http://i66.tinypic.com/34eb395.jpg
Printable View
NAKKEERAN - THIS WEEK.
http://i65.tinypic.com/28v3qk9.jpghttp://i68.tinypic.com/zvzodc.jpg
KUNGUMAM - THIS WEEK
http://i68.tinypic.com/192uc2.jpg
the hindu -tamil mgr -100 ...comments portion
ஒரு உயர்ந்த மனிதன். அவரை பற்றி பெரும்பாலும் செவி வழியாக கேட்டு இருக்கிறோம், பல கற்பனை என்று எண்ணி இருப்போம். அவற்றை எல்லாம் தொகுத்து, சான்றுகளுடன் வழங்கிய ஸ்ரீதர் சாமிநாதனையும் தமிழ் ஹிந்துவையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். தன்னை தானே தம்பட்டம் அடிப்பவர்கள், ஆட்சியாளர்கள் மத்தியில் தனி ஒருவராக இருந்து வெற்றி பெறுவது அவ்வளவு சாமானிய வேலை அல்ல.
எம்ஜியார் தமது படங்களில் தாய்க்கு மரியாதை தரும் விதமாக பல பாடல்களை அமைத்து நடித்திருக்கிறார். 'தாய்யிலாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை' - வெற்றிமீது வெற்றிமீது என்னை சேரும், அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னை சேரும்' - ' தாய் மேல் ஆணை, தமிழ் மேல் ஆணை"... என நிறைய பாடல்கள், எல்லாம் தாய் அய் போற்றி.
தங்கள் இந்த சிறப்பு தொடரை புத்தகமாக விழாவில் வெளியிடுங்கள் .
என் போன்ற எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வணங்கி வாங்கி மீண்டும் ரசிப்பார்கள்.
பல பாடங்களை பலருக்கும் மானசீகமாக கற்றுக் கொடுத்துக்கொண்டுள்ள இத்தொடர் இன்னும் 10 நாட்களில் முடிய உள்ளது என நினைக்கும்போதே மனம் கனக்கிறது . தொடரை நீடித்தால் இந்துவின் இத்தொடர் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். மனம் இனிக்கும். நன்மை நடக்கும்
"தாய் மேல் ஆணை! தமிழ் மேல் ஆணை! குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்! தனியானாலும் தலை போனாலும் தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்!" - 'நான் ஆணையிட்டால்' படத்தில் ஓங்கி ஒலித்த குரல் வழியே, எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து 10 ஆண்டுகள், ஊழல் நரியினை ஓரங்கட்டி, வீட்டிலேயே உட்கார வைத்தார்! எம்.ஜி.ஆர் தமிழகத்துக்கு ஏதாவது நல்லது செய்து விடுவாரோ? நம்மால் மீண்டும் முதல்வராக வர முடியாமல் போய் விடுமோ? என்று குள்ளநரி செய்த தந்திர வேலைகளை எல்லாம் முறியடித்தார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலத்தில், இந்தியாவில் அந்நிய முதலீடு கொள்கைகள் தாராளமாக்கப்படவில்லை! உலக வர்த்தக சந்தை நிறுவனத்தில் இந்தியா உறுப்பினராகவில்லை! காவேரி நீருக்கும் (விவசாயத்திற்கு) நிலக்கரிக்குமே (மின்சாரத்திற்கும்) கையேந்த வேண்டிய நிலையிலும் மிகத்திறமையாக (மத்திய அரசின் ஒத்துழைப்பு இன்றியே) செயல்பட்டு, சத்துணவு திட்டத்திற்காக மக்களிடமும் (திரையுலகினர் உட்பட) கையேந்தி உதவி பெற்று, தமிழகத்தை சிறப்பாக ஆண்டார் எம்.ஜி.ஆர்! அதனால் தான், அவரால் படுத்துக் கொண்டே வெற்றி பெற முடிந்தது. நினைத்தை முடித்தவர் அவர் தான்!
அவரது நெஞ்சில் ஈரம் இருந்த காரணத்தால் மட்டுமே அவரைப்பற்றிய காரியங்களை எழுதும் நம் தூரிகைகளிலும் ஈரம் காய்வதே இல்லை . எழுத எழுத புதிதாய் வந்துகொண்டே இருக்கிறது முடிவு சொல்ல முடியாத நல்ல செயல் அனைத்துக்கும் அவர்தான் முதல்மகன் , தமிழக தாய்மார்களின் தலைமகன் , அன்னை சத்யாவின் திருமகன் m g r .
" உள்ளத்தில் இருப்பதை உதட்டிலும் வைப்பவன் எவனோ அவனே மனிதன் " எப்போதும் வாழ்வில் உண்மையாய் வாழ்ந்தவர் !
எம்.ஜி.ஆர் அவர்களை, பலரும் அன்பின் மிகுதியால் பாராட்டி மகிழ்கிறார்கள் என்றால் அதற்கு காரணம், திரைவானில் எத்தனையோ நட்சத்திரங்கள் (STARS) மின்னினாலும், அழகான முழுநிலவாய் (சந்திரனாய்) மக்களின் இதய வானில் வலம் வருபவர் எம்.ஜி.ஆர் மட்டுமே! நடிப்புத்திறமை மற்றும் பணம் மட்டுமே பெரிதாக எண்ணாமல், திரையில் ஒரு வாத்தியாராக நல்ல கருத்துக்களை மக்களின் மனதில் பதிய வைக்கவே தோன்றினார்! அறிவுரை மட்டும் சொல்லவில்லை எம்.ஜி.ஆர், முதல்வரானான பின், பல நன்மைகளை செய்தார்! 1 விவசாயத்திற்கு இலவச மின்சாரம் 2 ஏழைகளின் குடிசைக்கு ஒரு மின் விளக்குக்கான இலவச மின் இணைப்பு 3 பள்ளி குழந்தைகளுக்கு இலவச சீருடை, செருப்பு, பாடநூல்கள், புத்தகப்பை மற்றும் சத்துணவு 4 தமிழ் வழிக்கல்வி பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு இலவச கல்வி மற்றும் சிறப்பு ஊக்கத்தொகை 5 தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள் 6 வேலை வாய்ப்பு பதிவு மூப்பின்படி அரசு வேலைகள் 7 தூய தமிழ் எழுத்துக்களை நடைமுறையாக்கியது 8 ஓசூர் தொழிற்பேட்டை 9 சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் 10 அரிசி விலை கட்டுக்குள் 11 மதுவிலக்கை கொண்டு வந்தது 12 மருத்துவம் மேம்பாடு ..
