http://i68.tinypic.com/2nv7ck4.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
http://i68.tinypic.com/2nv7ck4.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i64.tinypic.com/35dce4i.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i64.tinypic.com/72t6w4.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i67.tinypic.com/9ibqfb.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i63.tinypic.com/xc7i2x.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i63.tinypic.com/2mx1wk1.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i67.tinypic.com/2moyvy1.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i65.tinypic.com/15na8zm.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i65.tinypic.com/8wa9tu.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i64.tinypic.com/2n00qx4.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i63.tinypic.com/dbnql0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
ஒரு முறை எம் ஜி ஆர் முதல்வராய் இருக்கும் போது உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டம் எம் ஜி ஆர் தலைமையில் நடைப்பெற்றது தோட்டத்தில் கூட்டம் முடிந்து உணவு எம் ஜி ஆர் தலைமையில் அமர்ந்து உண்டார்கள் தோட்டத்தில்
பின் சிலமாதங்கள் சென்று அந்த கூட்டத்தில் பங்குகொண்ட என்னை நான் பணியில் இருக்கும் போது ஒருவர்வந்து தோட்டதில் சின்னவர் எம் ஜி ஆர் ஆரை அப்படி அழைப்பார்கள் அழைக்கிறார் வாருங்கள் என்றார் எனக்கு படபடப்பாற்று என்ன தவறு செய்தோம் இது வரை நேர்மை அதிரிகாரி என்று தான் பெயர் எடுத்துள்ளேன் ஏதாவது தவறு நடந்து விட்டதா என எண்ணி கொண்டே சென்றேன் மதியவேளை அது தோட்டத்தில் எம் ஜி ஆர் ஆரும் பலரும் எனக்காக காத்திருந்தார்கள்
எம் ஜி ஆர் வாருங்கள் சாப்பிடலாம் என்றார் நான் படபடப்பாக சார் என் விசயம் சொல்லுங்கள் என்றேன்
அதற்க்கு எம் ஜி ஆர் அன்று ஒருநாள் நீங்கள் சாப்பிடும் போது ஒரு கறியின் பெயரை சொல்லி அதை நீங்கள் விரும்பி சாப்பிடுவதை கவனித்தேன்
அதன்பிறகு இன்று தான் அந்த கறி சமைக்கபட்டது உடன் உங்கள் நினைவு வந்தது வாருங்கள் சாப்பிடலாம் என சதாரணமாக சொன்னார்
எனக்கு கண்களில் கண்ணீர் நிரம்பியது ஒருதாயின் கருணை
தன்னலமற்ற அன்பை அவர் முகத்தில் கண்டேன் அன்று
ஓய்வு பெற்ற அந்த அதிகாரி கூறியது
ஒரு நூலில் படித்தது
மக்கள் திலகம் இவரை பிடித்ததுக்கு முதல் காரணம் சினிமாவின் சண்டைக் காட்சிதான் என்று ஒவ்வொரு ரசிகரும் கூறியது
சண்டை காட்சி எடுப்பதற்கு முன்னால் அங்கு முதலுதவி பெட்டி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பார் அதுவே இன்றும் எம்ஜிஆர் பார்முலா என்ற பெயரில்் திரை உலகத்தில் உள்ளது என்றால் ஆச்சரியம் தான்
பின்பு ஆட்சி கட்டிலில் அமர்ந்த பின்பும் அரசு எந்திரங்கள் செயல் படும் கட்டிடங்கள் அரசு பள்ளிகள் அரசு பேருந்துகளிலும் கட்டாயப் படுத்தினார் முதலுதவி பெட்டியுடன் திருக்குறலும் எழுத வேண்டும் என்றார்
இதற்கு பெயர்தான் உண்மையான
மக்கள் திலகத்தின் மக்கள் நலம்
சைலேஷ் சார் திரும்பவும் நீங்கள் திரிக்கு திரும்ப வேண்டும் தலைவரின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில் எல்லோரும் ஒன்று சேர்ந்து தலைவரின் புகழ் பாட வேண்டும்
இனிய நண்பர் கலிய பெருமாள் சார்
புதுவை நகரில் கொண்டாடப்பட்ட மக்கள் திலகத்தின் 99வது பிறந்த நாள் நிழற்படங்கள் , போஸ்டர்கள் பதிவுகள்
அனைத்தும் மிகவும் அருமை .
மறைந்தும் மறையாத மாமனிதர்!
தமிழக சரித்திரத்தில் அழிக்க முடியாத ஒரு சக்தியாக எம்.ஜி.ஆர். இருந்து
வருகிறார் என்பதை யாரும் மறுக்க இயலாது. அவர் மறைந்து 28
ஆண்டுகளுக்குப் பின்னும், தமிழகத்திலுள்ள குக்கிராமம் முதல் மாநகரம் வரை
எல்லாப் பகுதிகளிலும் தனக்கென ஒரு வாக்கு வங்கியை அவர் தக்க வைத்துக்
கொண்டிருப்பது என்பது மிகப்பெரிய ஆச்சரியம். வேறு எந்த நடிகருக்கும்
இல்லாத அளவுக்கு, இன்னும் அவரது திரைப்படங்கள், பல நூறு தடவைகள்
திரையிடப்பட்ட பின்னும், ரசிகர்களின் ஆதரவைப் பெறுகின்றன என்றால் அதற்கு
என்ன காரணம் என்பது விளக்கவே முடியாத புதிராகத்தான் இருக்கிறது.
நடிகனாக, அரசியல்வாதியாக எம்.ஜி.ஆர். தன்னை அடையாளம் காட்டிக் கொண்டதைவிட
ஒரு சமுதாய சிந்தனாவாதியாக, மனிதாபிமானமுள்ள மனிதனாக, தனிமனித
நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் என்பதுதான் அவரது
தனிச்சிறப்பு. "கலைவாணர்' என்.எஸ். கிருஷ்ணனின் அடிச்சுவட்டில், சமுதாய
சிந்தனையுடன் தனது கலைப்பயணத்தையும், மனித நேயத்துடன் தனது தனிமனித
வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டவர் என்பதுதான் எம்.ஜி.ஆரின் தனித்துவம்!
எம்.ஜி.ஆரின் இன்னொரு பெருமைக்குரிய, சமுதாயத்துக்கு வழிகாட்டும்
அற்புதப் பண்பு எது என்று கேட்டால், தெய்வத்தைக் காண முடியாத மனிதப்
பிறவிகளுக்கு வாழும் தெய்வமாகப் பெற்ற தாயையே சுட்டிக்காட்டி, ஏற்று
வணங்கி, அதன்மூலம் மற்றவர்களையும் தாயை வணங்கிப் போற்ற வைத்தது எனலாம்.
அவரது கடந்தகால நிகழ்வுகளில் உண்மையான தொண்டனாகப் பங்கேற்றது ஒரு சில
நிகழ்ச்சிகளில் மட்டுமே என்றாலும் அந்த நிகழ்வுகள் இன்றுவரை எனது
நெஞ்சில் நீங்காத தாக்கமாகத் தொடர்கிறது.
