மூன்றாவது சி.க சார். ஒன்று மிஸ் செய்து விட்டீர்கள்.
Printable View
மூன்றாவது சி.க சார். ஒன்று மிஸ் செய்து விட்டீர்கள்.
பாடல் இரண்டு - பாணி ஒன்று // பார்த்து விட்டேன் வாசு சார்..கொஞ்சம் மறந்திருந்தேன்.. ந.வா நா.சொ, இ.எ.தெ மு இப்போது இது.. எல்லாம் ( நன்)* று,றி! :)
உங்களுக்காக அச்சா து ஹம் சல் தே ஹைய்ன்.. ஆஷாப்ரேக் ராஜேஷ்கன்னா..
http://www.youtube.com/watch?feature...&v=fDJLRRgvNJk
பொங்கும் பூம்புனல் - துயிலூட்டும் தொண்ணூறு
90களில் புதிய இசையமைப்பாளர்கள் புதிய இசை வடிவங்கள் புதிய இசை நுட்பங்கள் என முற்றிலும் பரிணாம வளர்ச்சியடைந்தது தமிழ்த் திரையிசையுலகம். எந்திரமயமாகி ஜீவனிழந்து விட்டது என மூத்த தலைமுறையினரால் கணிக்கப் பட்டாலும் இளைய தலைமுறையினர் வரவேற்கவே செய்தனர். அதற்கு அடுத்த பத்தாண்டுகளில் கைப்பேசிகளில் புகுந்து அழைப்போசையாகவும் மனிதனுக்குள் புகுந்து கொண்டது நவீன இசை.
இப்படி இரு வேறு பட்ட உணர்வுகளின் பிரதிபலிப்பாக இருந்த 90களில் நல்ல பாடல்களே இல்லையா என எண்ணியோருக்கு அல்லது இன்னும் எண்ணுவோருக்கு..
இந்தத் தொடர் விடையளிக்கும்.
இந்த எந்திரமயமான இசை என்ற விமர்சனத்தைத் தாண்டி பல படைப்பாளிகளின் அருமையான படைப்புகள் வெளிவந்துள்ளன. ஒரு இசை ரசிகனுக்கு நல்ல இசை பிடிக்கும் அது காலத்தைக் கடந்தாலும் அல்லது தலைமுறைக்கு அப்பாற்பட்டாலும்.
அப்படிப்பட்ட இனிமையான பாடல்களைத் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் வெளிவந்த திரைப்படங்களிலிருந்து தொகுப்பதே இத் தொடர்.
இதைத் தொடங்கி வைப்பது..
இளையராஜாவின் இசையில் முத்துக்காளை திரைப்படத்தில் வாலி எழுதி எஸ்.பி.பாலாவும் எஸ்.ஜானகியும் பாடிய புன்னை வனத்துக் குயிலே
https://www.youtube.com/watch?v=g_Oxc9bokeo
பொங்கும் பூம்புனல் - துயிலூட்டும் தொண்ணூறு
தொடர்வது ஜல்லிக்கட்டுக் காளை திரைப்படத்திலிருந்து தேவா இசையில் இனிமையான பாடல்..
சிறுமல்லிப்பூவே...கொடிமுல்லைத் தேனே
http://download.tamiltunes.com/songs...ilWire.com.mp3
பொங்கும் பூம்புனல் - துயிலூட்டும் தொண்ணூறு
பாலபாரதி இசையில் எஸ்.பி.பாலா, எஸ்.ஜானகி குரலில் அமராவதி படத்திலிருந்து அட்டகாசமான பாடல்
தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே..
http://fileraja.com/Tamil/A/Amaravat...VmusiQ.Com.mp3
Raghavendra Sir All the three thuyiloottum thonnooru very nice.. Thanks.
*
Just thought of posting one kavithai and a song linked withi it.
*
Kavithaiyum paattum..1
***
வீரம் ( ..அந்தக்காலத்துல எழுதினது)…
**
எங்களூர் வீரத்தைச் சொல்வ தற்கு
..ஏடெதுவும் பற்றாது எழுது தற்கு
பங்கமென வந்துவிட்ட பகைவர் தன்னை
…பலவிதமாய் விரட்டிவிட்ட பாண்டி மன்னர்
தங்கமெனத் தலைநகராய்க் கொண்ட ஊராம்
…தருணியிலே இதனழகிற் கீடே ஏது
சிங்கமென விளையாட்டில் கூட வீரம்
..சிறிதளவும் குறையாமல் எட்டிப் பார்க்கும்
*
பள்ளிக் கூடம் போகும் பச்சை மண்ணுங் கூட
..ஜல்லிக் கட்டைப் பார்க்கும் சற்றே ஆவல் கொண்டே
கள்ளச் சிரிப்பைக் கண்ணில் கொண்ட கன்னிக் கூட்டம்
..துள்ளும் காளை துடிக்கும் காளை நோட்டம் பார்க்கும்..
*
வில்லும் வாளும் வலிதா இல்லை தோளின் வலிதான்
துல்லி யமாக மாட்டை மடக்கும் தீரன் வலிதான்
மல்லிப் பூவின் மயக்கம் தன்னை நெருங்க விடாமல்
கிள்ளிப் பார்க்கும் சாவை என்றும் இளைஞர் கூட்டம்
*
அலங்கா நல்லூர் endra ஊரில் வருடா வருடம்
அழகாய் ஜல்லிக் கட்டும் நடந்தே மனசை வருடும்
பலவாய் ஓடும் நினைவில் சற்றே பின்னால் சென்றால்
வளமாய்ப் பார்த்த விளையாட்டுந்தான் கண்முன் தோன்றும்
*
கட்டவிழ்த்து விட்டுவிட்ட காளைகளைத் தேடி
….கரகோஷம் எழுப்பிடுவர் சுற்றிமக்கள் கூடி
தட்டெனவே எழுந்துவிட்ட குரலொலிகள் கேட்டு
..தாவிவரும் சீறிவரும் காளைகளும் பார்த்து..
வட்டமிட்டுத் தாவிடுமே வாலிபர்கள் கூட்டம்
..வழுக்கிவிடும் திமிலினிலே தொற்றிநிற்கும் நாட்டம்
கட்டழகுக் கன்னியரைக் கைப்பிடிக்க வேண்டி
..சுட்டுவிடும் சாவணைத்த வாலிபர்கள் கோடி
*
அன்றொருநாள் பார்த்திருந்த ஜல்லிக் கட்டில்
..அழகான வீரத்தைக் கண்டு வீட்டில்
மன்றத்தில் கட்டியதால் மருண்டு நின்ற
..கன்றொன்றின் வாலினையே முறுக்கி விட்டேன்
கண்களிலே கண்ணகியின் சீற்றங் கொண்டு
..கால்களினால் அதுவுதைத்த வலியுங் கூட
நன்றாக நின்றுகொண்டு இன்றும் நெஞ்சில்
..நயமாக அறிவுரையும் சொல்லிச் செல்லும்..!
**
Annaachi Vaetti kattum aambilayaa neenga.. Palani..paattu..marakka mudiyaathu..
http://www.youtube.com/watch?v=RWirw...yer_detailpage
Sorry my tamil font is not working..
தொழில் பாட்டுக்கள் – 9
*
மனிதராய்ப் பிறந்து நின்று
…மலரென மலர்ந்து காய்த்துக்
கனிகொளும் பருவ மெய்தி
..களிப்புடன் இருந்து மெல்லப்
பனியென முதுமை சூழ
..பக்குவ மனமும் பெற்று
தனியெனப் பயணம் செய்யும்
..சக்கரம் நமது வாழ்வே..
எனில் வாழ்க்கையில் ஒவ்வொரு ஸ்டேஜஸீக்கும் பயணம் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.. வாழ்க்கைப் பயணத்தில் வாழ்வதற்குப் பயணமும் செய்து கொண்டிருக்கிறோம்..பயணத்திற்கான வாகனங்கள் சைக்கிள், கார், பஸ் , விமானம் என..
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்ற வரியில் வரும் விமானப் பயணம் எப்போதும் கவர்ச்சி தான்..
மெல்ல மெல்ல ஒருமிகப்பெரிய நத்தை போல ஊர்ந்து சற்றே வேகமெடுத்து பின் ஸூப் பென மேலேறி விண்ணைத்தொட்டு பின் தொடரும் பயணம்.. ஆரம்பத்தில் ஏற்படும் மெல்லிய காதடைப்பு பின் பயணங்கள் செய்யச் செய்யப் பழகிவிடும் இல்லை மறைந்து விடும்..அது போல இறங்கும் போது ஒரு வித உற்சாகம் பிறக்கத் தான் செய்யும்..
கல்லூரி படிக்கும் காலத்தில் யாராவது என்னிடம் கண்ணா உனக்கு அன்னிய மண்ணில் தான் வாசம்.. தாய்மண்ணைத்தொட்டுத்தொட்டுத் திரும்பி விடுவாய்..அதுவும் மதுரை வாசமென்பது உனக்கு இனி கனவு தான் என்று யாராவது சொல்லியிருந்தால் கெக்கலி கொட்டி (என்ன கலி) நகைத்திருப்பேன்..
கிட்டத் தட்ட இருபத்தேழு வருடங்களுக்கு முன் கொஞ்சம் ஸ்லிம் அண்ட் ட்ரிம் இளைஞனாய் முழியும் முழியுமாய் ப்ரிட்டிஷ் ஏர்வேஸில் டெல்லியில் இருந்து துபாய் செல்லும் போது தொடங்கிய பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது விமானங்களில். டச் வுட். அதுவும் அருகில் அமர்ந்திருந்த ஒல்லி ஒல்லி வெளேர் ப்ரிட்டிஷோ ஸ்காட்டிஷோ பெண்ணின் அலட்சிய சுபாவம் இன்னும் நினைவில்!
