-
"ஒளி விளக்கு"
ஆனந்த விகடனுக்கு நன்றி...
படம்
வந்தபோது(1968) எழுதப்பட்ட விமர்சனம்.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ படத்தை, பல்வேறு துறையில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஓர் இடத்தில் கூடி, விமர்சித்தார்கள். அந்த விமர்சன உரையாடலில் பங்கு பெற்றவர்கள்…
1. திரு. கே.திரவியம், ஐ.ஏ.எஸ்.
2. திருமதி லீலா திரவியம், குடும்பத் தலைவி.
3. திரு. வி.கே.கிருஷ்ணமூர்த்தி, டைரக்டர், ஓரியன்டல் மெர்க்கன்டைல் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ், சென்னை.
4. திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி, குடும்பத்தலைவி.
5. திருமதி குப்பம்மாள், தமிழ் வளர்ச்சித் துறை.
6. திரு. ஏ.ஆர்.ரங்கநாதன். ஏ.ஸி. கல்லூரி மாணவர், சென்னை.
7. திரு. ஆர்.சீனிவாசன், ஆசிரியர், வழுத்தூர்.
திரவியம்: இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லவராக இருக்கணும்னு பாடுபடுகிறார். அதே மாதிரி ‘ஜெமினி’யும் எல்லோருக்கும் நல்ல படமா கொடுக்கணும்னு பாடுபட்டிருக்காங்க. கறுப்பும் சிவப்பும் கண்ணைப் பறிக்குது. கடவுளும் பக்தியும் கலந்திருக்கு. அவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க; இவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க!
லீலா: ஆமாம்! எம்.ஜி.ஆரோட இந்த ஒரு படத்திலேதான் கடவுள் பக்தி கொஞ்சம் அதிகமாக வந்திருக்குன்னு நினைக்கிறேன்.
சீனிவாசன்: தான் ஒரு குணசித்திர நடிகர்னு இதிலே காட்டிட்டார் எம்.ஜி.ஆர்.
லீலா: கடைசியிலே, குழு நடனம் ஒண்ணு வருதே… அப்படி ஒரு நடனம் நம்ப தமிழ்நாட்டிலே உண்டா?
துணை ஆசிரியர்: இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால, காமன் பண்டிகைன்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே கொண்டாடுவாங்க. அது, இந்த மாதிரிதான் இருக்கும். இப்போ அது நடை முறையிலே இல்லாமல் போனதாலே, நமக்குப் புதுசா இருக்கு!
ரங்கநாதன்: படத்திலே ‘விஷ சுரம்’, ‘விஷ சுரம்’னு மைக்ல சொல்றதும், மக்கள் ஓடறதும் இயற்கையா இல்லேன்னு நான் நினைக்கிறேன்!
சாந்தி: அது பிளேக் மாதிரி ஒரு பயங்கர நோயா இருக்கலாம்!
சீனி: அப்படித்தான் இருக்கணும். ஒரு கிராமத்திலே அந்த அளவுக்குச் சொல்லிப் பயமுறுத்தலேனா, கிராமத்து ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். கஷ்டப்படுவார்கள்!
குப்பம்மாள்: மருமகளா வந்த சௌகார்ஜானகியைப் பாராட் டாம இருக்கமுடியாது! அடேயப்பா, என்னமா நடிச்சிருக் காங்க!
சீனி: எல்லாத்துக்கும் கதைதான் காரணம். இது கருத்தாழம் மிக்க கதை. மக்களைத் திருத்தக் கூடிய கதை. ‘ஒருவன் திருடனா கவே பிறப்பதில்லை; சமுதாயத்தாலேதான் அவன் திருடனாக்கப் படுகிறான்’ என்பதை எடுத்துக் காட்டுகிற கதை. அப்புறம் மதுவை வெறுத்து ஒரு காட்சி, அதை ஒட்டி ஒரு பாட்டு வருது பாருங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சுது.
திரவியம்: வாலியின் பாடல்கள் என்றால் வளமாயிருக்கும்! அந்தக் குறவன் குறத்தி பாட்டிலே, ‘சீர்திருத்தக் கல்யாணம் பண்ணிக் கிட்டோம், சிக்கனமா பெத்துப் போடுவோம்’னு வருதே… அதிலே நல்ல கருத்து இருந்தது.
சீனி: அந்த நெருப்புக் காட்சிக்கு அப்புறம் சௌகார் பாடறாங்களே ஒரு முருகன் பாட்டு, அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.
திரவியம்: அந்தக் காட்சியில் என் மனத்தில் பட்ட கருத்து இதுதான்… ‘கடவுள் பக்தி இல்லாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட கண்ணியமான, கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தமுடியும்; அவர்களும் நல்லவர்கள்தான்’.
சீனி: இந்தப் படத்தில் காதல் காட்சிகளோ, டூயட்டோ கிடையாது, கவனிச்சீங்களா? ஓடிப் பிடிச்சு, குதிச்சு வெளையாடற விஷயமே கிடையாது!
திரவியம்: அது சிறந்த அம்சம் தான். ஆனால், கிளப் டான்ஸ்கள் கொஞ்சம் அதிகம்னு எனக்குப் பட்டுது.
ரங்க: இந்தப் படத்திலே எல்லாமே இருக்கு. ரொமான்ஸ் இருக்கு; கத்திச் சண்டை இருக்கு; கிளப் டான்ஸ் இருக்கு; சோகக் காட்சிகள் இருக்கு. ஜனரஞ்சக மான படத்திற்குத் தேவையான எல்லாமே இருக்கு. வசனமும் ரொம்ப நல்லா இருக்கு. ‘வானத் திலிருந்து விழும் தண்ணி காவிரி யிலே விழுந்தா, தூய்மையாகுது. புழுதியிலே விழுந்தா, சேறாகுது. அதே போல சந்தர்ப்பத்தினாலே தான் ஒருத்தன் திருடனாகிறான்’னு சொல்றாங்களே, அது ரொம்ப நல்ல கருத்து. என்னைப் போன்ற கல்லூரி மாணவர்கள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பாங்க!
சாந்தி: எம்.ஜி.ஆர். குடிச்சுட்டு சௌகார் கிட்டே வராரே… அங்கே சௌகார் பயப்படறதும், அந்த இடத்திலே என்ன செய்துடுவாரோனு நாம பயப்படறதும்… அந்தக் காட்சியை ரொம்ப அழகா எடுத்திருக்காங்க.
ரங்க: அதே போல, குருட்டுப் பாட்டிக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள அன்பை ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. அந்தப் பாட்டி இறந்த காட்சி, ரொம்ப உருக்கமா இருந்தது.
சீனி: நெருப்பு ஸீன் ரொம்பத் தத்ரூபம்! எம்.ஜி.ஆர். நெருப்புக்குள்ளே போனபோது எனக்குக் கொஞ்சம் பயமாவே இருந்தது. தமிழ்ப் படத்திலே இப்படி ஒரு ஸீனை நான் பார்த்ததே இல்லை. பின்னே, ‘ஜெமினி’ படம்னா ஒரு முத்திரை இருக்கணுமே!
குப்: ஜெயலலிதாவுக்குதான் பாத்திரம் சரியா அமையலே.
சீனி: சௌகார் ஜானகியின் அபார நடிப்பாலே ஜெயலலிதா வின் நடிப்பு மங்கிப் போயிட்டதோ?!
கிருஷ்ணமூர்த்தி: ஷி ஈஸ் கிளாமரெஸ்! அது போதாதா? எல்லாரும் ஒரு படத்திலே நடிக்கணும்னா முடியுமா? கவர்ச்சியா இருக்காங்க. கண்ணுக்கு விருந்து. அவ்வளவுதான்!
திரவியம்: மொத்தத்திலே, நல்ல படம் பார்த்த ஒரு திருப்தி! ‘இவர் கெட்டவர்னா, ஆயிரம் ஆயிரம் கெட்டவர்களை உலகத் துக்குக் கொடு’ன்னு இதிலே ஒரு வசனம் வருது. அந்த மாதிரி, ‘இதுதான் தமிழ்ப் படம்னா, இது போன்ற ஆயிரம் ஆயிரம் தமிழ்ப் படங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்’னுதான் நான் சொல்லுவேன்..........
-
1973 ன் வெற்றியின்
சாதனை நாயகன் கலைப்பெரும் தனித்திலகம....
ஒரே திலகம்.....
மக்கள் திலகம்!
30 க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களின் வசூலை ஒட்டுமொத்தமாக
ஒடி முடிய முறியடித்து...
இன்று வரை உச்சம் தொட்டுக்கொண்டு வரும் காவியம்...
எம்.ஜி.யார். பிக்சர்ஸின்
"உலகம் சுற்றும் வாலிபன்"
பாரத விலாஸ்...
ராஜராஜசோழன்...
கெளரவம்...
பொன்னுஞ்சல்...
எங்கள் தகர ராஜா...
ராஜாபார்ட்...
படங்களை ஒட்டு மொத்தமாக முறியடித்து ....
100 நாளில்
1கோடியை தாண்டி....
6 மாதகாலத்தில்
2 கோடியே 15 லட்சத்தை வசூலை தாண்டி.....
40 அரங்கில்
75 நாளை கடந்து...
23 அரங்கில்
100 நாட்களை கடந்து...
25 ஊரில் 100 காட்சிகள்
தொடர்ந்து அரங்கு நிறைந்து....
வெள்ளிவிழாவை
சென்னை
மதுரை
திருச்சி
சாதனை படைத்து...
தென்னகத்தில்
85 அரங்கில் 50 நாட்களை கடந்து சரித்திரம் ஆகும்!
மேலே அத்தனை படங்களையும் எல்லாவற்றிலும் முறியடித்து சாதனையின் சிகரமாக
இன்று வரை தொடரும் காவியமாக....
இந்திய திரையின் ஒரே வசூல் சக்கரவர்த்தி
பொன்மனச்செம்மலின்
உலகம் சுற்றும் வாலிபன்....ஒன்றே!
தகர ராஜா 12 திரையில் 50 நாள் ஒட்டப்பட்டு...
9 திரையில் 100 ஒட்டப்பட்டது....
சோழன் படம் படுதோல்வி...
11 திரையில் 50 நாள் மட்டுமே...
கெளரவம் 11 திரையில் 50 நாளும் 4 திரையில் 100 நாளும்....
பாரத விலாஸ்....
11திரையில் 50 நாளும்
6 திரையில் 100 நாளும்....
ராஜபார்ட்....
8 திரையில் 50 நாளும்
......
பொன்னுஞ்சல்
மனிதரில் மாணிக்கம்
இரண்டும்
50 நாள் இன்றி படுதோல்வி......
ஒரே ஒரு படம் கணேசனின் 73 ம் ஆண்டில் வெளியான அத்தனை படங்களையும் குழியில் போட்டு...
சரித்திரம்....சகாப்தம் படைத்தார்
மக்கள் திலகம்.
தொடரும்...ur.........
-
சென்னையில்...
மக்கள் திலகத்தின்
" உலகம் சுற்றும் வாலிபன்"
கடந்த ஆண்டுகளில்
வெளியீடு பற்றிய விபரங்கள்.....
1973 ம் ஆண்டு...
****************
தேவிபாரடைஸ்
182 நாட்கள்
அகஸ்தியா
176 நாட்கள்
உமா
112 நாட்கள்
மொத்தம் : 470 நாட்கள்
வசூல் 23 லட்சத்து
40 ஆயிரத்தை கடந்தது.
அடுத்து....
ராம் 28 நாள்
சீனிவாசா 21 நாள்
காமதேனு 21 நாள்
வீனஸ் 35 நாள்
நேஷனல் 28
தங்கம் 14
முருகன் 28
கமலா 14
பழனியப்பா 21
சித்ரா 14
நேஷனல் 14
நடராஜ் 14
சன் 14
ராஜகுமாரி 14
மற்றும்...
ஸ்டார், லஷ்மி, கபாலி
லிபர்ட்டி, பிரபாத், பிளாசா, சரவணா, சரஸ்வதி, பத்மனாபா
கிருஷ்ணவேணி
மொத்தம்...
50 வாரங்கள்...
350 நாட்கள்....
வசூல் 10 லட்சத்தை கடந்தது......
இது முதல் வெளியீட்டின்...... சென்னை நகர
வரலாறு ஆகும்.
(1973 ,1974 ம் ஆண்டுகளின் ஒட்டம்)
வசூல்... 35 லட்சத்தை தொட்டது...
சென்னை நகர வரலாற்றில் மாபெரும் சாதனையில் 1978 வரை முன்னனி மட்டுமின்றி...
அதன் பின்....
2 வது வெளியீடு
1974....ல்
18 அரங்கில் மீண்டும் வெளியீடூ...
3 வது வெளியீடு
1976 ....ல்
16 அரங்கில் வெளியீடு...
4 வது வெளியீடூ...
1979....ல்
அலங்கார், அபிராமி, ராம்...... தொடர்ந்து
20 தியேட்டரில் சாதனை.
5 வது வெளியீடு..
1982 ல்....
வெலிங்டன், கமலா மற்றும் 15 அரங்கில் வெளியீடூ....
6 வது வெளியீடூ...
1985 ல்...
பாரகன் 4 காட்சியில்
தொடர்ந்து 20 சென்டருக்கு மேல் சாதனை...
7 வது வெளியீடு..
1987 ல்
பிருந்தா 2 வாரம்
பைலட் 2 வாரம்
நடராஜ் 2 வாரம்
சரவணா 2 வாரம்
பிராட்வே 2 வாரம்
மற்றும் 25 அரங்கில் 1988 மார்ச் பிளாசா கடைசி வாரம் வரை இடைவிடாது சாதனை
20 லட்சம் வசூல்...
18 மாத இடைவெளியில்
8 வது வெளியீடு.....
திவ்யா பிலிம்ஸ் வெளியீடு...
ஆல்பட், பிருந்தா, சீனிவாசா வெளியீட்டுக்குப் பின்...
20 அரங்கு வெளியிடப்பட்டது.
ஆல்பட் 16 நாள்
பாரத் 14 நாள்
கமலா 14 நாள்
நடராஜ் 14 நாள்
என 25 வாரங்களை கடந்து...
வசூல் : 25 லட்சத்தை தொட்டது...
அடுத்து....
9 வது வெளியீடு...
1993 டிசம்பர்....
கிரவுன்,பாரகன்,ராம்
மற்றும் இடைவிடாது
20 அரங்கில் வெளியீடு.....
வசூல் 15 லட்சத்தை தொட்டது..
1995 ல்
10 வது வெளியீடு...
அலங்கார் 13 நாள்
முரளிகிருஷ்ணா 7 நாள்
பிராட்வே.. 7 நாள்
3 அரங்கில் ஒடி முடிய
5 லட்சத்தை தொட்டது வசூல்....
மற்றும் 18 திரையில் ஒடி மொத்தம் 30 லட்சம் வசூல்.....
1997ல்
11வது வெளியீடு....
சங்கம் 10 நாள்
கமலா
பிருந்தா
கணபதிராம்
கிருஷ்ணா
நாகேஷ்
வசந்தி
முரளிகிருஷ்ணா
புவனேஸ்வரி
ஸ்டார்
மற்றும் 20 அரங்கில் வெளியீட்டூ 25 லட்சத்திற்கு மேல் வசூல்.....
1999 லிருந்து 2007 வரை ஹைகோர்ட் , மற்றும் நியூ டெல்லி சுப்ரீம் கோர்ட் வரை கடுமையான உரிமை பிரச்சனையில்...
சென்னை செங்கல்பட்டு
வேலூர், கடலுர் பிரச்சனை காரணமாக
9 ஆண்டுகள் படம் வெளிவரவில்லை...
மற்ற மாவட்டங்களில் திரையிடப்பட்டது...
2008 ல் மீண்டும்
வெளியீடு...
பைலட் 10 நாள்
மோட்சம் 10 நாள்
மகாராணி 10 நாள்
பிருந்தா 10 நாள்...
முதல் 4 தியேட்டரில்
15 லட்சம் வசூல் ஆகும்......
மற்றும் 20 திரையில் வெளியிடப்பட்டது.
ஒ.எஸ் மணியன் வெளியீடு... 2008 முதல்
2010 வரை வெளி வந்தது...
2013 ல் மீண்டும்
பைலட் திரையிடப்பட்டது...
தொடர்ந்து பல அரங்கில் சாதனை...
2014 முதல் 2020 மார்ச் வரை வெளியீடு இல்லை.... காரணம் புதிதாக 4k டிஜிட்டல் Atmos Format மெருக்கேற்றல், வடிவாக்கம் வேளைகளில் 2017, 2018, 2019, படத்தை வெளியிட முயற்சித்தும், அவசரப்படாமல் வெளியிடலாம் என பூரண உரிமையாளர்கள் ரிஷி மூவீஸ் திரு நாகராஜன் & Co., கருதியதும் ஆகும்...
2021 ல் திண்டுக்கல் நாகராஜ் புதிய பரிமாணாத்தில்
"உலகம் சுற்றும் வாலிபன்" காவியத்தை வெளியீடலாம் என்று நினைக்கின்றோம்.....
குறிப்பு :
மேலே சென்னை மட்டும்
உ.சு.வாலிபன் சாதனைகளின் வரலாறு......
தென்னகமெங்கும்
ஒடிய அரங்கு
ஒடிய நாட்கள்
படைத்த சாதனை
பெற்ற வசூல்....
பிரமிக்கவைக்கும் !
கணேசனின்
100 வது படம்,
125 வது படம்,
150 வது படம், 175 வது படம்,
200 வது படம்
அத்தனை படங்களாலும் ஏறேடுத்து பார்க்க முடியாத... இமாலய வெற்றியில்..
புரட்சித்தலைவரின்
"உலகம் சுற்றும் வாலிபன்"...
மீண்டும்
புதிய பரிமாணத்தில்
2021 ல் வரலாம்....
கோடியை வசூலில்
பெறலாம்....
தொடரும்......... UR...
-
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*03/09/20 அன்று அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களின் ஒவ்வொரு காட்சியையும் ,பார்த்து ரசித்து* ,மகிழ்ந்து பூரிப்பு அடையும் பக்தர்கள் பெருகி கொண்டே வருகிறார்கள் .
எம்.ஜி.ஆர்.தன்னுடைய படங்களுக்கு பெயர் வைப்பது, கதாபாத்திரங்களை* எப்படி உருவாக்குவது*,அதற்குண்டான பெயர்கள், நடிகர் ,நடிகைகள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் ,கவிஞர்கள், ,தொழில்நுட்ப கலைஞர்கள் ,போன்றவர்களை தேர்வு செய்வது என்று ஒவ்வொரு விஷயத்திலும் அதிக அக்கறை, கவனம் கொண்டு செயல்பட்டார்.தாய்க்கு பின் தாரம், ராஜ ராஜன், மன்னாதி மன்னன் , நாடோடி மன்னன் , நல்லவன் வாழ்வான், தாய் சொல்லை தட்டாதே, திருடாதே, தாயை காத்த தனயன் குடும்ப தலைவன் ,தர்மம் தலை காக்கும் ,காஞ்சி தலைவன் ,நீதிக்கு பின் பாசம் ,தொழிலாளி, படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன் ,எங்க வீட்டு பிள்ளை ,கலங்கரை விளக்கம், முகராசி ,தனிப்பிறவி ,காவல்காரன் ,தாய்க்கு தலை மகன், விவசாயி , குடியிருந்த கோயில், ஒளி விளக்கு , நம் நாடு, தலைவன் ,எங்கள் தங்கம் ,ரிக்ஷாக்காரன் , சங்கே முழங்கு , நான் ஏன் பிறந்தேன், அன்னமிட்டகை ,உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல், சிரித்து வாழ வேண்டும் ,நினைத்ததை முடிப்பவன் ,நாளை நமதே, இதயக்கனி, பல்லாண்டு வாழ்க ,நீதிக்கு தலை வணங்கு, உழைக்கும் கரங்கள் , ஊருக்கு உழைப்பவன் ,இன்று* போல் என்றும் வாழ்க , மீனவ நண்பன் ,மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்று உன்னதமான, ஆக்கபூர்வமான தலைப்புகள் தேர்வு செய்து தன் ரசிகர்களையும்,பக்தர்களையும் கவர்ந்தார் .அது மட்டுமல்ல இவைதான் என் லட்சியம், கொள்கை ,வாழ்வின் இலக்கணம் ,அரசியல் பயணம் ஆகியவற்றுக்கான படிக்கட்டுகள் என்று சொல்லி வந்தார் ... இந்த தலைப்புகள் மற்ற நடிகர்களுக்கு பொருந்துமா என்பது சந்தேகம் .இந்த தலைப்புகள் மூலம் சினிமாவில் தான் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி என்ற நிலையை 1947 முதல் 1977 வரை ,சில வருடங்கள் நீங்கலாக வென்று காட்டினார் ஆகவே அவர் எண்ணுவதெல்லாம் ,அவர் முயற்சியெல்லாம் பெரும்பாலும் வெற்றியில் முடிந்தன ..அவர் நினைத்ததெல்லாம் சினிமாவில் , அரசியலில் நடந்ததா என்றால் ஆம் அதனால்தான் அவர் நினைத்ததை முடிப்பவன் அல்ல நினைத்ததை முடித்தவன் என்று ஆயிரம் பேர் அல்ல லட்சம் பேர் அல்ல கோடிக்கணக்கான தமிழ் உள்ளங்கள் இன்றும் சாட்சியாக* உள்ளன .