1972-ம் ஆண்டு. எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட
காலகட்டம். இதனை ஜீரணிக்க முடியாத ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நாள்தோறும்
அவரைச் சந்திக்க சென்னை நோக்கி வந்தனர். அனைவரையும் அவர் அடையாறு சத்யா
ஸ்டுடியோவில் சந்தித்துப் பேசினார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவருக்கு ஆறுதல் சொல்ல வந்த தொண்டர்களை
நூறு நூறு பேர்கள் கொண்ட குழுவாக அழைத்து சந்தித்து அவர்களுக்கு ஆறுதல்
சொல்லி அனுப்புகின்ற விசித்திர நிகழ்வை தமிழக அரசியல் அப்போதுதான்
பார்த்தது. இப்படி ஒரு தனிமனிதருக்காக அதற்கு முன்னும் சரி, பின்னாலும்
சரி மக்கள் கொதித்தெழுந்து தங்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்ததுபோல மனம்
நொந்த சம்பவம் நிகழ்ந்ததில்லை.
அவ்வாறு சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்ட குழுவில் ஒருவனாக நானும் இருந்தேன்.
எங்களிடம் எம்.ஜி.ஆர். பேசும்போது அன்றைய மதுரை மேயரும், திமுகவின்
முன்னோடித் தலைவர்களில் ஒருவருமான மதுரை முத்துவைப் பற்றிய பேச்சு
வந்தது. மதுரை முத்து அப்போது திரையிடப்படவிருந்த "உலகம் சுற்றும்
வாலிபன்' படத்தை மதுரை மாநகரில் திரையிட விடமாட்டேன் என்று ஆவேசத்துடன்
கூறி வந்த நேரம் அது.
மதுரை முத்துவை குறிப்பிட்டு எம்.ஜி.ஆர். பேசும்போது முத்தண்ணன் என்று
குறிப்பிட்டுப் பேசினார். ஆவேசத்துடன் இடைமறித்த நான் "அந்த துரோகியை
அண்ணன் என்று சொல்லாதீர்கள்' என்று பலம்கொண்ட மட்டும் கத்தினேன்.
எம்.ஜி.ஆர். தன் பேச்சை நிறுத்திவிட்டு என்னை நோக்கி, "நீ நம்
கட்சிக்காரனா? அல்லது வேற்றுக் கட்சிக்காரனா?' என்று கோபமாகக் கேட்டார்.
"நான் எந்தக் கட்சியும் கிடையாது. ஆனால் எம்.ஜி.ஆர். ரசிகன். இதோ
பாருங்கள் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற அடையாள அட்டை' என்று
எடுத்துக்காட்டினேன். கோபம் தணிந்த அவர் என்னை அருகில் அழைத்துத் தட்டிக்
கொடுத்தார்.
""தம்பி இன்று முத்தண்ணன் என்னை தாக்கி பேசுகிறார் என்பதற்காக திராவிட
இயக்க வளர்ச்சிக்காக அவர் ஏற்றுக்கொண்ட தியாகத் தழும்புகளை மறந்துவிட
முடியுமா? ஏன் அவரே நாளை நம் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து
நம்மோடு வந்து சேரமுடியாது?'' என்று கேட்டார். நானும் என்னைப் போன்று
ஆவேசமடைந்த ரசிகர்களும் அமைதியானோம். அவரது கூற்றின்படியே முத்தண்ணன்
பின்னாளில் எம்.ஜி.ஆரிடம் வந்து இணைந்த நிகழ்ச்சி எம்.ஜி.ஆரின் பண்பட்ட
அரசியல் முதிர்ச்சியையும், தீர்க்க தரிசனத்தையும் எங்களுக்கு
உணர்த்தியது.
செஞ்சி நகரச் செயலாளராக இருந்த என் நண்பர் கு. கண்ணனின் திருமண விழா.
செஞ்சி சந்தை மேடு மைதானத்தில் திருமணப் பந்தல் போடப்பட்டிருந்தது. அன்று
திங்கள்கிழமை. மேடையில் மணமகன் கண்ணனுடன், செஞ்சித் தொகுதி அமைப்பாளர்
கோ. கிருஷ்ணசாமி, மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
அமரர் சி. வேணுகோபால் (முன்னாள் அமைச்சர் சி.வே. சண்முகத்தின் தந்தை)
ஆகியோர் இருந்தனர்.
முகூர்த்த வேளை முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சரியாக 7.20
மணிக்கு எம்.ஜி.ஆர். மேடைக்கு வந்தார். நான் ஒலிபெருக்கியில் இந்தத்
திருமணத்தை தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையேற்று நடத்தித்தர வேண்டுமென
முன்மொழிகிறேன் என்று சொன்னேன்.
எம்.ஜி.ஆர். என்னை இடைமறித்து, ""பேச்செல்லாம் இப்போது வேண்டாம். எங்கே
மணமாலை எடுங்கள்''! என்று மாலையை வாங்கிக்கொண்டு உடனடியாக மாலையை
மாற்றித் தாலியைக் கட்டச் சொல்லி திருமணத்தை நடத்தி வைத்தார்.
""இன்று திங்கள்கிழமை, காலை 7.30 மணிக்கு ராகு காலம் தொடங்குகிறது.
அதற்குமுன் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில்தான்
ஓடோடி வந்தேன்.
எனக்கு இந்த ராகுகாலத்தின்மீது நம்பிக்கை கிடையாது. நாடோடி மன்னன்
படத்திற்கு ராகுகாலத்தில்தான் பூஜை போட்டேன். என் சொத்தையெல்லாம் அடமானம்
வைத்துப் படத்தை எடுத்தேன். இதோடு இந்த இராமச்சந்திரன் தொலைந்தான் என்று
திரையுலகைச் சேர்ந்த அனைவருமே என் காதுபடவே பேசினார்கள். ஆனால், நானோ என்
உழைப்பின் மீதும் தமிழக மக்களின் மீதும் நம்பிக்கை வைத்து, ""படம் வெற்றி
பெற்றால் நான் மன்னன் - தோற்றால் நாடோடி, அவ்வளவுதானே!'' என்று சொன்னேன்.
நாடோடி மன்னன் வெற்றி பெற்றது. உழைப்பும் நம்பிக்கையும் என்னை வாழ
வைத்தது.
என்னைப் போலவே என் தம்பி கண்ணனும் ராகு காலத்தில்
நம்பிக்கையில்லாதவர்தான். ஆனால், அவருக்கு பெண் கொடுக்கும் பெற்றோர்களும்
எங்களைப் போலவே இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்படி எதிர்பார்க்க
முடியும்? தாம் பெற்றெடுத்து, பாராட்டி, சீராட்டி வளர்த்த தன் பெண்ணையே
என் தம்பிக்கு தாரைவார்த்து கொடுக்கும் அந்த பெற்றோர்களும் அவர்களின்
உறவினர்களும் அணு அளவும் மனம் சஞ்சலமடைய நானோ, என் தம்பி கண்ணனோ காரணமாக
இருக்கலாமா? ஆதலால்தான் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
இத்திருமணத்தை முகூர்த்தவேளை முடிவதற்கு முன்னமேயே விரைவாக நடத்தினேன்''
என்று விரிவாகப் பேசி மணமக்களை வாழ்த்தினார்.