தனது பிரம்மிப்பான வளர்ச்சியின் , புகழின் ஆணிவேர் ரசிகர்களே என்பதை புரிந்திருந்தவர் மக்கள் திலகம் . திருவிழா கோலம் காணும் திரை அரங்குகள், தலைவர் படங்கள் திரையிடும்பொழுது . 1974 ம் ஆண்டு அமெரிக்க பயணம் முடித்து தாயகம் வந்த அன்று மீனம்பாக்கம் முதல் மன்றோ சிலைவரை மக்கள் வெள்ளம். இதை அறிந்து Airport ல் இருந்து அவர் வீட்டுக்கு செல்லாமல் Mount Road முழுவதும் திறந்த வேனில் வந்து ரசிகர்களை சந்தித்துவிட்டே திரும்பினார் ! சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம் நடு இரவில், மக்களுக்கு நன்கு தெரியும் தலைவர் முகத்தை பார்க்க முடியாது என்பது இருந்தும் மருத்துவ மனை முதல் விமான நிலையம் வரை சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம் தலைவர் பயணிக்கும் Ambulance வண்டியை பார்க்க , கண்களில் நீருடன் . இதுதான் M G R !
" இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் "
கலைப்பூங்கா - ஏப்ரல் 2016
http://i66.tinypic.com/35n37k1.jpg
http://i65.tinypic.com/szahbd.jpg
http://i68.tinypic.com/smsglk.jpg
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் , விஜயா - வாகினி ஸ்டூடியோ அதிபரும்,
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து " எங்க வீட்டு பிள்ளை " , " நம் நாடு போன்ற பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்தவருமான திரு. பி.என்.நாகிரெட்டி அவர்களின் மகன் திரு. விஸ்வநாத ரெட்டி , தன் தந்தையின் வாழ்க்கை வரலாறு
பற்றிய விரிவான புத்தகத்தில் " எம்.ஜி.ஆர். மதித்த முதலாளி " என்கிற தலைப்பில்
நூலாக எழுதியுள்ளார்.
ஜூனியர் விகடன் -26/06/2016
http://i68.tinypic.com/2dhwf1t.jpg
http://i63.tinypic.com/k1xh01.jpg
கவியரசு கண்ணதாசனை முற்றும் புரிதல் என்பது சற்றே கடிது. ஏனெனில், தன் மடித்த உள்ளங்கையில் அவரைப் பூட்டி வைத்திருக்கிறது காலம். அதன் அத்தனை விரல்களையும் விலக்கினால்தான் மொத்தம் விளங்கும். இந்தக் கட்டுரை அதன் ஒரு விரலையேனும் பிரிக்குமா பார்ப்போம்.
கண்ணதாசன் ஓர் ஆச்சரியம்!
அவர் நிலைத்த அரசியல் நிலைப்பாடு கொண்டிருந்தவர் அல்லர். ஆனால், அத்தனை அரசியல் கட்சிகளும் அவரை வழிய வழிய வாசித்தன.
தனிமனித வாழ்வில் அறம் சார்ந்த சட்டங்களுக்குள் தன்னை அவர் ஆணியடித்துக்கொண்டவர் அல்லர். ஆனால், அவரது சமகாலச் சமூகம் விழுமியம் கடந்தும் அவரை விரும்பியது.
எட்டாம் வகுப்பை எட்டத்தான் என் பெற்றோர் இட்டார் என்ற கவிதை வாக்குமூலப்படி அவர் பள்ளி இறுதியைத் தாண்டாதவரே. ஆனால், கல்லூரிகளெல்லாம் அவரை ஓடிஓடி உரையாற்ற அழைத்தன.
இந்தியாவின் சராசரி ஆயுளைவிடக் குறைவாக வாழ்ந்து ஐம்பத்து நான்கு வயதில் உடல் மரணம் உற்றவர்தான். ஆனால், ஐம்பது ஆண்டுகள் எழுத்துலகை ஆண்டவர் போன்ற பெரும்பிம்பம் அவருக்கு வாய்த்தது.
எப்படி இது இயன்றது... ஏது செய்த மாயமிது?
தன் எழுத்துக்கு அவர் படைத்துக்கொண்ட மொழியே முதற்காரணம்.
ஈராயிரம் ஆண்டு நீண்டு கிடந்த தமிழின் தொல்லழகையும் வாய்மொழி வந்த நாட்டுப்புறப் பாடல்களின் சொல்லழகையும் குழைத்துக் கூட்டிச் செய்த தனிமொழி கண்ணதாசனின் மொழி.
முன்னோர் செய்த முதுமொழி மரபு அவரது கவிதைக்கு வலிமை சேர்த்தது, பாட்டுக்கு எளிமை சேர்த்தது.
காலம் தூரம் இரண்டையும் சொற்களால் கடப்பது கவிஞனுக்குரிய கலைச்சலுகை. தமிழின் இடையறாத மரபெங்கிலும் அது இழையோடிக் கிடக்கிறது. மலையிலே பிறக்கும் காவிரி கடல் சென்று கலக்க 800 கி.மீ. கடக்க வேண்டியிருக்கிறது. ஆனால், பட்டினப் பாலையில் மலைத்தலைய கடற்காவிரி என்றெழுதி 800 கி.மீட்டரைக் கடியலூர் உருத்திரங் கண்ணன் நான்கு சொற்களில் கடக்கிறான்.
இதே உத்தியைக் கண்ணதாசன் தன் பாசமலர் பாடலுக்குள் கையாள்கிறார். தன் தங்கை திருமணம் கொண்டு, இல்லறம் கண்டு, இன்பம் துய்த்து, கருவுற்று, திருவுற்று, உருவுற்று, வளைகாப்புற்று, பிள்ளைபெற்று நிற்கும் காலத்தை, பூ மணம் கொண்டவள் பால் மணம் கண்டாள் என்றெழுதிப் பத்துமாதங்களை ஆறு சொற்களில் கடக்கிறார்.
சூரியனின் முதற்கீற்று விண்வெளியைக் கடந்து பூமியைத் தொடுவதற்கு 8 நிமிடங்களும் 20 நொடிகளும் பயணப்படுகின்றது. ஒளியினும் விரைந்து பயணிப்பது சொல். அந்தச் சொல்லின் சகல சாத்தியங்களையும் பாடல்களில் கையாண்டு வென்றவர் கண்ணதாசன்.
இந்தப் பாடல் வெளிவந்த 1960களில் தமிழ்நாட்டுக் கல்வியறிவு 21 விழுக்காடு மட்டுமே. அதனால் இந்த வரி பண்டித உயரத்தில் இருக்கிறதே பாமரர்க்குப் புரியுமோ என்று அய்யமுற்ற பாவலன் அடுத்த வரியில் பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள் என்று உரையெழுதி விடுகிறான்.
