'ஹேய் மேரே பேட்டே'('ஆ கலே லக் ஜா') "கேளாய் மகனே கேளொரு வார்த்தை"
http://www.youtube.com/watch?feature...&v=XHtv6KWsT5M
Printable View
'ஹேய் மேரே பேட்டே'('ஆ கலே லக் ஜா') "கேளாய் மகனே கேளொரு வார்த்தை"
http://www.youtube.com/watch?feature...&v=XHtv6KWsT5M
அன்புள்ள முரளி சார், வாசுதேவன் சார், பம்மலார் சார், ராகவேந்தர் சார், கோபால் சார், சந்திரசேகர் சார், மற்றும் சதீஷ் சார், எனது வேண்டுகோளை ஏற்று "உத்தமன்" திரை காவியத்தைப் பற்றிய தங்களது மேலான பதிவுகளை வழங்கியமைக்கு மிக்க நன்றி.
அன்பு பம்மலார் சார்.
உண்மையில் எதிர்பார்க்கவில்லை, இப்படி வந்து அசத்துவீர்கள் என்று. நமது திரியில் 'உத்தமன்' விளம்பர ஆவணத்தை முதல் முறையாக பதிவிட்டு பெருமை சேர்த்துள்ளீர்கள். அதிகமதிகம் நன்றிகள். தினத்தந்தியின் முதல் பக்கத்தில் கால்பக்க விளம்பரமாக வந்த, மதுரை நியூ சினிமாவில் 100-வது நாள்' விளம்பரத்தையும் பதிவிட்டு அசத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். 'தொடரும்' என்ற தங்கள் வாசகம் நம்பிக்கையூட்டுகிறது.
அன்பு முரளி சார்,
மதுரையில் உத்தமன் அட்டகாசத்தை அருமையாக விவரித்துள்ளீர்கள். பாடல் வரிகளை சிறப்பாக விளக்கியுள்ள விதம் அருமை. வழக்கம்போல மதுரையில் ஏ.சி.அரங்குகள் தோன்றிய விதம், அதில் இந்திப்படம் பார்த்த அனுபவம், நியூ சினிமாவில் உத்தமனின் வெற்றிநடை. இலங்கையில் அதன் அசாதாரண சாதனை என அனைத்து விவரங்களும் சூப்பர். இவற்றுக்காகவே தங்களை அடிக்கடி அழைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
அன்பு கோபால் சார்,
சந்திரசேகர் அவர்களைப்போலவே நானும் தங்களின் உத்தமன் வெளியூர் அனுபவத்தை எதிர்நோக்கியிருக்கையில், சென்னை சாந்தியில் முதல் நாள் அனுபவங்களைத் தந்து அசத்தி விட்டீர்கள். மிக்க நன்றி. (எனக்காக வாதாடியதற்காகவும் நன்றிகள்).
அன்பு ராகவேந்தர் சார்,
உத்தமன் வெளியீட்டின்போது, சாந்தியில் தங்கள் அனுபவங்களின் விவரிப்பு மிகவும் அருமை. அந்தப்படத்தை ஏழு முறையும் கிரௌன் திரையரங்கில்தான் பார்த்தேன் என்றாலும், சாந்தியின் அலங்காரங்களை வெளியில் நின்று ரசித்த அனுபவம் உண்டு. அப்போது எடுக்கப்பட்ட கருப்புவெள்ளை புகைப்படம் ஒன்று, அண்ணன் ஒரு கோயில் காலத்தில் சாந்தியில் நண்பர்கள் மத்தியில் வலம் வந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
அன்பு சந்திரசேகர் சார்,
நமது பம்மலார் அவர்கள் நம் அனைவர் மீதும் சமமாக அன்பு செலுத்துபவர். நம்மில் யார் அழைத்தாலும் வருகை தருவார். இம்முறை எனது அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு நம் அனைவர் சார்பிலும் நன்றிகள்...
அன்புள்ள வாசுதேவன் சார்,
உத்தமன் படத்தின் முதல்நாள் கடலூர் அனுபவம் நன்றாக இருந்தது. சற்று தேக்க நிலையின்போது வெளியான படமாதலால் முதல் நாளன்று சென்னை, மதுரை, திருச்சி நகரங்கள் தவிர மற்ற ஊர்களில் துவக்கம் கொஞ்சம் மந்தமாக இருந்தது உண்மை. பின்னர் பிக்-அப் ஆனது. நீங்கள் குறிப்பிட்ட அந்தக்காட்சி குடும்பத்தோடு பார்க்கும் காட்சியல்ல என்பதால் நீங்கள் நெளிந்திருக்க வாய்ப்புண்டு.
படத்தின் ஸ்டில்கள் அனைத்தும் அருமை. நன்றிகள்...
தலைவரே,
என் பட அனுபவங்கள் 1964- 1966- நெய்வேலி(பெற்றோர் ),ஆத்தூர் (தாத்தா வேலை பார்த்த ஊர்)சார்ந்தும்,
1966-1968- நெய்வேலி,கடலூர் (தாத்தா மாற்றல்), 1968- 1975- நெய்வேலி,கும்பகோணம் சார்ந்தும் (ஒரே ஒரு மதுரை exception,கொஞ்சம் திருச்சி ),
1975-1993- நெய்வேலி,சென்னை (படிப்பு,மேற்படிப்பு,வேலை) சார்ந்துமே வரும். 1991-1994 நிறைய ஊர்கள் போனதால் சேலம்,ஈரோடு ,வேலூர்,பெங்களூர் ,கோவை நிறைய பார்த்துள்ளேன்.1994 லிருந்து இந்தியா டாடா காட்டியதால் விடுமுறையில் சென்னையில் அவ்வப்போது ஒன்றிரண்டு. மற்றதெல்லாம் சிங்கப்பூர் தான்.
அன்புள்ள ராகவேந்தர் சார்,
தங்கள் பதிவுகள் அனைத்துக்கும் மிக்க நன்றி. மௌனம் கலைத்து திரிக்கு திரும்பியதற்கு வாழ்த்துக்கள். 'உத்தமன்' வெள்ளிவிழா விளம்பரத்துக்கு நன்றிகள்.
நடிகர்திலகம் நினைவு இல்லம் சம்மந்தமாக எனது பதிவுகளில் (நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல) நடிகர்திலகத்தின் குடும்ப உறுப்பினர்களைத் தாக்கியோ அல்லது குறை சொல்லியோ நான் எதையும் எழுதவில்லை. எனது பதிவுகள் நீக்கப்படாமல், திருத்தப்படாமல் அப்படியேதான் இருக்கின்றன. உங்கள் குற்றச்சாட்டுகளைப் படித்துவிட்டு யாரேனும் என் பதிவுகளைப் படித்தால், இதில் ஆட்சேபிக்க என்ன இருக்கிறது என்று வியப்படைவார்கள். சரி, அப்படியே நீங்கள் ஆட்சேபமாக நினைக்கும் பகுதியான, நடிகர்திலகத்தின் பழைய இல்லத்தை (தற்போது 'சிவாஜி பிலிம்ஸ்' இயங்கிவரும் இடத்தை) நினைவு இல்லமாக மாற்றும் யோசனை தவறென்றால் அதைக் கண்டித்திருக்கலாம். அதற்கு எல்லா உரிமையும் தங்களுக்கு இருக்கிறது.
ஆனால் அதற்காக, ஒரு யோசனையை வெளியிட்ட காரணத்துக்காக, நான் ஏதோ சிவாஜி குடும்பத்துக்கு எதிரானவன் போலவும், அவர்களைத் தூற்றுவதையெ தொழிலாகக் கொண்டு அலைபவன் போலவும், ராம்குமார், பிரபு ஆகியோரைப் பிடிக்காதவன் போலவும் சித்தரிப்பதும்,
என் நினைவு தெரிந்த நாளில் இருந்தே நடிகர்திலகத்தின் தீவிர ரசிகனாக இருந்து மன்றங்களில் இணைந்து செயல்பட்டு, அவரது புகழைப்பாடி வந்திருக்கும் ஒருவனை, இன்றைக்கும் யாரேனும் அவரைக் குறைசொல்லும் பட்சத்தில் அவர்களுக்கு சரியான தகுந்த பதிலடி கொடுத்துவிட்டு மறுவேலை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டவனை, நடிகர்திலகம் விரல் நீட்டிய திசையில் போராட்டங்களில் இறங்கி சிறைகளைக் கண்டவனை பார்த்து 'இவன் உண்மையான ரசிகன் அல்ல' , 'இவனை ரசிகர் பட்டியலில் சேர்க்க முடியாது' என்றெல்லாம் வரையறுக்கும் உரிமையை யார் வழங்கியது என்பது தெரியவில்லை. கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் அது தங்கள் சுதந்திரமாகக் கூட இருக்கலாம்.
"எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் இப்போது செயல்படவில்லை. அதனால் அதை நினைவு இல்லமாக்கி விட்டனர். ஆனால் சிவாஜி பிலிம்ஸ் இப்போதும் அந்தக்கட்டிடத்தில் முனைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் கைவைக்க முடியாது" என்பது தங்கள் பதிலாக இருந்திருந்தால் முடிந்தது விஷயம். அதைவிட்டு என் ரசிகத்தன்மை, நடிகர்திலகத்தின் மேல் எனக்குள்ள அபிமானம், ஈர்ப்பு, பிடிப்பு இவற்றைஎல்லாம் சந்தேகத்துக்கு இடமாக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ரசிகர்கள் உணர்ச்சி வசப்படுவது போல, நடிகர்திலகத்தின் குடும்ப உறுப்பினர்களும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்பட வேண்டாம். மெதுவாகவே நிறுத்தி, நிதானமாக செயல்படட்டும்.
என்ன இப்போ, 12 வருஷம்தானே ஆச்சு?..
தங்கள் கணக்கு சரிதான் கோபால். நான்கு தான் வரவேண்டும். நான்காவதை சொல்லாமல் விட்டு விட்டேன். அதை சொல்லும் நிர்ப்பந்த்தை தாங்களே உருவாக்கி விட்டீர்கள்.
நடிகர் திலகத்தின் புகழை பரப்புவதில் கோபால் சாரின் நடிப்புப் பள்ளி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது, அதனை அவர் முனைப்புடன் செயல்படுத்தி எழுதி முடிப்பார் என்பதை எதிர்பார்த்தது...
மற்றவர்களை எழுத வைக்க வேண்டும் என்பதற்காக தேவையற்ற பதிவுகளை இவர் எழுதி மன சஞ்சலத்தை உண்டாக்குவார் என்பதை எதிர்பார்க்காமல் விட்டோமே என்பதை நினைத்து....
இந்த மய்யம் தாண்டி நடிகர் திலகத்தின் ரசிகர்கள், அவருடன் உழைத்தவர்கள் ஏராளமாக இருப்பார்கள், அவர்களுக்கு இங்கு மிகச் சிறப்பாக நடிகர் திலகத்தின் புகழை பரப்பி வருவதை எடுத்துக் காட்ட வேண்டும் என்ற முயற்சியில், இங்கு எழுதுபவர்களின் புலமையை, திறமையை, ரசிப்புத் தன்மையை உரிய முறையில் மேலும் உலகெங்கும் பரப்ப வேண்டும் என்கிற ஆவலில் அதற்குரிய முயற்சி மேற்கொண்டது...
நடிகர் திலகத்தின் சிறப்பை நாம் எழுதும் போது, அவர் புகழைப் பரப்பும் நம்முடைய முயற்சியில் ஈடுபடும் போது, அதனை திசை திருப்பும் முயற்சிகள் நம் நண்பர்களாலேயே வரும் என்பதை எதிர்பாராமல் இருந்தது...
கோபால் என்கிற சிறந்த எழுத்தாளருக்குள் அவ்வப்போது மற்றவர்களைப் புண்படுத்துவதைப் பற்றிக் கவலைப் படாமல் எழுதக் கூடிய மனப்பான்மை அப்படியே இருக்கும், அது உடன் பிறந்தது, அது மறையாது என்பதை உணராமல் இருப்பது...
இவையெல்லாம் என் நான்காம் வருத்தத்தை தற்போது உண்டாக்கி விட்டன.
இந்த நான்காம் வருத்தத்திற்கு உள்ள பெருமை ...
இது மற்ற மூன்றை விட வலிமையானதாகும்.
ராகவேந்தர் சார்,
அடிக்கடி கோபிக்கிறீர்கள். நாங்கள் எல்லோருமே அவரின் பக்தர்களே. அவர்தான் எங்கள் உயிர்மூச்சு. ஆனால் சில விவாதங்கள் சீரியஸ் ஆக போகும் போது சுலபமாக்கவே முயல்கிறேன். என்னால் முடிந்த வரை. நான் திரியின் நண்பர்களின் மேல் கொண்ட நேசம் நிஜமானது. நீங்கள் புரிந்து கொண்டால்.
அவர் மறைந்த போது தமிழ்நாட்டின் கண்ணியே என்னை விட்டு அகன்றது போல நாலு நாள் சோறு தண்ணியில்லாமல் கதறி துடித்தவன். சிலையை பார்த்து வணங்கவென்றே ஒரு முறை இந்தியா வந்து போனவன். அவர் புகழுக்கோ, அவரை நேசிப்பவர்களுக்கோ என்னால் ஒரு குறையும் வராது சார். தங்களை மிகவும் மதிப்பவன் என்ற முறையில் இதை தெரிய படுத்துகிறேன்.
டியர் முரளி சார்
உத்தமன் பற்றிய தங்களின் நினைவலைகள் உன்னதம். உத்தமனைப் பற்றி மட்டும் விளக்காமல் மதுரை திரையரங்குகளின் குளிர்சாதன வசதி விவரங்களை மறக்காமல் ஞாபகம் வைத்து எழுதி ஆச்சரியப் பட வைத்து விட்டீர்கள். உத்தமன் எப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளிவந்தது என்ற விவரங்களும் அருமை. Aa Gale Lag Jaa பார்த்த விவரங்கள் அருமை. நான் உத்தமன் பார்த்து முடித்த பின்தான் அதே ரமேஷ் திரையரங்கில் Aa Gale Lag Jaa வைப் பார்த்து ரசித்தேன். சசிகபூர் என்றாலே அவ்வளவாக எனக்குப் பிடிக்காது. ஆனால் அந்தப் படத்திலிருந்து சசிகபூர் படங்களை விரும்பிப் பார்க்க ஆரம்பித்தேன். மிஸஸ் பட்டோடி நவாபும் அருமையாக செய்திருப்பார்கள்.
என் தம்பி படத்தின் மூலப்படமான தெலுங்கு படத்தை ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் வி.பி.ராஜேந்திர பிரசாத் எடுத்தார் என்பது எனக்குப் புது செய்தி. அந்தப் படத்தின் பெயரை தெரிந்தால் எனக்குத் தெரிவியுங்கள். அதே போல இன்னொரு சந்தேகம். நான் உத்தமன் ரிலீசில் பார்த்தபோது ஒருமுறை நமது ரசிகர்கள் நிறைய வேன்களிலும் லாரிகளிலும் சென்னை நோக்கிப் பயணப்பட்டதை (நாள் நினைவில்லை) பார்த்தேன். அனேகமாக அது நடிகர் திலகம் இந்திரா காங்கிரசில் இணைந்த விழாவாகத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு. அதைப் பற்றிய மேலதிக விவரங்களை விவரமாக அளிக்க தங்களால்தான் முடியும். நேரம் கிடைக்கும் போது அதுபற்றிப் பதிவிடுமாறு உரிமையுடன் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நான் அப்போது SSLC வரக்கால்பட்டு என்ற கிராமத்தில் (கடலூரிலிருந்து ஒரு பத்து கிலோமீட்டர் தள்ளி) படித்துக் கொண்டிருந்தேன். படிப்பில் முழு கவனமும் செலுத்தவேண்டி அம்மா கண்டிப்புடன் இருந்ததால் தலைவர் சம்பந்தப்பட்ட சில விஷயங்கள் மிஸ்ஸிங். அதனால்தான்.
உத்தமனை ரிலீஸுக்கு மறுநாள் மாலைக்காட்சி பார்த்து ரசித்ததை அழகாக தங்களுக்கே உரிய பாணியில் அனைத்து விஷயங்களையும் ஒன்று விடாமல் பதித்து இங்கே அனைவரையும் மகிழச் செய்து விட்டீர்கள். அதற்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள்.
அதே போல மாஸ்டர் டிட்டோவாக வரும் சிறுவன் இப்போதைய இந்திப் பிரபலம் ஆமிர்கானோ என்று ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. கிட்டத்தட்ட முகம் அது மாதியே இருந்ததால் ஒரு குழப்பம். இன்று refer செய்து பார்த்ததில் இல்லை என்று தெரிந்தது. இந்திப் படத்திலும் அதே டிட்டோதான்.
