Welcome Pammalar saar! :)
Printable View
Welcome Pammalar saar! :)
திரு பம்மலார் அவர்களே,
நடிகர்திலகத்தின் அன்பு நெஞ்சங்களோடு ஐக்கியமாக வந்திருக்கும் தங்களை மகிழ்ச்சி ததும்ப,கண்கள் பனிக்க,உளமார வரவேற்கிறோம்.
பம்மல் சார்,
ஒவ்வொரு தடவை நீங்கள் இங்கே செய்தியை உள்ளிடும் போது 'New topic' -பதில் 'postreply' -ஐ தேர்ந்தெடுக்கவும் ..இல்லையென்றால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புது திரியாக வெளிவரும்.
ஏற்கனவே உள்ள நடிகர் திலகம் திரியில் 'postreply' மூலமாக உங்கள் புதிய செய்திகளை உள்ளிடும் படி பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
எம்மை வரவேற்ற அனைவருக்கும் முதற்கண் எமது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திரியின் தொடக்கம் முதல் இன்று வரை பற்பல அழகிய பதிவுகளை புதுப்பொலிவோடும், மிகுந்த நேர்த்தியோடும் வழங்கி வரும் இத்திரியைச் சார்ந்த அனைவருக்கும் எமது பணிவான வணக்கங்களையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
Thanks to Mr. Joe & Mr. Thirumaran for guiding me rightly to click the POST REPLY button.
Regards,
Pammal R.Swaminathan.
பம்மலார் திரு. சுவாமிநாதன் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்..
உங்களது கைவண்ணத்தில் இத்திரி மேலும் மெருகேறப்போகிறது என்பதும், உங்களது பங்களிப்பின்மூலம் நடிகர்திலகத்தைப்பற்றி எங்களுக்கு மேலும் பல அரிய விஷயங்கள் கிடைக்கப்போகிறது என்பதும் திண்ணம்.
ஆவலுடன் காத்திருக்கிறோம்...
நமது நடிகர் திலகம் அவர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கையை ஆறு கூறுகளாக (பிரிவுகளாக) மேலோட்டமாக பட்டியலிட்டு பிரிக்கலாம். அவையாவன :
# நாடக வாழ்க்கை
# திரைப்பட வாழ்க்கை
# அரசியல் வாழ்க்கை (கட்சி சார்ந்தது)
# பொது வாழ்க்கை (சமுதாயம் சார்ந்தது)
# குடும்ப வாழ்க்கை
# ஆன்மீக வாழ்க்கை
இத்தனை பிரிவுகளிலும், நிரைந்த தகவல்களை பற்பல புத்தகங்கள் எழுதுமளவுக்குப் பெற்றுத் திகழும் ஒரே பிரமுகர் நமது நடிகர் திலகம் ஒருவர் மட்டும் தான்.
அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
Quote by Hamid
// Dear Pammalar...
Welcome to HUB.. Please share your experience with NT.. You are the editor of Vasantha Maaligai? great....My fav film of all times Would love to hear from you in the coming days.. //
டியர் Hamid,
பம்மலாரைப்பற்றி தவறாக புரிந்துகொண்டீர்கள் என்று நினைக்கிறேன்...
அவர் 'வசந்தமாளிகை' இதழின் ஆசிரியராக இருந்தவர்.
உங்கள் போஸ்ட்டில், அவர் வசந்தமாளிகை திரைப்படத்தின் 'படத்தொகுப்பாளர்' என்பதாகத் தொனிக்கிறது.
Dear Saradha,
Thanks for the information. Yes, I mistook him to be the editor of VM film.. :oops:
இன்று (15.9.2009) பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினம்.
மேலும் அவரது நூற்றாண்டு இன்று நிறைவடைகின்றது.
இதையொட்டி கோலாகலமான விழாக்கள் கொண்டாடப்பட்டு
வருகின்றன. இந்த நேரத்தில் நமது நடிகர் திலகத்திற்கும், அவரை
முதன்முதலில் உலகப்பெருநடிகர் என்று புகழ்ந்துரைத்த
பேரறிஞருக்கும் இடையே இருந்த ஆத்மார்த்தமான நட்புணர்வை,
நேசமிகு நல்லுறவை பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வது
சாலப்பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
அன்புடன்,
பம்மலார்.
பகிர்ந்து கொள்ளுங்கள் ..மிக்க ஆவலாயிருக்கிறோம் :DQuote:
Originally Posted by pammalar
இத்தனை நாள் இந்த திரியின் வாசகராக மட்டுமே இருந்த சுவாமிநாதன் இன்று முதல் பங்களிப்பாளராகவும் மாறுவதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.
நடிகர் திலகத்தைப் பற்றிய புத்தங்கங்களின் வரிசையில் மேலும் ஒரு தகவல். பொம்மை மாத இதழ் முன்பு வெளியாகி கொண்டிருந்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் 1977-ல் தொடங்கி கிட்டத்தட்ட பதினெட்டு மாதங்களுக்கு நடிகர் திலகம் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த கேள்வி பதில் தொகுப்பை ஒரு புத்தக வடிவில் டால்டன் பப்ளிகேஷன்ஸ் [சந்த மாமா, அம்புலி மாமா மற்றும் பொம்மை வெளியிட்டாளர்கள்] வெளியிடுகிறார்கள். இது தவிர பொம்மை இதழில் கதாநாயகனின் கதை என்று நடிகர் திலகம் ஒரு தொடர் கட்டுரை எழுதினார். அதுவும் புத்தக வடிவம் பெறுகிறது. அனேகமாக அக்டோபர் மாதமே இந்த புத்தகங்கள் வெளியாகலாம்.
