அந்தமான் காதலி 26/01/1978
https://scontent-ort2-2.xx.fbcdn.net...26&oe=6037109E
Thanks Vcg Thiruppathi
Printable View
அந்தமான் காதலி 26/01/1978
https://scontent-ort2-2.xx.fbcdn.net...26&oe=6037109E
Thanks Vcg Thiruppathi
தீபம் 26/01/1977
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...16&oe=6034E90E
Thanks Vcg Thiruppathi
26.1.21 குடியரசுதினத்தை முன்னிட்டு,
முதன்முறையாக
மதுரையில் உள்ள சிவாஜி சிலை பீடத்தில்
தேசிய கொடி ஏற்றப்பட்டது.
காலையில இருந்தே நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள் குவிய தொடங்கினர்....
காலை 10.30 மணிக்கு, மதுரையில் சிலை வைத்த,
ஐயா வி.என்.சிதம்பரம் அவர்களின் அருந்தவப்புதல்வன் வி.என்.சித.வள்ளியப்பன் அவர்கள்
தேசியக் கொடியை ஏற்றினார்.
மதுரை சிவாஜி ஃபைன் ஆர்ட்ஸ் சாா்பாக,
ரசிகர் ஒருவருக்கு நான்கு சக்கர வண்டி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அகிலஇந்திய சிவாஜி மன்றம்,
நகர் சிவாஜி மன்றம்,
புறநகர் சிவாஜி மன்றம்,
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை,
சிவாஜி சமூகநல பேரவை,
சிவாஜி ஃபைன் ஆரட்ஸ்,
ரத்தபாசம் சிவாஜி குரூப்ஸ்,
மாவட்ட பிரபு மன்ற நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தனர்.
சமீபத்தில் சிலை முன்பு,
சிவாஜி பொங்கல் கொண்டாடப்பட்டது.
தற்போது, சிவாஜியின் குடியரசு தின விழா...
என தொடர்ந்து மதுரையை கலக்கி வரும்
சிவாஜியின் அன்பு இதயங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
https://scontent-ort2-2.xx.fbcdn.net...bd&oe=6035A074
Thanks Sundar Rajan
27/01/1979 ல் வெளிவந்த வசூல் காவியம் திரிசூலம்
27/01/2021 ல் 42 ஆண்டுகள் நிறைவு.
இதற்குமுன்னர் வந்த அனைத்து தமிழ் படங்களின் வசூல்சாதனைகயும் தவிடுபொடியாக்கி
முதல் வெளியீட்டில் பல கோடிகளை வசூலாகப்பெற்று சினிமா உலகை உலுக்கி
தமிழ்நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்த மாபெரும் வெற்றிக்காவியம் திரிசூலம்.
http://uploads.tapatalk-cdn.com/2016...329228c7c8.jpg
திரிசூலம்
சென்னை..............................சாந்தி... ..... ............175 ..நாட்கள்....16.13.648-90
சென்னை..............................கிரவுண்.. ..... ..........175...நாட்கள்..... 8.59.663-45
சென்னை..............................புவனேஸ்வரி.... ..... .175....நாட்கள்.......8.47.818-20
சென்னை நகர் 3தியேட்டர்கள் மொத்த வசூல்...................................33.21 .130-55
கோவை.................................கீதாலயா. ..... .........175...நாட்கள்.......12.38.284-90
மதுரை....................................சிந் தாமணி ..........200..நாட்கள்.........10.28.819-55
திரிச்சி..................................... பிரபா த்..................175...நாட்கள்......8.39.7 85-80
சேலம்.....................................ஒரி யண்டல ்........195...நாட்கள்..........7.12.329-14
வேலூர்....................................அப் சரா.. ................175...நாட்கள்.......6.39.949-25
திருப்புர்................................... டைமன் ட்..............142ஈநாட்கள்.........4.62.612-55
ஈரோடு..ராயல்..103+ஸ்டார்..13..+ஶ்ரீகிருஸ்ணா 8..124..நாட்கள்......4.59.649-68
தஞ்சை...................................அருள் ..... ............153..நாட்கள்.............4.09.768-65
குடந்தை................................தேவி.. ..... ............139..நாட்கள்..............3.99.123-25
பொள்ளாச்சி..........................துரைஸ்... ..... ........125..நாட்கள்............3.88.184-75
பாண்டி....................................ஜெய ராம். ...........151...நாட்கள்...........3.56.366-55
நெல்லை..............சென்ட்ரல்..105+பாபுலர்..1 0-...115..நாட்கள்...........3.53.710-00
நாகர்கோவில்................ராஜேஸ்..77+..யுவரா ஜ்..2 8-.105..நாட்கள்.....3.05.270-85
திருவண்ணாமலை...........பாலசுப்பிரமணி......... 143.. நாட்கள்..........3.03.952-95
மாயுரம்................................பியர்ல ஸ்... ...............125..நாட்கள்.........2.58.112-10
காஞ்சி..................................லட்சு மி... ...................77..நாட்கள்..........2.46.734-45
தாம்பரம்..............................ஶ்ரீவித ்தியா .................69..நாட்கள்.........2.40.000-00
திருவாரூர்.........................தையலம்மை.. ..... ..........80..நாட்கள்.........2.12.303-65
ஊட்டி..................................ஶ்ரீகண ேஷ்.. ..................60..நாட்கள்.........1.90.092-15
தூத்துகுடி...........................காரனேசன் ..... ................50...நாட்கள்.......1.84.642-50
விழும்புரம் .......................சாந்தி..................... .........64..நாட்கள்.........1.79.248-30
அரக்கோணம்...................கற்பகம்.......... ..... ............60...நாட்கள்.........1.70.000-00
சிதம்பரம்...........................வடுகநாதன் ..... ..............64...நாட்கள்.........1.67.164-74
பழநி...................................வள்ளுவ ர்... .................50...நாட்கள்............1.67.153-70
மூன்று தியேட்டர்களில் ஷிப்டிங்கில் ஓடியது உட்பட மொத்தம்
11 தியேட்டர்களில் வெள்ளிவிழா.
http://uploads.tapatalk-cdn.com/2016...a8c249a2ae.jpg
YouTube ல் புகழ்பெற்ற கதாநாயகர்களின் Top 25 movies என வீடியோ தொகுப்பை வெளியிட்ட்டு வருகிறார்கள்,
அதில் நடிகர் திலகத்தின் Top 25 movies என தேர்வு செய்வதில் அவர்களுக்கு எந்த சிரமும் இல்லை போல, ஏனெனில் நடிகர் திலகத்தின் சில்வர் ஜூப்ளி திரைப்படங்கள் என ஒரு சில நிமிடங்களில் தேர்வு செய்து விடுகிறார்கள், அதையும் தாண்டி ஒன்றிரண்டு திரைப்படங்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தாலும் அவையும் சாதனைக் காவியங்களாவே அமைந்து இருக்கிறது, உதாரணத்திற்கு நவராத்திரி, தெய்வமகன்,தில்லானா மோகனாம்பாள், கர்ணன்,புதிய பறவை போல,
அதே தருணத்தில் பிற நடிகர்களின் top 25 movies என தேடிப்பிடிப்பதில் அவர்களுக்கு உண்டாகியிருக்கும் சிரமங்களை சொல்ல வேண்டுமானால் தேர்வு செய்த திரைப்படங்களைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்,
ஓடாத டப்பாப் படங்களை சூப்பர் ஹிட் , பாக்ஸ் ஆபிஸ், சிலவர் ஜூப்ளி என சொல்லி சமாளிக்கிறார்கள்,
அவற்றை வேண்டுமானால் விருப்பமானவர்கள் பார்த்து சிரித்து மகிழலாம்
அவ்வளவு காமெடி நிறைந்து இருக்கிறது,
Thanks Sekar Parasuram
நடிகர்திலகத்தின் ஹை- லைட்ஸ்
'புதியபறவை'யின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்த நேரம்.
நடிகர்திலகம் அங்கேயே தங்கி, நடித்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள், அவருடைய விலை உயர்ந்த கடிகாரம்திருட்டுப் போய் விட்டது. கடிகாரம் போய்விட்டதே என்று அவர் வருந்தவில்லை; நண்பர் ஒருவரின் நினைவாக அணிந்திருந்த பொருளை இழந்துவிட்டோமே என்று வருந்தினார்....
சில மணி நேரங்களில் அந்த கடிகாரம் கிடைத்துவிட்டது! அதை எடுத்து ஒளித்து வைத்திருந்தவர் ஸ்டூடியோவைச் சேர்ந்த ஒரு தொழிலாளி.
அவனை மற்ற தொழிலாளர்கள் கையும்-களவுமாகப் பிடித்து, நடிகர்திலகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர் ஏதோ பெரிய தண்டனை கொடுக்கப் போகிறார், அல்லது போலிசாரிடம் ஒப்படைக்கப் போகிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். பிடிபட்ட தொழிலாளியும் அவ்வாறுதான் நினைத்தான். அவன் உடல் பயத்தால் வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருந்தது.
அவனை நடிகர்திலகம் தன்னருகே அழைத்தார். " ஏம்பா இப்படி செய்தே! பணக் கஷ்டம்னா என்னிடம் சொல்லி யிருக்கலாமே!" என்று கூறியபடி, தன் சட்டைப் பைக்குள் கையைவிட்டு 2 ஆயிரம் ரூபாயை எடுத்தார். " இந்தா... இதை வைத்துக் கொள். இனி திருட மாட்டேல்ல!" என்று கூறியவாறு, அந்தப் பணத்தை தொழிலாளியிடம் கொடுத்தார்.
தன்னைப் போலீசில் ஒப்படைக்கப் போகிறார்கள் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த அந்தத் தொழிலாளி, நடிகர்திலகம் 2 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து பரிவுடன் பேசியதைக் கண்டு திகைத்து, அவர் கால்களில் விழுந்தான். "இனி செத்தாலும் சரி! நான் திருட மாட்டேன். இது சத்தியம்" என்று கண்ணீர் வடித்தபடி தழுதழுத்தக் குரலில் கூறினான். கூடியிருந்தவர்கள் இக்காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனார்கள்.
தினத்தந்தியின் மூத்த ஊழியர் மூலம் இந்த நிகழ்ச்சியை அறிந்த நானும் உள்ளம் நெகிழ்ந்தேன்.
நடிகர் திலகத்தின் இளகிய நெஞ்சத்தை- மனித நேயத்தை உணர்த்த இந்த ஒரு நிகழ்ச்சியே போதுமானதாகும்.
- டாக்டர். பா. சிவந்தி ஆதித்தன்
தினத்தந்தி அதிபர்.
செவாலியர் சிவாஜி சிறப்பு மலரிலிருந்து
இன்னா செய்தாரை ஒறுத்து, நன்னயம் செய்த அய்யனின் புகழ் என்றென்றும் புவியாளும் என்பதில் சந்தேகமில்லை.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...22&oe=5B14E5C3
vaannila v
courtesy net
நடிகர்திலகத்தின் ஹை-லைட்
30000 உணவுப் பொட்டலங்கள் சிவாஜிகணேசன் அளித்தார்.
இதுவரை ரூ.40000 உதவி
1000 பவுண்டு பால் பவுடரும் வழங்கினார்...
இது 1960 நவம்பர் 13, கழக ஆதரவுப் பத்திரிகையான தனிஅரசு வில் வெளியான செய்தி.
சென்னை, நவ. 13-
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் இன்று 30000 உணவுப் பொட்டலங்களை மழையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு வழங்கினார். பல பகுதிகளில் பாதிக்ககப்பட்ட மக்ககளுக்கு கார்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
ரூபாய் 40,000
தமிழ் நாட்டில் பெய்த பெருமழையினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் துயரைப் போக்க நடிகர்திலகம் சிவாஜி கணேசன் இதுவரை 40000 ரூபாய் வரை பணமாகவும், அரிசியாகவும், உணவாகவும் வழங்கியிருக்கிறார்.
பால் பவுடர்
தமது வெள்ள நிவாரணக் குழு மூலம் தனது சொந்த மேற்பார்வையில் நடத்திக் கொண்டிருக்கும் இந்தப் பணியின் நான்காவது நாளாக 30,000 க்கும் மேலான உணவுப் பொட்டலங்களும் , 1000 பவுண்டு பால் பவுடரும் விநியோகிக்கப் பட்டது.