சற்று இடைவெளிக்குப் பிறகு பதிவாகியிருக்கும் தங்களின் அருமையான பதிவை இன்று செகண்ட் ஷிப்ட் முடித்து விட்டு (2.00 pm to 10.00 pm) மீண்டும் இருமுறை படித்து விட்டு இந்த நன்றிப் பதிவை இடுகிறேன். தங்கள் பதிவை அசை போட்டவாறே உறங்கப் போகிறேன். நன்றிசார்.
டியர் பம்மலார் சார்!
கார்த்திக் என்ற இரும்பு ஈர்த்த காந்தமாகி விட்டீர்கள். அதனால் லாபம் எங்களுக்கு. உத்தமன் இன்றுமுதல் வெளியீட்டு விளம்பரம் அசத்தல். மனமார்ந்த என் நன்றிகள் தங்களுக்கு.
முரளி சார்
ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் வி.பி.ராஜேந்திர பிரசாத் அவர்களின் மகன் தானே இப்போதைய பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு?
தந்தையும் தனயனும்
http://www.myfirstshow.com/newsimages/vbp.jpg
தெலுங்கு பாடும் 'உத்தமன்' (பிரேமலோன அந்தம் உந்தி)
http://www.youtube.com/watch?v=Su9RvVlNJL0&feature=player_detailpage
அதிரே பில்ல சரி (ஹரி ஓம் ரங்கா ஹரி)
http://www.youtube.com/watch?v=zaRZXq-yjZc&feature=player_detailpage
துந்தரி பாபு (கேளாய் மகனே)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=mr0hl7Uevk0
கோ,
திட்டித் தீர்க்காதே
உத்தமனைப் பற்றிய என் பதிவை பாராட்டிய அனைத்து நல் இதயங்களுக்கும் நன்றி.
கோபால், ராகவேந்தர் சார், வாசு ஆகியோரின் உத்தமன் பட அனுபவங்களுக்கும் நன்றி.
வரப் போகும் கார்த்திக் அவர்களின் கிரௌன் தியேட்டர் அனுபவங்களுக்கு அட்வான்ஸ் நன்றி.
எங்கள் அருமை சுவாமியின் ரிலீஸ் ஆவணப் பதிவிற்கு நன்றி. ராகவேந்தர் சாரின் உத்தமன் இலங்கை வெள்ளி விழா ஆவணத்திற்கு கோடானு கோடி நன்றி.
வாசு சார்,
நீங்கள் குறிப்பிடும் நிகழ்வு காங்கிரஸ் இணைப்பு விழா அல்ல.அது 1976-ம் ஆண்டு பிப்ரவரி 15 ஞாயிறன்று சென்னை கடற்கரையில் அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா அம்மையார் அவர்கள் முன்னிலையில் ஏற்கனவே நடந்து முடிந்திருந்தது. அதாவது நமது உனக்காக நான் வெளியான பிப்ரவரி 12-ந் தேதிக்கு நான்கு நாட்களுக்கு பிறகு நடந்தது.
நான் என்னுடைய நேற்றைய பதவில் குறிப்பிட்டிருப்பது போல உத்தமன் வெளியான நேரத்தில் இந்திரா அம்மையார் அவர்களின் 20 அம்ச திட்டத்தை தமிழகமெங்கும் மக்களுக்கு எடுத்து சொல்ல ஒரு யாத்திரை மேற்கொண்டிருந்தார் நடிகர் திலகம். அந்த நிகழ்சிக்காக கடலூருக்கோ பாண்டிசேரிக்கோ அவர் வந்திருக்கலாம். அந்த விழாவில் கலந்து கொள்ள நமது ரசிகர்கள் வான் மற்றும் பஸ்களில் சென்றதை நீங்கள் பார்த்திருக்க கூடும். நீங்கள் சொல்லும் காலயளவு, அந்த நேரத்தில் நடிகர் திலகம் மேற்கொண்ட இந்த சுற்றுப் பயணம் ஆகியவற்றை வைத்து இதுவாகத்தான் இருக்கும் என்ற முடிவிற்கு வர தோன்றுகிறது. எனக்கு தெரிந்து பெரிய அரசியல் மாநாடு அல்லது விழா நடைபெற்ற நினைவு இல்லை.
அன்புடன்
ஆம் வாசு சார். வி.பி.ராஜேந்திர பிரசாத் அவர்களின் மகன்தான் இன்றைய தெலுகு படஉலகின் ஹீரோ-களில் ஒருவரான ஜகபதி பாபு.
ஒரு காலண்டர் ஆண்டில் இரண்டு பேர்களுக்கு ஒரே எண்ணிக்கையில் படங்கள் வெளியாகின்றன. 8 படங்கள். அவற்றில் ஒருவருக்கு ஒரு சில படங்கள் ஓடுகின்றன. ஒரு சில படங்கள் ஓடவில்லை [4 முதல் 6 வாரங்கள்]. அது சாதனை என்று சொன்னால் வெளியான 8 படங்களும் 9 வாரத்திற்கு மேல் ஓடியதை என்ன பெயரிட்டு அழைப்பது?
சாதனை புரிந்த படம், அதிக நாட்கள் ஓடிய படம் என்று சொல்லப்படும் படம் அதை விட குறைவான நாட்கள் ஓடிய படம் பெற்ற வசூலை விட பல்லாயிரங்கள் பின் தங்கியதே, அப்போது எது சாதனை?
இரண்டு வேடங்கள் இல்லாமல் இரண்டு நாயகியர் இல்லாமல், 8 சூப்பர் ஹிட் பாடல்கள் இல்லாமல் 5,6 சண்டைக் காட்சிகள் இல்லாமல் இப்படி எந்த மசாலா சேர்க்கையும் இல்லாமல் அப்படிபட்ட மசாலா சேர்க்கை உடைய படத்தின் வசூலை அதை விட ஒரு நாள் குறைவாக ஓடி கிட்டத்தட்ட equal செய்ததே எங்கள் காவியம். யோசித்து பாருங்கள், நாயகனுக்கு பாடல் காட்சி கிடையாது, சண்டைக் காட்சி கிடையாது, ஏன் மீசையே கூட கிடையாது. இருந்தும் தமிழ் சினிமாவின் அற்புத காவியம் நடிகர் திலகத்தின் புகழோவியம் தில்லானா புரிந்த சாதனைக்கு ஈடாகுமா?
மதுரை சிந்தாமணியில் ஓடிய நாட்கள் - 132
மொத்த வசூல் - Rs 3,47,167.13 p.
[மற்ற படங்களின் வசூல் விவரங்களும் எங்களிடம் உள்ளன ஆகவே யாரும் மீண்டும் இதை விட வசூல் என்று அள்ளி விட வரவேண்டாம்].
மதுரை மாநகரில் 1968-ம் ஆண்டில் சிவாஜியின் சாதனை
1968
1. திருமால் பெருமை - ஸ்ரீதேவி - 71 நாட்கள்
2. கலாட்டா கல்யாணம் - ஸ்ரீமீனாட்சி - 70 நாட்கள்
3. ஹரிச்சந்திரா - கல்பனா - 63 நாட்கள்
4. என் தம்பி - சென்ட்ரல் - 84 நாட்கள்
5. தில்லானா மோகனாம்பாள் - சிந்தாமணி - 132 நாட்கள்
6. எங்க ஊர் ராஜா - நியூ சினிமா - 72 நாட்கள்
7. லட்சுமி கல்யாணம் - ஸ்ரீதேவி - 60 நாட்கள்
8. உயர்ந்த மனிதன் - சென்ட்ரல் - 70 நாட்கள்
ஏராளமான முறை சொன்னாலும் கூட சலிக்காது நாங்கள் சொல்லக்கூடிய ஒரு உண்மை - மதுரை என்றென்றும் நடிகர் திலகத்தின் கோட்டை.
அன்புடன்
அன்புள்ள வினோத் சார்,
மிகுந்த தயக்கத்துடனும், மிகுந்த மன வருத்ததுடனும் இந்த open letter -ஐ உங்களுக்கு எழுதுகிறேன். நியாயமாக இந்த பதிவை எம்.ஜி.ஆர். அவர்களின் திரியில்தான் பதிவிட்டிருக்க வேண்டும். ஆனால் அங்கே முன் காலங்களில் சிலர் வெளிப்படுத்திய கோவம், வெறுப்பு ஆகியவற்றை நினைவில் கொண்டு இந்த பதிவை இங்கே இடுகிறேன்.
