Quote:
த: அதாவது நல்ல மனைவி பின் தூங்கி முன் எழுந்துகணம்.
மு: அப்படீன்னா என்னங்க?
த: கணவனுக்கு பின்னாடி தூங்கி முன்னாடி எழுந்துக்கணம்.
மு: அது எப்படிங்க முடியும், உங்களுக்கு முதுகு பக்கம் தூங்கிட்டு, முகத்துக்கு நேரா எழுந்துக்கறது எப்படி முடியும்.
த: :| அதுக்கு அப்படி அர்த்தம் இல்லை, கணவன் தூங்கினப்புறம் தூங்கி, அவன் எந்திரிகறத்துக்கு முன்னாடி எந்திரிக்கணம்.
மு: இது அதவிட கஷ்டமா இருக்கும் போல இருக்கே. நீங்க ராத்திரில பேய் மாதிரி, முழுச்சுகிட்டு ஏதோ புஸ்தகம் படிச்சு, மெதுவா தூங்கறீங்க, உங்களுக்கு அப்புறம் நான் தூங்கி, முன்னாடியே எப்படி எந்திரிக்கறது?
த: :| இது என்ன புதுசா? நான் தானே காப்பிப்போட்டு உன்னை எழுப்பவேண்டியதா இருக்கு தெனமும்.
மு: வேணா ஒண்ணு செய்யலாம்.
த: என்னா?
மு: நீங்க அலாரம் வெச்சு முன்னாடி எந்திரிச்சு, என்னை எழுப்பிவிட்டுட்டு, திரும்ப தூங்கிடுங்க. நான் பால் காப்பி போட்டு, திரும்ப வந்து உங்களை எழுப்புவேனாம்.
:rotfl2: