-
எம்ஜிஆர் இல்லம்
http://i60.tinypic.com/2ijkf9s.jpg
நண்பனின் ஹோண்டா அமேஸ் காரை ஓட்டிப் பார்க்க என்று ஆரம்பித்தது ஒரு சிறு பயணத்திட்டமாக மாறியது. மூன்று நண்பர்கள் காலை கிளம்பி வழியில் சிற்றுண்டி முடித்து பூண்டி நீர்த்தேக்கத்தை அடைந்தோம். தண்ணீர் மிகவும் குறைவாகவே இருந்தது. மரங்கள் யாரோ தீ வைத்து எரித்தவை போல் இருந்தன. வறண்டு கிடந்த பூமிக்கு தெலுங்கு கங்கை மட்டுமே சன்னமாக உயிரூட்டிக் கொண்டிருந்தது. இத்தகைய திட்டத்தை சாதகமாக்கிய எம்ஜிஆர், என்டிஆர் ஆகியோரின் நினைவு வந்தது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் இது போன்ற இன்னொரு திட்டம் சாத்தியமா என்ற கேள்வியும் வந்தது.
அப்படியான சிந்தனைக்குப் பிறகு திரும்பி வரும் வழியில் ராமாவரம் தோட்டம் கண்ணில் பட்டதும் கார் தானாக உள்ளே நுழைந்தது. என் அண்ணன் ஒரு தீவிர எம்ஜிஆர் ரசிகர். வீடு முழுக்க எம்ஜிஆர் படங்களும் பாடல்களும் நிறைந்த சூழ்நிலையில் வளர்ந்ததால் எந்த ஒரு தலைவரை விடவும் அவரைப் பற்றிய ஒரு பிரமாண்ட பிம்பம் எனக்குள் இருந்தது. அந்த வீட்டைச் சென்று பார்க்கவேண்டும் என்ற எண்ணம் சென்னை வந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்தே நிறைவேறி இருக்கிறது. அந்த வழியை ஒரு நூறு முறையாவது கடந்து சென்றிருப்பேன்.
வீடு ஒரு அருங்காட்சியமாக இருக்கும் என்ற எண்ணத்துடன் உள்ளே நுழைந்தால் அங்கே கார்கள் நின்றன, ஒருவர் செய்தித்தாள் படித்தபடி சோபாவில் அமர்ந்து இருந்தார். காவலாளி ஓடி வந்தார். காரை எடுத்து ஓரமாக நிறுத்தும்படி சொன்ன அவர் பிறகு எங்களுக்கு அங்கே இருந்த இடங்களை சுற்றிக்காட்டினார். ஜானகி எம்ஜிஆர் அங்கேதான் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக சொன்னார். அது தவிர எம்ஜிஆர், அவரது தாயார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோருக்கு சிறு நினைவிடங்கள் உள்ளன. அன்னையை வணங்காமல் எங்கும் கிளம்பமாட்டார் என்பது போன்ற தகவல்களைச் சொன்னார் பீமாராவ் என்ற பெயருடைய அந்த காவலாளி. அவர் முப்பத்தாறு வருடங்கள் இங்கேதான் இருப்பதாக சொன்னார்.
நினைவிடத்தை திநகரில் உள்ள இடத்திற்கு மாற்றி விட்டதாகவும் இப்போது வீட்டில் ஜானகி எம்ஜிஆர் அவர்களின் தம்பி பிள்ளைகள் வசிப்பதாகவும் கூறினார். எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டின் முகப்பு தாழ்வாரம் மட்டும் ஒரு பிரமாண்டமான கதவு அருகே சில இருக்கைகளுடன் காட்சிக்காக இருக்கிறது. இந்த இடம் மட்டும் நன்றாக இருக்கிறது. நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். ஜேப்பியார், ஆர் எம் வீ, உடையார் போன்றவர்கள் எங்கே எம்ஜிஆரின் அழைப்புக்குக் காத்து நிற்பார்கள் என்றும் அவர்களில் பெரும்பான்மையானோர் இன்று மிகப்பெரும் செல்வந்தர்கள் என்றும் சொன்னார் பீமாராவ். வேலையாட்கள் மூவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே இருப்பதாக சொன்னார்.
மூன்று சமையல்காரர்கள் முழுநேரம் வேலை பார்த்ததாகவும் யார் வந்தாலும் முதலில் சாப்பிட்டார்களா என்று விசாரித்து விட்டுத்தான் வந்த வேலையைப் பற்றிக் கேட்பார் என்றும் சொன்னார். அதிமுகவைச் சேர்ந்தவர்கள் நினைவுநாள் அல்லது பிறந்தநாள் சமயங்களில் வருவார்கள் என்றார். ஜெ. அங்கே வருவதில்லை எனவும் அது ஜானகி குடும்பத்தாருக்குப் பிடிக்காது எனவும் கூறினார். வேறு சில கதைகளும் சொன்னார். அதன் உண்மைத்தன்மை குறித்து எனக்கு சந்தேகம் இருப்பதால் இங்கே பகிரவில்லை.
மாடுகள் காட்டி இருந்த கொட்டகைகள் இடிந்து கிடக்கின்றன. வேலையாட்கள் தங்குவதற்கு இருந்த தனியான ஒரு சிறு கட்டிடம் பாழடைந்து கிடக்கிறது. வீட்டின் பின்புறம் விவசாய பூமியாக இருந்த இடம் இப்போது காது கேளாத குழந்தைகள் பள்ளியாக இருக்கிறது. கூட்டமாக நாய்கள் திரிகின்றன. அவரது வாகனம் நின்ற இடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. அந்த வீட்டில் கடந்த சில வருடங்களாக எந்த சீரமைப்புப் பணிகளும் நடந்தனவா என்று தெரியவில்லை.
http://i58.tinypic.com/ixuz9d.jpg
அங்கே எம்ஜிஆர் தனது திரைப்படத் தயாரிப்புகளுக்கு வாங்கி உபயோகித்த காமெரா டிராலி புழுதி படிந்து நிற்கிறது. அதில் அவர் பெயரும் எழுதப்பட்டிருக்கிறது. அதை எடுத்துச் சென்று பெயிண்ட் அடித்து குறைந்தபட்சம் எங்காவது காட்சிக்கு வைக்கலாம். சார்லஸ் டிக்கன்ஸ் அமர்ந்து எழுதிய மேசை ஒன்று 35 லட்சம் ரூபாய்களுக்கு 2008ல் ஏலம் போனதாகப் படித்தேன். அப்படியாவது வீட்டைச் சீரமைக்க ஒரு வழி கிடைக்குமே.
தமிழகத்தின் திரையுலகையும் அரசியலையும் தான் வாழ்ந்தவரை தன் விரல் அசைவில் வைத்திருந்த ஒருவர் வாழ்ந்த வீடு இருந்த நிலையைப் பார்த்ததும் இங்கே எதுவும் நிலை இல்லை என்று தோன்றியது. இது அவருக்கும் தெரிந்தே இருந்ததோ என்றும் அதனாலேயே வந்ததை எல்லாம் வாரி வழங்கிவிட்டாரோ என்றும் தோன்றியது. இன்று கட்சி நடத்துபவர்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் குடும்ப நலத்தை முன்னிறுத்துவதும் பத்து தலைமுறைகளுக்கு சேர்த்துக் கொள்வதும் இங்கே இருந்து கற்றுக்கொண்ட பாடமாக இருக்கலாமோ?
- ஷான்
kanavu desam - net
-
-
-
-
-
இன்று .3.6.2014.தமிழக முன்னாள் முதல்வர் திருமதி வி .என் .ஜானகி அம்மையார் அவர்களின் சகோதரர் திரு நாராயணன் அவர்களின் நினைவு நாள்
திரு .சி .எஸ். குமார் . தலைவர் .
மற்றும் மன்ற நண்பர்கள்
மனித நேய மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம்
பெங்களுர் .
http://i59.tinypic.com/2em07wm.jpg
-
மலரும் நினைவுகள்..........1972
மக்கள் திலகத்திற்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய இலட்சிய நடிகர் ஒரு குறிப்பிட்ட பத்திரிகையை கடுமையாக தாக்கி பேசியதின் விளைவு மறு நாள் அந்த பத்திரிகையில் எம்ஜிஆருக்கு நடந்த பாரத் பட்டம் -பாராட்டு விழா செய்திகள் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டது .அன்றிலிருந்து எம்ஜிஆர் திரைப்பட செய்திகள் - எம்ஜிஆர் பட
விளம்பரங்கள் - அரசியல் செய்திகள் அறவே இடம் பெறவில்லை .
முரசொலியிலும் படிப்படியாக எம்ஜிஆர் செய்திகள் குறைக்கப்பட்டு வந்தன . வேலூர்ர் நாராயணன் துவங்கிய
''அலை ஓசை '' மாலை இதழில் மக்கள் திலகத்தை தாக்கி கண்ணதாசன் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார் .ஏறத்தாழ எல்லா பத்திரிகைகளும் எம்ஜிஆரை தாக்கியும் இருட்டடிப்பு செய்தும் வந்த நேரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் எம்ஜிஆர் ரசிகர்கள்தான் .