தன்னுடைய கொள்கையை மற்றவர்கள் மீது திணிப்பது மாபெரும் தவறு என்பதனை
உணர்ந்திருந்த அவரது மனிதநேயம்தான் இன்றுவரை அவரை போற்றி புகழவைத்துக்
கொண்டிருக்கிறது என்றால் அதுதான் மறுக்கமுடியாத உண்மை.
தன்னுடைய இளம் வயதில் தன் தாயார் மற்றவர்கள் வீட்டில் அரிசி புடைக்கும்
கூலி வேலை செய்து, அதற்கு கூலியாக கிடைத்த நொய் அரிசியை கொண்டு தனக்கும்
தன் தமையனாருக்கும் கஞ்சி காய்ச்சி தருவார்கள் என்றும், அந்த
கொடுமையிலும் கொடுமையான இளமையின் வறுமையால்தான் தாமும் தம் தமையனாரும்
கல்வி கற்க இயலாமல் போனது என்பதனையும் பகிரங்கமாக எடுத்துச் சொல்லி இந்த
அவலநிலை வருங்கால சந்ததியினருக்கு வரக்கூடாது என்று எண்ணத்தோடுதான்
காமராஜ் பொதுமக்கள் பங்களிப்பில் செயல்படுத்திய மதிய உணவுத் திட்டத்தை
அரசின் முழு பங்களிப்பாக மாற்றி சத்துணவுத் திட்டமாக அமலுக்குக் கொண்டு
வருவதாக அறிவித்தார் எம்.ஜி.ஆர். அதிலிருந்த மனிதநேயமும், சமுதாய
சிந்தனையும் தான் இன்றும் அவரை தமிழ்ச் சமுதாயம் அன்புடனும் பாசத்துடனும்
புரட்சித்தலைவர் என்று நினைவுகூர்வதன் அடிப்படைக் காரணம்.
"நான் பகுத்தறிவு வாதி, ஆதலால் கோயில்களுக்கு போகமாட்டேன்' என்றெல்லாம்
சொல்லிக்கொண்டு வந்தவர்கள் மத்தியில், "நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்.
கோயில்களுக்குச் செல்லுவேன்' என்று பகிரங்கமாகக் கூறி உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசாமல் செயல்பட்டவர். அதேநேரத்தில், தான் ஏற்றுக்கொண்ட தலைவர்
பெரியாரின் ஏனைய பல கொள்கைகளை நடைமுறைப்படுத்திய பெருமையும்
எம்.ஜி.ஆரைத்தான் சாரும். எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைக்குக்
கொண்டுவந்த பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர். தானே தவிரத் தாங்கள் பெரியாரின்
பாசறையிலிருந்து வந்ததாகக் கூறிக்கொள்பவர்கள் அல்லவே.
தமிழுக்குப் பல்கலைக் கழகம் எடுத்த பெருமையும், அண்ணாவுக்குப் பிறகு
உலகத் தமிழ் மாநாடு நடத்திய பெருமையும் எம்.ஜி.ஆரைத்தானே சாரும்!
மக்களை நேசித்தவர் - மனிதநேயத்தைப் போற்றியவர் - மக்களால் மறுபிறவி
கண்டவர் என்ற நிலையில் மக்களின் மனதில் மறையாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்
என்கிற பெருமைக்கு உரியவர் எம்.ஜி.ஆர். என்பதில் யாருக்கும் மாற்றுக்
கருத்து இருக்க வழியில்லை.
எம்.ஜி.ஆருக்கும் அண்ணாவுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய நெருக்கம்
அமைந்துவிட்டது. "எனது இதயக்கனி' என்று அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்ட
எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்திருப்பது வரை அண்ணா நாமம் வாழும். அண்ணாவின்
நாமம் வாழுமட்டும் எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்திருக்கும். அதனால்தான் தாம்
மறைந்தும் கூடப் பிரியக்கூடாது என்று சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்ச்
சமுதாயத்தின் இரண்டு தலைசிறந்த தலைவர்களும் அருகருகே மீளாத் துயிலில்
ஆழ்ந்திருக்கின்றனர் என்று தோன்றுகிறது!
(இன்று எம்.ஜி.ஆர். பிறந்தநாள்)
கா.இர. குப்புதாசு
பொன்விழா ஆண்டு நினைவலைகள்.
14.1.1966 - 18.2.1966.
36 நாட்களில் மூன்று வெற்றி காவியங்களை ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர்
அன்பே வா - 14.1.1966
நான் ஆணையிட்டால் . 4.2.1966
முகராசி - 18.2.1966
ஏ.வி.எம் , சத்யா மூவிஸ் , தேவர் பிலிம்ஸ் -மூன்று பெரிய நிறுவனங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் வெளிவந்தது .அன்பேவா - பிரமாண்ட வண்ணப்படைப்பாகவும் , நான் ஆணையிட்டால் சமூக சீர்திருத்த படமாகவும் , முகராசி பொழுது போக்கு படமாகவும் வந்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விட்டது .
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு , இனிய பாடல் காட்சிகள் , புதுமையான சண்டை காட்சிகள் என்று எம்ஜிஆர் ரசிகர்களுக்கு விருந்து கிடைத்தது .
புதிய வானம் புதிய பூமி ....
தாய் மேல் ஆணை ..
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேரு
நல்ல வேலை நான் பிழைத்து கொண்டேன்
அன்பே வா ..உள்ளம் என்றொரு .....
ஏய் ,,நாடோடி ..
நான் பார்த்ததிலே ...அவள்
ராஜாவின் பார்வை ராணியின் ..
பாட்டு வரும் உன்னை ...
நான் உயர உயர போகிறேன் ..
உனக்கும் எனக்கும்தான் பொருத்தம்
முகத்தை மூடி கொண்டது ...
12 இனிய பாடல்கள் .....
மூன்று படங்களின் திருவிழா நாட்களை ரசித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் .
மறக்க முடியாத நாட்கள் .................
இந்த மூன்று படங்களும் இன்று வரை மறுவெளிட்டில் சாதனை படைத்து கொண்டு இருப்பது நம் தலைவருக்கு மட்டுமே சாத்தியம்
எல்லோர்க்கும் பிடித்த அருமையான மக்கள் திலகத்தின் பாடல் .
https://youtu.be/NPaQS0qFyGY
இன்று (20/01/2016) பிற்பகல் 1.30 மணி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
பெரிய இடத்துப் பெண் , ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i64.tinypic.com/2z3yjdk.jpg
இத்துடன் 17/01/2016 அன்று இரவு 11 மணிக்கு வேந்தர் டிவியில் ஒளிபரப்பான புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் , "நல்ல நேரம் " சேர்த்து 16 திரைப்படங்கள் தொலைகாட்சி
சானல்களில் ஒளிபரப்பாகியது உலக மகா சாதனை.
http://i67.tinypic.com/14to9yf.jpg
தகவல் உதவி :ஓட்டேரி திரு. பாண்டியன்.
