Originally Posted by
RavikiranSurya
திரு கலைவேந்தன் சார்
ஒரு நடிகரின் சம்பளம் என்பது இரண்டு வகைப்படும்.....ஒன்று முழு தொகையும் பணமாக வாங்கிகொள்வது....இரண்டு குறிப்பிட்ட தொகை முன் பணமாக வாங்கி...மீதம் உள்ள தொகைக்கு AREA விநியோக உரிமை பெற்றுகொள்வது.!
இரண்டிற்கும் என்ன வித்தியாசம் ?
முன்பணம் + ஏரியா விநியோக உரிமை = நாயகனின் சம்பளம்
தயாரிப்பாளர் முழுதொகையும் புரட்டி காசாக கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை நாயகருக்கு..அட்வான்ஸ் தொகை போக மீதி தொகையை விநியோக உரிமை கொடுத்துவிட்டால் கையில் உள்ள பணத்தை மற்ற திரைப்பட படபிடிப்பு மற்றும் இதர நடிகர் நடிகை சம்பளத்திற்கு, செலவிற்கு பயன்படுத்தி கொள்ள வசதியாக இருக்கும்..பண பிரச்சனை முக்கால்வாசி வராது !
தயாரிப்பாளரின் கஷ்டங்களை நன்றாக புரிந்துகொண்ட நாயகர்களால் மட்டுமே இந்த METHOD ஐ கடை பிடிக்க இயலும்.
09-12-1954 இல் திரு ஸ்ரீதர் கதை வசனத்தில் வெளிவந்த நடிகர் திலகத்தின்
எதிர்பாராதது திரைப்படத்தில் இருந்து நடிகர் திலகம் முன்பணம் + ஏரியா விநியோக உரிமை முறையில் திரைப்படங்களில் நடிக்கலானார். அதாவது நடிக்க வந்த 2 வருடம் 2 மாதத்திலேயே ! எதிர்பாராதது திரைப்பட சென்னை நகர விநியோக உரிமை நடிகர் திலகத்தின் சம்பளத்திற்கு ஈடாக கொடுக்கப்பட்டது.
எதிர்பாராதது திரைப்படம் சென்னையில் சித்ரா, ப்ரோட்வே, காமதேனு, பாரத் மற்றும் பெரம்பூர் லக்ஷ்மி (இன்றைய மகாலட்சுமி)யில் வெளியானது...ஒரு திரை அரங்கு வரி நீங்கலாக 50,000 வசூல் (விநியோகஸ்தர் பங்கு)என்று தோராயமாக கம்மிக்கு கம்மியாக வைத்தாலும்...2,50,000 ருபாய் பிளஸ் முன்பணம் ருபாய் 25,000 வைத்தாலும் நடிகர் திலகம் நடிக்க வந்த இரண்டு வருடத்தில் சம்பளம் ருபாய் 2,75,000
இதிலிருந்தே...யாருக்கு அதிகம் சம்பளம் என்பது விளங்கும் !
Regards
RKS