டியர் ஜீவ் சார்,
கனடாவில் "கர்ணன்" வெளியாகியுள்ள தகவலை, ஊர்-அரங்கம் மற்றும் காட்சி நேரங்களோடு நேர்த்தியுடன் அளித்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..!
"கர்ண"னின் வெற்றி விவரம் குறித்தும் தங்களிடமிருந்து அறிய ஆவலாய் உள்ளோம்..!
அன்புடன்,
பம்மலார்.
டியர் esvee சார்,
"பேசும் படம்" இதழிலிருந்து அரிய புகைப்படப் பொக்கிஷத்தை அளித்தமைக்கு குதூகலமான நன்றிகள்..!
நன்மை செய்து, நன்றி சொல்லி, நட்பை வளர்க்கும் தங்களின் நற்பண்பை மனமாரப் பாராட்டுகிறோம்..! அந்த உயர்ந்த நட்புப் பாதையில் தங்களுடன் கைகோர்க்கிறோம்..!
இதனை எழுதும்பொழுது இரு திரைப்பாடல்கள் என் நெஞ்சில் மின்னலாய் பளிச்சிடுகின்றன..!
"கூடும் உறவு கூட்டுறவென்று ஒன்றாய் வாழுங்கள் !
கூடியபிறகு குற்றம் காணும் கொள்கையைத் தள்ளுங்கள் !"
என்ற நடிகர் திலகத்தின் "என்னைப் போல் ஒருவன்" பாடலும்,
"ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி"
என்ற மக்கள் தில்கத்தின் "தொழிலாளி" பாடலும் நினைவில் நிழலாடுகின்றன..!
தங்களுக்கு மீண்டும் பாராட்டும், நன்றியும்..!
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் அன்பான பாராட்டுக்கு கனிவான நன்றி..!
'ஜெமினி சினிமா' 1.1.1983 இதழின் 'நினைத்ததும் நடந்ததும்' பகுதியில் வெளிவந்த இயக்குனர் கே.விஜயன் அவர்களின் கருத்துரை, ஒரு சுவாரஸ்யமான அரிய ஆவணப்பதிவு. இடுகை செய்தமைக்கு இனிய நன்றிகள்..!
[அட்டைப்படம் அட்டகாசப் படம்..!]
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகம் அளித்த பேட்டிகள் /
எழுதிய கட்டுரைகள் : 1
ஒலிம்பிக்ஸ் ஸ்பெஷல்
பொக்கிஷாதி பொக்கிஷம்
1996-ல் அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸை நேரில் கண்டு களித்த நடிகர் திலகம், அதுகுறித்து 'குமுதம்' வார இதழுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி
வரலாற்று ஆவணம் : குமுதம் : 19.9.1996
அட்டை
http://i1110.photobucket.com/albums/...GEDC6156-1.jpg
முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC6150-1.jpg
இரண்டாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...DC6151-1-1.jpg
மூன்றாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC6152-1.jpg
நான்காம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC6153-1.jpg
[இந்த நேர்காணல் அட்டையுடன் ஐந்து பக்கங்களை உள்ளடக்கியது.]
பக்தியுடன்,
பம்மலார்.
இன்று 28.7.2012 சனிக்கிழமை முதல், திருநெல்வேலி 'சென்ட்ரல்' திரையரங்கில், தினசரி 4 காட்சிகளில், நமது நடிகர் திலகத்தின் "எங்க மாமா".
தித்திக்கும் தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு இனிய நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் : 6
நடிகர் திலகத்தின் 84வது காவியம்
சித்தூர் ராணி பத்மினி [வெளியான தேதி : 9.2.1963]
பொக்கிஷாதி பொக்கிஷம்
காவிய விளம்பரம் : The Hindu : 14.1.1962
http://i1110.photobucket.com/albums/...GEDC6159-1.jpg
"சித்தூர் ராணி பத்மினி" முதல் வெளியீட்டு விளம்பரங்கள் தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 3
நடிகர் திலகத்தின் 194வது காவியம்
என்னைப் போல் ஒருவன்
[முதல் வெளியீட்டுத் தேதி : 18.3.1978 (தென்னகம்), 14.4.1978(சென்னை)]
முதல் வெளியீட்டில் அதிகபட்சமாக சென்னை 'தேவிபாரடைஸ்' திரையரங்கில் 70 நாட்களும் மற்றும் சேலம் 'நியூசினிமா'வில் 70 நாட்களும் ஓடிய சிறந்த வெற்றிக்காவியம்
பொக்கிஷாதி பொக்கிஷம்
மறு வெளியீட்டு விளம்பரம் : தினகரன்(மதுரை) : __.4.1991
http://i1110.photobucket.com/albums/...GEDC6162-1.jpg
முதல் வெளியீட்டில், ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான மதுரை 'தங்கம்' திரையரங்கில், 41 நாட்கள் ஓடி பெரும் வெற்றி..!
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
நடிகர் திலகம் ஆதங்கப் பட்டது போல் விளையாட்டு ஒலிம்பிக்ஸில் இந்தியா தங்கம் வெல்கிறதோ இல்லையோ, ஆவணங்களுக்கென்று ஒலிம்பிக்ஸ் வைத்தால் நடிகர் திலகம் நினைத்தது நடக்கும். அந்த பதக்கத்தை பம்மலார் வென்று இந்தியாவுக்கும் நடிகர் திலகத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளம் குளிர வைப்பார் என்பது திண்ணம்.
அட்டகாசம் சார்...
அகில இந்திய சிவாஜி மன்றம் நடத்தும் கர்ணன் 150வது நாள் வெற்றி விழா 04.08.2012 மாலை 4.30 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. திருமதி ராதிகா சரத்குமார், இயக்குநர் திரு பி.வாசு, திரு ஒய்.ஜி.மகேந்திரா, திரு மருதுமோகன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். இளைய திலகம் பிரபு அவர்கள் கேடயங்களை வழங்கி உரையாற்றுகிறார். நிகழ்ச்சிக்கான அழைப்பிதழின் மாதிரி இங்கே நம் பார்வைக்கு ...
http://i872.photobucket.com/albums/a...fainvite01.jpg
டியர் esvee சார்,
நன்றி! தூள் கிளப்பி விட்டீர்கள். இதுவரை பார்க்காத நடிகர் திலகத்தின் அபூர்வ ஸ்டில்லை பதித்து எங்கள் நெஞ்சில் நீங்கா இடத்தைப் பிடித்து விட்டீர்கள். பொக்கிஷமாக அதை இறுதி வரை பாதுகாத்து வைத்துக் கொள்வோம். மக்கள் திலகத்தின் மகத்தான ரசிகருக்கு என் கோடி நன்றிகள்.