மக்கள் நலம் ,பிறர் நலன், பிறர் மீது அன்பு, அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.*பிறர் மீது அன்பு செலுத்துங்கள் என்றார் ,அறம் செய்ய விரும்பு என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்தார் . அறம் செய்ய விரும்ப வேண்டும் என்பது முக்கியமல்ல .அறம் செய்ய விரும்பினாலே* அவர்களுக்கு அருள் கிடைக்கும்* அந்த அறத்தை தன் வாழ்நாள் முழுக்க செய்து வந்தவர் இந்த எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். அறம்* எனும் கோட்பாடே, உலக இலக்கியங்களிலும் சரி, தத்துவங்களிலும் சரி ,ஒரு உயர்ந்த கோட்பாடு, அது மட்டுமல்ல அந்த அறம் என்கிற வார்த்தைக்கான நேர்த்தி ,தர்மம் என்று சொல்வார்களே, அந்த தர்மம்என்பது மற்ற* உலக நாட்டு மொழிகளில் அதற்கான சரியான அர்த்தம் என்பது கிடையவே கிடையாது .ஏனென்றால் இது இந்திய தன்மை உடைய வார்த்தை . இந்திய தன்மை உடைய அந்த வார்த்தை உடைய அந்த தர்மம் என்பதற்கு வாழ்க்கையில் பல்வேறு வித மான விளக்கங்கள்* உள்ளது* *அப்படியான அர்த்தம் புரிந்த, ஆழமான ,சுய தர்மம் என்பதை நீங்கள் கடைபிடிக்க வேண்டும் .இங்கு ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போது ஏதோ ஒரு காரணத்திற் காகத்தான் அவன் படைக்க பட்டிருக்கிறான்*. அந்த படைப்பின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது பற்றி யாருக்கும் தெரியாது . அந்த படைப்பின் நோக்கம் நிறைவேறுவதற்காகத்தான் ஆண்டவன் படைப்பு இருக்கிறது .அந்த நிறைவேற்றுகின்ற ஒரு கருவியாகத்தான் நம்மை நாம் அடையாளப்படுத்திக்கொள்ள* வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்தார் .
எம்.ஜி.ஆர். ஒருபோதும் அகங்காரம் பிடித்து தான் தலைவன் என்று அறிவித்துக் கொண்டதில்லை . இதையே தான் முதன் முதலாக சொந்தமாக தயாரித்து இயக்கிய நாடோடி மன்னன் படத்தில் 1958லேயே சொல்லி இருப்பார் . இனிமேல் மன்னராட்சி என்பதே கிடையாது . யாரும் பரம்பரை* உரிமை கோர முடியாது*அப்படி எதுவும் இருக்காது . நான் ஒருபோதும் அதை விரும்பியதில்லை .என்பார் .தனது 19வது* வயதில் தான் பார்த்த நான் மன்னனானால் என்கிற ஆங்கில படம் தன்னை வெகுவாக கவர்ந்தது ,பாதித்தது .. அதை நாடோடி மன்னன் படமாக தயாரிக்க விரும்பி தான் சிறுக சிறுக சேர்த்த பணங்களை வைத்து, தனது லட்சிய கனவுகளை* நனவாக்க ,மக்களுக்கும் ,மற்றவர்களுக்கும்* என் ஆற்றல், திறமைகளை வெளிப்படுத்தி பல நல்ல சமூக கருத்துக்களை சொல்ல வேண்டும்*என்று எண்ணி படமெடுத்தேன்* .இன்றைக்கும் அந்த படம் ஒரு சாகாவரம் பெற்ற படமாக உள்ளது . ,தான் அரசியலுக்கு வந்தால் என்ன செய்ய வேண்டும் .எந்த மாதிரி அணுகுமுறைகளை கையாள வேண்டும் ,ஏன் ,எப்படி அரசியல் உருவாகிறது ஏன் ஒருவர் அரசியலுக்கு தள்ளப்படுகிறார் என்பதற்கு புரட்சிக்காரனாக வரும் வீராங்கன் வேடத்தில் வரும் எம்.ஜி.ஆர். ராணியாக உள்ள எம்.என்.ராஜத்திடம் பேசும் வசனம் ஒன்றே போதும் சான்று கூற ..
அரசியலில் யாரை எதிர்க்க வேண்டும் , யார் எதிரி, என்று மக்களுக்கு சொல்லி, சொல்லி ,அவர் யாரை எதிர்த்தாரோ ,அவரை மக்கள் எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கும்வரையில் எதிர்த்தே வந்தார்கள் .எம்.ஜி.ஆர். தனக்கு பின்னால் யார் என்பதை அடையாளம் காட்டினாரோ ,அவரை மக்கள் ஆதரித்தார்கள்இப்படி* .ஒவ்வொரு திரைப்படத்தின் ,பாடல்கள், வசனங்கள், காட்சிகள் மூலம் ஒரு மிக பெரிய பட்டாளத்தையே எம்.ஜி.ஆர். உருவாக்கி இருந்தார் .* அதனால்தான் அவரால் ஒரு மன்னாதி மன்னனாக திகழ முடிந்தது .அவரது எண்ணமும், செயலும் ஒன்றாக இருந்தது .அதனால்தான் ஒன்றை நினைத்தார் .ஒன்றை செயல்படுத்தினார் .ஒன்றை நடத்தி காட்டினார்* ஆகவே நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் என்று பாடிய பாடல் அவருக்கு கச்சிதமாக பொருந்தியது .
இன்றைக்கும் பல ஆயிரம் பேர்.அவர்களில் பலர் படித்தவர்கள், பட்டதாரிகள், ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள்,அரசு அதிகாரிகள் ,பல்வேறு அரசு,துறைகளில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்கள் இப்படி பலரை உருவாக்கினார்* இவையெல்லாம் வியப்பாக, விந்தையாக உள்ளது .அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர். என்கிற ஒரு தத்துவம் ,ஒரு கோட்பாடு ,ஆகியவற்றை ஆராய்ந்து* கொண்டே போகலாம் .* அந்த ஆராய்ச்சி நமக்கெல்லாம் நம்பிக்கை ஊட்டுகிற ஒரு நிழல், வெளிச்சம் ஒளி விளக்கு,கலங்கரை விளக்கம் .அந்த வெற்றி பாதையில் தொடர்ந்து நாம் பயணித்து தகவல்களை அறிவோம் அடுத்த அத்தியாயத்தில் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.சிரித்தாலும் போதுமே,செவ்வானம் தோன்றுமே -நீதிக்கு பின் பாசம்*
2.நான் ஆணையிட்டால் ,அது நடந்துவிட்டால் -எங்க வீட்டு பிள்ளை*
3.இதயவீணை படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர்.
4.நான் ஏன் பிறந்தேன் பாடல் - நான் ஏன் பிறந்தேன்*
5.எம்.ஜி.ஆர்.-எம்..என்.ராஜத்திடம் பேசும் வசனம் -நாடோடி மன்னன்*
6.எம்.ஜி.ஆர்.-ரங்காராவ் உரையாடல் - நம் நாடு*
7.நினைத்ததை நடத்தியே முடிப்பவன் - நம் நாடு*
-
பகைவனுக்கும் அருளும் மக்கள் திலகத்தின் தாய் உள்ளம் எல்லாரும் அறிந்ததுதான். அதற்கு இன்னொரு உதாரணம். இயக்குநர் திலகம் கே.எஸ். கோபால கிருஷ்ணன்... காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். ஜெமினி கணேசன், சிவாஜி கணேசனை வைத்து படங்கள் எடுத்தவர். ஜெமினி கணேசன் நடித்த அவரது ‘பணமா பாசமா’ படம் நன்றாக ஓடியது. அந்த மயக்கத்தில் மதுரையில் நடந்த பணமா பாசமா விழாவில் படத்தின் வசூல் பற்றி எல்லாம் குறிப்பிட்டு மக்கள் திலகம் பற்றியும் கே.எஸ். கோபால கிருஷ்ணன் தவறாக விமர்சித்தார். நமது ரசிகர்கள் பொங்கி எழுந்துவிட்டனர். அதனால், கே.எஸ்.கோபால கிருஷ்ணனால் வெளியே தலைகாட்ட முடியவில்லை. எங்கு சென்றாலும் எதிர்ப்பு.
கடைசியில் ஒரு யோசனையுடன் மக்கள் திலகத்தை கோபாலகிருஷ்ணன் சந்தித்தார். ‘‘உங்களை வைத்து நான் ஒரு படம் எடுக்கப் போவதாக பத்திரிகையில் சும்மா பெயருக்கு ஒரு விளம்பரம் கொடுக்கிறேன். அப்போதுதான் ரசிகர்கள் சமாதானம் அடைவார்கள். அப்படி விளம்பரம் கொடுக்க உங்கள் அனுமதி வேண்டும்’’ என்று வேண்டினார். மக்கள் திலகமும், எதையும் மனதில் கொள்ளாமல் பெருந்தன்மையாக ‘பரவாயில்லை. விளம்பரம் கொடுங்கள்’ என்று அனுமதித்தார். கேஎஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் மக்கள் திலகம் நடிப்பதாக ‘தங்கத்திலே வைரம்’ என்ற பெயரில் அப்போது கொடுக்கப்பட்ட விளம்பரம்தான் இது. இந்த விளம்பரத்துக்குப் பின் ‘கோபால கிருஷ்ணனும் நம்ம ஆளுதான், ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டார்’ என்று நமது ரசிகர்கள் சமாதானம் அடைந்தனர். ரசிகர்களை சமாதானப்படுத்த மட்டுமே கே.எஸ்.கோபால கிருஷ்ணன் கொடுத்த விளம்பரம் இது. படப்பிடிப்பும் நடக்கவில்லை. படமும் வரவில்லை. பின்னர், சங்கே முழங்கு படத்தில் கேஎஸ்.கோபால கிருஷ்ணன் கதை, வசனத்தை பயன்படுத்திக் கொள்ள மக்கள் திலகம் அனுமதித்தார்.
பகைவனுக்கும் அருளும் தாயுள்ளம் கொண்டவர் மக்கள் திலகம். அதை உணர்ந்த ஒரு தாய் மக்கள் திலகத்தை எப்படி அணைத்துக் கொண்டிருக்கிறார் பாருங்கள்..........
-
பணத்தோட்டம் அற்புதமான த்ரில்லர், சஸ்பென்ஸ் படம். எலக்ட்ரிக் சேர் எல்லாம் அப்போது புதிது. அதில் உட்கார்ந்து எஸ்.வி. சுப்பையா கடைசியில் தற்கொலை செய்து கொள்வார். மறுபடி மறுபடி காட்சியை எடுத்த டைரக்டர் சங்கரிடம் ‘‘என்னிடம் என்ன மாதிரி நடிப்பை எதிர்பார்க்கிறீர்கள்? ஒவ்வொருவருக்கு ஒரு நடிப்பு பாணி உண்டு. மற்றவர்களின் நடிப்பை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள்’’ என்று மக்கள் திலகம் சொன்னது உண்மைதான். இதை சங்கரே சொல்லி இருக்கிறார். மக்கள் திலகத்துக்கென்று இயற்கையான நடிப்பு பாணி உள்ளது. அதை சங்கர் புரிந்து கொண்டார். அதன் பிறகு மக்கள் திலகத்தை வைத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.
மக்கள் திலகம் சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த டைரக்டரும் கூட. தனது சொந்த படங்களான நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் படங்களை அவரே இயக்கினார். என்றாலும் கே.சங்கரின் உழைப்பையும் திறமையையும் நேர்மையையும் தெய்வபக்தியையும் பார்த்து தனது சொந்தப் படமான அடிமைப் பெண் படத்தை இயக்கும் வாய்ப்பை சங்கருக்கு தந்தார். அவரை தனது சம்பந்தியாகவும் ஆக்கிக் கொண்டார்..........
-
நாம் அடிக்கடி சொல்வது போல மக்கள் திலகத்தின் வள்ளல் தன்மை, சினிமாவில் அவரது சண்டைக் காட்சிகள், இயக்கம், எடிட்டிங், வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்தது, மக்கள் செல்வாக்கு, அரசியல் வெற்றிகள் பேசப்பட்டதுபோல அவரின் நடிப்புத் திறன் பேசப்படவில்லை. நாமும் அதில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை.
பணத்தோட்டத்தில் மக்கள் திலகம் சிறையில் இருந்து தப்பி சரோஜா தேவி வீட்டுக்கு மாடி வழியே ஏறி வீட்டுக்குள் வந்து அவரை சந்திப்பார். சத்தம் கேட்டு சரோஜா தேவியின் தந்தை எஸ்.வி. சுப்பையா அங்கு வந்து மக்கள் திலகத்தை விசாரிப்பார். திருமணமாகாத பெண்ணை இப்படி சந்திப்பது தவறு என்றும் உனக்கு ஒரு தங்கை இருந்து இதே மாதிரி நிலை ஏற்பட்டால் என்ன செய்வாய்? என்றும் ஒரு பெண்ணின் தந்தையாக நியாயமான கேள்வியை கேட்பார்
மக்கள் திலகம் பதில் சொல்ல முடியாமல் தவறை நினைத்து வருந்தி கும்பிட்டு மன்னிப்பு கேட்பார். அப்போது, தன் நிலையை எண்ணி லேசாக விம்முவார். அற்புதமான நடிப்பு. தவறு செய்துவிட்ட மனசாட்சியுள்ள அந்த சூழ்நிலையில் ஒரு மனிதன் இப்படித்தான் நடந்து கொள்வான். மன்னிப்பு கேட்டுவிட்டு சட்டென திரும்பி வந்தவழியே போக முயற்சிப்பார். அப்போது, சுப்பையா, ‘போகும்போதாவது இப்படி போ’ என்று வாசல் வழியை காட்டுவார். அவமானம் தாங்காமல் சுப்பையாவின் முகத்தை பார்க்க முடியாமல் தலைகுனிந்து இடது கையால் ஒரு கண்ணை மூடியபடி கூனிக்குறுகி மக்கள் திலகம் வெளியேறுவார். இன்னும் கண்ணிலேயே நிற்கும் காட்சி அது..........
-
#புரட்சிதலைவர்
#பாரத_ரத்னா
#டாக்டர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய #திங்கள்கிழமை_வணக்கம்..
நம் புரட்சி தலைவர்க்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.
எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு பாடல். அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காணப் புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல்.அந்தக் காட்சிக்கு பலர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.
அப்போது ஒரு கவிஞர் ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவர்தான். அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார்.
ஆனாலும், அந்தக் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று எம்.ஜி.ஆர். கூறிய தில்லை.
எம்.ஜி.ஆர். படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என்று அந்த கவிஞரும் சொன்ன தில்லை.
மேடைப் பேச்சுக்கள் ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம்.ஜி.ஆர் படங்களின் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கவிஞரை அணுகத் தயங்கினர். அதனால், எம்.ஜி.ஆரின் சில படங்களில் அவர் பாடல்கள் இடம்பெறவில்லை.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் மேலே குறிப் பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் அந்தக் கவிஞரை விட்டே அந்த பாடலை எழுதச் சொன்னால் என்ன? என்ற யோசனை பிறந்தது. படக்குழுவினர் கவிஞரிடம் விஷயத்தைச் சொல்ல, அவரும் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாடல் மிக வும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி அந்தப் பாடலை ஓ.கே. செய்தார்.
அந்தப் பாடல்தான் காலத்தால் அழியாத
‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…’
அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன். அவர் கடுமையாக தாக்கிப் பேசுவாரே தவிர, மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.
எம்.ஜி.ஆர். நடித்த வெள்ளிவிழா படமான ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில்,
‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’
என்ற இனிமை யான பாடலை எழுதியவர் கண்ணதாசன். நாயகி யைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில்
‘பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு, நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’
என்று வரும்.
பதிலுக்கு நாயகி, ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்.. நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’
என்று பாடுவதுபோல எழுதியிருந்தார் கண்ணதாசன். நாயகி பாடும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. கண்ணதாசனிடம் சொல்லி அந்த வரிகளை மாற்றச் சொன்னார்.
கண்ணதாசன் உடனே மாற்றிக் கொடுத்த வரிகள்தான்,
‘போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்’.
நட்பு ஒருபுறம் இருந்தாலும்,
எம்.ஜி.ஆரின் மனதை பொன்மனம் என்று வர்ணித்தாலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை.
ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார். இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.
எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார். ‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார். எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.
‘அரசவைக் கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன், ‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக் காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது. கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார். கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்., ‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.
எம்.ஜி.ஆர்… அதிலும் தமிழகத்தின் முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர். என்றாலும் கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால், கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான் வைக்கும்.
சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.
‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’
என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.
எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…
‘தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது
பொன்னல்லவோ நிறத்தை தந்தது’
இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.
எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்....
அன்புடன்
படப்பை rtb.,
-
Mgrன்
வரலாற்று சாதனை
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1973-ம் ஆண்டில் மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து மாநில அரசு மீது புகார் கொடுக்க முடிவு செய்தார்.
M.g.r. சென்னையில் இருந்து மதுரைக்கு ரயிலில் வருகிறார் என்கிற செய்தி அறிந்த மக்கள் வழி நெடுக ஒவ்வொரு இரயில் நிலையங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி விடுகிறார்கள் அந்த இரவு நேரத்தில் கூட மக்களின் உற்சாகமான வரவேற்பை ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு இரயில் நிலையங்களிலும் புரட்சி தலைவர் கண் விழித்து தொண்டர்களுக்கும் தாய்மார்களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டு வந்தார் இதன் காரணமாக, காலை7 மணிக்கு மதுரை வரவேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் மாலை5மணிக்கு 10 மணி நேரம் தாமதமாக மதுரை வந்தடைந்தது
திட்டமிட்டபடி பிரதமர் இந்திராகாந்தி அவர்களை
சந்திக்க முடியாவிட்டாலும்
1977- ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக - இந்திரா காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டது. மதுரையில் நடந்த பிரம்மாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் எம்.ஜி.ஆரும். இந்திரா காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்தார்கள்...
மாபெரும் வெற்றி அடைந்தார் mgr
எம்ஜிஆர் என்கிற தனிமனித உழைப்பால் உருவானது தான்
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
நன்றி
எம்ஜிஆர்நேசன்.........
-
தலைவருக்கும் இயக்குனர் கே. சங்கருக்கும் உள்ள நெருக்கம் அலாதியானது.
சங்கர் ஒரு முறை வீரஜகதீஷ் படம் பார்த்தேன் அப்போதே புகைபிடிப்பது தவறு என்று சுட்டி காட்டி இருந்தது என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது....
சிலர் உயரே வந்தவுடன் பழையதை தொலைத்து விடுவார். ஆனால் எம்ஜியார் மட்டும் அப்படி இல்லை.
என் கடைசி மகளுக்கு திருமணம்...பெரிய அளவில் ஏற்பாடு செய்து விட்டேன்.