கிளாசிக் சினிமா - ஜனவரி 2016
http://i65.tinypic.com/s0zktd.jpg
கிளாசிக் சினிமா செய்திகள் - ப்ளாஷ் பேக்
தமிழ் திரைப்பட உலகில் முதன் முதலாக ட்ராக் ட்ராலியை அமைத்து திரைப்படம்
எடுத்தவர் இயக்குனர் எல்லீஸ் ஆர். டங்கன் - படம்- சதி லீலாவதி -1936ல்
1965 பொங்கல் வெளியீடாக வந்து, வசூலிலும், பார்வையாளர் எண்ணிக்கையிலும்,
அதிக அரங்குகளில் வெள்ளி விழா (7 அரங்குகள் ) கண்ட ஒரே படம் "எங்க வீட்டு பிள்ளை "
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்பட துறையில் இருந்தவரையில் இந்த சாதனை
முறியடிக்கப்படவில்லை .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு முதன் முதலாக பின்னணி பாடியவர் திரு. எம்.எம். மாரியப்பா .
சென்னையில் அதிக தியேட்டர்களில் வெளியான முதல் தமிழ் படம் "மகாதேவி "
1957ல் ஆறு அரங்குகளில் வெளியானது .
http://i67.tinypic.com/2zjaq6h.jpg
நக்கீரன் வார இதழ் =20/01/2016-
தன்னலம் தேவைதான் . அனால் அது பொதுநலமாக பரிணமிக்க வேண்டும் -
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
http://i65.tinypic.com/15x0ll2.jpg
எம்.ஜி.ஆர். நடித்த அன்பே வா படம் வெளிவந்து இந்த பொங்கலோடு ஐம்பது வருடங்கள் ஆகிறது. இந்த படத்திற்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளது. திரையரங்கில் நான் பார்த்த முதலும் கடைசியுமான தலைவர் படம்.
எங்கள் பகுதியில் இருந்த மத்திய அரசு தொழிற்சாலையின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர ஊழியர்களுக்கான மனமகிழ் மன்றத்தின் திறந்த வெளி திரையரங்கில் அதிகம் ஞாபகம் இல்லாத ஒரு சனிகிழமை அன்று பார்த்தேன்.
ஜெ.பி.யாக தலைவர் திரையில் தோன்றும் முதல் காட்சியில் ரசிக்க ஆரம்பித்து, ஆனந்தத்தின் உச்சியில் அவர் பாடும் புதிய வானம் புதிய பூமி பாடலில் அவரின் ரசிகனாகிவிட்டேன்.
என்னதான் புதிய வானம் புதிய பூமி பாடல் எனக்கு பிடித்து இருந்தாலும் நான் அதிகம் முணுமுணுப்பது கல்லூரி மாணவர்கள் பாடும் ஒன்ஸா பாப்பா மெத்தமாமா என்னடி அம்மா எங்கள் லிட்டில் டூரிஸ்ட் என்ற பாடல் தான்.
அதுவரை நாயக பிம்பத்திலேயே நடித்து வந்த தலைவர் முதல்முறையாக நகைச்சுவை வேடம் ஏற்றிருப்பார். சின்ன பாப்பூ, ராமைய்யா, புண்ணியகோடி ஆகியோரது நகைச்சுவை மறக்க முடியாத ஒன்று.
திரையில் படம் பார்த்து கொண்டு இருந்த பொழுது, இடைவேளையில் ஒரு பெரியவர் இந்த படம் வெளி வந்த பொழுது படத்திற்கு இரண்டு இடைவேளை இருந்தாக சொன்னார். உண்மை தான். அன்று பெரும்பாலும் டூரிங் டாக்கீஸில் இரண்டாம் வெளியீடாக அன்பே வா போட்டபட்ட பொழுது படத்தின் நீளம் காரணமாக சூடான ப்ராஜெக்ட்டரை இரண்டு தடவை நிறுத்தி ரீல் சுற்றி, மாற்றி வைத்து படதை ஓட்டினார்கள்.
படத்தில் சேகர் எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது, என் முதல் மனைவி விமானம் என்று சொல்வார்.... அவரது விமானத்தின் மீதான காதலை பின்னாட்களில் சாண்டில்யன் எழுதிய கடல் புறா நாவலில் அகூதா மற்றும் அமீர் ஆகியோரின் கடல் மீதான காதலில் கண்டேன். அந்த நாவலில் ஒரு வரி வரும் (சரியாக ஞாபகம் இல்லை) ஒருவன் கடலில் பயணித்து விட்டால், கடல் அவனை விடாது.. அவனை கடல் அழைத்து கொண்டே இருக்கும். அந்த வரியை போல அன்பே வா படத்தை ஒருதரம் பார்த்துவிட்டதால் அந்த படத்தை மீண்டும் மீண்டும் இந்நாள் வரையில் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
அதிகாலை பனியின் பொழுது புதிய வானம் புதிய பூமி பாடல், குளித்து விட்டு வரும் பொழுது லவ் பேர்ட்ஸ் பாடல், நண்பர்களுடன் இருக்கும் பொழுது ஒன்ஸா பாப்பா மெத்தமாமா பாடல் என்று இந்த படத்தை ஞாபகபடுத்தும் விஷயங்கள் தினசரி வாழ்க்கையில் கிடைத்து கொண்டே இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலே தான் யார் என்று தெரியாமல் கலாட்டா பண்ணும் கல்லூரி மாணவர்களை பார்த்து தலைவர் சிரிக்கும் அந்த சிரிப்புக்காகவே படத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
courtesy - tamil manam .Thanks ABKHLABHI SIR
http://s24.postimg.org/wbnekng79/FB_...ed_Picture.jpg
Courtesy - facebook
“அன்பே வா” – (மறு) திரைப்பார்வை
courtesy - Raghavan Sampathkumar
80s ல பொறந்தவங்களுக்கே பாதி பேருக்கு மேல பழைய படம்னா ஒரு கிலி உண்டாகும். பக்கம் பக்கமா செந்தமிழ் வசனம், செண்டிமெண்ட் ஓவர்லோட், அழுகை, குடும்பக் கதை, etc etc ன்னு நமக்கு செட் ஆகாதுப்பான்னு சொல்லுவாங்க.