கவுன்சிலர்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மேற்படி உதவி அந்தந்த கவுன்சிலர்கள் மூலமும், ஆட்டோ ரிக்ஷாக்கள் மூலமும் சரியான நேரத்திற்கு முன்னால் ஒவ்வோர் இடத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு அவை சரியான முறையில் விநியோகிக்கப் படுவதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
( தனிஅரசு, நவம்பர் 1960)
நடிகர்திலகத்தின் ஹை-லைட்ஸ் :6
தென்னிந்திய திரைப்பட டெக்னீஷியன்ஸ் சங்க கட்டிட நிதிக்காக சிவாஜி நாடக மன்றத்தாரின் ' வியட்நாம் வீடு ' நாடகம் மியூசிக் அகாடமி ஹாலில் அக்டோபர் 18ம் தேதி சனிக்கிழமை மாலை நடை பெற்றது. இந்த நாடகத்தில் ரூ. 30,000 வசூலாயிற்று.
வசூலான தொகை நடிகர்திலகத்தின் சார்பாக நன் கொடையாக வழங்கப்பட்டது.
இலவசமாக நாடகத்தை நடத்தித் தந்த நடிகர் திலகத்துக்கு சங்கச் செயலாளர் என்.கிருஷ்ணசாமி மாலை அணிவித்தார்.
(சினிமா ஸ்டார், நவம்பர் 1969)
-வசந்தமாளிகை மாத இதழிலிருந்து தகவல் திரட்டப்பட்டது.
அள்ளிக் கொடுத்தவரும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. வாங்கிக் கொண்டோரும் கடைசிவரை வாய்த் திறக்கவில்லை.
என்றாலும்,
எல்லாப் புகழும் அய்யன் ஒருவருக்கே.
Vaannila Vijayakumaran
courtesy net
ஸ்கூல் மாஸ்டர் (கன்னடம்) 31/01/1958 . இன்று 63 வருடங்கள் நிறைவு.
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...1c&oe=603CBBDA
Thanks Vcg Thiruppathi
1952 ம் வருடம் அக்டோபர் 17ந் தேதிதீபாவளி திருநாளில் வெளியானது பராசக்தி படம்
வெளியானது . அதுவரை யாரிடமும் இல்லாத காந்த சக்தி சிவாஜியின் கண்களுக்கு இருந்ததை கண்டு மொத்தமாக அவர்பால் ஈர்க்கப்பட்டனர் .அவர் வசனம் பேசிய முறை உடல் மொழி பிரமிக்க வைத்தது .உச்ச கட்ட காட்சியில் வசனத்தை ஒரு ஜல்லிக்கட்டு காளை யை போல சிவாஜி திமிறிக்கொண்டு பேசியதை பார்த்த போது ,ஒவ்வொரு ரசிகனும் தன்னுடுய உடம்பில் மின்சாரம் பாய்வதை போல் உணர்ந்தனர் .பராசக்தி பார்த்த ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு சிம்மாசனம் ப...ோட்டு அமர்ந்தார் .படம் வெளியான அன்று ரசிகர்கள் எப்படி படத்தை ரசிக்கிறார்கள் என்பதை பார்க்க சிவாஜி பெருமாள் முதலியார் கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர் பாரகன் தியேட்டருக்கு சென்றார்கள் .அவர்கள் உற்கார்ந்த வரிசைக்கு முன் உற்கார்ந்து இருந்த ஒரு சிறுவன் படத்தையும் சிவாஜியையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தான் .தனக்கு பின்னால் பட்டு வேஷ்டி சட்டையில் வந்து அமர்ந்து இருப்பது சிவாஜிதான் என்று தெரிந்து கொண்டான் .நீதி மன்ற காட்சி முடிந்ததும் அந்த சிறுவன் ஓடி வந்து பலம் கொண்ட மட்டும் சிவாஜியின் கையை பிடித்து குலுக்கினான் .அந்த சிறுவன்தான் நல்லி குப்புசாமி செட்டியார் .சிவாஜி வந்ததை அறிந்த ரசிகர்கள் அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டு கொண்டாட துவங்கினார்கள் .பராசக்தி திரையிடப்பட்ட எல்லா தியேட்டர்களில் எல்லாம் திருவிலாகோலம் போல மக்கள் கூட்டம் கூட்டமாக குவியதொடங்கினார்கள் .பாடல்களை பதிவு செய்து வெளியிட்ட கிராமபோன் நிறுவனம் பராசக்தி படத்தின் வசனத்தை பதிவு செய்து வெளியிட்டது .விற்பனையிலும் அந்த ரேக்காட்கள் சாதனை புரிந்தது . வெள்ளிவிழா கண்டு வெற்றிக் கொடி நாட்டியது பராசக்தி படம்.
courtesy net
பராசக்தி - சிவாஜி ஜாலம்
சிறந்த தயாரிப்பாளரான ஏ.வி.எம். செட்டியார் கலைஞரின் வசனங்களைத்தான் இந்த படத்தின் துருப்பு சீட்டாக நினைத்திருப்பார்.
அவரே எதிர்பார்க்காத திருப்பம் சிவாஜி.
... இத்தனைக்கும் அவருக்கு கடுமையான போட்டி – எஸ்.எஸ்.ஆர், ஸஹஸ்ரனாமம் ஆகியவர்கள் நடிப்பில் இளைத்தவர்கள் இல்லை. சிவாஜி காட்டிய வேகம், உணர்ச்சிக் கொந்தளிப்பு, குரல் மாடுலேஷன், சிம்மக் குரல், நடனம் (ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே பாட்டை பாருங்கள்) முதல் படத்திலேயே சென்சுரி!
இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது என்று வசனம் பேசி பார்க்காத தமிழ் நடிகர் இல்லை. ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் என்றும் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்றும் பேசுவதை மறக்க முடியாது. அனல் பறக்கும் வசனங்கள், அந்த வசனங்களையும் விஞ்சிய நடிப்பு.
செட்டியாரின் தயக்கத்தை மீறி சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்திய பெருமாளுக்கு தமிழ் சினிமா உலகம் கடமைப்பட்டிருக்கிறது.
நினைவில் நிற்கும் சில வசனங்கள்.
கல்யாணி: இட்லிக் கடையா?
பக்கத்து வீட்டு அக்கா: தமிழ்நாட்டில் தாலி அறுத்தவர்களுக்கு அதுதானே தாசில் உத்யோகம்!
குணசேகரன்: மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கான்
போலீஸ்காரன்: ஏய்
குணசேகரன்: உங்களை சொல்லலைங்க. முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன். சென்னை புனிதமான நகரம். இங்கே மனித மிருகம்
போலீஸ்காரன்: சரிதான் போடா. மெட்ராஸுக்கு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்.
பார்க்கில் தூங்கும் குணசேகரனை எழுப்பும் ஆள்: என்னடா? முழிக்கிறே?
குணசேகரன்: பின்ன, தூங்கினவன எழுப்பினா, முழிக்காம என்ன செய்வான்?
பாரதிதாசனின் வசனம் என்று நினைக்கிறேன் – ஓடப்பர் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ!
சிவாஜி ஒரு புயல்தான். அந்த மாதிரி வேகம் உள்ள நடிகரை தமிழ் சினிமா உலகம் அது வரை பார்த்ததில்லை.
இதற்கு முன் எனக்கு தெரிந்து ஓரளவாவது வேகம் உள்ள பாத்திரங்கள் அபூர்வம்தான் – சந்திரலேகா ரஞ்சன், வேலைக்காரி கே.ஆர். ராமசாமி, மந்திரி குமாரி எஸ்.ஏ. நடராஜன் மாதிரி. ஹீரோக்கள் எல்லாம் வேறு மாதிரி – ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் இரண்டு நிமிஷம் gap விடும் பாகவதர், மென்மையாக பேசும் டி.ஆர். மகாலிங்கம், எம்.கே. ராதா, எம்ஜிஆர் மாதிரி கத்தி சண்டை வீரர்கள், இவர்கள் நடுவில் ஸ்டைலாக கலைந்த தலையோடும், கவர்ச்சியான புன்னகையோடும், சிம்மக் குரலோடும் அவர் நுழைந்து நேராக டாப்புக்கு போய்விட்டார்.
அத்துடன் திராவிட இயக்கப் படங்களுக்கு, உணர்ச்சிகரமான வசனம் பேசுவதற்கு, intense நடிப்புக்கு அவர்தான் சரி என்றாகிவிட்டது. டி.ஆர். மகாலிங்கம், கே.ஆர். ராமசாமியின் குறுகிய திரை உலக வாழ்க்கை சடாலென்று இறங்கி விட்டது.
ஏன், நன்றாக நடித்த எஸ்.எஸ்.ஆர். சஹஸ்ரனாமம் ஆகியோரையே இந்த படத்தில் நமக்கு ஞாபகம் இருப்பதில்லை.
இதுதான் முதல் படத்திலேயே ஐயன் செய்த ஜாலம்!
-RV
courtesy net
உத்தமபுத்திரன் தொடர்ந்து பீம்சிங் இயக்கத்தில் பதி பக்தி படத்தில் நடித்தார் . அம்மையப்பன் படம் தோல்வி கண்டதால் ராசி இல்லாத இயக்குனர் என்ற பெயர் பீம்சிங்குக்கு வந்தது .அந்த விமர்சனங்களை ஒதுக்கி தள்ளிவிட்டு சொந்தமாக படம் எடுக்கும்படி கலைவாணர் யோசனை சொன்னதன் பேரில் சோலைமலை வேலுமணி எம் எஸ் விஸ்வநாதன்ராமமூர்த்தி சேர்ந்து புத்தா பிக்சர்ஸ் தொடங்கி பராசக்தி முதல் சிவாஜியை நன்கு அறிந்தவர் என்பதால் சிவாஜி நடிக்கவேண்டும் என்று கேட்டவுடன் நீங்கள் தைரியமாக ஆரம்பியுங்கள் நான் உங்களு...க்கு பக்க பலமாக இருக்கிறேன் என்று உறுதி கூறினார் .புத்தா நிறுவனம் தரமானவெற்றி படங்களை தயாரித்தது என்றால் அதற்க்கு ஆரம்ப காலத்தில்அதற்கு உரம் இட்ட சிவாஜிதான் காரணம் என்று பீம்சிங் கூறியிருக்கிறார் . சிவாஜி உருவாக்கிய தயாரிப்பாளர் எண்ணிக்கை மிக நீளமானது ,பந்துலு ஶ்ரீதர் பீம்சிங் பாலாஜி சந்தானம் குகநாதன் மோகன் ஆர்ட்ஸ் மோகன் ,ராம அரங்கண்ணல் என்று பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது .மிக சாமான்யர் பலரை தயாரிப்பாளர் ஆக்கிய பெருமை சிவாஜிக்கு உண்டு .குடும்ப சிக்கல்கள் நிறைந்த கதையை 1958ம் ஆண்டு மார்ச் மாதம்14 ந்தேதி பதி பக்தி படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்து ராசியான இயக்குனர் ஆனார் .அந்த வருடம் துவக்கத்தில் வந்த படங்கள் அனைத்தும் ஓடாத நிலையில் இந்த படமாவது ஒடி தமிழ் திரையுலகை காப்பாற்றியது என்று வாகினி அதிபர் நாகி ரெட்டி கூறினாராம் .
courtesy net
உங்களுக்குத் தெரியுமா?
டிஜிட்டல் கர்ணன் 2012 சாதனைகள்...
மார்ச் 16, 2012- ல் டிஜிட்டலில் திரையிடப்பட்ட...
நடிகர்திலகத்தின் கர்ணன் அதே வருடம் ஆகஸ்ட் 15 க்குள், 5 மாத காலத்தில், அதாவது 150 நாட்களுக்குள் மொத்தம் 304 அரங்குகளில் திரையிடப்பட்டு, இணைந்து 510 வாரங்கள் ஓடி, 5 கோடி ரூபாய்க்கும்மேல்
வசூலை வாரிக் குவித்தது.