எனக்கு சிலரிடம் இருந்து வரவேண்டிய பணம் கிடைக்கும் என்று நம்பி..
ஆனால் அப்படி நடக்கவில்லை....திருமண நாளும் வந்தது...பெரிய இயக்குனர் என்பதால் அனைத்து செலவுகளுக்கு அட்வான்ஸ் மட்டுமே பெற்று கொண்டனர்.
கண் முன்னே நான் செட்டில் பண்ண வேண்டிய தொகை என்னை மிரட்டியது..
அனைத்து முக்கிய முக்கிய பிரமுகர்கள், நண்பர்கள், திரை துறையினர் வந்து சேர நிகழ்வுகள் தொடங்க
வாத்தியாரும் வந்து சேர திருமணம் முடிந்து இன்னிசை கச்சேரி முடிந்து விருந்து முடிந்து அனைவரும் புறப்பட்டு கொண்டு இருந்தனர்.
நான் பொய் சிரிப்பை முகத்தில் காட்டி அனைவரையும் வரவேற்று வழி அனுப்ப.
சாப்பிட்டு முடித்த எம்ஜியார் என்னை கண் ஜாடையில் அழைக்க கை கழுவும் இடம் தாண்டி என்னை அழைத்து ஜிப்பாவுக்குள் இருந்த ஒரு பேப்பர் பண்டிலை என்னிடம் யாரும் பார்க்காவண்ணம் கொடுத்து நான் பார்சலை வாங்கி
திரும்பும் முன் என் கண்களை விட்டு மறைந்து விட்டார்... நான் பதட்டத்துடன் அந்த குறை வெளிச்சத்தில் பண்டிலை பிரித்து பார்க்க.
இன்னும் இதை போல இன்னொரு திருமணம் முடிக்கும் அளவுக்கு அதில் பணம் இருந்தது.
எத்துனை நடிகர்களை நான் இயக்கி இருந்தேன்...
அத்துணை பேரிடம் இல்லாத இரக்க குணம் இவரிடம் மட்டும் எப்படி வந்தது என்று மொத்த கவலைகளும் என்னை விட்டு பறக்க மீண்டும் புதிதாய் பிறந்தேன் என்கிறார் இயக்குனர் கே. சங்கர்.
ஏன் என்பதில் என்ன சந்தேகம்...அவர் மனித புனிதர் ஆவார்.
வாழ்க எம்ஜியார் புகழ்.
தொடரும்.. நன்றி. உங்களில் ஒருவன் நெல்லை மணி...
-
புரட்சித்தலைவரின் கருணையுள்ளம் காவல்காரன் திரைப்படத்தில் நடந்த சம்பவம் :
நடிகர் கே. கண்ணன் கூறியது :
காவல்காரன் படத்தில் புரட்சித் தலைவருடன் நான் சண்டை செய்யும் காட்சிக்காக ஸ்டண்ட் குழுவினருடன் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன் சத்யா ஸ்டுடியோவில் ! எதிர்பாராத விதமாக எனது கால் நன்றாக பிசகி விட்டது. காற்றோட்டமாக இருக்கட்டுமென்று என்னை வெளியில் மணலில் தூக்கிக் கொண்டு வந்து படுக்க வைத்திருந்தனர். இந்த நிகழ்ச்சி நடந்தபோது புரட்சித்தலைவர் வாகினியில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அவருக்கு செய்தி எப்படியோ எட்டியிருக்கிறது. உடனே சத்யா ஸ்டுடியோவிற்கு வந்து பாசத்தோடு என்னை விசாரித்தார். டாக்டரிடம் அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்தார். எனக்கு கால் பிசகி இருப்பதால் அது சரியாகும் வரையில் 10 நாட்கள் படப்பிடிப்பை தள்ளி போடும்படி கூறினார். நான் ஏற்றிருப்பது சாதாரண வேடம் தான். எனக்கு பதில் வேறு யாரையாவது போட்டு படப்பிடிப்பை உடனடியாக முடித்திருக்கலாம். 10 நாட்கள் படப்பிடிப்பை தள்ளிப் போடுவதால் எவ்வளவு சிரமம் செலவு ஏற்படும் என்பதை பற்றி எல்லாம் புரட்சித் தலைவரும் ஆர்.எம்.வீயும் கருதவில்லை. எனக்கு பதில் வேறு யாரையும் போடாமல் நான் குணமடைந்து நடிக்க வரும் வரை படப்பிடிப்பைத் தள்ளிப்போட்ட புரட்சித்தலைவரின் கருணை உள்ளத்தை, பேரண்பை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது.
( நடிகர் கே. கண்ணன் கூறியது )
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........
-
#தலைமுறையாய் #தொடரும் #பக்தி
#சோ, தன் துக்ளக் பத்திரிகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் தொடரும் செல்வாக்கு பற்றிக் கூறும்போது ஒரு சம்பவத்தை மிக வியப்புடன் குறிப்பிட்டிருப்பார்...
அவர் தான் வரும் வழியில் பிளாட்பாரத்தில் ஒட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் படத்தை ஒரு சிறுவன் வணங்கிவிட்டு வந்ததைப் பார்த்திருக்கிறார்.
அவனை அழைத்து ` இப்ப என்ன செய்தாய்?' என்று கேட்டபோது, அவன் அவரிடம் `#எம்ஜிஆரை #கும்பிட்டால் #நல்லா #படிப்பு #வரும். #அதனால #கும்பிட்டுட்டுப் #போறேன்' என்றதும் சோ அதிர்ந்திருக்கிறார்...
இவன் வளர்ந்து பெரியவனாகும்போது, தன் பிள்ளைகளுக்கும் இதை சொல்லி பெருமிதம் கொள்வான்...
அவர்களும் `என் அப்பா தீவிர எம்ஜிஆர் பக்தர்' என்று அவர்கள் பிள்ளைகளிடம் சொல்வார்கள். இப்படி எம்ஜிஆர் மீதான அன்பு, பக்தியாகப் பல இடங்களில் கனிந்துவிட்டது...
எம்ஜிஆரைத் தவிர வேறு ஒருவரும் உலகில் இப்படி இருந்ததில்லை..
இருக்கப்போவதுமில்லை..............
-
உலகத்தில் எந்த நடிகரின் 100 வது படமும் ...வெளியான நாள் முதல் இன்று வரை சாதித்த வரலாறு.........
எங்கள்
மக்கள் திலகத்தின்
100 வது
திரைக்காவியமான
"ஒளிவிளக்கு"
போல் ஒடிய வரலாறு கிடையாது!
எக்காலத்திலும்
இனி கிடையாது...
இன்றுடன்
(20.09.1968 - 20.09.2020) 52 ஆண்டுகளை நிறைவு செய்தும்......
காலத்தை வென்று நிற்கும் ஒப்பற்ற காவியமாக...
கலைப்பேரரசர்
திரையுலக சக்கரவர்த்தி
வசூல் படமாமன்னன்
நிறைக்குடம் தழும்பாத
வெற்றியை தந்த
மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர்.அவர்களின்
ஒளிவிளக்கு மட்டுமே!
எல்லோராலும் பேசப்படும் 100 வது சரித்திரமாகும்.....
100 நாளை வெற்றிக்கொண்ட ஊர்கள்....
இலங்கை ஜெயின்ஸ்தான்
162 நாள்
ராஜா 161 நாள்
மதுரை 147 நாள்
திருச்சி 116 நாள்
குடந்தை 101 நாள்..
1984 ல் இலங்கை மீண்டும் 4 வது வெளியீடு..
ராஜா 105 நாள்
அடுத்து....
***********
சென்னை
பிராட்வே 92 நாள்
அகஸ்தியா 31 நாள்
தஞ்சை 85 நாள்
ஈரோடு 85 நாள்
மாயூரம் 85 நாள்
மன்னார்குடி 85 நாள்
சேலம் 91 நாள்
கோவை 85 நாள்
பாண்டி 80 நாள்
வேலூர் 85 நாள்
(லஷ்மி/ கிரவுன்)
சென்னை
மகாலட்சுமி 77 நாள்
மிட்லண்ட் 70 நாள்
நூர்ஜகான் 70 நாள்
திண்டுக்கல் 70 நாள்
மற்றும் 30 திரையில்
50 நாளை கடந்தது...
இலங்கையில்
1984,1992 இரண்டுமுறை
10 வாரங்கள் கடந்து சாதனையாகும்....
53 வது ஆண்டின் சாதனையை நோக்கி
சாகாவரம் பெற்ற வெள்ளித்திரையின்
வெற்றியில்
ஒளிவிளக்கு... பவனி!
ஒளிவிளக்கு வெற்றியின் ஒரு பகுதி தான் மேலே....
இன்னும் உள்ளது....பல
53 வது தொடக்கத்தில்
கொராணா நீங்கி
அனைவருக்கும்
மக்கள் திலகத்தின் ஆசியின்...
ஒளிவிளக்கு
ஒளிரட்டும் வாழ்வில்............
உ.ரா..
-
1969 மே1 மற்றும் 1970 ஜன 14 பொங்கல் திருநாள், இந்த இரண்டு நாட்களிலிருந்து தொடர்ந்து மக்கள் அலைஅலையாக 'அடிமைப்பெண்' மற்றும் "மாட்டுக்கார வேலன்" திரையிட்ட திரையரங்குகள் நோக்கி
படையெடுக்க ஆரம்பித்தார்கள்.
எங்கும் ஒரே பேச்சு படம் பார்த்தாச்சா? என்பதுதான். இரண்டு நாளிலும் வேறொரு நடிகரின் படமும் வந்தது.
"அடிமைப்பெண்ணு"டன் சேர்ந்து வந்த படத்தை பாவம் வேடிக்கை பார்க்க கூட மக்கள் செல்லவில்லை ."மாட்டுக்கார வேலனு"டன் சேர்ந்து வந்த படம் பொங்கல் திருநாள் அன்று வந்ததால் மற்ற படங்களின் டிக்கெட் கிடைக்காத கூட்டம் முதல் இரண்டு நாட்கள் வந்ததால் ஒரளவு கூட்டம் வந்தது. படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பியதால் படம் விரைவில் படுத்து விட்டது. ஸ்டெச்சரில் கூட தூக்க முடியாத அளவுக்கு நிலமை மோசமானதால் அப்படியே 'அம்போ'வென போட்டு விட்டு சென்று விட்டார்கள்.
அதிலும் ஹிந்தியில் வெளிவந்த "பிரம்மசாரி" படத்தில் நடித்த நடிகரின் நடிப்பு திறமையால் அந்த படம் வெள்ளி விழா போனது. தமிழில் மிகை நடிப்பு நாயகன் நடித்து படத்தை சொதப்பி படத்தை போர் படமாக மாற்றி விட்டார். படத்தை தொய்வில்லாமல் கொண்டு போக தெரியாமல் விறுவிறுப்பு குன்றி கூட வந்த மாபெரும் வெற்றி படத்துடன் மோதி தோல்வியை பரிசாக பெற்றது. அதன்பின்பு அந்த நடிகரை வைத்து கலர் படம் எடுக்க தயாரிப்பாளர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.
அதனால் நிறைய கருப்பு வெள்ளை படங்களில் குறைந்த பட்ஜெட்டில் நடிக்க ஆரம்பித்தார். ஜெய்சங்கர் படத்துக்கு ஆகும் செலவில் ஒரு படம் மாற்று நடிகரை வைத்து எடுத்து விடலாம் என்று நினைத்த தயாரிப்பாளர்கள் படம் தோற்றாலும் சிறிய பட்ஜெட் என்பதால் ஒரிரு லட்ச இழப்போடு தப்பி விடலாம் என்று நினைத்தனர். அப்படியும் அந்த நடிகரின் மிகை நடிப்பால் பல கறுப்பு வெள்ளை படங்களும் தோல்வியை தழுவ ஆரம்பித்தன. உதாரணமாக "அஞ்சல் பெட்டி" ,"குருதட்சணை", "அன்பளிப்பு" ,"நிறைகுடம்", "அருணோதயம்" இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒரு வருடத்தில் வருகின்ற 8 அல்லது 9 படங்களில் 7 படங்கள் தோல்வியை தழுவின. ஒரு சில படங்களில் நடிகர் சொதப்பினாலும் ஏதோ காரணத்திற்காக சுமாராக ஓடியதும் உண்டு. திடீரென்று ஒரு படம்
ஓடிவிட்டால் போதும் கைபிள்ளைங்களை கையில் பிடிக்க முடியாது. ஏதோ அந்த நடிகரின் நடிப்பால்தான் படம் வெற்றி பெற்றதை போன்ற தோற்றத்தை உருவாக்கி விடுவார்கள். அப்படி ஒடிய "பட்டிக்காட்டு" படத்தை தூக்கி வைத்து லாலி பாடினர். அப்படியும் அந்த படம் முதல் வெளியீட்டோட சரி. மறு வெளியீட்டில் எங்கும் தலைகாட்டவில்லை.
எம்ஜிஆர் படம் எப்படி ஓடும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
என்ன இருக்கிறது அந்த படத்தில் இப்படி ஓடுகிறது என்று தெரியவில்லை என்று வருவோர் போவோரிடம் அங்கலாய்த்து. பேசுவார்கள். . அதன்பிறகு அந்தப்படத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வது அவர்களது வழக்கம். எப்போதும் அந்தப் படத்தை திட்டி தீர்ப்பார்கள். அதனால்தான் "அடிமைப்பெண்", "மாட்டுக்கார வேலன்" "ரிக்ஷாக்காரன்" போன்ற படங்கள் எல்லாம் அவர்களுக்கு சிம்ம சொப்பனங்கள்.
இரவில் கூட கண்விழித்து அலறுவதும் உண்டு.
அதற்கு காரணம் "அடிமைப்பெண்ணு"ம் "மாட்டுக்கார வேலனும்" நான்கு தியேட்டரில் வெளியான படங்கள். அவர்களுக்கும் நான்கு தியேட்டரில் வெளியான ஒருசில படங்களில் மூன்று படங்களை ஸ்டெச்சர் உதவியுடன் 100 நாட்கள் ஓட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு படங்களை 100 நாட்கள் ஓட்டுவது சுலபம். தியேட்டர் வாடகை கட்டி ஒட்டி விடுகிறார்கள்.பின்பு எவ்வளவு வாடகை கட்டினோம் என்பதை வைத்து வசூல் விபரங்களை போட்டு அசத்துவது அவர்கள் வழக்கம்.
ஆனால் அந்த நடிகர் தன் வாழ்நாளில் நடித்த 300 படங்களில் ஏதாவது ஒரு படமாவது நான்கு தியேட்டரிலும் 400 காட்சிகள்
அரங்கம் நிறைத்து ஓட்ட முடிந்ததா?. நெவர். ஒரு காலத்திலும் அந்த சாதனையை செய்ய முடியவில்லை. எனக்கு தெரிந்து தமிழ்ப்பட உலகில் அந்த சாதனையை செய்த இரண்டு படங்களும் தலைவர் படங்களே. காவிரியில் வெள்ளம் வந்தால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசாங்கம் எச்சரிக்கை செய்வது போல தலைவர் படம் வெளியானால் தமிழகத்தில் உள்ள அநேக ஊர்களில் 50,75,100 என்று ஓடி மக்கள் வெள்ளம் அடங்க ஒரு 2 முதல் மூன்று மாதம் வரை ஆகும்.
புரட்சி நடிகரின் 100 வது படம் "ஒளிவிளக்கு" மதுரையில் 100 காட்சிகளுக்கு மேல் தொடர்ந்து hf ஆனது. ஆனால் உங்கள் 100 வது படம் எங்காவது 50 காட்சிகளாவது தொடர்ந்து அரங்கு நிறைந்ததா? ஆனால் 100 நாட்கள் சென்னையில் 4 திரையரங்கிலும் ஸ்டெச்சரில் தூக்கி கரை சேர்த்த அனுபவம்
உண்டு. எங்களது சாதனைகள் அனைத்துக்கும் ஆதாரங்கள் அளித்திருக்கிறேன். பார்த்து புத்தியை சானடைசர் போட்டு கழுவிக் கொள்ளவும்.
ஆனால் மாற்று அணியில் ஏதாவது ஒரு ஊரில் சிறிது பள்ளம் தோண்டி அதில் நீரை ஊற்றி ஆ! வெள்ளம்!
என்று அலறுவதை பார்த்தால் கோமாளித்தனமாக இல்லையா?
இதையெல்லாம் நாம் சுட்டிக் காட்டினால் சில சிவாலய மடாதிகள் கூவம் நதிநீர் குடித்து வளர்ந்தவர் போல அசிங்கமான வார்த்தைகளால் தலைவரை அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.
அவர்களின் ஒரு படத்தை 100 காட்சி அரங்கம் நிறைப்பதற்கே ஸ்டெச்சர் தேவைப்பட்டதை சென்ற பதிவில் பார்த்தோம். ஒரு படத்தை 100 காட்சிகள் அரங்கு நிறைத்ததை. ஒரு முழு பக்க விளம்பரம் கொடுத்து கொண்டாடியவர்கள் 400 காட்சிகள் அரங்கம் நிறைத்தால் அவ்வளவுதான் ஆனந்தத்தில் ஹார்ட் அட்டாக் வந்து உயிர் போய் விடும் என்பதால் விட்டு விட்டார்கள் போலும். அதனால்தான் அவர்கள் நடு இரவில் பயந்து போய் கெட்ட சொப்பனங் கண்டு முழித்து வேங்கையா! வேலா! என்று அலறுவதை பார்த்தால் பரிதாபமாக இருக்கும். .
இந்தப் படங்களின் தொடர் hf காட்சிகள் சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அப்படித்தான். அதுதான் பிரளய வெற்றி. அதிலும் குறிப்பாக "உலகம் சுற்றும் வாலிபன்" தமிழகத்தில் சுமார் 25 திரையரங்குகளில் தொடர்ந்து 100 காட்சிகளுக்கு மேல் அரங்கம். நிறைந்தது அவர்களுக்கு பேதியை உருவாக்கி விட்டது. ஆனால் அவர்கள் ஒவ்வொரு படத்தையும் ஸ்டெச்சரில் தூக்கி கொண்டு 100 நாட்கள் சுமந்து பின் அதை இறக்கி விடுவது வாடிக்கையான செயலாகி விட்டது.
எங்காவது ஒரு தியேட்டரில் அந்த சமூக சேவை நடத்தி மனம் குதூகலிப்பது ஒரு மனநோயாக கூட இருக்கலாம். பின்னர் பெருமையாக நாங்கள் 90 படங்களை ஸ்டெச்சரில் தூக்கி சாதனை படைத்தோம் என்று சொல்வது எவ்வளவு பெரிய வேதனை. ஆனால் அதை விடாமல் இன்று வரை சிவகாமி, ராஜபார்ட் வரை அலுக்காமல் செய்ய ஒரு பெரிய மனது வேண்டும். வாழ்க உங்கள் ஸ்டெச்சர் பணி என்று வாழ்த்துகிறோம் .
அரசியலில் புறமுதுகு காட்டி ஓடியதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் தோல்வி தோல்விதானே! சாரி படு தோல்விதானே.! தோற்றவன் பிதற்றுவது சகஜம்தான். சினிமாவில் சிறுவர்களை அண்டி பிழைத்த கொடூரத்தை மறைக்க போலி வசூல் கணக்கை காட்டும் புல்லுருவிகளை என்ன சொல்லி புரியவைக்க!. அனைத்து தோல்வி படங்களையும் வெற்றி படமாக்க ஆதாரமில்லாத பொய் வசூல் காட்டும் ஜாலக்காரர்களின் ஜாலம் எத்தனை நாள் கை கொடுக்கும்.
அரசியலிலும் சினிமாவிலும் வெற்றியை நிரூபித்த வெற்றித்
திருமகன் புரட்சி தலைவர் ஒருவரே.