இரண்டாம் வரியில் விளக்கம் தந்தது கல்வியறிவில்லா சமூகத்தின் மீது கவிஞன் கொண்ட கருணையாகும்.
தமிழ்த் திரைப்பாட்டுத் துறையின் நெடுங்கணக்கில் ஒரு பெருங்கவிஞனே பாடலாசிரியனாய்த் திகழ்ந்தது பாரதிதாசனுக்குப் பிறகு கண்ணதாசன்தான். பாட்டெழுதும் பணியில் கவிஞனுக்கும் பாடலாசிரியனுக்கும் ஒரு நுட்பமான வேறுபாடு உண்டு என்பதை அறிவு ஜீவிகள் மட்டுமே அறிவார்கள்.
கவிதையின் செம்பொருள் அறிந்தவனும் சொல்லாட்சியின் சூத்திரம் புரிந்தவனும் யாப்பின் ஒலி விஞ்ஞானம் தெரிந்தவனுமாகிய கவிஞன் மொழியை வேலை வாங்குகிறான். கேள்வி ஞானத்தால் வந்த பாடலாசிரியனோ மொழியின் வேலைக்காரனாய் மட்டுமே விளங்குகிறான்.
தான் கவிதையில் செய்த பெரும் பொருளைப் பாடலுக்கு மடைமாற்றம் செய்தவர் கண்ணதாசன்.
வானம் அழுவது மழையெனும்போது
வையம் அழுவது பனியெனும்போது
கானம் அழுவது கலை யெனும்போது
கவிஞன் அழுவது கவிதையாகாதோ
-என்ற கவிதையின் சாறுபிழிந்த சாரத்தை -
இரவின் கண்ணீர் பனித்துளி யென்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச்
சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்
-என்று கவலையில்லாத மனிதன் என்ற தன் சொந்தப் படத்தில் சந்தப்படுத்தியவர் கண்ணதாசன்.
இப்படி... கவிதைச் சத்துக்கள் பாட்டுக்குள் பரிமாறப்பட்டதால்தான் கண்ணதாசனின் அய்யாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களிலும் இலக்கியத்தின் தங்க ரேகைகள் ஊடும் பாவுமாய் ஓடிக்கிடக்கின்றன.
பாடல்களில் ஒரு புனைவுக்கலாசாரம் கண்ணதாசனில்தான் பூரணமாகிறது.
முற்றாத இரவு (குங்குமம்), பரம்பரை நாணம் (பாலும் பழமும்), வளர்கின்ற தங்கம் (மாலையிட்ட மங்கை), உயிரெலாம் பாசம் (புதிய பறவை), செந்தமிழர் நிலவு(பணத்தோட்டம்), மோக வண்ணம் (நிச்சயதாம்பூலம்), கடவுளில் பாதி (திருவருட்செல்வர்), விழித்திருக்கும் இரவு (ஆயிரத்தில் ஒருவன்), பேசத் தெரிந்த மிருகம் (ஆண்டவன் கட்டளை), புலம்பும் சிலம்பு (கைராசி) போன்ற படிமங்கள் பாட்டுக்குள் ஒரு கவிஞன் இட்டுச்சென்ற கையொப்பங்களாகும்.
தான் வாழும் காலத்திலேயே அதிகம் அறியப்பட்டவரும் எப்போதும் ஒரு சமூகச் சலசலப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தவருமான கவிஞர் அவர்.
அதன் காரணங்கள் இரண்டு. கவிஞன் தன் அக வாழ்க்கையைத் தானே காட்டிக்கொடுத்த கலாசார அதிர்ச்சி. மற்றும் அவரது அரசியல் பிறழ்ச்சி. அவரை மயங்க வைத்த காரணங்களும் இவையே, இயங்க வைத்த சக்திகளும் இவையே.
கட்சி அரசியல் பெரும்பாலும் வெற்றி தருவதில்லை கவிஞர்களுக்கு. காரணம் கலையின் தேவைகள் வேறு அரசியலின் தேவைகள் வேறு. கலை என்பது புலப்படுத்துவது; அரசியல் என்பது மறைப்பது. வட்ட நிலாவையும் வானத்தையும் கடக்க முடிந்த ஒரு கவிஞன், வட்டச் செயலாளரைக் கடப்பது கடிது.
கலையென்பது மர்மங்களின் விஸ்வரூபம்; அரசியலென்பது விஸ்வரூபங்களின் மர்மம்.
""நெஞ்சத்தால் ஒரு மனிதன் - சொல்லால் ஒரு மனிதன் - செயலால் ஒரு மனிதன் என்று ஒவ்வொரு மனிதனும் மூன்று வடிவெடுக்கும் உலகத்தில் அவன் மட்டும் ஒரே மனிதனாக வாழ்ந்துவிட்டான்'' என்று வனவாசத்தில் எழுதிக் காட்டும் அவரது சுயவிமர்சனம், அரசியல் லாயத்திற்கு லாயக்கில்லாத குதிரை என்று அவரைக் கோடிகாட்டுகிறது.
அவர் கட்சிமாறினார் கட்சிமாறினார் என்று கறைச்சேறு பூசுகிற சமூகம், ஏற்றுக்கொண்ட எந்தத் தலைவனுக்கும் அவர் கற்போடிருந்தார் என்பதை மறந்து பேசுகிறது. கற்பு என்ற சொல்லாட்சியை நான் அறிந்தே பிரயோகிக்கிறேன். காலங்காலமாய்க் கல்முடிச்சுப் பட்டு இறுகிக் கிடந்த கற்புக் கோட்பாடு மெல்லத் தளர்ந்து தளர்ந்து இன்று உருவாஞ்சுருக்கு நிலைக்கு நெகிழ்ந்திருக்கிறது.
ஒருவனுக்கு ஒருத்தி என்றிருந்த கற்புநிலை, ஒருவனோ ஒருத்தியோ யாரோடு வாழ நேர்கிறதோ அவரோடு வாழும் காலம்வரை தன் இணைக்கு உண்மையாயிருத்தல் என்று நெகிழ்ந்திருக்கிறது. கண்ணதாசனின் அரசியலுக்கும் இது பொருந்தும். எந்தக் கட்சியிலிருந்தாலும் தான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாகவே இயங்கியிருக்கிறார். காமராசர், நேரு இருவரையும் கண்ணதாசனைப்போல் நேசித்த தொண்டனில்லை. ஆனால், கட்சியிலிருக்கும்போது ஒரு தலைவனை மலையளவு தூக்குவதும் வெளியேறிய பிறகு வலிக்கும்வரை தாக்குவதும் என் வாடிக்கையான பதிகம் என்று சொல்லிக்கொள்வதில் அவர் சுகம் கண்டார்.