அதாவது,
சென்னையில் திரையிடப்பட்ட 14 அரங்குகளில் இணைந்து 70 வாரங்களும்,
செங்கை மாவட்டத்தில் திரையிட்ட 25 அரங்குகளில் இணைந்து 36 வாரங்களும்,
வட ஆற்காட்டில் திரையிட்ட 25 அரங்குகளில்,
இணைந்து 49 வாரங்களும்,
தென்னாற்காடு, பாண்டி பகுதிகளில் 25 அரங்குகளில் இணைந்து 33 வாரங்களும்,
கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் திரையிட்ட 53 அரங்குகளில், இணைந்து 79 வாரங்களும்,
திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் திரையிட்ட 38 அரங்குகளில் இணைந்து 61 வாரங்களும்,
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில், 29 அரங்குகளில், இணைந்து 54 வாரங்களும்
மதுரை, இராமநாதபுரம் பகுதிகளில் திரையிட்ட 39 அரங்குகளில் 53 வாரங்களும்,
சேலம், தருமபுரி மாவட்டங்களில் திரையிட்ட 47 அரங்குகளில் இணைந்து 66 வாரங்களும்,
பெங்களூர் மற்றும் கோலாரில் 8 அரங்குகளில் இணைந்து 9 வாரங்களும் ஓடி மகத்தான வசூல் சாதனைப் படைத்தது.
இது வெறும் 5 மாதங்களில் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சாதனையாகும். அதுவும் தமிழகம் முழுதும் ஒரே நேரத்தில் நிழ்ந்த அதிசயம்.
நடிகர்திலகத்தை நடிப்பில் மட்டுமல்ல... இது போன்ற திரையுலகச் சாதனைகளையும் வென்று விடலாம் என்பது பகலில் தோன்றும் கனவு. கல்லில் நார் உறிக்கும் செயல்.
நடிகர்திலகம் நிஜத்தில் மட்டுமல்ல...
மின்பிம்பங்களிலும் அவரே ஒரிஜினல் கர்ணன்.
சிவாஜியும் சினிமாவும் ஒன்னு!
இதை அறியாதவன் வாயில் மண்ணு!!
Thanks Vaannilaa
courtesy net
உங்களுக்குத் தெரியுமா ...?
1956 ல் சென்னை மாநகரில் இருந்த திரையரங்குகளின் எண்ணிக்கை சுமார் 34.
அதில் 22 திரைகளில் இரண்டுமாத காலத்திற்கு அய்யனின் திரைப்படங்களே ஓடிக்கொண்டிருந்தது என்று சொன்னால் நம்புவீர்களா....
உண்மைதான்.
சென்னையின் எப்பகுதிக்குச் சென்றாலும் அவரின் திருமுகமே அரங்குகளில் நிழலாக இருந்தது. மிச்சமிருந்த இடங்களில்தான் மற்றவர்களின் படங்கள் ஓடின....
அந்த வரலாற்றுப் பட்டியல் உங்கள் பார்வைக்காக...
1. 14:01:1956 நான் பெற்ற செல்வம்
பாரகன் / உமா/ ராஜகுமாரி/ கிருஷ்ணா
2. 14:01:1956 நல்லவீடு
கெயிட்டி / காமதேனு / மகாலட்சுமி/
மகாராணி
3. 25:01:1956 நானேராஜா
அசோக்/ சன் / கபாலி / முருகன் /
பிரைட்டன் / நூர்ஜகான்
4. 03:02:1956 தெனாலி ராமன்
நியூகுளோப் / ஸ்டார் / ராக்ஸி / கிரவுன்
5. 17:02:1956 பெண்ணின் பெருமை
காசினோ/ பிராட்வே / மகாலட்சுமி
6. 25:02:1956 ராஜா ராணி
வெலிங்டன் / உமா / கிருஷ்ணா
இவற்றில் எல்லா திரைப்படங்களும் அன்றைக்கு 5 வாரங்களுக்குக் குறையாமல்
ஓடியது என்பதே வசூலுக்கான சாட்சி.
இதில் அதிசயம் என்னவெனில், அய்யனின் இந்த ஆறு படங்களும் 1956 ஜனவரி 14 ல் இருந்து 1956 பிப்ரவரி 25க்குள்,
வெறும் 41 நாட்களில் வெளியாகி உள்ளன என்பதுதான்.
மேலும், 1956 ல் தமிழ் சினிமாவில் வெளியான மொத்த நேரடித் திரைப்படங்கள் 33. அதில் நடிகர்திலகம் நடித்தவை 9. கிட்டதட்ட நான்கில் ஒரு பங்கு.
இதையெல்லாம் படித்தப்பின்பு உங்களுக்கு ஒன்று புரிந்திருக்குமே...!?
அன்றைக்கு நடிகர்திலகத்தைத் திரையுலகிலிருந்து ஒழித்தேத் தீரவேண்டும் என்று எதிரிகள் ஏன் வரிந்துகட்டிக் கொண்டு நின்றார்கள் என்ற ரகசியம்.
இத்தகைய அளப்பரிய சாதனைகளை யெல்லாம் இன்றைய மீடியாக்களின் காதுகளில் யார் போய் சொல்வது?
Thanks Vaannilaa
courtesy net
ஊருக்கு ஒரு பிள்ளை 5/02/1982 --- 39 ஆண்டுகள் நிறைவு.
https://scontent-ort2-2.xx.fbcdn.net...ac&oe=6043AFBF
Thanks Vcg Thiruppathi
தங்கைக்காக 6/02/1971----இன்று 50 ஆண்டுகள் நிறைவு
https://scontent-ort2-2.xx.fbcdn.net...07&oe=60437CF9
Thanks Vcg Thiruppathi
வா கண்ணா வா 6/02/1982---இன்று 39 ஆண்டுகள் நிறைவு.
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...ce&oe=60454DF3
Thanks Vcg Thiruppathi
தர்த்தி (ஹிந்தி) 6/02/1970 ----இன்று 51 ஆண்டுகள் நிறைவு.
https://scontent-ort2-2.xx.fbcdn.net...8d&oe=6042BF6F
Thanks Vcg Thiruppathi
இன்று ( 06-02-21)
ஜெயா டிவி நெட்வொர்க்கில் குதூகலமான திரைப்படங்கள் ஒளி பரப்பாகிறது,
ஜெயா டிவியில் பிற்பகல் 2:30 க்கு புதிய பறவை அதற்கு முன்பாக காலை 11:30 க்கு பரம்பரை
ஜெயா மூவியில் பிற்பகல் 1:00 மணிக்கு முதல் மரியாதை தொடர்ந்து 4 மணிக்கு அரிமா நம்பி,
மேலும் தீர்ப்பு பகல் 12 மனிக்கும் இரவு 7 மனிக்கும் முரசு டிவியில்
ராஜ் டிஜிட்டலில் இரவு 10:30 க்கு லாரி டிரைவர் ராஜாகண்ணு,
https://scontent-ort2-2.xx.fbcdn.net...65&oe=6041DC6F
Thanks Sekar Parasuram
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
கோவையில் நமது நடிகர்திலகத்தின் திரைப்படம் தொடர்ந்து வெளியாகி வெற்றிநடை போட்டது.
சில காலமாக நடிகர்திலகத்தின் திரைப்படம் கோவையில் வெளியாகவில்லை.
லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருகிறது...
கோவை டிலைட் தியேட்டரில்,
பிப்ரவரி 6 முதல்,
நடிகர்திலகம் இருவேடங்களில் கலக்கும், அட்டகாசமான திரைப்படமான
என்னைப் போல் ஒருவன்...
கொரோனாவிற்கு பின்,
கோவையில் வெளிவரும் நடிகர்திலகத்தின்
முதல் படம் என்னை போல் ஒருவன்.
மதுரை சிவாஜி கோட்டை என்பதை, மதுரை வாழ் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள், நிரூபித்து வருகிறார்கள்.
அதே போல், கோவையும் சிவாஜி கோட்டை தான் என்பதை, கோவை வாழ் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள் நிரூபிப்பார்கள்.....
மதுரையை போல், கோவையிலும்,
வருடத்திற்கு 5 அல்லது 6 நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும்...
ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று,
என்னை போல் ஒருவன் திரைப்படத்தை திரையிடும், முரளி பிலிம்ஸ், முரளி அவர்களுக்கு, நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கோவை அன்பு இதயங்களின் அலப்பறை ஆரம்பமாகட்டும்...
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...61&oe=6044A300
Thanks Sundar Rajan
தமிழ்த்திரை உலகம் மட்டுமல்ல, இந்தியத் திரை உலகமே கொண்டாடும் அதி அற்புதமான நடிகர்.
சர்வதேசத் திரை உலகில் சிறந்த நடிகர்கள் என்று அறியப்பட்ட அனைவருமே வியந்து பார்த்த, உன்னதமான ஒரே நடிகர்.
நடிகர் என்பதைத் தாண்டி, மிக உயர்ந்த மனிதர். சிறந்த தேச பக்தர், தெய்வ பக்தர்.
கேமராவுக்கு முன்பு தவிர, வேறெந்த இடத்திலும் வேசம் போடத் தெரியாதவர்..
தனி மனித வாழ்விலும் ஒழுக்கத்தைக் கடைப் பிடித்ததோடல்லாமல், தனக்கென வாழாத தகைமையாளர்.
தன் படங்களின் மூலம், அருமையான வாழ்வியல் தத்துவங்களை மட்டுமல்ல, அன்பு, பாசம், நேர்மை, கடமை, ஒழுக்கம், வீரம், தெய்வ பக்தி, தேச பக்தி, காதல், சகோதரத்துவம், மத நல்லிணக்கம் போன்ற எண்ணற்ற சிறந்த கருத்துக்களைப் பரப்பியவர்...
அன்றும் இன்றும்.. ஏன், என்றும் பல கோடி மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்..
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.
அவருடைய புகழையும், சிறப்புக்களையும் இன்னும் உயர உயரக் கொண்டு செல்லும் உயரிய நோக்கத்துடன்... குறிப்பாக, இளைய தலைமுறையினர் அவருடைய சிறப்புகளை இன்னும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் துவங்கப்பட்ட You Tube சேனல்தான்,
'என்றென்றும் சிவாஜி'.
நடிகர்திலகத்தின் அருமைப் பிள்ளைகள் அனைவரும் இந்தச் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்து, ஆதரவு தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
உங்கள் ஆதரவு, இந்தச் சேனல் மேன்மேலும் வளர்வதற்கு மட்டுமல்ல, நடிகர் திலகத்தின் புகழை மேன்மேலும் பரப்பும் எங்கள் முயற்சிக்கு இன்னும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும்.
சேனலுக்கான கீழ்க்கண்ட லிங்க்கைக் கிளிக் செய்து, சப்ஸ்கிரைப் செய்யுமாறு வேண்டுகிறோம்.
https://youtube.com/channel/UCjXJshADoeVEdCcgcHTBHVw
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...94&oe=6042C721
Thanks Nagarajan Velliangiri
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே....
எங்கும் நடிகர்திலகத்திற்கு வெற்றியே...
6.2.21 முதல் கோவை டிலைட் தியேட்டரில், நடிகர்திலகம் இருவேடங்களில் கலக்கும், என்னை போல் ஒருவன் திரைப்படம் வெளியாகி மாபெரும் சாதனை படைத்துள்ளது.
முதல் நாளே
மாபெரும் வசூல் சாதனை செய்துள்ளது..
இம்மாபெரும் வெற்றியை தந்த
கோவை வாழ், நடிகர்திலகத்தின்
அன்பு இதயங்களுக்கும்,
கோவை மக்களுக்கும் மாபெரும் நன்றியை
தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்பு இதயங்களே,
நாளை மாலை ரசிகர்கள் சிறப்பு காட்சி நடைபெற உள்ளது...
கோவை மற்றும் கோவை சுற்றியுள்ள
நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள்,,,
அனைவரும் தவறாமல் நடிகர்திலகத்தை
தரிசிக்க வருகை தாருங்கள்..
அன்றும் இன்றும் என்றும்,
கலையுலகில் சிவாஜியை மிஞ்ச எவருமில்லை என்பதை எதிரிகள் உணரட்டும்...
நாளை அரங்கு நிறைந்தது என்ற செய்தி...... தமிழகத்தையே அதிர செய்யட்டும்.
https://scontent-ort2-2.xx.fbcdn.net...9f&oe=60464B2F
Thanks Sundar Rajan
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்,
45 வது வெற்றிச்சித்திரம்.