அன்புடன்
பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள் நடிகர்திலகத்தின் அதி தீவிர ரசிகர் என்பது மறுக்க முடியாத உண்மை. பராசக்தி தொடங்கி தமது மறைவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் வெளிவந்த உயர்ந்த மனிதன் வரை பல திரைப்படங்களை கண்டு களித்து நடிகர்திலகத்தின் நடிப்பை வெகுவாக ரசித்து மகிழ்ந்தவர். இத்துணையும் அவரது ஒய்வற்ற, அயராத அரசியல் பணிகளுக்கிடையே!
"பராசக்தி திரைப்படத்தை கணேசனைக் கதாநாயகனாகக் கொண்டு தான் தயாரிப்பேன்" என்று உறுதியோடு நின்ற நடிகர் திலகத்தின் இதயதெய்வம் திரு. பெருமாள் அவர்களுக்கு அன்று உறுதுணையாக இருந்து ஊக்கமளித்தவர் அண்ணா. மேலும், தமது உடல்நிலை சரியில்லாத நிலையிலும், நடிகர் திலகத்தின் 125வது திரைப்படமான உயர்ந்த மனிதன் திரைப்பட விழாவிற்கு 15.12.1968 அன்று தமிழக முதல்வராக வருகை புரிந்து நமது நடிகர்திலகத்தை பாசத்தோடு பாராட்டி மகிழ்ந்தவர் அண்ணா. இந்த விழா சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பேரறிஞர்-நடிகர் திலகம் தகவல்கள் தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட் (20.9.2009) ராணி வார இதழின் "அல்லி பதில்கள்" பகுதியில் வெளியாகியுள்ள ஒரு கேள்வி-பதில் :
சிவாஜி என்றதும் நம் நினைவுக்கு வருபவர் மராட்டிய மன்னரா? நம் நடிகர் திலகமா? (ஆ.கோ. தேவராசன், சிந்தலப்பட்டடை)
வீரம் என்றால் அந்த சிவாஜி! நவரசம் என்றால் இந்த சிவாஜி!
என்னே அருமையான பதில்! நவரசத்தினுள் வீரமும் அடக்கம் தானே!
இந்தக் கேள்வி-பதிலின் அருகாமையில் சிறிய அளவுகளில் சத்ரபதி சிவாஜி புகைப்படமும், நமது நடிகர் திலகத்தின் பக்த துக்காராம் சிவாஜி கெட்டப் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளன. சத்ரபதி படம் அசல் என்றால், சிவாஜி வேட புகைப்படத்தில் நம் நடிகர் திலகம் அசலை விஞ்சிய அசலாக காட்சியளிக்கிறார்.
விரைவில் வருகிறது சிவாஜி புரொடக்ஷ்ன்ஸ் அஜீத் நடிக்கும் அசல் !!!
அன்புடன்,
பம்மலார்.
:D Good one, Pammalar-sar. Now, you have captured the attention of Ajith fans. :)
திரு பம்மல் சார்,
தங்களின் வருகை எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது.தங்களின் எழுத்து நடையும் ஏறக்க்குறைய இந்த திரியின் நாயகன் திரு.முரளி சாரின் நடையைப்போலவே உள்ளது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை த்ந்துள்ளது.தொடர்ந்து கலக்குங்கள்.
மேலும் நீங்கள் வசந்தமாளிகை இதழை நடத்திய போது உங்களோடு இருந்தவர்களை(குறிப்பாக நாஞ்சில் இன்பா போன்றவர்களை)இந்த திரிக்கு கொண்டு வரவேன்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
I fully agree with you-the absence of such Sivaji's films will ruin the current generation. It is a pity.Quote:
Originally Posted by abkhlabhi
I haven't seen this photo earlier. ThanksQuote:
Originally Posted by abkhlabhi
சமீபத்தில் 1976-ம் ஆண்டின் 'பொம்மை' மாத இதழொன்றைக் காண வாய்ப்புக்கிடைத்தது. அப்போது அந்தப்பத்திரிகையில் 'மாதம் ஒரு நடிகர் பதில்கள்' என்ற வரிசையில் நான் பார்த்த இதழில், மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் பதிலளித்திருந்தார்...
ஒரு வாசகரின் கேள்வி: "சமீபகாலமாக சிவாஜியின் படங்கள் சரியாக அமையவில்லையே. அவர் திறமை குறைந்துவிட்டதா?"
திரு. ஜெய்சங்கர் பதில்: "தங்கத்தின் விலை ஏறலாம் இறங்கலாம். அது தங்கத்தின் குற்றமல்ல. தரத்தில் தங்கம் என்றைக்கும் தங்கம்தான். அதுபோலத்தான் நம் நடிகர் திலகமும். அவர் திறமை என்றைக்கும் குறையாது. புகழ் என்றைக்கும் சரியாது".