அதே 90s க்கு அப்புறம் பொறந்த பசங்கன்னா “இதுக்கு கெமிஸ்ட்ரி கிளாசே பரவால்ல” ன்னு தெறிச்சி ஓடியே போய்டுவாங்க. ஆனா, பழைய படங்கள் எல்லாமே அப்படி இல்ல, 3 மணி நேரம் போறதே தெரியாம யூத்புல்லா, ஜாலியா, சும்மா டைமிங் காமெடியோட சில EXTRAORDINARY ENTERTAINER படங்கள் இருக்குன்னு சொல்றத்துக்கு தான் இந்த பதிவு.
இன்டெர்நெட்ல எங்க பாத்தாலும் புதுப்பட விமர்சனம் கெடைக்கும். ஆனா, என்னிக்குமே நினைவில் நீங்காம இருக்கற சில படங்களப் பத்தி விவரம் இருக்குமான்னா பெரும்பாலும் இல்லை.
அந்த வரிசையில FIRST… நம்ம மக்கள் திலகம் MGR நடிச்ச
“அன்பே வா”
“அடப்பாவி ! கவுத்துட்டான்”
இது 2015 ல வந்த எதோ ஒரு படத்துல வந்த ஒரு யங் ஹீரோவோட டயலாக் இல்ல. 1966 ல வந்த “அன்பே வா” ல MGR பேசினது. Typical பழைய படம் மாதிரி “அய்யகோ, பணத்தை வாங்கிக்கொண்டு இப்படி என்னை ஏமாற்றிவிட்டானே, கிராதகன்” ன்னெல்லாம் AVM Rajan (படமே ஏவிஎம் ப்ரொடக்ஷன் தானே…) எபக்டு குடுக்காம, சும்மா பஞ்ச் பாலா மாதிரி தலைவர் பேசின இந்த ஒரு டயலாக்லேந்தே புரியும் அந்த படம் எவ்ளோ யூத்புல்லா இருக்கும்னு.
அந்த காலத்துல தமிழ் வசனங்களுக்காகவே ஓடின படங்கள் தான் ஜாஸ்தி. அதஎல்லாம் பாத்துட்டு இந்த ஜெனரேஷன் பசங்க “ஏம்பா? வீட்டுக்குள்ளயே செந்தமிழ்ல தான் பேசுவாங்களா?” ன்னு கேப்பாங்க. ஆனா, அந்த (60s) ஜெனரேஷன்ல இது முற்றிலும் வித்தியாசமான படம்னு காட்ட இந்த ஒரு வசனம் போதும்.
படத்தோட கதை எல்லாருக்கும் தெரிஞ்சது தான். COME SEPTEMBER ங்கற ஹாலிவுட் படத்தோட அடிப்படையில் AC திருலோகச்சந்தர் அவர்கள் திரைக்கதை, டைரக்ஷனில் வந்தது. சொல்லப்போனா அந்த பீரியட்களில் இந்த கதையை படமாக்கத் துணிந்த ACT, பலவித GENRE களில் வல்லவர்னு காட்ட இது ஒரு நல்ல உதாரணம்.
அதே போல, அதுவரை ஆக்ஷன் ஆதர்ஸ ஹீரோவாவே நடிச்ச நம்ம மக்கள் திலகமும் காமெடியில வூடு கட்டி கலக்குவார்னு காட்டினதும் இந்த படம் தான். சும்மா சொல்லக்கூடாது, செம்ம கேஷுவலா; READERS DIGEST படிக்கற; GOLF விளையாடும் மல்டி மில்லியனரா செம்ம கலக்கல். அதுவும் குளிச்சிட்டு வந்து ஹீரோயின கலாய்க்கற ஸீன்… ஹா ஹா… டாப் கிளாஸ். இன்னோரூ ஸீன்ல காலேஜ் பஸ் டிரைவருக்கு பணம் குடுத்து அவன வயத்து வலின்னு சொல்லச் சொல்லிடுவாரு. அதுக்கு முன்னாடி, “டிரைவாஆஅர்” னு சும்மா வாய சொழட்டி நக்கலா கூப்டுவாரு பாருங்க… யப்பா… செம்ம மாஸ்….
அபிநய சரஸ்வதி (அவங்கள காலேஜ் ஸ்டூடன்ட்னு நம்பக் கொஞ்சம் நிறையவே கஷ்டமா இருந்தாலும்…) தன் பங்குக்கு கேஷுவலா பண்ணிருப்பாங்க.
படத்தோட ஹைலைட் நாகேஷ் & மனோரமா. என்ன டைமிங் ரெண்டு பேருக்கும். அதுவும் நாகேஷ் செம்ம கூலா தலைவர் கிட்ட காசு வாங்கிகிட்டே இருக்கறதும், அதப்பார்த்தும் ஒண்ணும் பண்ண முடியாம ஆச்சி தவிக்கறதும் சொல்லி முடியாது. திரையில் பார்த்து ரசிக்கணும். கேஸட் ப்ளேயர் இருந்த காலத்துல நானும் என் அக்காவும் இந்த வசனம் முழுக்க “கட்டிக்கரும்பே கண்ணம்மா” ல ஆரம்பிச்சு மொத்த வசனத்தையும் ஒப்பிப்போம்.
CAMEO வா வர்ற நம்ம (நடமாடும் AHUJA சவுண்ட் சிஸ்டம்) அசோகன், அவர் வேலையக் கரெக்டா அளவா செய்வாரு. மத்த எல்லாருமே அவங்கவங்க கேரக்டர்ல அழகா நடிச்சிருப்பாங்க.
ஹீரோ ஹீரோயின்க்கு நடுவுல வர்ற ஈகோ, மோதல், காதல், எல்லாத்தையும் அவ்வளவு டீசண்டா, அழகா, திரைக்கதையில கொண்டுவந்த ACT ஒரு ஜீனியஸ்னு சொல்ல எனக்கு வயசும், அறிவும், அனுபவமும் போதாது. ஆனாலும், ரசிகன்ங்கற முறையில், அவரைக் கண்டிப்பா புகழ்ந்தாக வேண்டும்
சுத்தமா கவனிக்கப்படாத ஆனா REFRESHING ஆன 2 விஷயங்கள் அதாவது பாடல்கள்.
1) AL ராகவன் பாடின “ONCE A PAPPA, MET A MAMA“ – என்ன ஒரு ஸ்டைல் ஆன PRONUNCIATION! யப்பா… வாட்ட பௌட்ட ஹெல்லார்யூ? ன்னு எதோ RAP சிங்கர் மாதிரி பாடிருப்பாரு. அந்தக்கால சுராங்கனி ன்னு சொல்லலாம். கேட்டா எழுந்து டான்ஸ் ஆட வக்கிற மாதிரி செம்ம யூத்தா இருக்கும் அந்த பாட்டு.
2) கிளைமாக்ஸ் க்கு முன்னாடி வர்ற Liban Bindey ங்கற ஒரு சிங்கர் பாடின சோகமான “ADIOS, GOODBYE MY FRIEND“ ங்கற பாட்டு. அந்த மூடுக்கு ஏத்தா மாதிரி அருமையா செட் ஆகி இருக்கும்
இந்த ரெண்டு பாடல்களையும் சேர்த்த MSV அவர்களை மெல்லிசை மன்னர்னு சொல்லலேன்னா எப்படி?
