http://i1077.photobucket.com/albums/...psfmj0mfcs.jpg
Printable View
கடந்த வெள்ளி முதல் (02/06/2017) பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர் நடித்த "நான் ஏன் பிறந்தேன் " கோவை டிலைட்டில் தினசரி 2காட்சிகள் நடைபெறுகிறது .
http://i1077.photobucket.com/albums/...psiykwtxic.jpg
புகைப்படம் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
மதுரை ஷா அரங்கில் திரையுலகின் ஒரே வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். தென்னக ஜேம்ஸ் பாண்டாக நடித்த "ரகசிய போலீஸ் 115" தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i1077.photobucket.com/albums/...pslclszct3.jpg
புகைப்படங்கள் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
வரும் வெள்ளி முதல் (09/06/2017) திரையுலக நட்சத்திரங்கள் நடித்த 100 வது படங்களிலேயே முதன்மையானதும் ,அன்றும், இன்றும், என்றும் வசூலில் புதிய சாதனை படைத்து வரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கலை , அரசியல் உலகின் "ஒளி விளக்கு " மதுரை சென்ட்ரல் சினிமாவில் திரைக்கு வருகிறது .
http://i1077.photobucket.com/albums/...pspnnpk2tm.jpg
புகைப்படம் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
http://i68.tinypic.com/6ymcti.jpg
சென்ற வெள்ளிக்கிழமை மத்தியானம் கிருஷ்ணலீலை என்கின்ற படம் கேப்டன் டிவியில் போட்டார்கள். தனது தங்கைக்குப் பிறக்கும் 8 வது குழந்தையால் தனக்கு ஆபத்து என்று மனோகருக்கு (கம்ச மன்னன்) தெரிந்ததால், தனது தங்கையையும் அவர் கணவரையும் ஜெயிலில் போட்டுவிடுகின்றார். அந்த தம்பதி விஜயகுமாரி, மேஜர் சுந்தர்ராஜன். 8வது குழந்தையால்தானே ஆபத்து என்றிருந்தாலும் அவர்களுக்கு பிறக்கும் எல்லா குழந்தையையையும் வரிசையாக மனோகர் வெட்டிக் கொல்கிறார். கடைசி குழந்தையை (கிருஷ்ணர்) சுந்தர்ராஜன் ரகசியமாக ஜெயிலில் இருந்து வெளியேறி வேறு ஒருத்தரிடம் கொடுத்து விடுகிறார். அதெல்லாம் சரி.
ஜெயிலில் அதுவும் வரிசையாக தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை மனோகர் வெட்டிக் கொல்கிறார். எவ்வளவு குரூரம். இதயமே வெடிக்கும் சோகம். இந்த நிலைமையிலும் ஜெயிலில் சோகத்தில் வரிசையாக முயற்சி செய்து அடுத்தடுத்து குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர் அந்த தம்பதி. நாடி நரம்பெல்லாம் இதே சிந்தனையாய் பத்தாங்கிளாஸ் பையன் மாதிரி கம்பாய் நின்றால்தான் இது சாத்தியம். சுந்தர்ராஜன் பாத்திரத்தின் பெயர் (அதாவது ஜெயிலில் சோகத்துக்கு நடுவே வரிசையாய் குழந்தை பெறுபவர்) வசுதேவர். அடேய்… வசூ….
அதுக்கு மேல் படத்தை பார்க்க பிடிக்காமல் சேனலை மாற்றினேன். நியூஸ் 18 சேனல். துரைமுருகன் பேட்டி. விருப்பமில்லாமல் வேறு சேனல் மாற்ற நினைக்கும்போது புரட்சித் தலைவரைப் பற்றி துரைமுருகனிடம் கேள்வி கேட்கப்பட்டது. நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
புரட்சித் தலைவர் தன்னை படிக்க வைத்தது, ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக அவர் கோவாவில் இருந்தபோது, கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் தன்னை வெற்றி பெறச் செய்ய உதவிகள் செய்ததை சொன்னார். சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்தபோது நீ படி, அதுதான் நல்லது என்று புரட்சித் தலைவர் சொல்லி சட்டக் கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுத்ததை சொன்னார். துரைமுருகன் திருமணத்தில் கலந்து கொள்ள சென்னை வரத் திட்டமிட்டிருந்த புரட்சித் தலைவர் அப்போது காஷ்மீரில் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார். சென்னை வரஇருந்த ஃப்ளைட்டை தவறவிட்டுவிட்டாராம். எப்படியும் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சார்டர்ட் ப்ளைட் ஏற்பாடு செய்து கொண்டு புரட்சித் தலைவர் சென்னை வந்ததை துரைமுருகன் நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
புரட்சித் தலைவர் முதல்வர் ஆன பிறகு அவரை பார்ப்பதை துரைமுருகன் தவிர்த்து வந்திருக்கிறார். ஒருநாள் எதிர்பாராமல் சட்டசபை கட்டிடத்தில் புரட்சித்தலைவரை நேருக்கு நேர் பார்த்துவிட்டார். புரட்சித் தலைவர் உடனே துரைமுருகனை சட்டையை இழுத்துப் பிடித்து ‘மேலே வா’ என்று தன் அறைக்கு கூப்பிட்டிருக்கிறார்.
துரைமுருகன் போனதும், ‘யார் யாரோ என்னிடம் அமைச்சராக இருக்கிறார்கள். நான் வளர்த்தவன் நீ. என்னிடம்தானே நீ இருக்க வேண்டும். என்ன இலாகா வேண்டும் என்று முடிவு செய். போ’ என்று புரட்சித் தலைவர் சொல்லியிருக்கிறார்.
அதற்கு துரைமுருகன், ‘நான் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுகவுக்கு வந்தவன். அண்ணாவுக்குப் பிறகு கலைஞரை தலைவராக ஏற்றுக் கொண்டேன். என்னால் உங்களிடம் வர முடியாது. மன்னித்துவிடுங்கள். கலைஞர்தான் என் தலைவர்’ என்று சொல்லியிருக்கிறார்.
புரட்சித் தலைவர் உடனே, ‘அப்ப உனக்கு நான் யாரு?’ என்று கேட்டிருக்கிறார்.
‘நீங்க என்னை வாழவெச்ச தெய்வம்’ என்று கூறி காலில் விழுந்தாராம் துரைமுருகன். அவரைத் தூக்கி கட்டியணைத்து ‘சரி போயிட்டு வா’ என்று புரட்சித் தலைவர் அனுப்பி வைத்திருக்கிறார்.
இதை எல்லாம் துரைமுருகனே நியூஸ் 18 செய்தி சேனலில் சொன்னார். நெகிழ்ச்சியாக இருந்தது.
மாற்றுக் கட்சியினரும் எதிரிகளும் கூட தெய்வமாக வணங்கும் ஒரே தலைவர் மனிதப் புனிதர் புரட்சித் தலைவர்.
நன்றி எம்.ஜி.ஆர். பக்கம் முகநூல் - தேவசேனாபதி ராஜராஜன்