வேறென்ன...?
வழக்கம்போல 'அரசியை சுடுவேன்' காவேரி, தன் தந்தையைப் பார்க்க ஜெயிலுக்கு போகிறாள். அங்கு ஜி.ஜே, தன் மகளுக்கு அரசி மீதும், செல்வி மீதும் இன்னும் வெறுப்பு வளரணும் என்பதற்காக, தன் மகள் அ.சு.காவேரியைப் பார்க்க மறுத்து விடுகிறான். கோபத்துடன் திரும்பும் அ.சு.காவேரி வழக்கம்போல... ஸாரி..வழக்கத்துக்கு கோபப்படுகிறாள்.
இன்னொரு பக்கம் முரட்டு பாண்டியன், உதயை கடத்தி வைத்துக்கொண்டு, 'டிப்டாப்' மேடத்துக்கு தண்ணி காட்டுகிறான். 'நான் தான் கடத்தினேன், உங்களால் என்ன செய்ய முடியும்' என்று கொக்கரிக்கிறான். 'அல்டாப்பு' அம்மா வழக்கம்போல பல்லைக்கடிக்கிறாரே தவிர ஒ..ண்..ண்..ண்..ண்..ண்..ண்..ண்..ணும் பண்ண முடியலை.
பார்ப்போம்.
