-
வாசு சார்,
தீபாவளி வாழ்த்துக்களைக் கவிதையாக்கி அதில் நடிகர் திலகத்தை நாயகனாக்கி மிகச் சிறப்பான முறையில் கொண்டாடும் வண்ணம் செய்து விட்டீர்கள். பாராட்டுக்கள். வரிக்கு வரி வார்த்தைகள் ஒவ்வொன்றும் தனித் தனி காவியங்களை ஒன்றாக்கி சரம் தொடுத்தாற்போல் அமைந்துள்ளது.
மீண்டும் தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
-
Dear Friends,
Wish you all a Very, Very Happy Diwali.
Anand
-
வாசு சார்,
நமது நடிகர் திலகத்தையே தீபாவளியாக உருவகப்படுத்தி அமர்க்களபபடுத்திவிட்டீர்கள், உங்கள் கவிதை அருமையிலும் அருமை!!!
என் மனதார வாழ்த்துக்கள்!!!!
ஆனந்த்
-
தீபாவளி - ஒவ்வொரு சிவாஜி ரசிகருக்கும் வாழ்வில் ஒன்றி விட்ட ஒன்று. 60 ஆண்டுகளுக்கு முன் தீபாவளியன்று திரையில் தோன்றிய ஜோதி இன்று அனைவருக்கும் ஒளி காட்டி வழி காட்டி சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது. பராசக்தி மூலம் திரைக்கு அறிமுகமான நடிகர் திலகம் 60 ஆண்டு கால திரையுலக பணியினை நிறைவு செய்துள்ளார். பராசக்தி 60 ஆண்டு கால நிறைவினை நினைவுறுத்தும் வகையில் ரசிகர்கள் எளிமையான முறையில் விழா எடுத்தனர். இதனைப் பற்றி இத்திரியில் முன்னர் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப் பட்டன. தற்பொழுது அதனைப் பற்றிய ஒரு நினைவூட்டல் காணொளி நம் அனைவரின் பார்வைக்காக. நடிகர் திலகத்தின் 60 ஆண்டு கால திரைப்பட வரலாற்றைப் பற்றிய ஒரு நினைவூட்டலுக்காக தொகுக்கப் பட்டது இந்தக் காணொளி. இதில் அவரைத் தவிர குறிப்பிட்டு யாரையும் கூறப் படவில்லை. விழாவில் கௌரவிக்கப் பட்ட ஒப்பனைக் கலைஞர் திரு டி.எம்.ராமச்சந்திரன் அவர்கள் தன்னுடைய தள்ளாத வயதிலும் மழையிலும் வருகை புரிந்தது குறிப்பிடத் தக்கது. விழாவினை ஏற்பாடு செய்த நண்பர்களுக்கு நமது உளமார்ந்த நன்றி.
http://www.youtube.com/watch?v=mAt2H...lcLpnIKC2q3h3A
ஒரு அன்பர் ரசிகர் மன்றங்களில் இருந்தால் மிகவும் கேவலம் என்பது போன்ற தொனி வரும் வகையில் கருத்துக் கூறி இருக்கிறார். இந் நன்னாளில் அதற்கு பதில் கருத்து தெரிவித்து பெரிது படுத்த விரும்பவில்லை. ஆனால் ரசிகர்கள் மறக்காமல் செய்யும் இந்தப் பணிகளை எந்த அரசியல் வாதியோ அல்லது அவர்களின் இயக்கத்தினரோ செய்கிறார்களா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
அன்புடன்
-
இன்று 'ஆசிய ஜோதி' பிறந்தநாள்.
ஆசிய ஜோதியுடன் நடிப்புலக ஜோதி. (அரிய புகைப்படம்)
http://i1087.photobucket.com/albums/...art%20-2/n.jpg
-
இன்று குழந்தைகள் தினம்.
குழந்தையோடு குழந்தையாய் நடிகர் திலகம்.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/c-1.jpg
-
குழந்தைகளோடு குழந்தையாய் நடிகர் திலகம்
http://youtu.be/Xr4gvXXgCnU
என்னைப் போல் ஒருவன் படத்தில் இடம் பெற்ற தங்கங்களே பாடலில் நேரு காமராஜ் உள்ளிட்ட தலைவர்கள் தோன்றும் காட்சியைக் காணுங்கள். இந்தப் பாடல் காட்சிகளில் இந்த தேசிய தலைவர்களை நடிகர் திலகம் இடம் பெறச் செய்யாதிருந்திருந்தால், இவர்களைப் பற்றி மக்களிடம் குறிப்பாக எதிர்காலத் தமிழர்களுக்குத் தெரியாமலே போயிருக்கும். திராவிடத் தலைவர்களால் தான் தமிழகமே தழைத்து விட்டது என்கிற அபிப்ராயம் வலுவாக அமைக்கப் பட்டிருக்கும்.
இதே போல குழந்தைகளோடு குழந்தையாய் நடிகர் திலகம் ஆடிப் பாடும் பாடல்
http://youtu.be/2BqghZZSNnQ
எங்க மாமா படத்தில் நான் தன்னந் தனிக் காட்டு ராஜா - வாலியின் வைர வரிகளில் குழந்தைகளைப் பற்றி கருத்தாழமிக்க பாடல்
குழந்தைகளைத் தாலாட்டுப் பாடி தூங்கவைக்கும் சூப்பர் ஹிட் பாடல்.
http://youtu.be/SXyrrFIdQbs
எங்க மாமா படத்தில் டி.எம்.எஸ். குரலில்
இப் பாடல்களனைத்தும் சாகா வரம் பெற்றவை. மெல்லிசை மன்னரின் இசை வரம் பெற்றவை.
நல்ல தரத்தில் இப்பாடல்களைத் தரவேற்றிய ராஜ் வீடியோ விஷன் சேனலுக்கும் யூட்யூப் இணைய தளத்திற்கும் நன்றி.
-
டியர் வாசுதேவன் சார்,
தீபாவளிக்கு நடிகர்திலகத்தை மனதில் நிறுத்தி கவிதை சரவெடியை அளித்து தீபாவளியை அசத்தலாகக் கொண்டாடிவிட்டீர்கள். நன்றி.
-
டியர் ராகவேந்திரன் சார்,
குழந்தைகள் தினத்தையொட்டி தாங்கள் அளித்திருந்த நடிகர்திலகத்தின் சிறப்புப் பாடல்கள் அருமை.
-