நீங்கள் இந்த ஹப்பிற்கு வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. உங்களிடம் அலைபேசியில் ஒரு முறை பின்னர் திரிகளில் இரண்டு மூன்று முறை interact செய்திருக்கிறேன் எனபதை தவிர உங்களிடம் அதிக பரிச்சயமில்லை எனக்கு. ஆனால் உங்களைப் பற்றி சுவாமி அவர்களும், ராகவேந்தர் சார் அவர்களும், வாசு அவர்களும், சுப்பு அவர்களும் நிறைய சொல்லியிருக்கிறார்கள்.ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் ஒரு perfect gentleman என்று. அதை உண்மை என்று உணர்கிறேன். ஆனாலும் ஒரு பெரிய வருத்தம்.
நான் இங்கே இயங்குவது எந்த அடிப்படையில் எனபதை சொல்லி விடுகிறேன். நான் ஒரு சிவாஜி ரசிகன், சிவாஜியை மிகவும் ரசிப்பவன், அவர்தம் பட சாதனைகளை குறிப்பாக எங்கள் மதுரையில் நிகழ்தியவற்றை இங்கே பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருப்பவன். அது போன்றே நீங்கள் எம்.ஜி.ஆர். அவர்களின் ரசிகர். எம்.ஜி.ஆர். அவர்களை மிகவும் ரசிப்பவர். அவர்தம் சாதனைகளை பதிவிடுவீர்கள். எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன், உங்களுக்கு பிடித்ததை நீங்கள் செய்கிறீர்கள். இந்த அடிப்படை புரிதல் இருப்பதனால்தான் உங்கள் பதிவுகளை நான் ஒரு புன் சிரிப்போடு படித்து விட்டு போய்க் கொண்டிருப்பேன். நான் மதுரையில் சிவாஜியின் சாதனைகளைப் பற்றி எதாவது சின்னதாக எழுதினால் கூட மறுநாள் உங்கள் பதிவு வரும், மதுரையில் எம்.ஜி.ஆர். சாதனை என்று எதையாவது பதிவிடுவீர்கள்.[ஒரு முறை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களைப் போட்டு எம்.ஜி.ஆர். மாநகரம் என்றெல்லாம் எழுதியிருந்தீர்கள்]. அதை நீங்களாகவே செய்கிறீர்களா இல்லை மதுரை வாழ் உங்கள் தரப்பு ரசிகர்கள் உங்களை நிர்பந்திதித்து இது போல் எழுத வைக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. இருப்பினும் மேலே சொன்னது போல் நான் இதுவரை உங்கள தகவல்களை அவை தவறாக இருந்த போதும் அதைப் பற்றி comment செய்ததில்லை. இப்போது செய்யாமல் இருக்க முடியவில்லை.
ஒவ்வொரு ரசிகரும் தங்கள் அபிமான நடிகரின் படங்களை சற்று boost செய்வது வழக்கம்தான். ஆனால் ஒன்றை பத்தாக சொல்வது எல்லாம் too much.இன்றைய இணையம் எனபது நேற்றைய இன்றைய வரலாறுகளின் பெட்டகமாகவும், ஆவணமாகவும் எதிர்கால சந்ததியினருக்கு விளங்கப் போகிறது எனும் போது அவற்றில் தவறான தகவல்களை தெரிந்துக் கொண்டே ஆவணப்படுத்துவது எனபது வரலாற்று பிழை.
திரும்ப திரும்ப வரும் உங்கள் தவறான தகவல்களை மட்டும் அதிலும் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். மதுரையில் 133 நாட்கள் மட்டும் ஓடிய நம் நாடு படத்தை 147 நாட்கள் ஓடியது என்ற தவறான தகவலை இதுவரை 6 முறை பதிவு செய்திருக்கிறீர்கள். இதனால் நீங்கள் அடையும் லாபம் என்ன? [இத்தனை நாட்கள் ஓடியும் அதை விட குறைந்த நாட்கள் ஓடிய [117 நாட்கள்] சிவந்த மண் பெற்ற வசூலை விட நம் நாடு பல்லாயிரங்கள் பின் தங்கியது என்ற வரலாற்று உண்மையை இங்கே பதிவு செய்ய வேண்டும்].
மதுரை தங்கத்தில் நாடோடி மன்னன் மட்டுமே எம்.ஜி.ஆர்.படங்களில் 100 நாட்கள் ஓடியது எனபது உலகறிந்த உண்மை. அப்படியிருக்க தங்கத்தில் வெளியான மலைக்கள்ளன் படத்தை 100 நாட்கள் பட்டியலில் சேர்கிறீர்கள் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? தியேட்டர் பெயரை சேர்த்துக் கொடுத்தால் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதால் தியேட்டர் பெயரே போடாமல் பதிவிடுகிறீர்கள். அது போலவே உங்கள் 100 நாட்கள் பட்டியலில் இடம் பெற்ற மகாதேவி, பெரிய இடத்துப் பெண், ஆயிரத்தில் ஒருவன் [இன்னும் 10 படங்களுக்கு மேல் இருக்கின்றன] போன்ற எந்த படமும் மதுரையில் 100 நாட்கள் ஓடவில்லை எனபது உங்களுக்கே தெரியும். இருந்தும் மீண்டும் மீண்டும் அதே தவறான தகவலை பதிவிடுகிறீர்கள். இதையே நீங்கள் 2012 செப்டம்பர் மாதம் வரை பதிந்திருந்தால் நான் உங்களை கேள்வியே கேட்டிருக்க மாட்டேன். ஆனால் 2012 அக்டோபர் மாதத்திற்கு பின்னும் நீங்கள் இதை எழுதுவது மிகுந்த வருத்தத்தை தருகிறது. நான் சொல்வது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இன்று இந்த பதிவை இடுவதற்கு கூட காரணம் நீங்கள் "மதுரை சாதனைகள்" தொடரும் என்று குறிப்பிட்டிருப்பதனால்தான்.
ஒரு சிவாஜி ரசிகனாக இல்லாமல் மதுரை மண்ணின் மைந்தனாக நான் உங்களை வேண்டி கேட்டுக் கொள்வதெல்லாம் எங்கள் ஊரைப் பற்றிய திரைப்பட தகவல்களை இணையத்தில் பதிவிடும் போது தயவு செய்து தவறான தகவல்களை தவிருங்கள் என்பதுதான். இதற்கு மேல் இந்த விவாதத்தை தொடரவோ முன்னெடுத்து செல்லவோ நான் விரும்பவில்லை.
எனக்கு மிகவும் பிடித்த எம்.ஜி.ஆர்.அவர்களின் படப் பாடல் வரிகளைத்தான் இறுதியாக குறிப்பிட விரும்புகிறேன்.
தவறு என்பது தவறி செய்வது
தப்பு எனபது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்
தப்பு செய்தவன் வருந்தியாகணும்
சரியான முறையில் இந்த பதிவை எடுத்துக் கொண்டு தோழமை உணர்வுடன் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கையில்
அன்புடன்
எம்மை வரவேற்றுப் பாராட்டிய கோல்ட்ஸ்டார், பெரியவர் சுப்ரமண்யம் ராமஜெயம் சார், அறிவுஜீவி அடிகளார், ரசிகவேந்தர், சந்திரசேகரன் சார், மெஸ்மெரிஸ மன்னர் mr_karthik, நெய்வேலியார் மற்றும் முரளி சார் ஆகியோருக்கு எனது அன்பான நன்றிகள் !
கார்த்திகேயரின் புண்ணியத்தில் அனைவரது ஒருங்கிணைந்த பங்களிப்புகளால் "உத்தமன்" திருவிழா நமது திரிவிழாவாக களைகட்டிவிட்டது !
அன்புடன்,
பம்மலார்.
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :29
நடிகர் திலகத்தின் 184வது திரைக்காவியம்
உத்தமன் [வெளியான தேதி : 25.6.1976]
தமிழகத்தில் சூப்பர் ஹிட் ! இலங்கையில் பம்பர் ஹிட் !
38வது ஆண்டு துவக்கம் : பொக்கிஷாதி பொக்கிஷம்
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 25.6.1976
http://i1110.photobucket.com/albums/...d8eba7fa71.jpg
குறிப்பு:
"உத்தமன்" சென்னையில்:
1. சாந்தி - 70 நாட்கள்
2. கிரௌன் - 70 நாட்கள்
3. புவனேஸ்வரி - 63 நாட்கள்
"உத்தமன்" ஊர்வலம் வருவார்.....
