:noteeth:
Printable View
:noteeth:
கீழே விழுந்து பல்லையும் காலையும் உடைத்துக்கொண்ட பெண்,அலங்காரம் செய்துகொள்ள மறுத்து, இப்படிச் சொல்லிக்கொள்கிறாள். அவள் விழுந்த இடம் , ஒரு தரிசுப் பகுதி. அந்தப் பெண்ணின் சொற்களில் நான் கேட்ட இயற்கைக் கவிதை இது. Occasion: Just before being taken for a second orthopedic appointment.
ஓடை!
பணிவான அலைகள் கண்டேன்
பையநீ கடலுக் கேகு!
அணிகுளிர் ஓடை! உன்றன்
அடிகளைத் தொடர்தல் இல்லேன்.
மெல்லநீ ஒழுகு வைக்கோல்
மேடுகள் திடல்கள் தாண்டி
நல்லோடை, பிறகோர் ஆறாய்
நாடிப்பின் வருவேன் அல்லேன்!
கரையோர மரம்க லங்கும்!
காணும்வெண் தளிர லங்கும்!
முரலும்வண் டுன்ம ருங்கில்,
முன்செல்க தொடர்தல் இல்லேன்.
ஆயிரம் ஒளிபாய் எல்லோன்;
ஆயிரம் நிலவு இலங்கும்!
ஆயின் நான் தொடர்தல் இல்லேன்
அடிகளிங் ககல்வேன் அல்லேன்.
டென்னிசனின் ஆங்கிலக் கவிதையைத் தழுவியது.
அருஞ்சொற்பொருள்
மேல் இடுகையில் உள்ள ஓடை என்னும் கவிதைக்கு விளக்கம்.
(டென்னிசனின் ஆங்கிலக் கவிதையை ஒட்டியது )
பணிவான : மெல்ல அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஓடை, தனக்குப் பணிவு காட்டுகதாகக் கூறுவது கற்பனை
பைய நீ கடலுக்கு ஏகு= மெதுவாக நீ கடலுக்குச் செல்க; அணி குளிர் ஒடை = அழகிய குளிரோடையே!
நல்லோடை = நல்லோடையாய்;
கரையோர மரம்க லங்கும்! - இங்கு கவிஞன், ஓடை மரத்தையும் அழைத்துச் செல்லாமல் தானே ஓடுவதனால், மரம் கலக்கம் அடைவதாகக் கற்பனை செய்கிறான்.
வெண்தளிர் : இது "ஆஸ்பன்" (aspen) என்ற ஒருதளிர் வகை; வெண்மை நிறமுடையது.
அலங்கும் =" கவலைப்படும்." (Tennyson: to quiver). பிரிவு ஆற்றாமை காரணம். alangku-tal 1. to move, shake, swing, dangle, to be in motion; 2. to be agitated in mind, troubled.
துடித்தது எனில் மிகையாம்.
முரலும் = ரீங்காரம் செய்யும்; மருங்கில் =( உன்) பக்கத்தில் அல்லது அருகில்.
ஆயிரம் ஒளியாய் = ஆயிரம் அல்லது பல இடங்களில் தோன்றுவது;
எல்லோன் = சூரியன்.
அடிகள் இங்கு அகல்வேன் அல்லேன் = என் காலடிகள்
எடுத்துவைத்து இங்கிருந்து உன்னுடன் வரமாட்டேன்.
Alfred Tennyson, 1st Baron Tennyson, FRS (6 August 1809 – 6 October 1892) Poet Laureate.
மேனெடிது சென்ற பருந்தின் மிசையூர்ந்து
தானர சானதாம் தேன்சிட்டு -- மாநிலத்தீர்!
எண்ணிய தாங்கே உரைப்பீரேல் ஏனையவர்
பண்ணுவரே பாங்குடன் மற்று.
என்றேனும் என்றூழ் இலதாமோ மேகமுந்தான்
நின்றுமறைத் திட்டதோர் நேர்ச்சியினால்!---சென்றுமேல்,
ஊர்தியில் வானூர்ந்தால் உன்கண்முன் காதலரை
யார்மறைத் தாலும் அது.
இ-ள்: மேனெடிது = ஆகாயத்தில் நெடுந்தொலைவு; சென்ற = பறந்து சென்ற; பருந்தின் = கருடனின்; மிசையூர்ந்து = முதுகில் இருந்துகொண்டு; தானர சானதாம் தேன்சிட்டு = அப் பருந்தால் முடியாதபோது, தான் மேலும் உயரப் பறந்து தேன் சிட்டு அரசானதாம்; -- மாநிலத்தீர்!Quote:
Originally Posted by bis_mala
எண்ணிய தாங்கே உரைப்பீரேல் = நீங்கள் இதுகாறும் எண்ணியதை எடுத்துச் சொல்வீரேல்; ஏனையவர் = மற்றவர்கள்;
பண்ணுவரே பாங்குடன் மற்று.= நீங்கள் விட்ட இடத்திலிருந்து மற்றவற்றைத் தொடர்வார்கள் அல்லரோ? என்றவாறு.
இதன் பொருள்:Quote:
என்றேனும் என்றூழ்........மறைத் தாலும் அது.
என்றேனும் என்றூழ் இலதாமோ = சூரியன் காணாமற் ோய்விடுமோ? மேகமுந்தான் நின்று மறைத் திட்டதோர் நேர்ச்சியினால்! = மேகங்கள் அதன்கீழ் நின்று மறைத்திருக்கும் நிகழ்வினால், ---சென்றுமேல்,= வானத்திற் சென்று, ஊர்தியில் வானூர்ந்தால் = வான ஊர்தியில் மேகங்களின் மேல் பறந்தால்; உன்கண்முன்;= உன் கண்முன்னே ( சூரியன் தெரியும்) ; காதலரை
யார்மறைத் தாலும் அது.= உன் காதலனை யார் உன்னிடமிருந்து மறைத்தாலும், அப்படியே ஆகும். மறைக்கலாகாது என்றவாறு.
காதலனைக் காணாத காதலியைத் தேற்றியது.
முந்தை ஒருவழியில் வந்த இனமெனின்போர்
எந்த வகையிலும் இல்லாமல் -- செந்தண்
உறவில் ஒருங்கிருக்கும் உண்மை அரபு
கொரியர் கருதியினிக் கூறு.
முந்தை = முன்னாளில் ; ஒருவழியில் வந்த இனமெனின் = ஒரே வம்சத்தில் வந்த இனத்தவர் என்றால்;
போர் = போர்செய்தல் ;
எந்த வகையிலும் இல்லாமல் = எப்படியும் நடைபெறுதல் இல்லாமல்;
-- செந்தண் உறவில் = நட்பு நிறைந்த உறவில்; ஒருங்கிருக்கும் = ஒன்றாக இருக்கின்ற ;
உண்மை = உண்மை நிலை;
அரபு = அரபுக்களையும்;
கொரியர் = கொரியமக்களையும்;
கருதி = ஆய்ந்து பார்த்து;
இனிக் கூறு.= இனிமேல் கூறுவாயாக.
கருத்து: ஓரினத்தவர் ஒற்றுமை கொள்வர் என்பது பொய்.