நன்றி திரு. ராகவேந்திரன்.
:clap:அடுத்த பதிவு ஒத்திவைக்கப்படுகிறது :-)Quote:
Originally Posted by Murali Srinivas
Printable View
நன்றி திரு. ராகவேந்திரன்.
:clap:அடுத்த பதிவு ஒத்திவைக்கப்படுகிறது :-)Quote:
Originally Posted by Murali Srinivas
இத்தகைய தாக்கத்தை ஒரு மாபெரும் நடிகர் திலகம் நம்மிடயே உருவாக்கி இருப்பதில் அளவிலா மகிழ்ச்சி. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Dear PR, பெரிய தேவர் பற்றிய உங்கள் கட்டுரை முடிவுறாத நிலையில் இடையில் குறுக்கிட்டு இந்தக் கேள்விகளை கேட்பதற்கு மன்னிக்கவும்.
1. PD கதாபாத்திரம் திரையில் இன்னும் அதிக நேரம் வரும்படி கதையிலும் திரைக்கதையிலும் சிறிது மாற்றம் செய்திருந்தால் இன்னும நன்றாக இருந்திருக்குமோ ??
(sorry, due to time factor, will continue to type in Tanglish. Pls bear with me :( )
Andha kala kattathil NT க்கு kidaitha super ஆன kadhapathiram adhu. Adhai innum muzhumayaga naam anubavikka mudiyamal poivittadho endru ungal katturaiyai padithapin thondrukiradhu. (Shakthi மனம் மாற வேறு காட்சிகளையும் உத்திகளையும் பயன்படுத்தி PD இறுதிவரை சக்தியுடன் இருக்குமாறு கதை அமைந்திருந்தால் ????? :D )
Ennai poruthavarai Devar Magan kooda nam thilagathin nadippu pasikku kidaitha chinna virundhu dhan. Adhil avarai முறையாக பயன்படுத்தினார்கள் ஆனால் முழுசாக பயன்படுத்தவில்லை என்ற ஏக்கம் ஒரு சாதாரன ரசிகனான எனக்கு ஏற்படுகிறது.
2. NT nadithadhil, PDக்கு aduthapadiyaaga ஆழமாக oppittu aaraindhu alasakkoodiya alavukku thagudhi petra kadhapathiramaaga neengal edhai kooruveergal ??
மேலும், neengal, Murali sir & Sarada avargal kurippittadhupol, pala samayangalil avarudaya abarimidhamaana thiramai veenadikkappattadhu mutrilum unmai.
Nadippukku sariyana alavukol therindhirundhum, soozhnilayin kattayathal thanadhu nadippai siridhu maatriyamaithu, palarum kanmoodithanamaga Over-acting endru sollumalavukku oru dhurbhagiyamana nilaikku thallappattar.
Mannikkavum, idharku oru vagayil perumbaalana avarin rasigapperumakkalum, thaangale unaradha vagayil kaaranamaagivittargal !! :( அதாவது, therindho, theriyaamalo, oru Image Factor க்குள் sikkikkondaar endru sollalam. This seems to be both his plus & minus.
Matra nadigargalai vida siridhu adhigamaaga seidhaalthan avar Sivaji endra manobhavathodudhan பெரும்பாலான rasigargal avar padangalai edhirkondaargal endru ninaikkiren.
Idhuv, Sodhanai muyarchigalil avar adhigam eedupadaamal irukkavum, melum, iyalbaana nadippai perum veeriyathodum azhagunarchiyodum velippaduthakoodiya paathirangal (பெரிய தேவர் போல) avarukku adhiga alavil kidaikkamal ponadharku oru kaaranamaaga amaindhuvittadha ??? Theriyavillai... ???
Please, yaarum ikkelvigalai thavaraaga eduthukkolla vendam.
" எனக்கு ஏண்டா இது போன்ற வேடங்கள யாரும் தரவில்லை" endru avar aadangamaaga kettaare, adhaippondra en aadhangathin vilaivudhan meley koorappattulla en karuthukkal.