ரொம்பப்பின்னால போய்ட்டேனோ..எனில் சற்று முன்னே வந்தால் 2008. மஸ்கட்
சென்னையிலிருந்து ஃபோன்..
“ஹலோ செளக்கியமா.. எப்படி இருக்கேள்.. என்னை எப்போ அங்க கூட்டிக்கப் போறீங்க..எனக்கு அங்க தான் இனி எல்லாம்”
சொன்னவர் என் மனைவியின் தாய்..என் மாமியார்..அவர் சொன்னவை விதி உதிர்த்தவையாகத்தான் இருக்கவேண்டும்..
நோ ப்ராப்ளம் ஏற்பாடு பண்றேன் எனப் போனை வைத்தாலும் ப்ராப்ளம் தான் எனத் தெரியும் எனக்கு..ஏனெனில் இதற்கு முன் இருவருடங்களுக்கு முன் மூன்று மாத விசாவில் தங்குவதற்கு வந்து விட்டு இல்லை இல்லை எனக்கு ஊருக்குப் போக வேண்டும் .. நிறைய ஃபங்க்*ஷன்ஸ்..இங்க என்னடான்னா இவ என்னை வேலையே பண்ண விட மாட்டேங்கறா..இருக்கறது ரெண்டே ரெண்டு கோவில்.. பாவம் அவ (மருமகள்) நண்டும் சிண்டுமா வச்சுண்டு என்ன கஷ்டப்படறாளோ எனச் சொல்லி ஒற்றைக்கால் கொக்காய் நின்று ஒன்றரை மாதங்களில் சென்னைதிரும்பியவர்.. இப்போது என்னடான்னா வருகிறேன் என்கிறார்..
போன முறை அவர் வந்துசென்றபின் நானிருக்கும் காம்பெளண்ட் ப்ளாட்களில் இருந்த முன் பின் தெரியாதவர்கள் கூட நின்று ஹாய் சொல்லி மென் சிரித்துச் சென்றார்கள்.. என்ன இவளே என்றால் அம்மா தாங்க அவங்களுக்கு இந்த ஹெல்ப் பண்ணா இவங்களுக்கு இந்த ஹெல்ப் பண்ணினா.. என இவள் சொல்வாள். சுறுசுறுப்பின் மறு பெயர் என்றால் அவரைச் சொல்லவேண்டும்.. பப்ளிக் ரிலேஷனில் கில்லாடி.
உடன் வீட்டில் குட்டி மந்திராலோசனை நடத்தி “என்னடி.. வந்து இருக்கறது பத்திப் ப்ராப்ளமில்லை.. போய்ட்டுப் போய்ட்டு வர்றா மாதிரி இருந்தா ஒரு ரெஸிடெண்ட் விசாவே எடுத்துடட்டுமா..
உங்க இஷ்டம் (சரி சரி வளவளன்னு பேசாம எடுக்கறவழியப் பாருங்க) எனச் சுருக்கமாய்பதில் வர கம்பெனி பி.ஆர்.ஓ ஓமானியிடம் சொன்னால் “யாருன்னு சொன்னீங்க..”
“அம்மா டா”
”உங்க அம்மாவா”
“என் மனைவியின் தாய்..மேரா பத்னிகா மா..என்லு பொண்லு அம்முலு.. என தமிழ் ஹிந்தி தெலுகு மொழிகளிலும் ஆங்கிலத்திலும் சொல்ல “அப்பக் கஷ்டம்”
“செல்லம் உனக்கு உன் பலம் தெரியாது..நீ ஆஞ்சனேய வேஷம் போட்ட தெருக்கூத்து ஆசாமி மாதிரி செய்டா” எனச்சொல்லி செய்யவைத்து மறுவாரம் அழைத்து வந்துவிட்டேன்..
முதல் வருடம் போயிருந்த போது பார்த்ததை விட இன்னும்கொஞ்சம் நாலைந்து வயது ஏறினாற் போலத்தெரிந்தார்.. நரைத்த தலை கண்களில் கண்ணாடி..அழகிய காட்டன் புடவை..க்ரே வித் ரெட் பார்டர்.. ஒற்றை ஹேண்ட் லக்கேஜே முழு லக்கேஜ்..என அலட்சியமாய் வந்து காரில் ஏறியதும் ”ஏன் இப்படி டிலே பண்ணேள்..”
எவ்ளோ சீக்கிரமோ அவ்ளோ சீக்கிரமா கூட்டிக்கிட்டேனேங்க..
