ராஜா - அடியேனின் பங்களிப்பாக மெல்லிசை மன்னரின் இசை பற்றிய அலசல் ... தொடரும்...
Printable View
ராஜா - அடியேனின் பங்களிப்பாக மெல்லிசை மன்னரின் இசை பற்றிய அலசல் ... தொடரும்...
டியர் வாசுதேவன் சார்,
ராஜா - விஸ்வத்தைப் (மனோகர்) பற்றிய உங்களுடைய விமர்சனம் பிரமாதம். விஸ்வத்தைப் போலவே வித்தியசமாக சிந்திக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
ராஜா - திரைப்படத்தின் முகப்பிசை
https://soundcloud.com/veeyaar/raja-title-music
இந்த இசையைக் கேட்கும் மாத்திரத்திலேயே ஒரு த்ரில்லர் படத்திற்குண்டான தயாரிப்பினை இசை மூலம் நமக்களித்திருக்கிறார் மெல்லிசை மன்னர். இந்தப் படத்தில் ஆங்காங்கே ட்ரம்ஸ் ஒலியும் கோரஸ் குரல்களும் பரவசப் படுத்துவதோடு அந்தக் காட்சிக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன. டைட்டில் இசையிலேயே அதற்கான முஸ்தீபைத் தந்து விடுகிறார். அதுவும் குறிப்பாக ராஜா ராஜா ராஜா என பல்வேறு மாடுலேஷன்களில் குரலிசைக்கும் போது திகிலை ஊட்டும் தோரணை தெரிகிறது. படத்துடன் கேட்கும் போது அதன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
பொதுவாக ஹீரோ அறிமுகக் காட்சி, அதுவும் குறிப்பாக இந்த மாதிரி ஆக்ஷன் படங்கள் என்றால், இசை ஆரவாரமாக ஆர்ப்பாட்டமாக ஒலிப்பது வழக்கம். அதை இந்தப் படத்தில் முற்றிலும் உடைத்து விட்டார் மெல்லிசை மன்னர். நடிகர் திலகத்தைப் போன்று இவரும் அந்த கதாபாத்திரத்திற்குள்ளேயே நுழைந்து விடுகிறார். காட்சியமைப்பும் அதற்கேற்றார்போல் அமைந்து விட்டதால், மிகவும் மென்மையாக விசில் ஒலியுடன் கதாநாயகனை அறிமுகப் படுத்துகிறார் இயக்குநர். அதற்கேற்றார்போல் விசில் ஒலியை பிரதானமாக வைத்து அறிமுக பின்னணி இசையில் கலக்கியிருப்பார் எம்.எஸ்.வி. கேளுங்கள்.
https://soundcloud.com/veeyaar/raja-hero-intro-bgm
ரயில்வே ஸ்டேஷனில் நாயகி இறங்குவது தொடங்கி நாயகனைக் காண்பதற்காக வெளியில் தேடி ஓடி வரும் அந்த விநாடி வரை நாயகிக்கும் வில்லனின் கையாளுக்கும் ஏற்படும் திகிலும் பரபரப்பும் இசையிலேயே மெல்லிசை மன்னர் வெளிப்படுத்தியிருப்பார். ரயில் நின்றவுடன் துவங்கும் ட்ரம்ஸ், ட்ரம்பெட் மற்றும் கிடார் கருவிகளின் இசை காட்சியை நமக்கு உணர்த்தி விடுகிறது. அதைத் தொடர்ந்து அந்த தேடுதலுக்காக புல்லாங்குழலைப் பயன் படுத்தியிருப்பார், காற்றில் புல்லாங்குழல் ஓசை உலவுவது போல் வெட்ட வெளியில் நாயகி அவனைத் தேடுவதை இசையின் மூலம் தெரியப் படுத்தும் யுக்தி மெல்லிசை மன்னருக்கே உரித்தானது. [தேடுதல், அச்சப் படுதல், பரபரப்படைதல் இந்த மாதிரி சூழலில் புல்லாங்குழல் இசை மிகப் பொருத்தமாக இருப்பதோடு உள்ளுக்குள் நமக்கு அந்த உணர்வை ஊட்டி விடும். இதை மிகச் சிறப்பாக பயன் படுத்தியவர் மெல்லிசை மன்னர். இதற்கு முன்னர் சுமதி என் சுந்தரி படத்தில் ஜெயலலிதா ரயிலில் இறந்து இறங்கி நள்ளிரவில் அடைக்கலம் தேடும் போதும் இதே உணர்வை புல்லாங்குழல் மூலம் வெளிப்படுத்தியிருப்பார் ]. வெளியே வந்து பார்க்கும் போது போலீஸ் இருப்பதைப் பார்த்து அந்தக் கூட்டத்திற்கே இயல்பான பரபரப்பை நாயகியும் கையாளும் மேலும் அடைய, அதனை அந்த கோரஸ் குரல்களில் வெளிப்படுத்தியிருப்பார். நாயகனைக் கண்டதும் அப்படியே நாயகியின் முகம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி மனதில் மகிழ்ச்சியுண்டாகும். அப்போது இசையும் சிறிது சிறிதாக இயல்பு நிலைக்குத் திரும்பும்.
