https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...16&oe=5E9261E1
Printable View
இன்று 06/03/2020 புதுயுகம் டிவி யில் மதியம் 1.30 மணிக்கு நடிகர் திலகம் நடித்த படம். !!!
" விடுதலை " படத்தை கண்டு களியுங்கள். !!!
இந்த படத்தில் நடிகர் திலகம்,ரஜினி காந்த், மாதவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
சிவாஜி வீட்டு நண்டு குழம்பு.
நடிகை மாதவி!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்ததை என்னால் மறக்க முடியாது.ஒரு நாள் பேச்சு வாக்கில் , "நான் அசைவ உணவு அதிகம் விரும்பி சாப்பிடுவேன். குறிப்பாக நண்டு எனக்கு மிகவும் பிடித்த உணவு" என்றேன்.
அடுத்த நாள் படப்பிடிப்பின் போது, உணவு இடைவேளையில் என்னை சாப்பாட்டிற்கு அழைத்தார் சிவாஜி அவர்கள். சென்று பார்த்த பொழுது எனக்காக பிரத்தேயகமாக நண்டு தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது
.யார் கொண்டு வந்தது என்று கேட்பதற்கு முன்பாகவே "நான் தான் உனக்கு பிடிக்குமே என்று வீட்டில் செய்யச் சொன்னேன். என் மனைவி செய்து அனுப்பியிருக்கிறாள்' என்றார் சிவாஜி அவர்கள்.என்னால் சில நிமிடம் பேசவே முடியவில்லை.்
தன் சக கலைஞர்கள் மீது அவருக்குதான் எத்தனை பற்றும் பாசமும்? நடிப்பை பொறுத்தவரை நான் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்
நன்றி! தினமணி.காம் இணையத்திலிருந்து....
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...97&oe=5E954CC7
Nadigar Thilagam Shivaji saarudan Kannada nadigar Udayakumar.
மாற்று மொழியினர் அய்யனை பாராட்டி நான் வியந்த அனுபவம் (3)
---------------------------------------------------------------------------------------------------------------------------
நாங்கள் 7 பேர் கேரளாவில் டிப்ளோமாவை முடித்தபோது, நான் இன்று வாழ்க்கை நடத்தும் கர்நாடக மாநிலத்தில் ஏலங்க( YELAKANGA )என்ற கிராமத்தில் எஸ்கோட் தொழிற்சாலையில் 6 மத காலத்திற்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டோம்.
இங்கு ஒரு தினத்திற்கு 6 ரூபாய் ஊதியமாக தந்தார்கள் அன்றய காலத்தில். வெளியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கினோம். எங்களின் பக்கத்து அறையிலும் கேரளா நண்பர்கள் பலர் தங்கி இருந்தனர். சனி,ஞாயிறு இரு தினங்களும் விடுமுறை எங்களுக்கு மட்டும்.( பயிற்சி காலம் என்பதினால் )
நான் சனிக்கிழமைதோறும் பெங்களூர் பட்டணத்திற்கு (மெஜெஸ்டிக் ) வருவதுண்டு. நண்பர்களும் வருவதுண்டு. சில நேரங்களில் வருவதில்லை.காரணம் , மொழி பிரச்சனை. ஒருமுறை பெங்களூர் நடராஜ் திரை அரங்கில் அய்யனின் தங்கப்பதக்கம் திரைப்படம் திரை இடப்பட்டது. நான் வரும் சனியன்று தங்கப்பதக்கம் திரைப்படம் பார்க்க செல்கின்றேன். வருவதாக இருந்தால் வாருங்கள் என்று என்னுடன் பயிற்சி எடுபவர்களிடம் கூறினேன்.
சனியன்று நான் மாலையில் பெங்களூருக்கு தங்கப்பதக்கம் பார்க்க புறப்படும் நேரம் அடுத்த அறையிலிருந்து நண்பர் ( பெயர் நினைவில் வரவில்லை, தலையோ மொட்டை.) ஒருவர் (கேரள நண்பர்) எங்கே போக்கின்றிர்கள்? என்று கேட்டார்.பெங்களூரில் படம் பார்க்க செல்கின்றேன் என்றேன்.என்ன படம், யார் நடித்தது என்று நண்பர் கேட்டார்.படத்தின் பெயர் தங்கப்பதக்கம். நடிகர் சிவாஜி,தமிழ் படம் என்றேன். நண்பரோ, நடிகரின் பெயரை கேட்டுள்ளேன். ஆனால் இவரின் படங்களை நான் இன்றுவரை பார்த்ததில்லை என்றார். மேலும் எனக்கு (நண்பருக்கு) மொழி புரியாது என்றார். என்றாலும் நானும் வருகின்றேன் என்றார்.
நாங்கள் இருவரும் எலங்காவிலிருந்து பெங்களூருக்கு கிளம்பினோம். பெங்களூரில் மெயின் பஸ்டாண்டில்(மெஜஸ்டிக்) இறங்கி அங்கு இருக்கும் KAMAT உணவகத்தில் இட்டலியும், காபியும் எடுத்து கொண்டோம்.( அன்று 2 இட்டலி 50 பைசா மட்டுமே. சட்னியோ மதுரை ருசி). அங்கிருந்து ஆட்டோ ரிக்ஷாவில் நட்ராஜ் திரை அரங்கம் சென்று இருவரும் அய்யனின் தங்கப்பதக்கம் பார்த்தோம்.
