-
நண்பர்களே
உற்று கவனித்தீர்களானால் ஒரு விஷயம் புலப்படுகிறது.
நாம் அரும்பாடு பட்டு உழைக்கும் உழைப்பிற்கு ஒரு ரெஸ்பான்ஸ் கிடைக்கத் துவங்கியுள்ளது.
ஊடகங்களின் போக்கில் சற்றே மாற்றம் ஏற்பட்டு நடிகர் திலகத்தின் செல்வாக்கை உணரத் தொடங்கியுள்ளது.
இதை நம்முடைய நண்பர்கள் அனைவருமே உணரத் தொடங்கியிருப்பர்.
இதற்கு பெரிதும் துணை நின்றிருப்பது இணையம் என்னும் மிகப்பெரிய ஊடகமே.
அதில் நடிகர் திலகத்திற்கென்று உள்ள பிரத்யேகமான இணையதளங்களுக்கும் மற்றும் நம்முடைய மய்யம் இணைய தளத்திற்கும் பெரும் பங்குண்டு.
இந்த வரவேற்கத்தக்க மாற்றங்களை இன்னும் ஆழமாக பலப்படுத்தி செவ்வனே நிலைநிறுத்துவதில் நாம் ஈடுபடவேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.
-
1 Attachment(s)
Thanks to Thalaivan Sivaji Com
Attachment 3617
-
Courtesy: Dinamalar Varamalar
கதாநாயகனின் கதை! - சிவாஜி கணேசன் (2)
Advertisement
Advertisement
பதிவு செய்த நாள்
12 அக்
2014
00:00
என் பள்ளிக்கூடப் படிப்பு, ஒரு முடிவுக்கு வந்தது. என் தந்தையார் பார்த்து வந்த ரயில்வே வேலை போய்விட்டதால், ஒரு பஸ் கம்பெனியில், குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார்.
அந்தக் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்த, என் தாயார் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. எனக்கும், அப்போதுதான் குடும்ப கஷ்டங்கள் ஓரளவுக்கு தெரிய ஆரம்பித்தன. அதனால், சீக்கிரம் பெரியவனாகி, கை நிறைய சம்பாதித்து, என் தாயாரின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று மனதில் எழுந்த எண்ணம், வெறியாகமாறி சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன்.
அதுவும், 'கட்ட பொம்மன்' நாடக உருவில் வந்தது.
ஒரு நாள், நான் தங்கியிருந்த தெருவிலேயே, 'கட்டபொம்மன்' கூத்து நடைபெற்றது. இதைக் கூத்திலும் சேர்க்க முடியாது; நாடகம் என்றும் சொல்ல முடியாது. இரண்டும் கலந்த ஒரு ஆட்டம்.
இந்த கட்ட பொம்மனைப் பார்த்ததும் தான், என் மனதில், நாமும் இம்மாதிரி நடித்தால் என்ன என்ற எண்ணம் துளிர்விட ஆரம்பித்தது.
சக்கரபாணி என்ற தோழனின் உதவியால், பொன்னுசாமி பிள்ளை நடத்தி வந்த மதுரை ஸ்ரீ பால கான சபையில் சேர்ந்தேன்.
இதில், பல நாடகங்களில், பல்வேறு வேடங்களை ஏற்று நடித்தேன். ராமாயண நாடகத்தில், முற்பகுதியில், அழகு சுந்தரியான சீதையின் கதாபாத்திரத்திலும், பிற்பகுதியில், சூர்ப்பனையாகவும், கடைசி நாட்களில், இந்திரஜித்தாகவும் தோன்றுவேன்.
நான் நாடகக் கம்பெனியில் சேர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு பின், ஒரு சமயம் பொள்ளாச்சியில், 'இழந்த காதல்' நாடகம் நடந்து கொண்டிருந்தது. என்னைப் பார்க்க, யாரோ ஒருவர் வந்திருப்பதாக கூறினர். யாரோ, என்னவோ என்று பதற்றத்துடன் போனேன். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.