ஆளும் கட்சியின் நிர்பந்தங்கள் - பத்திரிகைகள் முற்றிலும் எம்ஜிஆர் எதிர்ப்பு நிலை - எம்ஜிஆர் மன்றங்களுக்கு பலவித நெருக்கடி -திரைப்பட தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்ட சூழ் நிலை .
1972ல் நல்லநேரம் மிகப்பெரிய வெற்றி படமாக இருந்தாலும் ராமன் தேடிய சீதை - சங்கே முழங்கு - நான் ஏன் பிறந்தேன் மூன்று படங்களும் எதிர்பார்த்த வெற்றி பெறாதது ஏமாற்றமாக இருந்தது .பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் அண்ணா பிறந்த நாளில் மக்கள் திலகத்தின் கடைசி கருப்பு வெள்ளை படம் ''அன்னமிட்டகை '' படம்
வந்தது .படம் சுமாராக ஓடியது .
தொடரும் ...
-
1972இல் வெளியிடப்பட்டது. எம்ஜிஆர், நம்பியார், மனோகர், ஜெயலலிதா, பாரதி, வி.கே. ராமசாமி, நாகேஷ், மனோரமா நடித்திருக்கிறார்கள். கே.வி. மகாதேவன் இசை. வாலி எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
பாடல்கள் மோசம் இல்லை.
ஒரு aside. புகழேந்தி கே.வி. மகாதேவனின் நிரந்தர உதவியாளர். அவர் தனியாக சில படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும், கே.வி. மகாதேவனிடம் இருந்த பக்தியாலும் விஸ்வாசத்தாலும் கடைசி வரைக்கும் அவரோடேயே இருந்தார். இசைத் துறையில்தான் இந்த மாதிரி விஸ்வாசம் சாதாரணமாக காணப்படுகிறது. எம்எஸ்வி தன் குருநாதரான எஸ்.எம். சுப்பையா நாயுடுவையும் அவரது மனைவியையும் தன் வீட்டிலேயே வைத்து பராமரித்தார். இளையராஜாவுக்கு அவரது குருக்களான ஜி.கே. வெங்கடேஷிடமும் தன்ராஜ் மாஸ்டரிடமும் இருந்த பக்தி சினிமாக்காரர்களுக்கு தெரியும். நடிப்பு, இயக்கம் போன்ற துறைகளில் இது அவ்வளவாக தென்படுவதில்லையே, ஏன்?
“அன்னமிட்ட கை” எம்ஜிஆரின் தத்துவப் பாட்டுக்களில் ஒன்று. டிஎம்எஸ்ஸின் குரலில் நல்ல உற்சாகம் இருக்கும். பாட்டைக் கேட்டவுடன் வாலி எம்ஜிஆருக்காக எழுதியது என்று சொல்லிவிடலாம்.
“ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு” ஒரு சுமாரான பாட்டு. டிஎம்எஸ் சுசீலா. எம்ஜிஆர் கோட்டு சூட்டு டையுடன் பாடுவார். எம்ஜிஆர் தன் டூயட்டுக்களுக்கு ஒரு ஃபார்முலா வைத்திருந்தார். செட் போட்டு எடுத்தால் ஒன்று கோட்டு சூட்டு டை. இல்லாவிட்டால் ராஜ ராணி உடை. வெளிப்புற படப்பிடிப்பு என்றால் கோட்டு சூட்டு. அப்போதுதான் ரிச்சாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார்.
“மயங்கிவிட்டேன் உன்னைக் கண்டு” பாரதியும் எம்ஜிஆரும் பாடும் டூயட். டிஎம்எஸ் சுசீலா. எம்ஜிஆர் தன் ரசிகர்களை கவர்வதற்காக ராஜா உடையில் வந்து பாடுவார். பாரதி ஒரு அழகான நடிகை. தமிழில் ஏன் பெரிய கதாநாயகியாக வரமுடியவில்லை என்று தெரியவில்லை. அவரது குரலில் வேற்று மாநில வாடை அடிப்பதாலோ என்னவோ?
“அழகுக்கு மறு பெயர் கண்ணா” நல்ல பாட்டு. இந்த ஒரு பாட்டு மட்டும் டிஎம்எஸ் எஸ். ஜானகி குரலில். ஜெ அப்போதெல்லாம் இன்று இருப்பது போல் குண்டாக இல்லை. அதற்காக அவருக்கு “நூலிடை” என்றெல்லாம் சொல்லக்கூடாது!
“பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா” என்றும் ஒரு பாட்டு உண்டு. சுசீலா.
எம்ஜிஆர் நடித்த கடைசி கறுப்பு வெள்ளை படம் என்று ஞாபகம். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்தது. சில காட்சிகள் எம்ஜிஆர் சுடப்படுவதற்கு முன் எடுக்கப்பட்டவை. அவரது குரல் மாறுபாடு தெரிகிறது. படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என்று நினைக்கிறேன்.