Nice reply from JaiShankar :clap:
டியர் முரளி,Quote:
Originally Posted by Murali Srinivas
1980-களில் வேட்டைக்காரன்புதூர் திரு. முத்துமாணிக்கம், நடிகர்திலகத்துடன் சேர்ந்து வேட்டைக்குச்சென்ற தன் அனுபவங்களை ஒரு வார இதழில் (மணியனின் 'இதயம்பேசுகிறது' வார இதழ் என்பதாக நினைவு) 'வனத்தில் சில வசந்தங்கள்' என்ற தலைப்பில் தொடராக எழுதி வந்துள்ளார். அவற்றில் சில இதழ்களைப் முன்னொருமுறை படிக்க நேர்ந்தது. மிகவும் விறுவிறுப்பாகவும், நடிகர்திலகத்தின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுவதாகவும் அமைந்திருந்தது.
இப்போது வெளிவரப்போகும் 'வேட்டைக்கு வந்த சிங்கம்' நூல் அனேகமாக அந்தக்கட்டுரைத்தொடரின் தொகுப்பாக இருக்கக்கூடும். முழு புத்தகத்தையும் படிக்கும்போது, படிப்பவர் அனைவருக்கும் மிகவும் 'த்ரில்லான' அனுபவம் கிடைக்கும் என்பது நிச்சயம்.
நடிகர் திலகம் .....ஒரு அஞ்சலி ... BY MOHAN RAM
இன்று தான் அவர் நம்மை விட்டு பிரிந்த நாள் . 21st ஜூலை 2001.
ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருது . ஒரு முறை அவரோடு பேசிக்கொண்டு இருந்தேன் ..பல விசயங்களை அலசிவிட்டு நடிப்புக்கு வந்தோம் .அவருக்கு அப்பொழுது உடல் நலம் சற்று குறைவு . இருந்தாலும் நடித்துக்கொண்டு இருந்தார் . நான் அவரிடம் ' எப்பொழுது ரிடயர் ஆவிர்கள் என்று கேட்டேன் ....ஏன் ? நான் நடிக்கறது உனக்கு புடிக்கலையா இல்ல உன் TV நடிப்பு க்கு நான் போட்டியா ? என்றார் ....சிருத்துக்கொண்டே ..
இல்ல அப்பா உங்க உடம்புக்கு ஏன் ஸ்ட்ரைன் தரீங்க என்டறேன் ....பதில் வரவில்லை ..மீண்டும் கேட்டேன் ...சற்று யோசித்து சொன்னார் ...என்னக்கி கணேசன் செட்டுக்கு லேட்ஆ வரானோ அன்னக்கி ரிடயர் ஆகிவிடுவாண்டா என்றார் ...அந்த அபார மனிதனின் தொழில் பக்தியை பற்றி யோசித்தேன் . காலத்தை மற்றவர் நேரத்தை அவர் மதித்ததை பற்றி யோசித்தேன் ...எனக்கு பேச்சு வரவில்லை ....சற்று நேரம் அவர் என்னை பார்த்தார் , யோசித்து விட்டு திரும்பினார் ..இரண்டு அடி எடுத்து ,திரும்பி என்னை பார்த்து சொன்னார் ....இல்லடா மோகன் அன்னக்கி கணேசன் செத்துடுவாண்டா .... செத்துடுவான் .....
ஒரு வேலை இன்று ஏழு ஆண்டுகளுக்கு முன் அவர் செட்டுக்கு லேட்ஆ போனாரோ ....... இல்லை, இல்லை ரொம்ப சீக்ரமாகவே போய்விட்டார் .....
(CRIED WHEN I READ THE ABOVE PARA - akhlabhi)
நடிப்புக்கு மற்றும் அல்ல ..தொழில் பக்திக்கும் இலக்கணம் வகுத்தவரை இன்றும் என்றும் மறவாதிருக்க எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
Thansk Mohan Ram
நன்றி திரு. ஹரீஷ். தாங்கள் கூறியவற்றை காலப்போக்கில் கணேசரின் அருளோடு நிறைவேற்றுவோம்.
சகோதரி சாரதா அவர்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கம் ! தாங்கள் வெளியிட்டுள்ள பொம்மை இதழின் தகவலும் 24 காரட் தங்கத்துக்கு நிகரானதே !!
அன்புடன்,
பம்மலார்.
Dear Pammal R. Srinivasan,
A dashing opener has emerged in you in our thread. Your positings evoke much interest in each one of us. Thank you for your interesting posts and expecting more and more info.
Dear Balakrishnan,
Your sincere effort in reproducing the write ups in various pages on NT have taken us to our good old days when we had the privilege of working for him. Each and every colleague of NT is uniform in his/her praise of NT - which eventually proves that he has only one face and it is the same face to show everywhere - which means he is one person does not change colors to rooms. And we are really proud to read them. Keep posting them more and more.
Raghavendran
சினிமா எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் வெளியாகியிருக்கும் ஒரு கட்டுரை.
இதை எழுதியிருப்பவர் சித்ரா லட்சுமணன்
உள்ளதைச் சொல்கிறேன்: ஆற்றல் மிக்க விழிகள்!
""சிவாஜியின் மிகப்பெரிய சொத்து அவருடைய ஒளிமிக்க, உயிர்ப்புள்ள கண்கள்தான். அந்த கண்களை வைத்துத்தான் பரிவை, பாசத்தை, பயத்தை, கோபத்தை, அழுகையை, ஆச்சர்யத்தை, அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, வீரத்தை, விவேகத்தை அவர் அதிகமாக வெளிப்படுத்தினார். "பாசமலர்' படத்தில் "மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்...' பாடல் வரிகள் துவங்குவதற்கு முன் பால் தம்ளர் கையில் ஏந்தி வந்தவர், கண்ணுறங்கும் தங்கையைப் பார்த்து, வட்டக் கருவிழியின் அடியில் இலேசாக நீர் தேக்கி, பாசத்தை வெளிப்படுத்துவார்.
