்சலி தேவி.அவர் ஏற்ற ஊர்வசி பாத்திரம் நல்ல பெயரை பெற்றுத் தந்தது.கூடவே கரிகாலன் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக கலாவதி மாதுரி.பண்டரி பாய் வழக்கம்போல் அடக்க ஒடுக்கமான வசந்தா.நம்பியாருக்கு ஜோடியாக காமெடியில் இறங்கிய நல்லம்மாவாக எம்.எஸ்.எம்.பாக்கியம்.ஜூபிடர் சோமு முதலில் ஊர்வசி பாத்திரத்திற்கு பானுமதியைத் தான் புக் பண்ணினார்.ஹீரோயினாக மாறிவிட்டு வில்லத்தனம் செய்ய பானுமதி விரும்பவில்லை.அதே ஆண்டு இந்திக்கும் இதையே டப் செய்ய அந்த ஏக் தா ராஜாவும் பணத்தை பெற்றுத் தந்தது.அதில் எம்.ஜி.ஆர்.லால் பகதூர் என்ற பெயரில் வந்தார்.அதை விட அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை இந்தப் படம் தந்தது.அது தான் அவரது அரசியல் வாழ்க்கை.
மக்கள் மத்தியில் அப்போது தான் பிரபலமாக மர்மயோகி உதவியதை டி.வி.நாராயணசாமி அண்ணாவிடம் கூறினார்.51 அரசியல் மாநாடு களைகட்ட எம்.ஜி.ஆரை கழகம் பயன்படுத்திக்கொண்டது.கருப்பு உடையணிந்து மின்னும் வாளோடு எதிரிகள் மத்தியில் குதித்த எம்.ஜி.ஆரைப் பார்த்து பூரித்துப் போனது ஒரு கூட்டம்.பொறி பறக்கும் வசனங்களில் விசில் பறந்தது.விழா நாயகனாக மாறிப்போன எம்.ஜி.ஆரை அந்த 51 மாநாடு கண்டு களித்தது.சொல்லின் செல்வர் சம்பத் விழா மேடையை விட்டு வெளியேறும் அளவிற்கு சினிமா மோகம் கழக உடன்பிறப்புகளை மாற்றிப்போட்டதற்குக் காரணம் மர்மயோகியென்றால் அது மிகையில்லை.வெற்றிச் சங்கை ஊதுவேன் என்ற கவியரசு பாடலொன்று மர்மயோகியில் உண்டு.அப்படி வெற்றிச் சங்கை பலமாக கழகத்தில் எம்.ஜி.ஆர்.ஊதக் காரணம் இந்த மர்மயோகி.
படத்தில் பல பாடல்கள்.வந்த வழி மறந்ததேனோ என்ற கவிஞரின் வரிகளுக்கு குரல் தந்தது கே.வி.ஜானகி.இதே ஜானகி கண்ணின் கருமணியே கலாவதி பாடலுக்கு திருச்சி லோகநாதனோடு இணைந்திருப்பார்.ஆ..ஆஹா..இன்பம் இரவில் அமைதியிலே என்றது டி.வி.ரத்தினம்.அழகான பொன் மானைப் பார் என்றார் கிருஷ்ணவேணி என்ற ஜிக்கி.என் மனசுக்கிசைந்த ராஜா என பொங்குமிசைக்காக குரல் தந்தது ரத்தினம் தான்.இதில் காமெடிக்காவும் பாடல்கள் தந்திருந்தார்கள்.தில்லாலங்கடி தில்லாலங்கடி அப்போது ஹிட்டான பாடல்.தமிழ் சினிமாவிற்காக புதிதாக ஒரு காமெடி ஜோடியை அறிமுகப்படுத்தினார்கள் ஜூபிடர் பிக்சர்ஸார்.ஏற்கனவே அவர்களது முந்தைய படத்திற்கு காமெடி செய்த நம்பியாரும் எம்.எஸ்.எஸ்.பாக்கியமும் தான் அது.கலைவாணர் ஜோடி காளி என்.ரத்தினம் ஜோடியோடு போட்டி போட வேண்டிய ஜோடி நல்ல வேளையாக திசை மாறிப் போனது.இல்லையென்றால் இப்படியொரு வில்லனை இந்தத் துறை இழந்திருக்கும்.அழகான முகத்தோடு அப்பாவியாக வந்த நம்பியாருக்கும் பாடல்கள்.மனிதர்களை கழுதையோடு ஒப்பிட்டு கவி புனைந்த வரிகள் இன்றும் ஆச்சரியம்.
சாம்பலைப் பூசிக்கிட்டு
சம்சார வாழ்வைச்
சதமில்லை என்று சொல்வது
என்ன கழுதை?.
அது சத்திரத்துச் சாப்பாட்டு
தடிக் கழுதை.
கள்ளுக்கடை வீதியிலே கொள்ளை அடிச்சுகிட்டு
கௌரவமா இருப்பது எந்தக் கழுதை?.
அது கால முணராத சுத்த போலிக் கழுதை
எனப் போகிறது இந்த கழுதைப் பாடல்.ஜூபிடர் பிக்சர்ஸார் தமிழ்த் திரையுலகிற்காக ஏகப்பட்ட புதுமைப் படங்களைத் தந்ததை ஒரு தொடராகவே இங்கே தந்திருக்கிறேன்.அதில் ஜூபிடரின் ஆரம்ப கால வரலாறுகள் பலதைப் பற்றி இங்கேயே பேசியும் இருக்கிறோம்.மேற்கொண்டு அது தொடராமல் போனதற்கு காரணம் நானல்ல.தொடருக்குக் கிடைத்த வரவேற்பு தான்.போகப் போக உற்சாகம் குன்றியபோது எனக்குள் ஏற்பட்ட சலிப்பு.இதே போல் எப்போதாவது சினிமா வரலாறு பேசுவது தான் எல்லோருக்கும் நல்லதாகப் படுகிறது.ஏனோ மர்மயோகி பற்றி இன்று பேசத் தோன்றியது.மணிக்கொடி சீனிவாசனைப் பற்றி கையில் கிடைத்த ஏதோ ஒரு இதழ் தான் இன்றைய பதிவிற்குக் காரணம்.நீண்ட பதிவாக இருந்தாலும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் நண்பர்களுக்காகவே இந்தப் பதிவு.......... Abdul Samad Fayaz
-
"அவதார புருஷர் அவதரித்த தினம்..!"
-சைதை சா.துரைசாமி,
சென்னை பெருநகர முன்னாள் மேயர்.
’வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம்தனிலே நிற்கின்றார்’ – என்று ’மன்னாதி மன்னன்’ படத்தில் பாடியபடியே, புரட்சித்தலைவர், மரணத்துக்குப் பிறகும் மக்களின் மனதில் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இரட்டை இலையைத் தவிர வேறு சின்னத்தில் ஓட்டு போடத் தெரியாத ஒரு பரம்பரையைப் பெற்றிருக்கிறார்.
இன்றும் சமாதியில் காது வைத்து, எம்.ஜி.ஆரின் கடிகாரச் சத்தம் கேட்கும் இளம் தலைமுறைகளின் ரத்தத்தில் கலந்துள்ளார்.
இன்றுவரை தியேட்டர்களில் புரட்சித் தலைவரின் பழைய படங்கள் வெளியாகும்போது, எந்த எதிர்பார்ப்புமின்றி ஃப்ளக்ஸ், பேனர் வைத்துக் கொண்டாடும் தொண்டர்களைப் பெற்றிருக்கிறார்.
எப்படி இவையெல்லாம் சாத்தியமானது என்பதை அவரது பிறந்த தினத்தில் அறிந்து கொள்வோம்.
திரையரங்குகளில் எல்லோரும் வணிக ரீதியாக பொழுதுபோக்கு படங்களை வெளியிட்டு வந்த நேரத்தில், புரட்சித்தலைவர் மட்டும் மனிதநேயச் சிந்தனை, நேர்மை, வாய்மை, உழைப்பு, குடும்ப உறவு, முதியோருக்கு மதிப்பு என வாழ்வியல் பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை வெளியிட்டார். அதனால்தான், எம்.ஜி.ஆரை இளைஞர்கள் இன்றும் வாத்தியார் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.
புரட்சியாளர் எம்.ஜி.ஆர். நாடக நடிகர் என்பதால், பாடல்களின் முக்கியத்துவம் அறிந்தவர். அதாவது, சுதந்திரப் போராட்டத்துக்குப் பயன்பட்டது போன்று சமூக முன்னேற்றத்துக்கும் பாடல்கள் பயன்படும் என்று நம்பினார். தன்னுடைய படத்தின் பாடலில் இடம்பெறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அக்கறை செலுத்தினார்.
1954ம் ஆண்டு வெளியான ‘மலைக்கள்ளன்’ படத்தில் இருந்து, தன்னுடைய படத்தின் பாடல்களை தி.மு.க.வின் பிரசாரத்துக்குப் பயன்படுத்தினார்.
"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்" – என்று அன்றைய ஆட்சியாளர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். தைரியமாகப் பாடியதும், அவரை ஒரு சமூகப் புரட்சியாளராக மக்கள் கொண்டாடினார்கள்.
அடுத்து, ‘மதுரை வீரன்’ படத்தில் நடித்து, அருந்ததி இன மக்களின் குலதெய்வமாகவே மாறினார். அதனாலே இன்றும் பட்டியலின மக்கள் வீட்டுக்கு வீடு எம்.ஜி.ஆரின் போட்டோவை மதுரைவீரன் சாமியாக வைத்து கும்பிட்டு வருகிறார்கள்.
1958-ல் வெளியான, ‘நாடோடி மன்னன்’ படத்தில் திமுக கட்சிக் கொடி ஏந்திய ஆணும் பெண்ணும் நிற்பது போல 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு சின்னம் அமைத்தார். அதனால் கிராமத்து மக்களும் ரசிகர்களும் தி.மு.க. கொடியை எம்.ஜி.ஆர். கொடியாகவே பார்த்தார்கள். புரட்சித்தலைவரும் தி.மு.க.வை தன்னுடைய கட்சியாகவே நினைத்து வளர்த்தார்.
ஏழைகளுக்கும் உழைப்பாளிகளுக்கும் மதிப்பு கொடுப்பதில் புரட்சித்தலைவருக்கு இணையாக வேறு எவரையும் சொல்லவே முடியாது.
உழைக்கும் மக்கள் மீதான அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் உழைப்பாளி, தொழிலாளி, விவசாயி, ரிக்ஷாக்காரன், மீனவ நண்பன் என்று படங்களுக்கு பெயர் சூட்டி, தன்னை ஏழைகளில் ஒருவன் என்று அனைவரையும் உணரவைத்தார்.
"தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான்
பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்" – என்று ’படகோட்டி’ படத்தில் மீனவர்களின் துயரத்தைப் பாடியதன் மூலம் மீனவர்களின் தலைவராகவே மாறினார்.
பாடல் மட்டுமின்றி, வசனம், காட்சி அமைப்புகளிலும் மக்களின் மனதை தொட்டார். இந்த உலகிலேயே ஒரு தனி மனிதரின் கொள்கைக்காக திரைப்படம் எடுக்கப்பட்டு, அது வெற்றியும் அடைந்தது என்றால், அது புரட்சித்தலைவரின் படங்கள் மட்டும்தான்.
தன்னுடைய ஒவ்வொரு சோதனையையும், சாதனையாக மாற்றிக் காட்டியவர் புரட்சித்தலைவர். அதனாலே, எம்.ஜி.ஆரை தெய்வப்பிறவியாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
வெற்றிகரமான சினிமா நடிகராக இருந்தாலும், நாடகக் கலையிலும் தொடர்ந்து அக்கறை காட்டினார் புரட்சித்தலைவர்.
சீர்காழியில் நடைபெற்ற, ‘இன்பக்கனவு’ நாடகத்தில் நடித்த நேரத்தில், மிகப்பருமனான நடிகர் குண்டுமணியை அலேக்காக தூக்கினார். அந்த நேரத்தில் சற்றே சரிந்ததால் கால் எலும்பு முறிந்துவிட்டது.
இனிமேல் சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆர். நடிக்கவே முடியாது என்று வதந்தி பரவியது. ஆனால், அடுத்தடுத்து வந்த ராஜா தேசிங்கு, மன்னாதி மன்னன் படங்களில் முன்னிலும் வேகமாக சண்டையிட்டு வதந்தியைப் பொய்யாக்கினார்.
அதேபோன்று எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட நேரத்தில், ‘எம்.ஜி.ஆர். பிழைக்கவே மாட்டார்’ என்றும், ‘பிழைத்தாலும் அவரால் பேசவே முடியாது’ என்று எதிரிகள் பேசினார்கள். ஆனால், அந்த சோதனையையும் எம்.ஜி.ஆர் சாதனையாக்கிக் காட்டினார். ஆம், துப்பாக்கியால் சுடப்பட்டு, கழுத்தில் கட்டுப்போட்டபடி எம்.ஜி.ஆர். சிகிச்சையில் இருக்கும் படம்தான் தமிழகம் முழுவதும் 1967ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் ஒட்டப்பட்டன.
அந்த புகைப்படத்தைப் பார்த்து பதறிய மக்கள் உதயசூரியனுக்கு ஓட்டு போட்டு அண்ணாவை அரியணையில் ஏற்றினார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வரக்காரணம் எம்.ஜி.ஆர். மட்டும்தான் என்பதை அண்ணா உணர்ந்திருந்த காரணத்தால்தான், அவரை இதயக்கனியாக கடைசி வரை போற்றிப் பாதுகாத்தார்.
1984ம் ஆண்டு புரட்சித்தலைவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற நேரத்தில், ‘எம்.ஜி.ஆர். உயிருடன் இல்லை’, ‘அவரது உடல் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது’ என்றெல்லாம் வதந்தி பரப்பினார்கள். ஆனால், தமிழக மக்களின் அன்பான பிரார்த்தனைகள் மூலம் அந்த சோதனையையும் வென்று, மருத்துவமனையில் இருந்தபடியே ஆட்சியைப் பிடித்தார்.