சரி சரி..அவ என்ன பண்றா ஆத்துல..எப்ப ஊருக்கு லீவில போறேள்..இது ஜூன்.. நீங்க போறது அக்டோபரா ..ம்ஹூம் நான் வரமாட்டேன்..இங்கேயே மேனேஜ் பண்ணிக்குவேன்..எனக்கு இங்க தான் எல்லாம் இனி”
சரி ஏதோ அந்தப் பக்கம் ஏதோ மனஸ்தாபம் போல இருக்கிறது என எதுவும் கேட்காமல் வீட்டிற்கு அழைத்து வந்தேன்..
ரெஸிடென்ஸ் கார்ட் எடுத்தும் கொடுத்தாகி விட்டது.. எப்பப்போணும்னு தோணறதோ சொல்லுங்க.. போய்ட்டு மறுபடியும் இங்கிட்டு வந்துடலாம்..- நான் ஏதாவது கேட்டேனா உங்க கிட்ட..
இரண்டு மாதங்கள் போனது தெரியவில்லை..வழக்கத்துக்கு மாறாக இன்னும் சுறுசுறுப்பு.. அவருக்கு பருப்புருண்டைக் குழம்பு பிடிக்கும் அப்புறம் இதோ இந்த சக்கரைப் பொங்கல் அப்புறம்..இதெல்லாம் பிடிக்கும் எனலிஸ்ட் போட்டு…… நான் செய்றேன்.. நீ உன் வேலையைப் பாரு..அம்மா ரிலாக்ஸா இரேம்மா..சும்மா இருடி.. உங்க ஊர் வெயில் சும்மாக் காயுது வடாம் கெளர்றேன்..பால்கனில்ல போட்டால் பொல்லுன்னு காஞ்சுடும்..
இன்னும் நகைச்சுவை.. கொண்டும் பேசி க் கொண்டிருந்தார்..
விழுந்து விழுந்து நான் வைத்திருக்கும் புத்தகங்கள் எடுத்துப் படிப்பு..
இந்தாங்க உங்களுக்காக ப்ரிலைன்ஸ். ஐஸ்க்ரீம்..
தாங்க்ஸ்ங்க…
ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் கழிந்து ஒரு நாள் இரவு…உணவு முடிந்ததும் பேச்சு.
.”அக்டோபர் தானே போறீங்க.. இவளே..அந்த பென்ஷன் ஆஃபீஸ் போய் நான் உயிரோட இருக்கேன்னு சொல்லிடு..(மாமனார் வேலை பார்த்திருந்தது ரயில்வேஸில்)..உங்க கதைகள் படிச்சேன்..பேசறா மாதிரியே எழுதறீங்க..உங்க வெள்ளந்தி மனசு தெரியுது..அப்புறம் என வீட்டில் இருந்த மற்ற அனைவரையும் பற்றி ஒரு லெக்சர்.. சொன்ன நேரம் பத்தே முக்கால்..
குட் நைட் இவளே..குட் நைட்ங்க.. எனச் சொல்லி அவர் அறையுள் சென்று விளக்கணைத்துப் பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும்.. நான் ஹாலில் கம்ப்யூட்டரில் இணையம்..இவள் வாரப்பத்திரிகைப் புரட்டல்..ம்ஹூ ம்ஹீ என மூச்சுத் திணறல் சத்தம் வெளியில் கேட்க. அதிர்ந்தோம்..
அம்மா என்ன ஆச்சு..என இவள் பதற இந்தாங்க கதவைத்திறங்க என நான் பதறி கதவின் மேல் முட்டி மோத அதற்குள் இவள் பக்கத்து எதிர் ஃப்ளாட் நண்பர்களை செல்ஃபோனில் அழைக்க அவர்களும் வந்துவிட கதவு ஏற்கெனவே கொஞ்சம் ரிப்பேர் ஆகத் தான் இருந்ததால் மறுபடி மோதலில் திறக்கப் பட..உள் சென்றால்.. வார்த்தையில் விவரிக்க இயலா அமைதி..
படுக்கையில் அவர்.. கரத்தைத் தொட்டால் ச்சிலீர் சில்லிப்பு..வீட்டுக்காரியின் அழுகை.. பின் டபக்கென்று இருவர் தூக்கிக் கொண்டு லிஃப்டில் இறங்கி காரெடுத்து ரூவி ஹைஸ்ட்ரீட் எண்ட்டில் இருந்த பத்ர் அல் சமா ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிச் சென்றால் செக் செய்த டாக்டர் உதட்டை மடித்தார்.. வரும்போதே உயிர் போயிருந்திருக்க வேண்டும் மாஸ்ஸிவ் ஹார்ட்ட் அட்டாக் எனச் சொல்லிவிட்டு ஆர்.ஓ.பி எனப்படும் ராயல் ஓமான் போலீஸிற்கு போன் செய்ய ஆரம்பித்தார்..ஃபார்மாலிட்டீஸ்..