ஆண்டுக்கொரு புதுமை தரும்
அறிவுத்திரு மாறன்
ஆட்சிக்கொரு வழி கூறிடும்
அரசுக்கலை வாணன்
மீண்டும் தமிழ் முடிசூடிட
விரையும்படை வீரன்
மீட்சிக்கென வேல் தாங்கிய
வெற்றித்தமிழ் வேந்தன்
-என்று அண்ணாவைப் புகழ்ந்து பூமாலை சூடியவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைவிட்டுப் புழுக்கத்தோடு வெளியேறினார். தீராத காயங்களுக்காக வெளியேறுகிறேன் என்று சொல்ல முடியாதவர் திராவிடநாடு உடன்பாடில்லை அதனால் போய்வருகிறேன் என்று 1961-இல் அவர் கட்சியைத் துறக்கிறார். 1964-இல் திராவிட நாடு கொள்கை அதிகாரபூர்வமாகக் கைவிடப்படுகிறது. திராவிட நாட்டுக்கு இரங்கல் கவியரங்கம் ஏற்பாடு செய்து பாடுகிறார் கண்ணதாசன்.
ஈரோட்டிலே பிறந்து
இருவீட்டிலே வளர்ந்து
காஞ்சியிலே நோயாகிக்
கன்னியிலே தாயாகிச்
சென்னையிலே மாண்டாயே
செல்வத் திருவிடமே
என்னருமைத் தோழர்களே
எழுந்து சில நிமிடம்
தன்னமைதி கொண்டு
தலைதாழ்ந்து நின்றிருப்பீர்
பாவிமகள் போனாள்
பச்சையிளம் பூங்கொடியாள்
ஆவி அமைதி கொள்க
அநியாயம் வாழியவே
-என்று அழுது எழுகிறார்.
வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது என்றெழுதியவரும் அவரே. எங்கள் திராவிடப் பொன்னோடே கலை வாழும் தென்னாடே - என்று எழுதியவரும் அவரே.
திராவிட நாடு என்ற கருதுகோளுக்கு எழுச்சிப்பாடலும் இரங்கற்பாடலும் எழுதிய ஒரே திராவிட இயக்கக் கவிஞன் கண்ணதாசன் மட்டும்தான். இது கண்ணதாசனின் காட்சிப்பிழையா காலத்தின் தோற்றப்பிழையா என்பதை அவரது சமகாலத்தவரெல்லாம் முடிந்த பிறகுதான் முடிவுசெய்ய முடியும்.
திரையுலகில் கண்ணதாசனின் நிலைபேறு ஓர் ஆச்சரியத்துக்குரிய வரலாறு. கலைஞரும் (மு.கருணாநிதி), எம்.ஜி.ஆரும் தி.மு.கவின் பெரும்பிம்பங்களாய் உருவெடுத்து உச்சத்தில் நின்றபோது, திரையுலகத்தின் பெரும்பகுதி தி.மு.க.வின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது அவர் தி.மு.க.வை விட்டு வெளியேறுகிறார். தெனாலிராமன் படத்தில் வந்த சண்டையால் சீறிச் சினமுற்று சிவாஜியும் கண்ணதாசனை வெறுத்து விலகி நிற்கிறார். இப்படித் தோழமைகளையெல்லாம் துண்டித்துக்கொண்ட பிறகு ஒரு சராசரிக் கவிஞனென்றால் காணாமல்தான் போயிருப்பான். ஆனால், கட்சியைவிட்டு விலகிய 1961க்குப் பிறகுதான் கண்ணதாசனின் கலை உச்சம் தொடுகிறது. பாசமலர் முதல் உரிமைக் குரல் வரை அவர் சிகரம் நோக்கியே சிறகடிக்கிறார்.
அரசியல் எதிர்ப்புகளோ ஏகடியங்களோ கண்ணதாசனின் கலையுலகப் பயணத்தைக் கடுகளவும் தடுக்கவில்லை. முன்னே முட்டவரும் பசுவைப் பின்னே நின்று பால் கறந்துகொள்வதுபோல், அவரது அரசியலை நேசிக்க முடியாதவர்களும் அவர் தமிழை வாங்கி வைத்துக்கொள்ள வரிசையிலே நின்றார்கள். விரக்தியினால் சில புதிய பாடலாசிரியர்களை அறிமுகம் செய்தார்கள் சிலர். வியர்வையிலே உற்பத்தியாகும் பேன்கள் மாதிரி அப்படி வந்தவர்கள் காண்பதற்குள் காணாமற் போனார்கள்.
மாறாதிருக்க நான் மரமா கல்லா
மாற்றம் எனது மானிடத் தத்துவம்
-என்று தன் மாறுதல்களுக்குக் கவிதை நியாயம் கண்ட கண்ணதாசன் கடவுள் மறுப்பிலும் இரண்டு நிலை கண்டிருந்தார். அவரது அவசரமான கடவுள் மறுப்பு காட்டோடை வெள்ளம்போல் வந்த வேகத்தில் வற்றிவிட்டது. ஆன்மிகம் போல் நாத்திகமும் ஒரு சந்தையாகும் என்று நம்பியதன் விளவு அது.
""நான் ஒரு சுயமரியாதைக்காரன் என்று பகிரங்கமாகவே சொல்லிக் கொண்டான். கறுப்பு புஷ் கோட்டுகள் ஆறு தைத்துக்கொண்டான். எந்த ஆண்டவனிடம் இடையறாது பக்தி கொண்டிருந்தானோ அந்த ஆண்டவனையே கேலிசெய்ய ஆரம்பித்தான்'' என்று வனவாசத்தில் எழுதியிருக்கிறார். நம்பாத நாத்திகத்தை ஒரு கள்ளக் காதலைப்போல் காப்பாற்றியும் வந்திருக்கிறார்.
உல்லாசம் தேடும்
எல்லோரும் ஓர்நாள்
சொல்லாமல் போவார்
அல்லாவிடம்
-என்று தெனாலிராமனில் பாட்டெழுதிவிட்டு எங்கே இது சக நாத்திகர்களால் சர்ச்சைக்குள்ளாகுமோ என்றஞ்சி இந்தப் பாடலுக்கு மட்டும் தன் பெயரை மறைத்துத் தமிழ் மன்னன் என்று எழுத்தில் இடம்பெறச் செய்தார்.
எளிமையாக நுழைகிற எதுவும் எளிமையாக வெளியேறிவிடும். ஆண்டவன் மீது நம்பிக்கை மிகுந்தபோதோ, நாத்திகர்கள்மீது நம்பிக்கை தளர்ந்தபோதோ அவர் கடவுள் மறுப்பிலிருந்து வெளியேறிவிட்டார்.
