Originally Posted by complicateur
சில நாட்களுக்கு முன் 'லக்' என்ற ஹிந்தி திரைப்படத்தைப் பார்க்கும் துர்பாக்கியம் எனக்கு நேர்ந்தது. அதில் கூட இயக்குனர் ஏதோ சொல்ல முற்பட்டிருக்கிறார். ஒரு மிக மோசமான திரைப்படத்தில் கூட படைப்பின் உண்மை என்று ஒன்று இருக்கிறது.
நமது திரைப்படங்களில் சில சமயங்களில் கதையை விடுங்கள், சில சமயம் கட்சிக்கு கட்சியே தொடர்பு இல்லாத அளவுக்கு திரைக்கதை அமைக்கப் படுவது வருந்தத்தக்கது என்பதே வாதம். "சார் மதுரை சார்ந்த சப்ஜெட் நல்லா போவுது சார். அதை எடுக்கலாம்..." என்று கதை விவாதத்தை தொடங்கும் ஆட்களே அதிகம்.