கிழங்குகிழங்காய் நான்கு பிள்ளைகள் நல்ல வேலையில் மற்றும் மூன்று பெண்கள் (என் வீ.கா. கடைசி) இருக்கையில் இங்குவந்து உயிர் போக வேண்டுமா..அதுவும் சுவடே இல்லாமல்.. நான் வெடிக்கும் துக்கத்தைப் பொறுத்துக் கொண்டு ஆர்.ஓ.பி வந்ததைப் பார்த்து..”சலாம் அலைக்கும்” “அலைக்கும் அஸ்ஸலாம்..”
வந்திருந்த ஒல்லியாயிருந்த போலீஸ்மென் இருவர் என்னை ஏற இறங்கப் பார்த்து, என் வீ.கா வைப் பார்த்து பின் சூழ்ந்திருந்த நண்பர்களிடம் விவரம் அறிந்து என்னருகில் வந்து ஸாரி.. எனச் சொல்லி பேப்பர்களில் கையெழுத்திட்டுக் கொடுக்க அரை மணி நேரமோ அதற்கு மேலோ ஆம்புலன்ஸ் பின்னாலேயே சென்று இரவு ஒரு மணிக்கு கவர்ன்மென்ட் ராயல் ஹாஸ்பிடல் மார்ச்சுவரியில் கொடுத்துவிட்டு வீடு திரும்ப ..ஆறரை மணிவரை ஃபோன்கால்கள்..
ஏழு மணிக்கு நானும் நண்பரும் காரெடுத்து ராயல் ஹாஸ்பிட்டல் மார்க் கிற்குச் சென்றால் ஒரு ஓமானி, போலீஸ் ப்ளஸ் இரு மலையாளிகள் அங்கு வேலை பார்ப்பவ்ர்கள்.. போஸ்ட் மார்ட்டம் இல்லாமல் வேண்டுமெனில் இன்னின்ன பேப்பர்கள் வேண்டும் என லிஸ்ட்.. போய் எடுத்து மத்தியானம் ஒருமணிக்குள் வாங்கள்..அப்போது தான் நாங்கள் தயார்ப்படுத்த முடியும் இரண்டு மணிக்கு இங்கு க்ளோஸ்.. சரி ஃபீஸ் யூ கேன் பே பை கார்ட் ஆல்ஸோ..
பின் பின் பின் நீண்ட அலைச்சல்கள்..ஆஃபீஸிற்குப் போன் பண்ணி எனக்கு,என் மனைவிக்கு, பின் உயிர் துறந்த மாமியாருக்கு புக் பண்ணச் சொல்லி. விட்டு இன்னொரு இடம் போய் அங்கிருந்த இண்டியன் எம்பஸியில் பாஸ்போர்ட் கான்ஸலேஷன்…
பரப்ப்ரம்மம் மாதிரி பொல்லென்று தலைவெளுத்து மீசை வெளுத்த நபர் “ ஹூ டைய்ட்” “என் மாமியார்..” தென் உங்கள் மனைவியிடமிருந்தல்லவா கடிதம் வேண்டும்.. சரி என்று மறுபடியும் லொங்கிடி லொங்கிடி எனப் பறந்து வீடு வந்து ஃப்ளாட் நண்பர்கள் எல்லாம் சூழ இருந்த மனைவியிடம் கடிதம் வாங்கி மறுபடி இ.எ. வந்து கொடுத்தால் ஃபீஸ் நானூறு பைஸா (60 ரூபாய் அப்ராக்ஸ்) வாங்கிக் கொண்டு மாமியாரின் பாஸ்போர்ட்டின் நான்கு மூலைகளையும் வெட்டி, பின் லெட்டர் டூ ஆர் ஓபி எனவாங்கி மறுபடியும் ரூவி - ட்ராஃபிக் கடந்து போலீஸ் ஸ்டேஷன். அடையும் போது பன்னிரண்டரை.. மார்ச்சுவரியிலிருந்து ஃபோன்..
என்னாச்சு..இதோஆர்.ஓ.பியில் இருக்கிறோம்..இல்லைஇல்லை இன்றைக்கே வேண்டும்.. (என் மனைவியின் மூத்த சகோதரர் எல்லா ஏற்பாடும் மறு நாள் செய்வதாகச் சொல்லியிருந்தார்) இதோ கொண்டு வருகிறோம் சொல்லி செல்லணைத்து அறையுள் சென்றால்..மறுபடியும் அதேகேள்வி இறந்தது யார்..அதே பதில்..
