Quote:
எனவே, பாரதி விருதானாலும், எம்.எஸ். சுப்புலட்சுமி விருதானாலும், பாலசரசுவதி விருதானாலும் - எதை ஒப்பிட்டு நீங்கள் அவருக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி விருது வழங்கினீர்கள் என்று கேட்டால், சங்கீத ஞானத்தை ஒப்பிட்டு; குரலை ஒப்பிட்டு அல்ல. இசைஞானியினுடைய குரலுக்கும், எம்.எஸ். சுப்புலட்சுமியினுடைய குரலுக்கும் உள்ள வேறுபாட்டை நானும் அறிவேன் - நீங்களும் அறிவீர்கள் - ஏன், அவரும்கூட அறிவார். :lol:
ஆனால், எம்.எஸ். சுப்புலட்சுமியினுடைய இசை ஞானம் - அந்த இசை ஞானத்தை அப்பழுக்கில்லாமல் அப்படியே பெற்றவர் நம்முடைய இளையராஜா என்பதிலே (கைதட்டல்) எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை. அவருக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி விருது கொடுத்ததிலே நான் பெருமையடைகின்றேன் - மகிழ்ச்சியடைகின்றேன். அவருடைய தொண்டு மேலும் சிறக்க, இசை மேலும் புகழ் பெற, இந்த நாள் - விருது வழங்கிய இந்த நாள் - பயன்படும் என்று நான் நம்புகிறேன்.