இப்படி, ஒவ்வொரு தோல்வியின் போதும் எம்.ஜி.ஆர். வீழ்ந்துவிட்டார் என்று எதிரிகள் நினைக்க, முன்னிலும் வீரியமாக எழுந்து சாதனை படைத்தார். வெற்றி மேல் வெற்றி.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியவரும் புரட்சித் தலைவர்தான். சொத்துக்கணக்கு கேட்டதற்காக தி.மு.க.வில் இருந்து புரட்சித்தலைவர் வெளியேற்றப்பட்ட நேரத்தில், தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
நல்லவர்கள், நாணயமானவர்கள், நியாயம், தர்மத்துக்கு கட்டுப்பட்டவர்கள், நேர்மையாளர்கள், கடவுள் பக்தியும் மனசாட்சியும் உள்ள நடுநிலை மக்கள், அர்ப்பணிப்பு குணமிக்க தொண்டர்கள் அனைவரும் புரட்சித்தலைவரின் பக்கம் நின்றனர்.
அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தோற்றுவித்த நேரத்தில் ஆளும் கட்சியான தி.மு.க., காமராஜர் தலைமையிலான காங்கிரஸை மீறி வெற்றி பெறமுடியுமா என்று பலரும் சந்தேகப்பட்டனர். ஆனால், மக்களின் பேராதரவுடன் தொடர்ந்து 10 ஆண்டுகள் தோல்வியே சந்திக்காமல் முதல் அமைச்சராக பதவி வகித்தார். அந்த மக்களும், தொண்டர்களும்தான் இன்றுவரை அ.தி.மு.க. என்ற மாளிகையின் கடகாலாகத் திகழ்கிறார்கள்.
நாடோடி மன்னன் படத்தில், ‘நாளை போடப்போறேன் சட்டம், மிக நன்மை புரிந்திடும் திட்டம்… நாடு நலம் பெறும் திட்டம்’ என்று பாடியதை நிஜமாக்கிக் காட்டும் ஆட்சி புரிந்த தீர்க்கதரிசி.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில், ‘நமது தேவையே பிறருடைய நன்மைதான். மக்களுக்காக நாம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்.
நமக்கு என சேமித்து வைக்கும் ஆசையை வளர்த்துக் கொண்டால் பிறருக்காக நாம் எதையுமே சாதிக்க முடியாது’ என்று சுயநலமற்ற மனிதநேய சிந்தனையை மக்கள் மனதில் பதியவைத்தார்.
ஏழை மக்களுக்காக எதையும் செய்வதற்கு புரட்சித்தலைவர் தயாராக இருந்தார். ரேசன் அரிசி விலையை புரட்சித்தலைவரின் அரசு ஏற்றவில்லை என்ற காரணத்தால், மத்திய தொகுப்பிலிருந்து அரிசி தருவதை மத்திய அரசு நிறுத்தியது. உடனே, பொங்கியெழுந்து அண்ணா சமாதியில் புரட்சித்தலைவர் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அரசுக்கு எதிராக முதன்முதலாக உண்ணாவிரதம் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.தான். உடனே மத்திய அமைச்சர் ஓடோடிவந்து உண்ணாவிரதத்தை முடித்துவைத்தது வரலாறு.
ஒருமுறை எம்.ஜி.ஆர். தூத்துக்குடி அருகே, கைக்குழந்தைகளுடன் சில பெண்களை சந்தித்தார். 'காலையில் சாப்பிட்டீர்களா' என்றார். இல்லை. காலையில் சமைக்க நேரமில்லை. மாலையில் சென்று ஒரே வேளையாக சமைத்துச் சாப்பிடுவோம் என்றனர். அதிர்ந்தார் எம்.ஜி.ஆர். சென்னை திரும்பியதும் அன்றே தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சத்துணவுத் திட்டம் பிறந்தது. பெண்கள் தங்கள் குழந்தைகளை பட்டினி போடாமல் உண்ண வழிவகுத்தது
சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து, பணி பாதுகாப்பின்றி புறக்கணிக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தின் மீது முதன்முதலாக அக்கறை காட்டிவர் புரட்சித்தலைவர். ஒழுங்குபடுத்தப்படாத தொழிலாளர்களாக இருந்த மீனவர், நெசவாளர், பனையேறுவோர், கட்டிடத் தொழிலாளர், கை வண்டி இழுப்போர், மாட்டுவண்டி ஓட்டுவோர், பீடி சுற்றுவோர், சுமை ஏற்றி இறக்குவோர், மண் பாண்டத் தொழிலாளர்கள் என 60 வகையான தொழில் செய்துவந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களை ஒன்றிணைத்து இந்தியாவிலேயே முதன்முதலாக நல வாரியங்கள் அமைத்து, குறைந்தபட்ச ஊதியம், குடும்ப ஓய்வூதியம், திருமண உதவி, கல்வி உதவி, விபத்து நிவாரணம்,சேமிப்பு பலன் போன்ற நல உதவிகளை வழங்கி, அவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றினார் புரட்சித்தலைவர்.
முதன்முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்ததும், முதியோர்களுக்கு உதவித் தொகை கொடுக்கும் திட்டத்தைக் கொண்டுவந்ததும் புரட்சித் தலைவர்தான்.
ஜாதி, மதத்தின் பெயரால் மக்களுக்குக் கொடுமைகள் நடப்பதை அனுமதிக்கவே மாட்டார். ‘உரிமைக்குரல்’ படத்தில், ’தாழ்த்தப்பட்ட ஜாதி உயர்த்தப்பட்ட ஜாதிங்கிறது எல்லாம் இந்த கேடுகெட்ட சமுதாயம் செய்து வைத்த கொடுமை, என்னைப் பொறுத்தவரை எல்லோரும் ஒரே ஜாதிதான், அது மனித ஜாதி’ என்று வசனம் பேசுவார்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 49 சதவிகிதம் என்று இருந்த இடஒதுக்கீட்டை 68 சதவிகிதம் என உயர்த்தி சமூகநீதியை நிலைநாட்டியதும், புரட்சித்தலைவர்தான்.
திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றாலும், புரட்சித்தலைவர் தன்னை ஆன்மிக அரசியல்வாதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அன்னை மூகாம்பிகையை தன்னுடைய அன்னை என்றார்.
அதேநேரம் அனைத்து மதங்களையும் சமமாகவே மதித்தார். நாகூர் தர்கா அருகே ஒரு கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர்., ‘நான் கைலி கட்டாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ்தவன், திருநீறு அணியாத இந்து...’ என்று உணர்வுபூர்வமாகப் பேசினார்.
புரட்சித்தலைவர் நோய்வாய்ப்பட்ட தருணத்தில், கட்சி பேதமின்றி, ஜாதி, மத பேதமின்றி அனைத்து மத மக்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
‘இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளி விளக்கு’ - என்ற பாடல் தமிழகம் முழுக்க எதிரொலித்தது.
மக்களின் நம்பிக்கை ஜெயிக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் நோயில் இருந்து புரட்சித்தலைவர் எழுந்துவந்த காரணத்தால், தமிழகத்தில் ஆன்மிகம் மீண்டும் புதிய எழுச்சி கண்டது.