உத்தம புத்திரன் வெளியான நாள் இன்று.
உத்தம புத்திரன் 7 பெப்ரவரி 1958.
உத்தம புத்திரன்.
https://scontent-ort2-2.xx.fbcdn.net...35&oe=6043B5B9https://i.ytimg.com/vi/lXmYgQdeZSU/maxresdefault.jpg
https://scontent-ort2-2.xx.fbcdn.net...fe&oe=6043B0D5
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...56&oe=6043FBD4
https://scontent-ort2-2.xx.fbcdn.net...16&oe=6043BE3C
உத்தம பத்திரன் 7/02/58
பதிபக்தி 14/03/58
சம்பூர்ண ராமாயணம் 14/04/58
பொம்மை கல்யாணம் 3/05/58
3 மாதத்திற்குள் 4 படங்கள் திரையிட்டு வெற்றிக்கொடி நாட்டியவர்
அகில உலக தமிழ்த்திரைப்பட வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் அவர்கள்.
நெஞ்சில் துணிவில்லாமல் 1 படத்தை மட்டும் திரையிட்டுவிட்டு பதுங்கிக்கொள்ளவில்லை.
சாதனையில் மன்னவன் அண்ணன் சிவாஜி கணேசன்.
முதன் முதலாக-தொடர்ந்து 3 படங்கள் வெளிவந்து 3 படங்களும் 100 நாட்கள் ஓடியது.
ஆண்டு 1958.
உத்தம புத்திரன் 7/02/1958
பதிபக்தி 14/03/1958
சம்பூர்ண ராமாயணம் 14/04 /1958
https://scontent-ort2-2.xx.fbcdn.net...f0&oe=60439060
https://scontent-ort2-2.xx.fbcdn.net...c9&oe=60461EB5
பூங்கோதை 7/02/1953----இன்று 68 ஆண்டுகள் நிறைவு.
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...20&oe=60457B3C
Thanks Vcg Thiruppathi
வீரபாண்டிய கட்டபொம்மன்
மதுரையில் முதன்முதலாக 2 லட்சத்துக்குமேல் வசூல் தந்த படம் இதுதான் (வீரபாண்டிய கட்டபொம்மன்)
மதுரை -நியூ சினிமா 181 நாட்கள் வசூல் 2,77,365.71
..................................வரி நீக்கிய வசூல் 2,08,113.44
.........................விநியோகிஸ்த்தர் பங்கு 1,13,583.55
முதன் முதலாக கேரளா-திருவனந்தபுரத்தில் 100 நாட்கள் ஓடிய படம் வீ கட்டபொம்மன்.
தமிழகத்தில் பல வெளியீடுகளுக்குப் பிறகு 17.09.1984 அன்று திரையிடப்பட்டபொழுது
சென்னையில் ஷிப்டிங்கில் வெள்ளிவிழா, மதுரையில் 49 நாட்கள்.
சிவாஜி மறைந்த பின் 4/03/2002 ல் திரையிடப்பட்டபோது
மதுரரு சிந்தாமணியில் 2 வாரங்களும் தொடர்ந்து மதுரை சுற்றிலும்
143 நாட்கள் ஓடியது.
இதே ஆண்டில் (1959) பாகப் பிரிவினை மதுரை சிந்தாமணியில்
216 நாட்கள் ஓடி முதன் முதலாக ஒரே ஆண்டில் 2 வெள்ளி விழா படங்கள்
என்ற சரித்தரத்தை உருவாக்கியது.
முதன் முதலாக இந்திய அரசின் வெள்ளிப்பதக்கத்தை பெற்றது.
முதன் முதலாக மதுரையில் 3 லட்சத்துக்குமேல் வசூல் செய்து தந்த படம் இதுதான்.
மதுரை சிந்தாமணி 216 நாட்கள் வசூல்-3,36,180.54
(இமேஜில் உள்ளவை)
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...21&oe=60446450
நிச்சய தாம்பூலம் 9/02/1962 ----59 ஆண்டுகள் நிறைவு
https://scontent-ort2-2.xx.fbcdn.net...da&oe=6047E3D8
சித்தூர் ராணி பத்மினி 9/02/1963 ----58 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...53&oe=6049B804
Thanks Vcg Thiruppathi
வணக்கம் உறவுகளே!
கடந்த சில நாட்களாக இங்கு வந்து பதிவுகள் இட முடியவில்லை.
பல காரணங்கள், தொடர்ந்தும் அதே நிலைதான்.
நேரம் கிடைக்கும்பொழுது முடிந்தவரை அவ்வப்போது வந்து
விடயங்களை பதிவிட முயற்சிக்கின்றேன்.
நன்றி.
இது சத்திய யுகம்!. இனி உண்மைகள் மட்டுமே இங்கு கோலேச்சும்.
நடிகர் திலகம் அவர்கள் செய்த பல உதவிகள் வெளியே தெரியாமல் உள்ளது. அதில் இதுவும் ஒன்று.
காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த வீடற்ற ஆதி திராவிடர்களுக்கு உதவும் வகையில் காரைக்குடியில் தேன்கூடு என்ற நாடகம் நடத்தி அதில் வசூலான தொகையில் இடம் வாங்கி கொடுத்துள்ளார். அது தற்போதும் சிவாஜி கணேசன் காலனி என்று அழைக்கப்படுகிறது.
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...b0&oe=604F3E87
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...d1&oe=605107E6
Thanks RSundaram RSundaram
நடிகர்திலகம்......
ஆரம்ப கல்வி கற்ற பள்ளிக்கூடம்.
யதுகுல சங்கம். நடுநிலைப்பள்ளி.
https://scontent-ort2-2.xx.fbcdn.net...9f&oe=604DD194
Thanks Sivaji Palanikumar
கொடை வள்ளல் !
ஞான ஒளி படப்பிடிப்பில் சிறிது ஓய்வு நேரம் .தனது நண்பர்களிடம் உற்சாகமாக தெரிவித்தார் இதை.
"வரும் 23ம் தேதி எனக்கு முக்கியமான நாள். அன்று நான் நடித்த ராஜா படம் விமான படை வீரர்களின் துனைவியரின் ஷேம நிதிக்காக தேவி பாரடைசில் திரையிடப்படுகிறது.
முதலில் பாலாஜி இச்செய்தியை என்னிடம் தெரிவித்த போது மிகவும் பெருமைப்பட்டேன். " 23 ம் தேதியன்று என்னை மேடைக்கு வரும்படி அழைத்தனர்.எனக்கு வெளியூரில் அன்று படப்பிடிப்பு இருந்தது.அதற்கு மறுநாள் "ராமன் எத்தனை ராமனடி படத்திற்காக பரிசு வாங்க பம்பாய் செல்ல வேண்டும். ஆனால் எப்படியாவது நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வேண்டும் என தீர்மானித்தேன். அதற்காக வெளியூர் படப்பிடிப்பு தேதியை தள்ளி வைத்து சென்னைக்கு வந்து மேடையில் தோன்றுவது என்று முடிவு செய்தேன்.
விமான படையில் கணவனை இழந்து கணணீரும் கம்பலையுமாக தவிக்கும் பெண்களுக்கும் , அவர்களது குழந்தைகளுக்கும் உதவி செய்வது என் கடமை. ஒவ்வொருவருடைய கடமையும் அது தான் நாட்டுக்காக அந்த வீரர்கள் ஆற்றியுள்ள பணி மலை போன்று உயர்ந்தது.அவர்களின் குடும்ப இன்னல்களை நாம் முழுமையாக துடைக்க முடியாது. ஆனால் நமது நன்றிக்கு சிறு அடையாளமாக இந்த நிதி வசூல் அமையட்டும்.
இவ்வாறு உணர்ச்சி வசப்பட்டு கூறினார் சிவாஜி கணேசன்.
நன்றி ! பத்திரிக்கை பதிப்பில் இருந்து
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...5f&oe=6053D191
Thanks Gansesh Pandian
நடிகர்திலகத்தின் ஹை- லைட்ஸ் : 4
'புதியபறவை'யின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்த நேரம்.
நடிகர்திலகம் அங்கேயே தங்கி, நடித்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள், அவருடைய விலை உயர்ந்த கடிகாரம்திருட்டுப் போய் விட்டது. கடிகாரம் போய்விட்டதே என்று அவர் வருந்தவில்லை; நண்பர் ஒருவரின் நினைவாக அணிந்திருந்த பொருளை இழந்துவிட்டோமே என்று வருந்தினார்.
சில மணி நேரங்களில் அந்த கடிகாரம் கிடைத்துவிட்டது! அதை எடுத்து ஒளித்து வைத்திருந்தவர் ஸ்டூடியோவைச் சேர்ந்த ஒரு தொழிலாளி.
அவனை மற்ற தொழிலாளர்கள் கையும்-களவுமாகப் பிடித்து, நடிகர்திலகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர் ஏதோ பெரிய தண்டனை கொடுக்கப் போகிறார், அல்லது போலிசாரிடம் ஒப்படைக்கப் போகிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். பிடிபட்ட தொழிலாளியும் அவ்வாறுதான் நினைத்தான். அவன் உடல் பயத்தால் வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருந்தது.
அவனை நடிகர்திலகம் தன்னருகே அழைத்தார். " ஏம்பா இப்படி செய்தே! பணக் கஷ்டம்னா என்னிடம் சொல்லி யிருக்கலாமே!" என்று கூறியபடி, தன் சட்டைப் பைக்குள் கையைவிட்டு 2 ஆயிரம் ரூபாயை எடுத்தார். " இந்தா... இதை வைத்துக் கொள். இனி திருட மாட்டேல்ல!" என்று கூறியவாறு, அந்தப் பணத்தை தொழிலாளியிடம் கொடுத்தார்.
தன்னைப் போலீசில் ஒப்படைக்கப் போகிறார்கள் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த அந்தத் தொழிலாளி, நடிகர்திலகம் 2 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து பரிவுடன் பேசியதைக் கண்டு திகைத்து, அவர் கால்களில் விழுந்தான். "இனி செத்தாலும் சரி! நான் திருட மாட்டேன். இது சத்தியம்" என்று கண்ணீர் வடித்தபடி தழுதழுத்தக் குரலில் கூறினான். கூடியிருந்தவர்கள் இக்காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனார்கள்.
தினத்தந்தியின் மூத்த ஊழியர் மூலம் இந்த நிகழ்ச்சியை அறிந்த நானும் உள்ளம் நெகிழ்ந்தேன்.
நடிகர் திலகத்தின் இளகிய நெஞ்சத்தை- மனித நேயத்தை உணர்த்த இந்த ஒரு நிகழ்ச்சியே போதுமானதாகும்.
- டாக்டர். பா. சிவந்தி ஆதித்தன்
தினத்தந்தி அதிபர்.
செவாலியர் சிவாஜி சிறப்பு மலரிலிருந்து
இன்னா செய்தாரை ஒறுத்து, நன்னயம் செய்த அய்யனின் புகழ் என்றென்றும் புவியாளும் என்பதில் சந்தேகமில்லை.
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...b6&oe=6059EB37
Thanks Vaannilaa Vijayakumaran
தமிழகத்திலேயே ....
இல்லை இல்லை
உலகத்திலேயே ......
முதல் சிவாஜி சிலை இதுதான்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் திருபுவனம் என்ற ஊரில் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது இந்த சிலை
அண்ணன் சிவாஜி இறந்து 30 நாள் அன்று நிறுவபட்டது இந்த சிலையை வைத்தவர்கள் பெரிய செல்வந்தர்கள் அல்ல...
அன்றாடும் கூலி வேலை நெசவு தொழில் பட்டுப்புடவை நெசவு செய்யும் சாமனியவர்கள் நிறைந்த நல்ல மனசு நிறைந்த எளியவர்கள் செளராஷ்டிரா இனத்தை சேர்ந்த
தேச பக்தி தெய்வ பக்தி நிறைந்தவர்கள்
இவர்களது ஆர்வமிகுதி அண்ணன் சிவாஜி மீது கொண்ட பக்தி அண்ணன் சிவாஜி அவர்கள் இறந்து 30 ம் நாளிளேயே சிலை வைத்து வழிபாடு செய்ய துவங்கியவர்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்
அதே போல் அவர்கள் சிலை வைத்துள்ள இடம் மகாத்மா காந்தி சிலைக்கும் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் இடையில் வைத்துள்ளனர்
இது சிமென்டால் ஆன சிலை இதை விரைவில் வெங்கல சிலையாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளனர் இதே போல் தான் தஞ்சையிலும் இதே செளராஷ்டிரா இன சகோதரர்கள் உலகத்திலேயே மார்பளவு சிமெண்டால் ஆன அண்ணன் சிவாஜிக்கு சிலை வைத்தனர் என்பது குறிப்பிடதக்கது
என்றும் பிரியருடன்
சதா. வெங்கட்ராமன்
தஞ்சாவூர்
தமிழகத்திலேயே ....