"பாவமன்னிப்பு' படத்தில் எம்.வி.ராதம்மாதான் தன்னைப் பெற்ற அன்னை என்று அரியாத சிவாஜி, ஒரு காட்சியில் நன்றிப் பெருக்கால் "அம்மா, அம்மா, அம்மா' என்று பாசத்தை, நன்றியை கண்களில் தேக்கி அழுது கொண்டே சிரிப்பார். புத்தரின் சாந்தத்தையும் அந்தக் கண்கள் வெளிப்படுத்தும். போதையுடன் தள்ளாடும் குடிகாரனையும் அந்தக் கண்கள் வெளிப்படுத்தும். அப்படி ஒரு ஆற்றல் மிக்க விழிகள் அவை. அழகான சிறிய உதடுகள் அவருக்கு. சிரித்தால் கன்னங்களில் எலுமிச்சம் பழம் போல கன்னச் கதுப்புகள், சிரிப்புக்கு அழகூட்டும். இடது பக்கமுள்ள சிங்கப்பல், கவர்ச்சியைக் கூட்டும்.
தமிழை அவர்போல் உச்சரித்த நடிகர்கள் இதுவரை பிறக்கவில்லை. தமிழ் மொழியில் அவரளவுக்கு அதிகப்படியான எண்ணிக்கையில் தமிழ் வார்த்தைகளைப் பேசி நடித்த நடிகர் வேறு யாருமே இருக்க முடியாது. ஒரு நடிகன் வேஷம் கட்டுவதிலேயே 50 சதவிகித மார்க் வாங்கிவிட வேண்டும் என்று சொல்வார். விதவிதமான வேடம் அணிந்து பார்ப்பதில் அவருக்கு அடங்காத வெறி உண்டு. சரித்திர நாயகர்களாக இருந்தாலும் சரி, புராண வேடங்களாக இருந்தாலும் சரி, சமூகத்தில் காணும் வித்தியாசமான மனிதரின் வேடமாக இருந்தாலும் சரி அவற்றை ஆதாரபூர்வமாகச் செய்து பார்க்க பெரிதும் முயற்சி எடுத்துக் கொள்வார் சிவாஜி.
"கட்டபொம்மன்', "கர்ணன்', "ராஜ ராஜ சோழன்', "அரிச்சந்திரன்', "ஜஹாங்கீர்' என ராஜா வேடம் போடும்போது உடைகள், கீரிடம், முகத்தின் தோற்றம், தாடி, மீசை, புருவம் இவற்றிலும், தலை முடியிலும் மாற்றங்களைத் தெளிவாகக் செய்வார். அதேபோல் ராமன், இராவணன், கிருஷ்ணன், நாரதர் என்று புராண வேடங்களை ஏற்கும்போதும் தேர்ந்த நாடகத்துறை உடையலங்கார நிபுணர்களை வைத்துக்கொண்டு காதில் அணியும் தோடு, ராமர், பரசுராமர், அர்ஜுனன் கையில் உள்ள ஆயுதங்களை எல்லாம சரி பார்ப்பார்.
"பாடி லாங்குவேஜ்' என்று சொல்கிற உடல்மொழி அவருக்கு முதல் படத்திலேயே வந்து விட்டதை "கல்லைத்தான், மண்ணைத்தான், காய்ச்சித்தான், குடிக்கத்தான், கற்பித்தானா' என்று நடிக்கும் ஒரே காட்சியை "பராசக்தி' படத்தில் பார்த்தாலே புரிந்துவிடும்.
சிவாஜி வேடத்தில் அவர் நடித்ததை நாம் பார்த்திருக்கிறோம். அந்த தலைப்பாகை, தாடையிலிருந்து நீண்ட தாடி, சிக்கென்ற ராஜ உடை, நீண்ட வாள் இவற்றுடன் நீண்ட வசனத்தை, அங்க அசைவுகளுடன் பேசி, சிங்க நடையோடு அவர் நடித்ததை இன்னொருவர் முயன்று பார்க்கட்டும். சங்கிலியால் கட்டிச் சபையில் இழுத்துவர புலி போல் ஒரு நடை நடந்து வருவார் "மனோகரா' படத்தில்! மரமேறும் சாமுண்டி கிராமணியாய் "காவல் தெய்வத்தில்' கைத்தட்டல் பெறவே ஒரு நடை நடப்பார். "போனால் போகட்டும் போடா' பாடலில் இசைக்கேற்ப, தாளத்துக்கேற்ப ஒரு நடை நடப்பார். "சட்டி சுட்டதடா, கை விட்டதடா' பாடலுக்கு ஒரு வித்தியாசமான "வாக்கிங் ஸ்டிக்' ஊன்றிய நடை. அப்பர் சுவாமிகளாக "திருவருட் செல்வரில்' முதிர்ந்த பெரியவர் நடை.