பிழையான கருத்தாக இருந்தால் மன்னிக்கவும் அல்லது தெளிவுபடுத்தவும்.
தில்லானா - எத்தனை முறை பார்த்தாலும் பரவசம்.
அண்மையில் இங்கே இது மிக விரிவாக அலசப்பட்டிருப்பதால் என் பதிவை சுருக்குகிறேன்.
மீண்டும் மனதில் அழுத்தமாக பதிந்தவை. நாதஸ்வரம் வாசிப்பதை விட வாசிப்பது போல் நடிப்பது மிக கடினம். அதுவும் ஒரு ஷாட் தொடர்ந்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு தொடரும் போது பாவனை கஷ்டம். பாடல் காட்சியில் கூட வரிகளை மனப்பாடம் செய்து வாயசைக்கலாம். ஆனால் இசை கருவிக்கு அதுவும் அவரே சொல்வது போல நாபி கமலத்திலிருந்து காற்று வர வேண்டும், அது வருவது போல் பார்வையாளர்களுக்கு தோன்ற வேண்டும். அதை எவ்வளவு லாவகமாக செய்கிறார் நடிகர் திலகம். அழகர் கோவில் கச்சேரியில் ஒரு விதம், இங்கிலீஷ் notes வாசிக்கும் போது ஒரு விதம், நாடக கொட்டகையில் ஒரு விதம், தில்லானா ஒரு விதம், நலம்தானா ஒரு விதம், எல்லாமே பிரமாதம். அது மட்டுமல்லாமல், மனோரமா நாயனம் வாசிக்க மிருதங்கம் வாசிப்பாரே, அங்கேயும் கைகள் பேசும்.
அது போல அந்த மனிதனுக்குள் இருக்கும் சிங்கார பாவம் எப்படி அழகாக வெளிப்படும்? "மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?" பாடலிலும், இரவு நேர ரயிலிலும் (நடிகர் திலகம் கைப்பற்றி பத்மினி ரயில் ஏறும்போது பின்னணி இசையாக சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா) அதை எவ்வளவு ரசிக்கும்படியாக பண்ணியிருப்பார்
"கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நானறியேன்", கண்ணீர் நிறைந்து நிற்கும் அந்த கண்களின் பாவம்(!). அவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
அவர் மட்டுமா? அனைவரும் தான். இங்கே பதிவுகளில் விட்டுப்போன C.K. சரஸ்வதி - அந்த வடிவாம்பாளகவே மாறியிருப்பார் ("வைத்தி! நிற்கிறாரே, எனக்கு கால் வலிக்குது")
.
நாகேஷ் - முன்பதிவுகளில் விட்டு போன எனக்கு பிடித்த சில வசனங்கள். மேற் சொன்ன காட்சிக்கு அவரது பதில் "பார்த்தேளா, நீங்க நிக்கறேள் அவா கால் வலிக்கிறதாம். உங்களுக்கு பசிச்சா அவா சாப்டற போறா" .
"நாசம் இல்லை மகாராணி, நாதஸ்வரம்"
"நான்தான் பாவி"
பாலையாவிற்கு சிறப்பு பாராட்டு. (அடிச்சு சொல்லு! அடிச்சு சொல்லு)
யாரையுமே விடமுடியாது. எல்லோரும் தங்கள் பங்கை நிறைவாக செய்திருப்பார்கள். ஏ.வி.எம்.ராஜன் அடக்கி வாசித்த சில படங்களில் தில்லானாவிற்கு தனி இடம் உண்டு.
ரசிகர்களுக்காக எழுதப்பட்ட வசனமும் உண்டு.
(உன் மேல் கத்தி எறிஞ்சானே நாகலிங்கம் அவனுக்கு 7 வருட கடுங்காவல் தண்டனை போட்டுட்டா தெரியுமோ
அவன் மட்டுமில்லே! எந்தெந்த பயலுகள்லாம் எனக்கு கெடுதல் நினைகிறானோ,அவனுகளுகெல்லாம் இதே கதிதான்.)
படத்தில் தில்லானா நடனம் முடிந்து கத்தி வீசும் காட்சி வந்த போது நமது ஹப்-ல் நடந்த சர்ச்சை நினைவிற்கு வந்தது. அதை தொடர்ந்து சிக்கலாரின் பாத்திர தன்மையை அங்கே நிலை நிறுத்தும் விதமாக வரும் வசனங்கள் ( எனக்கு மேடையிலே பேசி பழக்கமில்லை). அதை நமது நண்பர் பிரபு எவ்வளவு அழகாக விளக்கியிருந்தார். (அதாவது ஷண்முக சுந்தரத்திற்கு மேடை புதிதல்ல ஆனால் மேடை பேச்சு புதிது). அந்த நினைவுகளோடு பார்க்கும் போது கூடுதலாக ரசிக்க முடிந்தது. நன்றி பிரபு.
இந்த படத்தை பற்றி பேசும் போதெல்லாம் இரண்டு விஷயங்கள் என் நினைவிற்கு வரும். தில்லானா தொடர் கதையாக வந்த போது இரண்டு பாகங்களாக வந்தது. ஷண்முகம் - மோகனா திருமணம் முடிந்து அவர்களுக்கு ஒரு மகன் பிறந்து, இருவரும் இறந்து போவது வரை வந்து இறுதியில் இந்த நாயகன் நாயகி என் தாய் தந்தையர் என்று அவர்களது மகன் முடிப்பது போல வரும். (கல்யாணத்திற்கு பிறகும் வைத்தி தொல்லை செய்வது போல காட்சியமைப்புகள் உண்டு. ஓடும் ரயிலில் தன்னை தொந்தரவு செய்யும் வைத்தியை டி.டி.ஆர். மூலமாக மோகனா இறக்கி விடும் அத்தியாயமும் உண்டு). அவ்வளவு நீண்ட கதையை கச்சிதமான திரைக்கதையாக வடித்த ஏ.பி.என்., அதே கொத்தமங்கலம் சுப்புவின் "ராவ்பகதூர் சிங்காரத்தை" - "விளையாட்டு பிள்ளையாக" மாற்றியபோது சறுக்கியது ஏன் என்பதை பல முறை யோசித்திருக்கிறேன். (இதே வரிசையில் ராஜ ராஜ சோழனையும் சேர்க்கலாம்).
இரண்டாவது, இந்த படம் வெளி வருவதற்கு முன் பலவாறாக கிண்டல் செய்யப்பட்டது. (படம் பீ பீ-னு போயிடும்). ஆனால் ஏ.பி.என்னும் சரி, NT -யும் சரி கொஞ்சம் கூட கவலைப்படாமல் படத்தில் கவனம் செலுத்தி வெளியிட்டார்கள். ஆரூடம் கூறியவர்கள் எல்லாம் காணாமல் போக அந்த ஆண்டில் (1968) அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற பெருமையை தில்லானா பெற்றது.
அன்புடன்
பிரபு, பெரிய தேவருக்கும் உங்களுக்கும் இடையில் வந்ததற்கு ஸாரி.
Dear Mohan,
I understand your feelings. Exactly a year ago, I had attempted to answer such queries and I am giving you the link here.
http://forumhub.mayyam.com/hub/viewt...asc&start=1005
http://forumhub.mayyam.com/hub/viewt...asc&start=1050
http://forumhub.mayyam.com/hub/viewt...asc&start=1110
I won't say that these are the ultimate answers but only an attempt to address such querries from what I have understood.
Read and revert.
Regards
சன் தொலைகாட்சியில் முத்தான திரைப்படங்கள் வரிசையில் வரும் வாரம் நகைச்சுவை திரைப்படங்கள் இடம் பெறுகின்றன.