தன் படத்தை மக்கள் நிராகரிக்கிறார்கள் என்றவுடன் ஆபாசத்தின் எல்லைக்கே சென்று நடித்த "சிவகாமியின் செல்வன்" மற்றும் "லாரி டிரைவர் ராஜா கண்ணு" போன்ற படங்கள் ஊத்திக் கொண்டதும் சிறுமிகளுடன் ஜோடியாக நடித்தால் படம் ஓடி விடும் என்று நினைத்து ஸ்ரீதேவி ஸ்ரீப்ரியா போன்ற இள நடிகைகளுடன் நடித்தார். அந்த படங்களும் ஓடவில்லை. சிவாஜி குண்டா நடித்த படங்களை கூட ஓரளவு ஓட்ட முடிந்தது, ஆனால் வயிற்றில் அண்டாவுடன் நடித்த படங்களை மக்கள் திரும்பிக்கூட பார்க்கவில்லை என்றதும் கட்டாய ஓய்வில் தள்ளப்பட்டார்.
சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய 80 சதவீத ஆதரவு ஜானகி அம்மாவுக்கு ஆதரவு கொடுத்ததால் கிடைக்க வில்லை என்று ஒரு ஞானசூன்யம் கூறியிருப்பது உலக மகா ஜோக்.
ஜானகி அம்மாவின் ஆதரவால் அவருடைய டெப்பாசிட் பிழைத்தது.
இல்லையென்றால் "தில்லானா"வில்
கத்திக்குத்துக்கு உருண்டதை போல் உருண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்.
இவ்வளவு ஆதரவு உள்ளவர் கட்சியை ஏன் கலைத்தார் என்று நீங்க விளக்கலையே. அடுத்த தேர்தலில் cm ஆகும் வாய்ப்பை இழந்து விட்டாரே. சும்மா அவரை வைத்து காமெடி, கீமெடியெல்லாம் பண்ணாதீங்கப்பா! பெரிய குடும்பமே பாத்து சிரிக்குதப்பா! உங்க பேச்சை கேட்டு.
முடிவில் ஒரு சின்ன ஜோக். ஜோக்காக இருந்தாலும் இது உண்மை:
------------------------------------'---------------------
சிவாஜி ரசிகர் :
ஏம்ப்பா சிவாஜியின் 4 பழைய படத்துக்கு வசூல் வேணும்.
எவ்வளவு பணம் வேணும்.?
தியேட்டர் பழைய துப்புரவு பணியாளர்:
பரவாயில்லையே! இது நல்ல தொழிலாயிருக்கே? சிவாஜி படம் வசூலானதை விட இந்த பொய் வசூல் கொடுக்கிறதிலே வருமானம் அதிகமிருக்கே! அடிச்சு விடுவோம்.
சிவாஜி ரசிகர்களுக்கு. இந்த ஜோக் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்..........ks.,...
-
தமிழக முன்னாள் அமைச்சர், காளிமுத்து எழுதிய, 'வாழும் தெய்வம்' என்ற நூலிலிருந்து:
ஒருமுறை, எம்.ஜி.ஆர்., திருச்சிக்கு செல்லும் போது, வழியில் ரயில்வே கேட் குறுக்கிட, அவரது கார் நின்றது. அப்போது, அருகில் வயல்களில் வேலை செய்த மக்கள், ஓடி வந்து, எம்.ஜி.ஆரின் காரை சூழ்ந்து கொண்டனர். அவர்களின் பாசத்தில் திக்குமுக்காடி போனார்
எம்.ஜி.ஆர்.,
'எல்லாரும் நல்லா இருக்கீங்களா...' என்று, எம்.ஜி.ஆர்., விசாரித்த போது, அவர்கள், 'மகராசா நீங்க நல்லா இருந்தாலே போதும்; நாங்க நல்லா இருப்போம்...' என்று சொல்லி, கையெடுத்துக் கும்பிட்டனர். அவர்களின் கைகளை பற்றி நெகிழ்ந்து போனார், எம்.ஜி.ஆர்.,
அவர்களிடம் விடைபெற்று காரில் பயணித்த போது, நெகிழ்ந்த குரலில், 'நான் நல்லா இருந்தாலே, தாங்களும் நல்லா இருப்போம்ன்னு சொல்ற இந்த மக்களுக்கு, நான் என்ன கைமாறு செய்யப் போறேன்...' என்றார்.
மக்கள், தன் மீது காட்டிய பாசத்தை போலவே, அவரும் மக்கள் மீது காட்டிய அன்பையும், அக்கறையையும் அன்று நேரில் பார்த்தேன்.
அவரது ஆட்சியின் போது, ஒருமுறை, ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை; குடியிருப்பு பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும், உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர்., அவருடன் நானும் சென்றேன்.
சேறும், சகதியுமான வீதிகளில் கண்ணீரும், கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களை பார்த்ததுமே, காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்., சிறிதும் யோசிக்காமல், வேட்டியை மடித்துக் கட்டி, முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க, பதறிப் போன மக்கள், 'அய்யா... எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல; உங்கள பாத்ததே போதும்; சகதியில் நடக்காதீங்க...' என்று தடுத்தும் கேளாமல், அவர்கள் அருகில் சென்று, ஆறுதல் கூறினார்.
பின், மின்னல் வேகத்தில், நிவாரணப் பணிகளுக்கும் உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையி
உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல; தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர், எம்.ஜி.ஆர்.,
முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அமரராகும் வரையிலான, 11 ஆண்டுகளில், ஒரு சென்ட் நிலமோ, வீடோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம், திரையுலகில் தான் சம்பாதித்த சொத்துகளை, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என, தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்தார். அவர் போல் மக்களின் இதயங்களில் இடம் பிடித்தவர், வேறு யாரும் இல்லை. ஏனெனில், தான் சம்பாதித்த மாபெரும் சொத்து, மக்களின் செல்வாக்கு என நினைத்தார்; அதை மதித்ததுடன், கடைசி வரை கட்டிக்காக்கவும் செய்தார்.
இதற்கு உதாரணமாக, இன்னொரு சம்பவத்தையும் கூறலாம்.
ஒருமுறை எம்.ஜி.ஆருடன் காரில் சென்றேன். அவரது காரைப் பார்த்ததும், சாலையின், இருபுறமும் திரண்ட மக்கள், 'தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர்., வாழ்க...' என்று கோஷமிட்டனர். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., என்னிடம், 'இவங்க எல்லாருமே எம்.ஜி.ஆர்., வாழ்கன்னு வாழ்த்தறாங்களே தவிர, ஒருத்தர் கூட, முதலமைச்சர் வாழ்கன்னு ஏன் சொல்லலன்னு தெரியுமா?' என்று கேட்டார்.
'உங்க மூன்றெழுத்து பெயர்; அவங்களுக்கு மந்திரம் மாதிரி; அதனால் தான்...' என்றேன்.
'அதுமட்டுமல்ல; முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா, அது பதவியை வாழ்த்துற மாதிரி.
எம்.ஜி.ஆர்., வாழ்கன்னு சொன்னா தான், என்னை வாழ்த்துற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதை நான் பத்திரமா காப்பாத்தியாகணும்...' என்றார்.
இறுதி வரை, அவர் சொன்னது போலவே நின்றார்.............
-
எங்கிருந்தாலும் என் சிந்தை முழுவதும் செந்தமிழ் நாட்டில்தான்! - 1
[வெளிநாடு செல்லும் முன் முதல்வர் விடுத்த செய்தி]
நான் அமெரிக்க பேரரசு விடுத்த அன்பழைப்பினை ஏற்று, உங்கள் அனைவரின் நல்வாழ்த்துக்களோடு அமெரிக்கா, மெக்ஸிகோ, பிரிட்டன் , ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு என்னுடைய ஐந்து வாரப் பயணத்தை மேற்கொள்ளுகிறேன். இதற்கு மூன்னரும் நான் ஆசிய ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றிருக்கிறேன் என்றாலும் இம்முறை மேற்கொள்ளும் பயணத்தை தனிச் சிறப்புடையதாகக் கருதுகிறேன். இப்போது தான் தமிழக மக்களின் பிரதிநிதியாக இந்த நாடுகளுக்குச் செல்லுகிறேன் என்பதை எனக்குக் கிடைத்துள்ள அரிய நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்.
அமெரிக்காவிலும் நான் செல்ல இருக்கின்ற இதர நாடுகளிலும் எவ்வாறு வாழ்க்கையில் மக்கள் முன்னேற்றம் பெற்றிருக்கிறார்கள் தொழில் வளர்ச்சி எந்தெந்த வகையிலெல்லாம் ஏற்பட்டிருக்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அங்குள்ள அரசுகள் மேற்கொண் டுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றை நான் நேரடியாக அறிந்து கொள்வதற்கும், அறிந்தவற்றை நம்முடைய மக்களின் முன் னேற்றத்திற்குப் பயன்படுத்துவதற்கும் என்னுடைய இந்தப் பயணம் சிறந்த வாய்ப்பாக அமையுமென்று நம்புகிறேன்.
ஐந்து வாரங்கள் தமிழக மக்களோடு நேரடியாகத் தொடர்பு வைத்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போகிறதே என்கிற ஏக்கம் - மனக்குறை எனக்கு இருந்தாலும் வெளிநாடுகளில் தான் பெறும் அனுபவத்தை, மக்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்புக் கிடைக்கிறதே என்கிற எண்ணத்துடன், ஏக்கத்தைப் போக்கிக்கொண்டு, உங்களின் நிறைந்த நல்வாழ்த்துகளோடு என்னுடைய பயணத்தை மேற் கொள்ள முடிவு செய்தேன்.
ஐந்து வாரங்கள் தமிழகத்திலே தான் இல்லாமல் போனாலும் என்னுடைய அன்புக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கும் உரிய என்னுடைய உடன்பிறப்புக்களைக் கொண்ட அமைச்சரவையும், கடமை தவறாமல் பணிபுரிகின்ற அனுபவமிக்க அதிகாரிகளும் நாட்டு மக்களின் கடமைகளை செவ்வனே நிறைவேற்ற இருக்இறார்கள், தமிழக மக்களும்,அனைத்துக் கட்சித் தலைவர்களும் அரசுப் பணிகளும் மக்கள் முன் னேற்றப்பணிகளும் தொடர்ந்து சீரோடும் சிறப்போடும் நடைபெற அரசுக்கு முழு ஒத்துழைம் பினையும் அளிப்பார்கள் என்பதி லும் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.
தொடரும் ..............
-
திரைப்படத் துறையில் மக்கள் திலகம் இருந்தவரைக்கும் அவர்தான் வசூல் சக்கரவர்த்தி. 1971-ம் ஆண்டு பேசும்படம் பத்திரிகையில் கேள்வி பதில் பகுதியில் தென்னகத்தின் வசூல் சக்கரவர்த்தி யார்? என்ற கேள்விக்கு, ‘எம்.ஜி.ஆர்!’ என்று பதில் சொல்லியிருந்தார்கள். பேசும்படம் மக்கள் திலகத்தின் ஆதரவு பத்திரிகை இல்லை. 1973-ம் ஆண்டு பொம்மை பத்திரிகை கேள்வி பதில் பகுதியில் ‘எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரில் அதிகம் சம்பளம் வாங்குவது யார்?’ என்ற கேள்விக்கு ‘‘இப்போதுவரை எம்.ஜி.ஆர்.தான் அதிக சம்பளம் வாங்குகிறார்’ என்று பதில் சொல்லியிருந்தார்கள். பொம்மையும் நடுநிலையான பத்திரிகைதான். மக்கள் திலகம் வாங்கிய சம்பளத்தை கடைசிவரை சிவாஜி கணேசன் வாங்கவே இல்லை.
அன்பே வா படத்துக்கு மக்கள் திலகத்துக்கு முதலில் ரூ.3 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டது. பின்னர், மக்கள் திலகம் மேலும் ரூ.25 ஆயிரம் கேட்டு ஏவிஎம் செட்டியார் கொடுத்தார். இதை ஏவிஎம் சரவணன் மற்றும் அந்தப் படத்தின் வசனகர்த்தா ஆரூர்தாஸ் கூறியுள்ளனர். அதேநேரத்தில் 1966-ல் ஆரம்பிக்கப்பட்டு ஏவிஎம் தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக 1968-ல் வெளியான உயர்ந்த மனிதன் படத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல் சிவாஜி கணேசனுக்கு சம்பளம் தர முடியாது என்று செட்டியார் மறுத்துவிட்டார். இதையும் ஆரூர்தாஸ் கூறியிருக்கிறார். ஏவிஎம் சரவணனும், ஆரூர்தாசும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள். மக்கள் திலகத்தின் சம்பளத்தில் பாதி கூட சிவாஜி கணேசனுக்கு ஏவிஎம் கொடுக்க விரும்பவில்லை. அவரது மார்க்கெட் வேல்யூ அவ்வளவுதான். இது சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கும் தெரியும். Swamy.........
-
‘உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்.....
தலைவர் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற, கவியரசரின் வரிகளில், ‘மாமா’ மகாதேவன் அவர்களின் இசையில், தெய்வப்பாடகரின் கம்பீரக் குரலில் கேட்டாலே தன்னம்பிக்கையும் எழுச்சியும் கொடுக்கும் ‘உன்னை அறிந்தால்...’
‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலைவணங்காமல் நீ வாழலாம்...
மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மானென்று சொல்வதில்லையா?
தன்னைத் தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா?....
மானத்திலே மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான் போல இருக்க வேண்டும். தன்னையும் அறிந்து கொண்டு ஊருக்கும் வழிகாட்டும் அறிவுரைகளை சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா? அப்படி ஊருக்கு நல்லது சொல்லி தலைவர் ஆனவருக்கு நம் தலைவரே உதாரணம்.
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகரில்லையா?
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக் கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளையில்லையா?.....
இப்புவியில் நேராக, நேர்மையாக வாழும் எல்லோருமே சாமிக்கு நிகர்தான். இதைத்தான் வள்ளுவரும் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்கிறார். பெரியவர்கள் சொல்வார்கள். தெய்வத்திடம் அதுவேண்டும், இது வேண்டும் என்று கேட்காதீர்கள். உனக்கு எது வேண்டும்? என்று தெய்வத்துக்கு தெரியாதா? என்று. அது போல பிறரின் தேவை அறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளைகள். அப்படி மக்களுக்கு தேவை அறிந்து வாரிக் கொடுத்த தலைவரும் தெய்வத்தின் பிள்ளைதானே?
மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழவேண்டும்
ஒரு மாற்றுக் குறையாத
மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்...
இந்த வரிகளுக்கு பொருத்தமானவர் தலைவர்தான் என்றாலும், நம்மையும் இதுபோல சபைகளில் நடக்கும்போது மாலைகள் விழுவதற்கும் மாற்றுக்குறையாத மன்னவன் என்றும் மற்றவர்கள் போற்றிப் புகழும் அளவுக்கும் உயர்ந்திட வேண்டும் என்கிறார். தான் உயர்ந்தது போல நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்துக்கு பயன்பட்டு அதன் மூலம் பாராட்டு பெறும் அளவுக்கு உயர வேண்டும் என்கிறார்.
இந்தப் பாடலில் தலைவரின் கெளபாய் டிரஸ்சும் ஸ்டைலும் அட்டகாசம். ‘மா.... ஹூ.. ஹா.. என்ற ஏ.எல்.ராகவனின் தாளக்கட்டு குரலுக்கேற்ப குதிரையில் இருந்து லாவகமாக தலைவர் இறங்கும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். தலைவர் எப்போதுமே நடித்துக் கொண்டிருக்கும்போதும் கூட, சூழ்நிலை குறித்து கவனமாக இருப்பவர். கடைசி பாராவின் போது, நடிகையர் திலகம் சாவித்திரியுடன் தலைவர் வேகமாக, ஸ்டைலாக நடந்து வருவார். சாவித்திரியின் பின்னால் குதிரை வந்து கொண்டிருக்கும்.
ஒரு கட்டத்தில் சாவித்திரியின் முதுகை முட்டுவது போல அவரது நடையை விட வேகமாக குதிரை வரும். பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை என்றாலும் கூட, குதிரை தன் முகத்தால் சாவித்திரியின் முதுகை தள்ளினால் அவர் கீழே விழலாம். அல்லது தடுமாறி ரீ டேக் எடுக்கும் நிலை ஏற்படலாம்.
குதிரை சாவித்திரியின் பின்னால் முட்டுவதைப் போல வருவதை ஓரக்கண்ணால் கவனிக்கும் தலைவர், அதன் முகத்தை பிடித்து பக்கவாட்டில் தள்ளிவிடுவார். குதிரையும் தள்ளிச் செல்லும். இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் திரு.சிவாஜி செந்தில் தரவேற்றிய இந்தப் பாடலில் இக்காட்சியை கவனித்தால் தெரியும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பாடல் வரிகளுக்கும் சரியாக வாயசைத்துக் கொண்டே குதிரையையும் கவனித்து அதன் முகத்தைப் பிடித்து தள்ளிவிடும் கவனமும், நுட்பமும், திறமையும், விழிப்புணர்வும் தலைவருக்கே சொந்தம்.
சரி... இப்படி உலகத்தில் போராடி, உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் வாழ வேண்டும், பூமியில் நேராக வாழ வேண்டும், மாபெரும் சபையில் நடந்தால் மாலைகள் விழ வேண்டும், பிறர் தேவையறிந்து வாரிக் கொடுக்க வேண்டும், ஊருக்கும் நல்லது சொல்லி தலைவர்கள் ஆக வேண்டும் ..........இந்த வேண்டும்கள் எல்லாம் நடக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... என்று தலைவர் வழிகாட்டுகிறாரே. அப்படி நம்மை அறிய வேண்டும். அப்படி அறிந்தால் இந்த சிறப்புகளைப் பெறலாம். அது மட்டுமல்ல....
‘ஜீவாத்மா (மனிதன்) வேறு, பரமாத்மா (தெய்வம்) வேறு அல்ல, இரண்டும் ஒன்றே’ என்று அத்வைத தத்துவத்தை போதித்த ஆதிசங்கரரும் நம்மை நாம் அறியச் சொல்கிறார். (நாம் வேறு, தெய்வம் வேறு என்பது இரண்டாக பார்க்கும் கொள்கை. நாமும் தெய்வமும் வேறு அல்ல ஒன்றே, என்பதை விளக்குவதே அத்வைத கொள்கை. த்வைதம் என்றால் இரண்டாக காண்பது, அத்வைதம் என்றால் இரண்டல்லாமல் ஒன்றாக பார்ப்பது. சாத்தியம் என்பதற்கு எதிர்ப்பதமாக முன்னாலே ஒரு ‘அ’ சேர்த்து அசாத்தியம் என்கிறோமே. அதேபோல த்வைதம், அதற்கு எதிர்ப்பதம் அத்வைதம்)
அப்படி, தெய்வம் வேறு நாம் வேறு அல்ல, என்பதை நாம் உணர்ந்தால் உபநிடதங்களில் ஒன்றான பிரகதாரண்ய உபநிடதத்தில் ஆதிசங்கரர் போதித்த ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்ற முடிவுக்கு வருவோம். அதாவது நாமே கடவுள் என்று பொருள். மனிதனே கடவுள். மகாகவி பாரதியாரும் ‘தெய்வம் நீ என்று உணர்’ என்று கூறியிருக்கிறார்.
கடவுள் தனியாக எங்கும் இல்லை. இதைத்தான் ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்றார் பேரறிஞர் அண்ணா.
அதன்படி, மக்களை, ஏழைகளை... தெய்வமாக அவர்களுக்கு செய்யும் சேவையையே இறைவன் தொண்டாக உணர வேண்டுமானால், நம்மை உணர வேண்டும். அப்படி நம்மை உணர்ந்தால்
அதாவது.....
உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்..... அஹம் பிரம்மாஸ்மி.
இந்தப் பாடலை இன்று எழுதலாம் என்று தோன்றி விட்டது என்று முதலில் கூறினேனே. அந்த உந்து சக்தி ஏற்படக் காரணம், மேலே கூறியபடி அத்வைத தத்துவத்தை போதித்த ஆதிசங்கரர் அவதரித்த நாள் இன்று.
‘அஹம் பிரம்மாஸ்மி’.
Couretsy
Kalaivendhan sir.........
