பேராசிரியர் திரு செல்வகுமார் மற்றும் திரு kp கோவிந்தராஜ் அவர்களின் மக்கள்திலகம் அவர்களின் இணையில்லா மாண்புகளை பதிவு செய்திருப்பது சூப்பர்... அவர்களின் பதிவுகள் மிகுந்த சிறப்பை தருகின்றன...தொடர்ந்து பங்கெடுங்கள் சார்...
Printable View
பேராசிரியர் திரு செல்வகுமார் மற்றும் திரு kp கோவிந்தராஜ் அவர்களின் மக்கள்திலகம் அவர்களின் இணையில்லா மாண்புகளை பதிவு செய்திருப்பது சூப்பர்... அவர்களின் பதிவுகள் மிகுந்த சிறப்பை தருகின்றன...தொடர்ந்து பங்கெடுங்கள் சார்...
கோவை ஹலோ fm வானொலியில் வரும் ஞாயிறு அன்று மாலை 5 மணியளவில் பயாஸ்கோப் எனும் நிகழ்ச்சியில் புரட்சித் தலைவருடனான தனது அனுபவ நிகழ்வுகளை நினைவு கொள்கிறார் அவரது தனிப் பாதுகாவலர்களில் ஒருவரான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள்.
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...d5e1d126a8e809
நண்பர்களே,
மேற்காணும் நிழற்படம் முகநூல் நண்பர் ஒருவருடைய பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
இதற்கு முன் இந்த நிழற்படம் இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டதா, பார்த்த ஞாபகம் இல்லை.
விவரம் கூற முடியுமா.
எங்கள் தலைவரின் படத்திற்கு டிஜிட்டல் தேவையில்லை. அப்போதே அவர் தனது படத்தின் பாடல்களை சாதாரண டேப்பில் தான் கேட்டு ஓகே செய்வார்.. உதாரணம் உலகம் சுற்றும் வாலிபன். அதற்க்கு அவர் சொன்ன காரணம் என் படம் நகரத்தில் மட்டுமல்ல டூரிங் தியேட்டரிலும் ஓடவேண்டும். டூரிங் தியட்டரில் ஒலியம்னைப்பு சரியிருக்காது. அதனால் மோனோ சிஸ்டத்தில் சரிபார்க்கிறேன் என்பார். அவரது பாடல் மற்றும் படங்கள் சாதாரண தொழில் நுண்பதில் உருவானது. கடைகோடி ரசிகனுக்கும் தனது படம் சேரவேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் காரணம் நண்பா.. அவர் இறுதி வரை சினிமாஸ்கோப் படத்தில் நடித்ததில்லை. காரணம் அந்த லென்ஸ் பல திரையருன்குகளில் பயன் பாட்டில் அந்த நாட்களில் இல்லை.. நானே ராஜராஜசோழன் திரைபடத்தை எங்கள் திரையரங்கில் வெளியிடும்போது பக்கத்துக்கு திரைஅரங்கில் அந்த லென்சை வாங்கி திரையிட்டோம்..இந்த சிரமத்தை திரையரங்க உரிமையாளர்களுக்கும் திரைப்பட கருவியை இயக்கும் எங்களுக்கும் எங்கள் தலைவர் கடைசிவரி சிரமத்தை கொடுக்கவில்லை..கெஞ்சி கூத்தாடி லென்ஸ் வாங்கி போட்ட ராஜராஜசோழன் எப்படி ஓடியது என்று உங்களுக்கு தெரியும்.. ஒரு சின்ன விஷயம் நடிகர் திலகத்தின் வாய்ஸ் hfஇல் ஒலிக்கும் எங்கள் தலைவரின் வாய்ஸ் lfஇல் ஒலிக்கும் பேஸ் வாய்ஸ் எங்கள் தலைவருக்கு. அதற்கு தகுந்தாற்போல் ஆம்பிபையறை டுயுன் பண்ணிவைப்பேன் நான்..அதனால் இரு பெரும் திலகங்களின் ரசிகர்கள் என்னை மிகவும் விரும்புவார்கள்..அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறது நண்பா..
kindly register our makkalthilagam - documents, photos here in several ways... thank you friends...