அதில் இரண்டு நடிகர் திலகத்தின் படங்கள்
24.03.2008 திங்கள் அன்று இரவு 10.30 "சபாஷ் மீனா"
27.03.2008 வியாழன் அன்று இரவு 10.30 " கலாட்டா கல்யாணம்"
அன்புடன்
டியர் முரளி,Quote:
Originally Posted by Murali Srinivas
வெள்ளி இரவு தில்லானா மோகனாம்பாள் படத்தை நானும் ரசித்துப்பார்த்தேன். அதுபற்றி எழுதலாம் என்று நினைத்தபோது, ஏற்கெனவே சமீபத்தில் அந்தப்படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் பற்றி பேசப்பட்டதாலும், பிரபுராம் எழுதிவரும், பெரிய தேவர் பற்றிய தொடர் கட்டுரைக்கு இடையூறு ஏற்படுத்துமோ என்று (உங்களைப்போலவே) நானும் நினைத்ததாலும், அந்த எண்ணத்தைத் தள்ளி வைத்தேன். ஆனால் தற்போது உங்கள் போஸ்ட்டில், தில்லானா பற்றி முற்றிலும் வேறு கோணத்தில் சொல்லியிருக்கும் விவரங்கள், மீண்டும் மீண்டும் அப்படத்தைப்பற்றிய நினைவுகளை தூண்டுகிறது. ஆம், ஏற்கெனவே அதுபற்றி இங்கு பேசப்பட்டிருந்தபோதிலும், தங்கள் கோணம் புதிய பரிமாணத்தில் அமைந்திருக்கிறது.
கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதி, ஆனந்தவிகடனில் வெளியான கதையை நான் படித்ததில்லை, எனினும் படத்தில் மேலும் வளர்க்காமல், சண்முகசுந்தரம் - மோகனா திருமணத்தோடு முடித்திருப்பது புத்திசாலித்தனமானது. அப்படியல்லாது, வயதான பின்னும் கதையை வளர்த்திருந்தால் சுவாரஸ்யம் குன்றியிருக்கும் என்பது, 'பலகோழி தின்ற வெரூஉ' ஆன ஏ.பி.என்னுக்கு தெரியாமல் போயிருக்காது.
அதுமட்டுமல்லாது, தில்லானா மூலம் அவரும் அவரது விஜலக்ஷ்மி பிக்சர்ஸும், மீண்டும் புத்துயிர் பெற்றனர் என்பது உண்மை. விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய 'நவராத்திரி' நூறுநாட்களைக்கடந்து ஓடியதும், அதே நிறுவனம் தயாரித்த 'திருவிளையாடல்' வெள்ளிவிழாவைக்கண்டதும், மீண்டும் 'சரஸ்வதி சபதம்' பத்தொன்பது வாரங்களைக் கடந்ததும் அனைவரும் அறிந்த ஒன்று. பின்னர் ஏ.எல்.எஸ்ஸுக்காக அவர் கதை வசனம் எழுதி இயக்கிய 'கந்தன் கருணை' நூறு நாட்களை மட்டுமே கடந்ததுடன், பின்னர் மீண்டும் விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய 'திருவருட்செல்வர்' எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. (இந்தக் காவியப்படம் ஏன் வெற்றி வாய்ப்பை இழந்தது என்பது இன்றளவும் ஆச்சரியம். இதுபற்றி நடிகர்திலகத்தின் கமெண்ட் : "மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் இருந்தும் பட்ட பாட்டுக்கு பலன் எங்கே?"). இதைத்தொடர்ந்து, ரங்கநாதன் பிக்சர்ஸுக்காக அவர் கதை வசனம் எழுதி இயக்கிய 'திருமால் பெருமையும்' சரியான அளவில் வெற்றியை ரீச் ஆகவில்லை. ஏ.பி.என்.சற்று துவண்டிருந்த நேரத்தில் அவரைத் தூக்கி நிறுத்த வந்த படம்தான் 'தில்லானா மோகனாம்பாள்'. இந்தப்படம் பெற்ற மாபெரும் வெற்றிதான் ஏ.பி.என்.னுக்கு புத்துயிரளித்து, புராணத்திலிருந்து சற்று திருப்பி 'வா ராஜா வா', 'திருமலை தென்குமரி', 'கண்காட்சி' என்று சமூகப்படங்களின் பக்கம் பார்வையைத்திருப்பியது.