-
நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் - 1
சென்னையிலே ஒரு வீட்டின் முன்னால் எந்த நாளும் எந்த நேரமும் ஆகக்குறைந்தது நூறு பேராவது ஆவல் ததும்பும் முகத்துடன் நிற் கின்றார்களென்றால் அந்த கொடைவள்ளலாகவும் உயர்பண்புகளின் உறைவிடமாகவம் விளங்கும் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் வீடு என நிச்சயமாகச் சொல்லலாம்.
ஆம்! அன்புள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர். அவர்கனின் அழகுருவத்தை ஒரு தடவையாவது பார்த்து விடவேண்டும் என்ற ஆசையால் வருபவர் பலர் . அவருடன் உரயைாடி மகிழவேண்டும் என்ற ஆவலில் வருபவர் பலர். அவருடைய ஆசியையும் ஆதரவையும் பெறவேண்டுமென்ற அவாவுடன் வருபவர் பலர். எல்லாரையும் கனிவுடன் வரவேற்கிறார் . அன்புடன் உரையாடுகின்றார், கஷ்டங்களை விசாரிக்கின்றார் . தரமறிந்து தகுதி கண்டு தக்க ஆலோசனைகள் கூறு கின்றார். தகுந்த பணவுதவியும் செய்கிறார். காலஞ்சென்ற கலைவாணர் கிருஷ்ணன் அவர்களின் அடிச்சுவட் டைப் பின்பற்றி அவரையும் விட சிறந்த வள்ளலாக விளங்குகின்றார். நாளாந்த வேலைகளில் உணவு உட் கொள்ளுவதிலும் பார்க்க இத்தகைய வேலைகள்தான் முக்கியமானவையாக எம். ஜி. ஆர். அவர்கட்குத் தோன்றுகின்றன. தன் நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள அவர் தன் அன்புள்ளத்தினால், தாராள மனப்பான்மையினால், தியாக சிந்தையினால் பல லட்சம் மக்களைக் கவர்ந்துள்ளார். எனக்கும் எம்.ஜி.ஆர், அண்ணா அவர்கட்கும் வெகுசமீபத்தில் தான் தொடர்பு ஏற்பட்டது.
தொடரும்.............sb.,
-
நோயில்லா அரசு
நிர்வாகத்தில் நிகரிலா நாணயம்
தலையீடில்லாச் சக்கரச் சுழற்சி
காலத்தாலே காரியம் செய்தல்
இன்ன தேவை இப்பொழுதென்று
அன்னதை மட்டும் அளந்து முடித்தல்
வெற்றுப் பேச்சுகள் விளம்பர மேளம்
அண்டா திருக்கும் அட க்கப் பெருநிலை
மந்திரி என்னும் மமதையில்லாமல்
கலந்து பழகும் கண்ணியப் போக்கு
போலீஸ் கூட்டம் புடைசூழாமல்
மக்கள் நடுவே வலம்வரும் அழகு வேளாண்மைக்கு வியத்தகும் உதவி தமிழின் மேன்மையைத் தரணியில் காக்க
புதுப்புதுச் செயல்கள் ! பொன்னெழுத்தாக எழுதும்
வண்ணம் இயக்கும் திறமை;
குறையையே தேடும் கூட்டங்களுக்குத் தீனிபோடாத செம்மையும் மேன்மையும் பற்றாக் குறையெனப் பதறா திருத்தல்
கடன்களை எழுப்பிக் கவலை தராமல்
நிவாரணப் பணிஎன நிதிதிரட்டாமல் திட்டத்துடனே செயல்படும் உயர்வு!
கட்சிக்காரனைக் கட்டுப் படுத்தி ஆட்சி நேர்மையின் அறத்தினைக் காத்தல்;
வள்ளுவன் வகுத்த வழிகளுக்கிணங்க
நல்லர சொன்றை நடாத்திக்காட்டுதல்;
இவையெலாம் பெற்றதே இன்றைய ஆட்சி!
சுவையெலாம் திரண்டு சோற்றில் விழுந்தபோல்
பசியுள பேர்க்கெலாம் பயனுள விருந்து புகழ்ந்து
பேசாது போகின்றவர்களும் இகழ்ந்து பேசிட எதுவுமே இல்லை;
நல்லர சென்று நவிலும் முறைக்கு இலக்கணம் வகுத்தது இன்றைய ஆட்சி:
ஓராண்டு போல உயர்ந்து வளர்ந்து நூறாண்டு வாழ்கஇந் நோயில்லா அரசு.
அரசவைக்கவிஞர் கண்ணதாசன்....சை. பா.
-
பணத்தோட்டம் அற்புதமான த்ரில்லர், சஸ்பென்ஸ் படம். எலக்ட்ரிக் சேர் எல்லாம் அப்போது புதிது. அதில் உட்கார்ந்து எஸ்.வி. சுப்பையா கடைசியில் தற்கொலை செய்து கொள்வார். மறுபடி மறுபடி காட்சியை எடுத்த டைரக்டர் சங்கரிடம் ‘‘என்னிடம் என்ன மாதிரி நடிப்பை எதிர்பார்க்கிறீர்கள்? ஒவ்வொருவருக்கு ஒரு நடிப்பு பாணி உண்டு. மற்றவர்களின் நடிப்பை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள்’’ என்று மக்கள் திலகம் சொன்னது உண்மைதான். இதை சங்கரே சொல்லி இருக்கிறார். மக்கள் திலகத்துக்கென்று இயற்கையான நடிப்பு பாணி உள்ளது. அதை சங்கர் புரிந்து கொண்டார். அதன் பிறகு மக்கள் திலகத்தை வைத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.
மக்கள் திலகம் சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த டைரக்டரும் கூட. தனது சொந்த படங்களான நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் படங்களை அவரே இயக்கினார். என்றாலும் கே.சங்கரின் உழைப்பையும் திறமையையும் நேர்மையையும் தெய்வபக்தியையும் பார்த்து தனது சொந்தப் படமான அடிமைப் பெண் படத்தை இயக்கும் வாய்ப்பை சங்கருக்கு தந்தார். அவரை தனது சம்பந்தியாகவும் ஆக்கிக் கொண்டார். .........
-
நாம் அடிக்கடி சொல்வது போல மக்கள் திலகத்தின் வள்ளல் தன்மை, சினிமாவில் அவரது சண்டைக் காட்சிகள், இயக்கம், எடிட்டிங், வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்தது, மக்கள் செல்வாக்கு, அரசியல் வெற்றிகள் பேசப்பட்டதுபோல அவரின் நடிப்புத் திறன் பேசப்படவில்லை. நாமும் அதில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை.
பணத்தோட்டத்தில் மக்கள் திலகம் சிறையில் இருந்து தப்பி சரோஜா தேவி வீட்டுக்கு மாடி வழியே ஏறி வீட்டுக்குள் வந்து அவரை சந்திப்பார். சத்தம் கேட்டு சரோஜா தேவியின் தந்தை எஸ்.வி. சுப்பையா அங்கு வந்து மக்கள் திலகத்தை விசாரிப்பார். திருமணமாகாத பெண்ணை இப்படி சந்திப்பது தவறு என்றும் உனக்கு ஒரு தங்கை இருந்து இதே மாதிரி நிலை ஏற்பட்டால் என்ன செய்வாய்? என்றும் ஒரு பெண்ணின் தந்தையாக நியாயமான கேள்வியை கேட்பார்
மக்கள் திலகம் பதில் சொல்ல முடியாமல் தவறை நினைத்து வருந்தி கும்பிட்டு மன்னிப்பு கேட்பார். அப்போது, தன் நிலையை எண்ணி லேசாக விம்முவார். அற்புதமான நடிப்பு. தவறு செய்துவிட்ட மனசாட்சியுள்ள அந்த சூழ்நிலையில் ஒரு மனிதன் இப்படித்தான் நடந்து கொள்வான். மன்னிப்பு கேட்டுவிட்டு சட்டென திரும்பி வந்தவழியே போக முயற்சிப்பார். அப்போது, சுப்பையா, ‘போகும்போதாவது இப்படி போ’ என்று வாசல் வழியை காட்டுவார். அவமானம் தாங்காமல் சுப்பையாவின் முகத்தை பார்க்க முடியாமல் தலைகுனிந்து இடது கையால் ஒரு கண்ணை மூடியபடி கூனிக்குறுகி மக்கள் திலகம் வெளியேறுவார். இன்னும் கண்ணிலேயே நிற்கும் காட்சி அது..........ஸ்வாமி...
-
நடிகப்பேரரசர், பதிவு அருமை. நான் ஏற்கெனவே நமது இந்தப் பக்கத்தில் கமெண்ட் பகுதியில் ரிக் ஷாக்காரன் வசூல் விவரம் பற்றி விளக்கம் கொடுத்து, மக்கள் திலகம் குழுக்களிலும் பதிவிட்டுவிட்டேன். சந்தடி சாக்கில் ராஜா திரைப்படம் சென்னை அகஸ்தியாவிலும் 100 நாள் ஓடியது என்று பொய் சொல்லும் அளவுக்கு போய்விட்டார்கள். உண்மையில் அது தேவி பாரடைஸ் மற்றும் ராக்ஸியில்தான் 100 நாள் ஓடியது. ஆனால், ரிக் ஷாக்காரனை வசூலில் மிஞ்சியதாக காண்பிக்க அகஸ்தியாவிலும் 100 நாள் ஓடியதாக எப்படி எல்லாம் பொய் சொல்கிறார்கள்? நம்மிடம் 4 , 5 படங்களின் வசூலை மட்டுமே போடுகிறோம் என்று சொல்பவர்கள் இருதுருவம், பாதுகாப்பு, தங்கைக்காக, போன்ற பல படங்களின் வசூலை டி.சி.ஆர் காப்பியுடன் வெளியிட்டுவிட்டு நம்மிடம் கேள்வி கேட்டால் நன்றாக இருக்கும்....ஸ்வாமி......
-
#வாத்தியார் #ஸ்டைல்
#புதியசூரியனின் (உதய) #பார்வையிலே என்ற காலத்தால் அழிக்கமுடியாத பாடலின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது...
எம்ஜிஆருக்கு பின்புலமாக சூரியன் தெரியும் வகையில் ஷாட் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று நானும், இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தரும் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் அங்கிருந்த உயரமான மலைக் குன்றின் ஏறி நின்றால் தான் அந்த ஷாட்டை எடுக்க முடியும்.
ஏற்கனவே உயரமான
பகுதியில்தான் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தோம். இன்னும் உயரமானப் பகுதிக்குச் சென்றால், ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் என்பது பற்றியும் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது ‘#நான் #ரெடி’ என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது, நானும், திருலோகசந்தரும் கூறிய இடத்தில் நின்று கொண்டிருந்தார் #எம்ஜிஆர். படத்தில் ஒரு பிரேம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக அவர் அந்த அளவுக்கு முயற்சி எடுத்துக் கொண்டது எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது...
#avmசரவணன்
--------------------------------------------------------------------
வாத்தியாரின் தொழில்நுட்ப அறிவு வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. எந்த நவீன வசதியும் இல்லாத அக்காலகட்டத்திலேயே இன்றைய திரைப்படங்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு பிரமிக்கத்தக்க வகையில் காட்சிகளை அமைத்திருப்பார். அதற்காக மெனக்கெடுவார்.
வாத்தியாரே ! நீ வசனமே பேசவேண்டாம்...பாட வேண்டாம்...ஆட வேண்டாம். ஸ்டைலா உன் பாணியில் ஒரு கையை மட்டும் உயர்த்து...அதுக்காகவே எங்க உயிரையே விட்டுடுவோமே!
இன்றைய காலகட்டத்தில் நம்ம வாத்தியார் மட்டும் இருந்திருந்தால்...
உலக திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தையே படைத்திருப்பார்............bsm...
-
மலரும் நினைவுகள் ...
முதல் வெளியீட்டில் 1960 - 1978
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படங்கள் பற்றிய செய்திகள் , திரைப்பட விளம்பரங்கள் , படப்பிடிப்பு செய்திகள் படித்தது .
எம்ஜிஆர் படம் வெளிவரும் திரை அரங்கில் ஒட்டப்படும் ''வருகிறது '' போஸ்டர்களை கண்டு மகிழ்ந்தது
.
எம்ஜிஆர் படம் ''வருகிறது '' போஸ்டர் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டதை கண்டு பரவசம் அடைந்தது .
வேறு படங்களுக்கு சென்று எம்ஜிஆர் புதுப்படம் வருகிறது என்ற ஸ்லைடு கண்டு ரசித்தது .
எம்ஜிஆர் படம் ''இன்று முதல் '' விளம்பரம் கண்டு ஆனந்தமடைந்தது
.
எம்ஜிஆர் படம் வெளிவரும் திரை அரங்கில் வைக்கப்பட்ட ஸ்டில்ஸ் களை பார்த்து வியந்தது .
எம்ஜிஆர் படம் வெளிவரும் திரை அரங்கில் ஸ்டார் மற்றும் தோரணங்கள் அலங்கரிப்பை கண்டு வியப்படைந்தது.
எம்ஜிஆர் படம் வெளிவரும் நாளில் கூடிய ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்தை கண்டு பரவசமடைந்தது
எம்ஜிஆர் ரசிகர்கள் நடத்திய பிரமாண்ட அலங்கார ஊர்வலத்தை பார்த்து ஆனந்தமடைந்தது .
எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக விநியோகித்த வரவேற்பு நோட்டீஸ் மற்றும் இனிப்புகள் வழங்கிய காட்சிகளை மறக்க முடியாதது .
எம்ஜிஆர் படத்தின் பெட்டியை திரை அரங்கில்; எடுத்து செல்லும்போது ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரங்கள்
இடைவேளை நேரத்தில் எம்ஜிஆர் படத்தின் பாடல் புத்தகத்தை வாங்க ரசிகர்கள் முண்டியடித்த காட்சிகள்
.
எம்ஜிஆர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் திரை அரங்கில் ரசிகர்களின் விசில் மற்றும் கைதட்டல்கள்
எம்ஜிஆர் படம் - சென்சார் காட்சி தொடங்கியதும் துவங்கிய காட்சி முதல்
எம்ஜிஆர் படத்தின் டைட்டில் தொடர்ந்து எம்ஜிஆர் அறிமுக காட்சிகள் , பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் சிறந்த நடிப்பு காட்சிகள்
என்று படம் இறுதி காட்சி வரை ரசிகர்களை மகிழ்வித்த எம்ஜிஆரை பாராட்டி வெளியே சிரித்த முகத்துடன் வெளிவந்தது
படம்
பிரமாதம் என்று வர்ணித்த ரசிகர்களின் உணர்வுகளை மறக்கவே முடியாத நாட்களாகும்......... .vh....
-
"ஒளி விளக்கு" மக்கள் திலகத்தின் 100 வது படம். வானவில்லின் ஏழு வர்ணங்களை இணைத்து. வரும் வர்ண ஜாலங்களை திரையில் ஜொலிக்க செய்த ஜெமினியின் வண்ணக்காவியம்தான் "ஒளிவிளக்கு". ரசிகர்களின் கனவுப்படம் என்று சொன்னால் அது மிகையாகாது.
1968 செப் 20 ந்தேதி தீபாவளிக்கு முந்தைய மாதத்தில் வெளியான ஒரு அற்புதமான ரசனை மிகுந்த காவியம். எம்ஜிஆரின் ஸ்டைலுக்கும் அழகுக்கும் வண்ணமிகு நேர்த்தியான ஆடை வடிவமைப்புக்கும், அலங்காரத்துக்கும்
எத்தனை முறை பார்த்தாலும் இன்னோரு சொர்க்கலோகம் போல கண்ணுக்குள் நிழலாடிக் கொண்டிருக்கும் எழில்மிகு ஓவியம்.
எம்ஜிஆரின். ஸ்டைலோடு கலந்த சுறுசுறுப்பை படத்தில் காணலாம். தீபாவளி ஒரு மாதத்திற்கு முன்பே வந்தது போல தமிழ் நாட்டில் "ஒளிவிளக்கு" திரையிடப்பட்ட திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டது. கிராமத்திலுள்ள மக்கள் அனைவரும் முந்தைய நாளே திரையரங்கின் முன் குவிந்ததால்
ஊரில் ஜனநடமாட்டம் அதிகம் காணப்பட்டது.
தூத்துக்குடியில்
தியேட்டர் வாசலில் டெலிவிஷன் மாடலில் செய்யப்பட்ட பெட்டியில் எம்ஜிஆரின் திரு உருவத்துடன் "ஒளிவிளக்கு" எம்ஜிஆரின் 100 வது
படம் என்ற வாசகத்துடன் கலர் விளக்குகளை சுழல விட்டு எம்ஜிஆர் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தனர் எம்ஜிஆர் மன்றத்தினர். அதை பார்க்க மக்கள் கூட்டம் முண்டியடித்து தியேட்டர் வாசலை நிரப்பி விடுவார்கள்.
"ஒளிவிளக்கு" படத்தின் வால் போஸ்டர் புதுமையான முறையில் கறுப்பு பார்டர் வைத்து மிக உயர்ந்த பேப்பரில் அடித்திருப்பார்கள். அதை எவ்வளவு நேரம் பார்த்தாலும் அலுப்பு தெரியாது. அதை பார்க்க எத்தனை கூட்டம் டிராபிக் ஜாம் ஆகிவிடும் அளவுக்கு. முதல் மூன்று நாள் தியேட்டர் முன்பு டிராபிக் தடை செய்யப்பட்டது.
சிலர் புலம்பிக் கொண்டே செல்வதை பார்த்திருக்கிறேன் சே! இந்த எம்ஜிஆர் படம் போட்டால் இந்த வழியில் வரவே முடியவில்லை.சிவாஜி படம் போட்டா எந்த பிரச்னையும் கிடையாது. இனிமேல் இந்த மாதிரி தியேட்டரில் எம்ஜிஆர் படம் போட அனுமதிக்க கூடாது என்று "பாலகிருஷ்ணா" தியேட்டரை வசை பாடிச் சென்ற அந்த பகுதி மக்களின் கஷ்டம் சிவாஜி ரசிகர்களுக்கு மட்டும் நன்றாகவே புரிந்திருக்கிறது. ஏனென்றால் எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் மக்களுக்கு இப்படி ஒரு கஷ்டம் கொடுத்ததில்லை என்பதை நினைக்கும் போது அவர்களின் சமூக சேவை வெகுஜன பாராட்டுதலுக்கு உரியது.
சென்னையில் 5 தியேட்டரில் வெளியாகி 100 நாட்கள் ஓடாமலேயே 9,28,171.28. ரூ வசூலாக பெற்று சாதனை செய்தது. தமிழகத்திலும் கர்நாடகாவிலும் மொத்தம் 64 தியேட்டரில் வெளியாகி 63 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடிய ஒரே தமிழ் படம் "ஒளிவிளக்கு"தான். இதை நாங்கள் ஒரு நாளும் சொல்லி தம்பட்டம் அடித்ததில்லை. ஆனால் சிவாஜி ரசிகர்கள் சில நாட்களுக்கு முன்
"சிவந்த மண்" 37 தியேட்டரில் 50 நாட்கள் ஓடியதாக விளம்பர பேப்பரை காட்டி இணையத்தில் சவால் விட்டதை பார்த்துதான் இந்த பதிவை நான் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். சிவாஜி ரசிகர்களை கேட்கிறேன், உங்களின் எந்த படமாவது 50 தியேட்டரிலாவது வெளியாகி இருக்கிறதா? இருந்தால் வெளியிடுங்கள். அதன் பிறகு 50 நாளை பற்றி பார்க்கலாம்.
அந்த மாதிரி பிரமாண்ட செயல்களை செய்யக்கூடிய "ஜெமினி" நிறுவனத்தையே
"விளையாட்டு பிள்ளை"யால் மூட வைத்த பெருமை பெற்றவர்களே
இனி ஒரு சாதனை இதைப்போல் கிட்டுமோ?. அரிச்சந்திரா வில் ஒரு வசனம் சிவாஜி பேசுவார் முடி சூடிய மன்னனும் முடிவில் பிடி சாம்பலாவார் என்று. அது அவரை வைத்து படம் எடுத்துதான் என்பதை உணர்ந்தோம்.