சொல்வது சரி.. ஆனால் நீங்கள் ஏன் ரெஜிஸ்டர் செய்யவில்லை ஆர். ஓ.பியிடம்
இல்லையேய்யா.. எனக்கு எகிறியது. பி.ஆர்.ஓ. மூலமாகச் சொன்னேன்.. ரெண்டு பேர் வந்து பார்த்தார்களே
பெயர்
சாமிசத்தியமாக எனக்குக் கேட்கத் தோன்றவில்லை எனச் சொன்னால் புரியவா போகிறது.. இல்லை.கேட்கவில்லை..
பின் மறுபடியும் கேள்வி கேட்ட போலீஸ் மேலதிகாரி வேறுஎவருடையோ தொடர்பு கொண்டு பேசப் பேச நிமிடங்கள் நகர்ந்து கொண்டிருக்க.. போலீஸ் உடையில் பல காவலர்கள் குறுக்கே போய்க்கொண்டிருக்க யாரைப்பார்த்தாலும் நேற்று வந்திருந்த நபர்கள் போல் தெரிய.. கடைசியில் மறுபடி ஃபோனை வைத்து மெல்ல நிதானமாய் அரபிக்கில் கம்ப்யூட்டரில் அடித்து சைன் பண்ணி சீல் வைத்துக் கொடுக்கும் போது மணி இரண்டரை..
தாவிப் பறந்து ராயல் ஹாஸ்பிடல் போனால் இருந்த மலையாள நபர் கொஞ்சம் புன்சிரிக்க முயன்று தோற்றான்.. எல்லாம் ரெடி நீங்க பேப்பர் கொண்டு வந்திருக்கீங்களா .. கேட்டு வாங்கி உள்ளறைக்குக் கூட்டிச் சென்றான்.. நீங்கள் கொண்டுவந்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் ஏற்கெனவேஃபார்மாலிட்டீஸ் செய்து விட்டோம்.. யூ ஹேவ் டு ஹெல்ப் அஸ் இன் கீப்பிங்க் இன் த பாக்ஸ்..
ஒருதுணியில் சுருட்டப்பட்டு இருந்தார் அவர்..முகம் மட்டும் வெளித்தெரிய.. நானும் உடன் வந்த நண்பரும் எடுத்து வைக்க பெட்டி மூடப்பட்டு வேனில் விமான நிலைய கார்கோ செக்*ஷன் நோக்கிச் செல்ல விஷயம் முடிந்ததா என்றால் இல்லை..
ஆஃபீஸிலிருந்து அலுவலக நண்பர் ”எல்லாப் பேப்பர்களையும் எடுத்துக் கொண்டு கார்கோ செக்*ஷன் போகச் சொல்லியிருக்க அங்கு போனால் எல்லாவற்றிற்கும் ஒரு ஆறு காப்பிஎடுத்துக் கொடுங்கள்.. எனச் சொல்ல எங்கிட்டுப்பா போறது..இதோ இங்கயே இருக்கே என ஜெராக்ஸ் மெஷின் காண்பிக்க அந்த இருபதுக்கும் மேலான பேப்பர்களை மனோவேகத்தில் எடுத்து ஆர்கனைஸ் செய்து கொடுத்தால் கார்கோ செஷன் நபருக்கு ஃபோன்..
என்னப்பா என்னது இன்னொரு கேஸா..ஓ. நோ.. இப்பத் தான் ஒண்ணு முடிச்சேன்.. முடியாதுன்னு சொல்லிடு என முடித்து.. எங்களிடம்..எல்லாம் முடிஞ்சுருச்சு சார்.. நீங்களும் புறப்படறீங்களா.. சரி காலைல சென்னைல க்ளியர் பண்ணிக்கலாம்.. இந்தாங்க உங்களுக்கு ரெண்டு காப்பி.. எனச் சொன்ன போது மணி ஆறரை.. பத்தரைக்கு ஃப்ளைட் என்பது நினைவு வர கூடவே இன்னொரு நினைவும்..யெஸ் பசி..
கீழிருந்த காஃபி ஷாப்பில் ஒரு டீ ஒரு பொறை குடித்துவிட்டு பின் வீடுவந்து கிளம்பி ஏர்போர்ட் வந்து உள்ளே ஃப்ளைட் கிளம்புவதற்காகக் காத்திருக்கையில் தான் கூட துபாயிலிருந்து வந்து எங்களுடன் சென்னை வருவதற்கு இருந்த உறவினர் சொன்னார்.. “வெரிகுட் கண்ணா.. நார்மலாக இப்படி க் க்ளியரன்ஸ் செய்வதற்கு நான்கு நாட்களாகுமாம்..” கலங்கியவிழிகளுடன் அவரது வெரிகுட்டை வாங்கி அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டேன்..