என் தாயார், ஒரு கையில் பையும், மறுகையில் ஒரு சிறு பையனையும் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார். என் தாயாரை, ஆறு ஆண்டுகளுக்குப் பின் பார்த்த மகிழ்ச்சியில், 'அம்மா' என்று கூவி, அவரை ஓடிப்போய் அணைத்துக் கொண்டேன். தன் கூட வந்த பையனை சுட்டிக்காட்டி, 'உன் தம்பிடா... சண்முகம்ன்னு பேர்; நீ வந்ததுக்கப்பறம் பிறந்தவன்டா...' என்றார்.
'அடேய் தம்பி...' என்று அவனைத் தூக்கி, ஒரு சுற்றுச் சுற்றினேன், அவன் பயந்து விட்டான்.
என் தாயார், முறுக்கு, சீடை, பலகாரங்கள் எல்லாம் கொண்டு வந்திருந்தார். தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்ததால், முதலாளியிடம் சொல்லி பண்டிகைக்காக, என்னை கையோடு ஊருக்கு அழைத்து வந்துவிட்டார். நான் சம்பாதித்த பணத்திலிருந்து வெடி வாங்கி வெடித்தேன். இன்றும் தீபாவளி பண்டிகை வரும்போதெல்லாம், இந்தச் சம்பவம் நினைவுக்கு வரும்.
அந்தக் காலத்தில், கம்பெனி வாழ்க்கை என்பது குருகுல வாசம் போன்றது.
ஒவ்வொரு பையனுக்கும் ஒரு பெட்டி, படுக்கை இருக்கும். காலையில் எழுந்ததும் படுக்கையைக் சுருட்டி, பெட்டியின் மேல் வைத்து, பின், குளித்துவிட்டு வர வேண்டும். அதன்பிறகு, சிற்றுண்டி, காபி தருவர். எல்லாம் முடிந்த பின், நாடக பாடங்களைப் கேட்பர்.
எல்லாருக்கும் எல்லா நாடகங்களின் பாடமும் சொல்லித் தரப்படும்.
பகல் மணி, 12:30 க்கு பூஜை நடக்கும்; இதில், எல்லாரும் கலந்து கொள்வோம். ஒரு மணிக்கு சாப்பாடு. பின்னர் தூங்கப் போக வேண்டும். வலுக்கட்டாயமாக தூங்க வைத்து விடுவர்.
மாலை, 4:00 அல்லது 4:30 மணிக்கு காபி, பலகாரம் தருவர். கொஞ்ச நேரம் பாடம் கேட்பர். பின் கொஞ்சம் ஓய்வு இருக்கும். இரவு மணி, 7:30க்கு சாப்பாடு, உடனே, நாடகம் நடிக்க தியேட்டருக்குப் போய் விடுவோம். நாடகம் இரவு, 10:00 மணிக்கு ஆரம்பமாகும்; முடிய இரவு இரண்டாகும். சில சமயம், அதற்கு மேலும் ஆகும்; இதுதான் கம்பெனி வாழ்க்கை.
கம்பெனியில் எல்லாரும் ஒன்றாகப் பழகுவோம். ஒரே குடும்பத்தில் இருப்பதைப் போலவே நினைத்து வந்தோம். பாடம் சரியாகச் சொல்லாவிட்டாலோ, ஏதாவது தப்புத்தண்டா செய்து விட்டாலோ, அடி, உதை நிச்சயம்! கம்பெனியில், என்னை மாதிரி உதை வாங்கியவர்கள் யாரும் கிடையாது. ஏன், பெரியவனாகியும், அதாவது, 1944ல் கூட, கே. சந்தானத்திடம் உதை வாங்கியிருக்கிறேன். அவர், என்னை அடித்த அடியில், பிரம்பு இரண்டாக உடைந்து விட்டது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
ஆனால், இம்மாதிரி வாங்கிய அடிகளெல்லாம் பின்னால் நான் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு உதவியாக இருந்தன. பெரியவர்களிடம் இம்மாதிரி அடி, உதை வாங்கியதெல்லாம் எனக்கு நிரம்பவும் பயனளித்தன. அப்படி அடி வாங்கிய சம்பவங்களை நினைக்கும் போது, நான் தவறை செய்யாமலிருக்க, அவை எச்சரிக்கையாக நிற்கின்றன.
