http://i66.tinypic.com/iohiqv.jpg
நெஞ்சம் மறப்பதில்லை- பணத்தை தொலைத்த கண்ணாம்பா உதவிக்கு வந்த எம்.ஜி.ஆர்.
Read more at:
http://tamil.filmibeat.com/news/nenj...gr-041830.html
சென்னை: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை பொருத்தவரை தன்னை வைத்து படம் எடுப்பபவர்களுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் அதைத் தன்னுடைய சொந்தப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டு அதை சரி செய்து படத்தையும் நல்லமுறையில் எடுத்துக் கொடுத்து வியாபாரத்திற்கும் பொறுப்பேற்று படத்தை வெளியிடுகின்ற வரையிலும் முக்கிய பங்கு வகிப்பார். அப்படித் தான் நடிகை கண்ணாம்பா எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த 'தாலிபாக்கியம்' படத்திற்கு அவுட்டோரில் ஒரு பிரச்சனை வந்தது.
அதையும் தனது சொந்தப் பிரச்சனையாக எடுத்து தீர்த்துக் கொடுத்தார்.
கண்ணாம்பா தனது இறுதி காலத்தில் தியாகராய நகரிலுள்ள தனது வீட்டை விற்க முயற்சி செய்தார். அந்த வீட்டை எம்.ஜி.ஆர். விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். உங்களது இறுதிகாலம் வரை நீங்கள் இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் வேறு வீட்டிற்கு போகக் கூடாது என்று வேண்டுகோள் வைத்தார். கண்ணாம்பாவும் தனது கடைசிகாலம் வரை அந்த வீட்டில் தான் இருந்தார். அவர் இறந்த பிறகு தான் எம்.ஜி.ஆர். அந்த வீட்டை பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடுகள் செய்தார். கவிஞர் வாலி எம்.ஜி.ஆரை சரியாக கணித்து தான் பாடல் எழுதினார். 'உள்ளமதில் உள்ளவரை அள்ளிதரும் நல்லவரை விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்னாகும்'....