Originally Posted by
mr_karthik
டியர் வாசு சார், சார்
புஷ்பலதாவின் (இயற்பெயர் : பிலோமினா) ஆல்பம் மிக அருமை. பல்வேறு இடங்களிலிருந்து திரட்டியிருக்கிறீர்கள். எது ஒன்றையும் சிரத்தையெடுத்து செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே. இப்போதுதான் அவர் நடித்த 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பாடலைப் பார்த்து முடித்தேன்.
அவரது செகண்ட் இன்னிங்க்ஸில் சிட்டுக்குருவி, சிம்லா ஸ்பெஷல், ரத்தபாசம், டௌரி கல்யாணம், சகலகலா வல்லவன் போன்ற படங்களில் ரொம்பவே அழகாக இருந்தார்.
என்ன, பெர்சனல் வாழ்க்கையில் புஷ்பா கொஞ்சம் அடாவடி, கொஞ்சம் ரௌடித்தனம், வரிந்து கட்டிக்கொண்டு மல்லுக்கு நிற்பார். ராஜன் இவரிடம் அடியெல்லாம் கூட வாங்கியிருப்பதாக கேள்வி. படத்தயாரிப்பு முழுவதையும் புஷ்பாதான் பார்ப்பார், ராஜன் சும்மா பெயருக்கு...