தெரியாமலா பெரியவர்கள் சொன்னார்கள், 'அடி உதவுவதைப் போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்...' என்று!
ஆனால், எனக்கு அடியும் உதவியிருக்கிறது, என் அண்ணனும், தம்பியும் கூட இப்போது பேருதவியாக இருந்து வருகின்றனர். இதுவும் நான் பெருமைப் பட வேண்டிய விஷயம் தான்!
கட்டபொம்மனைப் பற்றியோ, ஆங்கிலேயர் ஆட்சி பற்றியோ, சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியோ அதிகமாக புரிந்து கொள்ள முடியாத சிறு வயது எனக்கு. ஆனாலும், நாடகம் நடக்கிறது அதைப் பார்க்கப் போகிறோம் என்ற பொதுவான ஆவலினால், இந்த நாடகத்தைப் பார்த்தேன். இந்த நாடகம்தான், என் மனதில் ஒரு புதிய எண்ணத்தை எழுப்பி, நடிப்பு துறையில் என் வாழ்க்கையை அமைக்க அஸ்திவாரமாக அமைந்தது.
ஆம்... அந்த நாடகத்தைப் பார்த்ததும் தான் என்னுள்ளத்தில், நானும் ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆவல் மொட்டு விட்டது.
சாதாரணமாக சொல்வதுண்டு... ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை உள்ளுக்குள் மறைந்து இருக்கிறது; அதை, தூண்டி விடக் கூடிய சம்பவமோ, சந்தர்ப்பமோ கிடைக்கும்போது, அந்தத் திறமை வெளிப்பட்டு விடுகிறது என்று சொல்வர்.
என்னைப் பொறுத்தவரை என்னிடம் திறமை இருக்கிறதோ இல்லையோ, நடிப்புத் துறைக்கு என்னை இழுத்து வர, நடிப்புத் துறையில் என்னை ஈடுபடச் செய்ய, அன்று நான் பார்த்த கட்டபொம்மன் நாடகம் தான் தூண்டுகோலாக அமைந்தது. அந்நாடகம், என் மனதில் பசுமையாகப் பதிந்து விட்டதுடன், அந்நாடகத்தின் மீது ஒரு தனிப்பற்றுதலை உண்டாக்கி, தேசிய உணர்வையும் ஏற்படுத்திவிட்டது.
பல ஆண்டுகளுக்குப் பின், நான் திரையுலகில் அறிமுகமாகி, ஓரளவுக்கு நடிகனாக வந்தபோது, அந்தப் பழைய நினைவிலிருந்து மீள முடியாத காரணத்தினாலும், அதன் பேரில் ஏற்பட்ட தணியாத ஆர்வத்தாலும் தான், கட்டபொம்மன் சரித்திர நாடகத்திலும், திரைப் படத்திலும் நடித்தேன்.
என் குடும்பத்தில், எனக்கு முன் யாருமே நடிப்புத் துறையில் ஈடுபட்டிருக்கவில்லை. என் தந்தையார், ரயில்வேயில் பணி புரிந்தார்; என் பாட்டனார் இன்ஜினியராக இருந்தவர். நான் பிறந்த அன்றே, என் தந்தையார், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக, கைது செய்யப்பட்டு, சிறைக்கு அழைத்துச் செல்லப் பட்டுவிட்டார்.
எங்கள் குடும்பம் விழுப்புரத்திலிருந்து, திருச்சிக்கு இடம் பெயர்ந்தது. திருச்சியிலும் நாங்கள் நிரந்தரமாகத் தங்க முடியவில்லை. தஞ்சாவூர் திருச்சி என்று மாறி மாறி குடித்தனத்தை நடத்த வேண்டி வந்தது. இதனால், எந்த ஒரு பள்ளிக் கூடத்திலும் தொடர்ந்து படிக்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டது. தவிர, குடும்பத்தில் சிரமமான நிலையும் வளர ஆரம்பிக்கவே, ஏதாவது, தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு நானும் விரட்டப்பட்டேன்.