ஓகே, மொத்தத்துல பழைய படம்னா கிளிசரின் பாக்டரி தான்னு நெனச்சிட்டிருக்கற யூத்களே, அன்பே வா ஒரு தடவ பாருங்க…
அன்பே வா’ படத் தில் எம்.ஜி.ஆர் பெரிய பணக் காரர். வெவ்வேறு நாடு களுக்குப் பயணித்துக் கொண்டே இருப்பது என்று பிஸியாகவே இருப்பார். தொடர்ந்து வேலை செய்து களைத்துப்போனதால் சிம்லாவில் ஜே.பி. பங்களா என்கிற பெயரில் இருக்கும் தனது பங்களாவுக்கு ஓய்வு எடுக்கச் செல்வார். அந்த பங்களாவில் வேலை பார்க்கும் நாகேஷ், அவரது மனைவி மனோரமா, மாமனார் பி.டி.சம்பந்தத்துடன் சேர்ந்து அந்த பங்களாவை டி.ஆர்.ராமசந்திரன், முத்துலட்சுமி, சரோஜாதேவிக்கு வாடகைக்கு விட்டிருப்பார்கள்.
இந்த விஷயம் எம்.ஜிஆருக்குத் தெரிய வரும். எம்.ஜி.ஆரின் காலில் மனோரமா விழுந்து, ‘‘முதலாளி மன்னிச்சிருங்க’’ என்று மன்னிப்பு கேட்பார். ‘‘சரி, நான்தான் இந்த பங்களாவுக்கு முதலாளி என்று யாரிடமும் சொல்லக் கூடாது’’ என்று மனோரமாவிடம் சத்தியம் வாங்கிக்கொள்வதுடன், நாகேஷிடம் பணத்தைக் கொடுத்து தானும் அங்கே தங்குவதற்கு சம்மதம் வாங்கியிருப்பார் எம்.ஜி.ஆர். சரோஜா தேவி மேல் எம்.ஜி.ஆருக்கு ஒரு கண் விழுந்ததுதான் இதற்குக் காரணம். எம்.ஜி.ஆரும் நாகேஷும் சந்தித்துப் பேசும்போதெல்லாம் மனோரமா பதறு வார். அந்தப் படத்தில் நகைச்சுவை காட்சி அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கும்.
படத்தில் எம்.ஜி.ஆருக்கும் சரோஜாதேவிக்கும் இடையில் ‘சண்டையில்தான்’ காதல் பூக்கும். ‘லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்’ பாடலின்போது மூன்று, நான்கு லவ் பேர்ட்ஸ் களைக் கூண்டில் வைத்து ஷூட் செய்தோம். அந்தப் பாட்டுக்கு சரோஜாதேவி ஆடும்போது எம்.ஜி.ஆர் மறைந்திருந்து கேலி செய்து அபிநயித்து ஆடுவார். அந்த ஷூட்டிங் சமயத்தில் மூர் மார்க்கெட்டுக்குச் சென்று லவ் பேர்ட்ஸ் வாங்கி வருவதற்கு அண்ணாமலை என்ற உதவியாளரை நியமித்திருந்தோம். அவருடைய வேலையே லவ் பேர்ட்ஸ் வாங்கி வருவதுதான். அதனால் அவர் பெயரே ‘லவ் பேர்ட்ஸ்’ அண்ணாமலை என்றாகிவிட்டது.
சரோஜாதேவிக்கு அப்பாவாக நடித்த டி.ஆர்.ராமசந்திரன் நிஜத்தில் சைவக் காரர். ஒரு காட்சியில் சிக்கன் ரோஸ்ட் சாப்பிடுவதுபோல காட்சி எடுக்க வேண் டும். சிக்கனை பார்த்தாலே அவருக்கு வாந்தி வந்தது. இந்த செய்தி ஏவி.எம் செட்டியாருடைய காதுக்குப் போயிற்று. அதற்கு அவர் ‘‘பேக்கரியில் சிக்கன் மாதிரி கேக் செய்யச் சொல்லி, அதை சாப்பிட வைத்து எடுக்கலாமே?’’ என்றார். சிக்கன்ரோஸ்ட் போலவே கேக் செய்து அவரை சாப்பிட வைத்தோம்.
எம்.ஜி.ஆர். அவர்கள் சிம்லாவைப் பார்த்து ரசித்து பாடும் விதமாக உரு வானதுதான் ‘புதிய வானம் புதிய பூமி’ பாடல். இந்தப் பாட்டில் கவிஞர் வாலி, ‘உதய சூரியனின் பார்வையிலே…’ என்று ஒரு இடத்தில் எழுதியிருந்தார். அதை பார்த்த செட்டியார், ‘‘சென்சாரில் வெட்டி விடுவார்களே?’’ என்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் இப்படி பாடினால்தான் கைதட் டல் விழும்’’ என்று சமாதானம் செய்தார் வாலி. அப்படியே படமாக்கப்பட்டது.
ஆனால். செட்டியார் சொன்னது போலவே சென்சாரில் அந்த வரியை நீக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அதன் பிறகு ‘உதய சூரியனின் பார்வை யிலே’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்று வார்த்தையை மாற்றினோம். படத்தில் மட்டும் ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்றுதான் இருக்கும். ஆடியோவில்தான் ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்று இருக்கும். இதெல்லாம் சென்சார் லீலைகள்.
‘‘உதய சூரியன் என்று வரும் இடத்தில் எம்.ஜி.ஆரை குன்றின் உச்சியில் ஏறி நிற்க வைத்து சூரியனையும் எம்.ஜி.ஆரை யும் இணைத்து ஷாட் எடுத்தால் நன்றாக இருக்கும்’’ என்று இயக்குநர் திருலோக சந்தர், பி.என்.சுந்தரத்திடம் சொல்ல, ‘‘எம்.ஜி.ஆரால் ஏற முடியுமா?’’ என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
கொஞ்ச நேரத்தில் ‘‘டைரக்டர் சார்..!’’ என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது. எல்லோரும் குரல் வந்த திசையில் பார்த்தோம். குன்று உச்சியில் எம்.ஜி.ஆர் அவர்கள் நின்றுகொண்டிருந்தார். படக் குழுவே அவரைப் பார்த்து திகைக்க ‘‘மலை மேல என்னால ஏற முடியுமான்னு நீங்க பேசிட்டிருந்தீங்க… நான் ஏறியே வந்துட்டேன்’’ என்றார் எம்.ஜி.ஆர் புன் சிரிப்போடு. அதுதான் எம்.ஜி.ஆர்!
