-
திருக்குறளும் , திரை இசையும்
http://i818.photobucket.com/albums/z...pskzmslztt.jpg
எல்லோருக்கும் வணக்கம் . ஒரு புதிய பதிவாக திருக்குறளும் , திரை இசையும் என்ற சிறிய தொடர் ஒன்றை ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது - ஒரு 10 அல்லது 15 குறள்களை , தினமும் ஒரு குறளாக , அந்த குறளை மையம்மாக வைத்து வெளிவந்த சில சிறந்த திரைப்பாடல்களையும் , படங்களையும் அலசலாம் என்று ஒரு சிறிய ஆசை . உங்கள் ஆதரவு முக்கியமாக CK வின் ஆதரவு இந்த பதிவுகளுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறேன் . நீண்ட தொடர்கதையாக இந்த பதிவுகள் இருக்காது என்ற உத்திரவாதத்தையும் தருகிறேன் . முதலில் திருக்குறளை பற்றிய சிறிய தொடக்கம் .
திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது
திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.
தமிழ் உரை எழுதியவர்கள்
• திரு பரிமேலழகர்
• திரு மு.வரததாசனார்
• திரு மணக்குடவர்
• திரு மு.கருணாநிதி
• திரு சாலமன் பாப்பையா
ஆங்கில உரை எழுதியவர்கள்
• Rev. Dr. G. U. Pope
• Rev W. H. Drew
• Rev. John Lazarus
• Mr F. W. Ellis
தந்தை , தாயை எப்படி இன்னும் கற்றுக்கொண்டிருக்கின்றோமோ அதே மாதிரி ஒவ்வொரு பருவத்திலும் திருக்குறள் ஒரு புதிய அரத்தத்தை நமக்கு தந்துக்கொண்டே இருக்கும் - இதுதான் குறளின் பெருமை - இரண்டே அடிகள் ( மனைவி நம்மை ஒரே அடியில் திருத்திவிடுவாள் என்பது வேறு விஷயம் ) , இனிமையான அர்த்தங்கள் , வாழ்க்கை நெறிமுறைகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் வரிகள் - இனி பதிவுகளுக்கு செல்வோம் ......
-
ஹாய் ரவி வாங்க.. வழக்கம் போல தூள் பரத்துங்கள்
வாகாய்த் தமிழில் வளமுடன் நன்றாய்
ரசமாய்த் தருவார் ரவி
-
திருக்குறளும் , திரை இசையும் 2
ந.தி சம்பந்தபடாத ஒரு கருத்தையோ , ஒரு தொடரையோ , அவர் எண்ணங்கள் இல்லாத நல்ல பாடல்களையோ சொல்வது என்பது பிரம்ம ப்ரயத்தனம் . திருக்குறளின் அருமையை இந்த பாடல் சொன்னதைப்போலவோ , பாடலில் கலந்து ஒன்றான நடிகர் திலகம் பெருமிதம் கொண்டதைப்போலவோ , பாடல் திலகம் பாடியத்தைப்போலவோ , திருவள்ளவரே மீண்டும் உயிருடன் வந்தாலும் கேட்டு வாங்க கூடியதல்ல ... அனுபவிக்க வேண்டிய பாடல் - திருக்குறள் இன்னும் எவ்வளவு நாட்கள் இந்த உலகத்தில் இருக்குமோ அதை விட அதிக நாட்கள் வாழும் பாடல் இது ---
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
உலகுக்கு ஒளிபோலே...... உலகுக்கு ஒளிபோலே
உடலுக்கு உயிர்போலே
உலகுக்கு ஒளிபோலே உடலுக்கு உயிர்போலே
பயிருக்கு மழைபோலே.......
பயிருக்கு மழைபோலே பைந்தமிழ் மொழியாலே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே
அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தலைபோலே
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தலைபோலே
அவசியம் கற்றுணர்ந்து பயன் பெறும் நினைப்பாலே
அவசியம் கற்றுணர்ந்து பயன் பெறும் நினைப்பாலே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே ......
வாழும் வழிமுறைக்கு இலக்கணமானது
மனம் மொழி மெய்யினிக்க வார்த்திட்ட தேனிது......ஆ......ஆ.....
