குழந்தைகள் தின சிறப்புப் பாடல்.
'மகராஜா... ஒரு மகராணி' (இருமலர்கள்)
http://www.youtube.com/watch?v=SBAGf...yer_detailpage
குழந்தைகள் தின சிறப்புப் பாடல்.
'மகராஜா... ஒரு மகராணி' (இருமலர்கள்)
http://www.youtube.com/watch?v=SBAGf...yer_detailpage
Happy (belated) Deepawali wishes to you all! Mr Vasudevan's poem about NT is fantastic!
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)
(தொடர்-10)
நடிகர் திலகத்தின் நாயகிகள் (10)'பானுமதி'
பானுமதியின் அழகிய தோற்றம்.
http://cine-talkies.com/movies/telug...umathi-101.jpg
தானே தயாரித்து இயக்கிய 'சண்டிராணி' படத்தில் 'சம்பா'வாக பானுமதி
http://www.cineradham.com/Stills/Act...lls%20(11).jpg
'அறிவாளி' தமிழ்த் திரைக்காவியத்தில் நடிகர் திலகத்துடன் பானுமதி
http://tamilnation.co/images/hundred...i/arivaali.jpg
'மக்களைப் பெற்ற மகராசி' தமிழ்த் திரைக்காவியத்தில் நடிகர் திலகத்துடன் பானுமதி
http://img.youtube.com/vi/QFMh6H5v3SY/0.jpg
'ராணி லலிதாங்கி' தமிழ்த் திரைக்காவியத்தில் நடிகர் திலகத்துடன் பானுமதி
http://www.thehindu.com/multimedia/d...ng_809159f.jpg
'திரையுலகின் அஷ்டாவதானி' எனப் புகழ் பெற்றவர். சகலகலாவல்லி. பல்வேறு துறைகளிலும் சிறந்த திறைமைசாலி. 'அறிவாளி' நடிகர் திலகத்துடன் சிறந்த ஜோடியாகத் திகழ்ந்த அறிவாளி. நடிகர் திலகத்திற்கும் சீனியர் நடிகை. நடிப்பு, இசை, தயாரிப்பு, இயக்கம், பாடல்,எடிட்டர், ஸ்டுடியோ அதிபர்,வசனகர்த்தா என்று எட்டுத் துறைகளிலும் கொடிநாட்டிய அசாதாரண திறமை கொண்ட நடிகை. இவர் திறமையை எண்ணி வியக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம். தமிழக சூப்பர் ஸ்டார்கள் தியாகராஜ பாகவதர் அவர்களுடன் 'ராஜமுக்தி' திரைப்படத்திலும், பி.யூ.சின்னப்பா அவர்களுடன் 'ரத்னகுமார்' திரைப்படத்திலும் நடித்து பெரும் புகழ் பெற்றவர். 1953 இல் வெளிவந்த 'சண்டிராணி' என்ற தன் சொந்தத் தயாரிப்பு படத்தின் இயக்குனரும் இவரே. இருபத்தெட்டு வயதிலேயே இயக்குனரான இமய நடிகை.
தெலுங்கில் 1945-இல் வெளிவந்த 'ஸ்வர்க்கசீமா' திரைப்படத்தில் "ஓஹோ...பாவுரமா" என்று இக்கால நடிகைகள் போல உடையணிந்து புறாவை கையில் வைத்துக் கொண்டு இவர் பாடி வருவதைப் பார்த்து தென்னிந்திய திரைப்பட உலகமே கிறங்கியது. அந்தப் பாடலைப் பார்த்து அசந்து போன முக்கியமானவர்களில் ஒருவர் யார் தெரியுமா? சாட்சாத் நடிகர் திலகம்தான். இதை நடிகர் திலகமே பானுமதி பற்றி கூறும்போது பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.
தெலுங்குத் திரைப்பட உலகில் 'பாவுரமா பானுமதி' என்றே இன்றளவும் அழைக்கப் படுகிறார். தெலுங்கில் டாப் ஸ்டார்களாய் திகழ்ந்த என்.டி.ஆர், நாகேஸ்வரராவ், நாகையா ஆகியோருடன் ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட் படங்களை அளித்தவர்.
நடிகர் திலகத்துடன் 'கள்வனின் காதலி'யில் முதன் முதலாக ஜோடி சேர்ந்தார் பானுமதி. இந்தப் படத்தில் நடிக்கும் போது ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்தது.