நீங்கள் குறிப்பிட்டபடி, 'தில்லானாவின்' மாபெரும் வெற்றிதான், ஆனந்த விகடனில் கொத்தமங்கம் சுப்பு எழுதிய இன்னொரு கதையான 'ராவ்பகதூர் சிங்கார'த்தை 'விளையாட்டுப்பிள்ளை'யாக படமாக்கும் ஆவலை எஸ்.எஸ்.வசனுக்கு ஏற்படுத்தியது. அதே கொ.சுப்பு, அதே ஏ.பி.என்.,அதே நடிகர்திலகம், அதே பத்மினி, (ஜெமினியின் வழக்கத்துக்கு மாறாக) அதே கே.வி.மகாதேவன்... இப்படி எல்லாமும் 'அதே'வாக இருந்தும், அதே வெற்றி கிடைக்காமல் போயிற்று. (விளையாட்டுப்பிள்ளை மதுரையில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியதாக தகவல், எந்த தியேட்டர் போன்ற விவரங்களை நீங்கள்தான் சொல்ல வேண்டும்).
1968ல் அதிநாட்கள் ஓடிய படம், அதிக வசூலைக்கண்ட படம் என்பதோடு, தமிழக அரசின் 'சிறந்த இரண்டாவது படமாகவும்' தில்லானா மோகனாம்பாள் (அன்றிருந்த 'ஒன்றுபட்ட' தி.மு.க. அரசால்) தேர்வு செய்யப்பட்டது. (அந்த ஆண்டின் சிறந்த படம் விருதினையும் நடிகர்திலகத்தின் 'உயர்ந்த மனிதனே' பெற்றது).Quote:
Originally Posted by Murali Srinivas
அப்படி நான் நினைக்கவில்லை. காட்ஃபாதரில் விடோ மிக நிறைவாக இறந்தார். பேரனுடன் விளையாடிக்கொண்டு, மைக்கேல் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுவிட்டதைக் கண்ட பிறகு. பெரிய தேவரின் மரணம் அவ்வாறு இல்லாமல் சக்தியையும் (சின்னத்தூவலூரையும்) நட்டாற்றில் விட்டுவிட்டு நிகழ்வது. அது கதையில் மிகச் சரியான இடத்திலேயே நிகழ்ந்தது.விதைத்தது முளைக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே பெரிய தேவருக்கு. நிறைவில்லாத மரணம். அதனாலேயே நம்மை அது ஆட்டுகிறது.Quote:
1. PD கதாபாத்திரம் திரையில் இன்னும் அதிக நேரம் வரும்படி கதையிலும் திரைக்கதையிலும் சிறிது மாற்றம் செய்திருந்தால் இன்னும நன்றாக இருந்திருக்குமோ ??
அது மிகச் சாதாரணமாக ஆகியிருக்கும். குடும்பப் புகைப்படம், திருந்திய மாயன் என்றெல்லாம் எடுத்திருக்க வேண்டும். சக்தி மீது நம்பிக்கை பெருகுவதை பல காட்சிகளில் மிக அழகாக காட்டிவிட்டதாகவே நான் நினைக்கிறேன்.Quote:
Shakthi மனம் மாற வேறு காட்சிகளையும் உத்திகளையும் பயன்படுத்தி PD இறுதிவரை சக்தியுடன் இருக்குமாறு கதை அமைந்திருந்தால் ?????