இயக்குநர் நினைத்தது போலவே அந்தக் காட்சியை படமாக்கினோம். துள்ளல் இசையாக அமைந்த அந்தப் பாடல் முழுக்க எம்.ஜி.ஆர் அவர்கள் ஓடிக் கொண்டே இருப்பார். டி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவில் சிம்லாவின் அந்த அழகும், அந்த மனிதர்களும், அந்தக் குழந்தைகளும் அந்த பாட்டில் வலம் வருவார்கள்.
‘புதிய வானம் புதிய பூமி…. எங்கும் பனி மழை பொழிகிறது’என்ற வரிகள் வரும் இடத்தில் பனி மழையோடு காட்சி எடுக்க வேண்டும் என்று விரும்பினோம். அப்படி ஒரு தருணம் வாய்க்க இரண்டு நாட்கள் காத்திருந்தோம். பனி மழை பெய்யவே இல்லை. சிம்லாவில் இருந்து டெல்லி வந்து விமானத்தில் சென்னைக் குப் புறப்பட்டோம்.
விமானம் பறந்தது. எம்.ஜி.ஆர் அவர்கள் அங்கு கொடுக்கப் பட்ட ஆங்கில செய்தித்தாளை படித்து விட்டு, ‘‘மிஸ் பண்ணிட்டோம். ஸ்நோ பால்ஸ் இன் சிம்லானு செய்தி வந் திருக்கு’’ என்று பத்திரிகையைக் காட்டி யவர், ‘‘டெல்லியில் விமானம் ஏறுவதற்கு முன்பு இந்த நாளிதழ் கையில் கிடைத் திருந்தால், சிம்லாவுக்குத் திரும்பிப் போய் பனி மழையில் அந்தப் பாட்டை எடுத்திருக்கலாம்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஆர்வமும், ஆதங்கமும் அதில் தெரிந்தது.
படத்தில் எம்.ஜி.ஆர்- சரோஜாதேவி ‘காதல் சண்டை’ உச்ச கட்டத்தை எட்டும். சரோஜாதேவி அங்கு வந்த கல்லூரி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்துக் கொண்டு எம்.ஜி.ஆரை கேலி செய்து நடனம் ஆடுவார். அதற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். சரோஜாதேவியின் மாணவக் குழுவுக்குத் தலைமை வகித்தவர் நடன இயக்குநர் சோப்ராவின் உதவியாளர் ரத்தன்குமார். அவர் நடனம் ஆடுவதில் புலி. அந்த ‘புலி’ ஆட்டத்துக்கு சவால்விட்டு எம்.ஜி.ஆரால் எப்படி ஆட முடிந்தது?
s.p .muthuraman
அன்பே வா’ படத்தில் சரோஜாதேவி கல்லூரி மாணவர் களுடன் சேர்ந்து எம்.ஜி.ஆரைக் கேலி செய்து நடனம் ஆடுவது போல் ஒரு காட்சி. உதவி நடன இயக்குநர் ரத்தன்குமார் தலைமையில் மாணவர் குழு நடனமாட இருந்தனர். ரத்தன்குமாருக்கு இணையாக எம்.ஜி.ஆரால் ஆட முடியுமா என்று படக்குழு எதிர்பார்ப்பில் இருந்தது.
போட்டி என்றாலே விறுவிறுப்புத் தானே. படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். அவர்கள் வெகு இலகுவாக ட்விஸ்ட் நடனம் ஆடியபோது கைதட்டல் ஷூட்டிங் அரங்கத்தை அதிர வைத்தது. படம் வெளியானதும் தியேட்டர்களில் ரசிகர்கள் அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பப் பார்த்து ரசித்தனர்.
சிம்லாவுக்குப் படப்பிடிப்புக்காக போயிருந்தோம். சிம்லாவின் மேல்பகுதி முழுதும் பனி படர்ந்த மலைச் சிகரங்கள். அங்குதான் சீனாவின் எல்லைக் கோடு இருந்தது. அந்தப் பகுதியில் நமது ராணுவ வீரர்கள் நம் நாட்டை பாதுகாப்பதற்காக காவல் இருந்தார்கள். அங்கிருந்த பனியும் மிகையான குளிரும் நம் ராணுவ வீரர்களை பாதித்து, அவர்களில் சிலருக்கு கால்கள் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் இருந்தார்கள்.
அத்தகைய ராணுவ வீர்ர்களைப் பார்க்க எம்.ஜி.ஆர் தலைமையில் சரவணன் சார், திருலோகசந்தர் சார் மற்றும் சிலரும் புறப்பட்டோம். அந்த வீரர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர் கண் கலங்கினார். ‘‘நாட்டில் உள்ள எங்கள் உயிரைக் காக்க, உங்கள் உயிரைப் பணயம் வைக்கும் உங்களைப் பார்க்க வந்திருக்கிறோம்’’ என்று இரு கை தூக்கி அவர்களை வணங்கினார் எம்.ஜி.ஆர். அந்த வீரர்களுக்கு ஹார்லிக்ஸ், ரொட்டி, பழங்கள் எல்லாம் கொடுத்து அவர்களுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு வாழ்த்தினார்.
எப்போதுமே எம்.ஜிஆருக்கு ஏவி.எம்.சரவணன் சார் மீது தனிப்பட்ட பிரியம் உண்டு. அந்தப் பிரியத்தின் வெளிப்பாடுதான் 86 மற்றும் 87-ம் ஆண்டுகளில் ‘சென்னை செரிஃப்’ஆக சரவணன் சாரை நியமித்து பெருமைப் படுத்தினார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து, இயக்கிய படம் ‘நாடோடி மன்னன்’. இந்தப் படத்தைப் பற்றி எம்.ஜி.ஆரிடம் பத்திரிகையாளர் கள் கேட்டபோது, ‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாடோடி’’ என்றார். அந்தச் சூழ்நிலையில் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் ஏவி.எம்.செட்டியாரைப் பார்க்க வந்தார். ‘‘நாடோடி மன்னன் படத்தின் இறுதிகட்ட வேலைகளை முடிக்க கொஞ்சம் பணம் வேண்டும்’’ என்றார். செட்டியாருடைய சட்ட ஆலோசகர் எம்.கே.எஸ், ‘‘பணம் கொடுப்பதாக இருந்தால் எம்.ஜி.ஆரின் கையெழுத்து வேண்டுமே’’ என்றார்.