பானுமதியோ சீனியர் நடிகை. மிகவும் கண்டிப்பானவர். கதாநாயகர்கள் அவரை தொட்டு நடிக்கக் கூட பயப்படுவார்கள். அவர் பெர்மிஷன் இல்லாமல் அவரை தொடக் கூட முடியாது. அப்படிப்பட்ட சீனியருடன் நடிக்க 'கள்வனின் காதலி'யில் நம்மவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு ஷூட்டிங் நடக்கத் தொடங்கியது. பானுமதி 1939-இல் திரையலகில் களமிறங்கியவர். நம்மவர் 1952 இல் புயலாகப் புகுந்தவர். கிட்டத் தட்ட 13 வருடங்கள் பானுமதி நம்மவருக்கு சீனியர். பட ஆரம்ப ஷூட்டிங்கின் போது பானுமதி இயக்குனர் வி.எஸ் ராகவனிடம் "பையன் எப்படி... நன்றாக நடிப்பானா... எனக்கு சமமாக நடிக்க வேண்டுமே!" என்றாராம். நடிப்பு என்று வந்துவிட்டால் நம்மாளுக்கு சீனியராவது ஜூனியராவது ...நடிகர் திலகம் வழக்கம் போல கள்வனின் காதலியில் நடிப்பில் களேபரம் செய்ய, பானுமதி நம்மவரின் நடிப்பில் மிரண்டு, அரண்டு போய் இயக்குனரை சில நாட்களுக்குள்ளேயே தனியே அழைத்து "அந்தப் பையனை (நடிகர் திலகத்தை) கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள்... விட்டால் என்னையே காணாமல் காலி செய்து விடுவான் போல இருக்கிறது" என்றாராம் பரிதாபமாய். (இருங்கள்... கொஞ்சம்... கொஞ்சமென்ன... முழுக் காலரையுமே தூக்கி விட்டுக் கொள்கிறேன்... ஸாரி ...தூக்கி விட்டுக் கொள்ளுவோம்)
(இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் பின்னாளில் 'சர்வர் சுந்தரம்' படத்தில் மனோரமா சீனியர் நடிகையாகவும்,நாகேஷ் அறிமுக நடிகராகவும் நடிக்கும் காட்சி ஒன்று சித்தரிக்கப்பட்டிருந்ததாக கூறுவோர் உண்டு... அந்தக் காட்சியும் பிரமாதமாகவே இருக்கும் )
கல்கியின் 'கள்வனின் காதலி', கொங்கு நாட்டுத் தமிழை புகழ் படுத்திய "மக்களைப் பெற்ற மகராசி', அண்ணாவின் 'ரங்கோன்' ராதா, ("நடிப்பின் இலக்கணம்" என்று அண்ணாவால் பானுமதி போற்றப் பட்டார்), 'அம்பிகாபதி', அறிவாளி, 'மணமகன் தேவை', 'ராணி லலிதாங்கி' படங்களில் கதாநாயகியாக நடிகர் திலகத்துடன் சோபித்தவர். அதுமட்டுமல்லாமல் சாரங்கதாரா, ராஜபக்தி (வில்லி), தெனாலிராமன் (வில்லி), படங்களிலும் நடிகர் திலகத்துடன் நடித்துள்ளார்.
"வெயிற்கேற்ற நிழலுண்டு"... "வெண்ணிலா ஜோதியை வீசுதே".... "போறவளே போறவளே பொன்னுரங்கம்"... "கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே"..."மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு"...போன்ற அற்புத பாடல்களைப் பாடி தன் தனித்தன்மையான குரல் வளத்தால் நம் உள்ளங்களில் குடிகொண்டவர்.
குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒரு படம்'அறிவாளி'. நடிகர் திலகமும், பானுமதியும் போட்டி போட்டுக் கொண்டு தத்தம் திறமைகளை நிரூபித்திருப்பார்கள். சும்மா நம்ம தலைவர் பானுமதியை பாடாய் படுத்துவார் பாருங்கள்... பானுமதியும் சரியாக ஈடு கொடுப்பார்... அந்த ரோலில் பானுமதியைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்துகூட என்னால் பார்க்க முடியவில்லை.
தத்துவம், ஜோதிடம் இவற்றிலும் சிறந்தவர் பானுமதி. இவருடைய கணவர் ராமகிருஷ்ணா. சொந்தமாக தன் மகன் பெயரில் 'பரணி ஸ்டுடியோ' என்ற ஸ்டுடியோவும் இவருக்கு உண்டு. 'பரணி பிக்சர்ஸ்' பெயரில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். அதில் 'மணமகன் தேவை' என்ற அற்புத நகைச்சுவை படத்தை நடிகர் திலகத்தை வைத்து அருமையாக எடுத்திருந்தார் பானுமதி. Western hero போல இப்படத்தில் நடிகர் திலகத்தை வித்தியாசமாக,அழகுறக் காட்டியிருந்தார்கள்.
AVM -ன் 'அன்னை' படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றார் பானுமதி. பல பரிசுகளையும், அவார்டுகளையும் பானுமதி பெற்றிருக்கிறார். அவற்றுள் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் முக்கியமானவை. Western music, Hindustani music இரண்டிலும் கரை கண்டவர். பல சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.
நடிகர் திலகம் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட பானுமதி "நியூஸ் கேள்விப்பட்டவுடன் என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை"...என்று துக்கம் தொண்டை அடைக்க கதறியதை நம்மால் மறக்கவே முடியாது.