பெரிய தேவருக்கு அடுத்து நான் ரசித்தது அந்த நாள் ராஜன், சிக்கலார், முதல் மரியாதை மலைச்சாமி. அதைப் பற்றி பிறகு எப்போதாவது எழுத முயல்கிறேன். ஆனால் எல்லாமே, என்னைப் பொறுத்தவரை, பெரிய தேவரோடு இணைத்துச் சொல்ல முடியாது.
என் அபிப்ராயத்தில் அவர் பல சோத்னை முயற்சிகளில் ஈடுபடத்தான் செய்தார். பல சமயம் ஒரு சாதாரண மிகையுணர்ச்சிப் படத்திலும் அசத்தும் பற்பல காட்சிகளைக் காணலாம்.Quote:
Idhuv, Sodhanai muyarchigalil avar adhigam eedupadaamal irukkavum, melum, iyalbaana nadippai perum veeriyathodum azhagunarchiyodum velippaduthakoodiya paathirangal (பெரிய தேவர் போல) avarukku adhiga alavil kidaikkamal ponadharku oru kaaranamaaga amaindhuvittadha ??? Theriyavillai... ???
முன்னொருமுறை இத்திரியில் நான் சொன்னது என்னவென்றால் காலம் மாற மாற கதை சொல்லும் உத்திகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. மெதுவாக (அந்தப் பய மெதுவாத்தேன் வருவேன்....மெதுவாத்தேன் வருவேன்"
எல்லாம் ஒன்றன்பின் ஒன்று சார்ந்த வளர்ச்சி தான். நாயகன் வானத்திலிருந்து வந்து குதித்து விடவில்லை. கல்யாணப் பரிசு, அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, உதிரிப்பூக்கள், மூன்றாம் பிறை எல்லாம் வந்தபிரகு தான் நாயகன் வரமுடியும். நேற்று "அஞ்சாதே" என்ற திரைப்படத்தைப் பார்த்தேன், இது போன்ற படங்கள் எடுக்க ஏன் நமக்கு இவ்வளவு நாள் ஆகியிருக்கிறது என்ற கேள்விக்கு பதிலில்லை.
அந்தந்த காலகட்ட வரையறைகளுக்குள் இயங்கியபோதும் சிவாஜியின் ஜொலிப்பு தனித்து தெரிகிறது தான் ஆச்சர்யம். அந்த காலத்திலேயே மிக அழகாக எடுக்கப்பட்ட "அந்த நாள்" போன்ற படங்களில் அவர் இன்னும் சிறப்பாகத் தெரிவது இதனால் தான்.
திரு.முரளி , தில்லானா பற்றி தகவல் சொன்னதற்கு முதலில் நன்றி..
சனிக்கிழமை அதிகாலை எங்கோ செல்ல வேண்டி இருந்ததால் நான் "இதோ தூங்கிவிடுவேன்" என்று அம்மாவிடம் வாய்தா வாங்கிக்கொண்டே படம் பார்த்துக்கொண்டிருந்தேன். இதோ ரயில் காட்சி முடிஞ்சதும், இதோ சிவாஜி-பாலையா திருவாரூர் போறதோட, கொட்டகையில வாசிக்கிறதோட, சபதக்காட்சியோட.....என்று தொடர் சங்கிலியாக நீண்டு கொண்டே போனது. திகட்டாத படம்.
தேதிகள் மட்டுமின்றி இங்கு எழுதப்படும் பதிவுகளை ரசித்துப் படித்து நீங்கள் நினைவில் வைத்துக்கொள்வது மிக சந்தோஷமாக இருக்கிறது. I feel flattered. Thank You.
:lol:Quote:
Originally Posted by முரளி ஸ்ரீநிவாஸ்
One example of perfect timing:
வெத்தலபெட்டி: கதவை துரந்திருந்தா நீ பாட்டுக்கு உள்ள வந்திடறதா ?