பக்தியுடன்,
பம்மலார்.
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :30
நடிகர் திலகத்தின் 184வது திரைக்காவியம்
உத்தமன் [வெளியான தேதி : 25.6.1976]
தமிழகத்தில் சூப்பர் ஹிட் ! இலங்கையில் பம்பர் ஹிட் !
38வது ஆண்டு துவக்கம் : பொக்கிஷாதி பொக்கிஷம்
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 1.10.1976
http://i1110.photobucket.com/albums/...2a4bb5a0e4.jpg
குறிப்பு:
இந்த 100வது நாள் விளம்பரம் நமது நடிகர் திலகத்தின் 49வது அவதாரத் திருநாளன்று [1.10.1976] கொடுக்கப்பட்டது. 1.10.1976 அன்று "உத்தமன்" திரைக்காவியத்தின் 99வது நாள். மேலும், 1.10.1976, சரஸ்வதி-ஆயுத பூஜை தினம், நாளிதழ்-பத்திரிகை அலுவலகங்களுக்கு விடுமுறை நாள். எனவே 2.10.1976 தேதியிட்ட நாளிதழ் வெளிவரமுடியாத காரணத்தினால், 1.10.1976 அன்றே "உத்தமன்" திரைக்காவியத்தின் 100வது நாள் விளம்பரம் அளிக்கப்பட்டது.
"உத்தமன்" ஊர்வலம் வருவார்.....
பக்தியுடன்,
பம்மலார்.
என்ன mr_karthik, சந்தோஷம்தானே...!
இனிய நண்பர் திரு முரளி சார்
உங்களின் பதிவுக்கு எனது பதில் pm ல் பார்க்கவும் . நன்றி
VERY VERY SESIBLE AND APT REPLY FOR EVERY ONE MURALI SIR. FOR FUTURE GENERATIONS WE HAVE TO HIGHLIGHT ALL THESE FACTS OTHERWISE WE ARE FAILING OUR DUTIES TO OUR NADIGAR THILAGAM. PL KEEP IT UP.
UTTAMAN 100days andsilver jubliee and srilanka sadhanai proof given at right time kudos to pammalar sir,
வினோத் சார்,
இது ஒரு திறந்த யுகம். கடந்த காலங்களில் வியாபார தேவை கருதி மனமாச்சர்யங்கள் , தவறான தகவல்கள் கட்டவிழ்த்து விட பட்டதை நாங்கள் கவலை பட்டதே இல்லை. எங்களை நடிகர் என்ற முறையில் மிக மிக கவர்ந்த நடிப்பு கடவுளை தொழ அவர் விட்டு சென்ற படங்களே போதும் . உங்களை பார்த்து நாங்கள் பதிவுகள் இடுவதில்லை .ஏனென்றால் எங்கள் திரி 2000 ஆரம்பம் முதல் இயங்குவது. உங்களுக்கு தோன்றுவதை நீங்கள் செய்வதை விடுத்து ஏன் எங்கள் பதிவுகளை சவாலாக எடுத்து ,தவறான தகவல்களால் பதில்? முரளி சாரோ ,நானோ, மற்றவர்களோ எதை பற்றியும் எண்ணாமல் பதிவுகள் இட்டு வருகிறோம். நீங்கள் கூர்ந்து கவனித்தால் ,உங்கள் மனம் புண் படுமே என்று நாங்கள் சிலர் பெயரை கூட குறிப்பிட்டு ,ஒப்பீடு செய்து எழுதுவதில்லை.ஏனென்றால் எங்களுக்கு ஒப்பீடு செய்ய உலகளவில் விஷயங்கள் உள்ளன. சமீபத்தில் கூட சாவித்திரி சம்பந்தமான பதிவு எங்களை சீண்டும் நோக்கில் எழுத பட்டவை.
நடிகர்திலகம் அவர்கள் ஒரு உலக அளவில் குறிப்பிட பட வேண்டிய ,நம்மிடையே ஒரு பிற்படுத்த பட்ட வகுப்பில்(Backward community) பிறந்து ,நம்மிடையே வாழ்ந்து , பல சாதனைகளை புரிந்த உலக கலைஞர் , ஒரு உன்னத தமிழ் கலைஞன் என்பதை மறக்க வேண்டாம் அவர் நம் எல்லோருக்கும் பொதுவானவர் என்ற உணர்வு நமக்கு இருத்தல் ,ஆரோக்யமான ஒரு பார்வையை உருவாக்கும்.இது அரசியல் ,காழ்ப்புணர்ச்சி ,பொறாமை எல்லாவற்றையும் மீறிய பெருமித உணர்வு.
நீங்கள் புரிந்த கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உங்கள் நண்பனாக கருதும் எனக்கு உண்டு.
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 5)
'கண்கள்' படத்தில் சாதாரண பேன்ட் ஷர்ட் உடுத்தியிருந்தாலும் தலைவருக்கு எவ்வளவு ஜோராக உள்ளது! அணிந்திருக்கும் ஷர்ட் தோள்பட்டை, மற்றும் மார்பில் எவ்வளவு அழகாக fit ஆகியுள்ளது! Tuck In ஸ்டைல் பிரமாதம். நீங்கள் காண்பது ஒரிஜினல் புகைப்படம்.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/k-2.jpg
அடுத்து 'பெம்புடு கொடுகு' தெலுங்குப் படத்தில் இருபக்கமும் பாக்கெட் வைத்து தைக்கப்பட்ட டிசைன். காலர், பாக்கெட்டுகள், கைப்புகுதிகளின் full hand பகுதிகள் white இலும், மற்ற பகுதிகள் black கலரிலும் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
http://i1087.photobucket.com/albums/...f073adee9e.jpg
'மனிதனும் மிருகமும்' திரைப்படத்தில் கோட் சூட்டுடன் மிடுக்கான தோற்றத்தில்.
http://i1087.photobucket.com/albums/...cbcbed0bf2.jpg
குறிப்பு: மேற்குறிப்பிட்ட மூன்று படங்களின் vcd, dvd க்களோ, ஏனைய புகைப்படங்களோ இல்லை. இருப்பதை வைத்து ஓரளவிற்கு தந்திருக்கிறேன். இந்தப் படங்கள் நாம் வாழும் காலத்திற்குள் கிடைக்குமா என்ற பெருத்த சந்தேகம் வலுக்கிறது. பிரம்மப்பிரயத்தனம் செய்து இந்தப் படங்களை தேடித் பார்த்து விட்டோம். நடிகர் திலகத்தின் அத்தனை படப் பொக்கிஷங்களையும் வாழ்நாளில் சேர்த்து விட வேண்டும் என்பதே என் நோக்கம். சில படங்கள் எவ்வளவோ முயற்சித்தும் கிடைத்தபாடில்லை. தூர்தர்ஷன் மனது வைத்தால் முடியலாம். இந்தப் படங்கள் வேறு எங்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை காலம் வரும். காத்திருக்க வேண்டியதுதான்.
பம்மலார் அவர்களுக்கு 100 நன்றிகள் . இதை விட அதிக நன்றிகள் வேண்டுமென்றால், தங்கபதக்கம் வேண்டும்.
vasu,
kangal ,penpudu koduku, manithanum mirugamum dresses are amazing. Especially the dual coloured one(PK). Considering the availability factor, your work is commendable.
மதுரைக்கு முரளிசீனிவாச புரம் என்று பெயரிட்டு விடலாம் போல. ஊரை பற்றி எல்லாமே விரல் நுனியில்தான்.
அன்புள்ள பம்மலார் சார்,
உண்மையில் எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகளைத் தந்து திக்குமுக்காட வைத்துள்ளீர்கள். 'உத்தமன்' விளம்பர ஆவணங்கள் அனைத்தும் மிக மிக அருமை. அப்படியே பழைய காலங்களுக்கு அழைத்துச் செல்கின்றன.
Lots and lots of thanks for your Great Heart for collecting all those treasures, keeping them for several decades and publishing now for worldwide NT fans.
One advertisement evidence is more than 100 pages of writing, to prove the acheivements.
Thanks a lot on behalf of worldwide NT fans.
Dear murali sir.
Regarding discussions on madurai vasool collections of our NT and mgr between you and esvee vide your exchange of mails between you both. we are eager to know the outcome as the matter was discussed in the open forum to which of the statements is correct. we are not interfering in your personal Ppm otherwise.
