https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...27eef194a42d68
Printable View
Warm Welcome to Mr Bhaskar to this wonderful thread.
வணக்கம்
நல்வரவு நல்கிய திரு ராகவேந்திரர், திரு முரளி ஸ்ரீநிவாஸ் திரு வாசுதேவன் மூன்று நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்
சிவாஜி புகழ் வளர்ப்போம்
தமிழ் திரைஉலகின் சாதனைகளின் முதல்வர் சிவாஜியே !!!!
திரு நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு தங்களின் திருப்பம் திரைப்பட பதிவு கண்டேன் ,திருப்பம் திரைப்படம் 1984 பொங்கல் நாளில் வெளிவந்தது
திருச்சி மாரிஸ் ராக் எ/சி திரைஅரங்கில் வெளியானது படம் தொடர்ந்து 76 காட்சிகள் அரங்குநிறைந்தது அதேசமயம் திருச்சி ரம்பா திரையரங்கில்
வெள்ளை ரோஜா 10 வாரங்களை கடந்து 100 வது நாளை நோக்கி வெற்றிகரமாக ஒடிகொண்டுஇருந்தது
திருப்பம் திரைப்படம் என்னை பொருத்தவரை சுமாரான படம் ஆனால் 100 நாட்கள் ஓடிய வெற்றி படம்.
எனக்கு சுமாராக இருந்தாலும் தாங்கள் பதிவிட்ட சிவாஜி சுஜாதா சமந்தப்பட்ட காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பு அருமையாக இருக்கும் அதற்காகவே
திருப்பம் படத்தை 5 முறை பார்த்தேன்
தங்கள் பதிவுகளில் உள்ள சிறப்பு அம்சம் என்வென்றால் அதிகம் மக்களால் பேசபடாத படங்களில் இருந்தும் நடிகர் திலகத்தின் சிறப்பான அம்சங்களை
வெளிகொண்டுவருவதுதான் தங்களின் பணி தொடரட்டும் ....
சிவாஜி புகழ் ஓங்குக !!!
திருவாளர்கள் ராகவேந்திரா கோபால் நெய்வேலி வாசுதேவன் ஆகியோருக்கு என் வேண்டுகோள் தங்கள் பதிவுகள் பதிவுகள் மட்டுமல்ல சிறந்த படைப்புகள் ஆகும்
ஆகையால் நடிகர்திலகத்தின் திரைப்படங்களின் தங்கள் விமர்சனங்களை தொடர்ந்து அளிக்கவும் ..
திரு முரளிஸ்ரீநிவாஸ் அவர்களே தங்களின் பதிவுகளை படிக்கும் பொழுதில் அந்தந்த படங்கள் வெளியான சமயத்தில் உள்ள காலகட்டத்திற்கே எங்களை அழைத்து சென்றுவிடுகிறீர்கள் நீங்கள் சிவாஜி travel timer
தங்கள் பதிவுகளில் உண்மை நிகழ்வுகளை மட்டுமே பதிவிடுவது எனக்கு பிடித்தமான ஒன்று. தாங்கள் சோம்பேறி தனத்தை குறைத்துக்கொண்டு சுறுசுறுப்பாக அதிக பதிவுகளை இடுமாறு உரிமையுடன் கேட்டுகொள்கிறேன்
சிவாஜி மட்டும் பிறக்காமல் இருந்துஇருந்தால் தமிழ் சினிமா சரித்திரத்தின் சாதனை பக்கங்கள் வெறும் வெற்று காகிதங்கள் ஆகியிருக்கும்..
சிவாஜி புகழ் ஓங்குக!!!
A warm welcome to mr trichi baskar to our glorius thread of nt
NOW RUNNING JMOVIE PLE.WATCH MY FR.
RAAJA
http://i59.tinypic.com/2n6fa5i.jpg
அது தீனதயாளனின் சாம்ராஜ்யம்.அங்கே எதிர்ப்புகளுக்கு இடம் கிடையாது.தீனதயாளன் வைத்ததே சட்டம்.காவல்துறை நீதிமன்றங்களுக்கு கூட இடமில்லை.அங்கே சகலமும் தீனயாளன்.தீனதயாளன் யார்?நிழல் உலக சாம்ராஜ்ய அதிபதி.அவரை எதிர்த்தால் எதிர்ப்பவனின் தலை உடலில் இருந்து பிரிக்கப்படும்.அவர் கை சொடுக்கினால் போதும் எதிரியின் கை அவனுக்கு சொந்தம் இல்லாமல் போகும்.அவரைப் பகைத்து ஒருவன் இந்த சமுதாயத்தில் உயிர் வாழ்வது முடியாத காரியம்.