இல்லை இல்லை
உலகத்திலேயே ......
முதல் சிவாஜி சிலை இதுதான்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் திருபுவனம் என்ற ஊரில் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது இந்த சிலை
அண்ணன் சிவாஜி இறந்து 30 நாள் அன்று நிறுவபட்டது இந்த சிலையை வைத்தவர்கள் பெரிய செல்வந்தர்கள் அல்ல...
அன்றாடும் கூலி வேலை நெசவு தொழில் பட்டுப்புடவை நெசவு செய்யும் சாமனியவர்கள் நிறைந்த நல்ல மனசு நிறைந்த எளியவர்கள் செளராஷ்டிரா இனத்தை சேர்ந்த
தேச பக்தி தெய்வ பக்தி நிறைந்தவர்கள்
இவர்களது ஆர்வமிகுதி அண்ணன் சிவாஜி மீது கொண்ட பக்தி அண்ணன் சிவாஜி அவர்கள் இறந்து 30 ம் நாளிளேயே சிலை வைத்து வழிபாடு செய்ய துவங்கியவர்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்
அதே போல் அவர்கள் சிலை வைத்துள்ள இடம் மகாத்மா காந்தி சிலைக்கும் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் இடையில் வைத்துள்ளனர்
இது சிமென்டால் ஆன சிலை இதை விரைவில் வெங்கல சிலையாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளனர் இதே போல் தான் தஞ்சையிலும் இதே செளராஷ்டிரா இன சகோதரர்கள் உலகத்திலேயே மார்பளவு சிமெண்டால் ஆன அண்ணன் சிவாஜிக்கு சிலை வைத்தனர் என்பது குறிப்பிடதக்கது
என்றும் பிரியருடன்
சதா. வெங்கட்ராமன்
தஞ்சாவூர்
https://scontent-ort2-1.xx.fbcdn.net...b4&oe=605A7D79
Thanks Senthilvel Sivaraj Sivaji Group
வட சென்னை என்பது சென்னை மாநகரம் உருவான காலந்தொட்டு மக்கள் தொகை மிகுந்த, பழைமை வாய்ந்த கோயில்கள், வரலாற்றுப் புராதானச் சின்னங்கள், கட்டடங்கள் நிறைந்த, குறுகலான ஆனால் நீண்ட சாலை வசதிகளைக் கொண்ட பகுதியாகும்.
இங்கு பிராட்வே, கிரௌன்,கிருஷ்ணா, பிரபாத், பாரத், பத்மநாபா, மகாராணி, அகஸ்தியா, தங்கம், பிரைட்டன், முருகன்,பாண்டியன் மினர்வா,தமிழ்நாடு என்று ஏராளமான திரையரங்குகள் அமைந்திருந்தன. தற்போது இருப்பது விரல்விட்டு எண்ணும் அளவிற்கு வெறும் 5 மட்டுமே.
தமிழகத்தில் சினிமா தோன்றிய காலத்தில் பெரும்பாலான திரைப்படங்கள்
இப்பகுதியை மையமாக வைத்தே திரையிடப்பட்டன.
தமிழின் முதல் பேசும்படமான 'காளிதாஸ்' முதன்முதலாக வெளியானதும் இதேப்பகுதியில்தான்.
எல்லா நடிகரின் திரைப்படங்களும், இப்பகுதியில் திரையிடப்பட்டு வெற்றிவிழா கண்டிருக்கின்றன. ஆனால் எல்லா காலங்களிலும் வெற்றி பெற்றிருக்குமா என்பது கேள்விக்குறி!
அய்யன் நடிகர் திலகத்தைத் தவிர.
ஆம்.
நடிகர்திலகம் நடித்து 53 திரைப்படங்கள் இப்பகுதியில், பராசக்தி தொடங்கி படையப்பா வரை நூறு நாள் முதல் வெள்ளிவிழா வரை ஓடி அசத்தியிருக்கின்றன.
அதிலும், கிரௌன் திரையரங்கில் மட்டும் 3 படங்கள் வெள்ளி விழாவும், 30 படங்கள் 100 நாட்களைக் கடந்து ஓடியிருப்பது வரலாற்றுச் சாதனையாகும்.
காலங்கள் தோறும் ஆக்சன் பட நாயகர்கள் மட்டுமே சாதனையாளர்கள் என்று சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த்திரையில் எந்தவொரு நாயகர்களுக்காவது, வட சென்னையில் இந்த எண்ணிக்கையில் படம் ஓடியிருக்குமா என்பது சந்தேகமே.
விவவரம் தெரிந்தோர் பதிவிடலாம்.
அய்யனின் வெற்றிப்படப் பட்டியல் உங்கள் பார்வைக்காக ...
1. பிராட்வே தியேட்டர்
பெண்ணின் பெருமை 105 நாள்
தெய்வப்பிறவி 107
படித்தால் மட்டும் போதுமா 104
2. கிருஷ்ணா தியேட்டர்
பாவ மன்னிப்பு 127
பாலும் பழமும் 127
ஆலயமணி 105
வாழ்க்கை 117
3. பிரபாத் தியேட்டர்
கை கொடுத்த தெய்வம் 100
கர்ணன் 100
4. மகாராணி தியேட்டர்
பச்சை விளக்கு 105
நவராத்திரி 101
அந்தமான் காதலி 100
மருமகள் 117
5. பாரத் தியேட்டர்
பராசக்தி 100
படையப்பா 126
6. அகஸ்தியா தியேட்டர்
சிவந்தமண் 117
நீதிபதி 125
படிக்காதவன் 123
தேவர் மகன் 103
7. எம்.எம். தியேட்டர்
ஒன்ஸ் மோர் 133
8. கிரவுன் தியேட்டர்
அமரதீபம் 125
வணங்காமுடி 100
வீரபாண்டிய கட்டபொம்மன் 111
பாகப்பிரிவினை 104
படிக்காத மேதை 116
விடிவெள்ளி 104
பாசமலர் 133
திருவிளையாடல் 179
சரஸ்வதி சபதம் 133
கலாட்டா கல்யாணம் 106
தில்லானா மோகானாம்பாள் 111
தெய்வமகன் 100
வியட்நாம் வீடு 103
எங்கிருந்தோ வந்தாள் 100
சவாலே சமாளி 107
பாபு 102
பட்டிக்காடா பட்டணமா 111
வசந்தமாளிகை 140
பாரதவிலாஸ் 100
எங்கள் தங்க ராஜா 102
கௌரவம் 102
தங்கப்பதக்கம் 176
அவன்தான் மனிதன் 113
மன்னவன் வந்தானடி 100
தீபம் 106
அண்ணன் ஒரு கோயில் 114
தியாகம் 111
திரிசூலம் 175
ரிஷிமூலம் 104
வா கண்ணா வா 100
தீர்ப்பு 105
சந்திப்பு 100
வெள்ளை ரோஜா 104
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்
Thanks Thoppumani Thoppiah--(One and only sivaji)
மனோகரா வெளியான நாள் 3/03/1954 .---இன்று 67 ஆண்டுகள் நிறைவு.
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...2a&oe=6065B28A
மதுரை சென்ரலில் 19/03/1921 முதல்
நடிகர் திலகத்தின் முன்று தெய்வங்கள்.
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...bd&oe=60647616
நன்றி சேகர் பரசுராம்
நவராத்திரி- 1964.
அதிசயம், ஆனாலும் உண்மை. ஒரு நடிகர் ஒரே படத்தில் ஒன்பது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் என்ற செய்தி எனக்கு ஆறு வயதாய் இருக்கும் போது பெரியவர்கள் உரையாடலில், சீனா போரை விட மிகவும் சிலாகிக்க பட்டது.
எல்லோரும் மாய்ந்து மாய்ந்து அவர் அற்புதம்,பயம்,கருணை ,கோபம்,சாந்தம்,அருவருப்பு,,சிங்காரம்,வீரம்,ஆனந ்தம் ஆகிய குணங்களையே பாத்திரங்களாக்கி உள்ளார் என்று எழுதினர்.சில பாத்திரங்கள் தாங்கள் அந்த குணங்களை பிரதிபலிப்பதை விட மற்றோர்க்கு அந்த உணர்வை (குடிகாரன்,தொழுநோயாளி)தருவதாக விமர்சித்தனர். ஆனால் அந்த குடிகாரனின் ,கடைசி நேர பய உணர்வை,மனசாட்சி உந்துதலை ,தொழுநோயாளியின் தன் வெறுப்பை ,சுய அருவருப்பை கணக்கில் கொள்ள தவறினர்.
ஆனால் நான் பார்ப்பது என்னவென்றால், சிவாஜியின் அத்தனை படங்களையும் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு மட்டும் தெரிந்து உணர்ந்த ,sampling முறையில் அளக்க இயலா நடிப்பின் வேறுபாடுகளை,ஒரே படத்தில் showcasing the talent என்ற முறையில் நவராத்திரியின் வீச்சை மதிப்பிடுகிறேன். அவர் அற்புத ராஜாக பாசமலரில் துவங்கி பார் மகளே பார் வரை அற்புதம் நிகழ்த்தினார்.குடிமகனாக புனர் ஜென்மம்,கருணை நிறைந்த majesty என்று பாலும் பழமும்,கோபம் நிறைந்த வன்மத்துடன் வாழ்விலே ஒருநாள் முதல் ஆலய மணி வரை,சாந்தம் நிறை வெகுளி மனிதராக மக்களை பெற்ற மகராசி ,படிக்காத மேதை என்று ,அருவருப்பான தோற்றத்தில் குழந்தைகள் கண்ட குடியரசு,பாவ மன்னிப்பு,நான் வணங்கும் தெய்வம் படங்களிலும் ,சிங்காரமாக பல கூத்து கலை படங்களிலும்(தூக்கு தூக்கி) ,வீரமாக கணக்கற்ற படங்களில் (உத்தம புத்திரன் விக்ரம்),ஆனந்தனாக ராஜாராணி ,இருவர் உள்ளம்,குலமகள் ராதை ,கல்யாணியின் கணவன் என்று பல படங்களிலும் நடித்த அனைத்து பாத்திரங்களையும் ஒன்றாக தொகுத்து, ஒரே படமானதால் வித்தியாசம் தெளிவாக, சில நடை உடை ஒப்பனை மாற்றங்கள்,mannerism என்று மெருகேற்றி ஒளி ஊற்றிய படமே நவராத்ரி.இதே போல அவர் நடிகராக பாத்திரமேற்ற ராமன் எத்தனை ராமனடியில் ,ஒரே காட்சியில் அவர் ஏற்ற பல வேறு பட்ட பாத்திரங்களை காட்டி அவரின் பல்முனை நடிப்பு அழகாக ஒரே படத்தில் காட்ட படும்.
என்னிடம் ஒரு நண்பர் ,தசாவதாரம் என்னை கவரவில்லை ,என்று சொன்ன போது நவராத்திரியை நாடகம் என்றும் தசாவதாரம் சினிமா என்றும் சொன்னதும் நான் சிரித்தேன். சினிமாவின் இலக்கணம் தெரியுமா என்று கேட்டேன். பிறகு , அவரிடம் என்ன genre என்ற தெளிவு ,சீரான திரைக்கதை,படத்துடன் இணையும் பாத்திரங்கள்,தெளிவான முகபாவங்கள் கொண்ட close up காட்சிகள், இவை எந்த படத்தில் உள்ளதோ அதுவே திரை படம் என்று சொன்னேன். நண்பர் முகம் போன போக்கு. ஓட்ட வைத்த குடுகுடுப்பாண்டி சட்டை போல மோசமான திரைக்கதை, பத்து வர வேண்டும் என்று அனாவசிய திணிப்பில் கதாபாத்திரங்கள், பெயிண்ட் பூசி ,முகமூடி அணிந்து(அந்த கால கூத்து நாடகங்கள் போல) வரும் கேவலமான தோற்றம் கொண்ட மாறுவேடம் இவை கொண்ட தசாவதாரம் நாடகம் என்றாலும் கூட நாடக கலைக்கே கேவலம். அற்புதமான ஒரு வரி knot ,அதனுடன் பயணிக்கும் திரைக்கதை, அதனூடாக பயணிக்கும் நகைச்சுவை, பாத்திரங்களின் நடை உடை பாவனை தெளிவாக காட்டும் படமாக்கும் இவற்றில் நவராத்திரியை உயரிய திரைப்பட உத்தியின் உச்சமாகவே கருத வேண்டும்.