அந்த வயதில், நான் படித்திருந்த அரை குறைப் படிப்புக்கு என்ன வேலை கிடைக்கும்?
— தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
-
Sivaji: Benchmark for long, colossus forever
G Dhananjayan
HE WAS THE REFERENCE POINT FOR MOST ACTORS FOR OVER 40 YEARS UNTIL THE ADVENT OF REALISM IN TAMIL FILMS
L egendary actor Sivaji Ganesan's 86th birth anniversary was celebrat ed on Oct 1. Are Tamil film actors and filmmakers still influenced by Sivaji's acting or have they moved on to new paradigms of acting? To delve into this, we should first un derstand Sivaji's unique acting style in his long career of about 40 years.
Though Tamil talkies began their journey in 1931 with Kalidas, until the end of 1940s, Tamil films conveyed stories more through songs than visuals. Most films used a large number of song visuals to narrate the story . A dramatic shift in narration took place with `Parasakthi' (1952) that introduced Sivaji Ganesan. For the first time, dialogues and dialogue delivery took centre stage of story narration and overpowered acting and visuals.
Coming from a stage-play background, it was natural for Sivaji to portray characters in a larger-thanlife form to impress the audience. His directors were so enamoured with his dialogue delivery and dramatics that they insisted on the same kind of performance in every film. So much so, if there were no dramatics in a Sivaji film, it was not considered a `special' film by the audience.
Sivaji's dramatic performances helped many films to succeed. Many historical characters such as Mar atha king Sivaji (in `Raman Ethanai Rama nadi' and in `Bhakta Tukar am'), Veera Pandiya Kattabom man, Raja R a j a Chozhan and V O Chidambar am (in `Kap palottia Tamizhan') were brought to life by him.
After 40 years, even tod ay, i f these character im ages are strongly reg istered in the minds of the audience, it is due to his powerful pres entation. He set the benchmark for ac tors playing mul tiple roles. His portrayal of a police of ficer S P Choudary in `Thanga Padhakkam' is a benchmark for all police roles played by every actor subsequently .For comical performance by a lead character, Sivaji is again a benchmark with films like `Thookku Thookki', `Bale Pandiya', `Sabash Meena' and many others.
For over 40 years (1952 to 1992), Sivaji set the standard for many of his contemporaries such as Gemini Ganesan, S S Rajendran, R. Muthuraman and Jaishankar. MGR was an exception to Sivaji's influence as he developed a different kind of cinema. Sivaji's influence continued to the next generation of actors such as Kamal Haasan, Rajinikanth, Vijayakanth and Sathyaraj. As long as these actors played regular and realistic characters, there was no reference to Sivaji. But the moment they tried to do special roles, Sivaji was their reference. If Choudary became the benchmark for Rajinikanth's Alex Pandian character in `Moondru Mugam', for Ajith's father character Asal', it was Sivaji's makeup and in ` style in `Gauravam'.
In the last decade, however, with the demise of historic and special characters on screen, the influence of Sivaji's acting has started waning.Tamil cinema is adapting to world cinema format by presenting realistic characters based on real life.Filmmakers and audiences look for real life presentation without exaggeration. If an actor is able to get into the role and react instead of act, his performance is better accepted.
Hard hitting films featuring realistic performances like `Veyil', `Paruthi Veeran', `Subramaniapuram' and `Aadukalam' have found high acceptance. Sivaji will remain an influence if an actor tries to attempt any historical or special character on screen. But when it comes to realistic performances, a new kind of acting without any influence of Sivaji has taken roots in Tamil cinema and will continue to hold sway in the future.
