Originally Posted by
joe
This looks targeted me . So I have to answer .
இன்று தந்தை பெரியாரின் பிறந்தநாள் . யார் யாருக்கெல்லாமோ இங்கே புகழ் மாலைகள் சூட்டப்படும் போது சிவாஜி கணேசனுக்கு 'சிவாஜி' என்ற பெயர் நிலைக்க காரணமாய் இருந்த பெரியாரின் நினைவை இங்கே அளித்ததில் யாருக்கும் எரிச்சல் இருந்தால் அதற்கு எதுவும் செய்ய முடியாது .யாரை கடைசி வரை சிவாஜி போற்றினாரோ , யாரை போல் வேடம் புனைய வேண்டும் என்ன விரும்பினாரோ அவரைத் தான் இங்கே குறிப்பிட்டுள்ளேன் .
திரு.கோபாலுக்கு எதிர்வினையாக நீங்கள் தொடுத்துள்ள கேள்விகள் பெரியார் பற்றி எந்த புரிதலுமோ , குறைந்த பட்ச அறிதலுமோ இல்லாமல் மேலோட்டமாக போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டுப் போகும் ரீதியில் தான் இருந்தது ..அவை பொருட்படுத்தி பதிலிறுக்கும் தகுதியுடைத்தன்று என்றே நினைக்கிறேன் . அதிலே சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழித்து விட்டதாக கூறப்பட்டதை படித்த போது எனக்கு சிரிப்பு வந்தது .அதையே பதிந்திருக்கிறேன் . பெரியாரால் தமிழகத்தில் என்ன சீர்திருத்தம் நடந்தது , சமூக நீதி அமைந்தது , அடித்தள மக்கள் எவ்வாறு சுயமரியாதையும் எழுச்சியும் பெற்றார்கள் என்பதற்கு என் போன்ற ஒடுக்கப்பட்ட , அடித்தள சமூகத்திலிருந்து வந்தவர்கள் உணர முடியும் .. அதை சீரழிவு என நினைப்பவர்கள் நினைத்து விட்டு போகட்டுமே .