நம்ம வடிவேலு பாணியில் சொல்வதானால் அய்யா! அய்யா! "எமனுக்கு எமன்" படம் நடிச்சீங்களே அய்யா! அந்த எமன் யாருன்னு தெரியாம உங்களை வைச்சு படமெடுத்து அழிஞ்சுட்டாங்களே அய்யா! இன்னும் உங்க கண்ணுல படாம நிறைய பேர் தப்பிச்சு இப்ப எங்க கழுத்தை அறுக்கிறானுவளே அய்யா!. நீங்கதான்யா நம்ம ரசிகனுவளை காப்பாத்தணுமய்யா. அவனுவளை அன்றே நீங்க கவனித்திருந்தால் இன்றைக்கு எங்களுக்கு இந்த நிலை வருமா அய்யா? சரி விஷயத்துக்கு வருவோம். இன்று வரை அதிக தியேட்டரில் 100 நாட்கள் ஓடிய சாதனை "மதுரை வீரனு"க்கே. அதேபோல் அதிக தியேட்டரில் 50 நாட்கள் ஓடிய சாதனை "ஒளி விளக்கு" படத்துக்குக்குதான் என்பதை உணருங்கள்.
எல்லா சாதனையும் தன்னலம் கருதாத எங்கள் தலைவனுக்கே எனும்போது மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. இலங்கையில் முதல் வெளியீட்டில் மட்டும் 8 தியேட்டரில் 50 நாட்கள் ஓடியதை நாங்கள் கணக்கில் சேர்க்கவில்லை. அடுத்தடுத்து பலமுறை 50 நாட்களும் 100 நாட்களும் ஓடியதை கணக்கில் சேர்க்கவில்லை. "ஒளிவிளக்கு" Houseful போர்டை பார்த்தே மிரண்டு நம்ப மறுக்கும் நீங்கள் உண்மை என்பது கபசுர குடிநீர் போல மிகவும் கசப்பானது என்பதை உணர்ந்து அதை குடித்து உங்கள் எதிர்ப்பு நோயை தீர்த்துக் கொள்ளுங்கள்.
"ஒளிவிளக்கி"ன் மறு வெளியீட்டு சாதனையை அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது என்பதால் உங்கள் நோய் தீர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்க விழைகிறோம்.........KS.,
-
தலைவரின் 100 வது படம் அதுவும் ஜெமினி நிறுவன படம் என்ற பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்து வெற்றி பெற்ற சிறந்த படம் ! புதுவையில் அக்காலத்தில் நவீனா என்ற திரையரங்கில் படம் வெளிவந்தது ! எங்கள் மன்றத்தின் சார்பாக திரையரங்கின் வெளிமுகப்பு முழுவதும் செஞ்சி கோட்டை போல 50 அடி அகலம் செட் போட்டு அலங்கரித்து மலர் வெளியிட்டு வழக்கம் போல இனிப்புகள் வழங்கி விழாக்கோலம் பூண்டு அமர்கலப்படுத்தினோம் ! மறக்க இயலாத மலரும் நினைவுகள் ! அருமையான பதிவு ! நன்றிகள் பல ! ...spmp.,
-
இந்த காலங்களில் கை கால் உதறுனா ஸ்டைல் என்று சொல்கிறார்கள் அந்த காலங்களில் எங்கள் புரட்சித்தலைவர் படங்களில் ஸ்டைல்கள் அற்புதமாக அழகாக இருக்கும் அதில் "ஒளிவிளக்கு" திரைப்படத்தில் மின்னும் அழகில் புரட்சித்தலைவர் ஸ்டைல்கள் சூப்பர் ஆக இருக்கும் அதை கண்கோடி மக்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இப்பொழுதும், எப்பொழுதும் மகிழ்ச்சி தான்.........அருமை... "ஒளிவிளக்கு" காவியத்தின் அன்றைய சரித்திர சாதனை அளவீடுகள் நுட்பமாக சொன்னீர்கள். அன்று மட்டுமல்ல, இன்றும்...என்றும் இப்படத்தின் டிஜிட்டல் விநியோக உரிமைகள், தொலைக்காட்சி உரிமைகள் வாங்க போட்டா போட்டி நடந்தேறி வருகின்ற முக்கியமான தகவல்கள் நிச்சயம் எடுத்து சொல்ல வேண்டும். முக்கிய விநியோகஸ்தர்கள்(மிக பெரிய அளவில்) மும்பை (பம்பாய்) சென்று வாங்கிவிட பெரும் முயற்சிகளை இன்னும் மேற்கொண்டு வருகின்றனர் என்பதை எல்லோருக்கும் தெரிய படுத்துவோம்..........தஞ்சை கிருஷ்ணா திரை அரங்கில் வெளியானது!
அப்போது நான் தஞ்சை
St. Antony's High school ல்
படித்து கொண்டிருந்தேன்!
அந்த
" தைரியமாக சொல் நீ மனிதன் தானா" பாடலும்
5 MGR களின் ஸ்டைலும் , வாவ்!
நான் பள்ளி நாட்களில் பார்த்து ரசித்து பரவசமாகி, நண்பர்களிடம் பகிர்ந்து மகிழ்ந்த நாட்கள் இன்னமும் நினைவில் பசுமைமாறாமல் உள்ளன!.........
-
நடிகை பேரரசு என்ற எம்ஜிஆரின் ஆவலைத் தூண்டும் அன்பருக்கு வணக்கம் இந்தப் படம் ரிலீஸானபோது அந்த சினிமா தியேட்டர் திருப்பூர் உள்ள டைமண்ட் தியேட்டர் என்ற சிறப்பு பெற்ற திரையரங்கம் அந்த தியேட்டரில் ஓனர் தோள் மேல் கை வைத்து விட்டால் படம் பார்த்துவிடலாம் நாங்கள் போனது 10:00 10 மணிக்கு போய் இரண்டு மணி டிக்கெட் கிடைக்கவில்லை இரண்டு மணி டிக்கெட் முடிந்த பத்து மணி டிக்கெட் கிடைக்கவில்லை திரும்ப ஒருமுறை டிக்கெட் மட்டுமே என்னை தொட முடிந்த அவர் நாள் ஆகையால் 32 ஷோ முடிந்து மூன்றாவது பாட்டு வந்த அந்த நிலையில் அந்த தியேட்டரில் மதிப்பில் பைசா முடிந்து என்று நினைக்கிறேன் அஞ்சனா 31 காசுகள் கொடுத்து அந்தத் திரைப்படம் பார்த்த ஞாபகம் எனக்கும் இன்னும் உள்ளது ஒன்பது வயதில் அந்த படத்தை திரையிட்டார் அப்போது முதல் இன்று வரை அந்த தியேட்டருக்கு என்று திருப்பூரில் நல்ல மதிப்பும் இன்றும் உள்ளது ஆகையால் நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை உண்மை என்று சொல்லி வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் வணக்கம் ஐயா... 1984ல் மறு வெளியீட்டில் சென்னையில் திரையிடப்பட்ட அத்தனை தியேட்டரிலும் இரண்டு வாரம் ஹவுஸ் புல்லாக ஓடியது. அப்போது சென்னையில் புயல் கனமழை காரணமாக அண்ணா சாலையில் அத்தனை திரையரங்கிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் பாரகன் திரையரங்கில் கூடிய கூட்டம் காரணமாக ஒளிவிளக்கு படம் மட்டுமே திரையிடப்பட்டது என்பது கூடுதல் தகவல்.........
-
வாத்யாருக்கு வாத்யார்!
---------------------------------------
எம்.ஜி.ஆரும் கண்ணதாசனும் இன்றையப் பதிவை அலங்கரிக்கிறார்கள்!
"நாடோடி மன்னன்!"
எம்.ஜி.ஆரின் கை வண்ணத்தால் தமிழ் திரையுலகம் கண்ட பிரம்மாண்ட வளர்ச்சி!
இந்தப் படத்தைச் சார்ந்த சுவையான தகவல்களைச் சொல்லுமாறு என்னிடம் கேட்ட ஜெயசுதாவுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!
இந்தப் படத்துக்கு முதலில் கண்ணதாசனைத் தான் வசனம் எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர்!
உதிரம் சிந்தி நீங்கள் உருவாக்குவீர்கள்! நானோ
உட்கார்ந்த இடத்தில் முழுப் படத்துக்குமான வசனங்களையும் எழுதித் தர இயலாத அளவுக்கு எனக்குப் பணிச் சுமை! ரவீந்திரனை வைத்தே வசனம் எழுதிக் கொள்ளுங்களேன் என்று கவிஞர் கேட்டுக் கொண்டதற்கு ஒப்புக் கொண்ட எம்.ஜி.ஆர்,,கூடவே கவிஞருக்கு ஒரு அன்புக் கட்டளையிட்டார்!
முக்கியமான பதினைந்து இடங்களை நான் குறித்து வைக்கிறேன். அந்த இடங்களில் மட்டுமாவது நீங்கள் தான் வசனங்களை எழுத வேண்டும்!!
கவிஞர் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து--
கவிஞர்--ரவீந்திரன் இருவராலும் வசனம் எழுதப்ப்பட்டது!
கவிஞரிடம் இருந்த ஒரு பழக்கம் அன்றையத் திரையுலகத்தில் வெகுப் பிரசித்தம்!
அது??
பாடல் எழுத எந்தக் கம்பெனிக்கும் அவர் குறிப்பிட்ட நேரத்தில் சென்றதே கிடையாது! அதாவது--
நேரம் தவறிச் செல்வதையே அவர்-
தவறாமல் கொண்டிருந்தார்!
அன்று,,எம்.ஜி.ஆர்,,கவிஞரிடம் சொல்கிறார்--
ஆண்டவனே,, நாளைக்கு பாடல் கம்போஸிங்குக்கு நேரம் தவறாமல் வந்துடுங்க!
அந்த விஷயத்துல தான் உங்கக் கிட்ட எனக்கு பயமே??
நாளைக்கு எட்டு மணிக்குத் தானே கம்போஸிங்? நான் கரெக்ட்டா 7.50க்கு இருப்பேன்.போதுமா??
கவிஞர் உறுதியுடன் சொல்கிறார்--
மறு நாள்--
எட்டாயிற்று,,ஒன்பதாயிற்று,,பத்தும் ஆயிற்று--
கவிஞர் தம் கொள்கையை விட்டுக் கொடுப்பாரா என்ன??
பத்தே முக்காலுக்கு வேக வேகமாக வருகிறார்--
எம்.ஜி.ஆர்,,கவிஞரை வரவேற்கிறார்--
வாங்க ஆண்டவனே,,சொன்ன நேரத்துக்கு வந்துட்டீங்களே??
அசட்டு சிரிப்புடன் எம்.ஜி.ஆரின் குத்தலை வாங்கிக் கொள்கிறார் கவிஞர்!
ஆண்டவனே,,இவ்வளவு நேரமா வெயிட் பண்ண நேரத்தை வீணாக்க வேணாமேன்னு,,நம்மப் பட்டுக்கோட்டையார் கிட்டே ஒரு பாட்டு எழுதி வாங்கினேன். எங்கயாவது திருத்த வேண்டியிருக்கான்னு பாருங்க??
அதாவது--
பதிவின் தலைப்பு?
தம்பி பட்டுக்கோட்டையோட தமிழை நான் திருத்தறதா?? அதை விட அவரையும் அவர் தமிழையும் வேற எப்படியும் அவமானப்படுத்த முடியாது??
மறுக்கின்ற கவிஞரிடத்தில் தான் எத்தனைப் பெருந்தன்மை?
எம்.ஜி.ஆரும் விடுவதாய் இல்லை--
எனக்காகக் கொஞ்சம் பார்த்துடுங்களேன்??
கவிஞரும் அந்தப் பாடல் வரிகளில் விழியை ஓட விடுகிறார்!
ஆம்! தூங்காதே தம்பி தூங்காதே பாடல் தான் அது!
எம்.ஜி.ஆர் சுட்டிக் காட்டிய இடத்தில் படித்தக் கவிஞர்,,இதுக்கு லேட்டா வந்த என் கன்னத்துலே நீங்க அறைஞ்சிருக்கலாமே என சிரித்துக் கொண்டே கூற--குழந்தையைப் போல் குலுங்கிச் சிரிக்கிறார் எம்.ஜி.ஆர்--
எம்.ஜி.ஆர்,,கவிஞரிடம் காட்டிய அந்த வரிகள்--
போர்ப் படை தனில் தூங்கியவன்
வெற்றி இழந்தான்--உயர்ப்
பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்-கொண்டக்
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்?
இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்--பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா!!
என்ன தோழமைகளே??
ரசிக்கும்படி தானே இருக்கிறது???!!!.........
-
தான் இறக்கும் சமயத்தில் எம் .ஜி .ஆர் .,அவர்களுக்கு மட்டும் தகவல் சொல்லி அனுப்புங்கள் என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொல்லியதாக ஒரு பத்திரிகையில் படித்தேன்.....
நீங்கள் அவரை எப்போது கடைசியாக சந்தித்தீர்கள் என்று
துங்கபத்ரா அணைக்கட்டு பகுதியில் இருந்து கே.என்.காடுமுத்து என்றவர் கேட்ட கேள்விக்கு தலைவர் சமநீதி என்ற இதழில் அவர் அளித்த பதில்.
ஆம் நெஞ்சம் பதறுகிறது...அவரை நான் கடைசியாக பார்த்தது நான் கால் முறிந்து சிகிட்சையில் மருத்துவமனையில் இருந்த போது என்கிறார் தலைவர்.
தலைவர்கள் நேரத்துக்கு ஏற்ப காலத்துக்கு வேண்டி உருவாகலாம்...ஆனால் உண்மை தலைவர்களே காலம் கடந்தும் மக்கள் சான்றோர்கள் நினைவில் இருப்பார்கள் என்பதற்கு...இந்த நிகழ்வே பெரும் சாட்சி ஆக அமைகிறது.
வாழ்க தலைவர் புகழ்.
வாழ்க பட்டுக்கோட்டையார் நினைவுகள்...நன்றி..........
-
அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் தமிழக முதல்வர் திரு.எம்.ஜி.ஆர், தனது லண்டன் அனுபவங்களை அழகாக எடுத் துரைக்கின்றார்
லண்டன் கேள்வி-பதில்
கேள்வி : அமெரிக்கா செல்லவிருக்கும் நீங்கள் அங்கு அவதாவித்து தமிழகத்தில் மாறுதல் உண்டாக்க இருப்பவை எவையோ?
பதில் : மெக்ஸிக்கோ சென்று கரும்புச்சக்கையில் காகிதம் உற்பத்தி - அதுவும் பத்திரிகைகளுக்கான காகிதத்தயாரிப்பு - பற்றிய இலகுவான வழி முறைகளைக் கண்டறிந்து அதைத் தமிழக மக்கள் பயன்படும் படியாக வழி கோலுவேன். கூடவே அமெரிக்க ஐக்கிய ராஜ்ஜியத்தில் மூன்று வார காலம் தங்கியிருந்து அங்கு காவல்துறை ஆற்றும் சேவையைக் கவனிப்பதுடன் , காவல்த்துறையினர் கண்ணிய மாகக் கடமையாற்றும் விதங்களையும் தெரிந்துகொள்வேன் . பின்னர் ஜப்பான் சென்று அங்கு குடிசைக் கைத்தொழில் வளர்ச்சிபற்றி நோடியாகவே காண்பதுடன் தமிழக மக்களும் அவ்விதம் செயல்படுத்தலைத் தொடங்க ஏற்ற நடவடிக் கைகளை எடுப்பேன். சிங்கப்பூர் சென்று இருநாட்கள் தங்கிவிட்டு, டிசம்பர் முதல்வாரத்தில் எனது பயணத்தைப் பூர்த்திசெய்வேன்.
கேள்வி : தமிழகத்தில் தர்மத்தின் ஆட்சி நிலவுவதாகப் பரவலாக எங்கும் பேசப்படும் அதே வேளையில் அண்மையில் நடைபெற்ற உறர்த்தாலைத் தொடர்ந்து கலைஞரின் வீடு சேதமுற்றதே?
பதில் : தீங்கு எங்கு நடந்தாலும் அது துடைப்பது தான் அரசின் வேலை . எனவே சம்பந்தப்பட்டவர்கள் எந்தக் கட்சியாலும் விசாரணைக்குத் தப்ப மாட்டார்.
கேள்வி : அப்படியாயின் சக்காரியா கமிஷனில் குற்றம் சாட்டப்பட்ட எத்தனை யோபேர் இப்பொழுது அகில இந்திய அ.தி.மு.கவில் இருக்கின்றார்கனே.அவர்க எனைவரும் துய்மையடைந்துள்ளார்களா?
பதில் : அங்குதான் நீங்கள் தவறிழைக்கின்றீர்கள், குற்றம் நிருபிக்கப்படும் பொழுது அவர்களும் தண்டனைக்குத் தவறமாட்டார்கள், ஊழல்கள், வஞ்சங்கள் போன்றவற்றை விரட்டியடிப்பது தான் எமது இலட்சியம். நீதிதேவதையின் தண்டனை அவர்களை விட்டுவைக்கும் என்பதல்ல.
கேள்வி : தங்களது மந்திரிசபையில் சுதெலாக வழக்கறிஞர்களே காணப்பசென்றார்களே? ஏனோ?
பதில் : திறமைக்கு முதலிடம் கொடுப்போம். முன்பின் தெரியாத ஒன்றைப்பற்றித் தீவிரமாக ஆராய்ந்து வழக்காடக்கடிய அவர்கள் நாட்டுக்கு நன்மையான திட்டங்களைக்கூடச் செம்மையாக ஆராய்ந்து செயல்பட மாட்டார்கள் என்பதற்கு என்ன சான்று.
கேள்வி : தென்மா நில முதல்வர்கள் அண்மையில் ஒன்று கடினீர்களே? வெற்றியளித்ததா?
பதில் : இந்தித் திணரிப்பு முற்றாக நிறுத்தப்படவேண்டும் என்பதில் அனைவருமே ஏகோபித்த ஒற்றுமையான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தனர். எனவே அது வெற்றியளித்தது. தவிர நதிப்பங்கீடு தொடர்பாகவும் அரிசிக்கான உத்தரவாத விவேயை நிர்ணயிப்பது பற்றியும் விரைவில் மீண்டும் கூடி தீர்மானமெடுப்போம்.
கேள்வி: மத்தியில் ஜனதா அரசை ஆதரிக்கும் அ.இ.அ.தி.மு. க . இடைத் தேர்தலில் இந்திராகாந்தியை ஆதரிக்கின்றதே?
பதில் : மத்தியில் எந்த ஆட்சி எனினும் நல்லவை செய்யும் பொழுது அதற்கு ஆதரவு கொடுக்கவும், தீமையை எதிர்க்கவும் அகில இந்தியா அ.தி.மு.க . தயங்காது - ஆனால் இந்திராகாந்தி கண்டிப்பாகப் பாராளுமன்றத்தில் இருக்கவேண்டியவர் அதனால் ஆதியாரித்தோம்.
கேள்வி "இந்தியை முழு மாநிலங்களுக்கும் திணிப்பதை ஏற்க மறுக்கும் தங்களுக்கு, ஈழத்தில் பரவலாக சிங்களம் புகுத்தப்பவெதை வேற்க முடிகின்றதா?
பதில் " முதலாவதை எதிர்த்து நாம் போராடுகின்றோம், பின்னதை எதிர்த்து ஈழத்தவர்கள் போராடுகின்றார்கள், தவிர ஈழத்தவர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்தோ அல்லது நாம் சிங்களத் திணிப்பை எதிர்த்தோ சுக்குரலிடுவதில் பயனில்ல.
கேள்வி : பங்களாதேஷிடம் பிரிவினைப் போரின் போது இந்தியாவிலிருந்து உதவியது போல, தமிழ் ஈழப் போராட்டத்துக்குத் தமிழகத்தின் பணியென்ன?
பதில் : தமிழர் எங்கிருந்தாலும், அவதியுறும் பொழுது உதவுவதற்கு , தமிழர்கள் எங்கிருந்தாலும் தவறமாட்டார்கள். ஆனால் இலங்கை ஜனாதிபதி திரு. ஜே.ஆர். ஜெயவர்த்தன அண்மையில் சந்தித்தபோது இலங்கைத் தமிழரின் வளமானவாழ்வுக்குத் தான் வழிகோவியதாகத் தெரிவித்ததுடன் தமிழ் அமைச்சர்களே தனது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதால் பிரிவினைவாதிகளால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரமில்லை என்றார்.