வாழும் வழிமுறைக்கு இலக்கணமானது
மனம் மொழி மெய்யினிக்க வார்த்திட்ட தேனிது
வானகம் போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது எம்
மதத்துக்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது எம்
மதத்துக்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
https://www.youtube.com/watch?v=_XzRfJsL5xg
-
திருக்குறளும் , திரை இசையும் 3
இதோ இந்த தம்பதிகளைப்பாருங்கள் - வள்ளுவர் வழியினிலே இனி வாழ்க்கை ரதம் செல்லுமே என்று பெருமிதத்துடன் தாம்பந்திய உறவை ரசித்து பாடுகிறார்கள் - நாமும் இவர்களுடன் இணைந்து காலம் காலமாக பாடிவரும் பாடல் இது ....
பெண் : இன்று நமதுள்ளமே - பொங்கும்
புது வெள்ளமே
இல்லற ஓடமிதே - இனி இன்பம்
ஏந்திச் செல்லுமே!
ஆண் : மங்கையர் குலமணியே
மஞ்சள் முகந்தனிலே
மகிழ்ச்சிகள் துள்ளுமே
வந்தென்னை அள்ளுமே!
பெண் : நேற்று நம்மைக் கண்ட நிலா
நெஞ்சுருகிச் சென்ற நிலா
வாழ்த்துகள் சொல்லுமே
மனந்தனைக் கிள்ளுமே!
ஆண் : வள்ளுவன் வழியினிலே - இனி
வாழ்க்கை ரதம் செல்லுமே
பெண் : கண்களில் ஊறும் நீரும் - இனி
நம் நிலைகாண நாணும் - சுகம்
https://youtu.be/Ll-yDdgCHm0
-
வாசு - யாரும் அதிகமாக தெரிந்துக்கொள்ளாத , பார்த்திருக்காத நபர்களையும் , பாடல்களையும் , படங்களையும் எங்களுக்காக நிலக்கரி சுரங்கமென தோண்டி எடுத்துவந்து அவைகளை எங்கள் நினைவுகளில் நிறுத்தி , ஆணி அடித்து என்றும் மறக்கமுடியாமல் செய்து வெற்றிகொள்வதில் உங்களை யாருமே மிஞ்ச முடியாது . இந்த "குழந்தை உள்ளத்தை " ஒரு படமாக நான் படிக்கவில்லை - உங்கள் உள்ளமும் இதுபோலத்தான் என்று எண்ணியே ரசித்தேன் . உங்களிடம் இருந்து எந்த பாடல் , எந்த நபர் , எந்த படம் எப்பொழுது வரும் என்றே சொல்ல முடியவில்லை - பாலாவைபார்த்துகொண்டிருக்கும் போது , சரளா வருகிறார் - சரி சரளாவைப்படிப்போம் என்று நினைக்கும் போது குசல குமாரி எங்கிருந்தோ வருகிறார் - சரி அவர்களைப்பார்ப்போம் என்று நினைக்கும் போது " ஏன் ஏன் " அங்கு பார்க்கிறீர்கள் என்று மீண்டும் பாலா வந்து தடுக்கிறார் . இராவணன் போல பத்து தலையும் , இருபது கண்களும் எங்களுக்கு வேண்டாம் - முருகன் போல ஆறுமுகமும் , பன்னிரண்டு கண்களாவது வேண்டும் - எல்லா பதிவுகளையும் சரிசமமாகப்படிக்க --------
-
தாம்பத்யம்
உறவுகள் முறிந்து வரும் இந்த காலத்தில் , அன்பு , பாசம் , பந்தம் இவைகள் வெறும் காசோலைகளாகத் தெரியும் இந்த காலத்தில் , தாம்பத்யத்தின் அருமையை எடுத்துச்சொல்வது என்பது , மீண்டும் LKG யில் சேர்ந்து படிப்பதைப்போன்றது ... இருந்தாலும் இந்த உறவு மகத்தானது - வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று . ஒருவனுக்கு நல்ல பெற்றோர்கள் கூட அமைந்துவிடலாம் - ஆனால் ஒரு நல்ல மனைவி , அருமையான ஒரு தாம்பத்திய வாழ்க்கை அமைவது என்பதற்கு மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் . பெற்றோர்கள் என்ற பந்தத்தை எப்படி இந்த தலைமுறை அதிகமாக கண்டு கொள்வதில்லையோ , அதே போல மனைவியின் அருமைகளையும் அதிகமாக நாம் புரிந்து கொள்வதில்லை - ஒரு நல்ல கணவனின் வெற்றிக்கு முன்னும் , பின்னும் ஒரு நல்ல மனைவிதான் இருக்கிறாள் - அவள் எடுக்காத அவதாரங்களே இல்லை - மருமகளாக , மனைவியாக , தாயாக , சகோதரியாயக -----
live in relationship அதிகமாக வளர்ந்துகொண்டிருக்கும் இந்த காலத்தில் , கணவன் , மனைவி இருவர் மட்டுமே இருக்கும் ஒரு குடும்பத்தை " joint family " என்று சொல்லக்கூடிய நிலைமை வந்துவிட்டது - சற்றே காலத்தை பின்னோக்கி நகர்த்துவோம் - உனக்கு நான் , எனக்கு நீ என்று உணர்த்தும் சில அருமையான பாடல்களைப்பார்ப்போம் . இதுதான் தாம்பத்யம் - இப்படித்தான் வாழ வேண்டும் ஒருவர் அருமையை ஒருவர் உணர்ந்துகொண்டு ---------------
-
தாம்பத்யம் - 2
மனைவி அமைவதெல்லாம்! (முழுவதும் படிக்கவும் )
திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நெறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது.
கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில் படும்படி வைத்தேன் . இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன்.எஸ் .ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன்.கேரம் ,செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள் . ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழ துவங்கி இருந்தேன் .
ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..!
விருந்து முதற்கொண்ட சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது.
கீழ்க்கண்ட உரையாடல்கள் சில தினங்களில் சில தினங்கள் இடைவெளியில் நடந்தது.
புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ?
இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..!
எந்த புக்கும் படிச்சது இல்லையா ?
ஆமாங்க எனக்கு இந்த புத்தகம் ஏதும் படிக்க புடிக்காது..!
இந்த குமுதம் ,ஆனந்த விகடன் இதெல்லாம் கூட படிச்சது இல்லையா ?
நான் + 2 படிச்சப்போ படிச்ச பாட புத்தகம் தான் நான் கடசியா படிச்சது அதுக்கப்புறம் எந்த புக்கும் படிச்சது இல்ல...!
எதோ ஜோக் சொன்னதுபோல அவள் சொல்லி சிரிக்க நான் வெளிறிபோனேன் ..!
எனக்கு மண்டை காய்ந்துபோனது எந்த ஒரு புத்தகமும் படிகாதவளிடம் போய் பாலகுமாரனை பற்றி பேச முடியுமா..? சேர்த்து வைத்து இருந்த புத்தகங்கள் ...?ஒரு அட்டைப்படத்தில் பால குமரன் என்னை கவலையுடன் பார்ப்பதாக தோன்றியது ..!
கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை பார்வையில் படும்படிதான் வைத்து இருந்தேன்..! அதை பற்றி அவள் கேட்கவேண்டும் நான் பீற்றி கொள்ளவேண்டும் இதுதான் திட்டம் .
ஆனால் ..? எதோ வீட்டில் உள்ள காலண்டரை பார்ப்பது ,வால் கிளாக்கை பார்ப்பதுபோல அந்த பரிசுகளை கோப்பைகளை அவள் கண்டுகொள்ளவே இல்லை.
அப்புறம் வேறு வழி இல்லாமல் நானே சொல்ல ஆரம்பித்தேன் ..!
இந்த கப் எல்லாம் நான் வாங்கினது தெரியுமா ..?
எதுக்கு வாங்குனீங்க..?
இதெல்லாம் நான் கிரிக்கெட் வெளையாடி வாங்கினது
ஒனக்கு கிரிக்கெட் புடிக்குமா ..? கிரிக்கெட் பார்ப்பியா ..?
எங்க வீட்டுல எல்லாரும் கிரிக்கெட் பார்ப்பாங்க எனக்கு மட்டும் கிரிக்கெட் சுத்தமா புடிக்காது ..!
(அதானே எனக்குன்னு இப்படித்தான் வாய் க்கனும்னு இருக்கும்போது எப்படி கிரிக்கெட் புடிக்கும் )
யாரோ பின் மண்டையில் பேட்டால் அடித்தது போல இருந்தது..! நொந்துபோனேன்..!
இந்த பாடகர் - பாடகிகள்ல உனக்கு யார புடிக்கும்..?
ம்ம்... இவங்களத்தான் புடிக்கும்னு சொல்ல முடியாது பொதுவா எல்லா பாட்டும் கேப்பேன்..!
உனக்கு புடிச்ச பாட்டு ஒன்னு சொல்லேன்..!
அட போங்க திடீர்னு இப்படி கேட்டா எப்படி சொல்லுறது ..?