"வெற்றிவேல், வீரவேல், சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல்' என்ற "கந்தன் கருணை' பாடலில் முழங்கும் போர் முரசுக்கு இசைவாக ஒரு கம்பீர நடை. அவருடைய நினைவாற்றல், கிரஹிக்கும் சக்தி அபாரமானது. காட்சிக்கான வசனங்களை மற்றவர்களைப் படிக்கச் சொல்லி கேட்டு மனப்பாடம் செய்து கொண்டு நடிப்பதில் அவரைவிட வேறு யார் செய்ய முடியும்? நடிக்கின்ற எந்தக் காட்சியிலும் உணர்ச்சியின் உச்சத்தைத் தொடும் சிவாஜி அடிக்கிற காட்சிகளில் பாசாங்கு செய்ய மாட்டார், பட்டையைக் கழற்றி விடுவார்.
"உயர்ந்த மனிதன்' உச்சகட்ட காட்சியில் திருட்டுப் பழி சுமத்தப்பட்ட தன்னை பிரம்பால் அடிக்கும் காட்சியில் பிரம்பு நாலாய் தெரிக்கும் அளவிற்கு விளாசித் தள்ளி விட்டார். அவரைக் கட்டுப்படுத்த செüகார் ஜானகியும், பாரதியும் எவ்வளவோ முயன்று சட்டையை எல்லாம் கிழித்துக் கூச்சல் போட்டனர். இன்றும் அந்தக் காட்சியைப் பார்த்து கலங்காதவர் இருக்க முடியாது. ஜெமினியின் "விளையாட்டுப் பிள்ளை' படத்தில் ஒரு காட்சியில் பத்மினியின் கன்னத்தில் ஒரு அறை விட்டார். காது தோடு கழன்று ஓடி அடுத்த படப்பிடிப்புத் தளத்தில் விழுந்து விட்டது. ஷாட் முடிந்ததும் பத்மினி ஐந்து நிமிடம் அனுமதி பெற்று வெளியே போனார். போனவர் சிறிது நேரம் உள்ளே வரவில்லை. என்ன நடந்தது என்று பார்க்க உதவி இயக்குனர் சென்றார். நாற்காலியில் உட்கார்ந்து, முகம் சிவக்க, உதடுகள் துடிக்க, கண்களில் நீர் பெருக்கியவாறு இருந்தவரைப் பார்த்து பதறிப்போய், ""என்னம்மா'' என்று கேட்க, ""ஒன்றுமில்லை வலி தாங்க முடியவில்லை, முழுசா அழுதிட்டு வந்திடறேன், ஐந்து நிமிடம் பொறுத்துக்கங்க'' என்றாராம் பத்மினி.
உலகின் எந்த ஒரு நடிகனும் ஒரே நாளில் மூன்று வித வேடங்கள் ஏற்று நடித்ததில்லை. "டென் கமாண்ட்மெண்ட்ஸ்', "பென்ஹர்', "லாரன்ஸ் ஆஃப் அரேபியா', "ஓமர் முக்தார்', "சாந்தி' போன்ற எந்தப் படத்து ஹீரோவும் மூன்று ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் என்று ஒப்பந்த அடிப்படையில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அந்தப் படம் முடிந்த பின்னரே அடுத்த படம், வேடம் பற்றி சிந்திப்பார்கள். ஆனால் சிவாஜி காலையில் ரிக்ஷாக்காரன் வேடம் போட்டு நரைத்த தாடியும், பரட்டைத் தலையும் கிழிந்த கோட்டுமாய் கைரிக்ஷா இழுத்து நடிப்பார். பிற்பகல் மகாவிஷ்ணு வேடம் போட்டு, பாடல் காட்சியில் நடிப்பார். இரவு அந்த வேடத்தைக் கலைத்துவிட்டு பள பளப்பாக மின்னும் கோட்டும் சூட்டுமாக "சொர்க்கம்' படத்தில் நடிப்பார். ஹாலிவுட்டில் எந்த நடிகரும் இப்படி செய்திருக்க வாய்ப்பில்லை.
""அடுத்த தலைமுறைகளுக்குக் குறிப்பிட்டுச் சொல்ல எந்த வேடத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. நாங்கள் எந்த வேடம் போட்டு நடித்தாலும், அவர் நடித்த, அந்த வேடங்களைத் தாங்கிய படங்களை முன்மாதிரியாக ஒரு முறை பார்த்துக் கொள்கிறோம். அந்த யுகக் கலைஞன் ஹாலிவுட்டில் பிறக்காதது அவரது துரதிருஷ்டம். தமிழ் நாட்டில் பிறந்தது நம் அதிர்ஷடம்'' என்று "இது ராஜபாட்டை அல்ல' என்ற தனது நூலில் சிவாஜிக்கு புகழாராம் சூட்டியுள்ள சிவகுமார். சிவாஜியோடு இணைந்து நடித்த "ராஜராஜ சோழன்' 1973-ல் வெளியானது.
தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் சினிமாஸ்கோப் சித்திரமான "ராஜ ராஜ சோழன்' படத்தில் நடித்த அனுபவத்தை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார் சிவாஜி.