பக்தியும் பாலுணர்வும் மனிதகுலத்தின் மூளைச் சாராயங்கள். சாராய வகைப்பட்ட எதையும் உலகம் இதுவரை முற்றிலும் ஒழித்ததில்லை. திராவிட இயக்கம் கட்டியெழுப்பிய கடவுள் மறுப்பு வென்றது எவ்விடம், தோற்றது எவ்விடம் என்று ஒரு மீள்பார்வை செய்வது நல்லது.
கடவுள் மறுப்பு என்பது ஒரு சமூக விஞ்ஞானம். அது அறிவியல் என்ற ஆழத்திலிருந்து கட்டியெழுப்பப்படாமல் பிராமண எதிர்ப்பு என்ற பீடத்திலிருந்து கட்டமைக்கப்பட்டு விட்டதாகக் கருதப்பட்டு விட்டதோ என்று கவலையோடு நினைக்கத் தோன்றுகிறது.
புதிதாகப் பிறந்ததுதான் பூமியை ஆட்சி செய்யும். 450 கோடி வயதுகொண்ட பூமியில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த மனிதன்தான் புதிய உயிர். ஆகவே, அவனே ஆட்சி செய்தான்.
மனிதனுக்குப் பிறகு பிறந்தது கடவுள். 5,000 முதல் 7,000 ஆண்டுகள்தாம் கடவுளின் வயது. புதிதாகப் பிறந்த கடவுள் மனிதனையே ஆட்சி செய்யுமாறு அவதரிக்கப்பட்டார்.
வழிவழியாக உடம்பிலும் மனதிலும் ஊறிப்போன கடவுள் என்ற கருத்தியலைவிட்டுக் கண்ணதாசன் போன்றவர்களால் நிரந்தரமாக வெளியேற முடியவில்லை. அந்த வகையில் மதங்களுக்கும் கடவுள்களுக்கும் வேண்டிய பெருங்கூட்டத்தின் பேராசைக்குரிய கவிஞராகக் கண்ணதாசன் கருதப்படுகிறார். ஆகவே, கண்ணதாசனை பாரதிதாசனின் நீட்சி என்று கொள்ளாமல் சமய வகையில் பாரதியின் எச்சம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு கவிஞனாக பாடலாசிரியனாக அறியப்பட்ட அளவுக்குக் கண்ணதாசன் ஒரு தேர்ந்த வசனகர்த்தா என்பது போதுமான அளவுக்குப் புலப்படாமலே போய்விட்டது. பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் பிம்பத்தைப் பாடல்களால் கட்டியெழுப்பிய கண்ணதாசன் 1950-களில் தன் வலிமையான வசன வரிகளால் நாற்காலியிலிருந்து எம்.ஜி.ஆரை சிம்மாசனத்திற்கு இடம் மாற்றினார்.
மதுரை வீரன் (1956), மகாதேவி (1957), நாடோடி மன்னன் (1958) என்று கண்ணதாசன் வசனமெழுதி அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளிவந்த இந்த மூன்று பெரும் படங்களும் மூட்டை தூக்கி விறகு சுமக்கும் உழைக்கும் மக்களிடத்தில் எம்.ஜி.ஆரை ஒரு தேவதூதனாய்க் கொண்டு சேர்த்தன.
வானகமே வையகமே வளர்ந்து வரும் தாயகமே ஆராய்ச்சி மணிகட்டி ஆண்டிருந்த தென்னகமே - இது மதுரை வீரன்.
அத்தான்... அந்தச் சத்தான வார்த்தையில் கருணாகரன் செத்தான்- இது மகாதேவி.
சொன்னாலும் புரியாது - மண்ணாளும் வித்தைகள் - இது நாடோடி மன்னன்.
எதுகை மோனைகளின் இயல்பான ஆட்சியும் தாளத்தில் வந்து விழுகிற சொல்லமைதிகளும் வசனமெழுதியவன் கவிஞன் என்பதைக் கண்ணடித்துக் கண்ணடித்துக் காட்டிக்கொடுக்கின்றன. அப்படி ஒரு தமிழுக்கு அப்போது இடமிருந்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்தைவிட்டு வெளியேறியவர்களில் வென்று நின்று காட்டியவர்கள் மூவர் மட்டுமே. கலை, அரசியல் இரண்டிலும் வென்றவர் எம்.ஜி.ஆர். கலையில் மட்டும் வென்று நின்று நிலைத்தவர்கள் சிவாஜியும், கண்ணதாசனும்.
என்னதான் கலைச்சிகரம் தொட்டிருந்தாலும் அரசியல் என்ற அடர்காடு அவர் கண்களைவிட்டு அகலவேயில்லை. தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் நிகழ்வுகளில் அவர் பக்கபலமாய் இருந்திருக்கிறார். அல்லது பக்கத்தில் இருந்திருக்கிறார்.
1972-இல் ஒரு முன்னிரவில் வீட்டுத் தொலைபேசி அடிக்கிறது கண்ணதாசன் எடுக்கிறார். அதன் பிறகான உரையாடலின் சாரத்தை நான் பதிவு செய்கிறேன்.
"கண்ணதாசன் பேசறேன்'. "யாரு?'
"நான் கருணாநிதி பேசறேன்யா'
"என்னய்யா இந்த நேரத்துல?'
"வேறொண்ணுமில்லய்யா...எம்.ஜி.ஆரைக் கட்சியவிட்டு எடுத்துடலாம்னு எல்லாரும் சொல்றா?' "நீ என்ன சொல்ற? '
"வேணாய்யா'. "எம்.ஜி.ஆரை வெளியே விடாத. உள்ள வச்சே அடி,' "பாப்போம்' - இது கண்ணதாசன் மேடையில் சொன்னது. கேட்டவன் நான். ஆனால், காலத்தின் கணக்கு வேறாக இருந்தது. எம்.ஜி.ஆரை உள்ளே வைத்து அடிக்கச் சொன்னவர் கண்ணதாசன். ஆனால், அரசவைக் கவிஞராக்கிக் கண்ணதாசனையே உள்ளே வைத்து அடித்தவர் எம்.ஜி.ஆர். காலத்தின் நகர்வுகள் எதிர்பாராதவை.
தமிழ்ப் புலவர் நெடுங்கணக்கில் கண்ணதாசனையொத்த அனுபவச் செழுமை முன்னெவருக்கும் வாய்த்ததில்லை அல்லது கண்ணதாசனைப் போல் முன்னவர் யாரும் பதிவு செய்ததில்லை.