Courtesy : Times Of India
-
a recap from Saradha Madam old post
'தர்மம் எங்கே' (சில நினைவுகள், சில ஞாபகங்கள்) - 1
'தர்மம் எங்கே' படத்தில் நீங்கள் குறிப்பிட்ட இரு அருமையான பாடல்களோடு, இன்னொரு நெஞ்சையள்ளும் பாடல்...
'வீரம் என்னும் பாவைதன்னை கட்டிக்கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலைதன்னை சூடிக்கொள்ளுங்கள்
நாலுபக்கம் கூட்டமுண்டு பார்த்துக்கொள்ளுங்கள்
நாளை என்னும் வார்த்தையுண்டு நம்பிக்கொள்ளுங்கள்'
நடிகர்திலகம் மாறு வேடத்தில் வந்து, சிறையிலிருந்து தன் கூட்டத்தினரை மீட்டுச்செல்லும் காட்சி இது. (கிடாருக்குள் துப்பாக்கியை ஒளித்து வைத்திருந்து சுடும் உத்தியெல்லாம் அப்போதே பயன்படுத்தப்பட்டு விட்டது).
இப்படத்துக்கு நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மத்தியில் '1972ன் திருஷ்டிப்பொட்டு' என்ற் செல்லப்பெயர் உண்டு. காரனம், 1971 இறுதியில் வெளியான 'பாபு' வில் தொடங்கி 1973ல் முதல் படமான 'பாரதவிலாஸ்' வரையில் நடிகர்திலகத்தின் வெற்றிநடை தொடர்ந்தது (அவற்றில் பாபு, ஞானஒளி பட்டிக்காடா பட்டணமா, தவப்புதல்வன் நான்கும் கருப்பு வெள்ளைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது). அவற்றில், 72 மத்தியில் வந்த 'தர்மம் எங்கே' மட்டுமே வெற்றிவாய்ப்பை இழந்தது. அதற்கு முதற்காரணம் (சிவந்தமண், ராஜராஜ சோழன் போல) இப்படத்துக்கு ஏற்பட்டிருந்த அளவுக்கு மீறிய, அபரிமிதமான எதிர்பார்ப்பு, இரண்டாவது காரணம் ஓட்டை விழுந்த திரைக்கதை இவைகளே.
கதாநாயகன் படம் முழுவதும் வில்லனுடன் போராடி, இறுதியில் அவனிடமிருந்து ஆட்சியை மீட்பதாக இருந்தால் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால் முரளி அவர்கள் சொன்னது போல, இடைவேளையின்போதே பிரதான வில்லன் நம்பியாரிடமிருந்து ஆட்சியைக்கைப்பற்றி விட, அதோடு வில்லன் நம்பியார் தலைமறைவாகிவிட, அதன்பின்னர் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதில் 'மாப்பிள்ளை - மைத்துனன்' சண்டையில் படம் நகர்கிறது. இவ்வளவு பிரமாண்டமான படத்தை இழுத்துச்செல்ல முத்துராமன் எல்லாம் ஒரு வில்லனா?. நல்ல வேளையாக கிளைமாக்ஸில் மீண்டும் நம்பியார் தோன்ற, கொஞ்சம் விறுவிறுப்பு கூடுகிறது.
தர்மம் எங்கே பற்றி விரிவாக விளக்கமாக எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. எனக்கு மிகவும் பிடித்த படம். அந்த முயற்சி மட்டும் தள்ளிக்கொண்டே போகிறது. காரணம், காட்சிகள் கோர்வையாக வரவேண்டும். படம் பார்த்து வெகுநாட்கள் ஆகி விட்டதால், காட்சிகளை வரிசையாக நினைவுக்கு கொண்டு வருவதில் சற்று சிரமம். ஆனால் படத்தின் முக்கியமான, விசேஷமான காட்சிகளைப்பற்றி எழுதலாம் என்று எண்ணம். இப்படத்தின் வீடியோ கேஸட், அல்லது CD அல்லது DVD எங்குமே கிடைக்கவில்லை. தியேட்டர்களிலும் வெகுநாட்களாக திரையிடப்படவில்லை.