அதற்கு ‘‘நான் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸின் நிர்வாகி. நான் கையெழுத்துப் போடுகிறேன். என் மேல் நம்பிக்கை வைத்துக் கொடுங்கள்’’ என்றார் ஆர்.எம்.வீரப்பன். அவருடைய அணுகுமுறை செட்டியாருக்கு பிடித்துவிட்டது. கேட்ட பணத்தைக் கொடுத்தார். படம் ரிலீஸான உடனேயே வாங்கிய பணத்தைத் திரும்பக் கொண்டுவந்து கொடுத்தார் ஆர்,எம்.வீ. அவருடைய நாணயம் செட்டியாருக்குப் பிடித்துப்போய் ‘‘நீங்கள் படம் எடுத்தால், நான் பண உதவி செய்கிறேன்’’ என்றார். ஆர்.எம்.வீ ‘தெய்வத்தாய்’படத்தை சொந்தமாக தயாரித்தபோது, தான் சொன்னதைப் போலவே ஆர்.எம்.வீ அவர்களுக்கு செட்டியார் பணம் கொடுத்தார்.
s.p .muthuraman
சாலைகளில் எம்.ஜி.ஆரின் அரசாங்கம்
இந்தச் சூழலிலும் எம்ஜிஆர் தமிழகமெங்கும் ஆட்டோ நிறுத்தங்களிலும், சாலை முனைகளிலும் டிசம்பர் 24 அன்றும், ஜனவரி 17ஆம் தேதியிலும் நினைவுகூரப்படுகிறார். அவரது ரசிகர்களுக்கு வயதாகிவிட்டதை அவர்களது சுருங்கிய முகங்களும், காய்ப்பேறிய கைகளும் காட்டுகின்றன.
எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்கும் தெருவில் எம்ஜிஆரின் அரசாங்கம் நிகழ்வது போன்ற தோற்றத்தை எப்படியோ அந்த இடம் அடைந்துவிடுகிறது. பூ விற்கும் பெண்கள் முதல் வெள்ளை வேட்டியுடன் தொழிலாளர்களைப் பார்த்து அன்று உற்சாகமாகக் கையுயர்த்தி செல்லும் சிறு முதலாளி வரை எல்லாரும் கதாபாத்திரங்கள் ஆகிவிடுகிறார்கள். நல்ல முதலாளி, நல்ல தொழிலாளி என்ற உலகம் அந்தப் பாடல்களின் கீழே ஒவ்வொரு வருடமும் சிருஷ்டிக்கப்பட்டு விடுகிறது. ‘உலகம் பிறந்தது எனக்காக’ பாடலும் ‘உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே’ பாடலும் ஒலிக்கும்போது, தமிழகம் முழுவதும் தெருவோரங்களில் இருக்கும் பாட்டாளிகளின் கைகள் ஒரே கையாக அன்று எழும்பும். ‘கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா?’ என்ற பாடலின்போது ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வரும்.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய கற்பனை அரசாங்கத்தில் நீதி தவறுவது போலத் தோன்றினாலும் கடைசியில் ஜெயிக்கவே செய்யும். நம்பிக்கை சிறகடிக்கும். ‘உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா...கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா...’
எம்ஜிஆரின் பாடல்களுக்குள்ளேயே நாளைக்கான நம்பிக்கையையும், மாற்றத்தையும், புரட்சியையும், நீதியையும் பாவித்து வளர்ந்த தலைமுறையினர் இன்னமும் வாழ்ந்துவருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் எப்போதும் ஒன்றேபோல இருக்கப்போகும் ‘நாளை ஒன்றை நம்பி’ களைப்பேயில்லாமல் கற்பனை வீதியில் அபிநயம் செய்கிறார். ‘நாளை நமதே இந்த நாளும் நமதே… அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது.’ என்கிறது ஒலிபெருக்கி. ரசிகர் பூரிக்கிறார்.
Come September is a popular Hollywood movie of 1963 featuring Rock Hudson and Gina Lollobrigida. This movie, directed by the noted filmmaker Robert Mulligan, was a hit around the world, including India where it had a successful run in places like Madras.
One of the contributing factors for its success was the popular title music, ‘Come September,’ and the long-playing record, rendered by the famous American musician Billy Vaughn, was a bestseller even in Madras city.
The movie narrated the tale of Robert (Rock Hudson), an American millionaire, who arrives early for his annual vacation at his luxurious Italian villa. His long-time girlfriend Lisa (Gina Lollobrigida) has given up waiting for him to “pop the question,” and has decided to marry another man. Meanwhile, his sneaky villa manager Maurice secretly converts the villa into a hotel when the boss is away. The current guests of the “hotel” are a group of young American girls trying to fend off a gang of oversexed boys, led by Tony (famed singer Bobby Darin in his movie debut).
This interesting storyline was brilliantly adapted into a Tamil film by the multifaceted writer-director-producer A.C. Thirulokachandar, who was then working for the House of AVM writing screenplays and also making movies. ‘ACT’ hails from an upper middle-class family of Madras and after qualifying himself with an MA degree he worked hard to appear for the Indian Administrative Service without thinking of a job.
Even as a student he wrote stories and articles and was a voracious reader. His close friend and classmate P. Balasubramaniam, son of the South Indian movie pioneer R. Padmanabhan, introduced him to his father and soon he joined RP as his assistant and learnt the ropes of moviemaking, especially screenplay writing. Then he moved to the AVM unit where he made his debut as a filmmaker…
Anbe Vaa was all about JB (MGR), a wealthy industrialist, who decides to take a break at his Simla home away from business concerns. He lands there to find that his caretaker (Sambandam) has rented his house to Geetha’s (Saroja Devi) family, taken the rent and left for Kasi with his wife. His daughter Manorama and brother-in-law Nagesh are left in charge of the house and the guests. JB decides not to reveal his identity and pretends to be a wealthy man, Balu, willing to pay rent for a place in the house. Nagesh takes the money and gives him JB’s room.
Balu keeps playing practical jokes on Geetha and they keep clashing. She brings her friends who are on a trip to Simla and tries to drive JB from the house. After he gets the friends on his side, she gets angry and tells her parents to get her married to Asokan, a relative and an Air Force pilot.
By the time Balu confesses his love for her, Geetha’s engagement is already fixed. Asokan turns out to be a school friend of JB, but he also agrees to play along with the trick. Asokan discovers that Balu and Geetha are actually in love with each other and steps aside. When Balu’s true identity is known, Geetha thinks that the wedding plans are yet another of his practical jokes and tries to run away. He finds her and all misunderstandings are cleared. The two get married.
The screenplay was brilliantly written by ACT. MGR’s performance as the rich man posing as a tenant was impressive. Nagesh was inimitable. Saroja Devi looked glamorous in her glossy make-up and costume.
One of the major plus points was its melodious music (composer M.S. Viswanathan working on his own after separating from his erstwhile partner T.K. Ramamurthi). Many songs became hits. The opening song, ‘Puthiya Vaanam Puthiya Bhoomi’ (lyrics: Vaali and voice: T.M. Soundararajan) filmed on MGR sporting a red and black striped coat in Simla and other areas, had a political touch. It was brilliantly photographed by master lens man S. Maruthi Rao. ‘Rajavin Paarvai’ (TMS and P. Suseela) is another hit number.
The film was produced by the sons of AV. Meiyappan — Murugan, Saravanan and Balasubramaniam.
With so many plus points, Anbe Vaa turned out to be a box office hit….
Remembered for the impressive performances by MGR, Nagesh and Saroja Devi, melodious music, interesting storyline and screenplay, picturesque cinematography which captured the beautiful landscape of the Himalayan region, and the fabulous sets in true AVM style.
the hindu