அப்படிப்பட்ட தீனதயாளன் இப்போது கடுங்கோபத்தில் இருக்கிறார்.ஊரே பயப்படும் குணம் கொண்டதீனதயாளனுக்கும் பாசம் உண்டு.அவருடைய பாசம் தன் வளர்ப்புத்தாய் மேரியின்மேல் அதிகம்.தான் இந்த சமுதாயத்தில் அநாதையாக நின்ற போது தன்னை வளர்த்து ஆளாக்கி விட்டவர் மேரி என்னும் அவரால் வணங்கப்படும் தாய்.அந்தத்தாயை எவனோ ஒருவன் காரில் இடித்து உயிர் போகும் நிலையில் படுக்க வைத்து விட்டான். விசயம் அறிந்து ஓடோடி வந்து அந்தத்தாயை பார்த்து ஒருபுறம் வருத்தமும் மறுபுறம் எரிமலையின் குமுறலாயும் நின்று கொண்டு இருக்கிறார்.
கதறி துடிக்கிறார்.
தன் தாய்இறந்தற்காக10000ருபாய் கொடுத்து அனுப்பப்படுகிறது.அது மேலும் கோபத்தை உண்டாக்குகிறது.காரை ஏற்றி கொன்றவனின் பணக்காரர்திமிருக்கு சாவுமணி அடிக்கும் முயற்சிகள் தீனயாளனால் அரங்கேற்றப்படுகின்றன.
அவனுடைய கம்பெனிகள் முடக்கப்படுகின்றன.பிரித்தாளும் சுழ்ச்சியால் குடும்பம் இரண்டுபடுகிறது.இன்கம்டாக்ஸில் மாட்ட வைக்கப்படுகிறது.அனைத்துக்கும் காரணம் தீனதயாளன் என்று அறிந்து தீனதயாளனைக் கொல்ல ஆளை ஏற்பாடு செய்கிறான்.அவரை அடிக்க ஆள் வருகிறான்.
@@@ தீனதயாளனாக. @@@@@@@@@@
****** நடிகர்திலகம் **************************--
-------------வாழ்ந்த--------------------------------------------------
########கருடாசௌக்கியமா?########
http://i1065.photobucket.com/albums/...ps30khuw6t.png
நடிகர்திலகம் திரும்பி நின்று கொண்டுநின்றிருப்பார்.சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் யானை சிலையின் தும்பிக்கை அவரின் தலைக்கு மேல் இருந்து அவரை ஆசிர்வதிப்பது போன்ற காமிரா கோணம் நன்றாக இருக்கும்.கையில் புகையும் சிகரெட்டும் வெள்ளை ஜிப்பா வேட்டியும் இடுப்பில் கை யூன்றி நிற்கும் தோரணையுமே அந்த தாதா கேரக்டரின் கம்பீரத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடும்.குரல் கொடுப்பார்இப்போது...
டேய் கய்தே! வந்து அடியேண்டா!எத்தனை நாழி காத்துட்டிருக்கிறது,என்பார்.
(சிங்கத்தின் குரல்கேட்டதும் அடிக்க வந்தவன் )ஏய்யா எங்க அய்யாவை அடிக்கிறதுக்கா என்னை கூட்டிட்டு வந்தே? ன்னு ஓரமாக சென்று நின்று கொள்வான்.
http://i1065.photobucket.com/albums/...ps2lxbdvky.jpg
ஹஹஹஹாஹாஹாஹாஹா
நாகேஷ் திருவிளையாடலில் சொல்வது போல்.,,என்ன ஒரு சிரிப்பு.சிரிப்பில் ஏளனம் வெடிக்கும்.கை சொடக்கலில் அதிரும் அரங்கம்.
சங்கிலிமுருகனிடம் வார்த்தை(வேட்டை) விளையாட்டு ஆரம்பமாகும்.
என் ஆள வைச்சே என்னை மடக்கப்பார்க்கிறியா?நீ என்ன பெரிய புத்திசாலின்னு நினைப்பா?
அந்த பாஷை தமிழ் சினிமாவுக்கே புதுசு.நிறுத்தி நிதானமாக தெளிவாக கர்ஜிக்கும் அந்த குரல் நடிகர்திலகத்தின் மேஜிக்.
நான் யார் தெரியுமா?உங்க தாத்தா.உன்னை இன்கம்டாக்ஸ்ல மாட்டிவிட்டது நான்தான்.உன் கம்பெனி எல்லாத்தையும் ஸ்டிரைக் பண்ணச் சொன்னது நான்தான்.உன் பார்ட்னரை உன்னை விட்டு விலகச் சொன்னதும் நான்தான்.
உன் மேனேஜரை விட்டே என்னை இங்கே கூட்டிட்டு வரச்சொன்னதும் நான்தான்.
நான்தான் நான்தான்னு முடிக்கிற விதத்திலேயே மிரட்டல் பலமாக இருக்கும்.என்ன அழுத்தமான உச்சரிப்பு.உன் மேனேஜரை அப்படின்னு ஆரம்பிக்கும்பொழுதே பல்லைக்கடித்துக்கொண்டே
வார்த்தைகளைபேசுவதில் மூர்க்கத்தை காட்டுவார்.
காரணமும் நானே!காரியமும்
நானே.
