நன்றி சந்திரசேகர் அவர்களே..
என் கல்லூரிக் காலத்தில் இப்படம் தொலைக்காட்சியில் வந்த மறுநாள்.. நண்பர்கள் எப்படி சிலாகித்தார்கள் இப்படத்தில் நடிகர்திலகத்தின் ஸ்டைலை..
எத்தனை முறை மீண்டும் மீண்டும் பேசிக் களித்தோம் என்பதெல்லாம் இப்போது நினைவாடலில்..
அதிலும் எனது ராஜ சபையினிலே பாடலில் அந்த ப்ளேசரில் அவர் மிளிரும் பாங்கு..
காதல் என்ற கடலினில் நீ தோணியல்லவா வரியில் நடிகர்திலகம் காட்டும் ஸ்டைலில் அரங்கம் அதிரும்!
நடிப்பரசனே..
நகைச்சுவை, சோகம், அதிரடி, ஸ்டைல் என எதைத் தொட்டாலும் உச்சம் காட்டியவர் உன்னைப்போலே வேறே யார்?
உனையன்றி வேறெதும் மனக்கோயில் பிரதிஷ்டை செய்யாமல் உன் நினைவுக்கற்புடன் வாழும் எம்மைப் பார்!