-
30.06.1977
மறக்க முடியாத நாள். மக்கள் தம் மனங்களை ஆண்ட மக்கள் திலகம் மாநிலத்தை ஆளும் வாய்ப்பு பெற்ற நாள். மகுடம் தரிக்காத மன்னவனாக நம் மனங்களைக் கொள்ளைகொண்ட அந்தக் கோமகன் கோட்டையை வெற்றி கொண்டு கோலோச்சிய நாள். மூன்று முறை தொடர்ந்து தமிழகத்தை ஆண்ட ஒரே முதலமைச்சர் நம் மக்கள் திலகம் மட்டும் தான் என்பதில் நமக்கெல்லாம் எல்லையில்லா இன்பம். அரசியல் என்பது மக்களுக்காக என்பதை உணர்ந்து ஆட்சி செய்த உன்னதத் தலைவன் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள். மக்கள் தம் மனக்கவலைகளை மறந்து , அடிப்படை தேவைகள் யாவும் கிடைக்கப் பெற்று 10 ஆண்டுகள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அவர் ஆட்சிக்காலம் முடியும் வரை அரிசி விலை , பேருந்துக் கட்டணம், பால் விலை, மின்சாரக் கட்டணம் போன்ற எல்லாவற்றிலும் தனிக்கவனம் செலுத்தி அவற்றின் விலை உயர்வு மக்களைப் பாதிக்காமல் பார்த்துக் கொண்டார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற மறைமொழிக்கேற்ப நல்லாட்சி நடத்தினார். அவர் இருக்கும் போது அவரைத் தூற்றிய பத்திரிக்கைகள் கூட பின்னாளில் அவர் இப்படி எல்லாம் செய்து திறமையாக செயல்பட்டார் என்று போற்றுகின்றன. அவர் காட்டிய வழியைப் பின்பற்றுமாறு பின்னாள் அரசுகளுக்கு வழிகாட்டின. அந்நாள் மீண்டும் வந்திடாதா என்ற ஏக்கத்தை நம்மிடையே ஏற்படுத்துகிறது இந் நாள் நினைவு.
-
பணம் படைத்தவன் படத்தில் தலைவர் விளையாட்டு வீரராக கல்கத்தாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்..அந்த போட்டிகளில் ஒரு உண்மையான விளையாட்டு வீரராகவே வாழ்ந்திருக்கிறார்..குண்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் ஓட்ட பந்தயம் ஆகிய விளையாட்டுகளை கற்றறிந்து செய்திருக்கிறார்..பணம் படைத்தவன் படத்தில் இடம் பெற்ற காட்சிகளில் அது நன்றாகவே தெரிகிறது..நமது இதய தெய்வம் அவர்கள் இது போன்ற காட்சிகள் வரும்போது அந்த விளையாட்டுகளை திறம்பட கற்று அதன் பிறகே நடித்திருக்கிறார்..பளு தூக்குதல், மல்யுத்தம், சிலம்பம், மான்கொம்பு சண்டை, கத்தி சண்டை, கோல்ப், பேட்மிண்டன், காளை சண்டை, சிங்கம், புலி சண்டை, ரேக்ளா ரேஸ் ஆகியவற்றை முறையாக கற்ற பிறகே நடித்திருக்கிறார்..ஏதோ காசு கொடுத்தார்கள்..அந்த உபகரணங்களை கையில் வைத்தால் போதும் என்று இல்லாமல் அதை உண்மையாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் அதை கற்று செய்த நம் தலைவரின் திறமையை என்னவென்று சொல்வது..உடல் ஆரோக்கியத்திற்கு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி எவ்வளவு அவசியம் என்பதை விளக்கும் இந்த திரைப்படம் ஒரு பாடம் அல்லவா..
http://i40.tinypic.com/2qxsu2c.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
-
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
http://i43.tinypic.com/9rqao7.jpg
வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நெறிமுறைகளையும் விளக்கும் அற்புதமான பாடல்..மேலே சொன்ன இரண்டு வரிகளிலே வாழ்க்கையின் தத்துவமே அடங்கியிருக்கிறது..மேலும் இந்த பாடலில் தலைவர் பியானோ, பிடில், அக்கார்டியன் போன்ற இசைக்கருவிகளை வாசிக்கும் அழகே தனி. மிகவும் அற்புதமாகவும், லாவகமாகவும் அக்கருவிகளை வாசித்துக்கொண்டே அவர் ஆடும் நடன அசைவுகள் நம்மை கொள்ளைகொள்கிறது.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
-
-
-
மிகைப்படுத்தப்படாத இயற்கை நடிப்பில்...
http://i42.tinypic.com/2z553iw.jpg
-
-
Quote:
Originally Posted by
kaliaperumal vinayagam
ஐயோ பாவம் !! இயற்கையின் எத்தனையோ கோளாறுகளில் இப்படியும் ஒன்று !
திரு கலியபெருமாள் அவர்களே ...
உங்களுடைய தூண்டுதல் முயற்சி படுதோல்வி அடைந்ததற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
உங்களுக்காகவே மக்கள் திலகம் கண் போன போக்கிலே கால் போகலாமா என்ற பாடலில் ஒரு வரியை பாடியிருப்பார்....
"திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்" என்று...!
இதற்க்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல ?
Better luck next time !!!