வாழ்வு கல்வியால் அறியப்படுகிறது அனுபவத்தால்தான் உணரப்படுகிறது. சில அனுபவங்கள் அவரைத் தேடி வந்தவை. பல அவர் தேடிச் சென்றவை. எதையாவது தின்னத் துடிக்கும் தீயின் நாவுகளைப்போல அனுபவங்களை அவர் குடைந்து குடைந்து அடைந்திருக்கிறார்.
அந்த அனுபவங்களையெல்லாம் கண்ணதாசன் இலக்கியம் செய்தது தமிழ் செய்த தவம்.
கண்ணதாசனின் அனுபவங்கள் இரு துருவப்பட்டவை.
காமமில்லாத காதல் காதலில்லாத காமம்
கண்ணீரின் சாராயம் சாராயத்தின்
கண்ணீர்
அரசியலின் துரோகம் துரோகத்தின்
அரசியல்
கவியரசு பட்டம் கடன்கார வட்டம்
சாகித்ய அகாடமி - ஜப்தி
ஒதுக்க முடியாத வறுமை
பதுக்க முடியாத பணம்
தோளில் தூக்கிய ரசிகர்கள்
தோற்கடித்த வாக்காளர்கள்
புகழ்ச்சியின் சிகரம் இகழ்ச்சியின் பள்ளம்
-என்று ஒரே உடம்பில் பல்வேறு வாழ்க்கையை வாழ்ந்து களித்த - வாழ்ந்து கழித்த ஒரு கவிஞன் எந்தச் சித்தாந்தத்துக்கும் சிக்காமல் தன்னை வேதாந்தியாக்கிக் கொள்ளத் துடித்த கதைதான் கண்ணதாசன் கதை. அது திராவிடத்தில் தொடங்கி தேசியத்தில் அடங்கி தெய்வீகத்தில் முடிந்தது.
தமிழ்க் கவிதைச் சமூகத்தில் யாரோடும் ஒப்பிட முடியாத தனியொரு தமிழ்க் கவிஞன் கண்ணதாசன். இலக்கிய வரலாற்றில் வேறெப்போதும் காணாத வித்தியாசம் அவர். அந்த வித்தியாசம்தான் அழகு.
என்னைப் பொறுத்த வரையில் திரையுலகின் என் வீரிய விளைச்சலுக்குப் பலர் பொறுப்பு. என் விதைநெல்லுக்குக் கண்ணதாசனே பொறுப்பு.
இன்று கவியரசு கண்ணதாசனின்
90-ஆவது பிறந்தநாள்.
கவிஞர் வைரமுத்து
courtesy - dinamani
எம்ஜிஆர் 100 | 93 - சிறந்த கொடையாளி!
M.g.r. எந்த அதிகாரப் பதவியில் இல்லாதபோதும் பல்வேறு நாடுகளின் அழைப்பை ஏற்று அந்நாடுகளுக்குச் சென்றுள்ளார். நடிகராக இருந்த ஒருவரை அவரது மக்கள் சேவைக்காக பல்வேறு உலக நாடுகள் அழைப்பு அனுப்பி கவுரவித்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ள சிறப்பு!
சிறு வயதில் நாடகத்தில் நடிப்பதற் காக எம்.ஜி.ஆர். ரங்கூனுக்குச் சென்றுள்ளார். பின்னர், 1965-ம் ஆண்டு இலங்கையில் தொண்டு அமைப்புகள், பத்திரிகை சங்கங்கள் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தன. அதை ஏற்று, நடிகை சரோஜா தேவி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோருடன் இலங்கை சென்ற எம்.ஜி.ஆரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்ற னர். முன்னும் பின்னும் பைலட் கார்கள் அணிவகுக்க எம்.ஜி.ஆருக்கு இலங்கை அரசு சிறப்பான வரவேற்பு அளித்தது. சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர்.
யாழ்ப்பாணம் விளையாட்டு மைதா னத்தில் நடந்த வரவேற்பு கூட்டத்துக்கு இலங்கை நீதிபதி தம்பையா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ‘‘எம்.ஜி.ஆர். சிறந்த கலைஞர் மட்டு மல்ல; சிறந்த கொடையாளி. என் வாழ்நாளில் இந்தப் பகுதியில் இப்படி ஒரு பெருங்கூட்டத்தை பார்த்ததில்லை. தன்னைக் காண இலங்கையிலும் பெரும் கூட்டம் கூடும் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்துவிட்டார்’’ என்றார்.
இலங்கை பிரதமர் டட்லி சேனநாய காவை மரியாதை நிமித்தமாக சந்தித்த எம்.ஜி.ஆர், அவருக்கு தென்னிந்திய நடி கர் சங்கத்தின் சார்பில் தந்தத்தால் செய் யப்பட்ட நேரு சிலையையும் தன் சார்பில் தந்தத்தில் ஆன மேஜை விளக்கையும் பரிசளித்தார். சிங்கள திரைப்படக் கலை ஞர்கள் சார்பில் இலங்கை விஜயா ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆருக்கு வர வேற்பு அளிக்கப்பட்டது. தான் பிறந்த கண்டி நகரையும் சென்று பார்த்தார்.
1965 அக்டோபர் 22-ம் தேதி கொழும்பு விளையாட்டரங்கில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடந்தது. இலங்கை உள்நாட்டு அமைச்சர் தகநாயகா வரவேற்புரை வழங்கினார். அப்போது பலத்த மழை. அப்படியும் எம்.ஜி.ஆரின் பேச்சை லட்சக்கணக்கானோர் நனைந்தபடியே கேட்டனர். இலங்கை கலாச்சாரத் துறை அமைச்சர் காமினி ஜெயசூர்யா, எம்.ஜி.ஆருக்கு ‘நிருத்திய சக்கரவர்த்தி’ என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார்.
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த வருமாறு அந்நாட்டு அரசு எம்.ஜி.ஆருக்கு 1972-ல் அழைப்பு அனுப்பியது. அதை ஏற்று, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ் உள்ளிட்டோருடன் சிங்கப்பூருக்கு எம்.ஜி.ஆர். சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். இந்தி நடிகர் சசிகபூரும் வந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். சிங்கப்பூர் மேயர், எம்.ஜி.ஆருக்கு வர வேற்பு அளித்தார். எலிசபெத் ராணிக்குப் பிறகு வாகனங்கள் நிறுத்தப்பட்டு எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது!
