http://i64.tinypic.com/2ntzt5h.jpg
Printable View
பாக்யா வார இதழ் -16/11/18
http://i65.tinypic.com/2lmwisz.jpg
http://i63.tinypic.com/2dayqm9.jpg
http://i64.tinypic.com/2holab5.jpg
தினத்தந்தி -11/11/18
http://i63.tinypic.com/eq7b7o.jpg
பட்டுக்கோட்டை டூ அருப்புக்கோட்டை
என்ன இது வித்தியாசமான தலைப்பு ? பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய பாடல் வரிகள் குறிப்பாக நாடோடிமன்னன் படத்தில் இடம் பெற்ற காடு விளைஞ் சென்ன மச்சான் ...பாடலில் நானே போடப் போறேன் சட்டம் ....என்று எம்ஜிஆர் பாடினார் . இது நடந்தது 1958.
1977 தமிழக சட்ட சபை தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் எம்ஜிஆர் அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவி ஏற்று பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி பட்டுக்கோட்டையார் பாடல்களுக்கு உயிர் கொடுத்தார் நம் அருப்புக்கோட்டையார் . அது நம் எம்ஜிஆர் .
PATTUKOTTAI + ARUPPKOTTAI= ST GEORGE KOTTAI......👍 👌 ... Thanks Friends...
உலகம் சுற்றும் வாலிபன் ஓர் உதாரணம்
காதலும் வீரமும் சரிவிகிதத்தில் கலந்து எடுக்கப்பட்ட ஒரு மாபெரும் வெற்றிப் படம் உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆரின் ஆரம்பகால படங்களில் ஓரிரு காதல் பாடல்களே இடம் பெற்றன. இடைக்காலத்தில் மூன்று பாடல்கள் வரை இருந்தன. நிறைவுக் காலத்தில் குறிப்பாக உலகம் சுற்றும் வாலிபனில் ஆறு காதல் பாடல்கள் இடம்பெற்றன.
*ஒரு பாட்டு ஒரு சண்டை என்ற சரிசம விகிதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டன. இடையிடையே சில வசனங்களும் நகைச்சுவை இடம் பிடித்தன. நிலவு ஒரு பெண்ணாகி, அவள் ஒரு நவரச நாடகம், பன்சாயி, தங்கத் தோணியிலே, உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம் ஆகியவை ஜோடிப் பாடல்களாகவே அமைந்தன. “உலகம் சுற்றும் வாலிபனோடொரு*பயணம் வந்தவள் நான் ” என்ற பாட்டு படத்தில் இடம்பெறவில்லை. இடம் பெற்றிருந்தால் காதல் பாடல்களின் எண்ணிக்கை ஏழாகியிருக்கும்.
சண்டைக் காட்சிகளைக் கணக்கிட்டால் மனோகரோடு பெருவிரல் சண்டை, ஜஸ்டினோடு நடன அரங்கில் சண்டை, அசோகனோடு மின்சாரத் தாக்குதல் சண்டை, நம்பியாரோடு புத்தர் கோயிலில் சண்டை, நிறைவாக ஸ்கேட்டிங்கில் சுற்றி வந்து கத்திச் சண்டை, பின்பு விஷ ஊசித் தாக்குதல் என்று ஆறு சண்டைக் காட்சிகள் உண்டு.
தேடல் என்ற அடிநாதம்
காதல் காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் தேடல் என்ற இழையில் அடுத்தடுத்த வண்ண மணிகளாகக் கோக்கப்பட்ட படம் உலகம் சுற்றும் வாலிபன். அண்ணன் எம்.ஜி.ஆர் கொடுத்து வைத்த ஆராய்ச்சிக் குறிப்பை தம்பி எம்.ஜி.ஆர் தேடி வருவதே படத்தில் மையக்கதை. இந்தத் தேடலின்போது எதிரிகளால் ஏற்படும் தடைகளும் அவற்றை மீறி வெற்றி பெறுவதும் படத்தில் வெற்றியாக அமைந்தது. இப்படம் அம்மா, அப்பா, சொந்தம், பந்தம், சுற்றம், நட்பு என்று எதுவும் இல்லாமல் தனியொரு மனிதன் இந்த மனிதச் சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் ஆராய்ச்��...... Thanks Friends...
குறிப்புகளைத் தேடிப்பெறுவது சர்வதேசத் தளத்திலும் காலம் கடந்தும் நின்று நிலைபெற்று வெற்றிபெறும் சிறப்பியல்பைக் கொண்டதாகும். இந்தியத் தன்மையோடு தமிழ்ப் பின்புலத்துக்கு ஏற்ப எம்.ஜி.ஆர் தன் படங்களை உருவாக்குகிறார்.
உலகில் ஓர் ஆண் ஒரு பெண்ணை வெற்றி கொள்ளத் துடிப்பது காதலாகவும் ஓர் ஆணை வெற்றி கொள்ளத் துடிப்பது சண்டையாகவும் வாழ்க்கையில் வெளிப்படுகிறது. வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்கும் படைப்புக்கலைகளும் (இலக்கியம், இசை, நாட்டியம், சினிமா) காதலையும் வீரத்தையும் தமது கருப்பொருள்களாகக் கொண்டன. இக்கருத்தை ஆழமாகப் புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர் காதல் காட்சிகளுக்கும் சண்டைக்காட்சிகளுக்கும் தம் படங்களில் முக்கியத்துவம் அளித்தார். அவை இன்றைய காலகட்டத்துக்கும் சலிப்பூட்டாத விஷயங்களாக இருப்பதால் இன்றும் மக்கள் எம்.ஜி.ஆர் படங்களை வெற்றி பெற வைக்கின்றனர்.... Thanks Friends...
புறத்திணை
புறத்திணை என்பது மனிதனின் வீரம், கொடை என்று அவளது புற (வெளி) வாழ்க்கையைப் பற்றியது. மன்னனின் வீரம் போற்றிய பாடல்கள், அவனது வீரத்தைப் புகழ்ந்து பாடும் புலவருக்கு அவன் பரிசில் அளித்த பாடல்கள் புறத்திணை என்ற பிரிவில் அடங்கின.
உலகளாவிய கருப்பொருளில் war என்பது மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. நாடு, இனம் எனப்பெரிய அளவில் நடந்தால் அது போர் . தனிப்பட்ட இரு மனிதருக்கு இடையில் நடந்தால் அது சண்டை . எம்.ஜி.ஆர் தன் படங்களில் நல்லவரைக் காப்பாற்றவும் தீயவரை ஒடுக்கவும் சண்டைக் காட்சிகளை அமைத்தார். அவற்றை ரசிக்க இன, மொழி, காலத் தடைகள் கிடையாது.
கிரேக்க இலக்கியத்தில் the trojan war பேசப்படுவதைப் போல இந்தியாவில் இதிகாசங்களில் தேவாசுரப் போர், இராம இராவண யுத்தம், மகாபாரதப் போர் ஆகியவை நல்லவருக்கும் தீயவருக்கும் இடையே நடக்கும் சண்டைகளை விளக்குகின்றன. இந்தப் போர்களின் சாராம்சம் முடிவில் நல்லவன் வாழ்வான், தீயவன் அழிவான் என்பதாகும். இதே கருத்தைத்தான் எம்.ஜி.ஆர் படங்களிலும் அவற்றில் உள்ள சண்டைக்காட்சிகளும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன....... Thanks Friends.....