""நான் ஒரு சோழன். தஞ்சாவூர்க்காரன். ஆகையால் நான் ராஜ ராஜ சோழனாக நடித்தது எனக்கு மிகப்பெருமை. ஏனென்றால் என்னுடைய தாத்தா பாட்டன் ரோலை நானே நடித்தேன். அந்தப் படத்தை ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் திரு. உமாபதி எடுத்தார். அந்தப் படத்தை ஏ.பி. நாகராஜன் இயக்கினார். சரித்திர நாடகம், சரித்திரக் கதைகள் எடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிகம் செலவு செய்து எடுக்க வேண்டும். பிரம்மாண்டமான யுத்தக் காட்சிகளெல்லாம் காண்பிக்க வேண்டும். இப்படியெல்லாம் காண்பித்தால்தான் "ராஜ ராஜ சோழன்' நன்றாக இருக்கும்.
ஒரு சின்ன பாளையரக்காரனான கட்டபொம்மனையே பெரிய சக்ரவர்த்திபோல் காண்பித்தோம் அல்லவா? அப்படியிருக்க சக்ரவர்த்தி ராஜ ராஜ சோழனை எவ்வளவு சிறப்பாக காண்பிக்க வேண்டும்? அதையெல்லாம் அந்தப் படத்தில் சரியாகக் காண்பிக்கவில்லை. "ராஜ ராஜ சோழன்' படத்தை ஒரு குடும்ப நாடகம் போலதான் எடுத்திருந்தார்கள். நாடகம் போடும்போது அது சரியாக இருந்திருக்கலாம். ஆனால் திரைப்படத்திற்கு இந்த பாணி ஒத்து வருமா? இந்தப் பக்கம் மகன், அந்தப் பக்கம் அக்கா, இன்னொரு பக்கம் மனைவி, மற்றொரு பக்கம் மருமகள் என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டியதால் படம் அவ்வளவு சிறப்பாக ஓடவில்லை'' என்று "ராஜ ராஜ சோழன்' படம் குறித்து விமர்சித்துள்ளார் சிவாஜி.
இதுதான் அவரது தனி குணம். தான் நடித்து விட்டோம் என்பதற்காக தனது படங்களைப் பற்றி உயர்வாகப் பேசுகின்ற போக்கை சிவாஜி என்றுமே கடைப் பிடித்ததில்லை.
மற்றவர்கள் விமர்சிப்பதற்கு முன்னால் தனது படங்கள் பற்றி அவரே விமர்சித்து விடுவார். தனது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை பரிபூரணமாக உணர்ந்திருந்ததால்தான் தனது திரையுலகப் பயணத்தில் எந்தத் தடுமாற்றமும் இன்றி அவரால் வெற்றி நடை போட முடிந்தது.
அன்புடன்
PS: இதை "சுட்டிக்" காட்டிய மணிசேகரன் சார் அவர்களுக்கு மனங்கனிந்த நன்றி.
இந்த வார (23.9.2009) தேவி இதழில் "பெரியார்" புகழ் நடிகர் சத்யராஜ் :
"நடிகர் திலகம் சிவாஜி சாரின் லட்சியம் தந்தை பெரியாராக நடிக்க வேண்டும் என்பது தான். அவர் அந்த வேடம் ஏற்று நடித்திருந்தால் எனக்கு பெரியாராக நடிக்கின்ற வாய்ப்பே கிடைத்திருக்காது. என்னையும் அன்னை இல்லத்தின் ஒரு பிள்ளையாக அவர் நினைத்திருந்ததினால் எனக்காக பெரியார் வேடத்தை விட்டுக் கொடுத்து விட்டு போய் இருக்கிறார்."
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் பக்தராக விளங்கும் திரு. சத்யராஜ் நடிகர் திலகத்தைப் பற்றியும் அவ்வப்போது மீடியாக்களில் பெருமையோடு கூறி வருவதற்கு அவருக்கு நமது நயமிகு நன்றி ! (என்ன இருந்தாலும் சத்யராஜ் அவர்கள் வசந்தமாளிகை திரைப்படத்தை முதல் வெளியீட்டில் 20 முறை பார்த்தவராயிற்றே)
திரு. சத்யராஜ் அவர்களுக்கு,
உங்களின் பெரியார் படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தமைக்கு எங்களின் பாங்கான பாராட்டுக்கள் ! வளமான வாழ்த்துக்கள் !!
ஜல்லிக்கட்டும், புதியவானமும் உங்களுக்கு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸ் டிகிரி வாங்கிய அனுபவத்தை கொடுத்திருக்கக் கூடும். ஆகவே பெரியாருக்கு விருது கிடைத்திருப்பதில் வியப்பில்லை. எல்லாம் கணேச பிரசாதம் ! அதாவது, சிவாஜி கணேச பிரசாதம் !!
செப்டம்பர் 17 - பகுத்தறிவுப் பகலவன் உதயமான நாள்!!!
அன்புடன்,
பம்மலார்.
Another survey conducted by Loyola college in 2008 gave 1st position to MGR 21.3% and second position to Sivaji with 18.9%, way ahead of the present day Superstars Vijay and Rajini Kanth. (MGR's higher rating in this survey can be attributed to the fact that the referred survey had few questions related to politics. MT being the most popular politician and ex-chief minister of T N is more popular politically than NT) .
Eventhough 2 gerations have passed away after Sivaji & MGR (namely Rajini, Kamal era & Vijay, Ajith..era) Sivaji Ganesan & MGR continue to top the popularity rankings.
Few other surveys conducted in a scientific manner have thrown up similar results reaffirming Sivaji Ganesan’s supremacy.