வைத்தி: பின்ன...சாத்தியிருந்தா அப்படியே போயிடறதா ? :rotfl:
Please don't hold back. I come here principally to read. I would hate to have an occasional contribution of mine come in the way of your posts.Quote:
Originally Posted by saradhaa_sn
Having said that, I shall write more quickly
பெரிய தேவர் - 5
என் குழந்தைகளிடத்தில் எனக்கு ஒரு பலவீனம் உண்டு. அவர்களுக்கு நான் அதிகமாக செல்லம் கொடுப்பதைத் தான் பார்க்கிறீர்களே....செவிசாய்க்க வேண்டிய நேரத்தில் அவர்கள் பேசுகிறார்கள். (I have a sentimental weakness for my children, and I spoil them as you can see; they talk when they should listen. )
இது காட்ஃபாதரில் பெரியவர், விடோ கொர்லியோன், பேசும் மிக அழகான வசனம். தவறு செய்த மகன் சான்டினோவை வெளியாட்கள் முன்னிலையில் கடிந்து கொள்ளும் இடத்தில் வரும் வசனம். அம்மனிதரின் கோபம் அவர் ஸ்டைலை இழக்கச் செய்யவில்லை. வெளி மனிதர்கள் சென்றபின் "உன் மூளை பழுதாகிவிட்டதா ?" என்றே திட்டுவார். ஆனாலும் மிதமாகவே.
பெரிய தேவர் அப்படி அல்ல. பெரிய தேவருக்கு சக்தி வந்ததிலிருந்தே ஏமாற்றம் தான். தெலுங்குப் பெண்தோழி, நகரத்துக்கு புலம்பெயர்ந்துவிட அவன் திட்டம் என்று. ஆனால் ஊரில் சக்தியால் பிரச்சனை கிளம்புகிறபோது கோபம்-ஏமாற்றத்துடன் சேர்ந்துகொள்கிறது.
அழைக்கப்பட்ட சக்தி அவருக்கு முன் நிற்காமல் பக்கவாட்டில் நின்று, அப்பாவிக்கு பின் நிற்கும். கணக்குப்பிள்ளையிடம் "எதற்காக அழைத்திருக்கிறார்" என்று சைகையில் கேட்டுக்கொண்டிருப்பான். பெரிய தேவர் ஒரு சாய்வு நாற்காலியில் சாயாமல் அமர்ந்திருப்பார். கைபனியனுக்குமேல் துண்டு போர்த்தி. "முன்னால் வா" என்று வலது கையால் சைகை செய்வார், எதன் மீதும் குறிப்பாக பார்வையை செலுத்தாமல்.
அவர் ஏன் கூப்பிட்டார் ? கோபமாக இருக்கிறா ? ஏன் ? இதுவரை நடந்தவற்றில் ஏதாவது அவரை கோபப்படுத்தியதா ? இவை சக்தி மனதில் மட்டும் இருக்கும் கேள்விகள் அல்ல. பார்வையாளர்கள் மனத்திலும். இந்த காட்சியில் ஓரிரு காமிரா கோணங்கள் இதை உணர்த்தும் வகையில் சக்தியின் நோக்கில் இருக்கும் (point of view shots)
அதனால் பெரிய தேவர் மீதே முழுக்கவனமும். இங்கு அவர் கதைமாந்தர் மட்டுமல்ல கிட்டத்தட்ட கதைசொல்லி.
"ஏன் போனீய ?" என்று கேட்கும்போது பார்வை நேராக யாருமில்லாத இடத்தில் பாயும்.
"கோவில் கும்பிடத்தானேய்யா" என்று பொறுப்பில்லத பதில் வந்த மாத்திரத்தில் ("ஐயோ" என்பதுபோல வாயை தட்டிக் கொள்ளும் கணக்குப்பிள்ளை) பெரிய தேவர் முதல் முறையாக மகனைப் பார்த்து "தர்க்கம் பண்றீய ?" என்பார்.