திரு .கான் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலிலிருந்து தலைவரின் சில புகைப்படங்கள்.
http://i1087.photobucket.com/albums/...hilagam3-1.jpg
http://i1087.photobucket.com/albums/...rthilagam3.jpg
http://i1087.photobucket.com/albums/...thilagam21.jpg
வணக்கம்....வணக்கம்...வணக்கம்......!
எல்லாரும் எப்படி இருக்கீங்க ? How are you all doing ?
நடிகர் விஜயின் தந்தை நம்முடைய தந்தையிடம் மிகவும் பவ்யமாக காலருகில் ..என்ன பக்தி..என்ன பக்தி !
நெய்வேலியார் அவர்களே, கோபால் அவர்களே, ராகவேந்தர் அவர்களே, கார்த்திக் அவர்களே மற்றும் இதர திரி நண்பர்களே...அலுவல் காரணமாக சிறிது இடைவெளி.
வந்து பார்த்தால்....., திரு.பம்மலர் மற்றும் திரு.ராகவேந்தர் அவர்களின் கண்ணி வெடிகள் உத்தமன் விளம்பரம் வாயிலாக.
திரு.பம்மலர் அவர்கள் ஒரு வாசகம் சொன்னாலும் அது திருவாசகமாகிறது ! உத்தமன் காவியம் ஓடாமல் சும்மா சொல்கிறார்கள் என்ற ஒரு சாரர் கூற்று இத்துடன் பொய்பிக்கபட்டுவிட்டது !
நெய்வேலியார் அவர்களின் தொடர்....களைகட்டிகொண்டே போகிறது எப்போதும்போல். மனுஷன் எங்கிருந்துதான் புடிச்சு போடறார் தெரியல...நேர போனபோது ஒரு பேப்பர் கட்டிங் கூட கண்ல காட்டல(செவுத்துல ஓட்டினத தவிர) ...காட்டினா எங்கே கேட்டுடுவானோன்னு பயந்துட்டார் போலருக்கு மனுஷன் பாவம் :-)..நெய்வேலியாரே பின்னு பின்னு நு பின்றீங்க சார் ! மனமார்ந்த வாழ்த்துக்கள் !
நீண்ட நாள் யோசனை முரளி சாருடயது ..ஒரு வழிய நினைவாயிடுசுபோல்ருக்கே ! பலே !
சரி....விஷயத்துக்கு வருவோம் !!
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது பாடல் - பாடிய விதம், இசை அமைப்பு, கிருஷ்ணனாக NTR அவர்கள் மற்றும் பல விஷயங்கள் இருந்தாலும்.....
இந்த சிறுவன் அதை பாடியபோது...அனைவரது கண்களும் கலங்க காரணம்....நம் திரை உலக சித்தர் அவர்கள் கர்ணன் வடிவில் மரண தருவாயில் இருக்கும் அந்த நடிப்பு ...அந்த காட்சி...அது தான் அனைவரின் கண் முன்பும் கொண்டு வந்து நிறுத்துவது !!!
இன்னும் சில நிமிடங்களில் கர்ணன் இறந்துவிடுவரே என்ற அந்த பார்ப்பவரை பரிதாபபடவைக்கும் உச்சகட்ட நடிப்பின் நிமிடம்....
அனைவரும் ஒரு நிமிடம் கனத்த இதயத்துடன் இருந்தார்கள், இருப்பார்கள் இருக்கவைக்கும் நடிகர் திலகத்துடைய ஆற்றல் என்பது தான் உண்மை !!
எவரும் மறுக்க மறைக்க முடியாத உண்மை...திரி நண்பர்கள் பார்வைக்கு !!!
http://www.youtube.com/watch?v=rUpDInqxMZI
திரி நண்பர்கள் அனைவரும் பம்மலர் அவர்களை வருக..வருக என வரவேற்று நானும் அதே போல வரவேற்றால் பத்தோடு பதிநோராகிவிடும் ..ஆகையால் என் சார்பாக அன்பு பம்மலாரை ஒரு குஷியுடன் பாடல் ஒன்றை பதிவிட்டு வரவேற்கிறேன் !
நமது மற்றும் மற்ற திரியில் நடக்கும் பல விஷயங்களை கேட்டும் பார்த்தும் இருப்பீர்கள் !
http://www.youtube.com/watch?v=MII1f11WoIU
ஆடைகளுக்கு வேற படங்களுக்கு போகுறது ஒரு பக்கம், கான் அவர்கள் படத்துலையே நடிகர் திலகத்தின் ஸ்டைல் ஆடைகளிலும் முகத்திலும் மிளிர்கிறது. பகிர்தலுக்கு நன்றி.
"உத்தமன்"
38-வது ஆண்டு துவக்கம் (25.06.1976 - 25.06.2013)
இப்போதுதான் படம் வெளியாகி பத்தாண்டுகள் ஆனதுபோல் இருக்கிறது. அதற்குள் 37 ஆண்டுகள் முடிந்து விட்டனவா?. நினைத்துப்பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. நடிகர்திலகம் மெலிந்திருந்த காலங்களில் வந்த படம். எப்போதும் இப்படியேதான் இருக்கப்போகிறார் என்றெண்ணிய காலத்தில் அதன் அருமை அவ்வளவாகப் போற்றப்படவில்லை. ஆனால் அவர் மீண்டும் உருவம் மாறத்துவங்கியபின் அவையனைத்தும் பொக்கிஷங்களாகி விட்டன. அதில் ஒன்றுதான் உத்தமன்.
1976 பொதுவாக தமிழ்ப்பட உலகுக்கும், குறிப்பாக நடிகர்திலகத்துக்கும் சற்று தேக்கமான காலகட்டம் என்பதில் சந்தேகமில்லை. அப்போது வெளியான படங்களின் வெற்றிகளைப் பார்த்தாலே தெரியும். அன்பே ஆருயிரே வில் துவங்கிய மந்த நிலை, படங்கள் சரியில்லாத காரணத்தாலும், பெருந்தலைவர் மறைவுக்குப்பின் ஏற்பட அரசியல் சூழல்களாலும் தொடர்ந்தது. 'பாட்டும் பரதமும்' போன்ற நல்ல படங்களும் இதில் பாதிக்கப்பட்டன. அந்த ஆண்டில் படங்கள் சென்னையில் வெளியான அரங்குகள்....
உனக்காக நான் - தேவி பாரடைஸ், அகஸ்தியா புவனேஸ்வரி
கிரகப்பிரவேசம் - பைலட், அகஸ்தியா, முரளிகிருஷ்ணா, கமலா
சத்யம் - வெலிங்டன், கிரௌன், ராக்ஸி, நூர்ஜகான்
உத்தமன் - சாந்தி கிரௌன், புவனேஸ்வரி
சித்ரா பௌர்ணமி - பிளாசா, ஸ்ரீபத்மனாபா, உமா
ரோஜாவின் ராஜா - பிளாஸா, பிராட்வே, ராக்ஸி, கமலா
அந்த ஆண்டில் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி என்ற லக்கி காம்பினேஷனில் வந்த ஒரே படம் என்றபோதிலும், உண்மையில் லக்கி காம்பினேஷன என்பது பின்னர் ஐயப்பாடானது. இதற்கு மாறாக மிட்லண்ட், மகராணி, ராக்ஸி என்ற காம்பினேஷனில் வந்திருந்தால் சென்னையிலும் மதுரையைப்போல 100 நாட்களைக் கடந்திருக்க வாய்ப்பு அமைந்திருக்கும். இதற்கும் கூட சில எதிர்ப்புகள் வரலாம். ஆனால் பத்தாவது வாரத்தில் படம் எடுக்கப்பட்டபோது நல்ல கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்தது உண்மை என்பதை மறுக்க முடியாது. எது எப்படியோ சென்னையில் அந்த ஆண்டில் 100 நாள் படமே இல்லாமல் போனது.