ஏதோ திணித்தது போல இல்லாமல் அழகான திரைக்கதை. அப்பா பார்த்த மாப்பிள்ளை தான் காதலித்த ஆனந்தன் என்று உணராத
நளினா , வீட்டை விட்டு விரக்தியுடன் வெளியேறி தற்கொலைக்கு முயல ,அற்புதராஜ் என்ற பணக்கார ,மனைவியை இழந்து,ஒரே பெண்குழந்தையுடன் வசிக்கும் கனவானால் காப்பாற்ற பட்டு,அங்கிருந்து வெளியேறி ஒரு விபசார விடுதியில் சிக்கி ஒரு குடிகார காமுகனால் (மனைவியின் நோயால் உறவு வேட்கையில் வாடும் ஒரு பூஞ்சை மனம் கொண்டவன்)வல்லுறவிற்கு உந்த பட்டு, அங்கிருந்தும் தப்பியோடி ,பைத்தியமாய் நடித்து, பைத்தியக்கார ஆஸ்பத்தரியில் அடைக்க பட்டு, Dr .கருணாகரன் என்பவரால் புரிந்து கொள்ள பட்டு, அங்கிருந்தும் தப்பி, சந்தர்ப்பவசத்தால் கொலை செய்ய நேரும் ஒரு ஏழை மனிதனின் உணர்ச்சிகளை உணர்ந்து அவன் கொலை செய்ய படுவதை பார்த்து அங்கிருந்தும் ஓடி , விரக்தியில் ஓடும் ரயில் முன் உயிரை மாய்க்க முடிவெடுக்கிறாள். ஆனால் ஒரு நல்ல அப்பாவி விவசாயி சாந்தப்பனால் காப்பாற்றப்பட்டு ,அங்கிருந்து ஓடி , ஒரு நல்லிதயம் கொண்ட செல்வராஜ் என்ற தொழுநோயாளிக்கு உதவி, அங்கிருந்து வெளியேறி , ஒரு கூத்து நாடக குழுவிடம் அவர்களுக்கு ஒரு கூத்தில் நடித்து உதவ கோரப்பட்டு உதவ, கடைசியில் மாறுவேடம் போட்டு ,வீரப்பன் என்ற உயர் காவல் அதிகாரியிடம் அழைத்து வர பட, வீரப்பன்,ஆனந்தனின் சித்தப்பா என்ற உண்மை வெளியாகி ஆனந்தனிடன் சென்று சேர்ந்து கல்யாணம் நிறைவேறுகிறது. நவராத்திரி நாட்களில் நளினா கடந்து வந்த ,மனிதர்கள் கல்யாண விருந்தினர்களாக ஒரு சேர வந்து வாழ்த்த , சுபம். இயல்பான நகைசுவை பைத்தியக்கார விடுதியில், சாந்தப்பனின் வீட்டில், கூத்து நாடகத்தில்,உச்ச காட்சியில் என்று ஜனரஞ்சகமாக போவதே தெரியாமல் பொழுது போகும். சிந்தியுங்கள் ,கேவலமான தசாவதார அலுப்பூட்டும் திரைக்கதை,வலுவில் திணிக்க பட்ட ஒட்டாத பாத்திரங்கள் ,கொடூரமான ஒப்பனை ,உலகநாயகன் என்ற கேவலமான சுய தம்பட்டம் என்ற கொடூர சித்திரவதை நாடகமா? சினிமாவா?சிஷ்யன் என்று சொல்லி கமல் அடித்த கூத்து சகிக்க இயலாத சித்திரவதை.நவராத்திரிதான் உண்மை சினிமா.உண்மை திறமை காட்டும் நடிப்பு.
இதில் ஒரு விஷயம்.
எல்லோருமே ஏதோ ஒரு ரசத்தைத்தான் ஒவ்வொரு பாத்திரங்களும் பிரதிபலிப்பதாக ஏ.பீ.என் அவர்களில் டைட்டில் பேச்சு கேட்டு உளறி கொண்டிருந்தனர்.
அற்புதராஜ் ஒரு அற்புத கனவான் மட்டுமல்ல, பாசம்,கண்ணியம், உள்ளோடிய சோகம் கொண்டவன்.
குடிகாரன் பயந்தவன் மட்டுமல்ல. காம தீயின் தகிக்கும் தாபம் சுமந்தவன்,மனசாட்சியின் நச்சரிப்பு தாங்கியவன்.
டாக்டர் கருணாகரன் கருணை மட்டுமல்ல, கடமை,புத்தி கூர்மை ,எடை போடும் திறமை கொண்ட முதியவர்.
கொலைகாரன் ஆத்திரம் மட்டும் கொண்டவனல்ல, தம்பியை இழந்த உள்ளாடிய சோகம்,துயர், கொண்ட பழி வாங்கும் வெறியுணர்வு, ஒரு அடிப்படை மனிதனுக்குள்ள செயலுக்கு நியாயம் தேடும் விழைவு,சவால் விட்டு எதிரிகளை சாய்க்கும் ஒரு குழந்தைமை ,போனால் போகட்டும் என்ற விரக்தி அத்தனையும் பிரதிபலிப்பான்.
சாத்தப்பன், அப்பாவி நம்பிக்கைவாதி,நல்லவன் தாண்டி, குறும்பும் பிரதி பலிக்கும்.ஆற்றாமை கொண்ட நல்லமனம்.
செல்வராஜ், சுயவெறுப்பு,விரக்தி,நம்பிக்கையின்மை , குதற பட்ட வலி ,நன்றியின் அணைப்பில் ஆசுவாசம் என்று அனைத்தும்.
வீரப்பன் ஆண்மை நிறை கம்பீரம்,வீரம், குறும்பான அட்டகாசம் என்ற குணங்களின் கலவையாய்
ஆனந்தன் காதலி சார்ந்த விரக்தி, தோல்வி மனம்,காதல்,ஆனந்தம்,அவசரம் அனைத்தின் கலவை.
உணருங்கள் ,ஒரு பாத்திரத்துக்கு கிட்டத்தட்ட 13 நிமிடங்கள் மட்டுமே நேரம்.பாடல்களை கழித்தால் 11 நிமிடங்கள் மட்டுமே.
இந்த மேதை பாத்திர வார்ப்புகளுக்கு எந்த நடிப்பு முறைமையும் சாராத ,தன்வயப்பட்ட கற்பனை ஒன்றை மட்டுமே சார்ந்து இதனை சாதித்துள்ளார்.
பாமர மக்களுக்கு மனதில் பதியன் போட mannerism என்ற ஆயுதம்.
அற்புத ராஜுக்கு தோள் குலுக்கல் , குடிகாரனுக்கு பார்வை ,கருணாகரனுக்கு நடை -இள முறுவல்,கொலைகாரனுக்கு குரலின் தன்மை, சாந்தப்பனுக்கு வலிய கைகால் உடல் மொழி, தொழுநோயாளிக்கு உடல் குறுக்கல் -இறைஞ்சும் குரல்-பார்வை குறைவுக்கு கையின் உபயோகம் ,வீரப்பனுக்கு நடை-சிரிப்பு, ஆனந்தனுக்கு விழிகளின் கூர்மை என்று பாத்திரங்களின் வசியத்தை ,வீச்சை நெஞ்சுக்குள் ஆழமாய் குறுகிய நேரத்தில் ஆழமாய் ஊன்றுவார்.
இனி இந்த படத்தின் ,நடிப்பின் நுண்ணிய தருணங்களை மேலும் அலசுவோம்.
இந்த படம் ரியலிசம் என்ற பெயரில் ,சலிப்பான ஒரே வித நடிப்பை தருவதற்கு வந்த வழக்கமான ஜல்லியடிக்கும் சராசரி படமல்ல.ஆஸ்கார் வைல்ட் சொன்னது போல கலையின் தரத்தை,படிமத்தை உயர்த்தி ரசனையை மேலெழுப்பும் ஒன்று. ஒரு உலகத்தின் உயர்ந்த கலைஞனின் திறமைகளின் அணிவகுப்பை தரும் ஒன்று. இந்த நடிகன் நடிக்க வாகாக , திறமைக்கு தீனி போடும் ஒன்று.
உதாரணமாக ,ஒவ்வொரு மனிதர்களின் பழக்க வழக்கம் ஒவ்வொரு விதம். ரஜினிகாந்த் என்ற மனிதர்(பின்னால் வந்த நடிகர்) பழக்க வழக்கம் காணும் வாய்ப்பின்றியே, அவரின் பாணியில் எங்கள் தங்க ராஜாவில் நடிகர்திலகம் நடித்து காட்டவில்லையா? அதை அப்போது ஓவர் என்றவர்கள் ,அவர் நடித்து காட்டிய பாத்திரம் போலவே ஒரு நடிகர் வந்ததில் அதிசயித்து நின்றோமே? நடிகர்திலகம் நரம்பும் சதையுமாக ,ஆத்மாவில் புகுத்தி பண்ணிய ஒவ்வொரு பாத்திரமும் சத்திய நிதர்சம். அதனால்தான் sampling முறையில் அளந்து விட முடியாத இமயம் அவர் என்று திருப்பி திருப்பி சொல்கிறேன்.
மற்ற படங்களில் ஒவ்வொரு பாத்திரத்துக்கு கிடைக்கும் அவகாசம் இந்த படத்தில் கிடையாது. ஆனாலும் ஒவ்வொரு பாத்திரமும் இன்று கண்டது போல மனத்தில் நிலைக்க அந்த மேதை பண்ணிய மாயம் என்ன சொல்ல?பாருங்கள் ,பாத்திரத்துடன் அவர் நடிப்பில் காட்டிய விந்தையை விவரிக்கிறேன்.
1)அற்புதராஜ்- கண்ணிய கனவான். ஆனால் அந்த பார்வையை கவனியுங்கள். கண்டிப்பு,கலக்கம், கடமை,குழப்பம் என்று பல கலவைகள் நிறைந்த eccentricity தன்மை இருக்கும். தோள் குலுக்கும் mannerism ,ஸ்டைல் உடன் பாத்திரத்தையும் பதியன் போட்டு விடுமே?(நலீனா என்றழைக்கும் நயம்)
2)குடிகாரன்- காம விழைவு நிறைந்த கலக்க பார்வை. சிறிதே முரண்டு காட்டியதும் வன்விழைவு பின் பயம் கலந்த குழப்பத்துடன் சரண் என்று தன கதை விவரிக்கும் பாணி வசன முறையிலே ஒரு முத்திரை. தன்னிரக்கம், தடுமாற்றம், தன்னுடைய முடிவு சரிதான் என்று சொல்ல விழையும் வாலிபனை தடுமாற்றத்துடன் கூடிய அழுத்தம்.
3)கருணாகரன்- நடையில்,பார்வையில், எனக்கு தெரியும்,புரியும் ,உனக்கு அனுசரணையாக இப்போது உன்னை இங்கு அனுமதிக்கிறேன் என்று பேச்சு எந்த திசையில் திரும்பினாலும்,வேடிக்கையுடன் கூடிய மனோதத்துவ அழுத்தம்.பர பரப்புடன் ஆண்டனி இங்க நின்னுட்டிருந்த பொண்ணு என்று காட்டும் பாத்திரத்துடன் ஒட்டிய ஸ்டைல்.
