http://i286.photobucket.com/albums/l...ingcandle2.gif
http://i1.ytimg.com/vi/Wr3qzmANTew/maxresdefault.jpg
பாடல்களில் பாசத்தை ஊட்டி
நடிப்பில் நவரசங்களைக் காட்டி
சிந்தை கவர்ந்த எங்கள் செல்வமே!
அன்பின் ஊற்றாய் அவதரித்து
பண்பின் உறைவிடமாய் பரிமளித்து
பார் போற்ற வாழ்ந்த பாரத மகனே!
முத்திரைச் சிரிப்போடு என்றும்
என் மலர் மாலையை
முதல் மாலையாய்
ஏற்றுக் கொண்ட முத்தமிழ்
வித்தக நடிகனே!
அருகில் நாற்காலியில் உனக்குச் சமமாய்
எனக்கு சரியாசனம் தந்து
யாருக்கும் கிடைக்காத பாக்கியமாய்
உன்னருகில் என்னை அமரச் செய்து
அழகு பார்த்த அன்புத் தெய்வமே!
சினிமா கதை அவரிடம் பேசாதே
என்று என்னிடம் உன் பாதுகாவலர்கள்
எச்சரித்து உன்னிடம் அனுப்பி வைத்தாலும்
அரைமணி நேரம் என்னுடன் அதே கதை பேசி
வம்பளந்து என் வயிறை நோக வைத்த விஷமக்காரனே!
என் ஊர்க் கோவிலின் திருநீரை
என்றும் மறக்காமல் நான் கொடுக்க
பயபக்தியுடன் நெற்றியில் இட்டு என்னை
அருள் பார்வை பார்த்த ஆண்டவனே!
விடை பெற்றுப் புறப்படும் போதெல்லாம்
மறக்காமல் 'பேருந்து வழி செலவுக்கு இந்தா பணம்'
என்று சட்டை பாக்கெட்டில் கைவைத்து அள்ளி எடுத்து
தந்த அருள் வள்ளலே!
என்னை பெற்ற தாயிடம்
'இவனுக்கு சோறு போட மாட்டீர்களா அம்மா ?
என்று பொய்க் கேலி பேசி அப்போதைய
என் ஒல்லி உடம்புக்கு பரிதாபப்ப்பட்ட
பத்தரை மாற்றுத் தங்கமே!
நீ இறந்து விட்டாயாமே! உன் நினைவு நாளாமே! ஊர் பிதற்றுகிறது.
நீ எங்கே இறந்தாய்!
என் உயிரில் வாழ்கிறாயே!
உயிரணுக்களில் ஊர்கிறாயே!
எப்படி நான் நம்புவேன்?
ஆனால் அதையும் மீறி
http://1.bp.blogspot.com/_tUtkw_1iRj...0/teardrop.jpg
நான் அழுகிறேனே இன்று.
ஏன் என்று காரணம் சொல்