படம் பார்த்து வெளியில் வரும்போது நண்பரிடம் கேட்டேன் படம் எப்படி என்று.? நண்பரிடமிருந்து சிறிது நேரம் பதில் என்பதே இல்லை. நண்பரின் முகத்திலோ சோகம்.நண்பரிடம் என்ன ஆச்சு என்று கேட்டேன்? நண்பர் ஒரு டீ குடிக்கலாம் என்றார்.திரை அரங்கின் முன்பு சின்னதாக ஒரு டீ மட்டுமே கொடுக்கும் கடை இருந்தது. அங்கு சென்று டீ குடித்த பிறகு நண்பர் சம நிலைக்கு வந்தார் என்பதே உண்மை.
நண்பரிடம் என்ன ஆச்சு? என்று கேட்டேன். நான் இப்போதுதான் எனது சகஜ நிலைக்கு வந்தேன் என்றார். நானோ சிறிதாக கலவரப்பட்டேன் என்பதே உண்மை. மேலும் நான் நன்பரிடம் எதுவுமே கேட்கவில்லை.நேராக இரயில் நிலையம் வந்து இரயிலில் அமர்ந்தோம்.இப்போதுதான் நண்பர் பேசவே தொடங்கினார்.
நண்பர் வாய் திறந்ததும் கூறியது, நான் இந்த படத்தை பார்க்காமலே இறந்திருப்பேனே என்பதுதான்.படம் முழுவதும் அதிசயமான அபிநயம். ஒவ்வொரு இடத்திலும் அதேகத்தின் அசா த்திய முத்திரை. தமிழ் தெரியவில்லை என்றாலும், அதேகத்தின் (அய்யனின் ) அபிநயம், அசைவுகள், முகத்தின் சலனங்கள் சம்பவத்தை முளுமையாக புரிந்து கொள்ள வைக்கின்றார். இத்தேகத்தின்(அய்யனின்) படத்தை பார்க்க மொழி தேவையே இல்லை.
இப்போது நான் கேட்டேன், படம் முடிந்து வரும்போது தாங்கள் ஏன்பேசவில்லை? என்று கேட்டேன். நண்பர் கூறினார், படத்தில் பல இடங்களில் என்னை நான் மறந்தாலும், மனைவி இறந்து கிடைக்கும்போது அத்தேகம் ( அய்யன்) அழுகின்ற அந்த இடம் என்னை கண் கலங்க வைத்ததோடு, என் நினைவுதனையே சோகத்தில் ஆழ்த்தி விட்டது. எனவேதான் படம் முடிந்த பிறகும் கூட என்னால் என் சாதாரண நிலையை அடைய முடியவில்லை என்றார் நண்பர்.
மேலும் இந்த படத்தை பார்க்காமலே இறந்திருப்பேனே என்று கூறினீர்கள் ஏன் அப்படி கூறினீர்கள் என்று கேட்டேன். நண்பர், நான் தங்களை சந்திக்காமல், தங்களோடு இன்று வராமலிருந்திருந்தால் இத்தேகத்தின் படத்தை காணும் பாக்கியம் எனக்கு இன்று கிடைத்திருக்காதே. நானாக தமிழ் படங்களை மொழி பிரச்சனையின் காரணமாக , பார்த்ததுமில்லை,பார்ப்பதுமில்லை.எனவேதான் கூறினேன், தங்களுடன் வராமலிருந்திருந்தால் எனக்கு இத்தேகத்தின் படத்தை பார்க்க்கும் வாய்ப்பு ஒருபோதும் கிடைத்திருக்காது, இந்த படத்தை பார்க்காமல் இறந்திருப்பேன் என்றார். நண்பரின் ஊர் திரிஷூர்( கேரளா )
நான் நண்பரோடு கூறினேன், தமிழர்களாகிய எங்களையும் விட, தங்களை போன்றவர்களே எங்கள் அய்யனின் உண்மையான ரசிகர்கள் என்றேன். உண்மையும் அதுவே.
அய்யனே, தங்களின் படங்களை பார்த்து,பார்த்து ரசித்து,ரசித்து தாங்கள் பேசும் மொழியை தெரிந்தத்தினால் நாங்கள் தங்களின் ரசிகரானோம்,ரசிக்கின்றோம். ஆனால் தமிழ் மொழி தெரியாது, மாற்று மொழி பேசுபவர்கள் போலும் ரசிக்கின்ற ஒரே நடிகன் இந்த உலகில் ஐய்யன் தாங்கள் ஒருவனே. நாங்கள் , எங்களை சிவாஜியின் ரசிகர்கள் என்று கூறி கொள்வதில் பெருமை கொள்கின்றோம், ஆனந்தம் கொள்கின்றோம்.வாழ்க நின் புகழ்.( நண்பரின் பெயர் இப்போதும் நினைவில் வரவில்லை.)மீண்டும் தொடர்வேன்.
Thanks Selvaraj Fernandez