‘‘எங்கள் குழுவினரின் கலை நிகழ்ச்சி கள் மூலம் சுமார் ஒரு லட்சம் டாலர் வரை (செலவு போக) சேர்ந்திருக்கும் என எண்ணுகிறேன். அந்த வரவேற்பை, அந்நாட்டின் வளர்ச்சியை என்னால் என்றுமே மறக்க முடியாது’’ என்று 1973-ம் ஆண்டு ஜனவரி மாத ஃபிலிமாலயா இதழில் சிங்கப்பூர் பயணம் பற்றி எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.
மாஸ்கோவில் 1973-ல் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் கலந்து கொள்ள வருமாறு எம்.ஜி.ஆருக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்தது. ரஷ்யா செல்லும் முன் டெல்லி சென்ற எம்.ஜி.ஆருக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய படவிழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.
இந்திய அரசின் சார்பில் அப்போது செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால் (பின்னாளில் பிரதமராகவும் பதவி வகித்தார்) கலந்து கொண்டு பேசினார். படவிழா பிரதிநிதிகளுக்கு எம்.ஜி.ஆரை அவர் அறிமுகம் செய்து வைத்ததோடு, தமிழகத்தில் அவரது செல்வாக்கு பற்றியும் அவரது படங்களின் மகத்தான வெற்றிகள் பற்றியும் எடுத்துரைத்தார். லெனின்கிராடு நகருக்கும் எம்.ஜி.ஆர் சென்றார். ரஷ்ய வானொலி நிலை யத்தினர் அவரைப் பேட்டி கண்டு அதை ரஷ்ய மொழியில் ஒலிபரப்பினர்! பின்னர், மாஸ்கோவில் இருந்து லண்டனுக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.!
லண்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்., லண்டன் பி.பி.சி. வானொலிக்கு சிறப்புப் பேட்டி அளித் தார். அங்கிருந்து பாரீஸ் நகருக்குச் சென்று அங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, கிழக்கு ஆப் பிரிக்கா சென்றுவிட்டு இந்தியா திரும்பினார்!
நடிகராக இருந்தபோது, ஒரு நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு! 1974-ம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர். கலந்துகொண்டார்!
1974-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆர். அமெ ரிக்கா சென்றார். அமெரிக்க அரசின் தூதர் வரவேற்று அழைத்துச் சென்றார். ஹவாய் பல்கலைக்கழகத்தில் அளித்த பேட்டியின்போது சிக்கலான கேள்வி களுக்கு எம்.ஜி.ஆர். சாதுர்யமாகவும், நேர்மையாகவும் பதிலளித்து வியப்பில் ஆழ்த்தினார்! புகழ்பெற்ற மவுன்ட் சினாரியோ கல்லூரி சார்பில் அவருக்கு வரவேற்பிதழ் அளிக்கப்பட்டது. அரிசோனா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்த போது அதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார்!
ஜப்பான் உள்ளிட்ட கீழ்திசை நாடுகளில் படமாக்கி, தயாரித்து, இயக்கி, எம்.ஜி.ஆர். நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. நிஜத்திலும் அவர் உலகம் சுற்றிய வாலிபன்தான்!
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைத் தொடர்ந்து ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற படத்தைத் தயாரிக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார். பின்னர், அரசியலில் அவர் தீவிரமாகிவிட்டதால் அப்படம் தயாரிக்கப்படவில்லை!
தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் பிறந்த தினம் இன்று!
ஒரேநாளில் பிறந்த இரண்டு மாமேதைகள் தான் கண்ணதாசன் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன். “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை-எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற வரிகளின் மூலம் இன்றும் நம் நெஞ்சில் வாழ்ந்து வருபவர் கண்ணதாசன் அவர்கள்.
தன் வாழ்வின் பெரும்பகுதியில் நாத்திகனாக இருந்து, பின் இவர் எழுதிய ’அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற நாவலின் வாயிலாக இறைவனை புரிந்துகொண்டார்.
பாடல்கள் மட்டுமின்றி ’ஏசு காவியம்’, ‘அவள் ஒரு இந்து பெண், வனவாசம் என காலத்தால் அழியாத நாவல்களை படைத்துள்ளார்.
இதேபோல் பாடலின் வரிகள் இவை இல்லையெனில் வெறும் காகிதங்களாக தான் இருக்கும், அதன் பெயர் தான் விஸ்வநாதன், மன்னிக்கவும் இசை. எனக்கு இசையும், விஸ்வநாதனும் வேறு ஆளாக தெரிவதில்லை. இவரால் தான் ஒரு மாநிலத்தில் தலையெழுத்தே மாறியது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அது தான் உண்மை.தன் பாட்டின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காது நிழைத்திருக்கும் ’புரட்சி தலைவர்’ எம்ஜிஆர் அவர்களுக்கு 75% படங்களுக்கு இசையமைத்தது என்றால் இவர் தான்.
மேலும் கண்ணதாசனும்-விஸ்வநாதன் அவர்கள் கூட்டனியில் ’ஆயிரத்தில் ஒருவன், உரிமைக்குரல், என் கடமை, போன்ற பல படங்களில் சேர்ந்து பணியாற்றியுள்ளனர்.
ஒரு பாடல் வரிகள் இல்லாமல் முழுமையடையாது, அதேபோல் இசையில்லாமல் வரிகள் உயிர் பெறாது. அதனால் தான் கலைத்தாய் இருவரையும் ஒன்றாக படைத்தார் போல!இதுபோல் மாமனிதர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் என்றும் ‘சினி உலகத்திற்கு’ பெருமை தான்
கவிஞர் கூட்டம் கதாநாயகிகளையே வர்ணித்து பாடல்கள் புனைந்து வந்த நிலையில், இவரது வரவால் கதாநாயகனை, இவரது தேக்குமர தேகத்தை, பொன் தந்த நிறத்தை விரும்பி,
‘தேக்குமரம் உடலைத் தந்தது,
சின்னயானை நடையைத் தந்தது,
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது,
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது என்று வர்ணித்துப் பாட வைத்தது.
புகழ்ந்து பலர் பாடினாலும் அதற்குப் பொருத்தமாய் வாழ்ந்து காட்டிய தோற்றம் மட்டுமா? அவரின் மன ஏற்றமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது! இந்த வள்ளல் திருக்குறளை நிறையப் படித்திருப்பார் நிச்சயமாக! எவரெவர் எப்படியெப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்து காட்டிய நேர்த்தி சொல்லி மாளாது! சொற்களில் அடங்காது!