During a visit to the U.S. in June 1995, Sivaji Ganesan found himself in Columbus, Ohio. Mayor Greg Lashutka named him honorary citizen of Columbus at a special dinner.
So far I have not known this. let me clarify
இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம், அவர்கள் இருவரும் மறைந்து பல ஆண்டுகளுக்குப்பின் எடுக்கப்பட்ட சர்வே இது. அப்படியிருந்தும் மக்கள் திலகமும், நடிகர்திலகமும் இன்னும் முதலிரண்டு இடங்களில் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் மக்கள் மனதில் இன்னும் ஆட்சி செய்கின்றனர் என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?.Quote:
Originally Posted by abkhlabhi
இன்னும் எத்தனை தலைமுறைகள் வந்த போதிலும் அவர்கள் விட்டுச்சென்ற இடங்கள் யாராலும் இட்டு நிரப்பப்பட முடியாத வெற்றிடங்களாகத்தான் இருக்கும்.
சத்யராஜ் பற்றி பம்மலார் சொன்னதும், சமீபத்தில் நடந்த இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது...
'இசையருவி' விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை தசாவதாரம் படத்துக்காக டாக்டர் கமல்ஜிக்கு வழங்க சத்யராஜ் மேடைக்கு அழைக்கப்பட்டார். மேடையேறிய சத்யராஜ் பேசியபோது:
"கமல் அவர்களுக்கு விருது வழங்க நான் வந்திருப்பது எவ்வளவு அபத்தமானது என்பது உங்களுக்கே தெரியும். ஒருவருக்கு விருது வழங்குவதென்றால் அவரை விட தகுதியில் திறமையில் உயர்ந்த ஒருவர்தான் வழங்க முடியும், வழங்கவேண்டும். அந்த வகையில் கமல் அவர்களுக்கு விருது வழங்க தகுதியான ஒரே கலைஞர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்தான். நான் ராஜ்கமல் நிறுவனத்தின் படங்களில் நடித்ததன் மூலம் அந்நிறுவனத்தில் நானும் ஒரு தொழிலாளி. சிலசமயங்களில், பாலங்களைக்கட்டி திறந்து வைக்கும்போது பெரிய வி.ஐ.பிக்கள் திறப்பதற்கு பதிலாக, அந்த பாலத்தைக்கட்டிய கொத்தனாரைக் கொண்டும் திறப்பது வழக்கம். அந்த வகையில், கமல் நிறுவனத்தின் தொழிலாளிகளில் ஒருவராக அவருக்கு இந்த விருதை வழங்குகிறேன்".
பொருத்தமான நேரத்தில் நடிகர்திலகத்தைப் பொருத்தமாக நினைவுகூர்ந்த சத்யராஜ், நம் நன்றிக்குரியவர்.
பிரபல நாடக / திரைப்பட நடிகர் ஏ.ஆர்.எஸ். இந்தவாரம் ஜெயா தொலைக்காட்சியின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் பங்கேற்று தன் அனுபவங்களை நேயர்களுடன் பகிர்ந்து வருகிறார். அப்போது நடிகர் திலகத்தைப்பற்றி பல விஷயங்களைச்சொன்னார். அதில் ஒன்று.....
"ஒருமுறை ஒரு படப்பிடிப்பின் சாப்பாட்டு நேரம். சிவாஜியுடன் நானும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். பரிமாறியவர் வெங்காயம் போட வந்தபோது வேண்டாம் என்று மறுத்துவிட்டார். 'ஏன் வெங்காயம் சாப்பிட மாட்டீங்களா'ன்னு கேட்டேன். 'சாப்பிடுவேன், ஆனா இப்போ வேண்டாம். காரணம் அப்புறம் சொல்றேன்' என்றார்.
சாப்பாட்டுக்குப்பின் படமாக்கப்பட்ட காட்சியில், சவுகார் இறந்ததுபோய்க்கிடக்க அவரருகில் நடிகர்திலகம் அமர்ந்து குளோசப்பில் வசனம் பேசும் காட்சி. நடித்து முடித்துவிட்டு வந்து அமர்ந்தவர் 'ஏன் வெங்காயம் வேண்டாம்னு சொன்னீங்க'ன்னு கேட்டீல்ல. இப்போ ஷூட் பண்ணின சீன் பார்த்தியா. சௌகார் மூச்சைப்பிடித்துக்கொண்டு படுத்திருக்க, அவங்க முகத்தருகே நான் வசனம் பேசும் காட்சி. நான் வெங்காயம் சாப்பிட்டு அந்த வாடையோடு பேசினால், அவங்களாலே மூச்சடக்கிக்கொண்டு படுத்திருக்க முடியுமா?' என்று கேட்டார். நான் ஆச்சரியப்பட்டேன்.
ஏதோ வருவதும் வசனம் பேசுவதும் போவதும்தான் நடிப்புன்னு நினைச்சிக்கிட்டிருந்த எனக்கு, அவர் சிரத்தையோடு அடுத்து வரப்போகும் காட்சி, அதில் தன்னுடன் நடிப்பவருக்கான சிரமம் என்று அவர் ஒவ்வொரு விஷயத்துலயும் எவ்வளவு கவனம் செலுத்துகிறார் என்று ஆச்சரியப்பட்ட நான், இவரிடம் கற்றுக்கொள்ள இன்னும் எவ்வளவு நுணுக்கங்கள் இருக்கோ என்று அதிசயித்தேன்".