படம் வெளியாவதற்கு முன் பாடல்கள் டீக்கடைகளில் வெளிவந்து சக்கைபோடு போட்டன. இப்போது போல இசை வெளியீட்டு விழா என்ற பெயரில் திரையுலகையே அழைத்து விழா நடத்தும் கூத்து எல்லாம் அப்போது ஏது?. முதலில் டீக்கடைகளில் பாடலைக் கேட்டு பின்னர் ஹோட்டல் ஜுக் - பாக்ஸ்களில் என்ன படம் என்று தெரிந்து கொள்ள வேண்டியதுதான். உத்தமன் பாடல்கள் முதலில் கேட்டபோது சுமாராக இருந்தவை, பின்னர் திரும்பத்திரும்பக் கேட்டதும் மனதுக்குப் பிடிக்க ஆரம்பித்தன. 'படகு படகு' பாடலும் 'தேவன் வந்தாண்டி' பாடலும் மனத்தைக் கிறங்கடித்தன. இயக்கம் ராஜேந்திர பிரசாத் என்பதால் பிக்சரைசேஷன் நிச்சயம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். வீட்டுக்கு எதிரிலிருந்த டீக்கடையில் உத்தமன், ஊருக்கு உழைப்பவன், மன்மத லீலை, கிரஹப்பிரவேசம் படங்களின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தன. பின்னர் ஏரியா பெரியவர்களால் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டு தெரு அமைதியானது. இருந்தாலும் உத்தமன் பாடல்களைக்கேட்டு பழகி விட்டதால் காதுகள் அனிச்சைசெயலாக 'ஜுக் - பாக்ஸ்' ஹோட்டல்களை நாடின. அப்போது ஆடியோ கேசட்டுகள் புழக்கதில் வந்துவிட்ட போதிலும், பாடல்களை கேசட்களில் பதிவு செய்துதர கடைக்காரர்கள் மறுத்து விடுவார்கள். இசைத்தட்டு விற்பனை குறைந்து விடும் என்ற காரணம். ஒவ்வொரு கிராமபோன் ரிக்கார்ட் கடையிலும் எஸ்.எம்.வி. நிறுவனத்தினரின் “Please do not ask us to tape, it is illegal” என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். நண்பன் ஒருவன் வீட்டில் ஆடியோ கேசட் பிளேயர் இருந்ததால், காசினோ திரையரங்கின் பின்புறமுள்ள ரிட்சி தெருவிலிருந்த ஒரு ரிக்கார்ட் விற்பனையாளரை நச்சரித்து 'உத்தமன்' பாடல்களை மட்டும் ஒரு கேசட்டில் பதிவிட்டு, திரும்பத்திரும்பக் கேட்டு வந்ததில் படம் வரும் முன்பே பாடல்கள் மனப்பாடமாகி இருந்தன. இதனிடையே சினிமா பத்திரிகைகளான பேசும்படம், பிலிமாலயா, பொம்மை, மதிஒளி, திரைவானம் ஆகியவற்றில் உத்தமன் பற்றிய செய்திகளும் வண்ணப்படங்களும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே இருந்தன. நடிகர்திலகம் அருமையான ஹேர்ஸ்டைலுடன், அற்புதமான காஸ்ட்யூம்களில், மஞ்சுளாவுடன் செம கியூட்டாக இருந்தார். இதற்கு முந்தைய கிரஹப்ரவேசம், சத்யம் படங்கள் கொஞ்சம் டல்லாக அமைந்து தாய்க்குலத்துக்கு ஏற்றவையாக அமைந்திருந்தனவே தவிர ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடவில்லை.
ஆவலுடன் எதிர்பார்த்திருந்த படம் வெளியாகும் அறிவிப்பும், ரிசர்வேஷன் விளம்பரமும் வந்தது. (அப்போதெல்லாம் நடிகர்திலகத்தின் படங்கள் சனிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகும். அதற்கேற்றாற்போல ஞாயிற்றுக்கிழமை ரிசர்வேஷன் துவங்கும்). அப்புறம் என்ன கிரௌன் தியேட்டருக்கு மொத்த நண்பர்கள் கூட்டமும் படையெடுத்தோம். ஏற்கெனவே பலமுறை இங்கே பேசியதுபோல அந்த ஆண்டு கொஞ்சம் சுமார் ஆண்டு என்பதால் ரிசர்வேஷனுக்கும் கூட்டம் அவ்வளவு இருக்காது என்று எண்ணி அசால்ட்டாக போனோம். ஆனால் நிலைமை வேறாக இருந்தது.
எவ்வளவு ரசிகர்கள் இப்படி ஒரு படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடந்துள்ளனர் என்பது கூட்டத்தைப் பார்த்ததும் தெரிந்தது. வழக்கமாக ரிசர்வேஷன் என்றால் ஏழு ஏழரைக்குள் போய்விடும் எங்களுக்கு அன்று அசால்ட்டாக சற்று தாமதமாக போனது எவ்வளவு பெரிய தப்பு என்பதை எங்களுக்கு முன் சென்றிருந்த ரசிகர்கள் உணர வைத்தனர். நாங்கள் போவதற்கு முன்பே ரிசர்வேஷன் துவங்கிவிட்டது என்பது மட்டுமல்ல. கியூவில் நின்ற சிறிது நேரத்தில் முதல்நாள் மூன்று காட்சிகளும் புல்லாகிவிட்டன. முதல்நாளே படம் பார்க்கப்போகிறோம் என்ற கனவு 'பணால்' ஆனது. கியூ நகர அடுத்த நாள் மேட்னியும் 'புல்'. அவ்வளவுதான் எங்களுக்கு பதைபதைப்பு அதிகமானது. 'உன்னாலதாண்டா லேட்' என்று ஒருவருக்கொருவர் பழிபோட ஆரம்பித்தோம். கவுண்டரை நெருங்கி விட்டோம். எங்கள் கண்கள் ரிசர்வேஷன் சார்ட்டிலேயே இருந்தது. இரண்டாவதுநாள் மாலைக் காட்சியாவது கிடைக்கணுமே என்ற படபடப்பு. (இரவுக்காட்சி பார்க்க வீட்டில் அனுமதி கிடையாது).
சொன்னால் நம்ப மாட்டீர்கள். (எங்களாலேயே நம்ப முடியவில்லையே, அப்புறம் எப்படி உங்களை நம்பச்சொல்ல?) எங்கள் நண்பர் குழுவின் கடைசி ஆள் டிக்கட் வாங்கியதும் இரண்டாவதுநாள் ஈவினிங் ஷோ புல். எங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும். முதல்நாள் பார்க்கமுடியாமல் போனதற்கு ஆறுதல் பரிசு என எண்ணியவாறு வீடு திரும்பினோம். அடுத்த ஐந்துநாட்களும் நண்பர்களுக்குள் உத்தமன் பற்றியேதான் பேச்சு. பள்ளிப்படிப்பை முடித்து அந்த ஆண்டுதான் ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் சேர்ந்த முதல் மாதம் உத்தமன் ரிலீஸ். தினமும் பஸ்ஸில் சாந்தி வழியாகத்தான் கல்லூரிக்கு போவோம் வருவோம். ஆனால் ஏனோ சாந்தியில் பார்க்கலாமே என்று எங்களுக்குத் தோன்றவில்லை. ('அண்ணன் ஒரு கோயிலில்' இருந்துதான் சாந்தி சங்கமம்).
முதல் நாள் மேட்னிஷோ விடும் முன்பே கிரௌன் தியேட்டருக்குப் போய்விட்டோம். முதல்நாள் படம் பார்க்காவிட்டால் என்ன ‘ரிலீஸ் மேளா’வை மிஸ் பண்ணலாமா?. நண்பன் ஒருவனுக்குத் தேவையில்லாத நப்பாசை. கரண்ட் புக்கிங் டிக்கட் கிடைத்தால் முதல்நாளே பார்த்துவிடலாமே என்று நான்கு மணிக்கே போய்விட்டான். நாங்கள் போய் அவன் நின்ற இடத்தைப்பார்த்து எங்களுக்கு சிரிப்பு வந்தது. ஒரு ஷோவுக்கு டிக்கட் வாங்க நான்கு ஷோவுக்கான கூட்டம் நின்றுகொண்டிருந்தது. அவனும் நம்பிக்கையுடன் நின்றுகொண்டிருந்தான் பாவம். கவுண்டர் மூடியதும் எங்களுடன் ஐக்கியமானான். 'மன்னவன் வந்தானடி' படத்துக்குப்பின் கிரௌன் தியேட்டர் களைகட்டியது உத்தமனுக்குத்தான். அரசியலில் அப்படி இப்படி மதில்மேல் பூனைகளாக இருந்த ரசிகர்களும், நடிகர்திலகத்தின் முடிவை ஏற்று, இந்திராவின் தலைமையின் கீழ் ஒன்று கூடி வந்துவிட்டனர். மேட்னிஷோ முடிந்து வெளியே வந்த ரசிகர்கள், வெளியே நின்றிருந்த ரசிகர்களுடன் ஒன்று கலந்து படத்தைப் பற்றிய அபிப்பிராயங்களை பகிர்ந்துகொள்ளத் துவங்கினர். எல்லோருடைய ஒட்டுமொத்த முடிவு, ரொம்ப நாளைக்குப்பிறகு ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரியான படம் என்பதுதான். இரவு எட்டுமணிவரை அங்கேயே நின்று பேசிக்கொண்டிருந்து விட்டு திரும்பினோம்.