பானுவை காரணம் சொல்ல முயன்று, அது தவறை விட மோசமான காரணம் என்று சக்தி உணர்வதற்குள்
"பானு....பானு கோவில் பாக்கணும்னா பூட்டை உடைக்கணுமா ?" என்று கேட்டுவிட்டு மகனை கூர்மையாகப் பார்ப்பார். அவன் கூறும் பதிலை அளந்துகொண்டு. ஒரு தலைவனுக்கான பொறுப்பின் சுவடே இல்லாமல் அவன் இசக்கியை பழி சொல்ல.....
"ஓஹோ அப்பொ உங்க தலைமையில இசக்கி பூட்டை உடைச்சிறுக்கார். அப்பிடித்தானே ?" என்ற கேள்வியில் கடுங்கோபத்திலும் அவரிடமிருந்து பிரிக்கமுடியாதபடி கலந்திருக்கும் கிண்டல். சுட்டெரிக்கும் பார்வையில் தெளிவாகத் தெரியும் ஏமாற்றம். கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டதுபோலக் கூட இருக்கும்.
சக்தி:"என் தப்புத்தேன் யா"
கவனிக்கப்படவேண்டிய வசனம், பின்னர் ஒரு முறை படத்தில் வரும். அப்போது தான் சக்தி அதை மனமுணர்ந்து சொல்வான். அப்போது தான் அவன் தலைவன் ஆனது - சொக்காய் மாற்றிக்கொண்ட போது அல்ல.
இம்முறை இது இப்போதைய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லப்படும் வாய்வார்த்தை. அதை நன்கு உணர்ந்த பெரிய தேவர்:
"அப்பா ...ஒத்துக்கிட்டாகப்பா....உங்க தப்பில்லையா...என் தப்பு..
.....எலேய் அந்தப் பயகள எந்த வம்பு தும்புக்கும் போகாம இருக்கச் சொல்லு.........பஞ்சாயத்தில வேணா நான் மன்னிப்பு கேட்டுக்கிர்றேன்...என்ன பண்ண முடியும்"
முதல் பாதியில் உத்தரவு பிறப்பிக்கும் தலைவனின் தொனி. இரண்டாவது பாதியில், வரவிருக்கும் அவமானத்தை இப்போதே அநுபவிப்பதுபோல கூனிக்குறுகும் தொனியும் உடல்மொழியும் (''என்ன செய்ய முடியும்' என்பது கையே பேசிவிடும்).
"எசக்கி மன்னிப்பு கேட்கட்டும் ? எங்கே எசக்கி ?" என்று , நமக்குத் தெரிந்த அளவே தெரிந்த சக்தி கேட்க,
"எலே....ஒண்ணும் தெரியாம திர்ரவென் !" என்று வெடிப்பார்.
பானுவின் வருகையால் ஒரு பொய்யான இடைப்பட்ட அமைதி நிலவும். சக்தி கணக்குப்பிள்ளை பூசினாற்போல சொல்லும் அறிவுரையை எதிர்த்து வாதிட "அவுக சொல்றாஹல்ல ?.....கேட்டா கௌரவம் குறைஞ்சிரும் உங்களுக்கு..." என்றுவிட்டு...."போங்க" என்பார்.
பானு வந்த நொடி அமைதிக்குப் பிறகும் அவள் குரல் சன்னமாகவே ஒலிக்கும். மறுமுறை சொல்லும்படி ஆகும். இம்முறை காலில் விழும்போதும் கண்டுகொள்ளவில்லை தான். ஆனால் இது முற்றிலும் வேறு மாதிரி தொனிக்கும் நிராகரிப்பு.
உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு ஆதங்கத்தையும், கடுஞ்சினத்தையும், நெஞ்சறுக்கும் ஏமாற்றத்தையும் உணர்வடிவத்தில் (palpable) ஒரு நடிப்பு நான் பார்த்ததில்லை.
(தொடரும்)