சரி எஸ் .ஜானகி புடிக்குமா ?
யாரு கெழவி போல இருக்குமே அதுவா ?
எஸ் .ஜானகியை கெழவி ன்னு சொன்னதும் எனக்கு செம கோவம் ...!எனக்கு புடிச்ச பாடகி அவரை கிழவின்னு சொன்னதும் என்னால அதை பொறுத்துக்க முடியல. என்ன செய்ய எல்லாம் விதி...!
என்னை நானே நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவள்மேல் கோபப்பட முடியவில்லை ஆனால்..? அவளுக்கு கோவம் அதிகம் வரும் முன்கோபி என் பாதுகாப்பும் முக்கியமில்லையா எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.
மனைவி விசயத்தில் மிகுந்த ஏமாற்றம் ...!துளியும் எனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை .
ஆணித்தரமாய் எனக்கு தோன்றியது இதுதான்
இவள் எனக்கு ஏற்ற ஜோடிஇல்லை .
கணவன் மனைவி இருவரும் இரட்டை மாட்டு வண்டியைபோல என்று சொல்வார்கள் ஒரு மாடு சரியில்லாமல் போனாலும் குடும்ப வண்டி சரியாக ஓடாது என்று. உண்மைதான். நான் இப்படி முடிவு எடுத்தேன் பேசாமல் அவளையும் வண்டியில் தூக்கி உட்கார வைத்துவிட்டு ஒற்றை மாடாக வண்டியை ஓட்ட வேண்டியதுதான். வேறு என்ன செய்வது ? எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை..!
பெரிய சுவாரசியம் ஏதுமின்றி நகர்ந்தன நாட்கள் சில மாதங்களில் மனைவி கர்பவதியகவே நிலைமை மாற தொடங்கியது. வீடு உற்சாகத்தில் திளைத்தது ஆளாளுக்கு அவளை கொண்டாட ஆரம்பித்தோம்.
மாசமா இருக்கும்போது என்னவெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் வாங்கி கொடுக்கணும் புடிச்சத சமைச்சு போடணும் - இது என் அம்மா
நானும் அவளிடம் கேட்கிறேன்
உனக்கு என்னவெல்லாம் சாப்பிட புடிக்கும் சொல்லு
அதெல்லாம் ஒன்னும் வேணாம்
இல்ல சொல்லு நான் வற்புறுத்தி கேட்கிறேன்
பிடிக்குமென சிலதை சொல்ல
முன் சமயங்களில் என்ன சமையல் செய்யலாம் என்ற விவாதம் வரும்போது இதையெல்லாம் சொல்லி இருக்கிறாள் நானும் சாதாரணமாய் அதையெல்லாம் மறுத்து இருக்கிறேன் ஆனால் அவளுக்கு பிடிக்குமென சொன்னதில்லை.
இதெல்லாம் உனக்கு புடிக்குமா இதுவர சொன்னதே இல்ல ..?
ம்ம்ம் இப்போதானே கேக்குறீங்க.
அவள் சிரித்து கொண்டே சொல்ல எனக்குள் சுளீரென ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.
பிரசவம் நெருங்க இயல்பாய் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது இன்னும் சில தினங்களில் இங்கே ஒரு குழந்தை இருக்கும் என்ற எண்ணமே ஆனந்த கூத்தாட வைத்தது.
நாங்கள் விரும்பிய படியே அழகிய பெண் குழந்தை நார்மல் டெலிவரிதான் .
நான் நினைத்து இருந்தேன் பிரசவம் ஆன பெண்கள் ஒரு வாரம் பத்துநாள் என படுக்கையிலேயே இருப்பார்கள் என ஆனால் இவள் மறுநாளே சாதரணமாக நடமாட ஆரம்பித்தாள் யாராவது பெரியவர்கள் குழந்தையை பார்க்க வந்தால் சொல்ல சொல்ல கேட்காமல் கட்டிலிலிருந்து இறங்கி எழுந்து நின்று கொள்வாள் மரியாதையை நிமித்தமாய்.
இவளில் இந்த செய்கை குறித்து உறவினர்கள் புகழ்ச்சியாய் பேச எனக்கோ மிகவும் பெருமையாய் இருந்தது.
