Quote:
ஜெமினியின் வாழ்நாள் நடிப்பு முத்திரை ரசிக நெஞ்சங்களில் ஆழமாகப் பதிந்திட வித்திட்ட அபூர்வமான திரைப்படங்களில் இரு கோடுகள் பாலசந்தரின் இயக்கத்தில் மாபெரும் வெற்றியை தந்திட்ட படமே !
மேலோட்டமாகப் பார்க்கையில் சவுகார் ஜானகியின் கலெக்டர் பாத்திரப் படைப்பு பிரமாதமாகப் பேசப்பட்டாலும் இரு மனைவியரிடையே உணர்ச்சி மோதல்களில்
சிக்கித் தவிக்கும் நடுத்தர வர்க்க கணவராக தனது மெம்மை இழையோடும் மேன்மையான நடிப்பை ஜெமினி ஜெமினிதான் என்று ரசிகர்கள் மகிழ்ந்து நெகிழ்ந்து வியந்து போற்றிய திரைக்காவியம் இரு கோடுகள் !
படம் முடிந்தும் ஜெமினி கணேசன் அவர்களின் உணர்வுகளை மீட்டும் பாத்திரமாகவே மாறி விட்ட நடிப்பின் விஸ்வரூபமே மனதில் நிற்கும் அளவுக்கு தனது நடிப்பாற்றலை திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு முன்னுதாரணமாக பின் பற்றுமளவுக்கு ரசிகர்களைக் கட்டிப் போட்டதே காதல் சக்கரவர்த்தியின் வெற்றி !