'தர்மம் எங்கே' பற்றி விரைவில் விவரமாக எழுத முயற்சிக்கிறேன்.
-
'தர்மம் எங்கே' (சில நினைவுகள், சில ஞாபகங்கள்) - 2
இப்படம் பற்றி முன்னொருமுறை என் தந்தையுடன் பேசும்போது அவர் சொன்ன தகவல்கள்.
"நான் கல்லூரிப்படிப்பை முடித்து வேலையில் சேர்ந்த சமயத்தில் வெளியான படம் இது. நாங்கள் (சிவாஜி ரசிகர்கள்) யாருமே பட்டிக்காடா பட்டணமாவோ அல்லது வசந்த மாளிகையோ இந்த அளவு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் எதிர்பார்த்தது 'தர்மம் எங்கே' படத்தைத்தான். ஆனால் இதற்கு முன் வெளியான ப.பட்டணமா பெற்ற பெரிய வெற்றியைப்பார்த்து, தர்மம் எங்கே படம் அதையெல்லாம் முறியடிக்கும் சாதனைப்படமாக இருக்கப்போகிறது என்று எதிர்நோக்கினோம். அப்போதைய 'மதிஒளி' பத்திரிகையிலும் தொடர்ந்து அந்தப்படத்தின் செய்திகளும், ஸ்டில்களும் வெளியாகி எங்கள் உற்சாகத்துக்கு தீனி போட்டன. நடிகர்திலகத்தின் ரசிகர்கள் எல்லாம் மாலையில் அண்ணாசாலை 'சாந்தி' திரையரங்கின் கார் பார்க்கிங் வளாகத்தில் கூடி அப்போதைக்கு ஓடிக்கொண்டிருக்கும் அவருடைய படங்களைப் பற்றி விவாதிப்போம். இந்த நடைமுறை எங்களுக்குப் பிறகும் பல ஆண்டுகளாக தொடர்ந்தது. அப்போது சாந்தியில் 'பட்டிக்காடா பட்டணமா', பக்கத்தில் தேவி பாரடைஸில் 'ராஜா', அதையடுத்த பிளாசாவில் 'ஞான ஒளி' என்று அனைத்தும் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருக்க, 'தர்மம் எங்கே' படம் பற்றித்தான் எங்களுக்குள் ஒரே பேச்சு. இதனிடையே 'ஓடியன்' திரையரங்கில் (த்ற்போது 'மெலோடி') தர்மம் எங்கே ஸ்டில்கள் வைக்கப்பட்டு விட்டன என்று அறிந்ததும், நாங்கள் கூடும் ஜாகை ஓடியனுக்கு மாறியது. தினமும் மாலையில் கூடி, அந்தப்படத்தைப் பற்றித்தான் பேச்சு. ரிசர்வேஷன் தொடங்கியபோதே படம் வெளியாகும் நாள் போல கூட்டம். மளமளவென டிக்கட்டுகள் பல நாட்களுக்கு விற்று தீர்ந்தன. அப்போதெல்லாம் முதல் வகுப்புக்கு மட்டுமே ரிசர்வ் செய்யப்படும். மற்ற கிளாஸ் டிக்கட்டுகளை காட்சி நேரத்திலேயே கியூவில் நின்று பெற்றுக்கொள்ள வேண்டும்.