பெண்களின் குணம் எப்படி இருந்தாலும் தாய் ஆன பிறகு எல்லா பெண்களும் ஒரேமாதிரித்தான் இருக்கிறார்கள். கோபம்,ஆத்திரம் இவைகள் எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனால் குழந்தை கவனிப்பில் எப்போதும் பொறுமை மட்டுமே காட்டுகிறார்கள் நள்ளிரவில் குழந்தை அழுதாலும், மலம் கழித்தாலும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கவனிக்கும் தன்மை இயல்பாகவே வந்து விடுகிறது.
குழந்தையையும் கவனித்துகொண்டு எனக்கு செய்யும் பணிவிடைகளிலும் எந்த குறையும் வைக்கவில்லை .
தாய்மை என்ற விசயத்தை என் தாயிடம் உணர்ந்ததைவிட மனைவியிடமே அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது . இப்போது அவள்மேல் ஒரு மரியாதையை ஏற்பட துவங்கியது .
வீட்டு வேலைகள் குழந்தை வளர்ப்பு என அவள் சுமை எனக்கு புரிந்தது..!
சில வருடங்கள் போக...! இப்போது இரண்டாவது குழந்தை...! முதல் குழந்தை நார்மல் டெலிவரி ஆனால் இரண்டாவது சிசேரியன்.
இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மயக்கத்தில் இருக்கும் அவளை பார்க்க செல்கிறேன் தூக்கம் போலவும் இல்லாமல் ,மயக்கம் போலவும் இல்லாமல் மூக்கில் எதோ ஒரு குழாய் இருக்க அவள் இருந்த நிலை என்னை ஒரு மாதிரி ஆக்கிவிட்டது. அப்போது நினைத்து கொண்டேன் இவளிடம் இனி எதற்கும் கோபப்பட கூடாது என்ன சொன்னாலும் பொறுத்து கொள்ள வேண்டும் என்று ..!
சில பெண்கள் நினைத்து கொள்ளலாம் கணவன் தன்னிடம் அடங்கி போகிறான் என்று ..! அப்படி அல்ல...! சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும் அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த அடங்கி போதல். மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான் .
இரண்டு குழந்தைகள், வீட்டு வேலைகள், குழந்தை படிப்பு, பாடம் சொல்லி கொடுத்தல், இதற்க்கு இடையே நான் செய்யும் அலும்புகள் எல்லாவற்றையும் சமர்த்தாக கவனித்துகொள்ளும் அவளிள் அந்த மனைவி ,இல்லத்தரசி என்ற ஸ்தானத்தின் பிரம்மாண்ட விஸ்வ ரூபத்தின் முன் ''நான்'' கொஞ்ச கொஞ்சமாக நலிந்து கொண்டு இருந்தேன். பால குமாரன் ,கிரிக்கேட் எஸ் .ஜானகி எல்லாம் என் கவனிப்பில் இருந்து விலகி செல்ல ..!
ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன் ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!
எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தேன்
ஆனால்...! இப்போது எங்களுக்குள்...!
தமிழ் ,ஆங்கிலம் ,வரலாறு ,புவியியல்,இயற்பியல்,தாவரவியல் ,விலங்கியல் வேதியல் எல்லாம் ஒர்க் அவுட் ஆகி போனது ..
(படித்ததில் பிடித்தது)
https://www.youtube.com/watch?v=kXiNKTXbHCk
-
தாம்பத்யம் - 3
தன்னம் தனிமையிலே, உடல் தள்ளாடும் வயதினிலே...................... வெறும் உணர்ச்சி துடிப்பில் வாழ்கின்ற இளமைக்கால வாழ்க்கையை விட...இவ்வாறு இன்பங்களை மனதோரம் சுமக்கின்ற முதுமை வாழ்க்கைக்குத்தான் அர்த்தம் அதிகம் இருக்கின்றது .
"பத்து முறை பிறந்தாலும் உங்கள் பக்கத்துணை நான் வருவேன் - பெற்ற பிள்ளை மறந்தாலும் - நான் பிள்ளைப்போல் வளர்த்திருப்பேன் ..... "
அருமையான பாடல் GG & சௌகார் நடிப்பில் காலத்தை கடந்து நிற்கும் உன்னத வரிகள்
https://www.youtube.com/watch?v=dvIQFMz771Q
-
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்
கடவுளிலே கருணை தனை காணலாம்
அந்த கருணையிலே கடவுளயும் காணலாம்
நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியம்
அங்கு ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்
பாவம் என்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்
இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்
https://www.youtube.com/watch?v=rJ8F1ANSyuE
-
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
https://www.youtube.com/watch?v=usLFng3LZiE