’நாடோடி மன்னன்’ படத்தில், ’வேலை செய்ய முடியாத வயோதிகர்கள், கூன், குருடு, முடம் போன்றவர்களின் வாழ்வுக்காகவும் வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க தொழில் நிலையங்கள் அமைக்கவும், பள்ளிகள் கட்டுவதற்காகவும் என்னுடைய சொந்த சொத்தில் பாதியை அளிக்கிறேன் என்று சொன்னதுபோலவே தன்னுடைய சொத்துக்களை அனாதை ஆசிரமத்துக்கும் உயில் எழுதி வைத்தார்.
கொடுத்து சிவந்த கரம்
நடிகர், முதல்வர் என்பதைவிட, புரட்சித்தலைவர் என்றாலே ஞாபகத்துக்கு வருவது, அவரது வள்ளல் தன்மைதான்.
’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’ – என்று ‘பணம் படைத்தவன்’ படத்தில் பாடியது போலவே தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.
கண்டியில் பிறந்த எம்.ஜி.ஆர். தமிழகத்தின் கும்பகோணத்திற்கு வந்து வயிற்றுப் பிழைப்புக்காக நடிக்கத் தொடங்கிய காலத்திலேயே, சக கலைஞர்களுக்கு உதவி செய்யத் தொடங்கினார். கொடைத்தன்மை அவரது ரத்தத்திலே ஊறிப்போயிருந்தது.
இடது கை கொடுப்பது, வலது கைக்கு தெரியக்கூடாது என்று நினைக்கக் கூடியவர். அதேபோன்று நேரம், இடம் பார்க்காமல் மனதிற்குத் தோன்றியதும் அள்ளிக் கொடுப்பவர். அதனால்தான், ‘அடுப்பில் உலை வைத்துவிட்டு எம்.ஜி.ஆர். வீட்டுக்கு நம்பிக்கையுடன் செல்லலாம். உலை கொதிக்கும் முன்பு உதவி கிடைத்துவிடும்’ என்று பேசினார்கள். அது உண்மையும்தான்.
புரட்சித் தலைவரின் வள்ளல் தன்மைக்கு எத்தனையோ சான்றுகளை சொல்லமுடியும். அவை எல்லாவற்றையும் அடுக்குவதைவிட, 1961ம் ஆண்டு ரிக்ஷா தொழிலாளர்களுக்கு புரட்சித்தலைவர் மழைக்கோட்டு வழங்கும் விழாவில் பேரறிஞர் அண்ணா பேசியது மட்டுமே போதுமானது.
‘புயல் மழையால் – சேதம் வரும் இடங்களில் எல்லாம், எங்கள் புரட்சி நடிகர் உதவியினைக் காணலாம். தன்னைத் தேடி வருகிறவரின் கண்ணீரைத் துடைக்கிறவன் வள்ளல். தன்னைத் தேடி வருகிறவரின் துன்பத்தைப் போக்குகிறவன் வள்ளல். ஆனால், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அப்படியல்ல, சமுதாயத்தில் துன்பப்படுபவன் எங்கே இருக்கிறான் என்று தேடிப் போய், அவன் கண்ணீரைத் துடைத்துக் கைகொடுக்கிற எம்.ஜி.ஆர். வள்ளலுக்கெல்லாம் வள்ளல்’ என்று பாராட்டினார் பேரறிஞர் அண்ணா.
இப்படியொரு தனிமனிதப் பண்பு, கலைத்திறன், நிர்வாகத்திறன், ஏழைகளிடம் கனிவு, ஊழல் இல்லாத மக்களாட்சி, தனக்கென சொத்து சேர்க்காத குணம், வள்ளல் தன்மை, அறம் சார்ந்த வாழ்க்கை, உழைத்து சம்பாதித்த சொத்தை மக்களுக்கு எழுதிக் கொடுத்தது போன்ற அரிய பண்புகளை ஒரு சாதாரண மனிதனிடம் காண இயலாது என்பதால்தான், புரட்சித் தலைவரை அவதார புருஷர் என்கிறேன்.
காவிய வள்ளல் கர்ணன், கடையெழு வள்ளல்கள் போன்று காலத்தை வென்ற கலியுக வள்ளல் புரட்சித் தலைவர் எனும் அவதார புருஷர் அவதரித்த தினம் இன்று.
திருக்குறள் முக்காலத்துக்கும் ஏற்ற நூலாக எப்படி திகழ்கிறதோ, அதுபோன்று புரட்சித் தலைவரின் புகழ் எக்காலமும் இம்மண்ணில் வாழும்..........
-
புரட்சித்தலைவர்
மன்னாதி மன்னன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் ஆசியுடன் நண்பர்கள் அனைவருக்கும் இனிய வியாழக்கிழமை
காலை வணக்கம்...
புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடித்த படங்களில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காவியங்களை பற்றிய தகவல்களை பகிர்ந்து வரும் இந்த தொடர் பதிவில் இன்று புரட்சி தலைவர் நடித்த மெகா ஹிட் காவியமான தலைவரின் 40 வது திரைப்படமான
#"மகாதேவி" படம் பற்றி காண்போம்..
மகாதேவி 1957 ஆம் ஆண்டு சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கிய மற்றும் கவிஞர் கண்ணதாசன் கதை வசனம் எழுதிய திரைப்படம்.
இது ஆர். ஜி. கட்காரி எழுதிய
#புண்ய_பிரபாவ்_நாவலை அடிப்படையாகக் கொண்டது.
வெளி வந்த தேதி
22 நவம்பர் 1957
மகாதேவி சாளுக்கிய நாட்டு (சாவித்ரி) ஒ இளவரசி, அவரின் தந்தை ராஜா போரில் தோற்கடிக்கப்படுகிறார். அதற்கு சோழ நாட்டின் தளபதி வல்லவன் தலைமை தாங்குகிறார் இன்னொரு தளபதி கருணாகரனும் போர் புரிகிறார்..
கருணாகரன் சாளுக்கிய மன்னர் மற்றும் அவரது மகள் மகாதேவியை கைது செய்ய செல்லும் போது மகாதேவியின் அழகை கண்டு அவள் மீது காதல் கொண்டு அவளை மனைவியாக அடைய ஆசை கொள்கிறார் அதை மகாதேவி நிராகரித்து விடுகிறார்...
இதில் கோபம் கொண்ட கருணாகரன் அவர்களை சோழ நாட்டிற்கு கைது செய்து கொண்டு சென்று மன்னர் முன்பு போர் குற்றவாளியாக அரசவையில் நிற்க வைக்க படுகிறார்..
அங்கு நடைபெறும் விசாரணையில் மகாதேவி மற்றும் அவரின் தந்தை விடுவிக்க பட்டு சோழ மன்னன் தனது மரியாதைக்குரிய விருந்தினராக தங்குவதற்கு அழைக்கப்படுகிறார். சோழமன்னருக்கு வளர்ப்பு மகள் மங்கம்மா (எம். என். ராஜம்) மற்றும் ஒரு மகன் ('மாஸ்டர்' முரளி) உள்ளனர். அவரது மூத்த தளபதி கருணாகரன் (பி.எஸ். வீரப்பா) . மகாதேவியை அடைவதற்கு பல்வேறு தீய திட்டங்களைத் தீட்டுகிறான், ஆனால் இதற்கிடையில், மகாதேவி இன்னொரு தளபதி வல்லவனை (எம்.ஜி.ஆர்) காதலிக்கிறாள்...
