ஈரமில்லா நிலம் உழுதிடவும்- ஈரமில்லா
மனம் பழகிடவும் பயன்படா.
-
கிறுக்கன்
Printable View
ஈரமில்லா நிலம் உழுதிடவும்- ஈரமில்லா
மனம் பழகிடவும் பயன்படா.
-
கிறுக்கன்
வார்த்தையின் வீரியம் வாழவும் வைக்கும்
வரம்புமீறினால் வீழவும் வைக்கும்.
-
கிறுக்கன்.
வாழ்க்கையில் செல்வம் மட்டும் தேடி
வாழ்வை தொலைத்து விடாதே.
-
கிறுக்கன்
:thumbsup: KQuote:
Originally Posted by kirukan
இருப்போர் இல்லாராய் இருந்து வந்தால்
இல்லாதோர் இருப்பவர் ஆவர்.
-
கிறுக்கன்
pp maam - ethugaiyum monaiyum meaning sollunga please & thank you ngaQuote:
Originally Posted by pavalamani pragasam
மோனை என்பது 'இரு சீர்களின் முதல் எழுத்துகள் ஓசையில் ஒன்றுவது' . எதுகை என்பது ' இரு சீர்களின் இரண்டாம் எழுத்து ஒன்றுவது'Quote:
Originally Posted by suvai
என்று சொல்லலாம். காட்டுகள்: கற்று, பெற்று ; பாடம், மாடம் ; கண்ணன்,
வண்ணன்.
எதுகைக்கு இரண்டாம் எழுத்து மட்டும் ஒன்றினால் போதாது. முதல்
எழுத்துகள் அளவில் ஒத்துப் போகவேண்டும். அதாவது, முதல் எழுத்துக்
குறிலானால் (நெடிலானால்), எதுகைச் சீரிலும் முதல் எழுத்துக்
குறிலாக(நெடிலாக) இருக்கவேண்டும். (இது பலரும் செய்யும் தவறு) .தட்டு,
பட்டு..எதுகை; ஆனால், தட்டு, பாட்டு ..எதுகை அல்ல.
சிலசமயம் , மூன்றாம் எழுத்தும் ஒன்றினால் தான் ஒத்த ஓசை கிடைக்கும்.
(உ-ம்) பண்டு, உண்ண ..ஓசை இனிமை இல்லை. பண்டு, உண்டு, கண்டு... இவை
இன்னும் சரியான எதுகைகள். அதனால், முதல் எழுத்து அளவில் ஒன்றி,
முடிந்தவரை மற்ற எழுத்துகள் ஒன்றுவது சிறப்பு. குறைந்த பட்சம் இரண்டாவது
எழுத்தாவது ஒன்ற வேண்டும்!
[Thanks to Prof.Pasupathi]
-
கிறுக்கன்
thank u or giving the meaning K...:-)
aduthu enna poo?? ;-)
உதவிய உதவி உதவாது உய்த்திடும்
உதவியதை ஓயாது உரைத்திட்டால்.
-
கிறுக்கன்
சோர்ந்த சோம்பேறியுடன் சேர்ந்து செய்தால்
சிறிய செயலும் சிரமமாம்.
-
கிறுக்கன்