மறக்க முடியாத பின்னணி இசை
https://soundcloud.com/veeyaar/nee-v...um-prelude-bgm
ஒரு பக்கம் பரபரப்பு, திகில் போன்ற காட்சிகள், இன்னொரு பக்கம் ரொமான்ஸ் காட்சிகள் என இருந்தாலும் நகைச்சுவைக் காட்சிகளிலும் மெல்லிசை மன்னரின் கொடி ரெக்கை கட்டி பறக்கிறது. குறிப்பாக ஹோட்டலில் பார் டெண்டராக வேலை செய்யும் சந்திரபாபுவின் அறிமுகக் காட்சியில் பின்னணியில் ஒலிக்கும் இசை அந்தக் காலத்தில் மிகவும் பிரபலம். அட்டகாசமான அந்தப் பின்னணி இசையைக் கேளுங்கள்.
https://soundcloud.com/veeyaar/chand...bar-scene-raja
என்னதான் சொல்லுங்கள்..
எனக்குள் இருக்கும் ஒரு ஞாயமான கேள்வி. அது பெரியார் ஆதரவாளர்க்கும் சரி அல்லாதவர்க்கும் சரி.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை (பிராமணர்கள்) மட்டுமே ஜாதி த்வேஷம் செய்கிறார்கள் என்று சாடியவர் பெரியார் அவர்கள். பாம்பை பாப்பானை பார்த்தால், பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி என்று அறைகூவல் விடுத்தவர்கள் என்றால் எந்தளவுக்கு ஜாதி த்வேஷம் இருந்தது என்பதை அறியலாம்.
அந்த காலத்தில் வேறு பல சமூஹதினர்களும் ஜாதிவெறி கொண்டவர்களாக கண்டிப்பாக இருந்திருக்கிறார்கள். உதாரணம் தேவர் சமூஹம். தேவர் - தலித் த்வேஷம் எவரும் அறியாதது இல்லை...வெட்டு குத்து நிகழ்வு அவளவு சாதாரணம்.
அப்படி இருக்கையில் ஏன் பிராமணர்களை மட்டுமே சாடினார்கள்? தேவர்களை சாடவில்லை? காரணம் பிராமணர்கள் வாய்மூடி இருப்பார்கள்...ஆனால் தேவர் சமூஹத்தினர் ? வாய் திறந்தாள் அரிவாள் தான் பேசும் ! அதனால் வாய் திறக்கவில்லை இவர்கள். அப்போ இளிச்சவாயர்கள் பிராமணர்கள் ! இவர்கள் முழுமையான சமூக சீர்திருத்தவாதிகள?
சரி அதை விடுவோம் ! கூத்தாடி..கூத்தாடி என்று ஒரு புறம் கூறியவர்கள் ....அப்படி கூதாடியவர்களுடன் எதற்கு உறவு வைத்துகொண்டு கொஞ்சி குழைந்தார்கள் ஆதிகாலத்திலிருந்தே ?
கேட்டால் நட்பு வேறு அரசியல் வேறு என்பார்கள்..! மக்கள் என்றுமே ஆட்டுமந்தைகள் தானே என்ற எண்ணம் தான் காரணம் ! சீர்திருத்தம் கொண்டுவருகிறேன் என்று கூறி இன்று தமிழகம் எவ்வளவு சீரழிந்து போயிருக்கிறது என்பதை சற்று ஆராயிந்தால் புரியும்.
சுப்பு,
எதனோடும் ஒட்டாமல் சம்மந்தா சம்மந்தமில்லாமல் பதிவு போடுவதை நிறுத்துங்கள்.உங்கள் மூர்க்க பதிவுகளால் ராகவேந்தர் சாரின் அற்புதமான பதிவுகளுக்கு இடைஞ்சல் உண்டாகி விட்டது. ஏன் இப்படி ஊரோடு ஒட்டாமல் எரிச்சல் உண்டாக்குகிறீர்கள்?
ஒருவர் நிழலை இன்னொரு சாதியினர் நிழல் கூட தீண்ட கூடாது என்று அழிச்சாட்டியம் செய்வது எவ்வளவு பெரிய அநீதி? ஏன் வெட்கமில்லாமல் வக்காலத்து வாங்குகிறீர்கள்?