ஏற்கெனெவே பார்த்த ரசிகர்களின் வர்ணனைகள் கண்களில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட, ஆவலுடன் அடுத்தநாள் மாலைக்காட்சிக்குச் சென்றோம். முதல்நாளுக்கு சற்றும் குறையாத கூட்டம். எங்களுக்கோ சந்தோஷம் தலைக்கேறி ஆடியது. மாலைநேரம் கிரௌன் தியேட்டர் ஓரம் நல்ல நிழலாக இருக்கும். கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தபோது ரசிகர்கள் அனைவருக்கும் உற்சாகம் கரை புரண்டது. சாந்தி மற்றும் புவனேஸ்வரியிலும் மிக நல்ல ரெஸ்பான்ஸ் என்று சொன்னார்கள். வெளியூர் ரிப்போர்ட்கள் இன்னும் கிடைக்கவில்லை, ஆனாலும் படத்தின் கெப்பாஸிட்டியை வைத்துப் பார்க்கும்போது ரிசல்ட் இன்னொரு ‘அவன்தான் மனிதனாக’ அமையும் என்றார்கள். ஆஹா, அந்தப்பொற்காலம் திரும்புமா என்று மனம் ஏங்கியது. (அப்போதெல்லாம் வெளியூர் ரிசல்ட்கள் கடிதம் மூலம்தான் வர வேண்டும். இப்போது போல செல்போனை அழுத்தி "ஹலோ மச்சி, மதுரைல எப்படி போகுது?" என்ற வசதியெல்லாம் அப்போது ஏது?) . இதன்பிறகு 'அவன் ஒரு சரித்திரத்துக்குத்தான்' (பக்கத்து ஸ்ரீ கிருஷ்ணா) தியேட்டரில் இப்படி ஒரு எழுச்சியைக் காண முடிந்தது. அது உத்தமனை விட அதிகம். அதைப்பற்றி ஏற்கெனவே ஜனவரி 2012-ல் எழுதியிருக்கிறேன்.
தியேட்டருக்குள் சென்று அமர்ந்தோம். முதல் ஒருவாரம் அது ரசிகர்களுக்குத்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதனால் அன்றைக்கும் ஆரவாரம் அமர்க்களப்பட்டது. படம் துவங்கியது முதலே அட்டகாசமும் துவங்கி தொடர்ந்தது. தலைவரின் ஹேர்ஸ்டைல், உடைகள் மேக்கப் அனைத்தும் செம தூக்கல். அதுவே உற்சாகத்தை அதிகப்படுத்தியது. சரிதான், தலைவர் மீண்டும் பார்முக்கு திரும்பிவிட்டார் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம். பாடல் காட்சிகளனைத்தும் அட்டகாசமாக இருந்தன. 'மஞ்சுக்குட்டியும்' சரியாக ஈடுகொடுத்திருந்தார். 'படகு படகு ஆசை படகு' பாடல் காட்சியில் இடையே வரும் லைலா - மஜ்னு மற்றும் சலீம் - அனார்கலி இடைச்செருகல்களுக்கு நல்ல கைதட்டல்....
நிலவு முகத்திலே முக்காடு மூடும் மேகத்தை விலக்கடி லைலா
உன் அழகுக்கு சலாமு லைலா
வரிகளின்போதும்....
அனார் என்றால் மாதுளம், ஆசை கொண்ட மாதுளம்
சலீம் என்ற மன்னவன் சலாம் உரைத்தான் உன்னிடம்....ம்.....ம்....ம்.
உண்மைக் காதல் காதல் காதல் - இன்பக்
காதல் போயின் சாதல்
என்ற வரிகளின்போதும், மாமாவின் தபேலா லயத்துக்கேற்ப ரசிகர்கள் கைதட்டியதுடன், பல ரசிகர்கள் எழுந்து ஆடத்துவங்கி விட்டனர். ஏகப்பட்ட ஆரவாரம். (அதானே, வடசென்னை ரசிகர்களா கொக்கா?).
(படகு படகு பாடலில் பின்னணியில் ஸ்கேட்டிங் செய்பவர் நம்ம பிரபு என்பது சமீப காலம்வரை எனக்குத் தெரியாது. தெரிந்தபின் இப்போதெல்லாம் அப்பாடலில் அவரை உற்று உற்றுப் பார்க்கிறேன். சூப்பராக ஸ்கேட்டிங் பண்ணுகிறார்).
அதுபோல 'தேவன் வந்தாண்டி' பாடல் காட்சியும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. தலைவரை அழகழகு உடைகளில் காண்பிப்பதில்தான் இந்த தெலுங்கு தயாரிப்பாளர் / இயக்குனருக்கு எவ்வளவு ஒரு ஆர்வம். அதுமட்டுமல்ல, நடிகர்திலகத்தை நடக்க வைத்தே டூயட் பாடல்களை எடுக்கும் தமிழ் இயக்குனர்களுக்கு மத்தியில் தலைவரை ஓட வைத்து டூயட் எடுப்பவரும் இவர்தான். அருமையான காஷ்மீர் பின்னணி லொக்கேஷனில் கருப்பு நெக்-ஸ்வெட்டர், சிவப்பு கோட் அணிந்து தலைவர் வரும் காட்சி கண்ணிலேயே தங்கிவிட்டது. முரளிசார் குறிப்பிட்ட (சுசீலாவின்) 'இமயமலைச் சாரலுக்கு நன்றி சொல்லடி' என்ற குழைவு ஐயோ ஐயோ என்ன அருமை. அதுபோல 'நாளை நாளை என்றிருந்தேன்' பாடலிலும் தலைவரை நன்றாக ஓடவிட்டு பெண்ட் எடுத்திருப்பார் ராஜேந்திர பிரசாத். (ஏற்கெனவே 'கல்யாண ஆசைவந்த' மற்றும் 'இரவுக்கும் பகலுக்கும்' பாடல்களிலும் ஓட்டத்தைப் பார்த்தோமே).
ஆரவாரமும் அட்டகாசமுமாக படத்தைப்பார்த்து விட்டு வெளியே வந்தபோது மனம் நிறைந்திருந்தது. தலைவர் ட்ராக்குக்கு வந்துவிட்டார். இனி அதகளம்தான் என்று பூரிப்படைந்தோம். இதன் பின்னர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலைக்காட்சி 'உத்தமன்' பார்ப்பது என வழக்கம் வைத்து ஏழுமுறை கிரௌன் தியேட்டரிலேயே பார்த்தேன். முந்தைய ஆறு படங்களின் ரிசல்ட்டைப்பார்த்து, 'கணேசன் இத்துடன் ஒழிந்தான்' என்று எக்காளமிட்டோருக்கு சாவுமணி அடிக்க வந்த படம் "உத்தமன்". (மதுரை ரசிகர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நன்றி. இலங்கை ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி).
டியர் கார்த்திக் சார்,
வழக்கம்போல "உத்தமன்" திரைப்பட வெளியீட்டின்போது தாங்கள் கிரெளன் திரையரங்க அமர்க்களத்தை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்.
திரைப்பட வெளியீட்டு அளப்பரைகளோடு, அந்தக் காலக்கட்ட அரசியல் சூழ்நிலைகள் மற்றும் அந்தச் சூழலில் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் வெளியீடுகள் குறித்தும், தங்கள் அனுபவத்தோடு பதிவு செய்துள்ளது, இந்தக் கால இளைஞர்கள் தெரிந்துகொள்ள பேருதவியாக இருக்கும்.
நன்றி.
Mr Karthik Sir,
Nice writeup of Uthaman. I have seen the movie at Shanthi Theatre with my
Mother. Those were the golden days. I have not seen any movie in North Madras
except Kizhvanam Sivakkum which I have seen at Roxy.
Mr Vasudevan Sir,
You are uploding rare paper cuttings of the rare movies.
Thanks Sir. Today you will not move anywhere after 8.30 because
of Mr Antony to be telecast in Jaya TV.
Dear Karthik,
Glad to know that you are in Raichur....Could you please send me a message of your contact number. I am in Raichur and I will be there for another week.
I would be glad to meet you. I have met Mr.Murali, Mr.Pammalar, Mr.Raghavender, Mr.Neyveliyar etc., it would be my privilege to meet you in Raichur since am there already.