Originally Posted by
esvee
மக்கள் திலகம் மலர் மாலை -1
நேற்று மாலை பெங்களூரில் மாநகர பேருந்தில் பயணம் செய்தபோது திரு பம்மலாரின் மக்கள் திலகம் மலர் மாலை புத்தகத்தை படித்துக்கொண்டு வந்தேன் . என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் நான் பார்த்து கொண்டிருந்த மக்கள் திலகம் புத்தகத்தை என்னிடமிருந்து வாங்கி , மிகவும் ஆழ்ந்து , வியப்புடன் ,படித்து தனக்கு மிகவும் பிடித்து இருப்பதாகவும் ,அதே புத்தகத்தை வாங்கி கொள்ள தயார் என்று கூறினார் .
என்னிடம் ஒரே புத்தகம்தான் உள்ளது என்று கூறினேன் .அவரும் விடா பிடியாக தனக்கு தருமாறு கேட்டு ரூ 500பணத்தை என்னிடம் கொடுத்து விட்டு மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றார் .
புத்தகம் வாங்கிய நண்பர் பெயர் - திரு சுந்தரராஜன்
தமிழ் நாட்டை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் -40 வயது கடந்தவர் .
பம்மலார் சார்
பொதுமக்களில் ஒருவர் உங்கள் புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கியதின் மூலம் கிடைத்த முதல் வெற்றி .
விரைவில் 10...100... என்று உங்கள் புத்தகம் ...
சாதனை சிகரத்தை நோக்கி ....