மகாதேவியை சோழ நாட்டின் மருமகளாக வர வேண்டும் என்று சாளுக்கிய மன்னரை கேட்டு கொள்கிறார்.. அவரும் அதற்கு ஒப்பு கொள்ள வீரத்தில் சிறந்தவர் அவரை மணக்கலாம் என்று ஒரு போட்டி வைக்கின்றனர்..
அதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கிறார் மன்னர் போட்டி போட பலர் கலந்து கொள்ள வருகின்றனர் ஆனால் கருணாகரன் வருவதால் அனைவரும் போட்டியில் இருந்து விலக்குகின்றனர் கருணாகரன் நண்பர் ஒருவரை தவிர இருவர் மட்டுமே போட்டி போட அதில் கருணாகரன் வெற்றி பெற்று விடுகின்றான்.. மகாதேவியை மனம் முடிக்க வேண்டும் என்று மன்னர் கூற அதை மகாதேவி ஏற்க மறுக்கிறார் வீரர்கள் நிறைந்த இந்த சோழ நாட்டில் ஒருவர் மட்டும் தான் வீரரா வேறு யாரும் இல்லையா என்றும் வேண்டும் என்றால் என்னுடன் போட்டி போட்டு வெற்றி பெற்று மாலை அணிவிக்கட்டும் என்று மன்னரிடம் கூறுகின்றாள்...
இதனால் வல்லவன் போட்டியில் கலந்து கொண்டு கருணாகரனை வெற்றி கொள்கிறார் மகாதேவி வல்லவனுக்கு திருமணம் என்று முடிவாகின்றது..
ஆனால் கருணாகரனால் மகாதேவியைமறக்க முடியவில்லை
கருணாகரன் தனது கையாளான மாரியப்பன் (சந்திரபாபு) உதவியுடன் மகாதேவியைக் கடத்த முயற்சிக்கிறான், ஆனால் அவன் தவறுதலாக மங்கம்மாவை(எம்.என். ராஜம்) கடத்திவந்து விடுகின்றான்... இந்த விஷயம் மன்னருக்கு தெரிந்த கோபம் கொண்ட கருணாகரனை கொல்ல வேண்டும் என்று கூறுகின்றார் அவரை சமாதானம் செய்து வல்லவன் மங்கம்மாவிற்கும் கருணாகரனுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறி கருணாகரனை காப்பாற்றுகின்றார்... கருணாகரனும் தண்டனையில் இருந்து தப்பிக்க மங்கம்மாவை திருமணம் செய்து கொள்ள ஒப்பு கொண்டு அவளை திருமணம் செய்து கொள்கிறான். மகாதேவியும் வல்லவன் (எம்.ஜி.ஆர்) ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
வல்லவன், மகாதேவி தம்பதிகளுக்கு ஒரு மகனும், கருணாகரன் மங்கம்மாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறக்கின்றது...
இருந்தாலும் மகாதேவியை அடைய
தீவிரம் காட்டுகிறான் கருணாகரன்..
ஒருநாள் சூழ்ச்சி செய்து நாட்டில் விவசாய நிலங்களில் விலங்குகள் புகுந்து நாசம் செய்வதாக தவறாக தகவல் தந்து மன்னரையும் தளபதி வல்லவனையும் அரண்மனையை விட்டு வெளியேற்றுகின்றான்..
இந்த நிலையில் இளவரசன்,மகாதேவி
அவளது குழந்தை மூவரும் நந்தவனத்தில் உணவு அருந்தும் போது பாம்பை வைத்து கடிக்க வைக்கிறான் பாம்பு கடித்து இளவரசன் மயக்க நிலைக்கு செல்கிறான் அங்கு வரும் கருணாகரன் இளவரசன் குடித்த பால் குடுவையில் விஷத்தை கலந்து விட்டு வைத்தியரை வைத்து இளவரசன் இறந்ததற்க்கு மகாதேவி கொடுத்த விஷம் உள்ள பால் என்றும் இளவரசனை கொன்று விட்டால் சோழ நாட்டின் வாரிசாக மகனை பெற்ற மகாதேவி மகனை அரசாள வைக்க தான் இளவரசனை கொன்று விட்டதாக குற்றம் சுமத்தி கைது செய்து சிறையில் அடைக்கின்றான்..
இதற்கிடையில் விலங்குகள் விளைநிலங்களை சேதபடுத்தியது பற்றி அறிந்து கொள்ள சென்ற வல்லவன் ஒவ்வொரு ஊராக சென்று பார்க்க அங்குள்ளவர்கள் அப்படி ஒன்றும் இல்லை என்று கூற வல்லவனுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.. தன் படைகளுக்கு மறுநாளே அரண்மனை திரும்ப வேண்டும் என்று உத்தரவு இட்டு உறங்க செல்கின்றார் அப்போது வல்லவனை கொள்ள கருணாகரன் அனுப்பிய ஆள் வல்லவனை கொல்ல முற்படும் போது வல்லவன் வந்தவனை அடையாளம் கண்டு கொள்ள இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட அதில் வல்லவன் வெற்றி பெற்று கொல்ல வந்தவனை மன்னித்து விட அவன் வல்லவன் நற்குணத்தை கண்டு மன்னிப்பு கேட்டு கருணாகரன் செய்த சதிகள் பற்றி சொல்லி விடுகின்றான்
வல்லவன் அரண்மனை வந்து கருணாகரனிடம் அவன் செய்த சூழ்ச்சி பற்றி வாதிடுகின்றார் அந்த நேரத்தில் ஏற்படும் சண்டையில் கருணாகரனையும் அவன் ஆட்களையும் தாக்கி விட்டு இளவரசனின் உடலையும் தூக்கி கொண்டு தப்பித்து விடுகின்றார் பின்பு அவருக்கு நம்பிக்கையான வைத்தியரிடம் செல்ல அவர் காயம் அடைந்த வல்லவனுக்கு சிகிச்சை அளித்து மற்றும் இளவரசனுக்கு சிறிது உயிர் இருப்பதாகவும் கூறி அவனையும் காப்பாற்றுகின்றார்..
பிறகு மாறுவேடத்தில் இளவரசன் உயிருடன் உள்ளார் அவர் இறக்கவில்லை என்ற செய்தியை நாட்டு மக்களுக்கு தாயத்து விற்கும் விற்பனையாளராக சென்று செய்தியை தெரிவிக்க கருணாகரன் ஆட்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்ய பட்டு கருணாகரனின் ரகசிய இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு சிறை வைக்க படுகிறார்..