4)கொலையாளி- போலீஸ் தன்னை கண்டு வந்ததாக நம்பும்
நளினாவை அந்த சந்தர்ப்பத்திலும் நக்கலாக தன்னை கண்டே வந்ததாக நெஞ்சு நிமிர்த்தி கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன், ஒரு அப்பாவி தனம் கலந்த நகைசுவை தெறிக்கும் பயப்படாதே,நான் ஒரு கொலை பண்ணினேன் என்று தம்பியின் பரிதாப கதை சொல்லும் ஒரு அடிப்படை மனித தனம், அதில் தன் செயலை நியாய படுத்தும் தொனி,எதிராளியை கொக்கி போட்டு அதற்கு அனுசரணையான பதிலை விழையும் தொனி(சொல்லும்மா யார்தான் என்ன பண்ண முடியும், ) சுட்டேன் சும்மா சுட்டேன் என்று சொல்லும் பழி வாங்கிய திருப்தி வெறி, மோதும் கட்டத்தில் காட்டும் எச்சரிக்கையான மூர்க்கம், கத்தி குத்தில் துடிக்கும் கவன ஈர்ப்பு என்று ஒரு நொடி கண்ணிமைக்க விடாமல் செய்யும் உன்னதம்.
5)சாந்தப்பன்- சாந்தமான விவசாயி. அப்பாவி என்பதை விட கிராமம் மட்டும் அறிந்த பாமரன். தன்னுடைய தங்கையின் கதையை சொல்லி நளினாவின் தற்கொலையை உரிமையுடன் இடிப்பது, பூசாரியுடன் விவாதிப்பது, பூசாரி ஆத்தா அவ்வப்போது அஞ்சு பத்து கொடுப்பதாக சொல்லியதை சொல்லி காட்ட ,அவ்வப்போதுதானே என்று சொல்லும் நகைசுவை, உன்மேலே ஆத்தா வந்துச்சுய்யா என்று சொல்லும் அப்பாவி பரவசம்,பூசாரி சொன்ன படி விபூதியடித்து மந்திரம் சொல்லி பயம் காட்டும் பாவம், கடைசியில் கட்டுப்படுத்த முடியாமல் போவது என்று அதகள இயல்பு காட்சி நகைசுவை.(situational Comedy )
6)செல்வராஜ்- சுயவெறுப்புடன் கூடிய அவநம்பிக்கை, நளினா உதவியால் சரியான இடத்திற்கு வந்த ஆசுவாசம் தரும் அடைக்கல நம்பிக்கை, அந்த ஆசுவாசத்தில் தன்னுடைய பழைய உருவ படத்தை கை குவித்து அரைகுறை பார்வையில் காண விரும்பும் விழைவு,அந்த தொழுநோயாளியின் நரம்பு பாதிப்பில் உணர்வற்ற காலை தூக்கி வைக்கும் நடை என்று எம்.ஆர்.ராதாவின் அரைகுறை நடிப்பை ஒன்றுமில்லாமல் ஆக்குவார்.
7)சிங்காரம்- சிவாஜி-ஏ.பீ.என் -கே.வீ.எம் இணையில் கூத்து காட்சிகள் என்றால் மீன்குஞ்சுகளுக்கு நீச்சலாயிற்றே? இந்த படத்தில் சோபித்த அளவு கூத்து காட்சிகள் எந்தவொரு தமிழ் படத்திலும் இது நாள் வரை சோபித்ததில்லை.சிங்காரமாக ஒரு சற்றே பெண்மை மிளிரும் மைய நடை (கூத்து கலைஞர்களுக்கே உரித்தான),செயற்கையான ஒரு ஓங்கு தாங்கான பாவனைகள்-உடல்மொழி , இயல்பான பணிவு(மக்களிடம்,புரவலர்களிடம் அண்டி பிழைப்பு நடத்துவதால்),தன்னுடைய சகாக்களிடம் கிண்டல் கேலி உரிமை, தொழில் நேர்மை,வாக்கு சுத்தம், இயல்பான நகைச்சுவை உணர்வு என்று இந்த பாத்திரம் நான் விளக்கியா புரிய வேண்டும்?
8)வீரப்பன்- கம்பீரமான,அடாவடியாக,கண்டிப்பான, ஆர்ப்பாட்டமான வீரம் நிறைந்த இந்த பாத்திரம் எங்கள் தங்க ராஜா பைரவனுக்கு, தங்கப்பதக்கம் சௌத்திரிக்கு என்று பல நடிகர்திலக வெற்றி பாத்திரங்களுக்கு முன்னோடி. சரளமான கடகடவென உருளும் சிம்ம சிரிப்புக்கு ,அந்த சாப்பாட்டு மேஜை அதகலத்துக்கு, நளினாவை ஆண் வேடத்திலும் அடையாளம் புரிந்து கலாய்க்கும் அட்டகாச கேலி என்று நம் மனதிலும் ஆண்மை கலந்த அடாவடி உணர்வை மிக செய்யும். ஆனந்தன்-நளினா ஜோடி பொருத்தத்தை கூட போலீஸ் சித்தப்பாவாகவே ரசித்து சிரிக்கும் அடாவடி பாணி.
9)ஆனந்தன்- சோகனாக தலைகாட்டும் விரக்தியாளன், எதிர்பாரா தருணத்தில் காதலி வந்ததும், வெறுமையான புரிதலில்லா
வெற்றுணர்வு,நிதர்சம் உணரும் சுதாரித்து, சிறிதே தெறிக்கும் கோபம்,படிப்படியாக உணரும் காதல் பரவசம், என்ன வா இப்படி, அட சும்மா வாங்கிறேன் என்ற கண்ணின் ஜாடை, கூந்தலை இழுத்து கட்டிலில் சரியும் உன்மத்தம் என்று அய்யோடா, அவரின் சிறந்த காதல் காட்சிகளில் தலையாயதாயிற்றே? கடைசியில் மணமேடையில் சத்தமாக அமங்கல சொல்லை உதிர்க்கும் ஆனந்தனை கண்டிக்கும் நளினாவும் , செல்ல கோபத்ததுடன் பம்மும் ஆனந்தனும், என்ன சொல்ல?
இத்தனையும் ஒரே படத்தில் . சவால் விட்டு வெல்ல கடவுளே போட்டி போட்டாலும் சத்தியமாக முடியாது
By Gopal
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...e4&oe=60667B5D
நன்றி கோபலகிருஷ்ணன் சுந்தரராமன்
கெத்து இல்லை
சிவாஜிக்கு இமேஜ் பற்றியெல்லாம் கவலையெல்லாம் கிடையாது.
இப்போதுள்ள ஹீரோக்களைபோல ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கவும்,
சாகஷங்கள் செய்து ஒரு ஆல் டைம் ஹீரோவாக உலா வரவேண்டும் ,
கெத்து காட்டவேண்டும், இப்படியெல்லாம் யோசித்ததே கிடையாது.
அப்படி கேரக்டடர்கள்தான் வேண்டுமென்று அடம் பிடித்ததும் கிடையாது.
நல்வனோ ,கெட்டவனோ, கூனோ ,குருடோ, நொண்டியோ, முடமோ,
பொலிநோ , திருடனோ எதுவானாலும் என்ன தயங்காமல் ஏற்று ,
நிறைவாக நடித்துத் தந்த அசாத்திய கலைஞன்.
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...e0&oe=60637710
Thanks Kb Murugan
கொடை வள்ளல் " சிவாஜி கணேசன் "
*திருச்சி திருவானைக்கால் கோயில், தஞ்சை பெரிய கோயில், தஞ்சை முத்து மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களுக்கு யானைகளை வழங்கியுள்ளார்
*கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலப்பட்ட இடத்தை ( 47 சென்ட்) வாங்கி தனது சொந்த செலவில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்து அது நினைவு சின்னமாக திகழ்கிறது.
* பள்ளிகளுக்கு பகலுணவு நிதியாக ரூ 1 லட்சம் இன்றைய மதிப்பில்
பல லட்சங்கள்
*மதுரையில் சரஸ்வதி பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்த பொழுது பாதிக்கப்பட்ட மாணவியருக்கு ரூ 1 லட்சம் அளித்தார்.
இன்றைய மதிப்பில் பல லட்சங்கள்
*கோயில் திருப்பணிகளுக்காக கிருபானந்த வாரியாரிடம் பல்லாயிரம் ரூபாய்களை நன்கொடையாக வழங்கினார்.
*தமிழக வெள்ள நிவாரண நிதியாக முதல்வர் எம்ஜிஆரிடம் நாடக வசூல் மூலம் ரூ 1 கோடிக்கு மேல் அளித்தார்.இன்றைய மதிப்பில் பல கோடிகள்
*1962-ம் ஆண்டில் சென்னையில் வெள்ளம் வந்தபோது உறைவிடத்தையும் உடமைகளையும் இழந்துத் தவித்த குடிசைவாழ் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களும் பண உதவியும் செய்தார்.
*சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை அமைத்தார்.தமிழகத்தில் பல பகுதிகளில் அம்பேத்கார் சிலை அமைய தாராளமாக நிதியுதவி செய்துள்ளார்.
*சென்னை பெசன்ட் நகரிலுள்ள மங்கையர்கரசி மகளிர் மன்றக் கட்டிடத்திற்காக தங்கப்பதக்கம் நாடகத்தின் ஒரு நாள் வசூலை அளித்தார்.
*தேசப்பாதுகாப்பு நிதிக்காக தமிழகத்தின் சார்பில் ரூ 5 லட்சம் வசூலித்து கொடுத்தார்.இன்றைய மதிப்பில் கோடிகள்
*தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய 17 லட்சம் இன்றைய மதிப்பில் பல கோடி வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.
*சேலத்தில் தங்கப்பதக்கம் நாடகம் நடத்தி அதன்மூலம் வசூலான தொகையில் சேலம் முள்ளுவாடி கேட் அருகில் உள்ள மாவட்ட காங்கரஸ் கமிட்டி கட்டிடத்தை வாங்கிக் கொடுத்தார்.
*1962 ல் இந்தியா சீனா போரின் போது பிரதமர் நேருவை சந்தித்து ரூ 40 ஆயிரம் யுத்த நிதியாக கொடுத்தவர்.
இன்றைய மதிப்பில் பல லட்சங்கள்
*1962 ல் இந்தியா சீனா போரின் போது டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மீண்டும் ரூ 25000 த்தைபோர் நிதியாக கொடுத்தார்
இன்றைய மதிப்பு பல லட்சங்கள்
* 1962ல் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்ட ராக்கி திரைப்படத்தின் அகில இந்திய ஒரு நாள் வசூல் முழுவதையும் யுத்த நிதியாக அளித்தார்.
*1960 களில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை
பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின்சிறப்பைஉலகிற்கு
உணர்த்தினார்.இன்றைய மதிப்பில்
சில கோடிகள்
*பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் போது அப்போதைய குடியரசு தலைவர் ஜாகிர் உசேனை சந்தித்து ரூ 50 ஆயிரத்தை யுத்த நிதியாக அளித்தார்.
இன்றைய மதிப்பில் பல லட்சங்கள்
* பெங்களூர் நாடக அரங்கம் கட்ட" கட்ட பொம்மன்" நாடகம் மூலம் ரூ 2 லட்சம் இன்றைய மதிப்பில் கோடி நன்கொடையாக அளித்தார்.
*பெங்களூர் மக்கள் நலனுக்காக ரூ 15 லட்சம்( இன்றைய மதிப்பு 10 கோடி) நிதியினை வழங்கினார்.
*கம்யூனிஸ்ட் கட்சிக்காக கட்டபொம்மன் நாடகம் நடத்தி தோழர் ஜீவாவிடம் நிதி உதவி அளித்துள்ளார்.
*வேலூர் பென்லன்ட் மருத்துவமனை கட்டிட நிதிக்காக வியட்நாம் வீடு நாடகத்தின் மூலம் ரூ 2 லட்சம் நிதி அளித்தார்.
*நாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திற்கு கோவில் மணி அமைக்கும் முழுச்செலவையும் ஏற்றார்.
*சென்னை கொசப்பேட்டை கந்தசாமி கோயில் தெப்பக்குளத்தில் செய்த திருப்பணி செலவை முழுமையாக ஏற்றார்.
*1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புயல் நிவாரண நிதிக்காக விருது நகரில் தெருத்தெருவாக சென்று பராசக்தி வசனங்களைப் பேசி ரூ 12 ஆயிரம்( இன்றைய மதிப்பில் லட்சம்) வசூலித்துக் கொடுத்தார்.