சில சமயங்களில் சில விமானப் பயணங்கள் மறக்க முடியாதவை.. அதுவும் இந்த ஏர் இந்தியா பயணம் மறக்கவே மறக்காது.. எங்களுடன் சிரித்துப் பேசி வரவேண்டிய மாமியார் தனியாக கார்கோ கீழ் வர மேலே நாங்கள்.. கண்கள் வலித்து மூடினாலும் மனம் மூடவில்லை..தூக்கமும் வரவில்லை.என் அன்னை இருபத்து மூன்று வருடஙக்ளுக்கு முன் தவறிய போது அவரது. இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை ஃப்ளைட் கனெக்*ஷன் கிடைக்காததால்..ஒருவேளை அதற்காகத் தான் இதுவா.. ஒன்றும் புரியவும் இல்லை..
ம்ம். பிறகு சென்னை ஏர்போர்ட்டில் பட்ட கஷ்டங்கள் அது வேறுகதை..
*
விமானத்திற்குள் எடுக்கப் பட்ட பாடல்கள் என்றால் இரண்டு தான் நினைவுக்கு வருகின்றன..எழுதியதற்குப் பொருத்தமெல்லாம் இல்லை.. வேறு வேறு சூழல்களில் இருக்கும் விமானப் பாட்டுக்கள் தந்திருக்கிறேன்.
ஓ மானிடஜாதியே..
ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம்..
http://www.tamilmp3songslyrics.com/s...ainthathu/3828
http://www.youtube.com/watch?v=y0KUL...yer_detailpage
அப்புறம் வரட்டா…
**
எல்லோரும் கொண்டாடுவோம் சில தோல்விகளை.
வெற்றி என்பது வாழ்க்கையில் வைப்பாட்டி மாதிரி.எல்லோருக்கும் அமைவதில்லை. அவனவன் மட்டுமே கொண்டாட வேண்டும்.ஆனால் தமிழர்களான நாமோ,இன்னொருத்தன் வெற்றியை,கொண்டாடுவதோடு மட்டுமின்றி ,வெற்றி பெற்றவனின் சூழ்ச்சிகள்,நல்ல அதிர்ஷ்டம்,நேரம் துணை போனது,சில அசம்பாவிதங்கள் சாதகமாக அமைதல்,எல்லாவற்றையும் மறந்து பிறத்தியானின் வெற்றியை மட்டுமே கொண்டாடி மகிழும் கேடு கெட்ட
ஜென்மங்களாக மாற்ற பட்டதுடன் நில்லாமல்,அவன் காணும் தோல்விகளை நம் மேல் சுமந்து ,அவன் வெற்றி மட்டுமே பெற்றதாக காட்ட எண்ணுகிறோம்.வெற்றி மகிழ்ச்சியான விஷயம் நமக்கு மட்டுமே பிரத்யேகமாக அமையும் போது மட்டும்.
ஆனால் திறமை,ஈடுபாடு,தியாகம்,அறிவு,நேர்மை,தொழில் தேர்ச்சி இவையெல்லாம் வெற்றி-தோல்வி பாராமல் மனித குலத்தால் கொண்டாடி மகிழ பட வேண்டும். ஏனென்றால் ,இந்த அம்சங்கள் ஒருவனுக்கு இருந்தால் ,அவனால் சமூகம் பல விதங்களில் பயன் பட முடியும்.
சொல்ல வந்ததை விட்டு விட்டேனே? இது இசை மேடை என்பதால் ,என்னை துன்ப படுத்திய சிலரின் தோல்விகள்,ஏமாற்றங்கள்,துயரங்கள்,துரதிருஷ்டங்க ள் இவற்றை சொல்ல போகிறேன்.இவை பழையன கழிந்து புதியவை புக்கதாலோ,நேரம் அமையாததனாலோ ,வெற்றி பெற்றும் மேற்செல்லாமல் விடுத்ததனாலோ வந்த துயர தோல்விகள். ஒரு வெற்றி பெற்ற மனிதனின் பாதையில் ,அவனை விட திறமைசாலிகள்,முன்னோர்கள்,சம போட்டியாளர்கள் இவர்களின் தோல்விகள் இருக்கும். அவனாக சேர்த்த எலும்பு கூடுகள் (சூழ்ச்சி ,வலியன எஞ்சும் எச்சம்),தானாக சேர்ந்த எலும்பு கூடுகள் என்று எண்ணி மாளாதவை. நாமாவது அவற்றை எண்ணுவோமே?