மகாதேவி மீது கருணாகரன் கொண்டுள்ள காமம் பற்றியும் அதனால் தான் அவள் மீது பழி சுமத்தி சிறையில் அடைக்கப்பட்டார் என்பதை பற்றியும் பணிப்பெண் மூலம் அறிந்து கொள்கிறாள் மங்கம்மா இருந்தாலும் அவள் தன் கணவன் கருணாகரன் மீது கொண்டுள்ள காதலால் நம்ப மறுக்கின்றாள்.. ஆனால் கருணாகரன் தூக்கத்தில் மகாதேவி மீது கொண்டுள்ள ஆசை பற்றி உளறி விடுகின்றான் இதை மங்கம்மா கேட்டு அவனிடம் சண்டை போடுகிறாள்..
அவளையும் சிறையில் அடைத்து விடுகின்றான் கருணாகரன்..
இதன் பிறகு மங்கம்மா (எம்.என். ராஜம்), மகாதேவியை ஆதரிக்கிறார், கருணாகரனிடமிருந்து பாதுகாக்க
முயற்சி மேற்கொள்கிறார்..
ஆசைக்கு இணங்க மறுக்கும் மகாதேவியின் குழந்தையை கொல்ல
முற்படும் கருணாகரனின் திட்டங்களை அறிந்த மங்கம்மா, தனது குழந்தையை மஹாதேவி குழந்தைக்கு பதிலாக மாற்றி, தன்னுடைய குழந்தையை மாற்றி வைக்கிறாள்..
கருணாகரன் தனது சொந்த குழந்தையை கொன்று விடுகின்றான்...
பிறகு வல்லவனுக்கும் கருணாகரனுக்கும் நடக்கும் சண்டையில் கருணாகரன் மனைவி மங்கம்மாவும் பலத்த காயம் அடைகிறாள் தனது கணவனை கொல்ல வேண்டாம் என்று வல்லவனை கேட்கிறாள் மங்கம்மா... இறந்தது வல்லவன் குழந்தை அல்ல அது தன்னுடைய சொந்த குழந்தை தான் என்று உண்மையை உணரும்போது,
கருணாகரன் மனம் திருந்துகின்றான்
வல்லவனுக்கு மன்னித்து விடுகிறார்..
ஆனால் மங்கம்மா இறந்ததும் இதெல்லாம் தன்னால் தான் ஏற்பட்டது என்று சொல்லி தன் உயிரை மாய்த்து கொள்கிறான் கருணாகரன்...
ஜெனரல் வல்லவனாக
எம்.ஜி.ஆர்
மகாதேவியாக
சாவித்ரி
ஜெனரல் கருணாகரனாக
பி.எஸ்.வீரப்பா
இளவரசி மங்கம்மாவாக
எம். என். ராஜம்
மரியப்பனாக
ஜே. பி. சந்திரபாபு
வசந்தாவாக
டி.பி.முத்துலட்சுமி
தளபதியாக
ஓ. ஏ. கே. தேவர்
முத்துபுலவனாக
ஏ.கருணாநிதி
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்தனர்.
பாடல்
தஞ்சை என்.ராமையா தாஸ், பட்டுகோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன்,ஏ.மருதகாசி.
பட்டுக்கோட்டையார் எழுதிய
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா..
தாயத்து தாயத்து பாடல்கள் சாக வரம் பெற்ற கருத்து செறிந்த பாடல்கள்..
பி.எஸ். வீரப்பா கூறிய
"மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி" என்ற உரையாடல் மிகவும் பிரபலமானது. அது போல மங்கம்மா முதல் இரவில் அத்தான் என்று சொல்லும் போது உன் இந்த
"அத்தான் என்ற இந்த சத்தான வார்த்தையில் இந்த கருணாகரன் செத்தான் " என்று சொல்லும் வசனமும் இன்றும் விண்ணத்திர கைகள் தட்டும் என்றால் அது மிகையாகாது...
அன்புடன்
படப்பை
ஆர். டி. பாபு......... Skt...
-
நடிக* மன்னன் எம்.ஜி.ஆர்.திரைக்காவியங்கள் தனியார் தொலைக்காட்சிகளில்*
ஒளிபரப்பான பட்டியல் (01/03/21* முதல் 10/03/21* வரை )
-------------------------------------------------------------------------------------------------------------------------------
01/03/21 - சன் லைஃப் - காலை 11 மணி - நீதிக்கு தலை வணங்கு*
* * * * * * * *சித்திரம் -காலை 11 மணி /மாலை 6மணி - அபிமன்யு*
02/03/21-முரசு -மதியம் 12 மணி -/இரவு 7 மணி - அலிபாபாவும் 40 திருடர்களும்*
03/03/21-மெகா டிவி -அதிகாலை 1 மணி - குடியிருந்த கோயில்*
* * * * * * * *புதுயுகம் -பிற்பகல் 1.30 மணி - சங்கே முழங்கு*
* * * * * * * *சன் லைஃப் -பிற்பகல் 3 மணி - நான் ஏன் பிறந்தேன்*
4/03/21-வேந்தர் டிவி -காலை 10 மணி -தாயின் மடியில்*
* * * * * * * *-சன் லைஃப் -காலை 11 மணி - சந்திரோதயம்*
* * * * * * * *சன் லைஃப் --பிற்பகல் 3 மணி - எங்க வீட்டு பிள்ளை*
* * * * * * *ஷாலினி - இரவு* 9 மணி - தேர்த்திருவிழா*
* * * * * * * ராஜ் டிஜிட்டல் - இரவு 10 மணி - நல்ல நேரம்*
05/03/21-வேல் டிவி -காலை 10.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்*
* * * * * * * * சன் லைஃப் - காலை 11 மணி - ரிக் ஷாக் காரன்*
* * * * * * * *ஷாலினி - இரவு 9 மணி - தர்மம் தலை காக்கும்*
* * * * * * * மீனாட்சி - இரவு 9 மணி - நல்ல நேரம்*
* * * * * * *தமிழ் ப்ளஸ் -இரவு 10 மணி - ஆயிரத்தில் ஒருவன்*
06/03/21-முரசு மதியம் 12 மணி /இரவு 7 மணி - தாயின் மடியில்*
* * * * * * * ராஜ் டிஜிடல் -இரவு 7 மணி - பறக்கும் பாவை*
* * * * * * *மீனாட்சி - இரவு 9 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * *ஷாலினி -இரவு 10 மணி - தனிப்பிறவி*
07/03/21- மெகா டிவி -மதியம் 12 மணி - உரிமைக்குரல்*
* * * * * * * மெகா 24- பிற்பகல் 2.30 மணி - முகராசி*
* * * * * * *ஷாலினி - இரவு 10 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * *ராஜ் டிஜிட்டல் - இரவு 10.30 மணி - ரகசிய போலீஸ் 115
08/03/21- ராஜ் டிஜிட்டல் - பிற்பகல் 12.30 மணி - தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * * சன் லைஃப் - பிற்பகல் 3 மணி - புதிய பூமி*
09/03/21- சன் லைஃப்* காலை 11 மணி - குடியிருந்த கோயில்*
* * * * * * * *முரசு மதியம் 12 மணி /இரவு* 7 மணி - நல்ல நேரம்** * * **
* * * * * * * ராஜ் டிஜிட்டல் -பிற்பகல் 12.30 மணி - தாயை காத்த தனயன்*
* * * * * * *விஷ்ணு டிவி - பிற்பகல் 2 மணி - எங்க வீட்டு பிள்ளை*
10/3/21- சன் லைஃப் - இரவு 10 மணி - நம் நாடு*
* * * * * * *மெகா 24- பிற்பகல் 2.30 மணி - தாயின் மடியில்*
* * * * * * வேந்தர் டிவி - பிற்பகல் 1.30 மணி - நல்ல நேரம்*
* * * * * * புதுயுகம் - பிற்பகல் 1.30 மணி -வேட்டைக்காரன்*
* * * * * * வேந்தர் டிவி - இரவு 10.30 மணி -தாயின் மடியில்*
-
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் மறு வெளியீடு தொடர்ச்சி* .........