கேள்வி :இலங்கைச் சிந்தளவர் மத்தியிடம் தமிழர் மத்தியிடம் அமோக செல்வாக்குப் பெற்றுள்ள நீங்கள், பிரச்சனைகளுக்கு மத்தியஸ்தம் வகித்து தீர்வுகாண வழிசெய்ய முடியாதா?
பதில் : முதலாவது, வேறு நாடொன்றின் பிரச்சனை அது! அதில் எனக்கு வேலையில்லே! இரண்டாவது மத்தியஸ்தலம் எனப்பவெது இரு சாரருக்கும் பொதுவான நடுநிலை ஆனால் எங்கே ஒரு தரப்பினர் மத்தியஸ்தலம் வகிப்பவர் மற்றொருவர் எண்ணுகின்றாரோ , அப்பொழுதே சரியான தீர்ப்பும் கிடைக்குமென அவர் எதிர் பார்க்கமாட்டார். எனவே இந்த நிலையில் என்னால் செய்யக்கூடியது எதுவுமேயில்லை.
கேள்வி : அரசியல் பழுவிற்கும் சினிமா வாழ்வுக்கும் உள்ள ஒற்றுமை பற்றி?
பதில் : இரண்டுமே மக்களுடன் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளவை .
கேள்வி : திரும்பியும் நடிக்கும் ஆர்வம் ..... ? சமயம் வரும்பொழுது நடிக்கத் தவறமாட்டேன்!
அண்ணா நாமம் வாழ்க! எனக்கூறியவாறே , அடுத்தவருடன் தனது அலுவல்களைத் தொடருகின்றார் முதல்வர்.........சை. பா.,
-
"ஒளிவிளக்கு " காவியம் திரைப்படத்தில் மக்கள் திலகம் ஸ்டைலில் கலக்கியிருப்பார். அதற்கு தனிப் பதிவு எழுதலாம். டைட்டிலில் ப்ரீசிங் ஷாட் இந்த படத்தில்தான் முதலில் காட்டினார்கள். டைட்டிலில் ‘ஒளிவிளக்கு’ பெயர் போடும்போது மக்கள் திலகத்தின் ஸ்டைல் போஸ் ஒன்று போதும். தியேட்டரே இரண்டுபடும். ட்ரெஸ் Red & Red...(இவருக்கு மட்டுமே எந்த வண்ணமும் அப்படியே பொருந்தும்...இறைவன் ஆசிகளை பெற்ற மஹான்)...
ஒளிவிளக்கு திரைப்படம் வசூலைக் குவித்து 100 நாட்கள் கண்ட வெற்றிப்படம். என்றாலும் சென்னை பிராட்வே தியேட்டரில் 98 நாட்கள் ஓடி 2 நாட்களில் 100 நாள் கொண்டாட்டத்தை தவறவிட்டது. பிராட்வேயில் 14வது வார அதிகாரபூர்வ விளம்பரம் நம்மிடம் உள்ளது. வெளியிட்டும் இருக்கிறோம். 2 நாள் தானே யார் கண்டுகொள்ளப் போகிறார்கள் என்று சென்னையிலும் 100 நாள் ஓடியது என்று நாம் சொன்னது இல்லை. மக்கள் திலகத்தின் படத்தை அதுவும் 100 வது படத்தை சென்னையில் 98 நாளில் எடுக்கிறார்கள். இன்னும் 2 நாட்கள் ஓட்டமுடியாதா? ஒரு கவுரவத்துக்காக சென்னையில் 100 நாள் ஓடவைக்க மக்கள் திலகம் தரப்பில் எந்த வற்புறுத்தலும் இல்லை என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். வடசென்னையில் பிராட்வேயுடன் அகஸ்தியா தியேட்டரிலும் ஒளிவிளக்கு வெளியானது. சென்னையில் 100 நாள் ஓடாவிட்டாலும் மக்கள் திலகத்தின் படங்கள் தியேட்டர்களில் மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடியவையே தவிர, மற்ற நடிகரின் படங்கள் போல சொந்தத் தியேட்டரில் ஓட்டி தங்களுக்கு தாங்களே ‘சாந்தி’ தேடியது இல்லை. குத்தகைத் தியேட்டர்களிலும் ஓட்டப்பட்டவை இல்லை. மொத்தமாக டிக்கெட்டை வாங்கி நாம் கிழித்துப் போடவும் மாட்டோம்.
தமிழகத்திலும் கர்நாடகாவிலும் 64 தியேட்டர்களில் வெளியாகி 63 தியேட்டர்களில் 50 நாள் கொண்டாடிய ஒரே தமிழ்படம் ஒளிவிளக்கு. இதற்கு இன்னொரு சிறப்பும் உள்ளது. கடல் கடந்தும் ஒளிவிளக்கு சாதனை படைத்துள்ளது. இலங்கையில் யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரிலும் கொழும்பு ஜெயின்ஸ்தான் தியேட்டரிலும் முதல் வெளியீட்டில் 160 நாட்கள் ஓடி நூலிழையில் வெள்ளிவிழாவை தவறவிட்டிருக்கிறது. (முதல் வெளியீட்டில் 150வது நாள் விளம்பரம் பதிவிட்டுள்ளேன்) வெள்ளிவிழாவை தவறவிட்டாலும் அதற்கு ஈடு செய்வதுபோல இதுவரை வெளிநாட்டில் இன்றுவரை எந்த தமிழ்ப்படமும் செய்யாத மற்றொரு சாதனையை ஒளிவிளக்கு செய்துள்ளது.
அதே யாழ்ப்பாணம் ராஜாவில் 1979ம் ஆண்டு மீண்டும் ஒளிவிளக்கு வெளியாகி அப்போதும் 100 நாள் ஓடியிருக்கிறது. அதுவும் தினசரி 4 காட்சிகளாக. இது வெளிநாட்டில் எந்த தமிழ்ப்படமும் மறுவெளியீட்டில் செய்யாத தகர்க்க முடியாத சாதனை. 1979-ல் ஒளிவிளக்கு 100 நாள் ஓடியபோது அப்போது நண்பருடன் படத்தை பார்த்ததை வானொலி அறிவிப்பாளர் யாழ் சுதாகர் என்பவரும் கூறியிருக்கிறார். மறுவெளியீட்டில் யாழ்ப்பாணம் ராஜாவில் ஒளிவிளக்கு 100 நாள் ஓடிய விளம்பரத்தையும் பதிவிடுகிறேன். அதுவும் சாதாரண ஓட்டம் இல்லை. 100 நாளில் 3 லட்சத்து 51, 403 ரூபாய் 75 காசுகள் வசூலாகி உள்ளது. 1979-ம் ஆண்டில் ஒரு மறுவெளியீட்டு படத்துக்கு இது பெரிய வசூல். அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் இந்தத் தொகை கூறப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் இலங்கையில் வெளியான சிவாஜி கணேசனின் கவுரவம், பாட்டும் பரதமும், மன்னவன் வந்தானடி போன்ற படங்கள் முதல் வெளியீட்டிலேயே கூட இந்த அளவு வசூல் பெறவில்லை என்பது முக்கியமானது.
இலங்கை யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் 1979-ல் மறுவெளியீட்டில் ஒளிவிளக்கு 100 நாள் கொண்டாடியதற்கான அதிகாரபூர்வ விளம்பரம். இந்த விளம்பரத்தில் 100 நாளில் மூன்றரை லட்சத்துக்கு மேல் வசூல் செய்த விவரம் அதிகாரபூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒளிவிளக்கு விளம்பரத்துக்கு மேலே இன்னொரு அதிசயம். யாழ்ப்பாணம் ராணி தியேட்டரில் தினசரி 4 காட்சிகளாக உலகம் சுற்றும் வாலிபன் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த விளம்பரத்தில் மேலே பாருங்கள். 1979-ல் 5வது வாரமாக வெளுத்துக் கட்டியிருக்கிறார் வாலிபன்.
இதில் ஒளிவிளக்கு விளம்பரத்துக்கு கீழே கவனியுங்கள். 100வது நாளன்று இன்று கடைசி நாள் என்று குறிப்பிட்டு அதற்கும் கீழே ‘நாளை முதல் கொடுத்து வைத்தவள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மறுவெளியீட்டில் ஒளிவிளக்கு அள்ளிக் கொடுத்ததால் அடுத்ததாக ஒளிவிளக்கு படம் முடிந்த அடுத்த நாளில் இருந்து மக்கள் திலகத்தின் கொடுத்து வைத்தவள் படத்தை யாழ்ப்பாணம் ராஜாவில் திரையிட்டுள்ளனர். இந்தப் பெருமை எல்லாம் எந்த நடிகரின் படத்துக்கு கிடைக்கும். வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகத்துக்கு ‘நிருத்ய சக்கரவர்த்தி’ என்ற பட்டத்தையும் வழங்கி இலங்கை மக்கள் மகிழ்ந்தனர். இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் சாதனைச் சக்கரவர்த்தி மக்கள் திலகம் ஒருவரே!......... Swamy...
-
1985-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், என்னுடைய வீட்டிற்கு வந்தார். ஆர்.ஆர்.பிக்சர்ஸ், இயக்குனர் டி.ஆர்.ராமண்ணாவின் சொந்த நிறுவனமாகும். இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா வேறு யாரும் அல்ல. டி.ஆர்.ராஜகுமாரியின் உடன்பிறந்த தம்பி. பல வித்தியாசமான படங்களையும், வெற்றிப் படங்களையும் இயக்கியவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரையும் இணைத்து ‘கூண்டுக்கிளி’ என்ற படத்தை எடுத்தவர். எனவே அவருடைய கம்பெனியில் இருந்து வந்தவரை அதிக ஆவலுடன் வரவேற்றேன்.
வந்தவர், ‘அண்ணா.. இலங்கேஸ்வரன் என்னும் மனோகர் நடத்தும் நாடகத்தைப் திரைப்படமாக எடுக்க இருக்கிறார். அதில் நீங்கள் ராவணனாக நடிக்க வேண்டும். விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்; நான் போய் அண்ணாவிடம் சொல்லுகிறேன். பிறகு நீங்கள் அலுவலகத்திற்கு வந்து, மற்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் பேசிக் கொள்ளலாம்’ என்றார். (ராமண்ணாவை அண்ணா என்று தான் சொல்லுவார்கள்)
‘கூண்டுக்கிளி’ படத்தில் இருந்து ராமண்ணா சார் இயக்கிய பெரும்பாலான படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நெடுநாளைய விருப்பம். கண்டிப்பாக நடிக்கிறேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும்’ என்றேன்.
‘என்ன உதவி செய்யவேண்டும்’ என்றார், வந்தவர்.
‘நான் டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவை பார்க்க வேண்டும், அவரோடு பேச வேண்டும்’ என்று கூறினேன்.
நான் சொன்னதைக் கேட்டவுடன் அவர் சிரித்துவிட்டார். ‘இது ஒரு பெரிய விஷயமே இல்லை; சீக்கிரம் ஏற்பாடு செய்கிறேன்’ என்றார்.
‘இலங்கேஸ்வரன்’ படப்பிடிப்பு நடக்கும் நாட்களிலெல்லாம், நான் அவரிடம் கேட்கும் கேள்வி ‘எப்பொழுது ராஜகுமாரி அம்மாவைப் பார்ப்பது?’ என்பது தான். படப்பிடிப்பின் கடைசிநாள் வந்தது.
‘இன்று அம்மாவைப் பார்க்கலாம்’ என்றார்.
எனக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. ஷூட்டிங் முடிந்து மேக்கப்பையெல்லாம் கலைத்து விட்டு, என்னுடைய காரில் எழும்பூரில் உள்ள ராஜகுமாரி அம்மாவின் வீட்டிற்குச் சென்றேன். வரவேற்பு அறையில் உட்காரச் சொன்னார்கள். நான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகில் மேல் தளத்திலிருந்து கீழே வருவதற்காக சுழல் மாடிப் படிக்கட்டுகள் இருந்தன.
ராஜகுமாரி அம்மா இப்பொழுது எப்படி இருப்பார்? என்கிற கற்பனையில் நான் ஆவலோடு உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரத்திற்குள்ளாக ஒரு அம்மா மாடிப் படிக்கட்டுகளில் இருந்து கீழே இறங்கி வந்தார். என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தார்.
‘என்ன தம்பி, எப்படி இருக்கிறாய்?’ என்றார்.
நான் ‘நன்றாக இருக்கிறேன் அம்மா’ என்றேன்.
பதிலுக்கு நானும் நலம் விசாரித்தேன். ‘எனக்கென்ன தம்பி! என்னை ராமண்ணா தம்பி நன்றாகவே வைத்திருக்கிறது’ என்றார்.
நான் அன்று அவரைப் பார்க்கும் பொழுது அவருக்கு வயது 63. என்னால் அவரை சிறிதுகூட அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு கிராமத்தில் வேலை பார்க்கும் பள்ளி ஆசிரியை போல மிகவும் சாதாரணமாக இருந்தார். நான் அவரிடம் ஆசி வாங்கினேன்.
பிறகு ராஜகுமாரி அம்மா என்னிடம் பேசினார். ‘உன்னுடைய முதல் படத்தை நான் பார்த்தேன் தம்பி’ என்றார்.
‘அப்படியாம்மா?’ என்று கேட்டேன்.
‘நான் படத்தைப் பார்த்து விட்டு ராமண்ணா தம்பியிடம் “இந்த பையன் கணேசன் மாதிரி இருக்கிறான். நன்றாக நடிக்கிறான்” என்று சொன்னேன் தம்பி’ என்றார்.
கூண்டுக்கிளி படத்தில் சிவாஜி அண்ணனை நடிக்க வைத்த குடும்பத்தில் உள்ளவர்களின் வாயால் நான் பார்ப்பதற்கு சிவாஜி அண்ணன் மாதிரி இருக்கிறேன் என்று சொன்னது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.
சாண்டோ சின்னப்பதேவர், குலேபகாவலி படத்தில் எம்.ஜி.ஆருடன் சண்டைக் காட்சி ஒன்றில் நடித்தது, தயாரிப்பாளர் பூர்ண சுந்தர்ராவ், டி.ஆர்.ராமண்ணாவின் ஆரம்பகால படங்களின் செங்கல்பட்டு விநியோகத்தை வாங்க வந்தது போன்ற பழைய கால விஷயங்களையெல்லாம் என்னிடம் கூறினார்.
பிறகு என்னைப் பார்த்து, ‘ஏன் தம்பி, என்னைப் பார்க்க அவ்வளவு முயற்சி செய்தாய்? என் மீது ஏன் உனக்கு அவ்வளவு பிரியம். எனக்கு ஒன்றுமே புரியவில்லை’ என்றார்.
‘நான் சிறுபிள்ளையாக இருக்கும்பொழுது, உங்களுடைய படங்களைப் பார்த்தவர்கள், உங்களை ஒருநாளாவது பார்த்துப் பேச வேண்டும் என்பதை வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டிருந்தனர் என்பது எனக்குத் தெரியும். அவர்களெல்லாம் பார்க்க முடியாத உங்களை, நான் பார்த்து விடவேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு, உங்களை எளிதாகப் பார்த்துவிடலாம் என்று நம்பியிருந்தேன். நீங்கள் யாரையும் பார்ப்பதில்லை. எந்த விழாக்களிலும் கலந்துகொள்வதில்லை என்பது பிறகுதான் தெரிந்தது. சமீபத்தில் ராமண்ணா சார் என்னை அவருடைய படத்தில் ஒப்பந்தம் செய்தபோது, உங்களைப் பார்க்க வேண்டுமென்ற வேண்டுகோளை வைத்தேன். அதனால் தான் உங்களைப் பார்க்கின்ற பாக்கியம் எனக்குக் கிடைத்தது’ என்றேன்.
சிற்றுண்டி கொடுத்தார்கள். அதை சாப்பிட்டு விட்டு விடைபெற்றேன்.
இந்த இனிப்பான செய்தியை, டி.ஆர்.ராஜகுமாரியின் உண்மையான ரசிகர்களிடம் சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும் என்று கருதி, யாரிடம் முதலில் சொல்லுவது என்று யோசனை செய்தேன். அவர்களில் யாருமே அன்று உயிருடன் இல்லை. அதனால் நான் அடைந்த வெற்றியையும் மகிழ்ச்சியையும், நானே உள்ளூர கொண்டாடிக் கொண்டேன்.
சில ஆண்டுகள் கழித்து ராமண்ணா சார் வீட்டுத் திருமணம், விஜயா ஷேஷ மகாலில் நடைபெற்றது. நான் திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கும் டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவை சந்தித்தேன். அப்போது அவருக்கு 73 வயது இருக்கும்.
சினிமா வாய்ப்பு அவரது வீடுதேடி வந்தது. ராஜாயீ என்பவர் டி.ஆர்.ராஜகுமாரி ஆனார். அவர் வாய்ப்பு தேடி எந்த படக் கம்பெனியும் ஏறி இறங்கவில்லை. நாடகங்களில் நடிக்கவில்லை. எந்தவித அவமானமும் எங்கும் அடையவில்லை. திருமணம் தான் அவரைத் தேடி வரவில்லை. ஆனால் செல்வமும், செல்வாக்கும் அதிகமாகவே இருந்தது.
ஏழு வயது மூத்தவரான எம்.ஜி.ஆர். கூட, டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவை மரியாதையின் காரணமாக அக்கா என்றுதான் கடைசி வரை அழைத்திருக்கிறார். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருக்கும்பொழுது, 24 மணி நேரத்தில், எந்த நேரத்தில் ராஜகுமாரி அம்மா அவரைத் தொடர்பு கொண்டாலும் எம்.ஜி.ஆர். பேசுவார். அந்த அளவுக்கு செல்வாக்குடன் கடைசி வரை வாழ்ந்தார். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த சமயம், ஒரு நாள் இரவு 10 மணிக்கு ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு போன் செய்தார், டி.ஆர்.ராஜகுமாரி. அப்போது எம்.ஜி.ஆர். மாம்பலத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்தார். அதனால் உதவியாளர் தான் போனை எடுத்தார். வழக்கம் போல் எம்.ஜி.ஆர். தான் போனை எடுப்பார் என்று எண்ணிய டி.ஆர்.ராஜகுமாரி, வேறு ஒருவரது குரல் ஒலித்ததும், ‘ராமச்சந்திரன் தம்பி இருக்கிறாரா?’ என்று கேட்டிருக்கிறார்.
எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லி ஒருவர் அழைப்பதைக் கேட்டதும், அதிர்ச்சியடைந்த அந்த உதவியாளர், ‘நீங்கள் யாரம்மா?’ என்று கேட்க, ‘தம்பி இல்லையா?’ என்றிருக்கிறார் டி.ஆர்.ராஜகுமாரி.
அதற்கு உதவியாளர், ‘முதல்-அமைச்சர் வீட்டில் இல்லை. எப்போது வருவார் என்பதும் எங்களுக்குத் தெரியாது. அவர் வந்ததும் சொல்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறார்.
‘அப்படியாப்பா? ராமச்சந்திரன் தம்பி வந்ததும், ராஜகுமாரி அக்கா போன் செய்ததாக மட்டும் சொல்லுங்கள்’ என்று கூறி போனை வைத்து விட்டார்.
எம்.ஜி.ஆர். இரவு 1 மணி அளவில் வீட்டிற்கு வந்ததும், உதவியாளர் மூலம் டி.ஆர்.ராஜகுமாரி போன் செய்ததை அறிந்து, உடனடியாக அவரை தொடர்பு கொண்டிருக்கிறார்.
‘என்ன அக்கா! இந்த நேரத்தில் போன் செய்திருக்கிறீர்கள்? எதுவும் முக்கியமான விஷயமா? பிரச்சினையா?’ என்று கேட்டிருக்கிறார்.