சகோதரி சாரதா அவர்களின் சத்யராஜ் செய்தியும், ஏ.ஆர்.எஸ். அவர்கள் கூறியதாக வெளியிட்டுள்ள "பட்டாகத்தி பைரவன்" படப்பிடிப்பு செய்தியும் அருமையிலும் அருமை !
அன்புடன்,
பம்மலார்.
Dear friends,
Today I came across another touching story in NT's life. The identity of the person concerned is not necessary. But he is the third son of a renowned person and mentally retarded. This narration dates back to 70s. He used to get nervous weakness and would suffer from partial stroke often and become unrestive at times. His parents tried hard to bring him back to normalcy and kept him with them. And believe it or not, there were instances that he was his normal self - only when he watched the movies of NT - He was a maniac of NT - His family had close affinity with NT and the boy was very of fond of NT and at times would request him to do something for him. Once he asked NT to wear a particular tye of his choice and act in a scene. And NT the human being, obliged immediately. It is not clear if the boy is staying in Chennai now.
The tye in question appeared in ....
the song Devane Ennai Paarungal song ....
Raghavendran
டியர் ராகவேந்திரன் சார்,
தாங்கள் வெளியிட்டுள்ள செய்தி அனைவரும் அறிய வேண்டிய அரிய தகவல். நமது நடிகர் திலகத்தின் மனிதநேயத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அந்த நேசத்திற்குரிய நபர், தற்பொழுது பூரண நலம் பெற்று விளங்குவார் என்று நம்புகிறேன். அவருக்காக ப்ரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
பம்மலார்.
திராவிட இயக்கத்தவரும், சிறந்த நாடக நடிகருமான திரு. டி.வி. நாராயணசாமி (டி.வி.என்.) அறிஞர் அண்ணா அவர்களின் மிக நெருங்கிய நண்பர். அவருக்காக அண்ணா எழுதிய பகுத்தறிவுப் பிரசார நாடகம் தான் 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்'. அதில் சிவாஜியாக டிவிஎன் நடிக்க வேண்டும் என அண்ணா விரும்பினார். ஆனால், டிவிஎன்னோ எம்.ஜி.ராம்சந்தர் என்கின்ற ஒருவரை (திரு. எம்.ஜி.ஆர். தான்) சிபாரிசு செய்தார். சில காரணங்களுக்காக, எம்.ஜி.ஆர். நடிக்க மறுக்கவே, கலக்கமுற்ற அண்ணாவைத் தேற்ற, நாடக உலகில் நல்ல பெயர் பெற்றிருந்த வி.சி. கணேசன் என்கின்ற நடிகரை டிவிஎன் முன்மொழிந்தார். கணேசனைக் கண்டு அண்ணாவுக்கு சந்தேகம் கலந்த தயக்கம். எனினும், டிவிஎன்னின் தூண்டுதலில்,ஒரு காலை வேளையிலே நாடகத்தின் முழு வசனத்தையும் கணேசனிடம் கொடுத்து, மாலை வருவதற்குள் மனப்பாடம் செய்ய சொல்லி விட்டு, இயக்கப் பணிகளை கவனிக்கச் சென்றார்.
அன்று மாலையும் வந்தது.(பின்னாளில் கணேசனுக்கு பாராட்டு மாலைகள் குவியப் போவதை குறிக்கவே!) அண்ணாவும் டிவிஎன்னும் வந்தனர். முழு வசனத்தையும் ஏற்ற இறக்கத்துடன் உணர்ச்சிப்பெருக்கோடு அவர்களிடம் நடித்துக் காட்டினார் கணேசன். டிவிஎன் உள்ளத்தில் மகிழ்ச்சி. அண்ணா கணேசனை ஆரத் தழுவிக் கொண்டு பாராட்டினார். அண்ணாவின் மனத்திரையில் வி.சி.கணேசன் சிவாஜி ஆனார்.
பேரறிஞர்-நடிகர் திலகம் தகவல்கள் தொடரும் ...
அன்புடன்,
பம்மலார்.
Dear Pammalar,
This DVN has acted with NT in the film Pudhaiyal in an aged role. He was a very close relative of S.S.Rajendran.
Raghavendran
:thumbsup:Quote:
Originally Posted by pammalar
Thanks Mr. Joe.
Dear Raghavendran Sir,
Thanks for your Info. DVN acted with NT in PARASAKTHI itself as Pandaribai's elder brother. He was also bestowed with a sobriquet NADIGAMANI, conferred on him by his Dravidian team-mates.
Regards,
Pammalar.
Incomparable Achievements of Twentieth Century (1901-2000).
Research conducted by Professors of 735 Universities around the world.
The research result was released by University of Madras in Chennai.
The Research was conducted with the People, Students, Teachers, Research Scholars, Tamil Organizations, Private Organization Center, Tamil Literates, Drama-Music Artists, Movie Industrialists and many other brainiest...!
Literate: Great Tamil Orator - Kalainger M Karunanidhi
Music: Instrumental: Isaignani Ilaiyaraja
Lyricist: Kavingner Kannadasan
Voice: T M Sounderarajan
Drama: Great Tamil Drama - Kalainger M Karunanidhi
Actor: Nadigar Thilagam Sivaji Ganesan
The above Details will be released by July 2006 by University of Madras.
Courtesy: Murasoli - 20-03-2006(DMK Party Official Organ)