கொங்குநாட்டு தமிழின் பெருமையை நடிகர் திலகம் வாயிலாகப் பறைசாற்றிய 'மக்களைப் பெற்ற மகராசி' காவியத்திலிருந்து நடிகர் திலகமும், பானுமதியும் அசத்தும் "போறவளே... போறவளே... பொன்னுரங்கம்" பாடல் (காணொளி வடிவில்).
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=QFMh6H5v3SY
சிறப்பு போனஸ் பாடல்.
நடிகர் திலகத்திற்கு மிகவும் பிடித்த 'ஸ்வர்க்கசீமா' தெலுங்குப் படத்தில் பானுமதியின் குரலில் ஒலிக்கும் "ஓஹோஹோ..பாவுரமா" புகழ் பெற்ற பாடல் (காணொளி வடிவில்)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9NCFS8uJg6U
அன்புடன்,
வாசுதேவன்.
(ஜோடிகள் தொடரும்)
கவிதையை பாராட்டி வாழ்த்துக்களும், பாராட்டுமளித்த அன்பு ராகவேந்திரன் சார், சந்திரசேகரன் சார், ஆனந்த் சார், சசிதரன் சார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
Interesting info about Banumathi. She looks much older than Sivaji in 'Ambikapathy' though. It would've been better if it was Padmini as 'Amarawathi'
அன்பு முரளி சார்,
தங்கள் பாராட்டிற்கு நன்றி!. அதைவிட தங்கள் "அண்ணன் ஒரு கோயில்" அனுபவத்தின் அற்புதமான கட்டுரைக்கு கோடி கோடி நன்றிகள் ஒரே மூச்சில் வாசித்து விட்டேன். 'அண்ணன் ஒரு கோவில்' பல்வேறு சிக்கலான காலகட்டத்தில் வெளியாகி பின் பெரு வெற்றி பெற்றதை மிகச் சிறப்பாக வடித்திருந்தீர்கள். அந்த கால கட்டத்தின் அரசியல் நிகழ்வுகளை மிக அற்புதமாக ஞாபகம் வைத்து அண்ணன் ஒரு கோவிலில் கொண்டு வந்து இணைத்தது அருமை. இரண்டு ஊர்களிலும் நியூசினிமாவில் வெளியானது சூப்பர். மிக ரசித்து படித்தேன். பாராட்டுக்கள். நன்றி! மதுரையில் என்னை போல் ஒருவன், அந்தமான் காதலி, தியாகம் வசூல் பிரளயம் புரிந்ததை படிக்கும் போது 'உன்னை போல ஒருவன்' வசூல் சாதனை நடத்த ஒருவர் பிறந்ததுமில்லை... இனி பிறக்கப் போவதுமில்லை என்று நடிகர் திலகத்தை வாய் நிறைய பெருமையுடன் பாராட்டத் தோன்றுகிறது.
When reading the reviews from Mr Vasudevan, Mr Raghavendar and Mr Murali about the success of NT movies released in their areas and the celebrations associated with that, got myself thinking that; NT fans rather liked him as a ‘not so perfect’ hero, especially after his 60’s melodramatic movies. Like me, fans rather wanted NT gets drunk, kills the baddies and has fling with women (before marriage, of course) than being a more than perfect (or unnatural) individual, trying to save the world.
டியர் வாசு சார்,
நடிகர் திலகத்தின் நாயகிகள் தொடரில் பானுமதியம்மா அவர்களின் அறிய தகவல்களோடு நம் தலைவரின் நடிப்பு திறனை கண்டு அவர் அரண்டதையும் அழகாக கூறியுள்ளீர்கள்.
நன்றி!
வாசு சார்,
நாயகியர் வரிசையில் பாவுரா பானுமதி அவர்களைப் பற்றிய தங்கள் பதிவு அபூர்வமான தகவல்களுடன் சுவையாக தொகுத்தளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள். நடிகர் திலகத்துடன் நாயகியர் தொடரே மிகவும் பயனுள்ளது, குறிப்பாக நடிகர் திலகத்தைப் பற்றி எதிர்காலத்தில் முனைவர் பட்டங்களுக்கு ஆய்வு செய்வோருக்கு மிகவும் உதவிகரமாய் இருக்கும். தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரங்கூன் ராதா படத்தில் பானுமதி பாடிய பாடல்கள் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக இப்போது நாம் காணும் பாடல் மிக மிக பிரபலமான பாடல், அதுவும் வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்ட பாடல். பார்த்து மகிழ்வோமே
http://www.youtube.com/watch?v=5wOM8qsCu80&feature=share&list=UUHZ9TIXjkl cLpnIKC2q3h3A
Vsu sir
belated greetings for your nadigarthilagam\deepavali mixing KAVITHAI . we expect many more. pl keep it up.
teacheramma NAGESH prasings about kattabomman throgh nadigarthilagam AUDIO\VIDIEO may be included in the thiri.
Earlier i have given my romance moments on the eve of VM rerelease. now I am proud to say ANNAN ORU KOIL becomes first movie after my marraige
2'11.77that is how I have introded to my wife and their side AS ANNAN SIVAJI oru koil forus.