பாரததத்தில் கிருஷ்ணன் காட்டிய விஸ்வரூபம் ஞாபகத்திற்கு வரும்.
நச்சென்று இரண்டு வார்த்தைகள்.சகலமும் உணர்த்தப்படும்.
எப்படி என் கீதா உபதேசம்?
சட்டென்று கிண்டலுக்கு தாவுவார்.
இந்தப்படத்தில் குரல் படு வித்தியாசம்.இந்தக் காட்சியில் அது இடி போல் இறங்கும்.ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு தோட்டாவாய் வெடிக்கும்.(ச்ந்திப்பு வசனம்.)
(சங்கிலி காலில் விழுந்து கதறல்)
இப்ப என் காலில் விழுந்தாஉன்னை மன்னிச்சுருவேன்னு நினைக்கிறியா?அன்னைக்கு உன் காரில் அடிபட்டு குற்றுயிரும் கொலையுயிருமாய் கிடந்தாளேமேரியம்மா ?அவ என்ன ஆனா ஏதான்னான்னு கூட பார்க்காம நாயைஅடிச்சுப்போட்ட மாதிரிஅடிச்சுப் போட்டுட்டு குடி வெறியில காரில் பறந்துட்டீயில்ல.அவ யார் தெரியுமா?
"என் தாய்."
"தா "என்பதை மெல்ல சொல்லி "ய்" என்பதில்அழுத்தத்தை கூட்டியிருப்பார்.குரலிலும் கூடு விட்டு கூடு பாயும் சாகசம் இது.
என் தாயார் அப்படிங்கறதுக்காக
சொல்லல.யாராயிருந்தாலும் மனிதாபிமானத்தோடு நடந்துக்கணும்.
இப்போது சற்று ஆவேசத்தை குறைத்து அஹிம்சையை போதிப்பது போல் பேசியிருப்பார்.ஏன் ?மனிதாபிமானம் என்ற வார்த்தை வருவதால் அதை பண்பு கலந்த குணத்தோடுதான் பேசவேண்டும் என்பதை இந்த இடத்தில் பயன்படுத்தியிருப்பார்.படபடவென்று பட்டாசு மாதிரி பேசிக்கொண்டு வரும்போது இந்த மாதிரி சின்ன வார்த்தைகளுக்கெல்லாம் குணம் காட்டி பேச எப்படி அவரால் யோசிக்க முடிந்தது?
அதனால் நடிகர்திலகம் குரலிலும் திலகம்.
நீநடந்துகிட்டியா.இல்ல.ஏன்?பணக்காரன்னு திமிர்.செஞ்ச தப்பை மறைக்கிறதுக்காக
கேவலம் பிச்சைக்காசு பத்தாயிரம் ரூபாயைகொடுத்தனுப்பிச்ச.எங்க அம்மாவோட உயிரோட விலை பத்தாயிரம் ரூபாய்.இல்லே.உன் கேஸ்ல நானே பெர்சனலா இறங்கியிருக்கிறேன்.ஏன்னு தெரியுமா?என் ஆட்கள் நினைச்சா ஒரேயடியா ...ஒரேயடியா குளோஸ்
பண்ணிடுவாங்க
அட்டகாசம் வார்த்தைக்கு வார்த்தைஎகிறும்.கதையை முடிச்சுடுவேன் என்னும் அர்த்தத்தை அந்த கை விரல்களை பிரித்துக் காட்டிவிசிறுவதில் பிரமாதப்படுத்தியிருப்பார்.
.நீ அப்படி சாகக்கூடாது.உயிர் இருக்கிற வரைக்கும் அணுஅணுவா.,அணுஅணுவா துடிதுடிச்சு சாகணும்.
அணுஅணுவாக என்பதை கைசைகையில் அவர் காட்டுவது மிரட்டலிலும் மிரட்டல்.
http://i1065.photobucket.com/albums/...psq5frhsqc.jpg
நான் சொல்லறது உனக்கு மட்டுமல்ல.குற்றம் செஞ்சுட்டு அத மறைக்க பார்க்கிறானுங்ளே அத்தனை பணக்காரப்பயலுகளுககும்இந்த தீனதயாளனோட எச்சரிக்கைடா.டேய்ய்..த
வலது காலை ஆட்டிக்கொண்டேமீசையை முறுக்குவது போல் எச்ரிக்கை விடும்
இந்த காட்சி பார்த்தலிலும், கேட்டலிலும்
சரியான மிரட்டல் காட்சி.
....எட்றா துண்டை..
புயல் கரையை கடக்கும்...
*********கிடா மீசையும்,முரட்டு
உடைகளும்,வாய் கிழிய கத்துவதையும்,வேகமாக பேசுவதையுமே குணாதிசயங்களாய்
மிரட்டல் காட்சிகளுக்கு பயன்படுத்தி வந்த தமிழ் சினிமாக்களுக்குமத்தியில் நமக்கு கிடைத்த கொடை இந்த கருடா சௌக்கியமா.