கருவின் கரு - பதிவு 62
" அம்பா "
பூவே பூச்சூட வா -- ( கல் நாயக் சார் மன்னிக்கவும் - உங்கள் தோட்டத்திலிருந்து சில பூக்களைத் திருடி விட்டேன் உங்களுக்குத்தெரியாமல் ----)
தாயின் பாசம் கிடைக்கவில்லை - காதலித்த ஒரு பாவத்திற்காக தன் பேத்தியையும் வெறுக்கிறாள் இந்த பாட்டி - பின்னிப்பிணையும் பாச வலைகள் என்றுமே பிரியாது - பாட்டியுடன் பாசமும் மீண்டும் பேத்திக்கு கிடைக்கின்றது .....
https://youtu.be/wDOUp9H_mTA
லலலா லலலா லாலாலா.. லலலா லலலா லாலாலா..
லலலா லாலா லாலாலா.. லா..லா..லா..
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
வாசல் பார்த்து.. கண்கள் பூத்து.. காத்து நின்றேன் வா
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்
கண்களும் ஓய்ந்தது.. ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் நெய்யாக வந்தாய்
இந்தக் கண்ணீரில் சோகமில்லை
இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
பொன்முகம் பார்க்கிறேன்.. அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன்மானைப் பார்த்துக் கொண்டே
சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நான் உன் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
பூவே பூச்சூடவா,
இளையராஜா,
வைரமுத்து,
சித்ரா,
நதியா, பத்மினி.
------------------
இணையத்தளத்தில் ஒருவர் எழுதின குமறல்கள் :
" என் பிள்ளைகளை என்னை அடித்து என் தாய் தந்தையை பலவீனபடுத்தி என்னிடம் இருந்து பிரித்தபின் இந்த பாடல் என் தொண்டையில் முள்ளாக குத்துகிறது. ஏதோ ஒரு உணர்வு தொன்டையில் குத்துவதும், எச்சில் ஒருவிதமாக சுரப்பதும், நெஞ்சம் தவிப்பதும், அப்பப்பா பத்மினி வாசலை பரிதவிப்போடு பார்த்து ஏங்குவது போல் நானும் எத்தனை முறை ஏங்கியிருப்பேன். என் பிள்ளை, என் பிள்ளை என்று மனம் பேதலித்து தவித்து இயலாமையில் கோபம் கொண்டு கத்தி இருக்கிறேன். பாசம் மிக கொடியது என்று ஔவை சொல்லவில்லை, அன்பில்லா பெண் மனைவி ஆக அமைந்து அவள் கையால் சாப்பிட வேண்டும் என்ற நிலையே கொடியது என்று ஔவை சொல்லிய கருத்து என் வாழ்கையில் அனுபவம் ஆகிறது. சாப்பாடு என்று ஔவை எதை சொன்னார், வயிற்று பசி, உடல் பசி இரண்டுக்கும் உணவு தேவை. ஔவையே நீங்கள் மீண்டும் பிறக்கவேண்டும், எனக்கு தர்மம் கிடைக்க உதவி செய்யவேண்டும் என மனம் ஏங்குகிறது. இந்த பாடல் இதயத்தில் வலி. எந்த சமுதாயத்தில் இன்பமாக,கௌரவமாக, மரியாதையுடன் பெற்றோரின் கருணையில் வாழ்ந்தேனோ, அதே சமுதாயத்தை கொடூரமான, மோசமான, மிகவும் சிக்கலான, அவமான படுத்தும் அருவருப்பான சமூகமாக உணரவைத்தவள் ரேணுகா. திரையில் பத்மினியை போல் என் தாய், என் பிள்ளைகளை நெஞ்சில் சுமந்து, கண்களில் ஏந்தி, ஏங்கிய வாழ்க்கை. பரிதவிப்பு என் தந்தையின் உயிரை எடுத்த சதி."