(12/03/21 முதல் )
--------------------------------------------------------------------------------------------------------------------
கோவை சண்முகா - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள்*
தூத்துக்குடி சத்யா - நம் நாடு - தினசரி 3 காட்சிகள்*
தகவல் உதவி : திரு.வி. ராஜா , நெல்லை .
-
“மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.!”
- என்.எஸ்.கே.நல்லதம்பி
*
எஸ்.பி.அண்ணாமலை
ஜனவரி 17ஆம் நாள் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் புகழுடைய மக்கள் திலகத்தின் பிறந்த நாள். இந்நாளில் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற மக்கள் திலகத்தின் இனிமையான நினைவுகளை பெருமையோடு பகிர்ந்து கொள்கிறார் கலைவாணரின் புதல்வர் என்.எஸ்.கே.நல்லதம்பி.
மக்கள் திலகத்திற்கு கலைவாணருக்கும் இடையே நெருங்கிய உறவு தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்தது. 1935 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் தான் தமிழில் வெளிவந்த படங்கள் தயாராகின. அதில் பலவற்றை இயக்கியவர் எல்லிஸ் ஆர்.டங்கன்.
நாடக நடிகர்கள் தான் தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் நடிகர்களாக முக்கியத்துவம் பெற்றிருந்தனர். நடிகர்களுக்கான வீடுகள் ஸ்டூடியோ வளாகத்திலேயே இருந்தன. கலைவாணர், பி.யு.சின்னப்பா, டி.எஸ்.பாலையா, எம்.ஜி.ஆர். போன்ற கலைஞர்கள் தங்கியிருந்து படப்பிடிப்புகளில் பங்கேற்றனர்.
கலைவாணர் மீது ஈர்ப்பும் பாசமும் மக்கள் திலகத்திற்கு அந்த காலகட்டத்திலேயே உருவாகியது என்று குறிப்பிடலாம். கலைவாணரும் மதுரம் அம்மாவும் தங்களுடைய நகைச்சுவை நடிப்பாலும், சிந்தனைக்குரிய கருத்துக்களாலும், பாடல்களாலும் புகழ்பெறத் தொடங்கிய காலகட்டம் அது.
தன்னுடைய நண்பர், ஆலோசகர், வழிகாட்டி என்ற வகையில் மக்கள் திலகம் கலைவாணரிடம் பெருமதிப்பு கொண்டிருந்தார். “எனக்குப் பிரச்சனை வரும்போதெல்லாம் நான் தேடிச் சென்று ஆலோசனை பெற்றது கலைவாணர் இடம் தான்!” என்று மக்கள் திலகம் கூறியுள்ளார்.
கலைவாணரும் எம்.ஜி.ஆரால் பெரிதும் கவரப்பட்டார். கலைத்துறைக்கு அப்பாற்பட்டு இருவருக்குமிடையே இருந்த புரிதல் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டது.
கலைவாணர் சினிமாவில் கூறும் கருத்துக்களும் பாடல் வரிகள் மற்றும் காட்சி அமைப்புகளும் மக்கள் மனதில் இடம் பெற்றிருப்பதைக் கூர்ந்து கவனித்த மக்கள் திலகம், “வெற்றி பெற்ற இந்த அணுகுமுறையைத் தம் வாழ்நாள் முழுவதும் திரைப்படங்களிலும் பொது வாழ்விலும் கடைப்பிடிப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“நடிகர்களாகிய நமக்கு வரும் பணம் என்பது தமிழ்நாட்டு ரசிகர்களிடம் இருந்து வருவது. அது திரும்பவும் மக்களுக்கே சென்றடைய வேண்டும்” என்பது கலைவாணரின் கருத்து. அவர் கடைபிடித்த இந்தக் கொள்கை தன்னை வழிநடத்தியது என்று குறிப்பிட்டுள்ளார்.
1957 ஆம் ஆண்டில் கலைவாணர் மறைந்த பிறகு, அவரது குடும்பத்தினர் எங்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட புரட்சித் தலைவர் எங்களுடைய கல்வி, திருமணம் என்று எல்லா நிலைகளிலும் இன்றியமையாத பங்காற்றினார்.
நான் பள்ளிப் படிப்பு முடித்து மைசூர் மாநிலத்தில் உள்ள மாண்டியாவில் பொரியியல் படிப்பதற்கு தேவையான கேபிடேஷன் பீஸ் ரூபாய் 3000 கட்டி என்னுடைய பொறியியல் கனவை நனவாக்கினார் பொன்மனச்செம்மல்.
1967 – ல் அவர் கொடுத்து உதவிய அந்தத் தொகை, தற்போது பல லட்சங்களுக்கு சமமாகும். அழியாத கல்விச் செல்வத்தை எனக்கு தந்தவர் வள்ளல் எம்.ஜி.ஆர்.
“செல்வம் நிலையானதல்ல. ஆனால், கல்வி நிலையானது!” என்று நான் கல்லூரிக்குச் செல்லும்போது வாழ்த்தியது இன்றளவும் மறக்க முடியாதது. எங்கள் குடும்பத்தின் மீது மக்கள் திலகம் காட்டிய பரிவு, பாசம் என்பது, காலம் கலைவாணர் குடும்பத்துக்கு அளித்த கொடை என்றே தோன்றுகிறது.
1976-ல் எனது திருமணமும் மக்கள் திலகத்தாலேயே நடத்தி வைக்கப்பட்டது. அப்போது வாழ்த்திப் பேசியபோது அவர் குறிப்பிட்டார், “மணமக்களாகிய உங்களை ‘அவர்களைப் போல இருங்கள்… இவர்களைப் போல இருங்கள்’ என்று வாழ்த்துவதை விட, நல்ல மனிதர்களாக வாழுங்கள் என்று வாழ்த்தவே விரும்புகிறேன். அதுவே வாழ்க்கையின் வெற்றிக்கான பாதையாகும்!” என்றார். அவருடைய வாழ்த்துரை என்றும் என் மனதில் உள்ளது.
நாகர்கோவிலில் கலைவாணர் கட்டிய மதுர வனம் இல்லம், 1959-ல் ஏலத்துக்கு வந்தது. அந்த வீட்டிற்கான பணத்தைக் கட்டி, வீட்டை எங்கள் குடும்பத்திற்கு மீட்டுத் தந்த வள்ளல் பொன்மனச்செம்மல்.