இவருக்காக எழுதிய பாடல்கள் வியப்பின் உச்சம்! திரைப்படத்தை மீறி உண்மையாகவே இவருக்கெனப் பிறந்த அந்த வார்த்தைகள் இவருக்கு மட்டுமே பொருத்தமான அவ்வரிகள் இவரால் வளம் பெற்றன, சாகாவரம் பெற்றன! கற்புக்கரசி பெய்யென்று சொன்னால் பெய்யுமாம் மழை! இலக்கியத்தில் படித்திருக்கிறோம். அப்படி இவருக்கு திரைப்படத்திற்கு எழுதிய வரிகள் நிஜமானது வியப்பின் உச்சம். ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ பாடலில்,
மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழவேண்டும்! ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!
கவிஞரின் கற்பனையில் பிறந்த வரிகள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது எப்படி?
‘மனிதனென்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்’
என்கிற வரிகளுக்கேற்ப வாரி வாரி வழங்கி வள்ளலானார், பின் மக்கள் மனங்களில் தெய்வமானார்.
கவிஞர் கண்ணதாசனும் திராவிட இயக்கத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரும் இணைந்து மதுரைவீரன் (1956), மகாதேவி (1957), நாடோடிமன்னன்(1958), மன்னாதி மன்னன் (1960) என்று பல படங்களை தந்து தாங்கள் சார்ந்திருந்த இயக்கத்தின் ஊதுகுழல்களாக திரையில் செயல்பட்டு வந்தனர்.
எம்ஜிஆர் நடிப்பில் கண்ணதாசன் பாடல், கதை வசனத்தில் உருவான 'மன்னாதி மன்னன்' படத்தில்
"அச்சம் என்பது மடமையடா;
அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்று பாடல் எழுதி தான் சார்ந்திருந்த இயக்கத்தின் தனி திராவிட நாட்டு ஆசையை வெளிப்படுத்தினார் கண்ணதாசன்.
அதே பாடலில்,
"கனக விசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசைப்பட வாழ்ந்தான் பாண்டியனே..."
- என , திமுக முன்னிறுத்தி வந்த தமிழ், தமிழர்கள், மூவேந்தர்களின் பெருமைப் பாடும் கருத்துருவை பாடல் வரிகளாகவும் வசனங்களாகவும் தந்தார் கவியரசு.
மதுரை வீரன் படத்தில் ,
"கடமையிலே உயிர் வாழ்ந்து
கண்ணியமே கொள்கையென
மடிந்த மதுரை வீரா..."
- என்று தொடரும் இப் பாடலில் 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்ற அண்ணாவின் பிரபல மேற்கோளை கோடிட்டு காட்டினார் கண்ணதாசன்.
அதே படத்தில் இன்னொரு பாடல்.
" செந்தமிழா எழுந்து வாராயோ - உன்
சிங்காரத் தாய்மொழியை பாராயோ"
- என்று சொல்வார்
எம்.ஜி.ஆர். தயாரித்த ' நாடோடிமன்னன் ' படத்தில், 'செந்தமிழே வணக்கம்.." என்று
பாடலாக வணங்கிய கண்ணதாசனின் தமிழ், அதே படத்தில் 'அண்ணா.. நீங்கள் நாடாள வர வேண்டும்" என்ற வசனத்தின் மூலம் அண்ணாதுரையை முதலமைச்சராக வர வேண்டுமென 1958லேயே தனது ஆசையை வெளியிட்டது.
courtesy - thinnai
இன்று முதல்
கோவை டிலைட் திரை அரங்கில்
மக்கள் திலகத்தின்
அன்பே வா
மெல்லிசை மன்னரின் இசையில் மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய ஒரு சிறு தொகுப்பு .
1.கலங்கரை விளக்கம் .-1965
https://youtu.be/XAP-HMb7k6k
எல்லா பாடல்களும் இனிமை . குறிப்பாக காற்று வாங் போனேன் மற்றும் பொன்னெழில் பூத்தது புது வானில் பாடல்கள் தேன் அமுதம் . மக்கள் திலகம் எம்ஜிஆர் - சரோஜாதேவி பொருத்தமான ஜோடி.படத்தில் ரீ -ரெக்கார்டிங் மிகவும் அருமை .
2.அன்பே வா -1966
https://youtu.be/pToidIgJUsE
மக்கள் திலகம் - சரோஜாதேவி இருவரின் காதல் காட்சி பாடல்கள் 50 ஆண்டுகள் கடந்த பின்னரும்
இன்றும் ரசிக்கும் படி உள்ளது .மக்கள் திலகத்தின் பேரழகு இந்த படத்தின் ப்ளஸ் பாய்ண்ட்.
3.நான் ஆணையிட்டால் .-1966
https://youtu.be/MgJPv59KO94
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .மெல்லிசை மன்னரின் கை வண்ணத்தில் தாய் மேல் ஆணை பாடலை என்றுமே மறக்க முடியாது .
4..நாடோடி -1966
https://youtu.be/XObyqQ50I1c
உலகமெங்கும் ஒரே மொழி
அன்றொரு நாள் ..
திரும்பி வா ஒளியே
நாடு அதை நாடு ....
கடவுள் தந்த படம்
மெல்லிசை மன்னரின் இசையில் , பாடகர் திலகம் - சுசீலா குரல்களில் மக்கள் திலகம் - சரோஜாதேவி நடிப்பு காட்சிகள் நெஞ்சை விட்டு அகலாது .
5. சந்திரோதயம்- 1966.
https://youtu.be/3mhVfns1W-Y
மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம் - இளமை பொங்கும் ஜெயா இருவரும் இணைந்து பாடிய
எங்கிருந்தோ ஆசைகள்
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ ..
இந்த இரண்டு பாடல்களும் என்றென்றும் இனிமையை தரும் காதல் பாடல்கள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் பேரழகை நாள்மு ழுவதும் பார்த்து கொண்டே இருக்கலாம் .
தொடரும் ..
மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற கவியரசரின் காலத்தால் அழியாத சில வண்ணப் பாடல்கள் .
https://youtu.be/j4W6EyjnxuM
https://youtu.be/BWsX8Zsq6-o
https://youtu.be/6wRx8Z_oa-o
https://youtu.be/dX0c_onRZHM
https://youtu.be/g2Q0-XY4BeA
http://i63.tinypic.com/2mmh7vp.jpg
பிரமிக்க தக்க வகையில் 14000 பதிவுகள் எனும் சிகரத்தை கடந்து பயணிக்கும் திரு. வினோத் அவர்களின் பதிவுகள் உன்னதமானவை. போற்றத்தக்கவை. நிலையானவை . மதிக்கத் தக்கவை. சாதனை மிக்கவை.
இதயங்கனிந்த பாராட்டுக்கள் . தொடரட்டும் தங்களின் சீரிய , மேலான பதிவுகள்.
புரட்சிகரமான வாழ்த்துக்களுடன்
ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.
Congratulations Vinod on completing 14000 posts in this mayyam forum.