சனிக்கிழமையன்று படமும் வெளியானது. (நடிகர்திலகத்தின் படங்கள் வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகாது, சனிக்கிழமைகளில்தான் ரிலீஸ் ஆகும்). முதல்நாள் முதல் மேட்னிக்காட்சிக்கு போயிருந்தோம்.ரிலீஸ் தினத்தன்று சீக்கிரமே அரங்குக்கு போனோம். (எங்கள் அலுவலகம் (l&t) சனிக்கிழமைகளில் அரைநாள் மட்டுமே). 'ஓடியன்' அரங்கின் இரண்டு பக்கமும் இரண்டு பெரிய கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அது போக ஏகப்பட்ட பானர்கள், கொடிகள், தோரணங்கள், பல்வேறு மன்றங்களின் பேனர்கள். (அப்போதெல்லாம் இதுபோன்ற திருவிழாக்கள் "அந்த இரண்டு ஜாம்பவான்களின்" படங்களுக்கு மட்டும் தான்). மேட்னி ஷோ துவங்கியது. படம் துவங்கியதிலிருந்து ஆரவாரம், கைதட்டல், விசில் பறந்தன. குறிப்பாக முதல் ஒரு மணிநேரம் படம் டெர்ரிஃபிக். நடிகர்திலகத்தின் படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படமாக இருந்தது. அதற்கேற்றாற்போல சூப்பர் வில்லன் நம்பியார், மற்றும் சூப்பர் ஜோடி ஜெயலலிதா. இடைவேளையின்போதே எல்லோர் மனதிலும் ஒரு எண்னம்... படம் பெரிய வெற்றிதான் என்று. ரசிகர்கள் மத்தியில் உற்சாக கொண்டாட்டம். இடைவேளையின்போது, 'கேட்'டுக்கு வெளியே நின்ற ரசிகர்கள் படம் எப்படி என்று சைகையால் கேட்க, உள்ளே நின்ற ரசிகர்கள் அனைவரும் கட்டை விரலை உயர்த்திக்காட்ட... தியேட்டருக்கு வெளியே அப்போதே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
ஆனால் இடைவேளைக்குப்பின்னர், படத்தின் போக்கு அப்படியே மாறிப்போனது. நடிகர்திலகத்தின் கதாபாத்திரத்தை கிட்டத்தட்ட ஒரு வில்லன் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டது திரைக்கதை. ஒரு நல்ல் மக்கள் தலைவனாக காட்டாமல், ஒரு அகம்பாவம் பிடித்தவராக காண்பிக்கப்போக ரசிகர்களின் உற்சாகம் குன்றிப்போனது. பொது மக்களும் இப்படி ஒரு கதையின் போக்கை எதிர்பார்க்கவில்லை. போதாக்குறைக்கு, வில்லன் நம்பியாரையும் தலை மறைவாக்கி விட்டனர். படம் தொய்ந்து போனது. படம் முடிந்து வெளியே வந்தபோது ரசிகர்களின் உற்சாகம் காணாமல் போனது. இதனிடையில் படம் நன்றாக இல்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவ, பத்திரிகை விமர்சனங்களும் காலை வாரிவிட.... சரியாக 48 நாட்களில் 'ஓடியன்' அரங்கில் படம் தூக்கப்பட்டு, ஒரு ஆங்கிலப்படம் திரையிடப்பட்டது".
.........என் தந்தை 'தர்மம் எங்கே' நினைவுகளில் ஆழ்ந்து போனார்.
-
ராகவேந்திரா சார் அவர்களே .நமது அன்பு ரசிகர்களின் சீரிய முயற்சியால் நம் அன்பு தலைவருக்கு பிறந்த நாள் மற்றும் நினைவுநாள் எந்தவித தன்னலம் இல்லாமல் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டியது தான் மீடியாக்கள் நம் பக்கம் திரும்ப ஆரம்பித்திருக்கிறது .இதற்கு நாம் எடுத்து கொண்டது 13 வருடங்கள் .சென்ற பிறந்த நாளின் போதே இதை நான் முரளி சாரிடம் பகிர்ந்திருக்கிறேன்
-
இன்னும் சற்று நேரத்தில் 9 மணிக்கு சன் நியூஸ் தொலைக்காட்சியில் விவாத மேடையில் நடிகர் திலகம் பற்றிய விவாதம் நடைபெறுகிறது
https://www.youtube.com/watch?v=wDllCaOtjoA
-
தினமலர் வாரமலர்
நடிகர்திலகம் பற்றிய வாசகர் கடிதத்திற்கு பரிசு
http://www.mayyam.com/talk/showthread.php?t=11021[IMG][/IMG]
-