சென்னை வாலாஜா சாலையில் இருந்த பாலர் அரங்கம் கட்டடம் 1971-ல் புதுப்பிக்கப்பட்டது. அதில் முதல் நிகழ்ச்சியாக என்னுடைய சகோதரியின் திருமணத்தை நடத்தி வைத்தார் புரட்சித் தலைவர். திருமணத்தில் அவர் பேசும்போது, “இந்த அரங்கம் கலைவாணர் பெயர் தாங்கி பெருமை சேர்க்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அவர்களால் அப்போதே ‘கலைவாணர் அரங்கம்’ என்று பெயரிடப்பட்டது. புரட்சித் தலைவி அம்மா அவர்களால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, தற்போது புதுப்பொலிவுடன் திகழும் கலைவாணர் அரங்கம், காலம் முழுவதும் என் தந்தையாரின் பெயர் தாங்கி நினைவுச் சின்னமாகத் திகழ்வது எங்கள் குடும்பத்திற்கு பெருமை தரக்கூடியதாகும்.
மேலும் பெருமை தரக் கூடிய செயல், கலைவாணர் பிறந்த நாகர்கோவிலில் 1967-ல் மக்கள் திலகம் தன்னுடைய சொந்தச் செலவில் கலைவாணரின் முழு உருவச் சிலையை நிறுவியது புரட்சித் தலைவரின் பேருள்ளத்தைக் காட்டுகிறது.
ஏழைப்பங்காளனாக, வள்ளலாக, கருணையுள்ளம் கொண்டவரான பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழ் என்றென்றும் மக்கள் மனதில் பசுமரத்தாணி போல் இடம் பெற்றிருக்கும்.
நன்றி: 27.01.2021 தேதியிட்ட குமுதம் இதழில் வெளிவந்த கட்டுரை....Png
-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு விரால்மீன் குழம்பு பிடித்தமான உணவாம். இவரது வீட்டுக்குத் தேவையான மீன்களை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர்தான் அவரது வீட்டுக்குப் போய் கொடுத்து விட்டு வருவார்களாம். இன்றைக்கும் அந்த மீன் வியாபாரியின் குடும்பத்தினர் சைதாப்பேட்டையில் மீன் விற்பனைக் கடை நடத்தி வருகின்றனர். அவரது கடையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் எடுத்துக்கொண்ட போட்டோவும் இருக்கிறது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அந்த புகைப்படத்தை ஆர்வத்துடன் பார்த்து அதைப் பற்றி கேட்டால் புரட்சித்தலைவர் உடனான நினைவுகளை ஆர்வத்துடன் கூறுகிறார் அந்த மீனவர். உணவளிக்கும் வள்ளல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். விஷயத்தில் விருந்து என்பதில் ஒரு தனித்தன்மை காணப்படும். அவரது வீட்டுக்கு போகிறவர்கள் சாப்பிடாமல் வரமுடியாது. அவருடன் எந்த ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்பும் விருந்து கொடுப்பது அவர் பழக்கம். விரால் மீன்குழம்பு குறிப்பாக கேரளா பாணியில் சமைக்கப்பட்ட விரால் மீன் குழம்பு மற்றும் வஞ்சிரம் கருவாடு எம்.ஜி.ஆர் வீட்டு விருந்தில் நிச்சயம் இடம்பெறும் என்கின்றனர் அவரது வீட்டு உணவை ருசித்தவர்கள். எம்.ஜி.ஆருக்கு மீன் கொடுத்த வியாபாரி எம்.ஜி.ஆர். வீட்டு மீன் சமையலுக்கு தொடர்ந்து மீன்கள் அளித்து வந்த வியாபாரிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்.கே.சேகர் என்பவர் இன்றைக்கும் சைதாப்பேட்டையில் மீன் வியாபராம் செய்து வருகிறார். இவரது கடையின் மிகப்பெரிய கவர்ச்சி அங்கு மாட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். படம் என்கிறார் வாடிக்கையாளர் ஒருவர். அந்தப் புகைப்படத்தில் சேகரின் தந்தையார், கண்ணன் மற்றும் தாயார் ஆகியோர் எம்.ஜி.ஆருடன் இருக்கின்றனர். எம்.ஜி.ஆருக்கு பிடித்த மீன் எம்.ஜி.ஆர் உடன் தனது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட நட்பு, பாசம் பற்றி நினைவு கூறும் சேகர், இப்போது மீன் கடையை சகோதரி தனமுடன் சேர்ந்து நடத்தி வருகிறார். "நாங்கள் எம்.ஜி.ஆர்-க்கு 1967ஆம் ஆண்டு முதல் மீன்கள் சப்ளை செய்து வந்தோம். நான் விரால் மீன் எடுத்துச் சென்று அவருக்காக அதனை சுத்தம் செய்து கொடுப்பேன். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு "என்னுடைய தந்தையை எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார். 1977 சட்டப்பேரவைத் தேர்தல்களில் என் தந்தையை சைதாப்பேட்டை தொகுதிக்கு நிறுத்தினார். எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்தாலும் என் தந்தை 3000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி தழுவினார்". சகோதரியின் திருமண செலவு தேர்தலில் போட்டியிடுவதற்காக வீட்டைத் தன் தந்தை அடமானம் வைத்திருந்தபோது எம்.ஜி.ஆர் மீட்டுக் கொடுத்துள்ளார். அதேபோல் சகோதரி பாக்கியலட்சுமியின் திருமண செலவுகளை எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொண்டார். செவ்வாய்கிழமைகளில் சைவம் செவ்வாய்க்கிழமைகளில் புரட்சித்தலைவர் இறைச்சி உணவு எடுத்துக் கொள்ள மாட்டார்" என்று கூறிய சேகர் எம்.ஜி.ஆரை ‘பெரியப்பா' என்றுதான் அழைப்பாராம். பழைய மீன் குழம்பு முதல் நாள் சமைத்த மீன் குழம்பை மறுநாள் காலை உணவில் எடுத்துக்கொள்வதுதான் எம்.ஜி.ஆருக்குப் பிடிக்கும் என்று சேகரின் சகோதரி தனம் நினைவு கூர்ந்தார். அமெரிக்காவில் மருத்துவம் நான் இருதய நோயால் அவதிப்பட்டபோது அமெரிக்காவில் மருத்துவம் செய்து விடலாம் என்று எம்.ஜி.ஆர் உறுதியளித்தார். ஆனால் 1987ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தார். அதாவது எங்கள் தந்தை இறந்து 11 நாட்களுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். மறைந்தார்" என்று கூறினார் தனம். பொங்கல் நாளில் சந்திப்பு எம்.ஜி.ஆர்-உடன் ஒவ்வொரு பொங்கலின் போதும் சந்திப்பு மேற்கொண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொள்வோம். இன்றும் நல்லபடியாக மீன் விற்பனை செய்து வாழ்ந்து வருகிறோம், ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவுகளை மறக்கமுடியாது" என்று சேகர் கூறியுள்ளார்.
Read more at: https://tamil.oneindia.com/news/tami...19-208965.html..........