வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன்-மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர்.
http://i60.tinypic.com/szg8jd.jpg
தமிழ் அறியும் பெருமாள் வந்தான்-தொண்டனாக;
தஞ்சையிலே தமிழ் பல்கலை கழகம் தந்தான்-முதல்வனாக;
தமிழ் அறிஞர் சான்றோர் நெஞ்சில் நிறைந்தான்-தெய்வமாக;
தந்தை பெரியார் தமிழ் சீர்திருத்தம் செய்தான்-வீரனாக;
தமிழ் உலக மாநாடு மதுரையிலே எடுத்தான்-பாண்டியனாக;
தமிழுக்கு இவன் செய்த அரும் தொண்டுகளை-
தாழிட்டு பூட்டுவர் யாரேனும் தமிழன் அல்லவே;
தொல்காப்பியம் இவன் புகழை உணர்ந்து ஓதி,
தொடர்ந்து வரும் வண்ண தோகை மயிலாக;
தாய்திருநாடு தந்து மகிழ்ந்ததுவே பாரத் ரத்னா விருது,
தொட்டதெல்லாம் மலர்களாகும்/பொன்னாகும்;
தொழிலாளி இவன்தானே - தோல்வி என்பது இவனுக்கில்லை.