கதை வழக்கம் போல் முதல் காட்சியிலேயே யூகிக்கக்கூடிய ஒன்றுதான். எம்ஜிஆரும் நம்பியாரும் மாற்றாந்தாய் மக்கள். எம்ஜிஆர் உரிமை உள்ள (இளைய) வாரிசு. அப்பாவின் தவறான பழக்கங்களால் எம்ஜிஆர் அவரை பிரிந்து தாத்தா வீட்டில் வளர்வார். நம்பியார் எங்கோ ஓடிப்போய் வளர்வார். எம்ஜிஆர் எப்படி வளர்ந்திருப்பார், நம்பியார் எப்படி வளர்ந்திருப்பார் என்று உங்களுக்கு தெரியாவிட்டால் நீங்கள் தமிழனே அல்ல. வளர்ந்த இருவரும் தற்செயலாக சந்தித்து ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்வார்கள். தியாகச் சுடரான எம்ஜிஆர் தன் அண்ணனை வாரிசாக நடிக்க சொல்வார். முதலாளியாக எப்போதுமே இருக்க விரும்பும் நம்பியாருக்கு தியாகியான எம்ஜிஆரிடம் கொஞ்சம் பயம் இருக்கும். கைவிடப்பட்ட நம்பியாரின் அம்மா பண்டரிபாய் குருடி. இறந்துபோனதாக கருதப்படும் அப்பா உயிரோடுதான் காடுகளில் சுற்றிக்கொண்டிருப்பார். மனோகரின் சூழ்ச்சி, பாரதியின் ஒரு தலை காதல், நம்பியாரின் பணத்தாசை எல்லாவற்றையும் சமாளித்து ஜெயை காதலித்து எஸ்டேட் தொழிலாளர்களின் தலைவனாகி, பெரியம்மா பண்டரிபாய்க்கு மீண்டும் கண் கொடுத்து, நம்பியாரை திருத்தி அப்பப்பா! புரட்சித் தலைவரால்தான் முடியும்!
பாரதி அழகாக இருக்கிறார்.
எம்ஜிஆரின் அப்பாவாக வருபவர் பேர் முத்தையா
நகைச்சுவை பகுதி சுமாராக இருந்தது. நாகேஷும் மனோரமாவும் வி. கே. ராமசாமியும் தமிழ் சினிமா பாட்டுக்களை பாடியே காதல், காதலுக்கு அப்பாவின் எதிர்ப்பு, அப்பாவுக்கு காதலர்கள் எதிர்ப்பு எல்லாவற்றையும் சொல்லிவிடுவார்கள். தமிழில் எல்லாத்துக்கும் பாட்டு இருக்கிறது!
படத்தில் சிம்பாலிக் டயலாக் ஜாஸ்தி. உதாரணத்துக்கு ஒன்று. எம்ஜிஆர் தன்னை காதலிப்பதாக நினைக்கும் பாரதி அடுப்பங்கரையில் கன்னத்தில் கொஞ்சம் கரியோடு இருக்கும் ஜெயிடம் எம்ஜிஆர் தன்னை காதலிப்பதாக சொல்வார். அதை கேட்டவுடன் ஜெ கையில் இருக்கும் பாத்திரத்தை தவறவிட்டுவிடுவார். அப்போது டயலாக்குகள்.
பாரதி: என்னாச்சு?
ஜெ: கை தவறிடுச்சு.
பாரதி: நீ ஜாக்கிரதையா வச்சிருந்திருக்கணும்
ஜெ: ஜாக்கிரதையாகத்தான் இருந்தேன், அப்படியும் தவறிடுச்சு.
பாரதி: பரவாயில்லே, நான் எடுத்துக்கிறேன்.
ஜெ: எனக்கு அடுப்பில் வேலை இருக்கு, அப்புறம் பேசலாம்.
பாரதி: முகத்திலே கரி, துடைச்சுக்கோ!
courtesy - net
-
இந்த வார இந்தியா டுடே இதழில் வெளியான செய்தி
-------------------------------------------------------------------------------------------
http://i58.tinypic.com/zxu2hs.jpg
http://i58.tinypic.com/2v8fs42.jpg
நன்றி: இந்தியா டுடே.
-
தற்போது சென்னை மகாலட்சுமியில் வெற்றி நடை போடுகிறது மக்கள் திலகத்தின் ' நல்ல நேரம் ' தினசரி 3 காட்சிகள் அதன் சுவரொட்டிகள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு
http://i60.tinypic.com/2ia62pz.jpg