* 1957ல் இருந்து 1961 வரை பம்பாயில் நாடகங்கள் நடத்தி குழந்தைகளின் கல்விச் செலவுக்காக ரூ 5 லட்சத்தை இன்றைய மதிப்பில் கோடிகள்
*1960ல் தமிழகம் பெரும்புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, சிவாஜி கணேசன் 1 லட்சம் உணவுப் பொட்டலங்களையும், 800 மூட்டை அரிசியையும் தானமாகக் கொடுத்தார்.
*1961 ல் பிரதமர் நேருவிடம் கிழக்கு தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்கு ரூ 1 லட்சம் கொடையாக அளித்தார். இன்றைய மதிப்பில் பல லட்சம்
*1964 ல் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தில் ஒரு பெரிய கால்நடை மருத்துவமனையை அமைத்துக் கொடுத்து வாயில்லா ஜீவன்கள் மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தினார்.
*1967 ஆம் ஆண்டு உலக தமிழ் மாநாடு சிறக்க வள்ளுவர் சிலை அமைத்ததுடன் முதலமைச்சர் அண்ணா அவர்களிடம்
ரூ 5 லட்சம் வழங்கினார்.இன்றைய மதிப்பு பல கோடி
*1968 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி கட்டிட நிதிக்காக ரூ 1,30,000 அளித்தார். இன்றைய மதிப்பில் பல லட்சம்
*1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நிதியாக கலைஞரிடம் ரூ 1 லட்சம் கொடுத்தார் இன்றைய மதிப்பு பல லட்சம்
*திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் நடிகர் சிவாஜி, ‘வியட்நாம் வீடு’ நாடகத்தில் நடித்தார். அப்போது கிடைத்த வருவாய் ரூ.1 லட்சத்தை, திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு கட்டிடம் கட்ட நன்கொடையாக வழங்கினார்.
https://scontent-ort2-1.xx.fbcdn.net...f6&oe=60654389நன்றி வள்ளியம்மை
எல்லாம் இருக்கணும்.எதுவும் மிச்சம் இருக்கக் கூடாது.இப்படி செய்த படமே ராஜா! ராஜாவின் ஆட்சியில் குறை இருக்கலாமோ?
ராஜான்னா ராஜாதான்..
முன்னோடிகள் எல்லாம் பிழியோ பிழியென்று சாரெடுத்து விட்டார்கள்
ராஜாவை.நான் புதிதாக எழுத என்ன இருக்கிறது ?யாருடைய பார்வையிலும் ராஜா அழகோ அழகு.
ஒரு புதிய பட டிரெயிலரில் தண்ணீரில் இருந்து வில்லை எடுக்கும் காட்சி வரும்.வில்லை எடுக்கும் போது தண்ணீரும் கனமாக மொந்தமாக வில்லுடன் சேர்ந்து வரும்.ஸ்லோமோஷனில் க்ராபிக்ஸ் டெக்னிகல் உத்திகளில் ஷாட் அமைக்கப்பட்டு பார்ப்பவரை ஈர்க்கும்.ராஜாவை பாருங்கள்...ஒரு பொருளை எடுப்பதாகட்டும், கையாள்வதாக ஆகட்டும், கைகளை விரிப்பதில் ,கால்களை வைத்திருப்பதில் வார்னிஷ் முடிந்த வேலைபோல் பளீர்! பளீர்!
நடிகர்திலகத்துக்கு உவமை என்று எதைக் கூற முடியும்? ராஜாவில் நடிகர்திலகத்தின் பிரசன்டேசனை விக்கிரமாதித்தன் வேதாளம் போல் விடுகதை கதைப் புதிர்களாக ஒரு புத்தகம் போடலாம்.
சிகரெட் பற்றவைக்கும் காட்சி. சிறையில்.லைட்டர் நீட்டுவார் மனோகர் ..ஆரம்ப அறிமுகமாக காட்சி இது.எவ்வளவு சாதாரணமான காட்சி தான் இது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? ஆனால், ஸ்கிரீனில் காண்பிக்கும் போது அதிரி புதிரி அமர்க்களம் தான்! ரசிகர்களின் கூட்டமிருக்கும் போது, இந்த காட்சியை பெரும்பாலும் சரியாகவே பார்க்க முடியாது.அந்தளவுக்கு சிகரெட் லைட்டருக்கே விசில் பறக்கும், கை தட்டலில் அதிரும்.அலட்டிக் கொள்ளாத நடிப்பு பாணி இதில் முழுதும் ..பளஸ் அட்ரா விசில் ஸ்டைல்..ஸ்டைல்..ஸ்டைல்..
நின்றால் ஒரு ஸ்டைல்
நடந்தால் ஒருஸ்டைல்
பார்த்தால் ஒரு ஸ்டைல் ...
என்று ஏகத்துக்கும் சர்வ சாதாரணமாய் அள்ளி வீசியிருப்பார்.
போலீஸ்காரனை விரோதம் பண்ணிக்காதே, நண்பனாகவும் பழகாதே, பொதுவா இரு! ஆர் எஸ் மனோகரிடம் சொல்வார்..முதல் டயலாக் இது, படத்தில் நடிகர்திலகத்துக்கு..
அது என்ன அப்படியொரு வாய்ஸ்..ரொம்ப ரொம்ப கவர்ச்சி, காந்தம் அதில்...ரீவைண்ட் பண்ணி பண்ணி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்றிருக்கும்.ஆராய்ச்சி செய்தால் ஆயுள்தான் முடியும். அந்தக் குரல் ஒரு ஹிப்னாடிசக் குரல் .
நீ வரவேண்டும் என காத்திருந்தேன்....
வந்தார். வென்றார்.காத்திருக்க வைக்கவில்லை.பாலாஜி படமாச்சே.டாண் என்று ரிலீஸ் ஆகி விட்டது.இதற்கு முன் வந்த பாபுவில் நடித்தவரா? பாபுவில் ,கலர் கலராய் ரசிக்க முடியவில்லையே என நினைத்த ரசிகர்களுக்கு ராஜா ஒட்டு மொத்த திருப்தி செய்து விட்டது.ராஜாவின் டை பறப்பது போல ரசிகர்களுக்கும் உற்சாகம் பறந்தது.
பாயிண்ட் டூ பாயிண்ட் நான் ஸ்டாப் ரன்னிங் வேக காட்சிகள் தான் படத்தில்.அந்த வேகம் ஆரம்ப காட்சிகளில் இருந்தேதான்.ராஜாவின் என்ட்ரியே 16.30 நிமிடங்கள் கடந்துதான்.
மனோகரின் தகவல்,ஜெ,வை பார்ப்பது ,தன்னை எடை போடும்படி நடித்தல் ,அடுத்து பாலாஜி கும்பல், அதில் இணைதல், பாலாஜி விசாரணை, சேரில் கட்டி வைத்து அடித்தல் ...பாலாஜிக்கு நம்பிக்கை வரும்படியான செட்டப்புகள்,தொடர்ந்து பாலாஜியின் சந்தேகம் தீரல்......
இதற்கு பின் இப்படியொரு காட்சி அமைப்பு தான் வருமென்று யார் தான் நினைத்திருப்பார்கள்? புலியை கட்டிவைத்து அடித்து பட்டினி போட்டு சில நேரம் கழித்து அப்புலியை விடுவிக்கலாம் என்று பக்கத்தில் போனால், ஆனால் அது அடிபட்ட புலியாயிற்றே? என்ன நடக்குமோ, அது நடக்கும் .நான்கு முனை தாக்குதல், கை வீச்சு ,ஜூடோ கட் ,உதை என்று அதிரடியோ அதிரடி தான்..உத்திகளில் ,அசைவுகளில்
ஸ்பீடில் அமைக்கப்பட்ட காட்சியமைப்பு அது.ரொம்பவே பெர்பெக்டாக ,அதிரடியில் மாஸ் காட்டியிருப்பார் நடிகர்திலகம்.
இந்த உருவல்தானே 2013 விஸ்வரூபம்...
ரந்தாவிடம் பந்தாவாக பைட் செய்யும் காட்சிகள் வரும் போதுதான் ஜேம்ஸ்பாண்ட் பாணி படம் பார்க்கிறோம் என்று ஞாபகம் வரும்.சண்டைக்காட்சி என்பதாலும் அந்த பாணி படம் என்று சொல்லப்பட்டதாலும் தான் அது.அதுவரை ராஜாவின் ஸ்டைல்களால் அரண்ட மனம் வேறு எதையும் நினைக்க தோணவேயில்லை.ஜேம்பாண்டாவது ஒண்ணாவது! ராஜாவுக்கு முன்னே!
எல்லா படங்களையும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாய் செய்வதில்தான் நடிகர்திலகம் விரும்பினார்.அதனால் தான் ராஜாவை போல் அடுத்தது செய்யவில்லை.இதே மற்ற நடிகர்கள் செய்திருந்தால் ராஜா போலவே பத்து படங்கள் வந்திருக்கும்.ஒரு ராஜா! ஒரு அரியாசனம்!!.இது நடிகர்திலகத்தின் கொள்கை ..
கோயில் நகை கொள்ளை பிளான்,அதில் கோகுலத்தில் கண்ணன் இல்லையோ பாடல், நாகையாவின் தவிப்பு, என செல்லும் திரைக்கதையின் முடிவில் தங்கப்பதக்கம் இளமை சௌத்ரீயாக வத்து நிற்பார் ராஜா! புல் போலீஸ் யூனிபார்மோடு.இத்தனை நேரம் ஸ்டைல் காட்டிய ராஜாவா அது! செம அதிர்ச்சி பாலாஜி கூட்டத்திற்கு மட்டுமல்ல.ரசிகர்களாகிய நமக்கும் தான்.ஆனால் அது நமக்கு இன்ப அதிர்ச்சி!
பின் ரங்காராவை சந்திப்பது,
நம்பிக்கை பெறுவது என முக்கிய கட்டங்களாய் காட்சிகள் ஒவ்வொன்றும் ஆவலை தூண்டிக் கொண்டேயிருக்கும்.திரைக்கதை ஸ்பீடில் க்ளைமாக்ஸ் வந்து நிற்பதே
தெரியாது.நீண்ட க்ளைமாக்ஸ் கொண்ட தமிழ் சினிமாக்களில் ஒன்று .எத்தனை ரசனையானது என்பதில் டாப் என சொல்லலாம்.அதிக ஆக்ஷன் இல்லாமல் பேசி பேசியே பல்ஸை எகிற வைப்பார்கள் அத்துணை நடிகர்களும்.தேர்ந்த நடிகர்கள் ...
ஆர் எஸ் மனோகரின் அலறல்
ரங்காராவின் மிரட்டல்
பண்டரிபாயின் கதறல்
என்று தியேட்டரே அதிறும்.
ராஜாவின் சிரிப்பை என்னவென்று சொல்வது? சொல்லாதவர்கள் தான் யார்? இது போன்ற காட்சிகளில் நடிகர்திலகத்தை தவிர யாரும் நினைவுக்கு வர மாட்டார்கள்.மற்ற காட்சிகள் மட்டும் என்ன? மஞ்சள் கலர் உடைகளை ஆண்கள் அதிகம் விரும்ப மாட்டார்கள். உடுத்தவும் மாட்டார்கள்.ஆனால், நடிகர்திலகத்துக்கு மட்டும் எப்படி அப்படி அந்த உடை பிரமாதப்படுத்துகிறதோ?
பண்டரிபாயை அடிக்கையில் ,நடிகர்திலகம் நடிப்பால் மொத்த க்ளைமாக்ஸையும்
தன் பக்கம் இழுத்து விடுவார்.
ராஜா தீபாவளி படமல்ல.
ஆனால் ரசிகர்களுக்கு அன்றுதான் தீபாவளி!
https://static.xx.fbcdn.net/images/e...1/16/1f64f.pnghttps://static.xx.fbcdn.net/images/e...1/16/1f64f.pnghttps://static.xx.fbcdn.net/images/e...1/16/1f64f.png
செந்தில்வேல் சிவராஜ்
https://scontent-ort2-1.xx.fbcdn.net...be&oe=60635EF4
நன்றி செந்தில்வேல் சிவராஜ் --சிவாஜி குறூப்