ஜி.ராமநாதன்-
50 களின் இசை அரசர். தூய கர்நாடக சங்கீதம்,மெல்லிசை,இணைப்பிசை,கிராமிய இசை என்று தொடாதவை பாக்கி இல்லை.இவர் கோலோச்சிய காலங்களில் சுப்பராமன் தோன்றி மறைந்தார்.விஸ்வநாதன் -ராமமூர்த்தி 60 களில் எழுச்சி பெற்றனர். கே.வீ மகாதேவன்,ஏ.எம்.ராஜா பின் 50 களில் உதயமாகினர். ஆனால் அறுபதுகள் எம்.எஸ்.வீ-டி.கே.ஆர் ,கே.வீ.எம் வசமானது. வீரபாண்டிய கட்டபொம்மனில் சிவாஜிக்கு ஆசிய-ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகர் விருது போலவே,ஜி.ராமநாதனுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது.தொடர்ந்து,கப்பலோட்டிய தமிழனில் இவர் பங்கு அருமையாக வந்தது.(சில விமரிசனங்கள் பாதகமானது).அது வரை சமூக படங்களில் மட்டுமே கொடி நாட்டிய (மன்னாதி மன்னன் நீங்கலாக)எம்.எஸ்.வீ -டி.கே.ஆர் கர்ணனில் வாய்ப்பு பெற்றது ,வாய்ப்பை எதிர்பார்த்து ,ஏமாந்த ஜி.ராமநாதனை மிக பாதித்து நோய் படுக்கையில் தள்ளியது.என் கதியை பார்த்தாயா என்று புலம்பும் அளவு!!! பட்டினத்தார்,அருணகிரி நாதர் என்று கிடைத்தவற்றில் தன் முத்திரை பதித்த இம்மேதை ,சரிவின் பாதையை முழுவதும் காணாமல் மாண்டது, நமக்கு ஆசுவாசம் தந்த மறைவே.
https://www.youtube.com/watch?v=4XT2iUOqKwE
https://www.youtube.com/watch?v=pvz8D1V0QjI
https://www.youtube.com/watch?v=1t6oWLbzPCc
(தொடரும்)
வெற்றி என்பது வாழ்க்கையில் வைப்பாட்டி மாதிரி.எல்லோருக்கும் அமைவதில்லை. அவனவன் மட்டுமே கொண்டாட வேண்டும்.ஆனால் தமிழர்களான நாமோ,இன்னொருத்தன் வெற்றியை,கொண்டாடுவதோடு மட்டுமின்றி ,வெற்றி பெற்றவனின் சூழ்ச்சிகள்,நல்ல அதிர்ஷ்டம்,நேரம் துணை போனது,சில அசம்பாவிதங்கள் சாதகமாக அமைதல்,எல்லாவற்றையும் மறந்து பிறத்தியானின் வெற்றியை மட்டுமே கொண்டாடி மகிழும் கேடு கெட்ட
ஜென்மங்களாக மாற்ற பட்டதுடன் நில்லாமல்,அவன் காணும் தோல்விகளை நம் மேல் சுமந்து ,அவன் வெற்றி மட்டுமே பெற்றதாக காட்ட எண்ணுகிறோம்.
Nice sunday's joke.
டியர் கோபால்Quote:
வெற்றி என்பது வாழ்க்கையில் வைப்பாட்டி மாதிரி.எல்லோருக்கும் அமைவதில்லை. அவனவன் மட்டுமே கொண்டாட வேண்டும்.ஆனால் தமிழர்களான நாமோ,இன்னொருத்தன் வெற்றியை,கொண்டாடுவதோடு மட்டுமின்றி ,வெற்றி பெற்றவனின் சூழ்ச்சிகள்,நல்ல அதிர்ஷ்டம்,நேரம் துணை போனது,சில அசம்பாவிதங்கள் சாதகமாக அமைதல்,எல்லாவற்றையும் மறந்து பிறத்தியானின் வெற்றியை மட்டுமே கொண்டாடி மகிழும் கேடு கெட்ட
ஜென்மங்களாக மாற்ற பட்டதுடன் நில்லாமல்,அவன் காணும் தோல்விகளை நம் மேல் சுமந்து ,அவன் வெற்றி மட்டுமே பெற்றதாக காட்ட எண்ணுகிறோம்.வெற்றி மகிழ்ச்சியான விஷயம் நமக்கு மட்டுமே பிரத்யேகமாக அமையும் போது மட்டும்.
ஆனால் திறமை,ஈடுபாடு,தியாகம்,அறிவு,நேர்மை,தொழில் தேர்ச்சி இவையெல்லாம் வெற்றி-தோல்வி பாராமல் மனித குலத்தால் கொண்டாடி மகிழ பட வேண்டும். ஏனென்றால் ,இந்த அம்சங்கள் ஒருவனுக்கு இருந்தால் ,அவனால் சமூகம் பல விதங்களில் பயன் பட முடியும்.
யதார்த்த வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படக்கூடிய அனுபவங்கள், மனச்சோர்வுகள் இவற்றிற்கான காரணிகளில் மேலே சொன்னவையும் அடங்கும். இதை இந்த விதத்தில் பார்த்தால் தாங்கள் கூறியுள்ளது நூற்றுக்கு நூறு சரியானதாகும். இதை ஒரு சராசரி மனித வாழ்க்கையோடு இணைத்துப் பார்த்தால் தங்கள் கருத்து ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொருந்தும்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.