‘தம்பி! நான் இப்பொழுது குடியிருக்கும் என்னுடைய வீட்டை, தம்பி ராமண்ணாவிற்கு உதவி செய்வதற்காக, ஒரு பெரிய தொகைக்கு அடமானம் வைத்திருந்தேன். அந்த தொகைக்கு சில மாதங்களாக சரியாக வட்டி கூட கட்ட முடியவில்லை. என்னுடைய வீடு என்னை விட்டு போய் விடும் போல் தெரிகிறது. பெரிதும் மனக்கவலையாக உள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் உன்னைத் தவிர எனக்கு வேறு யாரும் நினைவிற்கு வரவில்லை. அதனால் தான் தம்பி உனக்குப் போன் செய்தேன்’ என்று டி.ஆர்.ராஜகுமாரி வருத்தத்துடன் பேசியுள்ளார்.
அதற்கு எம்.ஜி.ஆர். ‘அக்கா! அந்த வீடு எப்போதும் உங்களிடம் தான் இருக்கும். அதற்கு நான் பொறுப்பு. இப்போது நிம்மதியாகப் போய் தூங்குங்கள்’ என்று கூறியிருக்கிறார்.
மறுநாள் காலை 6 மணிக்கு பணம் கொடுத்தவருக்கு போன் செய்து, சம்பிரதாயமாக சில வார்த்தைகள் பேசிவிட்டு, ‘அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். இன்று காலை 9 மணிக்கு ராமாபுரம் வீட்டிற்கு காலை உணவு சாப்பிட வரமுடியுமா? வேறு எதுவும் உங்களுக்கு முக்கியமான வேலை இருக்கிறதா? அப்படி வருவதாக இருந்தால், டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவின் வீட்டு அடமானப் பத்திரத்தையும் எடுத்துக் கொண்டு வாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.
அவர் தமிழகத்தில் உள்ள தொழில் அதிபர்களில் ஒருவர். அதிக செல்வாக்கு உள்ளவர். சமூக அங்கீகாரமும், ஆன்மிகத்தில் நாட்டமும் கொண்டவரான அவர், எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட சரியான நேரத்திற்கு ராமாபுரத்தில் இருந்தார். இருவரும் பேசியபடியே காலை உணவை சாப்பிட்டிருக்கிறார்கள். பின்னர் புறப்படும் நேரத்தில் தொழிலதிபர், தன்னிடம் இருந்த பத்திரத்தை எம்.ஜி.ஆரிடம் கொடுத்திருக்கிறார். அதைப் பெற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர்., வாசல் வரை வந்து தொழிலதிபரை வழியனுப்பி வைத்திருக்கிறார்.
ஆனால் பண விஷயம் பற்றி இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அந்தத் தொழில் அதிபரின் பிரச்சினைகளும் தேவைகளும் எம்.ஜி.ஆருக்கு நன்றாகத் தெரியும்.
அன்று காலை தலைமைச் செயலகத்திற்கு செல்லும் வழியில் ராஜகுமாரி அம்மாவின் வீட்டிற்குச் சென்று பத்திரத்தை அவருடைய கையாலேயே கொடுத்திருக்கிறார்.
மூன்று மாதங்கள் சென்றபின், அதே தொழிலதிபரை காலை உணவிற்காக மீண்டும் எம்.ஜி.ஆர். அழைத்தார். அவரும் வந்தார். முன்பு போல் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். இந்த முறை தொழிலதிபர் திரும்பிப் போகும் பொழுது, அவருடைய பிரச்சினைகளையும், தேவைகளையும், முழுமையாக சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எம்.ஜி.ஆர். தீர்த்து வைத்தார். அந்த உதவி, டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவின் வீட்டு அடமானத் தொகையை விட பலமடங்கு லாபத்தை அந்த தொழிலதிபருக்கு கொடுத்தது.
இந்த விஷயத்தில் பயன் அடைந்தவர்கள், ராஜகுமாரி அம்மா மற்றும் தொழிலதிபர் மட்டுமல்ல.. எம்.ஜி.ஆர். அனுமதி அளித்து, தொழிலதிபருக்கு கொடுத்த திட்டத்தால் தமிழக மக்களும் தான்.
தன்னுடைய தம்பி ராமண்ணாவின் பிறப்பையும் இறப்பையும் பார்த்தவர், டி.ஆர்.ராஜகுமாரி. தம்பி பல திருமணங்கள் செய்யும்பொழுது, மறுப்பேதும் சொல்லாமல் அவருக்கு உதவியாக இருந்தார். தான் திருமணம் முடிக்காமல் இருக்கும்பொழுது, தம்பி மூன்று திருமணங்கள் செய்து கொள்கிறானே என்று ஒருநாள்கூட ராஜகுமாரி அம்மா எண்ணியதில்லை. ராமண்ணாவின் கஷ்டத்திலும் நஷ்டத்திலும், அவருக்கு உதவியாக இருந்து கைதூக்கி விட்டவர் அவர்.
ராஜகுமாரி அம்மா 1922-ம் ஆண்டு மே மாதம் 5-ந் தேதி தஞ்சையில் பிறந்தார். 77 வயது வரை வாழ்ந்து, 1999-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது வீட்டிற்குச் சென்று இறுதி மரியாதையைச் செலுத்தினேன்.
*** - நடிகர் ராஜேஷ் , தினத்தந்தி இதழில் எழுதிய தொடரிலிருந்து.........
-
"கொடுத்து வைத்தவள்" எம்ஜிஆரின்
உன்னதமான இயற்கை நடிப்புக்கு எடுத்துக் காட்டாக அமைந்த படம்.
எம்ஜிஆருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற e v சரோஜாவின் ஆவலை பூர்த்தி செய்த படம். அவருடைய சகோதரன் ev ராஜன் தயாரிக்க ப.நீலகண்டன் இயக்க
"கொடுத்து வைத்தவள்" ராமண்ணாவின் மூன்றாவது மனைவியான சரோஜாவை கதாநாயகியாக வைத்து எடுத்த படம். L.விஜயலட்சுமி ஜோடியும் ரசிக்கும்படி அமைந்திருந்தாலும் பழகிய கண்கள் சரோஜாதேவியை
தேடுவது தவிர்க்க முடியாதது.
தங்கவேலு காமெடி ரசிக்கும்படி இல்லாதது படத்தில் ஒரு குறைபாடுதான். நாகேஷ் காமெடி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாகேஷின் ஆரம்ப கால காமெடி ரசிக்கும் படி இருந்தது.
1963 ல் சங்கிலித் தொடராக வெளிவந்த 2வது படம். பிப் 9 அன்று பல போட்டி தலைவர் படங்களுடன் வெளியாகி நல்லதொரு வெற்றியை பெற்ற படம். படம் குடும்பப் படம்தான்
என்றாலும் தொய்வில்லாமல் அடுத்தடுத்து திருப்பங்களோடு இருக்கும் படி தலைவரின் ஆஸ்தான டைரக்டர் ப.நீலகண்டன் உருவாக்கி
கொடுத்தார்.
சீர்காழி கோவிந்தராஜன் எம்ஜிஆருக்கு "பாலாற்றில் தேனுறுது" பாடலை பாடி .இருப்பார்.
தலைவர் நினைவிழந்து நிற்கும் போது வரும் 'நீயும் நானும் ஒன்று' பாடலை சிறந்த முறையில்
இசையமைப்பு செய்து கொடுத்திருப்பார். 'என்னம்மா செளக்யமா'? டூயட் பாடல் படத்தின் உற்சாகமான நகர்வுக்கு ஏற்ப அமைந்திருக்கும். வழக்கம்போல தலைவரின் தத்துவப் பாடலாக வரும்
'நான் யார் தேரியுமா'? சிறப்பாக அமைந்திருந்தது.
'மின்னல் வரும் நேரத்திலே
மழை பொழியும்' பாடலில் அழுது வடிந்த சரோஜா அழகாக மகிழ்ச்சியாக தோன்றுவார். குடும்ப படத்தில் சோக காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் தலைவரது நடிப்பு திறமையால் படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்வார் இயக்குநர். சென்னையில் காஸினோ மகாராணி புவனேஸ்வரியில் வெளியாகி. காஸினோ மகாராணியில் 77 நாட்களும் புவனேஸ்வரியில் 56 நாட்களும் ஓடி வெற்றியை பதிவு செய்த படம்.
தமிழகத்தின் பல ஊர்களில் 50 நாட்களை கடந்து வெற்றி பெற்ற படம். தமிழகத்தில்
முன்னர் வந்த "பணத்தோட்டத்தை"யும் பின்னர் வந்த "தர்மம் தலை காக்கும்" படத்தையும் அரவணைத்து சென்றது. ஒரே நேரத்தில் தலைவரின் 3 படங்களும் 9 திரையரங்கில் ஓடியது மற்றுமொரு அதிசயம் என்றே சொல்லலாம். அது
தலைவரின் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும்..........ks.........
-
இலங்கையில்இருந்து* வெளியான உரிமைக்குரல்பத்திரிகை* செய்தி*
----------------------------------------------------------------------------------------------------------
கடைசி வார கதாநாயகனின் ஈழத்து ரசிகர்களுக்கு அரச திரைப்பட கூட்டுத்தாபனம் அளித்த பிச்சை . -- உத்தமன் வெள்ளி விழா*
--------------------------------------------------------------------------------------------------------------------------------
12/05/1978ல்* ஈழத்தில் திரையிடப்பட்ட உத்தமன்* வெள்ளிவிழா கொண்டாடிவிட்டதும் மார் தட்டுகிறார்கள் .* கணேசனின் விசில் குஞ்சுகள்*சாதனையாம் , அரிய பெரிய* சாதனையாம் .* வசூல் நாயகனாம் .* இப்படி கூறியும் பத்திரிகையில் எழுதினால் மட்டும் கணேசன் வசூல் நாயகனாகிவிட முடியுமா ?காலங்களில் அவள் வசந்தம், உத்தமன் , மதனமாளிகை , மன்மதலீலை,* பேரும் புகழும் இத்தனை படங்களும் ஒன்றுக்கொன்று ஒருவார , இருவார இடைவெளியில் திரையிடப்பட்டது .* ஆனால் இவற்றில் உத்தமன் படம் மட்டும் பிரபல நடிகரின் படம் என்பது குறிப்பிடத்தக்கது .உத்தமனை தவிர காலங்களில் அவள் வசந்தம் , பேரும் புகழும்* ஆகியவை நன்றாக இருந்தும் நன்கு ஓடவில்லை .* உத்தமன் படத்தில் கணேசன் செய்யும் அயோக்கிய செயலைவிட மன்மதலீலை படம் மக்களுக்கு நன்கு படிப்பினை தரக்கூடிய படமாக இருந்தும் குடும்பத்துடன் பார்க்க முடியாத ஆபாச படமென வி.சி.கணேசன் ரசிகர்களால் விமர்சனப்படுத்த பட்டு விட்டதால் அந்த படைத்தாலும் நன்கு ஓடமுடியாமல் போய்விட்டது .*
அரசு திரைப்பட கூட்டுத்தாபனத்திடம் வேறு படங்கள் கையிருப்பில் இல்லாமல் இருந்ததால் உத்தமனை மாற்றி திரையிட வேறு படங்களும் இல்லாததால் ஒட்டப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் யாழ்ப்பாணம் ராணி சினிமாவில்*27/10/1978 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.நடித்த திருடாதே படம் திரையிடப்பட இருப்பதாக ராணி சினிமா வாசலில் தினமும் காவல்நின்று படம் தொடங்கிவிட்டாலும் வீடு செல்லாத ரசிகர்* ஒருவர் உட்பட பத்திரிகை வெளியிடும் ஒருவரும் இன்னுமொரு நண்பருமாக* யாழ் புகையிரத**நிலையத்தில் இருந்து*தபால் புகையிரதம் மூலம் கொழும்புக்கு அரச திரைப்பட கூட்டுத்தாபனத்துக்கு* சென்று உத்தமனை மாற்ற வேண்டாம் . நாங்கள் வெள்ளி விழா கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்து விட்டோம் . உத்தமனை மாற்றினாலும், திரையிடப்போவது பழைய படம்தானே . அதனால் வெள்ளிவிழா ஓடுவதற்கு கருணை காட்டுங்கள் என்று அவர்கள் காலில் விழுந்து வணங்கினார்கள் .* பின்பு சிலோன் எண்டெர்டெயின்ஸ் ஸ்தாபனத்திடம் ( தற்போது ராணி சினிமாவை நிர்வகித்தவரும் ) சென்று காலில் விழுந்ததால் திருடாதே படத்தை ஸ்ரீதர் அரங்கிற்கு மாற்றிவிட்டு , உத்தமனை வெள்ளி விழா* ஓட வாய்ப்பளித்தார்கள் .இப்படி கேவலமாக ஒரு படத்தை வெள்ளிவிழா ஒட்டிவிட்டால் மட்டும் போதுமா ? தங்கப்பதக்கம் , அவன்தான் மனிதன் போன்ற படங்களால் ஏன் இப்படி ஓட்ட முடியவில்லை . உத்தமனை விட , மேற்கண்ட இரு படங்களும் ஓரளவு நல்ல படங்கள்தானே .அப்படங்களை உங்களுக்கு பிடிக்கவில்லையா ? அல்லது மக்களுக்கு பிடிக்கவில்லையா ? உத்தமன் போல வேறு படங்கள் 6 அல்லது 7 மாதங்கள் திரையிடாமல்* இருந்திருந்தால் ,அவைகள் பொன்விழா , வைரவிழா என்று கொண்டாடி இருப்பீர்கள் அல்லவா? இது கேவலமில்லையா ? இப்படி எல்லாம் வெள்ளிவிழா கொண்டாடுவது என்றால் இப்படி வெள்ளிவிழா ஓட்ட வேண்டுமென்றால் எங்களது படங்கள் கூட வெள்ளிவிழா ஓட்ட முடிந்திருக்கும் .எங்களுக்கு அது தேவையில்லை . வி.சி.கணேசன் படங்களை போல சந்தர்ப்பம் கிடைத்தால் மட்டும் ஓடும் படங்கள் அல்ல எம்.ஜி.ஆரின் படங்கள் .என்பதை புரிந்து கொள்ளுங்கள் வி.சி.கணேசனின் பிள்ளைகளே, எடுபிடிகளே
-
யூ ட்யூப்*-தமிழ் சானல்*செய்திகள் -1947 முதல் 1978 வரை பாக்ஸ்*ஆபிஸ்*ஹிட்*முதலிடம்*பெற்ற திரைப்படங்களின் பட்டியல் -மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள்*பெரும்பாலான வருடங்களில் முதலிடம்*பிடித்து சாதனை*
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
1947* * *-* ராஜகுமாரி*
1948 -* * * சந்திரலேகா*
1949 -* * * அபூர்வ சகோதரர்கள்*
1950* * -* * மருத நாட்டு இளவரசி*
1951* * - மர்மயோகி*
1952* *-* பராசக்தி*
1953* -* அவ்வையார்*
1954* *-* * மலைக்கள்ளன்*
1955* *-* * *மிஸ்ஸியம்மா*
1956* *-* * * *மதுரை வீரன்*
1957* * -* * * சக்கரவர்த்தி திருமகள்*
1958* * -* * * நாடோடி மன்னன்*
1959 -* * * * வீரபாண்டிய கட்டபொம்மன்*
1960* -* * * * பாக்தாத் திருடன்*
1961* -* * * *திருடாதே*
1962* -* * * *தாயை காத்த தனயன்*
1963* -* * * *பெரிய இடத்து பெண்*
1964* -* * * *பணக்கார குடும்பம்*
1965* *-* * * எங்க வீட்டு பிள்ளை*
1966* * -* * *அன்பே வா*
1967* * -* * * காவல்காரன்*
1968* *-* * * *குடியிருந்த கோயில்*
1969* -* * * * அடிமைப்பெண்*
1970* * -* * * *மாட்டுக்கார வேலன்*
1971* * -* * * *ரிக்ஷாக்காரன்*
1972* * -* * * *நல்ல நேரம்*
1973* * -* * * *உலகம் சுற்றும் வாலிபன்*
1974* * -* * * *உரிமைக்குரல்*
1975* * *-* * * *இதயக்கனி*
1976* *-* * * * *நீதிக்கு தலைவணங்கு*
1977* * -* * * * மீனவ நண்பன்*
1978* * - சிகப்பு ரோஜாக்கள்*
-
#மொய் #விளக்கம்
1967 ஆம் ஆண்டு வேலூரில் நடந்த தனது ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு மக்கள்திலகம் சென்றிருந்தார். அப்பொழுது எல்லோரும் மொய்ப்பணம் எழுதும் போது 11, 21, 51, 101 என்று பக்கத்தில் ஒன்று கூட்டி எழுதுகிறார்கள்...
ஏன் தெரியுமா ? என்று கேட்டார்...
பல பேர் பலவிதமான விளக்கங்களைக் கூறினாலும் யாரும் சரியான விளக்கத்தைக் கூறவில்லை...
இதனால் மக்கள்திலகமே தொடர்ந்தார்..
"10, 20, 50, 100 என்று எழுதும் போது கடைசியில் பூஜ்யம் வருகிறது. வாழப்போகும் தம்பதியினர் வாழ்க்கையும் பூஜ்யமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஒன்றைக் கூட்டிக்கொள்கிறோம்...
திருமணத்திற்கு முன் பூஜ்யமாக இருந்திருந்தால், திருமணம் ஆன பின் ஒன்று கூடி ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதற்காகவே ஒன்று என்ற எண்ணைச் சேர்க்கிறோம்...
வாழ்க்கை என்பது முடிவு இல்லாமல் தொடர்ச்சியாக வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதற்காகவே 11,21,51,101 என்று நாம் மொய்ப்பணம் எழுதுகிறோம்..." என்றார்.
சின்ன விஷயமாக இருந்தாலும்...அதை வாத்தியார் சொல்லும் போது...அடடா...! என்ன ஒரு இனிமை...
அந்த விஷயத்துக்கே தனி அந்தஸ்து வந்துடுதுல்ல...
#கலக்குற #வாத்தியாரே.........
-
அருமை சகோதரர்/ நண்பர் திரு லோகநாதன் அவர்கள் youtube. லிஸ்ட்டில் 1955 ம் வருடம் "குலேபகாவலி" என்பதே சரியான தகவல் ஆகும். மற்றும் 1978ம் ஆண்டு தியாகம் ஆக இருக்கலாம். விபரங்களை உறுதி செய்து Youtube நிர்வாகத்துக்கு நாம் சரியான தகவல்கள் அனுப்பலாம்.........
-
எங்கள்ஊரில் தீவிர சிவாஜி ரசிகர்,. காங்கிரஸ் தொண்டர் ஒருவர் இருந்தார்,சிவாஜி என்றால் அவருக்கு உயிர்,ஊர்வலம் போவார் ,கொடி பிடித்த கூட்டத்தை கூட்டி கோஷங்கள் இடுவார்,தேர்தல் காலத்தில் உணவையும் மறந்து பணிபுரிவார் அவர் தந்தையார் அவரை வளரத்த விதம் அப்படி ,ஏன் என்றால் அவர் தீவிர காமராஜர் பத்தர் திராவிடகட்சிகள் நாட்டுக்கு கேடு என எண்ணம் அவர் மனதில் அசைக்க முடியாத கருத்தாய் இருந்தது!, அவர் மகனோ படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தார், அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது.அவர் முன்னேறத்திற்கோ,வேலை வாங்கிதரவோ எவரும் முன் வரவில்லை, அவர் நல்லநேரம் சிபாரிசு இன்றி சத்துணவு அமைப்பாளர் பணி கிடைத்தது... நாளடைவில் பல தரப்பட்ட மக்களோடு பழகும் போது எம். ஜி .ஆர்., ஆட்சியின் நல திட்டங்கள், ஏழை மக்களுக்கு மிகவும் உதவியாய் இருப்பதை உணர்ந்து எம் ஜி ஆரின் தீவிர தொண்டனாகவே மாறிவிட்டார். இப்பொ ழுதும் அவர் சிவாஜி ரசிகர்தான், ஆனால் எம் ஜி ஆரின் தொண்டன், நடிப்பு வாழ்க்கையாகாது என்பதை புரிந்து எம் ஜி ஆரின் கொள்கையாலும், குணத்தாலும் உணர்ந்து கொண்டவர்..........சாய்பாபா பாபு.........